Online Test

Economics Part 1 Revision Test in Tamil

அலகு VI - இந்தியப் பொருளாதாரம் - Economics Part 1 Revision Test in Tamil

Congratulations - you have completed அலகு VI - இந்தியப் பொருளாதாரம் - Economics Part 1 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வரும் கூற்றினை ஆய்வு செய்க.
  1. பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல்.
  2. பொருளியல் சமுதாயத்தின் பிரச்சனைகளை விளக்குகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 1 Explanation: 
விளக்கம்: C. இரண்டும் சரி பொருளியல் மனித விருப்பங்களை பற்றியும் அதை நிறைவு செய்யப்படுவது பற்றியும் விளக்குகிறது. சமுதாயத்தின் பிரச்சனைககளாகிய வேலையின்மை, வறுமை, உற்பத்தி மற்றும் அரசின் கொள்கைகளைப் பற்றி விளக்குகிறது. பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய ஒரு சமூக அறிவியல் என்பது ஆடம் ஸ்மித்தின் கூற்றாகும்.
Question 2
பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
A
லயனல் ராபின்ஸ்
B
ஆடம் ஸ்மித்
C
அமர்தியா சென்
D
ராபர்ட்சன்
Question 2 Explanation: 
விளக்கம்: B. ஆடம் ஸ்மித் ஆடம்ஸ்மித் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். பொருளியலின் இலக்கணத்தையும் வடிவமைத்தவர். அவரே “நாடுகளின் செல்வம்” என்ற அவரது புத்தக வெளியீட்டுக்கு பிறகே பொருளியலை நாம் முறைப்படுத்தப்பட்ட அறிவியலாக அறிகிறோம்
Question 3
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
A
அமர்தியா சென்
B
சந்திரசேகர்
C
ஹர் கோவிந்த் குரானா
D
வெங்கட்ராமன்
Question 3 Explanation: 
நோபல் பரிசு பெற்ற ஆறாவது இந்தியர் அமர்தியா சென் . இவர் தனது “வறுமையும் வளர்ச்சியும்” சம்மந்தமான ஆராய்ச்சிக்காக 1998 ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றார்.
Question 4
பின்வருவனவற்றுள் முதன்மை தொழில்கள் யாவை?
  1. வேளாண்மை
  2. கால்நடை வளர்த்தல்
  3. மீன் பிடித்தல்
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
1 & 2 மட்டும்
D
1, 2, 3
Question 4 Explanation: 
உணவு தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப் பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலை தொழில்கள் எனப்படுகிறது. உதாரணங்கள்: வேளாண்மை கால்நடைகள் வளர்த்தல் மீன் பிடித்தல் கனிமங்கள் தாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருட்கள் சேகரித்தல் கொட்டைகள் மூலிகைகள் ரப்பர் போன்றவை சேகரித்தல்.
Question 5
பின்வருவனவற்றுள் இரண்டாம் நிலை தொழில்கள் தொழில்கள் யாவை?
  1. சர்க்கரை ஆலை
  2. இரும்பு தொழிற்சாலை
  3. காகித தொழிற்சாலை
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
1 & 3 மட்டும்
D
1, 2, 3
Question 5 Explanation: 
முதல் நிலை தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் மற்றும் தொழில்துறை என்று அழைக்கப்படுகின்றன. உதாரணங்கள்: பருத்தி ஆலை சர்க்கரை ஆலை உணவு பதப்படுத்துதல் காகிதத் தொழிற்சாலைகள் கட்டுமானப் பொருட்கள் சிமெண்ட் இரும்பு அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்.
Question 6
பின்வருவனவற்றுள் மூன்றாம் நிலை தொழில்கள் யாவை?
  1. போக்குவரத்து
  2. தொலைத்தொடர்பு
  3. வர்த்தகம்
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
1 & 3 மட்டும்
D
1, 2, 3
Question 6 Explanation: 
தொழில்துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத்துறை தொழில்கள் என அழைக்கப்படுகின்றன போக்குவரத்து- சாலை, ரயில், கடல், ஆகாய போக்குவரத்துக்கள். தொலைத்தொடர்பு- அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம் வர்த்தகம்- பொருள்களை கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல். வங்கி-பணப்பரிமாற்றம், வங்கி சேவைகள்.
Question 7
நமது நாட்டின் பொருளாதார ஆணிவேராக திகழ்வது
A
விவசாயம்
B
தொழில்துறை
C
பணிகள் துறை
D
அயல்நாட்டு வணிகம்
Question 7 Explanation: 
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத் துறையை சார்ந்துள்ளனர். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களைவிவசாயத்துறைகொடுக்கிறது. எனவே விவசாயத்துறை நாட்டின் பொருளாதார ஆணிவேராக திகழ்கிறது.
Question 8
வளங்களை மாற்றியமைத்து மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வது
A
நுகர்ச்சி
B
உற்பத்தி
C
பகிர்வு
D
பயன்பாடு
Question 8 Explanation: 
உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும். பயன்பாடு என்பது விருப்பங்களை நிறைவு செய்வதாகும். சந்தையில் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்வது நுகர்ச்சி எனப்படும் வருமானம் ஈட்ட இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் அடிப்படை தேவைகள் பகிர்வு ஆகும்
Question 9
பின்வருவனவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடு?
A
நிலம் - வாரம்
B
உழைப்பு - லாபம்
C
மூலதனம் - வட்டி
D
தொழில் அமைப்பு - லாபம்
Question 9 Explanation: 
நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி வாரம் அல்லது வாடகை வாடகை எனப்படும். உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலி ஆகும். மூலதனத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி வட்டி ஆகும். தொழில் அமைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி லாபம் ஆகும்.
Question 10
கீழ்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A
பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் நிலம் என்றழைக்கப்படுகிறது.
B
நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி லாபம் ஆகும்.
C
நிலம் உண்மை காரணிகளில் ஒன்றாகும்.
D
நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
Question 10 Explanation: 
சாதாரணமாக நிலம் என்றால் நிலப்பரப்பை குறிக்கும். பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத காற்று, சூரிய ஒளி, பூமி, காடுகள், ஆறுகள் மற்றும் கனிமங்கள் ஆகிய அனைத்தும் நிலம் எனப்படும். நிலம் இயற்கையின் கொடை. நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது. மனிதன் நிலத்தில் உழைத்து பண்டங்களை உற்பத்தி செய்கின்றான்.
Question 11
உற்பத்தி காரணிகள் எத்தனை வகைப்படும்
A
2
B
4
C
5
D
3
Question 11 Explanation: 
நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு ஆகியவை உற்பத்தி காரணிகள் ஆகும்.
