August 1st Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் வரம்பு என்ன?
Correct
விளக்கம்
- துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சர்பானந்த சோனோவால், உள்நாட்டு கப்பல் மசோதா, 2021’ஐ மக்கள் அவையில் அறிமுகப்படுத்தினார். இது வழிசெலுத்தல் பாதுகாப்பு, உயிர் மற்றும் சரக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்படக்கூடிய மாசுபாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உள்நாட்டு கப்பல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் இது எண்ணுகிறது. 4000 கிமீ நீள உள்நாட்டு நீர்வழிகள் இந்தியாவில் இயங்குகின்றன.
Incorrect

Question 2 of 50
2. Question
எந்த மாநிலத்தின் இரு நகரங்கள் யுனெஸ்கோவால் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவால் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’ கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களை உள்ளடக்கிய இந்தத்திட்டம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆஜ்மீர் மற்றும் வாரணாசி உட்பட தெற்காசியாவின் ஆறு நகரங்கள் ஏற்கனவே இத்திட்டத்தில் உள்ளன. ஓர்ச்சா மற்றும் குவாலியர் ஆகியவை முறையே ஏழாவது மற்றும் எட்டாவது நகரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

Question 3 of 50
3. Question
இந்தியாவின் இரண்டாவது நூல்களின் கிராமத்தை அமைத்த இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் என்ற கிராமம், கடந்த 2017ஆம் ஆண்டில் அம்மாநில அரசால் ‘நூல்களின் கிராமம்’ என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது ‘நூல்களின் கிராமம்’, கேரளத்தின் கொல்லம் கொட்டாரக்கரா நகரத்திலிருந்து ஐந்து கிமீட்டர் தொலைவில் உள்ள பெருங்குளம் என்ற குக்கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தியின் நினைவாக, அக்கிராமத்தில் உள்ள வாசகர்களை அதிக நூல்களைப் படிக்க ஊக்குவிக்கும் வகையில் ஒரு நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.

Question 4 of 50
4. Question
அண்மையில் எந்த நகரத்தில், உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட எஃகு பாலம் திறக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட எஃகு பாலமானது சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இது MX3D என்ற ஒரு டச்சு ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தப் பாலத்தை நெதர்லாந்தின் மகாராணி மெக்ஸிமா திறந்து வைத்தார். நான்கு ஆண்டுகாலமாக கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் ஆம்ஸ்டர்டாம் நகரத்தின் மையத்திலுள்ள பழமையான கால்வாய்களில் ஒன்றான அவுடெஜிட்ஸ் அச்செர்பர்க்வாலில் நிறுவப்பட்டுள்ளது.

Question 5 of 50
5. Question
மீகாங்-கங்கா ஒத்துழைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்
- மீகாங்-கங்கா ஒத்துழைப்பு என்பது இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை அமைப்பாகும். இந்த நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்க இது 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சமீபத்தில், 11ஆவது மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

Question 6 of 50
6. Question
ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் வென்ற 3ஆவது இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக, டோக்கியோ விளையாட்டுப் போட்டியின் முதல் போட்டியில் டெனிஸ் இஸ்டோமைனை தோற்கடித்து ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வென்ற மூன்றாவது இந்தியர் என்னும் பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டு சியோல் விளையாட்டுப் போட்டியில், பாரகுவேவைச் சார்ந்த விக்டோ கபல்லெரோவை வீழ்த்தி, ஒற்றையர் போட்டியில் வென்ற முதல் இந்தியராக ஆனார் ஜீஷன் அலி.
- அதன்பிறகு, 1996ஆம் ஆண்டு அட்லாண்டா விளையாட்டுப்போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், பிரேசிலின் பெர்னாண்டோ மெலிகெனியை வீழ்த்தி வெண்கலம் வென்றார் லியாண்டர் பயஸ்.

