Online Test
Economics Part 2 Revision Test in Tamil
Economics Part 2 Revision Test in Tamil
Congratulations - you have completed Economics Part 2 Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே அளவு வரி இருக்கும். | |
இந்தியா முழுவதும் ஒரேயொரு சந்தை இருக்கும் எண்ணத்தைக்கொடுக்கும். | |
வரி அளவைக்குறைத்து தங்கள் மாநிலத்திற்கு தொழிற்சாலைகளை இழுப்பதற்காக மாநிலங்களிலிடையே நிலவும் போட்டி நடைமுறைக்கு வரும். | |
இவை அனைத்தும் |
Question 1 Explanation:
விளக்கம்: நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை மீது ஒரே அளவு வரி விதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே இவ்வரி ஆகும். இது மதிப்புக்கூட்டு வரியின் அனைத்து கூறுகளையும் கொண்டிருக்கும். மதிப்புக்கூட்டு வரி பொருள்களுக்கு மட்டுமே ஆகும். ஆனால் இது பொருள் மற்றும் சேவைக்கும் ஆகும்.
Question 2 |
இந்திய இருப்பு வங்கி எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?
1945 | |
1946 | |
1949 | |
1950 |
Question 2 Explanation:
விளக்கம்: இது அரசு முதலீட்டுடன் கூடிய தனியார் வங்கியாக இருந்தது. ஆனால் 1949 இல் தேசியமயமாக்கப்பட்டது.
Question 3 |
இந்திய இருப்பு வங்கி சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1934 | |
1935 | |
1932 | |
1946 |
Question 3 Explanation:
விளக்கம்: இந்திய வங்கி அமைப்பின் ஒழுங்கு செய்யும் உச்ச நிறுவனம் இந்திய இருப்பு வங்கி ஆகும். இது பட்டியலின வங்கிகளின் பண இருப்பை வைத்திருக்கிறது. எனவே இது இருப்பு வங்கி என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய வங்கி என்றும் அழைக்கப்படுகிறது.
Question 4 |
இந்திய இருப்பு வங்கியின் செயல்பாடுகள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
7 |
Question 4 Explanation:
விளக்கம்: பணத்தொடர்பு செயல்பாடுகள், பொதுச்செயல்பாடுகள் என இருவகைப்படும்.
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் பணத்தொடர்பு செயல்பாடுகள் எவை?
பணம் வெளியிடுதல் | |
பணத்தின் அளவு | |
பண அளிப்புக்கட்டுப்பாடு | |
இவை அனைத்தும் |
Question 5 Explanation:
விளக்கம்: பணம் வெளியிடுதல், பணத்தின் அளவு, பண அளிப்புக்கட்டுப்பாடு போன்றவை இந்திய இருப்பு வங்கியின் பணத்தொடர்பு செயல்பாடுகள் ஆகும்.
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் தனிப்பட்ட உரிமை எது?
பணம் வெளியிடுதல் | |
பணத்தின் அளவு | |
பண அளிப்புக்கட்டுப்பாடு | |
இவை அனைத்தும்.. |
Question 6 Explanation:
விளக்கம்: பண வெளியீடு என்பது இந்திய இருப்பு வங்கியின் தனிப்பட்ட உரிமை ஆகும்.
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ஒரு ரூபாய்த்தாளும் நாணயமும் மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. | |
ஆனால் அவையும் இந்திய இருப்பு வங்கியால் தான் புழக்கத்தில் விடப்படுகின்றன. | |
பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்கிறது. | |
இவை அனைத்தும் |
Question 7 Explanation:
விளக்கம்: ஒரு ரூபாய்த்தாளும் நாணயமும் மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவையும் இந்திய இருப்பு வங்கியால் தான் புழக்கத்தில் விடப்படுகின்றன. பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் செயல்பாடுகள் எவை?
பழைய ரூபாய் நோட்டுக்களை அழிக்கிறது | |
ரூ.115 கோடி பெறுமானமுள்ள அந்நியப்பத்திரங்களையும் ரூ 95 கோடி பெறுமானமுள்ள தங்கத்தையும் பக்க பலமாகக்கொண்டு பணம் வெளியிடுகிறது. | |
இது அதிக பட்ச இருப்பு முறை எனப்படுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 8 Explanation:
விளக்கம்: ரூ.115 கோடி பெறுமானமுள்ள தங்கத்தையும் ரூ 85 கோடி பெறுமானமுள்ள அந்நியப்பத்திரங்களையும் பக்க பலமாகக்கொண்டு பணம் வெளியிடுகிறது. இது குறைந்த பட்ச இருப்பு முறை எனப்படுகிறது.
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு இந்திய இருப்பு வங்கி வங்கியாக
செயல்படுகிறது?
அஸ்ஸாம் | |
சிக்கிம் | |
மேகாலயா | |
மிசோரம் |
Question 9 Explanation:
விளக்கம்: மத்திய அரசிற்கும் சிக்கிம் தவிர்த்த மாநில அரசுகளுக்கும் இந்திய இருப்பு வங்கி வங்கியாக செயல்படுகிறது.
Question 10 |
சிக்கிம் மாநிலத்தின் கடன் மேலாண்மையை மேற்கொள்பவர்?
நிதி அமைச்சர் | |
ஆளுநர் | |
பிரதமர் | |
இந்திய இருப்பு வங்கி |
Question 10 Explanation:
விளக்கம்: சிக்கிம் மாநில வாங்கியாளராக செயல்படாவிட்டாலும் அவற்றின் கடன் மேலாண்மையை ஓரளவிற்கு மேற்கொள்கிறது.
Question 11 |
அரசின் சார்பாக கடன் பத்திரங்களை விநியோகித்து வாங்குபவர் யார்?
நிதி அமைச்சர் | |
ஆளுநர் | |
பிரதமர் | |
இந்திய இருப்பு வங்கி |
Question 11 Explanation:
விளக்கம்: மத்திய மாநில அரசுகளின் வைப்புத்தொகையை வைத்திருப்பதோடு அவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது.
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் பணிகள் எவை?
பண இருப்பு விகிதம் போன்ற இருப்புகளை வைத்திருக்கிறது. | |
வங்கிகள் வைத்திருக்கும் அடமானப் பத்திரங்களுக்கு கடனளிக்கிறது. | |
பரிவர்த்தனை உண்டியலை மறுகழிவு செய்கிறது. | |
இவை அனைத்தும் |
Question 12 Explanation:
விளக்கம்: இந்திய இருப்பு வங்கிதான் வங்கிகளின் வங்கியாளர். இது பண இருப்பு விகிதம் போன்ற இருப்புகளை வைத்திருக்கிறது. வங்கிகள் வைத்திருக்கும் அடமானப் பத்திரங்களுக்கு கடனளிக்கிறது. பரிவர்த்தனை உண்டியலை மறுகழிவு செய்கிறது.
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினை தேர்க.
