Online Test

History Part 2 Revision Test in Tamil

History Part 2 Revision Test in Tamil

Congratulations - you have completed History Part 2 Revision Test in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அசோகரின் _____ பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கப்பால் அமைந்த தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோரை பற்றி குறிப்பிடுகின்றார்.
A
2
B
3
C
5
D
7
Question 1 Explanation: 
(குறிப்பு: அசோகருடைய கல்வெட்டுகளே தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது)
Question 2
சாதவாகனர் காலத்தில் பெளத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை _______ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
A
உத்திரமேரூர் கல்வெட்டு
B
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டு
C
நனிகாட் கல்வெட்டு
D
புகளூர் கல்வெட்டு
Question 2 Explanation: 
(குறிப்பு: நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பெளத்தர்களும் பிராமணர்களும் ஆவர்.)
Question 3
சாக அரசர் ‘நாகபனா’வை வென்று அவருடைய நாணயங்கனை தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்ட அரசர் யார்?
A
வசிஷ்டபுத்ர புலுமாவி
B
கொதமபுத்ர சதகர்னி
C
யக்னஸ்ரீ சதகர்னி
D
ஹாலா
Question 3 Explanation: 
(குறிப்பு: சாதவாகன அரசர்களுள் கெளதமபுத்ர சதகர்னி பெரும் அரசனாவார். இவரது தாயான கெளதம பால ஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றிக் கொண்டதாகக் கூறுகிறது.)
Question 4
வெண்ணி போர்க்களத்தில் ________ என்பவர் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினொரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டார்.
A
இளஞ்சேட்சென்னி
B
பெருநற்கிள்ளி
C
கரிகாலன்
D
அதியமான்
Question 4 Explanation: 
(குறிப்பு: இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் சங்ககால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர் வெற்றி ஆகும்.)
Question 5
சேரர்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
B
சேர அரச குடும்பத்தில் இரு கிளைகள் இருந்ததெனவும், பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர் எனவும் கருதப்படுகிறது.
C
சேரல் இரும்பொறை தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டுள்ளார்.
D
தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள சேர நாணயங்கள் சீன நாணயத்தை போலுள்ளன.
Question 5 Explanation: 
(குறிப்பு: தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள சேர நாணயங்கள் ரோம நாணயத்தை போலுள்ளன. எழுத்துக்கள் எவையும் இல்லாமல் சேரர்களின் வில் அம்புச் சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும் கிடைத்துள்ளன)
Question 6
சங்கப்பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த 450க்கும் மேற்பட்ட புலவர்களில் _____ பெண்பாற் புலவர் அடங்குவர்.
A
10
B
15
C
20
D
30
Question 6 Explanation: 
(குறிப்பு: சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் அவ்வையார், அல்லூர் நன்முல்லையார், காக்கைப் பாடினியார், காவற்பெண்டு, நல்வெளியார், ஒக்கூர் மாசாத்தியார், பாரிமகளிர் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.)
Question 7
பின்வருவனவற்றுள் பத்துப்பாட்டு நூல் அல்லாதது எது?
A
குறிஞ்சிப்பாட்டு
B
பட்டினப்பாலை
C
முல்லைப்பாட்டு
D
பதிற்றுப்பத்து
Question 7 Explanation: 
(குறிப்பு: பத்துப்பாட்டு நூல்கள் - 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக் காஞ்சி 7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம் )
Question 8
கீழ்க்கண்டவற்றுள் தொடக்க வரலாற்று காலம் என அழைக்கப்படும் காலம் எது?
A
களப்பிரர்கள் காலம்
B
புதிய கற்காலம்
C
வெண்கல காலம்
D
சங்க காலம்
Question 8 Explanation: 
(குறிப்பு: பொ.ஆ.முதல் மூன்று நூற்றாண்டுகளே சங்ககாலம் என்பது பெரும்பாலோர் ஒத்துக் கொள்ளும் கால வரையறையாகும். இக்காலம் பற்றிய செய்திகள் அனைத்தும் சங்க இலக்கியங்களிலிருந்தே பெறப்படுகின்றன.)
Question 9
அசோகர் கல்வெட்டுகளில் சொல்லப்பட்ட மூவேந்தரோடு இடம்பெற்றுள்ள சத்யபுத்ர (அதியமான்) என்பது சங்கப்பாடல்களில் இடம்பெறும் ______ஐ குறிப்பதாக உள்ளது.
A
கிழார்
B
வேளிர்
C
வேந்தன்
D
அரசர்
Question 9 Explanation: 
(குறிப்பு: பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் மூன்று அரச மரபுகள் குறித்து அசோகர் அறிந்திருந்தாலும், பொ.ஆ.முதலாம் நூற்றாண்டு மற்றும் அதன் பின் வந்த காலத்தை சேர்ந்த சங்க இலக்கியத்தின் மூலமே அவ்வரசர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடிகிறது.)