Question 7 of 50
7. Question
இந்தியாவில் நிறுவனங்கள் சட்டம், 2013’ஐ அமல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நிறுவனங்கள் சட்டம், 2013’இன்கீழ் நிறுவனங்களை இணைப்பது தொடர்பான விதிகளை நடுவண் அரசு திருத்தியுள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013’ஐ அமல்படுத்தும் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014’ஐ திருத்தியுள்ளது.
- இச்சட்டத்தின் பிரிவு 16’இன்கீழ், ஏற்கனவேயுள்ள நிறுவனத்திற்கு புதிய பெயரை ஒதுக்கீடுசெய்யும் முறையில் திருத்தஞ்செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

Question 8 of 50
8. Question
2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் எத்தனை நச்சுயிரியல் ஆராய்ச்சி மற்றும் கண்டறி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் 42 வைராலஜி ஆராய்ச்சி மற்றும் வைரஸ் கண்டறியும் ஆய்வகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. மொத்தம் `324 கோடி செலவில் இவை நிறுவப்படவுள்ளன.
- 2021-22 முதல் 2025-26 வரையிலான 15ஆம் நிதி ஆணையத்தின் காலத்தில் இவை நிறுவப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நலவாழ்வு ஆராய்ச்சித்துறையின் கீழ் உள்ள திட்டத்தின்மூலம் இவை நிறுவப்படும்.

Question 9 of 50
9. Question
“ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின்” (UNECSCAP) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையம், சமீபத்தில், டிஜிட்டல் மற்றும் நிலைத்த வர்த்தகவசதி குறித்த உலகளாவிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்கீழ் 143 நாடுகள் ஐந்து முக்கிய குறிகாட்டிகளில் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியா 90.32% மதிப்பெண்களைப்பெற்றுள்ளது. 2019’இல் அது 78.49 சதவீதமாக இருந்தது. வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில், இந்தியா, நடப்பு 2021ஆம் ஆண்டில் 100% பெற்றுள்ளது.

Question 10 of 50
10. Question
இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.23 அன்று இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1927ஆம் ஆண்டு இதே நாளின் போது, நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பு, அன்றைய பம்பாய் நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
- இந்த முதல் ஒலிபரப்பை இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி என்ற தனியார் அமைப்பு மேற்கொண்டது. தற்போது, பிரஸார் பாரதி, தேசிய பொதுச்சேவை ஒலிபரப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் அகில இந்திய வானொலி (AIR) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், அகில இந்திய வானொலி புதுதில்லியில் “புதிய இந்தியாவை உருவாக்குதல் மற்றும் ஒலிபரப்பு ஊடகம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

Question 11 of 50
11. Question
இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் அதுசார் அலுவலகங்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது விடுதலைப்போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்னுமொரு புதிய வரி, முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சனால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2021) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 161ஆவது ஆண்டுநாளாகும்.

Question 12 of 50
12. Question
டோக்கியோ 2021’க்கான இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் உள்ள பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை என்ன?
Correct
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2021’க்கு 127 பங்கேற்பாளர்களைக் கொண்ட பெரிய குழுவை இந்தியா அனுப்பியுள்ளது. அவர்கள் 18 வெவ்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பர். இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளில் 2 மாற்று வீரர்கள் மற்றும் தலா ஒரு ரிசர்வ் கோல் கீப்பரும் அடங்குவர். முந்தைய 2016 ஒலிம்பிக்கில், 117 விளையாட்டு வீரர்கள், 15 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

Question 13 of 50
13. Question
நடப்பாண்டின் (2021) G20 எரிசக்தி & சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- இத்தாலியால் நடத்தப்படும் G20 நாடுகளின் எரிசக்தி & சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் நேபிள்ஸில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு, கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாநாடு – சிஓபி 26 நடைபெறுவதற்கு 100 நாட்களுக்கு முன்னதாக கூட்டப்பட்டிருப்பதால் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ஆனால் உறுப்புநாடுகள், தங்களது இறுதி அறிக்கையில், முக்கிய பருவ நிலைமாற்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளத்தவறியதால் இந்தச் சந்திப்பு விமர்சனத்துக்கு உள்ளானது.

Question 14 of 50
14. Question
இந்தியாவில் தேசிய மீன் விவசாயிகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்களான Dr K H அலிகுனி மற்றும் Dr H L செளத்ரி ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை.10ஆம் தேதி அன்று தேசிய மீன் விவசாயிகள் நாள் (National Fish Farmers Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
- மீனவர்களின் மீன்வளத் தொழிலின் மேம்பாட்டுக்காக பிரதம மந்திரி மீன்வளத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2021) வரும் மீன் விவசாயிகள் நாள், அந்நாளின் 21ஆம் ஆண்டுநாளாகும்.

Question 15 of 50
15. Question
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 தேதியன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- கடந்த 2013’இல், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை.30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா அலுவலகம் அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. “Victims’ Voices Lead the Way” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

Question 16 of 50
16. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வார காலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் 120 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
- கடந்த 1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்பாலூட்டலுக்கான உலக கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது.
- “Protect Breastfeeding: A Shared Responsibility” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இவ்வாரத்துக்கான கருப்பொருளாகும்.

