Online Test

6th Social Science 1st Term Revision Test in Tamil – New Book

6th Social Science 1st Term Revision Test in Tamil

Congratulations - you have completed 6th Social Science 1st Term Revision Test in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“History” என்ற வார்த்தை எந்த கிரேக்க வார்த்தையை தழுவி வந்தது?
A
இஸ்டோரிய
B
ஹிஸ்டோரிக்கா
C
ஹிஸ்டரி
D
ஹிஸ்டேரி
Question 1 Explanation: 
விளக்கம் : இஸ்டோரிய என்னும் கிரேக்க வார்த்தையை தழுவி தான் “History” என்னும் வார்த்தை உருவானது.
Question 2
இஸ்டோரியா எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து தழுவிய வரலாற்றினை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
A
படிப்பதன் மூலம் கற்றல்
B
விசாரிப்பதன் மூலம் கற்றல்
C
சுவடிகள் மூலம் கற்றல்
D
கல்வெட்டுகள் மூலம் கற்றல்
Question 2 Explanation: 
விளக்கம் : வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு. இவற்றை விசாரிப்பதன் மூலம் கற்று பதிவு செய்யலாம்.
Question 3
கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை எது?
A
வரலாற்றியல்
B
கல்வெட்டியல்
C
தொல்லியல்
D
மானுடவியல்
Question 3 Explanation: 
விளக்கம் : கல்வெட்டியல், கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.
Question 4
தம்மா என்னும் பிராகிருத சொல்லின் அர்த்தம்?
A
அறநெறி
B
காலம்
C
தர்மம்
D
வரலாறு
Question 4 Explanation: 
விளக்கம் : இது சமஸ்க்ருதத்தில் 'தர்மா' எனப்படுகிறது. இதன் பொருள் 'அறநெறி' என்பதாகும்.
Question 5
நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் இதிலிருந்து பெறப்பட்டது?
A
காந்தியின் பருத்தி நூற்பு சக்கரம்
B
கோனார்க் சூரிய கோவில் சக்கரம்
C
ஹம்பி தேர் சக்கரம்
D
சாரநாத் கல்தூண் முத்திரை
Question 5 Explanation: 
விளக்கம் : அசோகர் நிறுவிய சாரநாத் கல்தூணில் உள்ள முத்திரையில் இருந்து பெறப்பட்டது.
Question 6
"தி செர்ச் ஆப் இந்தியாஸ் லாஸ்ட் எம்பெரர்" என்ற அசோகரின் வாழ்க்கை வரலாற்றைப் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆசிரியர் யார்?  
A
வில்லியம் ஜோன்ஸ்
B
ஜேம்ஸ் பிரின்செப்
C
சார்லஸ் ஆலன்
D
அலெக்சாண்டர் கன்னிங்காம்
Question 6 Explanation: 
விளக்கம் : வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம் போன்றவர்கள் வரலாற்று ஆய்வின் மூலம் கண்டுபிடித்த அசோகர் ன் வரலாற்று செய்திகளை தொகுத்து நூலாக வெளியிட்டார் சார்லஸ் ஆலன்.
Question 7
நாணயம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை?
A
நாணயவியல்
B
கல்வெட்டியல்
C
தொல்லியல்
D
வரலாற்றியல்
Question 7 Explanation: 
விளக்கம் : நாணயம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை நாணயவியல் எனப்படும்.
Question 8
வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் வரலாற்றுக்கும் இடைப்பட்ட காலத்தை எவ்வாறு அழைப்பர்?
A
தொடக்க கால வரலாறு
B
இடைக்கால வரலாறு
C
தொன்மையான வரலாறு
D
இடைப்பட்ட வரலாறு
Question 8 Explanation: 
விளக்கம் : வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் வரலாற்றுக்கும் இடைப்பட்ட காலத்தை தொடக்க கால வரலாறு என்பர்.
Question 9
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் குத்தீட்டி, நெம்புகோல் போன்ற கருவிகளையும் பயன்படுத்திய நவீன கால மனிதன் எவ்வாறு அழைக்க பெற்றான்?
A
குரோமேக்னான்ஸ்
B
நியான்டர்தால்
C
ஹோமோ சேபியன்ஸ்
D
ஹோமோ ஹேபிலிஸ்
Question 9 Explanation: 
விளக்கம் : மனிதன் தொடக்கத்தில் கற்களால் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளை பயன்படுத்தினான். பின்னர் குத்தீட்டி, நெம்புகோல் போன்ற கருவிகளின் பயனை அறிந்தான் இந்த கால மனிதனை குரோமேக்னான்ஸ் என்று அழைப்பர்.
Question 10
வரலாற்றுக்கு முந்திய காலம் மனிதர்களும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிய படிப்பு?
A
வரலாற்றுவியல்
B
மானுடவியல்
C
தொல்லியல்
D
தொல்பொருளியல்
Question 10 Explanation: 
விளக்கம் : வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தொல்லியல் மூலம் அறிய முடியும்.
Question 11
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய படிப்பு?
A
மானுடவியல்
B
தொல்லியல்
C
தொல்பொருளியல்
D
வரலாற்றியல்
Question 11 Explanation: 
விளக்கம் : மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய படிப்பு மானுடவியல் எனப்படும்.
Question 12
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில், நெருப்பின் பயனை அறிந்த மனிதன் எவ்வாறு அழைக்கப் பெற்றான்?