Question 10
கரிகாலனின் ஆட்சியின் போது காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்து _____ விரிவாக விளக்குகிறார்.
A
கபிலர்
B
ஓரம்போகியார்
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Question 10 Explanation: 
(குறிப்பு: காவிரி பூம்பட்டினம் இந்துமா கடலின் பல பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களைத் தன்பால் ஈர்த்தது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் இங்கு நடைபெற்ற வணிகங்களை குறித்து விரிவாக விளக்குகிறார்.)
Question 11
______ எனும் பெயருடைய சோழ அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தினார்.
A
இளஞ்சேட்சென்னி
B
பெருநற்கிள்ளி
C
கரிகாலன்
D
அதியமான்
Question 12
______ கல்வெட்டு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களை பற்றி குறிப்பிடுகிறது.
A
உத்திரமேரூர் கல்வெட்டு
B
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டு
C
நனிகாட் கல்வெட்டு
D
புகளூர் கல்வெட்டு
Question 12 Explanation: 
(குறிப்பு: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் முக்கிய சேர அரசர்களாவர்.)
Question 13
_______ கல்வெட்டு பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனை பற்றி குறிப்பிடுகின்றது.
A
உத்திரமேரூர் கல்வெட்டு
B
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டு
C
நனிகாட் கல்வெட்டு
D
புகளூர் கல்வெட்டு
Question 13 Explanation: 
(குறிப்பு: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் முக்கிய சேர அரசர்களாவர்.)
Question 14
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேள்விக்குடிச் செப்பேடுகளில், பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் என குறிப்பிடப்படும்  அரசர் ________.
A
நெடுஞ்செழியன்
B
முதுகுடுமிப் பெருவழுதி
C
தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
D
சேரன் செங்குட்டுவன்
Question 14 Explanation: 
(குறிப்பு: தான் செய்த வேள்விச் சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி என்ற பெயரில் புராண கதைப் பொறுப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார்.)
Question 15
________ என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவார்.
A
கிழார்
B
வேளிர்
C
வேந்தன்
D
சேனாபதி
Question 15 Explanation: 
(குறிப்பு: இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.)
Question 16
________ பகல் மற்றும் இரவு நேரக் கடை வீதிகளையும் அங்கு விற்பனையாகும் பலவகைப்பட்ட கைவினைப் பொருள்கள் பற்றியும் பேசுகிறது.
A
பட்டினப்பாலை
B
பதிற்றுப்பத்து
C
மதுரைக்காஞ்சி
D
சிலப்பதிகாரம்
Question 16 Explanation: 
(குறிப்பு: நகர மையங்களான அரிக்கமேடு, உறையூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை, கேரளத்தில் பட்டணம் ஆகிய இடங்களில் கைவினைப் பொருளுற்பத்தி வளமையாக நடந்துள்ளன.)
Question 17
மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திரப் பொறியாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக ______ குறிப்பிடுகின்றது.
A
பட்டினப்பாலை
B
பதிற்றுப்பத்து
C
மதுரைக்காஞ்சி
D
மணிமேகலை
Question 17 Explanation: 
(குறிப்பு: தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.)
Question 18
முறைப்படுத்தப்பட்ட மத நடவடிக்கைகளின் தோற்றம் ______ காலத்திலிருந்து தென்படத் தொடங்குகிறது.
A
பாபர்
B
ஷெர்ஷா
C
அசோகர்
D
அக்பர்
Question 18 Explanation: 
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில்தான் பெளத்த மதம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது.)
Question 19
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
ரோமானிய தங்க, வெள்ளி நாணயக் குவியல்கள் கோயம்புத்தூர் பகுதியிலும் தென்னிந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
B
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
C
சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் அநேக இடங்களில் கிடைக்கின்றன.
D
ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பெளத்த மையங்களை கொண்டுள்ளன.
Question 19 Explanation: 
(குறிப்பு: சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. தமிழகத்தில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய எண்ணற்ற குகை உறைவிடங்கள் பெளத்த மதத்தை காட்டிலும் சமண மதம் செல்வாக்குடன் விளங்கியதை குறிக்கின்றன.)
Question 20
கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
A
தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
B
பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
C
கஜபாகு – இலங்கை
D
திருவஞ்சிக்களம் – சோழர்
Question 21
இக்சவாகுகள் _______ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்.
A
ஆந்திர – கர்நாடகா
B
ஒடிசா
C
தக்காணப் பகுதி
D
பணவாசி
Question 22
கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக்கொணர்க.
A
களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
B
களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்.
C
பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
D
இக்சவாகுகள் வேதவேள்விகளை ஆதரித்தனர்.
Question 23
இந்திர விகாரம் பற்றி ______ குறிப்பிடுகிறது.
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
அசோகர் கல்வெட்டு
D
சேரர் நாணயம்
Question 24
கி.மு ஆறாம் நூற்றாண்டை  'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணிப்பவர் ______.