Question 17 of 50
17. Question
தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி-மைய வணிகத்திட்டத்தை உருவாக்கியுள்ள இந்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி சார்ந்த வணிகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் 8 நிறுவனங்கள் இந்தத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரோவுடன் கூட்டாண்மைக்காக பதிவுசெய்துள்ளன. ஆர்வமுள்ள நபர்கள் ISRO’இன் திட்டங்கள் மற்றும் பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதாவது அளவுகோல் மாதிரிகள், T-சட்டைகள், விண்வெளிசார் கல்வி விளையாட்டுகள், அறிவியல் பொம்மைகள் போன்றவற்றை வாங்க முடியும். இவ்விளம்பரப்பயிற்சியானது மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் & தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் உருவாக்கும்.

Question 18 of 50
18. Question
நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முதலாவது உலக நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முதலாவது உலக நாள், ஜூலை.25 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை உலக நலவாழ்வு அமைப்பு ஒருங்கிணைந்து அனுசரித்தது. ஐநா பொது அவையானது 2021 ஏப்ரல்.28 அன்று நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உலகளாவிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் 236,000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான பத்து முக்கிய காரணங்களுள் நீரில் மூழ்குவதும் ஒன்றென உள்ளது.

Question 19 of 50
19. Question
சமீபத்தில் தொடங்கப்பட்ட “ஆசாத் கி ஷௌர்யா கதா” கண்காட்சி என்பது பின்வரும் எந்த விடுதலைப் போராளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாகும்?
Correct
விளக்கம்
- விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒருபகுதியாக, தியாகி சந்திர சேகர் ஆசாதின் வாழ்வைப் போற்றும் வகையில் “ஆசாத் கி ஷௌர்யா கதா” என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுதில்லியில் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில், மத்திய கலாச்சார இணையமைச்சர் அர்ஜுன் இராம் மேக்வால் தொடங்கிவைத்தார்.

Question 20 of 50
20. Question
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு சார்ந்த விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 49 கிகிராம் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். P V சிந்துவுக்குப்பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற இரண்டாவது இந்திய பெண் இவராவார். மேலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்குபவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Question 21 of 50
21. Question
பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதை வென்ற இந்திய நீரியலாளர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தலைமை நீரியலாளர் வைஸ் அட்மிரல் வினை பத்வார், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படும் அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதைப்பெற்றுள்ளார். நீரியல் மற்றும் கடல் வரைபடப் பிரிவுகளில் அவரது படைப்புகளை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2006’இல் நிறுவப்பட்ட இந்த விருது, பிரிட்டிஷ் கடற்படைக் குழுவின் முதல் நீரியலாளரின் பெயரில் வழங்கப்படுகிறது. வினை பத்வாருக்கு கடந்த 2019’இல் வழங்கப்பட்டது இவ்விருது. தொற்றுபரவல் காரணமாக சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.

Question 22 of 50
22. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையுடன் இணைந்து, ‘இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்பு’ என்ற அறிக்கையை அறிமுகம் செய்த நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- “இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்பு 2021” பற்றிய அறிக்கை ஒன்றை NITI ஆயோக்கும் பன்னாட்டு எரிசக்தி முகமையும் இணைந்து வெளியிட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க வளங்கள் நிறைந்த மாநிலங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட ஆற்றல்மாற்ற சவால்களைப் புரிந்துகொள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் அரசுகளுடன் நடத்தப்பட்ட மும் மாநிலப்பயிலரங்கங்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும் இந்த அறிக்கை. இந்தியாவின் ஆற்றல் அமைப்பிற்கு மூலங்களை அடையாளங்காணவும் நவீன தொழில்நுட்பங்களை முன்னெடுக்கவும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

Question 23 of 50
23. Question
மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட ‘தங்க அரிசி’யை அங்கீகரித்த முதல் நாடு எது?
Correct
- பிரகாசமான மஞ்சள் நிறங்கொண்ட மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட ‘தங்க அரிசி’யின் வணிக ரீதியான உற்பத்தியை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் ஆனது. இவ்வரியை அதிக ஊட்டச்சத்து மிக்கதாக ஆக்குவதற்காக வைட்டமின் ஏ முன்னோடி பீட்டா கரோட்டினால் இது செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த அரிசி சிறார் பருவ குருட்டுத்தன்மையை எதிர்த்துப் போராடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும், பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்தத் ‘தங்க அரிசி’யை உருவாக்கியுள்ளன.