Question 12
மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவை
A
பண மூலதனம்
B
பருமபொருள் மூலதனம்
C
மனித மூலதனம்
D
தொழில் மூலதனம்
Question 12 Explanation: 
மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவைபரும பொருள் மூலதனம் ஆகும். பணவடிவில் அல்லது பணமாற்று பத்திரங்கள் பண மூலதனமாகும். கல்வி, பயிற்சி மற்றும் உடல் நலத்திற்காக செயல்படும் முதலீடு மனித மூலதனம் ஆகும்.
Question 13
பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க
  1. நம் நாட்டில் சேவைத்துறையில் கவர்ந்திழுக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளது.
  2. குடிசை தொழில்கள் இரண்டாம் துறையைச் சேர்ந்தவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 14
சேவை துறை என அழைக்கப்படுவது
A
உற்பத்தித்துறை
B
சார்பு துறை
C
முதன்மை துறை
D
இரண்டாம் துறை
Question 14 Explanation: 
ஒரு சமுதாயத்தின் சார்பு துறை என்பது சேவை துறையாகும். காப்பீடு, வங்கித்துறை, உடல்நலம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் கேளிக்கை அந்தத் துறையைத் என்பவைகளாகும்.
Question 15
” நாடுகளின் செல்வமும் அவற்றின் இயல்புகளும் ஓர் ஆய்வு”என்ற பொருளாதார நூலை எழுதியவர்
A
ஆடம் ஸ்மித்
B
வாக்கர்
C
அமர்த்தியா சென்
D
லயனல் ராபின்ஸ்
Question 15 Explanation: 
பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகின்ற ஆடம் ஸ்மித் என்பவரே மேற்கண்ட நூலை எழுதினார். மனித நடவடிக்கைகளை பற்றி பயலுகின்ற அறிவியல் பொருளியலாகும் என்றவர் லயனல் ராபின்ஸ். பொருளியல் இலக்கணத்தை வகுத்தவர்.
Question 16
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A
வேலை பகுப்பு முறையால் உற்பத்தி அதிகமாகிறது.
B
வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் லயனல் ராபின்ஸ்.
C
வேலை பகுப்பு முறை மனிதத்தன்மையை அழிக்கிறது.
D
கைவினைப் பொருட்களின் வளர்ச்சியை வேலை பகுப்புமுறை தடுக்கிறது.
Question 16 Explanation: 
வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் ஆடம் ஸ்மித். ஒரு உற்பத்தி முறையைவெவ்வேறுஉட்பிரிவுகளாக பிரித்து, அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தலே வேலை பகுப்பு முறையாகும்.
Question 17
‘மானட்டா’ என்பதன் பொருள்
A
பண்டமாற்று
B
பணம்
C
நுகர்வு
D
பகிர்வு
Question 17 Explanation: 
மானட்டா என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். மானட்டா என்பது ரோமானிய பெண் கடவுள் ஜினோட்டாவின் மறுபெயர் ஆகும்.
Question 18
‘பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும்’பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் என கூறியவர் என கூறியவர்
A
லயனல் ராபின்ஸ்
B
ஆடம் ஸ்மித்
C
வாக்கர்
D
ராபர்ட்சன்
Question 18 Explanation: 
வாக்கர்பொருளாதாரப் பேராசிரியர் ஆவார். பொருளாதாரத்தின் இலக்கணத்தை புதிய மற்றும் மாறுபட்ட முறையில் வகுத்தவர்.
Question 19
பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க
  1. பணம் என்பது ஒரு இடையீட்டு கருவி.
  2. பணம் என்பது காசுகள் ரூபாய்கள் காசோலை செலுத்துச் சீட்டு கடனட்டை முதலியவை இணைந்த ஒன்றாகும்.
  3. பணத்தில் செலவழிக்கப் படாமல் இருக்கும் ஒரு பகுதி முதலீடாகும்.
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
1 & 3 மட்டும்
D
1, 2, 3.
Question 19 Explanation: 
பணத்தில் செலவழிக்கப் படாமல் இருக்கும் ஒரு பகுதியே சேமிப்பாகும். முதலீடு என்பது அதிக உற்பத்தி பொருட்களின் சேர்ப்பு ஆகும்.
Question 20
இவற்றிற்கிடையேயான தலைகீழான உறவு காணப்படுகிறது
A
விலை மற்றும் தேவை.
B
விலை மற்றும் அன்பளிப்பு.
C
விலை மற்றும் வருமானம்.
D
விலை மற்றும் வரி.
Question 20 Explanation: 
விளக்கம்: A. விலை மற்றும் தேவை விலை உயர்ந்தால் தேவை குறையும். விலை குறைந்தால் தேவை உயரும். விலைக்கும் தேவைக்கும் இடையே உள்ள தலைகீழ் தொடர்பை தேவை விதி விளக்குகிறது.
Question 21
தேவை விதியை வடிவமைத்தவர் யார்?
A
ஆடம் ஸ்மித்.
B
ஆல்பர்ட் மார்ஷல்.
C
லயனல் ராபின்ஸ்.
D
லயனல் ராபின்ஸ்.
Question 21 Explanation: 
நிலைக்கும் தேவைக்கும் இடையே உள்ள தலையில் தொடர்பை, ’தேவை விதி’ என்று வடிவமைத்தவர் ஆல்பிரட் மார்ஷல் ஆவார். விலை குறைவதால் தேவைப்படும் பணத்தின் அளவு கூடுகிறது. விலை கூடுவதால் தேவையும் குறைகிறது என்பது அவரின் கூற்று. தேவை விதி மார்சல் விதி என்றும் அழைக்கப்படுகிறது.
Question 22
தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தாது?
A
ஆடம்பர பொருட்கள்.
B
அடிப்படை பண்டங்கள்.
C
வசதி பண்டங்கள்.
D
A & B.
Question 22 Explanation: 
அரிசி போன்ற அடிப்படை பண்டங்களுக்கும், வைர ஆபரணங்கள் போன்ற ஆடம்பரபண்டங்களுக்கும் மார்சலின் தேவை விதி பொருந்தாது. இப்பண்டங்களுக்கான விலை உயரும்போது தேவையும் உயரும். விலை குறைய குறைய தேவையும் குறையும்.
Question 23
சமூக இயல்களின் அரசி என அழைக்கப்படுவது
A
வரலாறு
B
புவியியல்
C
குடிமையியல்
D
பொருளாதாரம்
Question 23 Explanation: 
பொருளாதாரம் சமூக இயல்களில் முதன்மை பெற்ற இயல் என்பதால், அது சமூக இயல்களின் அரசியாக கருதப்படுகிறது.
Question 24
கி. மு 2500 முற்பட்ட கால கட்டத்திலேயே பொருளாதார சிந்தனையில் முன்னணியில் இருந்தவர்கள்
A
கிரேக்கர்கள்
B
இந்தியர்கள்
C
எகிப்தியர்கள்
D
ஹீப்ரூஸ் இனத்தவர்கள்.