A
சார்லஸ் மேனன்
B
வில் டூராண்ட்
C
வில்லியம் மில்லர்
D
சர்ஜான் மார்ஷல்
Question 24 Explanation: 
(குறிப்பு: கி.மு 6ம் நூற்றாண்டு பண்டைய இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் ஆகும். இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் அடையாள சின்னமாக அக்காலம் விளங்குகிறது.)
Question 25
கி.மு ஆறாம் நூற்றாண்டில் ______ வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது.
A
ரிஷபர்
B
மகாவீரர்
C
சித்தார்த்தர்
D
சுத்தோதனா
Question 25 Explanation: 
(குறிப்பு: சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாக கொண்டது. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர்.)
Question 26
சமணம் என்னும் சொல் ஜினா என்ற ______சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
A
இலத்தீன்
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
பாலி
Question 26 Explanation: 
(குறிப்பு: ஜினா என்பதன் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.)
Question 27
பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்கு பின்னர் மகாவீரர் அடைந்த எல்லையற்ற அறிவிற்கு _____ என்று பெயர்.
A
கர்மா
B
திரிரத்தினங்கள்
C
தம்மா
D
கைவல்ய
Question 27 Explanation: 
(குறிப்பு: மகாவீரர் பண்டைய சிரமானிய மரபுகளை மறு ஆய்வு செய்தார். அவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்)
Question 28
மகாவீரர் தன்னை பின்பற்றுவோரை ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை மேற்கொள்ள _____ கொள்கைகளை போதித்தார்.
A
2
B
3
C
4
D
5
Question 28 Explanation: 
(குறிப்பு: 1. அகிம்சை 2. சத்யா 3. அஸ்தேய 4. அபரிக்கிரகா 5. பிரம்மச்சரியா)
Question 29
மகாவீரரின் தலைமை சீடரான _____ என்பவர் மகாவீரரின் போதனைகளை ஆகம சித்தாந்தம் என தொகுத்தார்.
A
ரிஷபர்
B
சுத்தோதனா
C
கெளதமசுவாமி
D
சித்தார்த்தா
Question 30
திகம்பரர் குறித்த தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்.
B
இப்பிரிவை சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை.
C
பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என நம்பினர்.
D
ரஜோகரனா பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
Question 30 Explanation: 
(குறிப்பு: சமணம் திகம்பரர், ஸ்வேதாம்பரர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.)
Question 31
பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் _______ல் உள்ளன.
A
கீழக்குயில்குடி
B
கலிஞ்சமலை
C
சேலம்
D
கீழடி
Question 31 Explanation: 
(குறிப்பு: மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.)
Question 32
______ என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
A
அறவோர் பள்ளி
B
சமணர் பள்ளி
C
சமணர் மடம்
D
அறவோர் மடம்
Question 33
ஜைனக் காஞ்சி என அழைக்கப்படும் கிராமம் _________.
A
திருப்பத்தூர்
B
திருவண்ணாமலை
C
திருப்பரங்குன்றம்
D
திருப்பருத்திக் குன்றம்
Question 33 Explanation: 
( குறிப்பு: காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்தி குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன.)
Question 34
கி.மு 4ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது வட இந்தியாவிலேயே தங்கிவிட்ட சமணத் துறவிகளுக்கு ______ என்ற துறவி தலைமை ஏற்றார்.
A
பத்ரபாகு
B
ஸ்தூல பாகு
C
ரிஷப தேவர்
D
வர்த்தமாணர்
Question 34 Explanation: 
(குறிப்பு: பத்ரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தலைமையில் பல சமணத் துறவிகள் கர்னாடகாவிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தனர்.)
Question 35
திகம்பரர்களின் தலைவரான ஸ்தூலபாகு _____ என்ற இடத்தில் முதலாவது சமண மாநாட்டைக் கூட்டினார்.
A
வாலாபி
B
காஷ்மீர்
C
பாடலிபுத்திரம்
D
இராஜகிருகம்
Question 35 Explanation: 
( குறிப்பு: கி.மு 3 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சமண மாநாடு நடைபெற்றது.)
Question 36
பன்னிரண்டு அங்கங்கள் எனப்படும் சமண இலக்கியத்தின் இறுதி வடிவம் _______மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
A
முதல் சமண மாநாடு
B
இரண்டாவது சமண மாநாடு
C
மூன்றாவது சமண மாநாடு
D
நான்காவது சமண மாநாடு
Question 36 Explanation: 
(குறிப்பு: கி.பி 5 ம் நூற்றாண்டில் வாலாபியில் இரண்டாவது சமண மாநாடு நடைபெற்றது.)
Question 37
சமண சமயத்தை போற்றி ஆதரித்தவர்களில் தவறானது எது?