போதுமான பணப்புழக்கம் இருக்கும்போது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்கின்றன. | |
இந்திய இருப்பு வங்கி இதற்கான வசதிகளை செய்து கொடுப்பதோடு ஒழுங்குபடுத்துகிறது. | |
சந்தையில் பணப்புழக்க தட்டுப்பாடு ஏற்படும்போது நிதி அமைச்சரிடம் மட்டுமே கடன் வாங்க இயலும் | |
a) மற்றும் b) |
Question 13 Explanation:
விளக்கம்: சந்தையில் பணப்புழக்க தட்டுப்பாடு ஏற்படும்போது இந்திய இருப்பு வங்கியிடம் மட்டுமே கடன் வாங்க இயலும். அதனால் இந்திய இருப்பு வங்கி இறுதிப்புகலிடம் எனப்படுகிறது.
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினை தேர்க.
இந்தியாவிற்கு வரும் அந்நிய செலாவணியை இந்திய இருப்பு வங்கி இருப்பில் வைக்கிறது. | |
இது அந்நிய செலாவணி விலையை ஓரளவிற்கு நிலையாக வைத்திருக்கிறது. | |
இந்திய இருப்பு வங்கி அந்நியச்செலாவணியின் பாதுகாவலரும் மேலாளரும் ஆகும். | |
இவை அனைத்தும் |
Question 14 Explanation:
விளக்கம்: இந்தியாவிற்கு வரும் அந்நிய செலாவணியை இந்திய இருப்பு வங்கி இருப்பில் வைக்கிறது. இது அந்நிய செலாவணி விலையை ஓரளவிற்கு நிலையாக வைத்திருக்கிறது. இந்திய இருப்பு வங்கி அந்நியச்செலாவணியின் பாதுகாவலரும் மேலாளரும் ஆகும்.
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் பணப்புழக்கத்தை சார்ந்திருப்பவை எவை?
பணவீக்கம் | |
பொருளாதார வளர்ச்சி | |
a) மற்றும் b) | |
உற்பத்தி |
Question 16 |
வங்கிகளின் கடன் வழங்கப்படும் மற்றும் வைப்புத்தொகையை உருவாக்கும் திறனை கட்டுப்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடன் கட்டுப்பாடு | |
பொருள் மேம்பாடு | |
ஒழுங்காற்று செயல்பாடு | |
b) மற்றும் c) |
Question 16 Explanation:
விளக்கம்: இந்திய இருப்பு வங்கி கடன் கட்டுப்பாளராக செயல்படுகிறது.
Question 17 |
கடனைக்கட்டுப்படுத்த எத்தனை முறைகள் உள்ளன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 17 Explanation:
விளக்கம்: கடனைக்கட்டுப்படுத்த இரு முறைகள் உள்ளன. ஒன்று அளவு முறை மற்றொன்று தன்மை முறை ஆகும். இரண்டிலுமே பழம் மற்றும் புது நடவடிக்கைகள் உள்ளன.
Question 18 |
கடன் கட்டுப்பாடு தொடர்பான இந்திய இருப்பு வங்கியின் புதிய நடவடிக்கைகள் எந்த ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டன?
1990 | |
2000 | |
2015 | |
2018 |
Question 18 Explanation:
விளக்கம்: கடன் கட்டுப்பாடு தொடர்பான இந்திய இருப்பு வங்கியின் புதிய நடவடிக்கைகள் 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டன.
Question 19 |
கடனளவையும் செலவையும் கட்டுப்படுத்துவது கீழ்க்கண்டவற்றுள் எதன் நோக்கமாகும்?
வங்கிவீதக்கொள்கை | |
மாறுபடும் இருப்பு வீதம் | |
அளவுமுறை | |
இவை அனைத்தும் |
Question 19 Explanation:
விளக்கம்: கடனளவையும் செலவையும் கட்டுப்படுத்துவது அளவுமுறை ஆகும்.
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் பழம் நடவடிக்கைகள் எவை?
ரொக்கத்தகவமைப்பு வசதி | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
வேறுபடும் இருப்பு வீதம் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 20 Explanation:
விளக்கம்: ரொக்கத்தகவமைப்பு வசதி, சந்தை நிலைத்தன்மை திட்டம் ஆகியவை இந்திய இருப்பு வங்கியின் பழம் நடவடிக்கைகள் ஆகும்.
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இருப்பு வங்கியின் புது நடவடிக்கைகள் எவை?
ரொக்கத்தகவமைப்பு வசதி | |
திறந்த சந்தை நடவடிக்கை | |
வேறுபடும் இருப்பு வீதம் | |
இவை அனைத்தும் |
Question 22 |
தற்போது வாங்கிய பொருள் அல்லது சேவைக்கு தர வேண்டிய பணத்தை பின்னாளில் தருவதாக வாங்கியவர் விற்றவருக்கு எழுத்தில் தரும் உறுதியளிப்பு எது?
பரிவர்த்தனை உண்டியல் | |
கழித்தல் | |
மாரு கழிப்பு | |
பத்திரம் |
Question 22 Explanation:
விளக்கம்: தற்போது வாங்கிய பொருள் அல்லது சேவைக்கு தர வேண்டிய பணத்தை பின்னாளில் தருவதாக வாங்கியவர் விற்றவருக்கு எழுத்தில் தரும் உறுதியளிப்பு பரிவர்த்தனை உண்டியல்எனப்படுகிறது.
Question 23 |
முதிர்வுக்காலத்திற்கு முன்பே உண்டியலை பணமாக மாற்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பரிவர்த்தனை உண்டியல் | |
கழித்தல் | |
மாரு கழிப்பு | |
பத்திரம் |
Question 23 Explanation:
விளக்கம்: முதிர்வுக்காலத்திற்கு முன்பே உண்டியலை பணமாக மாற்றுதல் கழித்தல் என அழைக்கப்படுகிறது.
Question 24 |
இந்திய இருப்பு வங்கி கடனை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
வங்கி வீதத்தை கூட்டுதல் | |
வங்கி வீதத்தை குறைத்தல் | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 24 Explanation:
விளக்கம்: வங்கி வீதத்தை கூட்டி குறைப்பதன் மூலம் இந்திய இருப்பு வங்கி கடனை கட்டுப்படுத்துகிறது. வாங்கி வீதத்தை கூட்டினால் வங்கிகளின் இலாபம் பாதிக்கப்படலாம். இங்கு வங்கிகளுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று இந்திய இருப்பு வங்கியிடம் மறுகழிவு செய்யாதிருத்தல் மற்றொன்று இந்திய இருப்பு வங்கியிடம் மறுகழிப்பு செய்துவிட்டு அதை விட அதிக வட்டிக்கு வாடிகையாளர்களுக்கு கடன் அளித்தல் ஆகியன.
Question 25 |
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
இந்திய இருப்பு வங்கி பண வீக்க காலத்தில் வங்கி வீதத்தை குறைக்கும். | |
பண வாட்ட காலத்தில் வங்கி வீதத்தை உயர்த்தும். | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 25 Explanation:
விளக்கம்: பொதுவாக இந்திய இருப்பு வங்கி பண வீக்க காலத்தில் வங்கி வீதத்தை உயர்த்தும். பண வாட்ட காலத்தில் வங்கி வீதத்தை குறைக்கும்.