A
ஹோமோ சேபியன்ஸ்
B
நியான்டர்தால்
C
ஹோமோ எரக்டஸ்
D
ஹோமோ ஹேபிலிஸ்
Question 12 Explanation: 
விளக்கம் : மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் ஹோமோ எரக்டஸ் என்றழைக்கப்படும் மனிதன் முதலில் நெருப்பின் பயனை அறிந்ததோடு நிமிர்ந்த நிலையையும் அடைந்தான்.
Question 13
தீப்பெட்டி பயன்படுத்தாமல் நெருப்பினை உண்டாக்கும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படும் கிராமங்கள் கொண்ட மாவட்டம்?
A
நீலகிரி
B
தேனி
C
கோவை
D
திண்டுக்கல்
Question 13 Explanation: 
விளக்கம் : இன்று வரை தீப்பெட்டி பயன்படுத்தாமல் மற்ற பல்வேறு முறைகளில் நெருப்பு பற்ற வைக்கும் கிராமங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
Question 14
பாறை மற்றும் குகை ஓவியங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்வது?
A
முன்னோர்களின் வாழ்க்கை முறை
B
முன்னோர்களின் வாழ்விடம் பற்றிய குறிப்பு
C
கடந்தகால வேட்டையாடும் முறை
D
கடந்த கால மக்களின் உணவு முறை
Question 14 Explanation: 
விளக்கம் : பாறை மற்றும் குகை ஓவியங்கள் மூலம் நாம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை பற்றி அறிந்த கொள்ள முடியும்.
Question 15
மனித நாகரிகத்தின் மிகவும் பழமையான நாகரிகம் எது?
A
சிந்துவெளி நாகரிகம்
B
சீன நாகரிகம்
C
எகிப்து நாகரிகம்
D
மெசபடோமியா நாகரிகம்
Question 15 Explanation: 
விளக்கம் : மெசபடோமியா நாகரீகம் தான் மிகவும் பழமையானது. இதன் காலகட்டம் 3500 - 2000 பொ.ஆ.மு.
Question 16
எகிப்து நாகரீகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
A
3500 – 2000 பொ. ஆ. மு
B
3300 – 1900 பொ. ஆ. மு
C
1700 – 1122 பொ. ஆ. மு
D
3100 – 1100 பொ. ஆ. மு
Question 17
சீன நாகரீகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
A
3500 – 2000 பொ. ஆ. மு
B
3300 – 1900 பொ. ஆ. மு
C
1700 – 1122 பொ. ஆ. மு
D
3100 – 1100 பொ. ஆ. மு
Question 18
சிந்துவெளி நாகரீகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
A
3500 – 2000 பொ. ஆ. மு
B
3300 – 1900 பொ. ஆ. மு
C
1700 – 1122 பொ. ஆ. மு
D
3100 – 1100 பொ. ஆ. மு
Question 19
மெசபடோமியா நாகரீகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
A
3500 – 2000 பொ. ஆ. மு
B
3300 – 1900 பொ. ஆ. மு
C
1700 – 1122 பொ. ஆ. மு
D
3100 – 1100 பொ. ஆ. மு
Question 20
சிவிஸ் என்ற லத்தின் மொழி வார்த்தையிலிருந்து தோன்றிய சொல் எது?
A
வரலாறு
B
பரிணாமம்
C
நாகரீகம்
D
நாணயம்
Question 20 Explanation: 
விளக்கம் : சிவிஸ் என்ற வார்த்தையின் பொருள் நகரம் என்பதாகும்.
Question 21
லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கப் பெற்ற ஆண்டு எது?
A
1856
B
1872
C
1920
D
1924
Question 21 Explanation: 
விளக்கம் : லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கப் பெற்ற ஆண்டு 1856.
Question 22
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு?
A
1856
B
1872
C
1920
D
1924
Question 22 Explanation: 
விளக்கம் : ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்டது 1986 ல் ஆனால் இந்தியா தோல் பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் 1920 ல் தான் ஆராய ஆரம்பித்தார்கள்.
Question 23
1924-இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார்?
A
ஜான் மார்சல்
B
சார்லஸ் ஆலன்
C
ஜேம்ஸ் பிரின்செப்
D
வில்லியம் ஜோன்ஸ்
Question 23 Explanation: 
விளக்கம் : இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக ஜான் மார்சல் இருக்கும்போது ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய நகரங்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்தார்.
Question 24
இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1861
B
1871
C
1971
D
1961
Question 24 Explanation: 
விளக்கம் : இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹம் என்பவருடைய உதவியால் நிறுவப்பட்டது.
Question 25
ரேடார் என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A
கதிரியக்க நுண்ணுணர்வு
B
காந்தப்புல வருடி
C
காந்தப் புலன் உணர்வு
D
தொலை நுண்ணுணர்வு
Question 25 Explanation: 
விளக்கம் : ரேடார் என்ற சொல்லின் தமிழாக்கம் தொலை நுண்ணுணர்வு.
Question 26
கீழ்க்கண்டவற்றுள், நிலத்தடி ஆய்வு செய்ய பயன்படும் கருவி எது?
A
காந்தப்புல வருடி
B
தொலை நுண்ணுணர்வு
C
காந்தப்புல நுண்ணுணர்வு
D
கதிரியக்க நுண்ணுணர்வு
Question 26 Explanation: 
விளக்கம் : நிலத்தடி ஆய்வு செய்ய பயன்படும் கருவி காந்தப்புல வருடி.
Question 27
ஹரப்பா நாகரீகம் எந்த காலகட்டத்தை சார்ந்தது?
A
பொ. ஆ. மு 3300 – 1900
B
பொ. ஆ. மு 3500 - 2000
C
பொ. ஆ. மு 1700 - 1122
D
பொ. ஆ. மு 3100 – 1100
Question 27 Explanation: 
விளக்கம் : சிந்து வெளி நாகரீகத்தின் ஒரு பகுதிதான் ஹரப்பா நாகரீகமாகும். இது பொ ஆ மு 3300 - 1900 காலகட்டத்தை சேர்ந்தது.