A
சந்திரகுப்த மௌரியர்
B
கலிங்க நாட்டு காரவேலர்
C
அஜாதசத்ரு
D
ராஷ்டிரகூடர்கள்
Question 37 Explanation: 
(குறிப்பு: சந்திரகுப்த மௌரியர், கலிங்க நாட்டு காரவேலர், தென்னிந்திய அரசகுலங்களான கங்கர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் ஆகியோர் சமண சமயத்தை போற்றி ஆதரித்தனர்.)
Question 38
மகாயான புத்த சமயம் என்ற புதிய சமயப் பிரிவு ______ புத்தசமய மாநாட்டில் உருவாயிற்று.
A
முதல் புத்த சமய மாநாடு
B
இரண்டாவது புத்த சமய மாநாடு
C
மூன்றாவது புத்த சமய மாநாடு
D
நான்காவது புத்த சமய மாநாடு
Question 38 Explanation: 
(குறிப்பு: வசுமித்திரர் தலைமையில் காஷ்மீரில் நான்காவது புத்த சமய மாநாட்டை கனிஷ்கர் கூட்டினார். அசுவகோஷர் இம்மாநாட்டில் பங்கேற்றார்.)
Question 39
திரிபீடகங்கள் _______ புத்த சமய மாநாட்டில் இறுதி வடிவம் பெற்றன.
A
முதலாவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 39 Explanation: 
(குறிப்பு: அசோகரது ஆதரவில் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாடு கூடியது. மொக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார்.)
Question 40
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
A
வடமொழி
B
பிராகிருதம்
C
பாலி
D
இந்தி
Question 40 Explanation: 
(குறிப்பு: சுத்த பீடகம், வினய பீடகம், அபிதம்ம பீடகம் ஆகியவை திரிபீடகங்கள் ஆகும்)
Question 41
பொருத்துக.
  1. முதல் புத்த மாநாடு                           i) வைசாலி
  2. இரண்டாம் புத்த மாநாடு               ii) காஷ்மீர்
  3. மூன்றாம் புத்த மாநாடு                  iii) ராஜகிருஹம்
  4. நான்காம் புத்த மாநாடு                      iv) பாடலிபுத்திரம்
A
ii iii i iv
B
iii ii iv i
C
iii i iv ii
D
iv i ii iii
Question 42
சரியான தொடரை தேர்ந்தெடு
A
நான்கு சீரிய உண்மைகளை மகாவீரர் போதித்தார்.
B
பாலி மொழியை பின்பற்றியதால் புத்த சமயம் அழிந்தது.
C
மகாயான புத்த சமயப் பிரிவினர் சிலை வழிபாட்டை பின்பற்றினர்.
D
தத்துவார்த்தமான விவாதங்களில் புத்தர் ஈடுபட்டார்.
Question 43
இந்தியாவின் வடமேற்குக் கோடியிலுள்ள பாமிர் முடிச்சில் தொடங்கும் இமயமலையின் நீளம் ______.
A
2650 மீட்டர்
B
2560 கிலோ மீட்டர்
C
2650 கிலோ மீட்டர்
D
2560 மீட்டர்
Question 43 Explanation: 
(குறிப்பு: இதன் அகலம் 240 முதல் 320 கி.மீ ஆகும்)
Question 44
சிந்து நதியால் மிகவும் பயன்பெறும் சமவெளி ______.
A
கங்கைச் சமவெளி
B
பஞ்சாப் சமவெளி
C
காஷ்மீர் சமவெளி
D
பீகார் சமவெளி
Question 44 Explanation: 
(குறிப்பு: பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பகுதி என்று பொருள்.)
Question 45
கங்கை நதியுடன் ______ ஆறு கலக்கும் இடத்தில் பாடலிபுத்திர நகரம் அமைந்திருந்தது.
A
கோமதி
B
சரயு
C
சோன்
D
காக்ரா
Question 45 Explanation: 
(குறிப்பு: பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, பாடலிபுத்திரம் போன்றவை கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்த முக்கிய நகரங்களாகும்)
Question 46
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே உள்ள நிலப்பகுதி கோவா வரை _____ எனப்படுகிறது.
A
கனரா
B
மலபார்
C
தோ ஆப்
D
கொங்கணம்
Question 46 Explanation: 
(குறிப்பு: கொங்கணத்திற்கு அப்பாலுள்ள பகுதிகனரா என்றும் தென்கோடி பகுதி மலபார் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 47
மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய்களில் தவறானது எது?
A
ஜீன்னார்
B
கன்ஹேரி
C
கோமல்
D
கார்வே
Question 47 Explanation: 
(குறிப்பு: மேற்கிலுள்ள துறைமுகங்களை இணைக்கும் வணிக வழித்தடங்களாக இவை விளங்கின.)