Question 26 |
அரசாங்கத்தின் பத்திரங்கள் மற்றும் உண்டியல்களை இந்திய இருப்பு வங்கி விற்பது மற்றும் கொள்முதல் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மறு கொள்முதல் வீதம் | |
ரொக்கத்தகவமைப்பு வசதி | |
விளிம்பு நிலை வசதி | |
திறந்த சந்தை நடவடிக்கை |
Question 26 Explanation:
விளக்கம்: அரசாங்கத்தின் மற்றும் தனியாரின் பத்திரங்கள் மற்றும் உண்டியல்கள் மற்றும் கடன் பத்திரங்களை இந்திய இருப்பு வங்கி விற்பது மற்றும் கொள்முதல் செய்வது திறந்த சந்தை நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது.
Question 27 |
திறந்த சந்தை நடவடிக்கை பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
அரசாங்கத்தின் மற்றும் தனியாரின் பத்திரங்கள் மற்றும் உண்டியல்கள் மற்றும் கடன் பத்திரங்களை இந்திய இருப்பு வங்கி விற்கும்போது பொது மக்களிடமும் வங்கியிடமும் உள்ள பண இருப்பு குறைகிறது. | |
கடன் பத்திரங்களை இந்திய இருப்பு வங்கி விற்கும்போது பணப்புழக்கம் குறைகிறது. | |
இந்திய இருப்பு வங்கி கொள்முதல் செய்யும்போது பணப்புழக்கம் அதிகமாகிறது. | |
இவை அனைத்தும் |
Question 27 Explanation:
விளக்கம்: அரசாங்கத்தின் மற்றும் தனியாரின் பத்திரங்கள் மற்றும் உண்டியல்கள் மற்றும் கடன் பத்திரங்களை இந்திய இருப்பு வங்கி விற்கும்போது பொது மக்களிடமும் வங்கியிடமும் உள்ள பண இருப்பு குறைகிறது. இது பணப்புழக்க அளவைக் குறைக்கிறது.
Question 28 |
பட்டியலின வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய தொகையின் வீதத்தை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுவது?
கடன் உருவாக்கம் | |
சட்டப்படியான ரொக்க வீதம் | |
மறு கொள்முதல் வீதம் | |
மாறுபடும் இருப்பு வீதம் |
Question 28 Explanation:
விளக்கம்: பட்டியலின வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய தொகையின் வீதத்தை மாற்றுவதன் மூலம் கடன் உருவாக்கத்தை கட்டுப்படுத்தப்படுத்தலாம்.
Question 29 |
எத்தனை வகையான இருப்புகள் உள்ளன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 29 Explanation:
விளக்கம்: இரு வகையான இருப்புகள் உள்ளன.
அ) பண இருப்பு வீதம்
ஆ) சட்டப்படியான ரொக்க வீதம்
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
பண இருப்பு வீதம் வங்கிகளின் கடனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்டது. | |
இவ்விகிதம் 3 -15 ஆக இருந்தது. | |
இந்த எல்லைக்குள் இந்திய இருப்பு வங்கி விகிதத்தை கூட்டி குறைத்தது. | |
இவை அனைத்தும். |
Question 30 Explanation:
விளக்கம்: 2006 இல் இந்திய இருப்பு வங்கி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தின் மூலம் 3 - 15 % என்ற எல்லை வரையறை நீக்கப்பட்டது.
Question 31 |
வங்கி ஒழுங்கு சட்டம் 1949 இன் படி கீழ்க்கண்டவற்றுள் எது கட்டாயமாகும்?
பட்டியலின வங்கிகள் தங்கள் நிகர கால மற்றும் கேட்பு வைப்புத்தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை தங்களிடமே இருப்பு வைக்க வேண்டும். | |
இதனை இந்திய இருப்பு வங்கியிடம் இருப்பு வைக்கத்தேவையில்லை. | |
இவ்விகிதம் 25 - 40% ஆகும். | |
இவை அனைத்தும். |
Question 31 Explanation:
விளக்கம்: பட்டியலின வங்கிகள் தங்கள் நிகர கால மற்றும் கேட்பு வைப்புத்தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை தங்களிடமே இருப்பு வைக்க வேண்டும். இதனை இந்திய இருப்பு வங்கியிடம் இருப்பு வைக்கத்தேவையில்லை. இவ்விகிதம் 25 - 40% ஆகும்.
Question 32 |
எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்திய இருப்பு வங்கி சட்டத்தில் 25 - 40% என்ற எல்லை வரையறை நீக்கப்பட்டது?
2002 | |
1949 | |
2006 | |
2008 |
Question 32 Explanation:
விளக்கம்: 2006 ல் இந்திய இருப்பு வங்கி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தின் மூலம் 25 - 40% என்ற எல்லை வரையறை நீக்கப்பட்டது. இந்த இருப்பு பணம், தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் வடிவில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகிதத்தைப்போல் கூட்டி குறைப்பதன் மூலம் கடன் அளவை கூட்டி குறைக்கலாம்.
Question 33 |
அதிக பணப்புழக்கத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த உதவுவது எது?
ரொக்கத்தகவமைப்பு வசதி | |
மறுகொள்முதல் வீதம் | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
விளிம்பு நிலை வசதி |
Question 33 Explanation:
விளக்கம்: இது குறுகிய கால நடவடிக்கை ஆகும். இது அதிகப் பணப்புழக்கத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த உதவுகிறது.
Question 34 |
ரொக்கத்தகவமைப்பு வசதி எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 34 Explanation:
விளக்கம்: மீக்கொள்முதல் வீதம் மற்றும் நேர்மாற்று கொள்முதல் வீதம் என இரண்டு வகைப்படும்.
Question 35 |
தேதியிட்ட அரசு பத்திரங்களையும் கருவூல உண்டியலையும் இந்திய இருப்பு வங்கியில் அடகு வைத்து வங்கிகள் கடன் பெறும் வட்டி வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரொக்கத்தகவமைப்பு வசதி | |
மறுகொள்முதல் வீதம் | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
விளிம்பு நிலை வசதி |
Question 35 Explanation:
விளக்கம்: தேதியிட்ட அரசு பத்திரங்களையும் கருவூல உண்டியலையும் இந்திய இருப்பு வங்கியில் அடகு வைத்து வங்கிகள் கடன் பெறும் வட்டி வீதம் மறுகொள்முதல் வீதம் என்று அழைக்கப்படுகிறது.
Question 36 |
மறுகொள்முதல் வீதம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
வங்கிகள் அடகு வைத்த பாத்திரங்களை மீட்டுக்கொள்வதாக உத்திரவாதமளித்து கடன் பெறுகின்றன. | |
முதிர்வுக்காலத்தில் மீட்டுக்கொள்கின்றன. | |
இது மறுகொள்முதல் செய்தல் எனப்படுகிறது. | |
இவை அனைத்தும். |
Question 36 Explanation:
விளக்கம்: வங்கிகள் அடகு வைத்த பாத்திரங்களை மீட்டுக்கொள்வதாக உத்திரவாதமளித்து கடன் பெறுகின்றன.முதிர்வுக்காலத்தில் மீட்டுக்கொள்கின்றன. இது மறுகொள்முதல் செய்தல் எனப்படுகிறது. எனவேதான் இதற்கான வட்டி வீதம் மறுகொள் முதல் வீதம் எனப்படுகிறது.