Question 24 Explanation: 
உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தை கொண்டிருந்தவர்கள் ஹீப்ரூஸ் இனத்தவர்கள். இவர்களது பொருளாதார சிந்தனையில் அரசியல், சமூகம், வேதாந்தம், இறை நம்பிக்கை சார்ந்த அனைத்து துறைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன. ஹீப்ரூஸின் கருத்துக்கள் மிகப்பழமையானது எனினும் மனித இனத்திற்கு என்றைக்கும் நன்மை தரக்கூடியதாக உள்ளது.
Question 25
வணிக வாதக் கொள்கையை பின்பற்றியவர்கள்?
A
ஐரோப்பியர்கள்
B
பிரான்ஸ் நாட்டவர்.
C
ஹீப்ரூஸ் இனத்தவர்.
D
கிரேக்கர்கள்
Question 25 Explanation: 
15 முதல் 18ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்களால் வணிகவாதகொள்கை பின்பற்றப்பட்டது. இக்கொள்கை வேளாண்மையை புறக்கணித்தது. அரசின் தலையீட்டு கொள்கையை ஆதரித்தது.
Question 26
இயற்கைவாதக் கொள்கையை பின்பற்றியவர்கள்?
A
கிரேக்கர்கள்
B
ஹீப்ரூஸ் இனத்தவர்.
C
பிரான்ஸ்நாட்டவர்.
D
ஐரோப்பியர்
Question 26 Explanation: 
1756ஆம் ஆண்டு முதல் 1778 வரை பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் இயற்கைவாதம் எனப்பட்டன. இக்கொள்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தியது. அரசின் தலையிடாக் கொள்கையை ஆதரித்தது.
Question 27
சபாத் வாராந்திர விடுமுறையை (week end)அறிமுகப்படுத்தியவர்?
A
ஹீப்ரூஸ்
B
கிரேக்கர்கள்
C
ஐரோப்பியர்கள்
D
இந்தியர்கள்
Question 27 Explanation: 
உலகிலேயே மிகப் பழமையான நாகரிகத்தை கொண்டவர்கள் ஹீப்ரூஸ் இன மக்கள். சபாத் என்பது ஹீப்ரூஸ் இனமக்களின் வாராந்திர விடுமுறை நாளாகும். அந்தக் காலகட்டத்திலேயே முதலாளி தொழிலாளி அடிமைகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும்ஓய்வு மகிழ்ச்சியும் கிடைக்கும் நல்ல நாளாகக் கொண்டாடப்பட்டது.
Question 28
பழங்கால இந்திய மக்களின் வட்டி பற்றிய சிந்தனைகள் வேறு எந்த இன மக்களின் கோட்பாடுகளுடன் ஒப்புமையுடையதாக இருக்கிறது.
A
கிரேக்கர்கள்
B
எகிப்தியர்கள்
C
ஐரோப்பியர்கள்
D
ஹீப்ருஸ்
Question 28 Explanation: 
ஹீப்ரூஸ் இனத்தவர், தங்களுடைய சகோதர இனத்தவர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை ஏற்கவில்லை. ஆனால் வெளி மனிதர்களுக்கு கடன் கொடுத்து வட்டி பெறலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். வட்டி பற்றிய ஹீப்ரூஸின் சிந்தனைகளும் பழங்கால இந்திய மக்களின் வட்டி பற்றிய சிந்தனைகளும் ஒன்றே ஆகும்.
Question 29
ஹீப்ரூஸ் இனத்தவரின் பொருளாதார சிந்தனைகளில் சிறந்ததாக கருதப்படும் கோட்பாடு
A
லாபத்திற்கான உச்சவரம்பு.
B
நிலத்தின் செழுமையை மீளப் பெறுவது.
C
50ஆம் ஆண்டுஜூப்ளி திட்டம்.
D
சபாத்
Question 29 Explanation: 
50-ஆம் ஆண்டு ஜூப்ளி திட்டம் என்பது ஹீப்ரூஸ் சிந்தனைகளில் சிறந்ததாகும். இத்திட்டத்தின்படி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை வாங்கியவர்கள் நிலச் சொந்தக்காரருகே நிலத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காகவும் இத்திட்டம் பின்பற்றப்பட்டது.
Question 30
இந்திய பொருளாதாரத்தின் புதிய தந்தையாக கருதப்படுபவர்?
A
J. M. கீன்சு.
B
பேராசிரியர் பெல்.
C
ஆடம் ஸ்மித்.
D
டேவிட் ரெக்கார்டு.
Question 30 Explanation: 
J. M. கீன்ஸ் புதிய பொருளாதாரத்தின் தந்தையாக கருதப்படுகிறார். 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்ததிலிருந்து மீள அரசின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் துணிகரமான நிதி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இவர் எடுத்துக்கூறினார். அமெரிக்காவின் புதிய கொள்கை கீன்சின் கொள்கை அடிப்படையில் தோன்றியதாகும்.
Question 31
இந்தியாவில் ஐந்தாண்டு திட்டம் என்ற கருத்தமைவு
A
சோவியத் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது.
B
அமெரிக்கஐக்கிய நாடுகளில் இருந்து பெறப்பட்டது.
C
இங்கிலாந்து நாட்டில் இருந்து பெறப்பட்டது.
D
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பெறப்பட்டது.
Question 31 Explanation: 
விடுதலைக்கு பின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஐந்தாண்டு திட்டங்களே சிறந்தது என நேரு தீர்மானித்தார். நேருவின் பரிந்துரையின்பேரில் ஐந்தாண்டு திட்டங்கள் சோவியத் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட கருத்தாகும். சோவியத் நாட்டில் ஏழாண்டு திட்டங்களே நடைமுறையில் இருந்தன.
Question 32
இந்திய திட்டக் குழுவின் தலைவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதமர்
C
நிதியமைச்சர்
D
அரசுத்தலைவர்.
Question 32 Explanation: 
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற இந்திய திட்டக்குழு 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திய பிரதமர் திட்டக்குழுவின் தலைவராக செயல்படுகிறார்.
Question 33
இந்தியாவில் திட்டக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1962
B
1950
C
1956.
D
1949.
Question 33 Explanation: 
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற இந்திய திட்டக்குழு 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திய பிரதமர் திட்டக்குழுவின் தலைவராக செயல்படுகிறார். திட்டக்குழுவின் பணிகளை ஒருங்கிணைத்த முழு நேர அளவில் செயல்படுவதற்கு துணைத்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 34
இந்திய பொருளாதாரம் எவ்வகை பொருளாதாரமாக அமையவேண்டும் என முன்னாள் இந்திய பிரதமர் நேரு விரும்பினார்?