Question 28
கன்வேரிவாலா எனும் நகரத்தில் பின்பற்றப்பட்ட நாகரீகம் இவற்றுள் எவை?
A
ஹரப்பா நாகரீகம்
B
சீன நாகரிகம்
C
கிரேக்க நாகரிகம்
D
மெசபடோமியா நாகரிகம்
Question 28 Explanation: 
விளக்கம் : இது ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரமாகும். ராகிகாரி , மொஹெஞ்சதாரோ போன்ற நகரங்களையும் கொண்டது இந்நாகரீகம்.
Question 29
போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்த சிந்து வெளி நாகரீகத்துக்கு முன்னோடியான நகரம் எது?
A
அம்ரி
B
ராகிகர்கி
C
மெஹெர்கர்
D
மந்தா
Question 29 Explanation: 
விளக்கம் : புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம் மெஹெர்கர். இது பாக்கிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
Question 30
சுமேரியாவின் அரசன் நாரம்-சிங் என்பவர் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனும் இடத்தில் இருந்து வணிகம் செய்த பொருள் என்ன?
A
அணிகலன்கள்
B
தானியங்கள்
C
மண்பாண்டங்கள்
D
வெண்கல கலன்கள்
Question 30 Explanation: 
விளக்கம் : ஹரப்பா நாகரீகத்தில் சுமேரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் அணிகலன்கள். ஹரப்பா மக்கள் பெருவணிகர்களாக இருந்தனர். தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அவைகளை பயன்படுத்தினர்.
Question 31
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களில் பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
A
இரும்பு
B
செம்பு
C
வெண்கலம்
D
தங்கம்
Question 31 Explanation: 
விளக்கம் : வெண்கலம் மற்றும் அவற்றில் ஆன பொருட்களை பயன்படுத்தினர் ஹரப்பா நாகரீகத்தின் மக்கள். மேலும் அவர்கள் அணிகலன்கள் செய்யவும் தெரிந்திருந்தனர்.
Question 32
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
A
செம்பு
B
இரும்பு
C
தங்கம்
D
வெண்கலம்
Question 32 Explanation: 
விளக்கம் : மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு பிறகு வெண்கலம். இரும்பின் பயனை தெரிந்து கொள்ள சில காலம் எடுத்து கொண்டான் பண்டைய மனிதன்.
Question 33
ஹரப்பா நகரத்தில் உள்ள தமிழ்ப் பெயர்கள் கொண்ட ஆறுகள் எவை?
A
காவிரி
B
பொருன்ஸ்
C
காவிரி வாலா
D
இவை அனைத்தும்
Question 33 Explanation: 
விளக்கம் : மேற்கூறிய அனைத்துமே ஹரப்பா நாகரீகத்தில் உள்ள ஆறுகளின் பெயர்கள் ஆகும். இது மட்டுமின்றி மேலும் சில ஆறுகளின் பெயர்களும் தமிழ் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
Question 34
ஹரப்பா நாகரீகத்தில் உள்ள கொற்கை, வஞ்சி போன்ற தமிழ் பெயர்கள் கொண்ட இடங்கள் தற்போது எந்த நாட்டில் உள்ளன?
A
பாகிஸ்தான்
B
ஆப்கானிஸ்தான்
C
இந்தியா
D
நேபாளம்
Question 34 Explanation: 
விளக்கம் : ஹரப்பா நாகரீகத்தில் தமிழர்களின் பங்கு உள்ளது என்பதற்க்கு சான்று இந்த தமிழ் பெயர்கள். பாகிஸ்தானிலும் தமிழ் பெயர்கள் கொண்ட நகரங்கள் ஹரப்பா நாகரீகத்தில் இருந்துள்ளன.
Question 35
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ____________ பயன்படுத்தினர்.
A
தங்கம்
B
வெண்கலம்
C
சிவப்பு நிற மணிகள்
D
வெள்ளை நிற மணிகள்
Question 35 Explanation: 
விளக்கம் : சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிகள் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் ஆபரணங்களை விரும்பி அணிந்தனர்.
Question 36
சிந்துவெளி மக்களுக்கு எதன் பயன்பாட்டைப் பற்றி தெரியாது?
A
வெண்கலம்
B
இரும்பு
C
செம்பு
D
மண்பாண்டம்
Question 36 Explanation: 
விளக்கம் : சிந்துவெளி மக்களுக்கு வெண்கலத்தின் பயன்பாட்டை பற்றி தெரியும் ஆனால் இரும்பை பற்றியும் அவற்றின் பயன்பாட்டை பற்றியும் தெரியாது.
Question 37
உலகின் முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
A
சுமேரியர்கள்
B
மெசபடோமியர்கள்
C
எகிப்தியர்கள்
D
சிந்துவெளி நாகரிகத்தினர்கள்
Question 37 Explanation: 
விளக்கம் : உலகின் முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
Question 38
பொ. ஆ. மு 2500 இல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கட்டிடம் எது?
A
மொஹஞ்சதாரோ
B
ஊர்ஜிகரட்
C
எகிப்து இரட்டை கோவில்கள்
D
கிஸே பிரமீடு
Question 38 Explanation: 
விளக்கம் : எகிப்து ல் உள்ள கீசெ பிரமிட் . பொ. ஆ. மு 2500 இல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கட்டிடம். ஒவ்வொரு கல்லும் 15டன் எடை கொண்டது.