Question 37 |
மறு கொள் முதல் வீதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் செய்ய வேண்டியவை?
கடன் வாங்குவதை குறைத்துக்கொள்ளல் | |
கடன் வாங்கி தாம் வாங்கிய வீதத்தை விட அதிக வட்டிக்கு வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்தல் | |
a) அல்லது b) | |
இவற்றில் எதுவுமில்லை. |
Question 37 Explanation:
விளக்கம்: வங்கிகள் கடன் வாங்குவதை குறைத்தால் கடன் வாங்கும் திறனும் குறைகிறது. வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விதித்தால் அவர்கள் கடன் வாங்குவதை குறைத்துக்கொள்வர்.
Question 38 |
இந்திய இருப்பு வங்கி வணிக வங்கிகளிடம் தேதியிட்ட அரசு பத்திரங்களை அடகு வைத்து பெறும் வட்டி வீதம் எது?
நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் | |
விளிம்புநிலை வசதி | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
பண இருப்பு வீதம் |
Question 38 Explanation:
விளக்கம்: இந்திய இருப்பு வங்கி வணிக வங்கிகளிடம் தேதியிட்ட அரசு பத்திரங்களையும் கருவூல உண்டியலையும் அடகு வைத்து பெறும் வட்டி வீதம் ஆகும். மறுகொள்முதலுக்கு நேர்மாறாக இருப்பதால் இது நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் எனப்படுகிறது.
Question 39 |
நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் உயர்த்தப்பட்டால் வங்கிகளுக்கு மூன்று வழிகள் உள்ளன. | |
இந்திய இருப்பு வங்கிக்கு கடன் அளித்தல் | |
வாடிக்கையாளர்களுக்கு கடனளித்தல் | |
b) மற்றும் c) |
Question 39 Explanation:
விளக்கம்: வங்கிகள் இந்திய இருப்பு வங்கிக்கு கடன் அளித்தால் வாடிக்கையாளர்களுக்கு கடனளிக்கும் பணத்தின் அளவு குறையும். பணப்புழக்கமும் குறையும். அதிக வட்டி விதித்தால் வாடிக்கையாளர்களும் கடன் வாங்குவதைக் குறைத்துக்கொள்வர். இது வங்கிகளின் கடனளிக்கும் திறனை குறைக்கிறது.
Question 40 |
கீழ்க்கண்டவற்றுள் ஒரு நாள் கடன் எதன் மூலம் வழங்கப்படுகிறது?
நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் | |
விளிம்புநிலை வசதி | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
பண இருப்பு வீதம் |
Question 40 Explanation:
விளக்கம்: விளிம்புநிலை வசதியின் மூலம் ஒரு நாள் கடன் வழங்கப்படுகிறது.
Question 41 |
இந்திய இருப்பு வங்கியிடம் நடப்புக்கணக்கு மற்றும் துணைப்பொதுப்பேரேடு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு இந்திய இருப்பு வங்கி ஏற்படுத்திய கடன் உதவி எது?
நேர்மாற்று மறுகொள் முதல் வீதம் | |
விளிம்புநிலை வசதி | |
சந்தை நிலைத்தன்மை திட்டம் | |
பண இருப்பு வீதம் |
Question 41 Explanation:
விளக்கம்: இந்திய இருப்பு வங்கியிடம் நடப்புக்கணக்கு மற்றும் துணைப்பொதுப்பேரேடு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு இந்திய இருப்பு வங்கி ஏற்படுத்திய கடன் வசதி விளிம்புநிலை வசதி ஆகும்.
Question 42 |
வருவாய் எத்தனை விதங்களில் விளக்கப்படுகிறது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 42 Explanation:
விளக்கம்: வருவாய் என்பது 3 விதங்களில் விளக்கப்படுகிறது. அவை
அ) மொத்த வருவாய்
ஆ) சராசரி வருவாய்
இ) இறுதி நிலை வருவாய்
Question 43 |
விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கக்கிடைப்பது?
மொத்த வருவாய் | |
சராசரி வருவாய் | |
இறுதி நிலை வருவாய் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 43 Explanation:
விளக்கம்: மொத்த வருவாய் என்பது ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானம் ஆகும்.
Question 44 |
கீழ்க்கண்டவற்றுள் சராசரி வருவாயை குறிப்பது எது?
TR = P *Q | |
AR = TR /Q | |
MR = △TR /△Q | |
TR = Q |
Question 44 Explanation:
விளக்கம்: சராசரி வருவாய் என்பது ஒரு பண்டத்திற்கான வருவாய் ஆகும். சராசரி வருவாய் என்பது மொத்த வருவாயை விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைக்கும் ஈவு ஆகும்.
Question 45 |
கூடுதலாக ஒரு பண்டத்தை விற்பனை செய்வதால் மொத்த வருவாயில் ஏற்படும் கூடுதல்?
மொத்த வருவாய் | |
சராசரி வருவாய் | |
இறுதி நிலை வருவாய் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 45 Explanation:
விளக்கம்: கூடுதலாக ஒரு பண்டத்தை விற்பனை செய்வதால் மொத்த வருவாயில் ஏற்படும் கூடுதல் இறுதி நிலை வருவாய் எனப்படும்.
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் இறுதி நிலை வருவாயை குறிப்பது எது?
TR = P *Q | |
AR = TR /Q | |
MR = △TR /△Q. | |
TR = Q |
Question 46 Explanation:
விளக்கம்: மொத்த வருவாயில் ஏற்படும் மாற்றத்தை மொத்த பண்டங்களின் அளவில் ஏற்படும் மாற்றத்தால் வகுத்தால் இறுதி நிலை வருவாய் கிடைக்கும்.
MR = △TR /△Q
MR - இறுதி நிலை வருவாய்
TR - மொத்த வருவாயில் ஏற்படும் மாற்றம்
△Q - விற்பனை அளவில் ஏற்படும் மாற்றம்
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் ஒரு முனை வரி எது?
மதிப்பு கூட்டப்பட்ட வரி | |
மறைமுக வரி | |
சரக்கு மற்றும் சேவை வரி | |
இவை அனைத்தும் |
Question 47 Explanation:
விளக்கம்: பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வாரியாகும். விரிவான மறைமுக வரியாக, உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு மீது விதிக்க இது முன்மொழியப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. இது உற்பத்தி மற்றும் பண்டங்கள் பணிகள் மீதான அடுக்குவரி பாதக விளைவை நீக்கும். மதிப்புக்கூட்டப்பட்ட வரி என்பது பலமுனை வரியாகும்.
Question 48 |
பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட நாள்?
29.03.2017 | |
30.07.2017 | |
27.12.2017 | |
01.03.2017 |
Question 48 Explanation:
விளக்கம்: பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி பாராளுமன்றத்தில் 29.03.2017 ஒப்புதல் வழங்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ஜூலை திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் GST யின் நன்மைகள் எவை?
அடுக்கு வரி விளைவுகளை கொண்டது | |
பல முனை வரியாக உள்ளது | |
பதிவுக்கான வாசலாக உள்ளது | |
இவை அனைத்தும் |
Question 49 Explanation:
விளக்கம்: அடுக்கு வரி விளைவுகளை நீக்கியது. ஒரு முனை வரியாக உள்ளது. பதிவுக்கான வாசலாக உள்ளது. சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளன.