Question 48
காவிரி பள்ளத்தாக்கையும் மலபார் கடற்கரையையும் இணைக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் குறுக்கே அமைந்துள்ள கணவாய்
A
ஜீன்னார்
B
கன்ஹேரி
C
பாலகாட்டு கணவாய்
D
கார்வே
Question 48 Explanation: 
(குறிப்பு: பண்டைக் காலத்தில் இந்தோ-ரோமானிய வர்த்தகத்திற்கான முக்கிய வழித்தடமாக பாலக்காட்டுக் கணவாய் விளங்கியது)
Question 49
ரெய்ச்சூர் தோ ஆப் என்பது _____ நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
A
கங்கை- யமுனை
B
கிருஷ்ணா-துங்கபத்திரை
C
நர்மதை-தபதி
D
கங்கை- பிரம்மபுத்திரா
Question 49 Explanation: 
(குறிப்பு: இவ்விரு நதிகளின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள சமவெளியில் சாதவாகணர்களின் அரசு புகழ்மிக்கு விளங்கியது.)
Question 50
கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நாட்டின் பொது மொழியாக ______விளங்கியது.
A
சமஸ்கிருதம்
B
பாலி
C
பிராகிருதம்
D
ஆங்கிலம்
Question 50 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகளில் பிராகிருத மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.)
Question 51
மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாந்தர் இந்தியாவிற்கு வந்த வழி
A
தக்காண பீடபூமி
B
காரகோரம் மலைத்தொடர்
C
ஸ்வாத் பள்ளத்தாக்கு
D
ஆரவல்லிக் குன்றுகள்
Question 52
பொருத்துக.
  1. எவரெஸ்ட் சிகரம்       i) ஆரவல்லி குன்றுகள்
  2. மவுண்ட் அபு                 ii) காரகோரம்
  3. தொட்டபெட்டா           iii) இமாலய மலைகள்
  4. காட் வின் ஆஸ்டின்   iv) மேற்குத் தொடர்ச்சி மலை
A
ii iii i iv
B
iii i iv ii
C
iii ii iv i
D
iv i ii iii
Question 53
சரியான தொடரைத் தேர்ந்தெடு
A
நர்மதை நதி கிழக்கிலிருந்து மேற்காக பாய்கிறது.
B
காவிரி ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது.
C
யமுனை நதி தபதி நதியுடன் கலக்கிறது.
D
மகாநதி பஞ்சாப் பகுதியில் பாய்கிறது.
Question 54
முதலமைச்சர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு
A
1952
B
1957
C
1962
D
1967
Question 55
உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது
A
கங்கைச் சமவெளி
B
விந்தியமலைக்கு தெற்கிலுள்ள பகுதி
C
வட மேற்கு இந்தியச் சமவெளி
D
வட கிழக்கு இந்தியச் சமவெளி
Question 56
மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம்
A
மத்திய தரைக்கடல் நாடுகள்
B
ஆசிரியா
C
லெமூரியா
D
ஆப்பிரிக்கா
Question 56 Explanation: 
(குறிப்பு: குமரிக் கண்டத்திற்கு முன்னதாக அப்பகுதியை உள்ளடக்கிய ஒருபெரும் கண்டம், ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் இணைக்குமாறு நிலவியதென்றும் அந்த கண்டத்தில் வாழ்ந்த ‘லெமூர்' என்னும் குரங்கினத்தின் பெயரால் அக்கண்டம் லெமூரியா என பெயர் பெற்றது.)
Question 57
  • கூற்று 1: பக்தி இயக்கத்தை இராமானந்தர் வட இந்தியாவில் கொண்டு போய் சேர்த்தார்.
  • கூற்று 2: கபீர் அதனை மக்களிடையே பிரபலமடையச் செய்தார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 58
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A
63 நாயன்மார்கள் சைவ சமயத்தை நாடெங்கும் பரப்பினார்கள்
B
திருநாவுக்கரசர் என்கின்ற அப்பர் கி.பி 600 ல் தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தார்.
C
சமண சமயத்தை சார்ந்த அப்பர் தனது தமக்கை திலகவதி அம்மையாரின் தாக்கத்தினால் சிவபக்தரானார்.
D
இவர் எழுதிய 49,000 க்கும் மேற்பட்ட பதிகங்களில் 113 பதிகங்களே இதுவரை கிடைத்துள்ளன.
Question 58 Explanation: 
(குறிப்பு: இவர் எழுதிய 49,000 க்கும் மேற்பட்ட பதிகங்களில் 311 பதிகங்களே இதுவரை கிடைத்துள்ளன.)
Question 59
கடவுளை அடைய ஒரே வழி ‘அன்பு' மட்டுமே தவிர சடங்குகள் இல்லை என உறுதியாக அறிவுறுத்தியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
சுந்தரர்
C
சம்பந்தர்
D
மாணிக்கவாசகர்
Question 59 Explanation: 
(குறிப்பு: மாணிக்கவாசகர் ஒரே கடவுள் என்ற கோட்பாட்டை உடையவர்.இவருடைய நூல் திருவாசகம்)
Question 60
சம்பந்தர் பாடிய 16000 பதிகங்களில் எத்தனை பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன?