A
கலப்புப் பொருளாதாரம்.
B
சமதர்ம பொருளாதாரம்.
C
முதலாளித்துவ பொருளாதாரம்.
D
வணிகப் பொருளாதாரம்.
Question 34 Explanation: 
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த விரும்பினார். எனவே, வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய பொதுத்துறையும் தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த நேரு விரும்பினார்.
Question 35
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க.
  1. இந்திய பொருளாதாரத்தில் 1991ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  2. 1991இல் உருவாக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த கொள்கையின் விளைவாக அயல்நாட்டு முதலீடு இந்தியாவில் பன்மடங்கு அதிகரித்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 35 Explanation: 
நம் நாட்டின் நாட்டு வருவாயில் 40 விழுக்காடு வேளாண்மையில் இருந்து பெறப்படுவதால் அரசு வேளாண் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு பசுமைப்புரட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நில உச்சவரம்பு, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை நீக்குதல் மற்றும் நில குத்தகை போன்றவற்றுக்கான நிலச்சீர்திருத்த சட்டங்களை அரசு விரைவாக செயல்படுத்தி வேளாண் வளர்ச்சிக்கு அடிகோலியது.
Question 36
பண்டைக் காலத்தில் இந்திய பொருளாதாரம்எந்த பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது?
A
கிராமபுற
B
முதலாளித்துவ
C
கலப்பு
D
சமதர்ம
Question 36 Explanation: 
பண்டைக் காலத்தில் இந்திய பொருளாதாரம் கிராமப்புற பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக காணப்பட்டதுடன் 70% மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்ந்தார்கள். ஒவ்வொரு கிராமமும் தங்களது தேவைகளை தாங்களே உற்பத்தி செய்து கொண்டன. பண்டங்கள் முழுவதும் உள்ளூர் அங்காடியிலேயே விற்பனை செய்யப்பட்டன.
Question 37
எக்னாமிக்ஸ் என்ற சொல் எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது
A
லத்தின் மொழி
B
கிரேக்கம்
C
சீன மொழி
D
ஆங்கிலம்
Question 37 Explanation: 
எக்னாமிக்ஸ் என்ற சொல் ஆய்க்கனோமியா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
Question 38
இந்தியாவில்திட்டமிடுதல்என்பது
A
மையத் திட்டம்.
B
மக்களாட்சி திட்டம்.
C
பகுதி சார்ந்த திட்டம்.
D
சுட்டிக்காட்டும் திட்டம்.
Question 38 Explanation: 
நமது நாட்டின் திட்டக்குழு திட்டமிடுதல்’மக்களாட்சி முறையில் திட்டமிடுதல்’ என்று குறிப்பிடலாம். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நடுநிலையான வல்லுநர்கள் மூலம் நுகர்வு, உற்பத்தி, வணிகம், வருவாய், பகிர்வு ஆகியவை குறித்து எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முடிவுகளை திட்டமிடுதல் ஆகும். இவை பொருளாதார, சமூக, அரசியல் அல்லது இராணுவ நோக்கங்களை கொண்டிருக்கும்.
Question 39
பொருளாதாரத் திட்டத்தின் கால அளவு
A
5 ஆண்டுகள்.
B
10ஆண்டுகள்.
C
7ஆண்டுகள்.
D
7 முதல்10 ஆண்டுகள்.
Question 39 Explanation: 
சாதாரணமாக ஒரு திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகளாகும். இத்திட்டத்தினை முன்கூட்டியே வரைந்து விட வேண்டும். இந்தியாவில் இதை திட்டக்குழு செய்து வருகிறது.
Question 40
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க.
  1. தொலைநோக்கு திட்டத்தின் கால அளவு15 முதல் 20 ஆண்டுகள்.
  2. இடைபருவ திட்டம் திட்டத்தின் கால அளவு 7முதல் 10 ஆண்டுகள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 40 Explanation: 
தொலைநோக்குத் திட்டம் என்பது மிக நீண்ட காலத்தில் அடைய வேண்டிய இலக்குகளை குறிக்கிறது. 15அல்லது 20-25 ஆண்டுகள் திட்டக் காலமாக இருக்கும். உடனடியாக பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதை விட எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் அடிகோலூவதே இடைப்பருவத் திட்டமாகும் இதன் கால அளவு 3-5 ஆண்டுகள் மேலும் 7-10 ஆண்டுகளில் முடிவதாகவும் இருக்கும்.
Question 41
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க.
  1. சுழல் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  2. ஆண்டு திட்டத்தின் கால அளவு ஒரு ஆண்டு ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 41 Explanation: 
ஒரே ஒரு பொருளாதார இலக்கினை குறிக்கோளாகக் கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்துவது ஆண்டு திட்டமாகும். இதன் கால அளவு ஓராண்டு ஆகும். சுழல் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
Question 42
தல வருமானத்தை 10 ஆண்டுகளில் இருமடங்காக ஆக்கவேண்டும் என்பது நமது பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோளாகும். இது திட்டமிடுதலின் வகைகளில் எந்த வகையைச் சார்ந்தது?
A
பரந்த அளவுத்திட்டம்.
B
கட்டளை திட்டம்.
C
தொலைநோக்குத் திட்டம்.
D
ஆண்டுத்திட்டம்.
Question 42 Explanation: 
மிக நீண்ட காலத்தில் அடையவேண்டிய உறுதிசெய்யப்பட்ட இலக்குகளை குறிக்கிறது. நாடு நீண்ட காலத்தில் அடையவேண்டிய முன்னேற்றத்தின் வரைபடம் என்று இதனைக் கூறலாம்.
Question 43
பின்வரும் கூற்றினை ஆய்வு செய்க.
  • கூற்று(A): தொலைநோக்கு திட்டம் 15-20 அல்லது 25 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
  • காரணம்(R): மக்கள் தொகையின் வளர்ச்சி கல்வியில் செய்யப்படும் முதலீட்டுக்கு போன்றவற்றின் விளைவுகளை நீண்ட காலத்தில் மட்டுமே கணக்கிட முடியும்.
A
Aமற்றும் R சரி;A விற்கு R சரியான விளக்கம்.
B
Aமற்றும் R சரி;A விற்கு R சரியான விளக்கம் அல்ல.
C
A சரி R தவறு
D
A தவறு R சரி
Question 44
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க.
  1. தொலைநோக்குத் திட்டம் அவ்வப்போது ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மை உடையதாக உள்ளது.
  2. பல்வேறு குறுகிய கால திட்டங்களுக்கு இது பின்புலமாக உள்ளது.
  3. தொலைநோக்கு திட்டங்களில் அவ்வப்போது செய்யும் மாற்றங்கள் மக்களிடையே நம்பிக்கையின்மையை தோற்றுவிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும்.