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் GST யின் தீமைகள் எவை?
அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்த தவறுகிறது. | |
மின்னணு வணிகம் வரையறுக்கப்படவில்லை. | |
தளவாடங்களின் திறன் குறைக்கப்பட்டுள்ளது. | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 50 Explanation:
விளக்கம்: அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது. மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது. தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய வழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Question 51 |
அச்சடிக்கப்பட்டப் பணத்தில் எத்தனை சதவீதம் புழக்கத்தில் விடப்படுகிறது?
85% | |
95% | |
75% | |
98% |
Question 51 Explanation:
விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்பட தொடங்கியது . 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது. இது 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டது அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
Question 52 |
ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு?
19 லட்சம் கோடி | |
20 லட்சம் கோடி | |
30 லட்சம் கோடி | |
18 லட்சம் கோடி |
Question 52 Explanation:
விளக்கம்: ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி
மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது . ஆதாரம்; இந்திய ரிசர்வ் வங்கி.
Question 53 |
நாடுகளுக்கு இடையிலான பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வரைவோலை | |
காசோலை | |
டாலர் | |
செலாவணி |
Question 53 Explanation:
விளக்கம்: நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
Question 54 |
உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
அமெரிக்க டாலர் | |
யென் | |
பவுண்ட் | |
இவை அனைத்தும் |
Question 54 Explanation:
விளக்கம்: உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
Question 55 |
பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
உற்பத்தி | |
வருவாய் | |
பணவியல் கொள்கை | |
இவை அனைத்தும் |
Question 55 Explanation:
விளக்கம்: பணத்துக்கும் பொருள்களின் விலைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஏனெனில் தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவைத்தொழிலை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
Question 56 |
இந்தியாவில் எந்த ஆண்டு முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன?
1919 | |
1909 | |
1917 | |
1918 |
Question 56 Explanation:
விளக்கம்: இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.
Question 57 |
1947-ம் ஆண்டுவரை யாருடைய உருவம் பொறித்த பணம் புழக்கத்தில் இருந்தது?
ஐந்தாம் ஜார்ஜ் | |
எலிசபெத் | |
விக்டோரியா | |
ஆறாம் ஜார்ஜ் |
Question 57 Explanation:
விளக்கம்: 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியது. மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
Question 58 |
1990களில் எங்கு இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது?
மைசூர் | |
சல்பானி | |
பெல்கம் | |
a) மற்றும் b) |
Question 58 Explanation:
விளக்கம்: 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ்வங்கி தொடங்கியது.
Question 59 |
கீழ்க்கண்ட எந்த நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த நாட்டுப் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
மைசூர் | |
சல்பானி | |
பெல்கம் | |
a) மற்றும் b) |
Question 59 Explanation:
விளக்கம்: எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது. இங்கு சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த நாட்டுப் பணம் இந்த அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
Question 60 |
தமிழ்நாட்டில் எத்தனை வங்கிக் கிளைகள் உள்ளன?
10,726 | |
12,614 | |
9,763 | |
10,612 |
Question 60 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டில் 10,612 வங்கிக் கிளைகள் உள்ளன. 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.
Question 61 |
பேரியல் பொருளாதார கொள்கை எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
3 | |
5 |
Question 61 Explanation:
விளக்கம்: பேரியல் பொருளாதார கொள்கையின் முக்கிய அடிப்படை நோக்கங்கள் முழு வேலை வாய்ப்பு, நிலையான விலை, விரைவான பொருளாதார வளர்ச்சி, செலுத்து சமநிலை, பொருளாதார நீதி ஆகியவை ஆகும். பேரியல் பொருளாதார கொள்கை பணவியல் கொள்கை நிதியியல் கொள்கை என இருவகைப்படும்.
Question 62 |
பண அளிப்பு மற்றும் பணத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகளை கட்டுப்படுத்த மைய வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பணக்கொள்கை | |
நிதிக்கொள்கை | |
பொருளாதார கொள்கை | |
உற்பத்திக்கொள்கை |
Question 62 Explanation:
விளக்கம்: பணக்கொள்கை என்பது பொருளாதார கொள்கையின் நோக்கங்களை அடைய பண அளிப்பு மற்றும் பணத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகளை கட்டுப்படுத்த மைய வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகும்.
Question 63 |
பணக்கொள்கை எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 63 Explanation:
விளக்கம்: பண அளிப்பு கட்டுப்பாட்டு கொள்கை என்பதை பணக்கொள்கை என்றே பொதுவாக கூறுகிறோம். இதை இருவகையாகப் பிரிக்கலாம்.
அ) கடன் நிதி அளவு கட்டுப்பாட்டு முறைகள்
ஆ) தேர்ந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள்
Question 64 |
கீழ்க்கண்டவற்றுள் கடன் நிதி அளவு கட்டுப்பாட்டு முறைகள் எவை?
வங்கி வட்டி வீதம் | |
ரொக்க இருப்பு வீதம் | |
வெளிச்சந்தை நடவடிக்கைகள் | |
இவை அனைத்தும் |
Question 64 Explanation:
விளக்கம்: கடன் நிதி அளவு கட்டுப்பாட்டு முறைகளில் வங்கி வட்டி வீதம், ரொக்க இருப்பு வீதம், வெளிச்சந்தை நடவடிக்கைகள் ஆகியன அடங்கும்.
Question 65 |
மற்ற வணிக வங்கிகளுக்கு மைய வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி வீதம்?
வங்கி வட்டி வீதம் | |
ரொக்க இருப்பு வீதம் | |
வெளிச்சந்தை நடவடிக்கைகள் | |
இவை அனைத்தும் |
Question 65 Explanation:
விளக்கம்: மற்ற வணிக வங்கிகளுக்கு மைய வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி வீதம் வங்கி வட்டி வீதம் ஆகும்.
Question 66 |
பண வீக்கத்தை குறைக்க மைய வங்கி என்ன செய்ய வேண்டும்?
வங்கி வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் | |
ரொக்க இருப்பு வீதத்தை குறைக்க வேண்டும் | |
வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டும் | |
இவை அனைத்தும் |
Question 66 Explanation:
விளக்கம்: மைய வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கும்போது வணிக வங்கிகள் வசூலிக்கும் வட்டி வீதமும் அதிகரிக்கும். இவ்வாறு வட்டி வீதம் அதிகரிப்பதால் கடன்பெறும் ஆர்வம் வணிகர்களிடையே குறைந்து விடுகிறது.
Question 67 |
வணிக வங்கிகள் உருவாக்கும் கடன் அளவு எதைப்பொறுத்து அமைகிறது?
வங்கி வட்டி வீதம் | |
ரொக்க இருப்பு வீதம் | |
வெளிச்சந்தை நடவடிக்கைகள் | |
இவை அனைத்தும் |
Question 67 Explanation:
விளக்கம்: வணிக வங்கிகள் உருவாக்கும் கடன் அளவு ரொக்க இருப்பு வீதத்தைப்பொறுத்து அமைகிறது.