Question 24 of 50
24. Question
ரஷ்ய கடற்படையின் 325ஆவது கடற்படை தின விழாவில் பங்கேற்ற இந்தியக்கடற்படைக்கப்பல் எது?
Correct
விளக்கம்
- இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘இந்திரா கடற்படை’ 12ஆம் கூட்டுப்பயிற்சி பால்டிக் கடலில் கடந்த 28 & 29 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்தக் கூட்டுப்பயிற்சி முதன் முதலில் கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கூட்டுப் பயிற்சி இருநாட்டு கடற்படைகள் இடையேயான நீண்டகால யுக்தி கூட்டுறவை எடுத்துக்காட்டுகிறது.
- ரஷ்ய கடற்படையின் 325ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்க INS தபார் போர்க்கப்பல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றது. அதன் ஒரு பகுதியாக இந்திரா கடற்படை-21 பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. 2 நாள் நடந்த கூட்டுப்பயிற்சியில், வான்தாக்குதலை முறியடிப்பது, கப்பல்கள் இடையே சரக்கு பரிமாற்றம், எரிபொருள் பரிமாற்றம், ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Question 25 of 50
25. Question
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் தொடங்கிய, 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்ற பாதுகாப்புப்பயிற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- நடப்பாண்டின் (2021) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற பயிற்சியானது ஆப்பிரிக்காவின் கீழைக்கடற்கரையில் ஜூலை.26 அன்று தொடங்கியது. இது கீழை ஆப்பிரிக்கா மற்றும் மேலை இந்தியப்பெருங்கடலில், தேசிய மற்றும் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு வருடாந்திர கடற்சார் பயிற்சியாகும். இப்பயிற்சியின் நடப்பாண்டு (2021) பதிப்பில், 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் IMO, UNODC, EUNAVFOR, CRIMARIO மற்றும் EUCAP சோமாலியா போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. INS தல்வார், இதில் பங்கேற்றது.

Question 26 of 50
26. Question
‘இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- மக்களவையானது சமீபத்தில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. இது, ஹரியானாவில் உள்ள குண்டிலியில் உள்ள NIFTEM (தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு & மேலாண்மை நிறுவனம்) & தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள IIFPT (உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றுக்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

Question 27 of 50
27. Question
இந்தியாவின் முதல் பசுமை சிறப்புப்பொருளாதார மண்டலம் எது?
Correct
விளக்கம்
- CII’இன் இந்திய பசுமை கட்டடக் கவுன்சிலால் (IGBC) தற்போதுள்ள நகரங்களுக்கான IGBC பசுமை நகரங்கள் பிளாட்டினம் மதிப்பீட்டை அடைந்த முதல் பசுமை சிறப்பு பொருளாதார மண்டலமாக கண்ட்லா மாறியுள்ளது.
- கண்ட்லா, ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலமாகும். இது, இந்தியாவின் மிகப்பெரிய பல தயாரிப்பு செயல்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலமாக கருதப்படுகிறது. இது, குஜராத்தின் மேற்கு கடற்கரையில் கட்ச் வளைகுடாவில் கண்ட்லா துறைமுகத்திலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Question 28 of 50
28. Question
UNESCO’இன் ‘உலக பாரம்பரிய இடமாக’ அறிவிக்கப்பட்டுள்ள இராமப்பா கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
- ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) சமீபத்தில் தெலுங்கானாவின் பாலாம்பேட்டையில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராமப்பா கோவிலுக்கு ‘உலக பாரம்பரிய இடம்’ என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தக் கோவில், 1213ஆம் ஆண்டில் காகத்திய வம்சத்தின் ரீசர்லா ருத்ராவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. உலக பாரம்பரியக் குழுவில் உள்ள 17 நாடுகள் ஒருமனதாக இதற்கு ஆதரவு தெரிவித்தன.