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
2 & 3 மட்டும்
D
1, 2, 3.
Question 44 Explanation: 
தொலைநோக்கு திட்டம் அவ்வப்போது ஏற்படகூடிய மாற்றங்களுக்கு ஏற்ப நோக்கங்களை மாற்ற முடியாத அளவிற்கு நெகிழ்வற்றதாக உள்ளது.
Question 45
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க.
  1. இடை பருவ திட்டங்களை சில நேரங்களில் பாதியிலே கைவிட நேரிடுகிறது.
  2. இடைப்பருவத் திட்டங்களின் கால அளவு 7-10 ஆண்டுகள் வரை உள்ளதால் ஆட்சி மாற்றங்கள் திட்ட செயல்முறைகளை பாதிக்கின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 46
ஆண்டு திட்டங்கள் குறித்து கீழ்கண்ட எந்த கூற்று தவறானது?
A
ஆண்டுத் திட்டங்கள் விரைந்த செயல்பாட்டினை கொண்டவை.
B
இந்தத் திட்டம் என்பது ஓராண்டு கால அளவை கொண்ட குறுகிய காலத் திட்டம் ஆகும்.
C
பல்வேறு இலக்குகளை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.
D
வரையறுக்கப்படும் இலக்குகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
Question 46 Explanation: 
ஆண்டு திட்டத்தின் படி ஒரே ஒரு பொருளாதார இழப்பினை குறிக்கோளாகக் கொண்டு அதில் மட்டுமே மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.
Question 47
இந்தியாவில் எத்தனை முறை ஆண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன?
A
3
B
4
C
5
D
6
Question 47 Explanation: 
இந்தியாவில் 1966-67, 1967-68, 1968-69, 1990-91 மற்றும் 1991-92 ஆகிய ஆண்டுகளில் ஆண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
Question 48
பணக்காரர்கள் மீதும் உழைப்பில்லாமல் வாரிசுரிமை மூலம் அடைந்த சொத்தின் மீது கடுமையான வரிகளை விதிக்கும் திட்டம் எது?
A
துறைவாரியான திட்டங்கள்.
B
கட்டளை திட்டம்.
C
சுழல் திட்டம்.
D
பரந்த அளவு திட்டங்கள்.
Question 48 Explanation: 
பரந்த அளவு திட்டமிடுதல் ஆனது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக பரந்த அளவில் அமைந்த ஒன்றாகும். இந்தத் திட்டத்தி இந்தத் திட்டத்தில் பொருளாதாரத்தின் அமைப்பு முறையை எவ்விதத்திலும் பாதிக்காமல் மொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கும் திட்டம் தீட்டப்படுகிறதுல் பொருளாதாரத்தின் அமைப்பு முறையை எவ்விதத்திலும் பாதிக்காமல், மொத்த பொருளாதார நடவடிக்கைகளும் திட்டம் தீட்டப்படுகிறது. இத்திட்டத்தின்படி ஏழைகள் மீது பொதுவாக வரிகள் விதிக்கப்படுவதில்லை, அப்படியே வரிவிதிப்பினும் குறைந்த அளவு விதிக்கப்படுகிறது.
Question 49
கீழ்க்கண்டவற்றில் துறைவாரியான திட்டங்களில் வருகின்ற துறைகள் யாவை?
  1. மக்கள்தொகைபெருக்கத்தைகட்டுப்படுத்தல்.
  2. பன்னாட்டுவணிகம்.
  3. போக்குவரத்து.
A
1 மட்டும்
B
1 & 2 மட்டும்
C
2 & 3 மட்டும்
D
1, 2, 3.
Question 49 Explanation: 
பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக திட்டம் தீட்டுதல் துறைவாரியான திட்டம் எனப்படும். அர்ஜென்டினா நாட்டின் மக்கள் தொகை திட்டமிடல், பிரான்ஸ் நாட்டின் தொழிற்சாலைகளை புதுமைப்படுத்தும் மன்னர் திட்டம் ஆகியவை துறைவாரியான திட்டமிடல் வகையைச் சார்ந்ததாகும்.
Question 50
சோவியத் ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள திட்டம் எது?
A
பரந்த அளவு திட்டங்கள்.
B
துறைவாரியானதிட்டங்கள்.
C
கட்டளை திட்டம்.
D
சுழல் திட்டம்.
Question 50 Explanation: 
சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கட்டளை திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த நாடுகளில் திட்டமிடல் என்பது கட்டளை, வற்புறுத்துதல் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. என்ன உற்பத்தி செய்ய வேண்டும்?எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும்? எந்த அளவு உழைப்பை பயன்படுத்த வேண்டும்? யாரிடம் இருந்து மூலப் பொருள்களை வாங்க வேண்டும்? உற்பத்தியான பொருட்களை எங்கு யாரிடம் விற்க வேண்டும்? என்பன போன்ற அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் அரசின் ஆணைப்படி நடக்க வேண்டும்.
Question 51
இந்தியாவின் திட்ட ஆணையம் ஒரு
A
அரசியலமைப்பு அமைப்பு.
B
தன்னாட்சி அமைப்பு.
C
சட்ட ரீதியான அமைப்பு.
D
சட்டரீதியான அல்லாத அமைப்பு.
Question 51 Explanation: 
இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும் குறைவான வளங்களைப் பெருக்கியும் சமச்சீரான வகையில் அதை பயன்படுத்தி திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும்.
Question 52
மஹாலொநொபிஸ் (mahalanobis) மாதிரி எந்த ஐந்தாண்டு திட்டத்துடன் தொடர்புடையது?
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்.
Question 52 Explanation: 
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில்(1956-61) தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது மகாலநோபிஸ் திட்டம் என்று அழைக்கப்பட்டது.
Question 53
இந்தியாவின் முதல் திட்ட  விடுமுறை அளிக்கப்பட்ட காலகட்டம்
A
1966-69
B
1961-63
C
1980-84
D
2002-04
Question 53 Explanation: 
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் தோல்வியை சந்தித்தனால் 1966-69 வரை ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்படவில்லை. மாறாக ஆண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்திற்கும் நான்காம் ஐந்தாண்டு திட்டத்திற்கும் இடைப்பட்ட காலமே திட்ட விடுமுறை அளிக்கப் பட்ட காலகட்டமாகும்.
Question 54
இந்தியாவில் திட்ட ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?
A
10, மார்ச் 1950.
B
15, மார்ச் 1950.
C
20, மார்ச் 1950.
D
16, மார்ச் 1950.
Question 54 Explanation: 
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டு வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தியும் உற்பத்தியை பெருக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் வளர வழி செய்வதற்காக ஒரு திட்ட குழு உருவாக்கப்பட்டது 1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும் குறைவான வளங்களைப் பெருக்கியும் சமச்சீரான வகையில் அதை பயன்படுத்தி திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும்.