Question 68 |
ரொக்க இருப்பு வீதத்தை மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
வணிக வங்கிகள் | |
ரிசர்வ் வங்கி | |
நிதி அமைச்சர் | |
பிரதமர் |
Question 68 Explanation:
விளக்கம்: ரொக்க இருப்பு வீதத்தை மாற்றும் அதிகாரம் மைய வங்கியிடம் உள்ளது. பணவீக்க காலத்தில் பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும் கடன் அளவை கட்டுப்படுத்தவும் இக்கருவியை பயன்படுத்துகிறது.
Question 69 |
கடன் அளிப்பை கட்டுப்படுத்தும் கருவியாக வெளிச்சந்தை நடவடிக்கையின் வெற்றி கீழ்க்கண்டவற்றுள் எதை பொறுத்து அமைகிறது?
போதுமான அளவு அரசு கடன் பத்திரங்களை மைய வங்கி வைத்திருத்தல் | |
நல்ல முன்னேற்றமடைந்த பண உண்டியல் அங்காடி | |
வணிக வங்கிகள் ரொக்க இருப்பு வீதத்தை நிலையாக வைத்திருக்கும் திறமை | |
இவை அனைத்தும் |
Question 69 Explanation:
விளக்கம்: இந்தியாவில் அதிக அளவில் இந்நிலை காணப்படவில்லை. எனவே வெளிச்சந்தை நடவடிக்கைகள் கடன் அளவை கட்டுப்படுத்துவதை விட அரசு கடன்பெறும் நடவடிக்கைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Question 70 |
வணிக வங்கிகளின் எல்லா வகையான கடன்களையும் கட்டுப்படுத்துவது எது?
தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகள் | |
கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகள் | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 70 Explanation:
விளக்கம்: திட்டமிட்ட பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகளை விட தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகளானது வணிக வங்கிகளின் எல்லா வகையான கடன்களையும் கட்டுப்படுத்துகிறது.
Question 71 |
கீழ்க்கண்டவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகள் எவை?
கடன் விரிவாக்க எல்லையை தீர்மானித்தல் | |
சில துறைகளை ஊக்கப்படுத்தவும், சில துறைகளின் ஆர்வத்தை குறைக்கவும், பல விதமான வட்டி வீதங்கள் விதிக்கப்படுகிறது. | |
மைய வங்கியானது சில விதிகளை அல்லது கொள்கைகளை பின்பற்றுமாறு வணிக வங்கிகளை கேட்டுக்கொள்ளுதல் | |
இவை அனைத்தும். |
Question 71 Explanation:
விளக்கம்: கடன் பத்திரங்களை வாங்க அளிக்கப்படும் கடன் அளவில் குறைந்தபட்ச உச்ச வரம்பை நிர்ணயித்தல், கடன் விரிவாக்க எல்லையை தீர்மானித்தல், சில துறைகளை ஊக்கப்படுத்தவும், சில துறைகளின் ஆர்வத்தை குறைக்கவும், பல விதமான வட்டி வீதங்கள் விதிக்கப்படுகிறது. மைய வங்கியானது சில விதிகளை அல்லது கொள்கைகளை பின்பற்றுமாறு வணிக வங்கிகளை கேட்டுக்கொள்ளுதல் ஆகியன தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகள் ஆகும்.
Question 72 |
இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை சிறந்த முறையில் செயல்பட தேவையான நிபந்தனைகள் எவை?
பணச்சந்தை வணிக வங்கிகளை சார்ந்திருக்க வேண்டும். | |
வணிக வங்கிகள் தங்களுக்கு தேவையான நிதியைப்பெற மைய வங்கியை சார்ந்திருக்க வேண்டும். | |
a) மற்றும் b) | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 72 Explanation:
விளக்கம்: இந்த இரு நிபந்தனைகளும் இந்தியாவில் நிறைவு பெறவில்லை. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் முற்றிலும் செயல்படவில்லை.
Question 73 |
வட்டிவீதம், முதலீடு இவற்றின் மூலமாக பணக்கொள்கை வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறும் முறை எது?
வங்கி வட்டி வீதம் | |
ரொக்க இருப்பு வீதம் | |
வெளிச்சந்தை நடவடிக்கைகள் | |
பண அனுப்பீட்டு முறை |
Question 73 Explanation:
விளக்கம்: பண அனுப்பீட்டு முறையின் நடவடிக்கையினால் பண அளிப்பானது வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக அரசு மலிவு பணக்கொள்கையை பின்பற்றும்போது மைய வங்கியானது வட்டி வீதத்தை குறைக்கும். இதன் காரணமாக வட்டி வீதம் குறையும். முதலீடு அதிகரிக்கும்.இது வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் உயர்த்தும்.
Question 74 |
பண அளிப்பில் உயர்வு ரொக்க இருப்பு வீத மாற்றம் எதனால் ஏற்படுகிறது?
வங்கி வட்டி வீதம் | |
ரொக்க இருப்பு வீதம் | |
வெளிச்சந்தை நடவடிக்கைகள் | |
பண அனுப்பீட்டு முறை |
Question 74 Explanation:
விளக்கம்: பண அளிப்பில் உயர்வு ரொக்க இருப்பு வீத மாற்றம் வெளிச்சந்தை நடவடிக்கைகளினால் ஏற்படுகிறது.
Question 75 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
வட்டி வீதம் குறையும்பொழுது நுகர்வு அதிகரிக்கும். | |
நுகர்வு மொத்த தேவையில் ஒரு பகுதியாக இருப்பதால் மொத்த தேவை அதிகரிக்கும். | |
இது சமநிலை வருமானத்தை உயர்த்தும். | |
இவை அனைத்தும் |
Question 75 Explanation:
விளக்கம்: முதலீடு மட்டும் அதிகரிப்பதால் ஏற்படும் வருமான உயர்வை விட நுகர்வும் முதலீடும் சேர்ந்து அதிகரிப்பதால் ஏற்படும் வருமான உயர்வு அதிகமாக இருக்கும்.
Question 76 |
பணவியல் கொள்கையானது கீழ்க்கண்ட எதில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வருமானத்தை மாற்றமடையச்செய்யும் என்று பணவியல் கொள்கையாளர் கருதுகின்றனர்?
நிகர தனியார் செல்வம் | |
தலா வருமானம் | |
அரசு செல்வம் | |
பண அளிப்பு |
Question 76 Explanation:
விளக்கம்: பணவியல் கொள்கையானது நிகர தனியார் செல்வத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வருமானத்தை மாற்றமடையச்செய்யும் என்று பணவியல் கொள்கையாளர் கருதுகின்றனர்.
Question 77 |
நுகர்வானது கீழ்க்கண்ட எதனுடன் நேரடித்தொடர்புடையது?
மூலதன இருப்பு | |
அரசுக்கடன் | |
பண அளிப்பு | |
இவை அனைத்தும் |
Question 77 Explanation:
விளக்கம்: மூலதன இருப்பு, பண அளிப்பு, அரசுக்கடன், ரூபாய் நோட்டுகள், பத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது நிகர தனியார் செல்வம் ஆகும். நுகர்வானது நிகர தனியார் செல்வத்துடன் நேரடித்தொடர்புடையது.