A
311
B
113
C
100
D
384
Question 61
ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாடல்களை _____ என்பார் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் நாலாகத் தொகுத்துள்ளார்.
A
பெருந்தேவனார்
B
மணிக்கவாசகர்
C
நாதமுனி
D
நல்லூர் நந்தத்தனார்
Question 61 Explanation: 
(குறிப்பு: விஷ்ணுவின் புகழினைப் பரப்பியோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர். ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.)
Question 62
பிரம்மம் என்ற தலையாய சக்தியே உண்மை எனக் கூறி ஒரே கடவுள் என்ற அத்வைத கொள்கையை பரப்பியவர் ________.
A
கபீர்
B
சங்கராச்சாரியர்
C
இராமானுஜர்
D
வல்லபாச்சாரியர்
Question 62 Explanation: 
(குறிப்பு: சங்கராச்சாரியார் கேரளாவில் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.)
Question 63
பக்தியின் மூலம் முக்தியை பெறலாம் என்ற கொள்கையை உடையவரும், வைணவ மார்க்கத்தை பின்பற்றுவதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடில்லை என்று உரைத்தவரும் யார் ?
A
கபீர்
B
சங்கராச்சாரியர்
C
இராமானுஜர்
D
வல்லபாச்சாரியர்
Question 63 Explanation: 
(குறிப்பு: இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப்பெரியார்)
Question 64
அன்பும், பக்தியுமே இறைவனை அடையும் நல்வழி என்று போதித்த சைதன்யர் எங்கு பிறந்தார்?
A
ஸ்ரீபெரும்புதூர்
B
வங்காளம்
C
குஜராத்
D
பீகார்
Question 64 Explanation: 
(குறிப்பு: சைதன்யர் கிருஷ்ணர் வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார்.)
Question 65
மக்கள் ஒவ்வொருவரும் பக்தியின் மூலம் முக்தியை அடையலாம் என்று போதித்தவர் ______.
A
கபீர்
B
சங்கராச்சாரியர்
C
இராமானுஜர்
D
வல்லபாச்சாரியர்
Question 65 Explanation: 
(குறிப்பு: வல்லபாச்சாரியார் (கி.பி 1479 - 1531) கிருஷ்ணரை வழிபட்டார்.)
Question 66
கடவுளின் அன்பை பெற்றவர் என்று பொருள்படும் ‘மெஹபூம்-இ-இலாஹி’ என மக்களால் புகழப்பட்டவர் யார்?
A
கரீப்
B
பாபா ஃப்ரீத்
C
நிஜாம்-உத்-தீன் அவுலியா
D
குவாஜா மொய்ன் – உத் – தீன் – சிஸ்டி
Question 66 Explanation: 
(குறிப்பு: படாயீன் என்ற பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்த இவர் டெல்லியில் தங்கினார். பாபா ஃபரீத்தின் சீடர்.)
Question 67
_____ தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவியது.
A
இடைக்காலத்தில்
B
பழங்காலத்தில்
C
நவீன காலத்தில்
D
சங்ககாலத்தில்
Question 68
இந்து முஸ்லீம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்திய ஆன்மீக துறவி ________.
A
கபீர்
B
சங்கராச்சாரியர்
C
இராமானந்தர்
D
வல்லபாச்சாரியர்
Question 68 Explanation: 
(குறிப்பு: கபீர் இராமானந்தரின் சீடராவார். இவரை பின்பற்றியோர் கபீர்பந்த் எனப்பட்டனர். இவரது போதனைகளின் தொகுப்பு பிஜகா எனப்படுகிறது.)
Question 69
குருநானக் குறித்த கூற்றுகளில் தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார்.
B
இவர் இராமானந்தரின் உற்ற சீடர் ஆவார்.
C
இவர் லாகூர் அருகில் தால்வாண்டி என்னும் ஊரில் 1469 ல் பிறந்தார்.
D
கடவுள் ஒருவரே என்பது இவர் கருத்து
Question 69 Explanation: 
(குறிப்பு: குருநானக் கபீரின் உற்ற சீடர் ஆவார். உருவ வழிபாட்டினையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்தார்.)
Question 70
மீராபாய்க்காக _______ என்ற இடத்தில் ஒரு பெரும் கோவில் கட்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
A
உதய்பூர்
B
சித்தூர்
C
வங்காளம்
D
டெல்லி
Question 70 Explanation: 
(குறிப்பு: மேவார் நாட்டு மன்னர் ரதோர் ரத்னாசிங் என்பவரின் மகளும், உதய்பூர் மன்னரின் மனைவியுமான மீராபாய் கி.பி.1498ல் பிறந்தார்.)
Question 71
பாரசீகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம் இந்தியாவில் ______ நூற்றாண்டில் பரவியது.