Question 39
எகிப்து இரட்டைக் கோவில்கள் எந்த மன்னரால் கட்டப்பட்டது?
A
இரண்டாம் ராமெசிஸ்
B
நாரம்-சிங்
C
குஃபு
D
ஹேமியுனு
Question 39 Explanation: 
விளக்கம் : எகிப்து இரட்டைக் கோவில்கள் அபு சிம்பல் என்னும் இடத்தில உள்ளது. இது இரண்டாம் ராமெசிஸ் மன்னரால் கட்டப்பட்டது.
Question 40
முதன்முதலில் பருத்தியை பயன்படுத்திய நாகரிகம் எது?
A
சிந்துவெளி நாகரிகம்
B
சீன நாகரிகம்
C
கிரேக்க நாகரிகம்
D
ஹரப்பா நாகரிகம்
Question 40 Explanation: 
விளக்கம் : சிந்துவெளி நாகரிகம் மக்கள் பருத்தி ஆடைகளை அணிந்தனர் மேலும் பருத்தியின் பயனை அறிந்திருந்தனர் மற்றும் அவற்றை எவ்வாறு உற்பத்தி செய்வது என்று தெரிந்திருந்தனர்.
Question 41
காப்பிய மாந்தர்களின் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் ________.
A
பூம்புகார்
B
மதுரை
C
காஞ்சி
D
நாகைப்பட்டினம்
Question 41 Explanation: 
விளக்கம் : துறைமுக நகரான பூம்புகார் ல் பிறந்தவர்கள்.
Question 42
___________ பண்டைய தமிழகத்தின் துறைமுக நகரம் ஆகும்.
A
பூம்புகார்
B
மதுரை
C
காஞ்சி
D
நாகைப்பட்டினம்
Question 42 Explanation: 
விளக்கம் : பண்டைய தமிழ் நகரமான பூம்புகார் துறைமுக நகரமாகும். பூம்புகாரில் அனைத்து வகையான மக்களும் வெளிநாட்டவர் உட்பட வாழ்ந்தனர். பூம்புகார் மிக பெரிய கடல் சார் வணிக நகரமாக விளங்கியது.
Question 43
துறைமுக நகரமான பூம்புகார் குறித்து இடம் பெற்றுள்ள தமிழ் நூல்கள் கீழ்கண்டவற்றுள் எவை?
A
பட்டினப்பாலை
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
இவை அனைத்தும்
Question 43 Explanation: 
விளக்கம் : மேற் கூறிய அனைத்திலும் துறைமுக நகரமான பூம்புகார் பற்றி குறிப்பு இருக்கிறது.
Question 44
கண்ணகியின் தந்தை மாநாய்கன்,  என்ற பெயருக்கான பொருள் என்ன?
A
பெரு வணிகன்
B
பெருங்கடல் வணிகன்
C
கணக்கர்
D
தச்சர்
Question 45
கோவலனின் தந்தை மாசாத்துவன்,  என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன?
A
பெரு வணிகன்
B
பெருங்கடல் வணிகன்
C
கணக்கர்
D
தச்சர்
Question 45 Explanation: 
விளக்கம் : தமிழ் மொழியில் மாசாத்துவன் என்பதற்கு பெரு வணிகன் என்று பொருள். பெரு வணிகர்களும் பெருங்கடல் வணிகர்களும் சேர்ந்து வாழ்ந்த ஊர் பூம்புகார்.
Question 46
பட்டினப்பாலை என்னும் நூலின் ஆசிரியர் ________.
A
உருத்திரங்கண்ணனார்
B
மருதனார்
C
நல்லாதனார்
D
அருட்பிரகாசம்
Question 46 Explanation: 
விளக்கம் : பூம்புகார் பற்றிய குறிப்பு கொண்ட பட்டின பாலை நூலின் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார்.
Question 47
பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார்,  எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்?
A
பொ. ஆ. மு நான்காம் நூற்றாண்டு
B
பொ. ஆ. மு ஐந்தாம் நூற்றாண்டு
C
பொ. ஆ. மு இரண்டாம் நூற்றாண்டு
D
பொ. ஆ. மு ஆறாம் நூற்றாண்டு
Question 47 Explanation: 
விளக்கம் : பூம்புகார் பற்றிய குறிப்பு கொண்ட பட்டின பாலை நூலின் ஆசிரியர் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர் ஆவர். இதிலிருந்து பூம்புகார் எவ்வளவு பழமையான நகர் என்று தெரிய வருகிறது.
Question 48
கடைச்சங்க காலத்தில் ________ புலவர்கள் மதுரையில் தமிழ் பணி செய்தார்கள்.
A
51
B
49
C
36
D
15
Question 49
பண்டைய இஸ்ரேல் மன்னனான சாலமோன் முத்துக்களை ________ என்ற இடத்தில் இருந்து இறக்குமதி செய்தான்.
A
தொண்டி
B
மதுரை
C
உவரி
D
பூம்புகார்
Question 49 Explanation: 
விளக்கம் : பண்டைய இஸ்ரேல் மன்னனான சாலமோன் முத்துக்களை உவரி என்ற இடத்தில் இருந்து இறக்குமதி செய்தான். உவரி பாண்டியர்களின் துறைமுகம் கொற்கை என்னும் ஊருக்கு பக்கத்தில் உள்ளது.
Question 50
________ என்பது பாண்டியர்களின் துறைமுக நகரம்.
A
கொற்கை
B
கவரி
C
பூம்புகார்
D
தொண்டி
Question 50 Explanation: 
விளக்கம் : பண்டைய பாண்டியர்களின் துறைமுகம் கொற்கை என்னும் ஊர் ஆகும்.