Question 78 |
கீழ்க்கண்டவற்றுள் நீர்மைத்தடை என்பது எதைக்குறிக்கிறது?
பண அளிப்பு அதிகரித்தாலும் வட்டி வீதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது | |
பண அளிப்பு குறைந்தாலும் வட்டி வீதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது | |
பண அளிப்பு அதிகரிக்கும்போது வட்டி வீதம் குறையும் | |
பண அளிப்பு குறையும்போது வட்டி வீதம் அதிகரிக்கும். |
Question 78 Explanation:
விளக்கம்: பணவியல் கொள்கை நீர்மைத்தடையில் கூட சிறந்த முறையில் செயல்படும்.
Question 79 |
வட்டி வீதம் அதிகமாக இருப்பதையும் பண அளிப்பு குறைந்து போவதையும் குறிப்பது எது?
அருமைப்பணம் | |
மலிவுப்பணம் | |
பத்திரங்கள் | |
உண்டியல்கள் |
Question 79 Explanation:
விளக்கம்: பண வீக்கம் நிலவும்போது மைய வங்கியானது அருமை பணக்கொள்கையை பயன்படுத்தி பண வீக்கத்தை கட்டுப்படுத்த முயலும். அருமைப்பணம் என்பது வட்டி வீதம் அதிகமாக இருப்பதையும் பண அளிப்பு குறைந்து போவதையும் குறிகிறது.
Question 80 |
ஒரு நாடு பொருளாதார மந்த காலத்தில் பின்பற்றும் முறை எது?
அருமைப்பணம் | |
மலிவுப்பணம் | |
பொது விலையேற்றம் | |
பொது விலையிறக்கம் |
Question 80 Explanation:
விளக்கம்: மலிவுப்பணம் என்பது குறைந்த வட்டியில் பணம் கிடைப்பதை குறிக்கும். மலிவுப்பணக்கொள்கையை ஒரு நாடு பொருளாதார மந்த காலத்தில் பின்பற்றும். முதலீடு செய்வதற்கு ஊக்கப்படுத்தவும் பண அளிப்பை அதிகரிப்பதற்கும் மலிவுப்பனக்கொள்கையை பின்பற்றும்.
Question 81 |
அரசின் செலவு மற்றும் அதற்கான நிதி வழங்கும் முறையை பற்றிய தொகுப்பு கோட்பாடுகளை குறிப்பது எது?
சமத்துவ விதி | |
சிக்கன விதி | |
நிதியியல் கொள்கை | |
பணவியல் கொள்கை |
Question 81 Explanation:
விளக்கம்: ஒரு அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையை பற்றிய நிலையமைதியே நிதியியல் கொள்கை எனப்படும். நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, மற்றும் விலை ஆகியவற்றை பொதுக்கடன்கள், வரிகள், பொதுச்செலவுகள் வாயிலாக மாற்றி அமைக்க அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப்பற்றியது ஆகும்.
Question 82 |
கீழ்க்கண்டவற்றுள் நிதிக்கொள்கையின் நோக்கங்கள் எவை?
தனியார் துறையை வளர்ச்சியடைய செய்தல் | |
வளங்களை உத்தம அளவில் பயன்படுத்தல் | |
முழு வேலை வாய்ப்பை அடைதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி | |
இவை அனைத்தும் |
Question 82 Explanation:
விளக்கம்: நிதிக்கொள்கையின் அடிப்படை நோக்கங்கள் பின்வருமாறு:
அ) வளங்களை திரட்டி பொதுத்துறையின் நிதி ஆதாரங்களை பெருக்க செய்தல்
ஆ) பணவீக்கத்தை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல்
இ) தனியார் துறையை வளர்ச்சியடைய செய்தல்
ஈ) வளங்களை உத்தம அளவில் பயன்படுத்தல்
உ) முழு வேலை வாய்ப்பை அடைதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி
ஊ) நிதிக்கொள்கையும் மூலதன ஆக்கமும்
Question 83 |
கீழ்க்கண்டவற்றுள் நிதிக்கொள்கையின் குறைபாடுகள் எவை?
நிதித்தீர்வுகளின் அளவு | |
அரசு நிர்வாகத்தில் கால தாமதம் | |
வணிக சூழல்களை கட்டுப்படுத்துவதில் நிதிக்கொள்கையின் குறைந்த வெற்றி | |
இவை அனைத்தும் |
Question 83 Explanation:
விளக்கம்: நிதிக்கொள்கையானது தனியார் மற்றும் பொதுத்துறைகளில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை அதிகரிக்க முடுக்கி விடும் முக்கிய கருவியாக இருந்தாலும் கீழ்க்கண்ட குறைபாடுகள் உள்ளன.
அ) நிதித்தீர்வுகளின் அளவு
ஆ) அரசு நிர்வாகத்தில் கால தாமதம்
இ) வணிக சூழல்களை கட்டுப்படுத்துவதில் நிதிக்கொள்கையின் குறைந்த வெற்றி
ஈ) மற்ற குறைபாடுகள்
Question 84 |
கீழ்க்கண்டவற்றுள் மத்திய அரசின் வரி சாரா வருவாய் எவை?
நிதிசார் பணிகள் | |
சுங்கத்தீர்வை | |
அன்பளிப்பு வரிகள் | |
b) மற்றும் c) |
Question 84 Explanation:
விளக்கம்: அ) நிதிசார் பணிகள்
ஆ) வட்டி வருவாய்கள்
இ) இலாப பங்குகள்
ஈ) பொதுப்பயன், பணிகள்
உ) சமூக, சமுதாய பயன் பணிகள்
ஊ) பொருளாதார பயன் பணிகள்
Question 85 |
கீழ்க்கண்டவற்றுள் மாநில அரசின் மூலம் விதிக்கப்படும் வரிகள் யாவை?
நில வருவாய் | |
விற்பனை வரி | |
செல்வ வரிகள் | |
செய்தித்தாள்கள் |
Question 85 Explanation:
விளக்கம்: வேளாண்மை நிலம் சார்பான பண்ணை வரிகள், மதுவகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள் விற்பனை மற்றும் செய்தித்தாள்கள் தவிர பிற பொருள்களின் மீதான வரிகள், மின்சார நுகர்வு, முத்திரைத்தாள் வரிகள் இன்னும் பிற.
Question 86 |
கீழ்க்கண்டவற்றுள் மத்திய அரசின் மூலம் விதிக்கப்படும் வரிகள் யாவை?
மதுவகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள் | |
மின்சார நுகர்வு | |
செல்வ வரிகள் | |
முத்திரைத்தாள் வரிகள் |
Question 86 Explanation:
விளக்கம்: வேளாண்மை வருமானம் தவிர்த்து பிற வருமானங்களின் மீதான வரிகள், நிறுவனங்களின் மீதான வரிகள், செலவினங்கள் மீதான வரிகள், சொத்துக்கள் மீதான வரிகள், அன்பளிப்பு வரிகள், செல்வ வரிகள், மூலதனத்தின் மீதான வரிகள், ஆயத்தீர்வை வரிகள், சுங்கத்தீர்வுகள் ஆகியன.
Question 87 |
கீழ்க்கண்டவற்றுள் மறைமுக வரி எது?