Question 55
பொருளாதார திட்டமிடல் இதில் உள்ளது?
A
மத்தியபட்டியல்.
B
மாநிலப் பட்டியல்.
C
பொதுப் பட்டியல்.
D
குறிப்பிட்ட பட்டியலிலும் இல்லை.
Question 55 Explanation: 
பொருளாதாரத் திட்டமிடல் பொதுப் பட்டியலில் உள்ளது.
Question 56
தேசிய வளர்ச்சி கவுன்சில் எப்பொழுது அமைக்கப்பட்டது?
A
ஆகஸ்ட் 16, 1950.
B
ஆகஸ்ட் 6, 1952.
C
ஆகஸ்ட் 1, 1951.
D
ஆகஸ்ட் 16, 1952.
Question 56 Explanation: 
தேசிய வளர்ச்சி குழு என்பது பிரதமரின் தலைமையில் இந்தியாவில் வளர்ச்சி விஷயங்களில் முடிவு எடுக்கும் மற்றும் விவாதிப்பதற்கான அமைப்பாகும். திட்டமிடல் ஆணையத்தால் செய்யப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு ஆதரவாக தேசத்தின் முயற்சி மற்றும் வளங்களை வலுப்படுத்தவும் அணிதிரட்டவும் அனைத்து முக்கியத் துறைகளிலும் பொதுவான பொருளாதார கொள்கைகளை மேம்படுத்துவதற்கும், சீரான மற்றும் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இது ஆகஸ்ட் 6 1956 அன்று அமைக்கப்பட்டது.
Question 57
முதல் முறையாக இந்தியாவின் பிரதம மந்திரி 20 அம்சம் பொருளாதார திட்டத்தை அறிவித்த ஆண்டு
A
1973
B
1974.
C
1975
D
1976
Question 57 Explanation: 
பிரதம மந்திரி இந்திரா காந்தியால் 1975ஆம் ஆண்டு 20 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் வறுமையை அகற்றுவது மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. 2006ம் ஆண்டு 20 அம்சத் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
Question 58
முதல் ஐந்தாண்டு திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது?
A
ஹெரால்ட் டோமர் மாடல்.
B
மகாலநோபிஸ் மாதிரி.
C
இரண்டும் சரி.
D
இரண்டும் தவறு.
Question 58 Explanation: 
முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில்(1951-1956) வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இத்திட்டம் ஹெரால்ட் டோமர் மாதிரி பின்பற்றியது.
Question 59
இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டம்
A
1947-1952.
B
1949-1954.
C
1950-1955.
D
1951-1956.
Question 59 Explanation: 
எதிர்கால பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான உறுதியான அடித்தளத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தல்போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பது வேளாண்மைத் தொழில். எனவே இது வேளாண்மை சார்ந்த திட்டமாக உருவாக்கப்பட்டது. முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் 1951-1956. இத்திட்டம்ஹாரார் டோமர் மாதிரி பின்பற்றியது.
Question 60
”காட்கில் யோஜனா” என்று அழைக்கப்படும் ஐந்து வருட திட்டம் எது. ?
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்.
Question 60 Explanation: 
காட்கில் பார்முலா நான்காம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மத்திய வளங்களை மாநிலங்களுக்கு இடையே பிரித்தளிக்க உதவுகிறது. சிறப்பு அந்தஸ்து மாநிலங்களான அசாம் காஷ்மீர் போன்ற மாநிலங் களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நான்காம் ஐந்தாம் திட்டத்தின் காலம் 1969-1974.
Question 61
“சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வளர்ச்சியில்” எந்த ஐந்தாண்டு கால திட்டம் தொடர்புடையது?
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்.
Question 61 Explanation: 
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்1997-2002. இதன் நோக்கம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வளர்ச்சி. 1997 இல் ஏற்பட்ட ஆசிரியை சிக்கல் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு, ககார்கில் போர் போன்ற இடர்பாடுகள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. இந்த காரணங்களால் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.
Question 62
நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர் யார்
A
அரவிந்த் பனகாரியா
B
அரவிந்த்சுப்ரமணியன்.
C
அரவிந்த் ராய்.
D
அரவிந்த் குப்தா.
Question 62 Explanation: 
நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா.
Question 63
கனரகவளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
Question 63 Explanation: 
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 1956-1961. அடிப்படை கனரக தொழில்கள் விரைந்து பெருகச் செய்தல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கங்களில் முக்கியமானதாகும். நீர் மின்சக்தி நிலையங்கள், பிலாய் துர்காபூர், ரூர்கேலா போன்ற ஆலைகள் தொடங்கப்பட்டன. 1958 ல் அணு ஆற்றல்ஆணைகுழு நிறுவப்பட்டது.
Question 64
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்
A
1992-1997.
B
1990-1995.
C
1991-1996.
D
1993-1998.
Question 64 Explanation: 
ஆண்டுத் திட்டங்கள் செயல்பட்டபோது ஏற்பட்ட பணவீக்கத்தை சரி செய்ய வேண்டிய சூழ்நிலையில் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் துறைக்காக அனுமதிக்கப்பட்டதனால் தனியார் துறைகளின் சமூக பங்கு உயர்ந்தது. இதன் காலம் 1992-1997.
Question 65
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) கொண்டு வரப்பட்டது
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 65 Explanation: 
1980 ம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டது
Question 66
‘திட்டமிட்ட இந்திய பொருளாதாரம்’என்ற நூலின் ஆசிரியர்?
A
மொரார்ஜி தேசாய்.
B
ஜவஹர்லால் நேரு.
C
எம். விஸ்வேஸ்ரய்யா.
D
காட்கில்
Question 66 Explanation: 
திட்டமிட்ட இந்திய பொருளாதாரம்’என்ற நூலின் ஆசிரியர் எம். விஸ்வேஸ்ரய்யா
Question 67
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 67 Explanation: 
1980ஆம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் இவற்றின் நோக்கமாகும்.
Question 68
ஜவார் ரோஜ்கர் யோஜனா கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டு திட்டம்
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்.
Question 68 Explanation: 
ஜவஹர் ரோஜர் யோஜனா ஏப்ரல் 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டம் ஆகும்
Question 69
முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் தலைவராக இருந்தவர்
A
டாக்டர் ராதாகிருஷ்ணன்.
B
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
C
ஜவஹர்லால் நேரு.
D
டி. டி. கிருஷ்ணமாச்சாரி.
Question 69 Explanation: 
முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் தலைவராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
Question 70
கலப்பு பொருளாதாரம் (mixed economy) என்பது
A
பொதுவுடைமை பொருளாதாரம்.
B
தனியார் பொருளாதாரம்.