Question 51
பண்டைய மதுரையில் உள்ள தொழிற்சாலையில் எந்த நாட்டிற்காக நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.
A
இஸ்ரேல்
B
ரோமானியம்
C
சீனம்
D
ஐரோப்பா
Question 51 Explanation: 
விளக்கம் : பண்டைய மதுரையில் உள்ள தொழிற்சாலையில் ரோமானியத்துக்காக நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. மதுரை ஒரு பெரு வணிக நகரம்.
Question 52
இரவு நேரத்து அங்காடியை பண்டைய காலத்தில் எவ்வாறு அழைப்பர்.
A
நாளங்காடி
B
அல்லங்காடி
C
இரவங்காடி
D
பொழுதங்காடி
Question 52 Explanation: 
விளக்கம் : மதுரையை தூங்கா நகரம் என்பர் அதற்கு காரணம் மதுரையில் இரவிலும் அங்காடிகள் திறந்தே இருந்தன. இவ்வாறு திறந்திருந்த அங்காடிகள் அல்லங்காடி என்றழைக்கப்படுகின்றன. பெண்கள் இரவிலும் பொருட்கள் வாங்க அங்காடிகளுக்கு சென்றனர் என்பதிலிருந்து இது பாதுகாப்பான நகரம் என்று தெரிகிறது.
Question 53
மௌரிய வம்ச அரசர் சந்திரகுப்தரின் அமைச்சர் சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் நகரம் எது?
A
பூம்புகார்
B
மதுரை
C
காஞ்சி
D
தொண்டி
Question 53 Explanation: 
விளக்கம் : புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸின் குறிப்பில் மதுரையை பற்றி குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரும் மதுரையைப்பற்றி டான் குறிப்பிட்டுள்ளார்.
Question 54
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்பிற்காக தமிழகத்தின் எந்த நகருக்கு வந்தார்?
A
மதுரை
B
காஞ்சி
C
தொண்டி
D
பூம்புகார்
Question 54 Explanation: 
விளக்கம் : காஞ்சிக்கு வந்தார். கல்வியில் சிறந்த நகரம் காஞ்சி என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 55
"கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று பாடியவர்?
A
ஆனாய நாயனார்
B
திருநாவுக்கரசர்
C
காரைக்காலம்மையார்
D
சுந்தரர்
Question 55 Explanation: 
விளக்கம் : இப்பாடலை பாடியவர் திருநாவுக்கரசர். இவர் 63 நாயன்மார்களில் முதன்மையானவர்.
Question 56
தர்மபாலர், ஜோதிபாலர், போதிதர்மர் போன்ற தமிழ் சான்றோர்கள் பிறந்த நகரம்?
A
காஞ்சி
B
மதுரை
C
பூம்புகார்
D
நாகப்பட்டினம்
Question 56 Explanation: 
விளக்கம் : இவர்கள் பிறந்த ஊர் காஞ்சி. புத்தகயா, சாஞ்சி போன்ற 7 இந்திய புனித நகரங்களுக்கு நிகர் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி ஆகும்.
Question 57
புகழ்பெற்ற காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ மன்னன்?
A
மகேந்திரவர்மன்
B
நரசிம்மவர்மன்
C
ராஜசிம்மன்
D
நந்திவர்மன்
Question 57 Explanation: 
விளக்கம் : காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ மன்னன் ராஜசிம்மன். பல்லவர் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டன.
Question 58
நீரின் தன் ஈர்ப்பு திறனை விட குறைந்த தன் ஈர்ப்பு திறன் கொண்ட கோள் எது?
A
சனி
B
நெப்டியூன்
C
புளூட்டோ
D
வியாழன்
Question 58 Explanation: 
விளக்கம் : ருமேனியா வேளாண் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் இக்கோளின் தன்னீர்ப்பு திறன் நீரின் தன்னீர்ப்பு திறனை விட குறைவு.
Question 59
யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ____.
A
1775
B
1832
C
1781
D
1807
Question 59 Explanation: 
விளக்கம் : வில்லியம் ஹெர்ஷல் என்னும் வானிலை அறிஞரால் 1781 ல் கண்டுபிடிக்கப்பட்டவை. இது கிரேக்க விண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Question 60
வில்லியம் ஹெர்ஷல் என்னும் வானிலை அறிஞரால் 1781 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் எது?
A
யுரேனஸ்
B
நெப்டியூன்
C
புளூட்டோ
D
வியாழன்
Question 60 Explanation: 
விளக்கம் : வில்லியம் ஹெர்ஷல் என்னும் வானிலை அறிஞரால் 1781 ல் கண்டுபிடிக்கப்பட்டவை. இது கிரேக்க விண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Question 61
ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஓர் ஒளியாண்டு  ஆகும். ஒளி பயணிக்கும்போது ஒளியின் திசை வேகம் வினாடிக்கு எவ்வளவு?
A
3 லட்சம் கிலோமீட்டர்
B
330 மீட்டர்
C
370 மீட்டர்
D
540 மீட்டர்
Question 61 Explanation: 
விளக்கம் : ஒளியின் திசை வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் ஆகும்.
Question 62
ஒரு வினாடிக்கு ____________________  மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் ?
A
440 மீட்டர்
B
330 மீட்டர்
C
247 மீட்டர்
D
320 மீட்டர்
Question 62 Explanation: 
விளக்கம் : ஒளியின் வேகம் வினாடிக்கு 330 மீட்டர் ஆகும். மணிக்கு 800கிமீ வேகத்தில் செல்லக்கூடிய விண்கலனில் சென்றால் 21 வருடங்கள் ஆகும் சூரியனை சென்றடைய.