சுங்க வரி | |
வருமான வரி | |
சொத்து வரி | |
தீர்வை வரி |
Question 87 Explanation:
விளக்கம்: சுங்க வரி, விற்பனை வரி ஆகியவை மறைமுக வரி ஆகும்.விளக்கம்: சுங்க வரி, விற்பனை வரி ஆகியவை மறைமுக வரி ஆகும்.
Question 88 |
கீழ்க்கண்டவற்றுள் நேர்முக வரி எது?
சுங்க வரி | |
விற்பனை வரி | |
சொத்து வரி | |
இவை அனைத்தும் |
Question 88 Explanation:
விளக்கம்: வருமான வரி, சொத்து வரி, தீர்வை வரி, வெகுமதி வரி ஆகியவை நேர்முக வரி ஆகும்.
Question 89 |
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி வரி வருவாய்ப்பங்கீடு மேற்கொள்ளப்படுகிறது?
80 | |
88 | |
79 | |
a) மற்றும் b) |
Question 89 Explanation:
விளக்கம்: தற்போது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 80 மற்றும் 88 ன் படி வரி வருவாய்ப்பங்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
Question 90 |
வரி வருவாயின் பங்கு யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
நிதி அமைச்சர் | |
பிரதமர் | |
நிதி ஆணையம் | |
திட்டக்குழு |
Question 90 Explanation:
விளக்கம்: வரி வருவாயின் பங்கு நிதி ஆணையத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
Question 91 |
கீழ்க்கண்டவற்றுள் பங்கிடப்படும் வரிகள் எவை?
உறுப்பு 268 ன் கீழ் வரும் வரிகள் | |
உறுப்பு 269 ன் கீழ் வரும் வரிகள் | |
மேல் வரி | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 91 Explanation:
விளக்கம்: உறுப்பு 268 ன் கீழ் வரும் வரிகள், உறுப்பு 269 ன் கீழ் வரும் வரிகள், மேல் வரி, நோக்க வரி ஆகியவை தவிர அனைத்து வரிகளும் பங்கிடப்படுகின்றன.
Question 92 |
கீழ்க்கண்ட எந்த உறுப்பு வரி பங்கீடோடு தொடர்பு கொண்டது?
270 | |
269 | |
268 | |
267 |
Question 92 Explanation:
விளக்கம்: உறுப்பு 270 ன் படி கீழே பட்டியலிடப்பட்டுள்ள மத்திய அரசின் வரி மற்றும் தீர்வைகளை தவிர அனைத்து வரிகளும் பங்கிடப்படுகின்றன.
அவையாவன:
அ) உறுப்பு 268 ன் கீழ் வரும் வரிகள்
ஆ) உறுப்பு 269 ன் கீழ் வரும் வரிகள்
இ) மேல் வரி
ஈ) நோக்க வரி
Question 93 |
உறுப்பு 268 கீழ் வரும் வரிகள் எவை?
முத்திரை வரி | |
மருத்துவம் மற்றும் சுகாதாரத்தயாரிப்பிலுள்ள ஏரி சாராயம் | |
மாநிலங்களுக்கிடையிலான விற்பனை வரி | |
a) மற்றும் b) |
Question 93 Explanation:
விளக்கம்: உறுப்பு 268 கீழ் வரும் வரிகள்: முத்திரை வரி, மருத்துவம் மற்றும் சுகாதாரத்தயாரிப்பிலுள்ள ஏரி சாராயம் மற்றும் போதைப்பொருட்களின் மீதான ஆயத்தீர்வை ஆகியன
Question 94 |
தனி நபர்கள் இந்துக் கூட்டுக்குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் நிகர சொத்து மீது விதிக்கப்படும் வரி எது?
வருமான வரி | |
செல்வ வரி | |
பண்டப்பரிவர்த்தனை வரி | |
ஆயத்தீர்வை |
Question 94 Explanation:
விளக்கம்: தனி நபர்கள் இந்துக் கூட்டுக்குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் நிகர சொத்து மற்றும் செல்வங்களின் மீது விதிக்கப்படும் வரி செல்வ வரி எனப்படுகிறது. நிகர சொத்து மற்றும் செல்வம் என்பது மொத்த சொத்து மற்றும் செல்வத்தின் மதிப்பிலிருந்து அவற்றை சேர்க்க வாங்கிய கடனை கழிக்க கிடைப்பதாகும்.
Question 95 |
உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி எது?
வருமான வரி | |
சுங்கத்தீர்வை | |
பண்டப்பரிவர்த்தனை வரி | |
ஆயத்தீர்வை |
Question 95 Explanation:
விளக்கம்: ஆயத்தீர்வை உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி ஆகும்.
Question 96 |
பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான வரி எது?
வருமான வரி | |
சுங்கத்தீர்வை | |
விற்பனை வரி | |
ஆயத்தீர்வை |
Question 96 Explanation:
விளக்கம்: சுங்கத்தீர்வை பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான வரி ஆகும்.
Question 97 |
உறுப்பு 269 ன் கீழ் விதிக்கப்படும் வரிகள் எவை?
மாநிலங்களுக்கிடையேயான பொருள் அனுப்புகை மீதான வரி | |
மாநிலங்களுக்கிடையேயான பொருள் அனுப்புகை மீதான வரி | |
முத்திரை வரி | |
a) மற்றும் b) |
Question 97 Explanation:
விளக்கம்: மாநிலங்களுக்கிடையேயான பொருள் அனுப்புகை மீதான வரி, மாநிலங்களுக்கிடையேயான விற்பனை மற்றும் கொள்முதல் மீதான வரி ஆகியன.
Question 98 |
வரியின் அளவு மீது விதிக்கப்படும் வரி எது?
மேல் வரி | |
சுங்கத்தீர்வை | |
குவிப்பெதிர் தீர்வை | |
ஆயத்தீர்வை |
Question 98 Explanation:
விளக்கம்: வரியின் அளவு மீது விதிக்கப்படும் வரி மேல் வரி ஆகும். இதுவும் நோக்க வரி போன்றே வரியின் அளவு மீது விதிக்கப்படும் வரி ஆகும். ஆனால் இது எந்தவொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் விதிக்கப்படுவதில்லை.
Question 99 |
சேவை வரி எந்த உறுப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?
288 | |
288 (A) | |
279 | |
268 |
Question 99 Explanation:
விளக்கம்: இந்த உறுப்பின்படி சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உறுப்பின்படி இதனை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் மத்திய அரசு இயற்றும் சட்டத்தினைப் பொறுத்து மத்திய அரசு மாநில அரசுகள் வசூலிக்கலாம்.
Question 100 |
அனைத்து மத்திய வரிகளின் மீதும் எத்தனை சதவீதம் கல்வி நோக்க வரி விதிக்கப்படுகிறது?
3% | |
12% | |
0.36% | |
12.36% |
Question 100 Explanation:
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வரியின் அளவு மீது விதிக்கப்படும் வரி நோக்க வரி ஆகும். எடுத்துக்காட்டாக அனைத்து மத்திய வரியின் மீதும் 3% சதவீதம் கல்வி நோக்க வரி விதிக்கப்படுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.