C
அரசு மற்றும் தனியார் கூட்டு பொருளாதாரம்.
D
அரசுபொருளாதாரம்.
Question 70 Explanation: 
கலப்பு பொருளாதாரம்(mixed economy) என்பது அரசு மற்றும் தனியார் கூட்டு பொருளாதாரம். முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய பொதுத்துறையும் தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார்.
Question 71
‘வறுமையை ஒழிப்போம்’(Poverty Eradication-GaribiHatao)  என்பது எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியமாகக் கருதப்பட்டது.
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
Question 71 Explanation: 
நான்காவதுஐந்தாண்டுத்திட்டக்காலம் 1969-1974. வறுமையைஒழிப்போம் என்ற நோக்கத்தினை கொண்டிருந்தது இந்த திட்டம்.
Question 72
தேசிய வளர்ச்சி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1948
B
1950
C
1951
D
1952
Question 72 Explanation: 
இது ஆகஸ்ட் 6 , 1952 அன்று அமைக்கப்பட்டது. இந்த சபையில் பிரதமர் மத்திய அமைச்சரவை அமைச்சர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அல்லது அவர்களுக்கு மாற்றாக மத்திய பிரதேசங்களில் பிரதிநிதிகள் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய வளர்ச்சி குழுவை ஒழிக்க முன்மொழியப்பட்டது ஆனால் இன்றுவரை அதை ஒழிக்க எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
Question 73
தேசிய திட்டமிடுதலில் சுழற்று  திட்டத்தினை(Rolling Plan)அறிமுகம் செய்தவர்
A
இந்திரா காந்தி.
B
வி. பி. சிங்.
C
மொரார்ஜி தேசாய்.
D
ராஜிவ் காந்தி.
Question 73 Explanation: 
தேசிய திட்டமிடுதலில் சுழற்று திட்டத்தினை (Rolling Plan)அறிமுகம் செய்தவர் மொரார்ஜி தேசாய்.
Question 74
தேசிய வளர்ச்சிக் குழுவின்(NDC)உறுப்பினராக இல்லாதவர் யார்
A
திட்டகுழு உறுப்பினர்கள்.
B
மாநில முதலமைச்சர்கள்.
C
குடியரசு தலைவர்.
D
பிரதமர்.
Question 74 Explanation: 
இந்த சபையில் பிரதமர் மத்திய அமைச்சரவை அமைச்சர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அல்லது அவர்களுக்கு மாற்றாக மத்திய பிரதேசங்களில் பிரதிநிதிகள் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளனர்.
Question 75
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கால அளவு
A
1961-1966.
B
1960-1965
C
1957-1962
D
1959-1964
Question 75 Explanation: 
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கால அளவு 1961-1966.
Question 76
ஒன்பதாவது திட்டத்தின் காலம்?
A
1997-2002
B
1991-1996
C
1992-1997
D
1993-1998
Question 76 Explanation: 
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்1997-2002. இதன் நோக்கம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வளர்ச்சி. 1997 இல் ஏற்பட்ட ஆசிரியை சிக்கல் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குஜராத்தில் நடுக்கம் கார்கில் போர் போன்ற இடர்பாடுகள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. இந்த காரணங்களால் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.
Question 77
பத்தாவது திட்டத்தின் முக்கிய குறிக்கோள்
A
உணவு, வேலை, உற்பத்தி
B
சிறுவர்களுக்கு இலவச கல்வி
C
தேசிய வருவாயில் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவது
D
சமூக வளர்ச்சித் திட்டங்கள்
Question 78
1966-69-இல் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு பதிலாக ஓராண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் காரணம்
A
இந்தியா பாகிஸ்தான் போர்.
B
மோசமானபொருளாதார நிலை.
C
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு.
D
இவை மூன்றுமே.
Question 79
ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது
A
திட்டக்குழு
B
குடியரசுத் தலைவர்
C
தேசிய வளர்ச்சி குழு(NDC)
D
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள்
Question 79 Explanation: 
தேசிய வளர்ச்சி குழு என்பது பிரதமரின் தலைமையில் இந்தியாவில் வளர்ச்சி விஷயங்களில் முடிவு எடுக்கும் மற்றும் விவாதிப்பதற்கான அமைப்பாகும்.
Question 80

பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தெரிவு செய்க.

 
  • 1. வேளாண்மை நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.
  • 2. நம் நாட்டின் நாட்டு வருவாயில் 40 விழுக்காடு வேளாண்மையில் இருந்து பெறப்படுகிறது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 80 Explanation: 
நம் நாட்டின் நாட்டு வருவாயில் 40 விழுக்காடு வேளாண்மையில் இருந்து பெறப்படுவதால் அரசு வேளாண் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு பசுமைப்புரட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நில உச்சவரம்பு, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை நீக்குதல் மற்றும் நில குத்தகை போன்றவற்றுக்கான நிலச்சீர்திருத்த சட்டங்களை அரசு விரைவாக செயல்படுத்தி வேளாண் வளர்ச்சிக்கு அடிகோலியது.
Question 81
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்
A
பிரதம மந்திரி
B
திட்ட மந்திரி
C
கேபினட் மந்திரி அந்தஸ்தில் இருப்பார்
D
சிறந்த பொருளாதார நிபுணர்
Question 81 Explanation: 
திட்டக்குழுவின் உபதலைவர் கேபினட் மந்திரி அந்தஸ்தில் இருப்பார்.
Question 82
திட்டக்குழு இந்தியாவில் பின்வருமாறு செயல்படுகிறது
A
ஆலோசனைக் குழு
B
தன்னாட்சி குழு
C
மத்திய அரசின் ஒரு துறை
D
செயல்படுத்தும் குழு
Question 83
நபார்ட் வங்கி தொடங்கப்பட்டது
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்.
Question 83 Explanation: 
நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்திய கிராமங்களில் வேளாண்மை மற்றும் பெற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விஷயங்களில் முழுப்பொறுப்பும்நபார்டு வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Question 84
எந்த ஐந்தாண்டு திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டது
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஐந்தாவதுஐந்தாண்டு திட்டம்
Question 84 Explanation: 
1975 ல் இருபது அம்சத் திட்டம் கொண்டு வரப்பட்டதால் ஐந்தாம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1977 இல் ஆட்சி அமைத்த ஜனதா அரசு இத்திட்டத்தை ஆண்டு முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாகவே 1978ல் நிறைவுக்கு கொண்டு வந்தது.
Question 85
கீழ்கண்டவுற்றுள் இந்திய பொருளாதார திட்டமிடுதலின் நோக்கமல்ல
A
தொழில் வளர்ச்சி.
B
சுய சார்பு
C
வேலைவாய்ப்பு பெருக்கம்.