Question 63
சூரியனில் உள்ள வெப்பமான வாயுக்கள் இவற்றில் எவை?
A
ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு
B
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
C
ஹைட்ரஜன் மற்றும் கார்பன்
D
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சைடு
Question 63 Explanation: 
விளக்கம் : சூரியனில் உள்ள வெப்பமான வாயுக்கள் இவற்றில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் . சூரியன் தானே ஒளியை உமிழக்கூடிய தன்மை பெற்றது.
Question 64
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை எவ்வளவு?
  1. 6000 0C
  2. 5500 0C
  3. 6260 0C
  4. 6550 0C
A
A
B
B
C
C
D
D
Question 64 Explanation: 
விளக்கம் : சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 0C. சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களுக்கும் வெப்பமும் ஒளியும் சூரியன் அளிக்கிறது.
Question 65
சூரியனை கடிகார சுற்றில் அதாவது கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிவரும் கோள் இவற்றுள் எது?
A
நெப்டியூன்
B
வெள்ளி
C
புதன்
D
வியாழன்
Question 65 Explanation: 
விளக்கம் : சூரியனை கடிகார சுற்றில் சுற்றி வரும் கோள் வெள்ளி. சூரியனை கடிகார சுற்றில் சுற்றி வரும் இரண்டே இரண்டு கோள்களில் யுரேனஸ் ம் ஒன்று.
Question 66
வெளிப்புற கோள்கள் அல்லது வியாழன் நிகர் கோள்கள் எவற்றால் எவற்றால் நிரம்பியிருக்கின்றன?
A
வாயுக்களால்
B
பாறைகளால்
C
எரிமலைகளால்
D
விண்கற்களால்
Question 66 Explanation: 
விளக்கம் : வியாழன் நிகர் கோள்கள் வாயுக்களால் நிரம்பியிருக்கின்றன. வியாழன் நிகர் கோள்கள் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு தொலைவில் உள்ள 4 கோள்கள் ஆகும்.
Question 67
ரோமானிய கடவுளின் தூதுவரின் பெயரில் அழைக்கப்படும் கோளின் பெயர் என்ன?
A
புவி
B
செவ்வாய்
C
புதன்
D
நெப்டியூன்
Question 67 Explanation: 
விளக்கம் : ரோமானிய கடவுளின் தூதுவரின் பெயர் "மெர்குரி" என்னும் பெயரால் புதன் அழைக்கப்படுகிறது. புதனுக்கு துணைக்கோள்கள் கிடையாது.
Question 68
சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் எது?
A
செவ்வாய்
B
சூரியன்
C
வெள்ளி
D
புதன்
Question 68 Explanation: 
விளக்கம் : சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் வெள்ளி. புதன் சூரியனுக்கு அருகில் இருந்தாலும் வெள்ளிதான் வெப்பமான கோள் ஆகும். வெள்ளிக்கும் துணைக்கோள்கள் கிடையாது.
Question 69
சூரிய குடும்பத்தில் வெள்ளி கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை?
A
243
B
247
C
251
D
248
Question 69 Explanation: 
விளக்கம் : வெள்ளி சூரியனை சுற்றி வர 243 நாட்கள் ஆகும். யுரேனஸை போன்றே வெள்ளியும் கிழக்கிலிருந்து மேற்க்காக சுற்றி வருகிறது (கடிகாற்சுற்றில்).
Question 70
அன்பு மற்றும் அழகை குறிக்கும் ரோமானிய கடவுளின் பெயரைக் கொண்டுள்ள கோளின் பெயர்?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 70 Explanation: 
விளக்கம் : அன்பு மற்றும் அழகை குறிக்கும் ரோமானிய கடவுளின் பெயர் “வீனஸ்” என்னும் பெயரால் அழைக்கப்படும் கோள் இது.
Question 71
ரோமானிய மற்றும் கிரேக்க கடவுள்களின் பெயர்களால் அழைக்கப்படாத ஒரே கோள்?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 71 Explanation: 
விளக்கம் : ரோமானிய மற்றும் கிரேக்க கடவுள்களின் பெயர்களால் அழைக்கப்படாத ஒரே கோள் புவி. நீலக்கோள் மற்றும் நீர்க்கோள் என்று அழைக்கப்படுகிறது.
Question 72
புவி சூரியனை வினாடிக்கு ____________________ கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது?
A
33 கிமீ
B
30 கிமீ
C
38 கிமீ
D
60 கிமீ
Question 72 Explanation: 
விளக்கம் : வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. சூரியகுடும்பத்தில் உயிர்கள் வாழ தகுதியான ஒரே கொள் புவி ஆகும்.
Question 73
புவியின் துருவ விட்டம் எத்தனை கிலோமீட்டர்கள்?
A
12,711 கிமீ
B
12,756 கிமீ
C
12,714 கிமீ
D
12,760 கிமீ
Question 73 Explanation: 
விளக்கம் : புவியின் துருவ விட்டம் 12,714 கிமீ ஆகும். புவியின் துருவ பகுதி பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளன.
Question 74
புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் எத்தனை கிலோமீட்டர்கள்?
A
12,711 கிமீ
B
12,760 கிமீ
C
12,714 கிமீ
D
12,756 கிமீ
Question 74 Explanation: 
விளக்கம் : புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் 12,756 கிமீ ஆகும். சூரியானுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150மில்லியன் கிமீ ஆகும்.விளக்கம் : புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் 12,756 கிமீ ஆகும். சூரியானுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150மில்லியன் கிமீ ஆகும்.
Question 75
ரோமானிய கடவுளின் போர் கடவுள் பெயரால் அழைக்கப்படும்  கோளின் பெயர் என்ன?