A
கி.பி 10
B
கி.பி 11
C
கி.பி 12
D
கி.பி 6
Question 71 Explanation: 
( குறிப்பு: இவ்வியக்கத்தை பின்பற்றியோர் சூஃபிக்கள் என அழைக்கப்பட்டனர்.)
Question 72
ஏழைகனின் காப்பாளர் என பொருள் தரும் 'கரிப்நவாஜ்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
A
கரீப்
B
பாபா ஃப்ரீத்
C
நிஜாம்-உத்-தீன் அவுலியா
D
குவாஜா மொய்ன் – உத் – தீன் – சிஸ்டி
Question 72 Explanation: 
(குறிப்பு: இவர் கி.பி. 1192 இல் இந்தியாவுக்கு வந்து அஜ்மீரில் தங்கியிருந்தார்.)
Question 73
பொருத்துக.
  1. நாயன்மார்கள்            i) தலித் எழுத்தாளர்
  2. மாணிக்கவாசகர்       ii) வைணவர்கள்
  3. ஆழ்வார்கள்                 iii) திருவாசகம்
  4. மீராபாய்                       iv) சைவர்கள்
  5. சொக்கமேளா              v) கிருஷ்ணனை வழிபட்டார்
A
i ii iv v iii
B
ii iii iv i v
C
iv iii ii v i
D
iv ii iii v i
Question 74
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது
A
இசை மற்றும் நடனம்
B
கலை மற்றும் கட்டடக்கலை
C
உணவு மற்றும் பழக்கங்கள்
D
ஆடை மற்றும் பழக்க வழக்கங்கள்
Question 74 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் தோன்றிய கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசை முறைகள் பெரும்பாலான மக்களால் விரும்பி கற்கப்படுகின்றன.)
Question 75
புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் _____
A
இந்தியர்கள்
B
முஸ்லீம்கள்
C
சமணர்கள்
D
புத்த மதத்தினர்
Question 76
யாருடைய சீடர்கள் சிஸ்தி அமைப்பினர் என்று அழைக்கப்பட்டனர்?
A
ஷேக் இஸ்மாயில்
B
குவாஜா மொய்னுதீன் சிஸ்தி
C
பகாவுதீன் சக்காரியா
D
ஷிகாபுதீன் சுஹ்ராவர்தி
Question 76 Explanation: 
(குறிப்பு: லாகூரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபித்துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார். இந்தியாவின் ஸ்தூபிகளிலேயே புகழ் மிக்கவர் குவாஜா மொய்னுதீன் சிஸ்தி)
Question 77
ஒன்பதாம் நூற்றாண்டில் _____ இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு இந்து சமயத்திற்கு ஒரு புதிய மார்க்கத்தை காட்டினார்.
A
சங்கரர்
B
இராமானுஜர்
C
இராமானந்தர்
D
கபீர்
Question 77 Explanation: 
(குறிப்பு: இவர் கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தார்)
Question 78
ராமாயணத்தின் இந்தி மொழி வடிவமான ‘ராம் சரித்மனஸ்' என்ற புகழ் பெற்ற நூலை_______ படைத்தார்.
A
சங்கரர்
B
காளிதாசர்
C
துளசிதாசர்
D
ஞானதேவர்
Question 79
  • கூற்று 1: மணிப்பூரில் உள்ள மெளசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும்.
  • கூற்று 2: ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 80
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் மற்றும் அவற்றை பேசும் மொத்த மக்கள் தொகை சதவிகிதத்தில் எது தவறானது ?
A
இந்தி - 41.03%
B
வங்காளம் - 8.10 %
C
மராத்தி - 7.19%
D
தமிழ் - 5.91%
Question 81
தற்போது ______மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A
4
B
5
C
6
D
7
Question 81 Explanation: 
(குறிப்பு: 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக 'தமிழ்மொழி’ அறிவிக்கப்பட்டது.)
Question 82
இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் _____சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை.
A
50
B
60
C
80
D
90
Question 82 Explanation: 
(குறிப்பு: இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன)
Question 83
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
வட இந்தியா - கதக்
B
அசாம் – சத்ரியா
C
மகாராஷ்டிரா – யக்ஷகாணம்
D
ஆந்திரா – குச்சிப்புடி
Question 84
"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______.
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
அம்பேத்கார்
D
இராஜாஜி
Question 84 Explanation: 
(குறிப்பு: "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடர் நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.)
Question 85
வி.ஏ. ஸ்மித இந்தியாவை _______ என்று அழைத்தார்.