Question 29 of 50
29. Question
கேரள கால்நடை மருத்துவர் ஒருவர் அண்மையில் எதிலிருந்து பயோடீசலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமையைப் பெற்றார்?
Correct
விளக்கம்
- கால்நடை மருத்துவரிலிருந்து ஒரு கண்டுபிடிப்பாளராக மாறிய ஜான் ஆபிரகாம், வெட்டப்பட்ட கோழிகளின் கழிவுகளிலிருந்து பயோடீசலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமையைப்பெற்றுள்ளார். இந்தப் பயோடீசல், டீசலின் தற்போதைய விலையின் 40 சதவீதத்தில் லிட்டருக்கு 38 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இது காற்று மாசுபாட்டை பாதியாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய காப்புரிமை அலுவலகம், ‘கோழி எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசலை’ கண்டுபிடித்ததற்காக காப்புரிமையை வழங்கியுள்ளது.

Question 30 of 50
30. Question
எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த மக்கள், 2019-20’இல், அதிக அளவு மீன் உணவை உட்கொண்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- இந்தியாவில் மீன்நுகர்வு குறித்து மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2019-20’இல் லட்சத்தீவைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 105.6 கிலோ மீனைச் சாப்பிட்டுள்ளனர். எனில் அவர்கள் நாளொன்றுக்கு 300 கிராம் மீன் சாப்பிடுகின்றனர். அதே வேளையில் ஹரியானா மக்கள் ஓராண்டுக்கே இவ்வளவுதான் உண்கிறார்கள்.
- தேசிய சராசரி ஆண்டுக்கு சுமார் 6.46 கிலோவாக உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 59 கிலோ மீனைச் உண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 25.45 கிலோவுடன் திரிபுரா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில், நாட்டில் பிடிபட்ட மீன்களின் அளவு 141.64 லட்சம் டன் ஆகும்; அதில் 30% ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

Question 31 of 50
31. Question
சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற 13 வயது மோமிஜி நிஷியா சார்ந்த விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். ஆடவர் போட்டியிலும் ஜப்பானிய வீரர் யூடோ ஓரிகோம் இந்த விளையாட்டின் முதல் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 13 வயதான பிரேசிலியர் ரைஸ்ஸா லீல் இரண்டாவது இடத்தையும், ஜப்பானின் புனா நகாயாமா வெண்கலமும் வென்றனர்

Question 32 of 50
32. Question
‘ஆபரேஷன் விஜய்’ என்பது எந்த நாட்டிற்கு எதிராக இந்தியா நடத்திய ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்?
Correct
விளக்கம்
- பொதுவாக கார்கில் போர் என்றழைக்கப்படுகிற ‘ஆபரேஷன் விஜய்’, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். அது, 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26ஆம் தேதி விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. அது போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறிக்கிறது.

Question 33 of 50
33. Question
‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச் சவாலுடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நாடு முழுவதும் மிதிவண்டி சார்ந்த முன்னெடுப்புகளை உருவாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கடந்த 2020 ஆம் ஆண்டில், ‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச்’ என்ற சவாலை அறிமுகம் செய்தது. சமீபத்தில், நாட்டின் 11 நகரங்களுக்கு ‘India’s Top 11 Cycling Pioneers’ என்ற பட்டத்தை அவ்வமைச்சகம் வழங்கியது. அத்துடன் முதல் பருவத்தின் அடுத்த கட்டமும் தொடங்கியுள்ளது. இந்த 11 நகரங்களும் தங்களின் முயற்சிகளுக்காக தலா `1 கோடி பரிசினைப் பெறும்.

Question 34 of 50
34. Question
CSR நிதியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள்மூலம் இலவச COVID-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ள முதல் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தனியார் மருத்துவமனைகளில் இலவச COVID தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியங்கள் நிதியளிக்கின்றன.
- இத்திட்டத்தின்கீழ், 130 தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு இலவச COVID தடுப்பூசிகளை வழங்கவுள்ளன. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது; மீதமுள்ள 25% தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. அதில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.

Question 35 of 50
35. Question
COVID-19 நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- “COVID BEEP” என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டு, கம்பியில்லா உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பாகும். இதனை COVID-19 நோயாளிகளுக்காக, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிட் & அணுசக்தித் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஐதராபாத்தின் ESIC மருத்துவக்கல்லூரி உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பை பெரிய அளவில் பயன்படுத்துவதற்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் திட்டமொன்று சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Question 36 of 50
36. Question
மருத்துவக்கல்லூரி சேர்க்கைகுறித்து, “அகில இந்திய ஒதுக்கீடு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- 1986ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ், “அகில இந்திய ஒதுக்கீடு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேறொரு மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க விழையும் பிற மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு, இருப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% UG இடங்களும் 50% PG இடங்களும் உள்ளன. சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவச் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இடஒதுக்கீடும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடும் அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2021-22 முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