A
புதன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
புவி
Question 75 Explanation: 
விளக்கம் : ரோமானிய கடவுளின் போர் கடவுள் இன் பெயர் 'மார்ஸ்' என்ற பெயரால் செவ்வாய் அழைக்கப்படுகிறது.
Question 76
செவ்வாயின் மேற்பரப்பு சிவப்பு நிறமாக தோற்றம் அளிக்க காரணம் என்ன?
A
பெர்ரஸ் ஆக்சைடு
B
நைட்ரிக் ஆக்சைடு
C
நைட்ரஜன் பெராக்சைடு
D
நைட்ரஜன் ஆக்சைடு
Question 76 Explanation: 
விளக்கம் : இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்ஸைடு இருப்பதால் இது செந்நிறமாக காட்சியளிக்கிறது. இரும்பு ஆக்ஸைடை பெர்ரஸ் ஆக்ஸைடு என்றும் அழைக்கலாம்.
Question 77
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் தரை பகுதியை ஆராய்வதற்காக மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை அனுப்பியது எந்த ஆண்டு?
A
2015
B
2016
C
2014
D
2017
Question 77 Explanation: 
விளக்கம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் தரை பகுதியை ஆராய்வதற்காக மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை 24.09.2014 அன்று அனுப்பியது. இதனால் செவ்வாயை ஆராயும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
Question 78
ரோமானியர்களின் முதன்மையான கடவுளின் பெயரில் அழைக்கப்படும் கோளின் பெயர் என்ன?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 78 Explanation: 
விளக்கம் : ரோமானியர்களின் முதன்மையான கடவுளின் பெயர் 'ஜூபிட்டர்' என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கொள் இது.
Question 79
சூரியனைப் போன்றே வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை கொண்ட கோள் எது?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 79 Explanation: 
விளக்கம் : சூரியனைப் போன்றே வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை கொண்ட கோள் வியாழன். மிக அதிகமான துணைக்கோள்களை இந்த கோள் கொண்டுள்ளது.
Question 80
கனிமீடு, அயோ, யூரோப்பா மற்றும் கேலிஸ்டோ போன்ற துணைக்கோள்களை கொண்ட கோள் எது?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
புவி
Question 80 Explanation: 
விளக்கம் : மேற்கூறிய சில மிகப்பெரிய துணைக்கோள்களை கொண்ட கோள் வியாழன் ஆகும்.
Question 81
வியாழனைச் சுற்றி மொத்தம் எத்தனை துணைக்கோள்கள் உள்ளன?
A
88
B
27
C
67
D
62
Question 81 Explanation: 
விளக்கம் : வியாழனை சுற்றி 67 துணை கோள்கள் உள்ளன. இக்கோள் தன் அச்சில் வேகமாக சுழல கூடியவை.
Question 82
புதன் கோள் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?
A
88
B
224.7
C
365.3
D
120.4
Question 82 Explanation: 
விளக்கம் : 88 நாட்களில் புதன் சூரியனை சுற்றி வருகிறது. புதனிற்கு துணைக்கோள்கள் கிடையாது.
Question 83
ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோளின் பெயர் என்ன?
A
புதன்
B
வெள்ளி
C
வியாழன்
D
சனி
Question 83 Explanation: 
விளக்கம் : ரோமானிய வேளாண் கடவுளான "சாட்டர்ன்" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோள் இதுவாகும்.
Question 84
சனிக்கோளை சுற்றி எத்தனை துணைக்கோள்கள் உள்ளது?
A
62
B
67
C
27
D
14
Question 84 Explanation: 
விளக்கம் : 62 துணைக்கோள்களை கொண்டது சனி. சனியின் மிகப்பெரிய துணைக்கோள் டைட்டன் எனப்படும்.
Question 85
சூரிய குடும்பத்தில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களை கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே ஒரு துணைக்கோள் இவற்றுள் எவை?
A
கனிமீடு
B
டைட்டன்
C
யூரோப்பா
D
அயோ
Question 85 Explanation: 
விளக்கம் : நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களை கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே ஒரு துணைக்கோள் டைட்டன் ஆகும்.
Question 86
கிரேக்க விண்வெளி கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோளின் பெயர் என்ன நூலின் பெயர் என்ன?
A
யுரேனஸ்
B
வெள்ளி
C
வியாழன்
D
சனி
Question 86 Explanation: 
விளக்கம் : கிரேக்க விண்வெளி கடவுளின் பெயர் யுரேனஸ் என்னும் பெயரால் அழைக்கப்படும் கோள் இது. வில்லியம் ஹெர்ஷல் என்னும் வானிலை அறிஞரால் 1781ல் இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Question 87
யுரேனஸ் என்னும் கோள் பச்சை நிறமாக காட்சி அளிக்க என்ன காரணம்?
A
நைட்ரஜன் வாயுவால்
B
மீத்தேன் வாயுவால்
C
ஹீலியம் வாயுவால்
D
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கலந்த வாயுவால்
Question 87 Explanation: 
விளக்கம் : மீத்தேன் வாயுவால் தான் இக்கோள் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.
Question 88
சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியனின் நிறை மட்டும்  எத்தனை சதவிகிதம்?
A
97
B
95
C
90
D
99.8
Question 88 Explanation: 
விளக்கம் : சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.8 சதவிகிதம் சூரியனின் நிறை ஆகும். சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்னும் வெப்பமான வாயுக்களால் ஆனது.
Question 89
யுரேனஸ் மொத்தம் எத்தனை துணைக் கோள்களைக் கொண்டுள்ளது?