A
பெரிய ஜனநாயகம்
B
தனித்துவமான பன்முகத்தன்மை
C
இனங்களின் அருங்காட்சியகம்
D
மதச்சார்பற்ற நாடு
Question 86
பொருத்துக
  1. நீக்ரிட்டோக்கள்                                  i) மதம்
  2. கடற்கரை பகுதிகள்                          ii) இந்தியா
  3. ஜொராஸ்ட்ரியம்                              iii) மீன்பிடித் தொழில்
  4. வேற்றுமையில் ஒற்றுமை                iv) இந்திய இனம்
A
ii i iv iii
B
iv iii i ii
C
iv i iii ii
D
i iv iii ii
Question 87
பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்ரம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களால் குருவாக வணங்கப்படுபவர் ______.
A
கபீர்
B
குருநானக்
C
ரவிதாஸ்
D
சைதன்யர்
Question 87 Explanation: 
(குறிப்பு: ரவிதாஸ் 15, 16 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞரும் துறவியுமாவார்.இராமானந்தரின் சீடர் ஆவார்.)
Question 88
_______ என்பவர் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார்.
A
அர்ஜுன் தேவ்
B
குரு கோவிந்த சிங்
C
குருநானக்
D
நாம தேவர்
Question 88 Explanation: 
(குறிப்பு: அவருக்குப் பின்னர் கிரந்த சாகிப் (புனித நூல்) குருவாக கருதப்பட்டது)
Question 89
மராத்திய, இந்தி மொழிகளில்  ‘ அபங்க' என்றழைக்கப்பட்ட பாடல்களை பாடியவர் _______.
A
நாம தேவர்
B
குருநானக்
C
ரவிதாஸ்
D
சைதன்யர்
Question 89 Explanation: 
(குறிப்பு: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து மத குருமார்கள் இறைவனைப் புகழ்ந்து எழுதிய பாடல்கள் அபங்க எனப்படும். நாமதேவர் சதாரா மாவட்டத்தில் நரஸ் வாமணி எனும் கிராமத்தில் பிறந்தார்.)
Question 90
கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து மதுராவுக்கு புறப்படும் வரையிலான கதைகளை கொண்ட சூர்சாகர் அல்லது சூர்சமுத்திரத்தை படைத்தவர் _____
A
அர்ஜுன் தேவ்
B
குரு கோவிந்த சிங்
C
சூர்தாஸ்
D
நாம தேவர்
Question 90 Explanation: 
(குறிப்பு: அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்த சூர்தாஸ் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகன் என பலராலும் அறியப்பட்டவர். சூர்சாகர், சூர்சரவளி, சைத்யலகிரி ஆகியன இவருடைய படைப்புகள்)
Question 91
சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் போன்றோரின் சமகாலத்தவர் யார்?
A
மீராபாய்
B
இராமானந்தர்
C
சூர்தாஸ்
D
துக்காராம்
Question 91 Explanation: 
( குறிப்பு:துக்காராம் 1608 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.கடவுள் வடிவமற்றவர் என இவர் நம்பினார்)
Question 92
வைதீக வேதப் பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிடுவது ______.
A
இராமாயணம்
B
பாகவத புராணம்
C
திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
D
பால லீலா
Question 93
சமண மதத்திலிருந்த போது அப்பர் ______ என்று அழைக்கப்பட்டார்.
A
அரிசேனா
B
தீர்த்தங்கரர்
C
சிவஞான சித்தியார்
D
தர்மசேனர்
Question 93 Explanation: 
(குறிப்பு: அப்பர் தனது தமக்கையின் செல்வாக்கால் சைவ மதத்தை தழுவினார்.)
Question 94
மாதவாச்சாரியார் _______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.
A
துவைதம்
B
அத்வைதம்
C
விசிஷ்டாத்வைதம்
D
புஷ்டி மார்க்கம்
Question 95
முதன் முதலில் இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ______
A
ரவிதாஸ்
B
இராமானந்தர்
C
கபீர்
D
நாமதேவர்
Question 95 Explanation: 
(குறிப்பு: சைதன்யர் மாதாவாச்சாரியாரின் தத்துவப் பள்ளியை சேர்ந்தவர். கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.)
Question 96
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
A
தனது தொடக்கக்கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்.
B
சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்.
C
இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
D
பெளத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Question 97
  • கூற்று: மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
  • காரணம்: அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்.
A
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
B
கூற்று தவறு, காரணம் தவறு
C
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
D
கூற்று தவறு, காரணம் சரி
Question 98
பொருத்துக
  1. கபீர்                                 i) சாகித்திய லாகிரி
  2. சூர்தாஸ்                         ii) ஷேக்தாதி
  3. சூபிஸம்                         iii) சம்பந்தர்
  4. கூன்பாண்டியன்         iv) நெசவாளர்
A
ii i iv iii
B
iv iii i ii
C
iv i ii iii
D
i iv iii ii
Question 99
அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்
A
ஆதிசங்கரர்
B
இராமானுஜர்
C
இராமானந்தர்
D
சைதன்யர்
Question 100
கல்பேலியா _______மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
A
கேரளா
B
ராஜஸ்தான்
C
அசாம்
D
குஜராத்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!