D
மக்கள் தொகை வளர்ச்சி
Question 86
தற்காலத்திய இந்திய வேளாண்மையின் நிலை
A
வணிக தன்மை.
B
தொழில் தன்மை
C
ஏற்றுமதி உபரி
D
சுய தேவைப் பூர்த்தியுடன் சிறிது உபரி
Question 87
பொதுவுடைமைக் கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம்
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.
B
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்.
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்.
D
ஐந்தாவதுஐந்தாண்டு திட்டம்
Question 87 Explanation: 
பொதுவுடைமை கொள்கை இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Question 88
புதிய பொருளாதாரக் கொள்கையின் அம்சங்கள்
A
கட்டுப்பாடற்ற கொள்கை
B
போட்டியுள்ள சந்தை
C
திருத்தியமைக்கப்பட்ட வரி கொள்கை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 89
உலகமயமாக்குதல் என்பது
A
உலகம் முழுவதும் கூட்டுறவை வளர்த்தல்.
B
அங்காடியின் அளவினை ஒரு நாட்டின் எல்லைக்கப்பாலும் விரிவடையச் செய்வது
C
உலக நாடுகளின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 90
இந்தியாவில் இரண்டாவது திட்ட விடுமுறை அளிக்கப்பட்ட காலகட்டம்
A
1966-1969.
B
1990-1992.
C
1990-1993.
D
1985-1990
Question 90 Explanation: 
1990-91, 1991-92 ஆகிய காலகட்டங்களில் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டன. அடிக்கடி ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினால் ஐந்தாண்டு திட்டங்களை சரிவர செயல்படுத்த இயலவில்லை. ஏழாம் ஐந்தாண்டு திட்டத்திற்கும் எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கும் இடைப்பட்ட காலமே இரண்டாவது திட்ட விடுமுறை அளிக்கப்பட்ட காலமாகும்.
Question 91
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யாரால் கைவிடப்பட்டது?
A
ஜனதாதள அரசால்
B
இந்திரா காந்தியால்
C
ராஜிவ் காந்தியால்
D
ஜனாதிபதியால்
Question 91 Explanation: 
1975 ல் இருபது அம்சத் திட்டம் கொண்டு வரப்பட்டதால் ஐந்தாம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1977 இல் ஆட்சி அமைத்த ஜனதா அரசு இத்திட்டத்தை ஆண்டு முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாகவே 1978ல் நிறைவுக்கு கொண்டு வந்தது.
Question 92
12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
A
2012-2017
B
2011-2016
C
2013-2018
D
2014-2019
Question 92 Explanation: 
12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2012-2017
Question 93
நிதி ஆயோக் (NITI Aayog) ஆரம்பிக்கப்பட்ட நாள்
A
பிப்ரவரி 1, 2014
B
ஜனவரி 1, 2015
C
மார்ச் 1, 2014
D
மார்ச் 1, 2015
Question 93 Explanation: 
நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது.
Question 94
நிதி ஆயோக்கின் தற்போதைய துணை தலைவர்
A
அரவிந்த் பனகாரியா
B
ராஜிவ் குமார்
C
விவேக் ஓப்ராய்
D
வினோத் பவுல்
Question 94 Explanation: 
நிதி ஆயோக்கின் தற்போதைய துணை தலைவர் ராஜிவ் குமார்.
Question 95
நிதி ஆயோக்கின் தலைவர்
A
பிரதம மந்திரி.
B
குடியரசுத் தலைவர்
C
திட்டமந்திரி
D
ஆளுநர்
Question 95 Explanation: 
நிதி ஆயோக்கின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார்.
Question 96
இந்தியாவில் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கான உறுதியான அடித்தளத்தையும் வடிவத்தையும் கொடுத்தவர்
A
ஜவஹர்லால் நேரு
B
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C
மகாத்மா காந்தி
D
டாக்டர் B. R. அம்பேத்கர்
Question 96 Explanation: 
1938இல் ஹரிபுரா என்ற இடத்தில் நேதாஜி நிகழ்த்திய தலைமை உரை ஒன்றில் திட்டக்குழுவின் சிறப்பையும் அதனுடைய தேவை பற்றியும் வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸும் ஆளுமைக்குட்பட்ட மாநிலங்களின் தொழில்துறை அமைச்சர்களின் கூட்டம் ஒன்றை 1938 அக்டோபரில் கூட்டினார். இக்கூட்டத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு உட்படாத சிற்றரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய திட்ட குழு ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தேசிய திட்டக் குழுவின் முதல் கூட்டம் 1938 நவம்பரில் நடைபெற்றது.
Question 97
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்வு செய்க
  1. முதலாம் ஐந்தாண்டு திட்டம் வேளாண்மை சார்ந்த திட்டமாகும்.
  2. உணவுத் தட்டுப்பாட்டை தீர்க்கவும்,  பருத்தி சணல் ஆகிவற்றின் உற்பத்தியை உயர்த்தவும் இவ்வகை திட்டம் உருவாக்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 97 Explanation: 
எதிர்கால பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான உறுதியான அடித்தளத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தல்போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பது வேளாண்மைத் தொழில். எனவே இது வேளாண்மை சார்ந்த திட்டமாக உருவாக்கப்பட்டது.
Question 98
பின்வருவனவற்றுள் சரியான கூற்றினைதேர்வு செய்க
  1. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் தோல்வியை சந்தித்தது.
  2. போர்களையும்,  பஞ்சத்தையும் சந்தித்ததால் இத்திட்டம் தோல்வியடைந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 98 Explanation: 
1962 இல் சீனா போர், 1965 இல் பாகிஸ்தான் போன்ற காரணங்களால் வளர்ச்சி என்ற நிலையிலிருந்து மாறி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிலைக்கு உள்ளானது. மேலும் கடுமையான வறட்சி பஞ்சம் தொடர்ச்சியான பருவகால மழையின்மை போன்ற காரணங்களால் ஆண்டு வளர்ச்சி வீதம் 4. 2% ஆக குறைந்தது. இத்திட்டம் முந்தைய திட்டங்களின் பயன்களையும் துடைத்தெறிந்தது. எனவே 1966-1967முதல் ஓராண்டு திட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.
Question 99
ஏறத்தாழ 70% மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை சார்ந்துள்ளனர்
A
வேளாண்மை
B
தொழில்துறை
C
அயல்நாட்டு வணிகம்
D
பணிகள் துறை
Question 99 Explanation: 
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான உணவுத் தேவையை வேளாண்மை நிறைவு செய்கிறது. தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருள்களை வேளாண்மைத்துறை அளிக்கிறது. எ.கா பருத்தி தொழிற்சாலை சனல் தொழிற்சாலை சர்க்கரை, தொழிற்சாலை போன்றவை.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!