A
62
B
67
C
27
D
14
Question 89 Explanation: 
விளக்கம் : யுரேனஸ் மொத்தம் 27 துணைக்கோள்களை கொண்டுள்ளது. இவற்றில் பெரிய துணைக்கோள் டைட்டானிய துணைக்கோள் ஆகும்.
Question 90
யுரேனஸின் துணைக் கோள்களில் மிகப்பெரிய துணைக்கோள் எது?
A
டைட்டன்
B
டைட்டானிய
C
டிரைட்டன்
D
யூரோபா
Question 90 Explanation: 
விளக்கம் : யுரேனஸின் பெரிய துணைக்கோள் டைட்டானிய துணைக்கோள் ஆகும். யுரேனஸ் மொத்தம் 27 துணைக்கோள்களை கொண்டுள்ளது.
Question 91
தனது அச்சில் சற்று சாய்ந்து சூரியனுக்கு கடிகார சுற்று திசையில் சூரியனை சுற்றி உருண்டு ஓடுவதுபோல் சுற்றிவரும் கோளின் பெயர் என்ன?
A
வியாழன்
B
வெள்ளி
C
யுரேனஸ்
D
சனி
Question 91 Explanation: 
விளக்கம் : கடிகார சுற்று திசையில் சூரியனை சுற்றி வரும் கோள் யுரேனஸ் ஆகும். வெள்ளி மற்றும் இவை இரண்டு கோள்கள் மட்டுமே சூரியனை கடைக்கார சுற்றில் சுற்றிவருகின்றன.
Question 92
ரோமானிய கடல் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோளின் பெயர் என்ன?
A
வியாழன்
B
நெப்டியூன்
C
யுரேனஸ்
D
சனி
Question 92 Explanation: 
விளக்கம் : ரோமானிய கடல் கடவுளின் பெயர் நெப்ட்யூன் இப்பெயரில் இக்கோள் அழைக்கப்படுகிறது. இக்கோள் நீலம் மற்றும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது.
Question 93
நெப்டியூனின் துணைக் கோள்களில் மிகப்பெரிய துணைக்கோள் இவற்றுள் எவை?
A
டைட்டன்
B
டைட்டானிய
C
டிரைட்டன்
D
யூரோபா
Question 93 Explanation: 
விளக்கம் : நெப்ட்யூனை சுற்றி 14 துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் பெரிய துணைக்கோள் டிரைட்டன் ஆகும்.
Question 94
நெப்டியூன் இல் மொத்தம் எத்தனை துணை கோள்கள் உள்ளன?
A
14
B
62
C
67
D
27
Question 94 Explanation: 
விளக்கம் : நெப்ட்யூனை சுற்றி 14 துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் பெரிய துணைக்கோள் டிரைட்டன் ஆகும்.
Question 95
நெப்டியூன் க்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய கோள்கள் எவ்வாறு அழைப்பர்?
A
துணைக் கோள்கள்
B
நட்சத்திரங்கள்
C
குறுங்கோள்கள்
D
வால்மீன்கள்
Question 95 Explanation: 
விளக்கம் : அப்பால் காணப்படும் சிறு விண்பொருட்கள் குறுங்கோள்கள் எனப்படும். இவை மிகவும் குளிர்த்தும் ஒளியில்லாமலும் காணப்படுகின்றன.
Question 96
சூரிய குடும்பத்தில் காணப்படும் குறுங்கோள் இவற்றுள் எவை?
A
புளூட்டோ
B
செரஸ்
C
ஈரிஸ்
D
இவை அனைத்தும்
Question 96 Explanation: 
விளக்கம் : மேலே கூறியவை அனைத்துமே குறுங்கோள்களாகும் இவற்றில் புளூட்டோ மட்டும் கோள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு குறுங்கோள்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
Question 97
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு புவியை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் எத்தனை நாட்கள்?
A
27 நாட்கள் 8 மணி நேரம்
B
27 நாட்கள் 6 மணி நேரம்
C
27 நாட்கள் 7 மணி நேரம்
D
27 நாட்கள் 4 மணி நேரம்
Question 97 Explanation: 
விளக்கம் : 27 நாட்கள் 8 மணி நேரம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. புவியின் ஒரே ஒரு துணைக்கோள் நிலவு ஆகும்.
Question 98
நிலவு புவியிலிருந்து _______ கிலோ மீட்டர் தூரம் உள்ளது?
A
3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர்
B
3 லட்சத்து 85 ஆயிரத்து 739 கிலோ மீட்டர்
C
3 லட்சத்து 75 ஆயிரத்து 739 கிலோ மீட்டர்
D
3 லட்சத்து 75 ஆயிரத்து 800 கிலோ மீட்டர்
Question 98 Explanation: 
விளக்கம் : நிலவு புவியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இது புவியில் நான்கில் ஒரு பங்கே உள்ளது.
Question 99
இந்திய விண்வெளித்துறை நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-1 என்னும் விண்கலத்தை நிலவுக்கு ஏவப்பட்ட ஆண்டு என்ன?
A
2014
B
2008
C
2009
D
2011
Question 99 Explanation: 
விளக்கம் : இந்திய விண்வெளித்துறை நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-1 என்னும் விண்கலத்தை நிலவுக்கு ஏவப்பட்ட ஆண்டு 2008. நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடியும்.
Question 100
செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே காணப்படும் மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
குறுங்கோள்கள்
B
சிறுகோள்கள்
C
துணைக்கோள்கள்
D
வால் விண்மீன்கள்
Question 100 Explanation: 
விளக்கம் : செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே காணப்படும் மண்டலம் சிறுகோள்கள் எனப்படும். இவை சூரியனை சுற்றி வரும் திடப்பொருள்கள் ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!