Question 37 of 50
37. Question
இந்தியாவின் எத்தனை புலிகள் காப்பகங்கள், உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன?
Correct
விளக்கம்
- உலக புலிகள் நாளையொட்டி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரான பூபேந்திர யாதவ் இந்தியாவின் 14 புலிகள் காப்பகங்கள் உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
- அஸ்ஸாமில் உள்ள மானஸ், காசிரங்கா மற்றும் ஓராங்; மத்திய பிரதேசத்தின் சாத்புரா, கன்ஹா மற்றும் பன்னா; மகாராஷ்டிராவின் பெஞ்ச்; பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகம்; உத்தரபிரதேசத்தின் துத்வா; மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள்; கேரளத்தின் பரம்பிக்குளம்; கர்நாடகத்தின் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை மற்றும் ஆனைமலை ஆகியன அந்த 14 அங்கீகரிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் ஆகும்.
- CA|TS என்பது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை நிர்வகிக்க, சிறந்த நடைமுறை மற்றும் தரங்களை நிறுவும் அளவுருக்களின் தொகுப்பாகும். இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். CA|TS 2013’இல் தொடங்கப்பட்டது. இது புலிகள் & காப்புப்பகுதி நிபுணர்களால் உருவாக்கப்பட்டதாகும். இது 2022’க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான உலகளாவிய குறிக்கோளான T*2’இன் ஒரு முக்கியப்பகுதியாகும். புலிகளுக்கான பாதுகாப்பான இடத்தை உறுதி செய்வதே CA|TS’இன் நீண்டகால இலக்காகும்.

Question 38 of 50
38. Question
நடப்பாண்டுக்கான (2021) மகாராஷ்டிர பூஷன் விருதினை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மகாராஷ்டிர பூஷன் தேர்வுக்குழு, ஆஷா போஸ்லேவை மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருது – 2021’க்கு தேர்வுசெய்துள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார விவகார அமைச்சர் அமித் தேஷ்முக் இதனை அறிவித்தார். மகாராஷ்டிர பூஷன் என்பது மகாராஷ்டிராவின் மிகவுயர்ந்த குடிமக்கள் விருதாகும்.
- இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், சமூகப்பணி, பத்திரிகை & பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனை புரிவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்படுகின்ற இவ்விருது, முதன்முதலில் கடந்த 1996’இல் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் நபர், புருஷோத்தம் இலட்சுமண் தேஷ்பாண்டே ஆவார். மகாராஷ்டிர பூஷன் விருது வென்றோருக்கு `10 இலட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Question 39 of 50
39. Question
“அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்புக்காக CBSE மற்றும் கல்வி அமைச்சகத்துடன் ஒத்துழைத்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இன்டெல், CBSE மற்றும் கல்வியமைச்சகம் ஆகியவை 2021 ஜூலை.29 அன்று “அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்பைத் தொடங்குவதாக அறிவித்தன. இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படை புரிதலை உருவாக்குவதாகும். அனைவருக்கும் AI என்பது 4 மணி நேர, சுயகற்றல் திட்டமாகும்.

Question 40 of 50
40. Question
‘சதுப்புநில சுற்றுச்சூழலமைப்பைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ‘சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச நாளானது, 2015ஆம் ஆண்டில், UNESCO’இன் பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. UNESCO ஆனது ஆண்டுதோறும் ஜூலை.26ஆம் தேதியன்று சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாளைக் கொண்டாடுகிறது.
- இது சதுப்புநில அமைப்புகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றின் நிலைத்த மேலாண்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. UNESCO’இன் கூற்றுப்படி, உலகளாவிய வனப்பகுதியின் ஒட்டுமொத்த இழப்புகளைவிட 3-5 மடங்கு வேகத்தில் சதுப்புநிலங்களை நாம் இழந்து வருகிறோம். உட்கட்டமைப்பு மேம்பாடு, நகரமயமாக்கல் மற்றும் உழவு நிலமாக மாற்றுதல் ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.

Question 41 of 50
41. Question
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது பின்வரும் எந்த மாநிலத்தில் வடகிழக்கின் முதல் சிறப்பு மையத்தை அமைக்க உள்ளது?
Correct
விளக்கம்
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகமானது அருணாசல பிரதேசத்தின் பாபம் பரே மாவட்டத்தில் உள்ள கிமினில், வடகிழக்கின் முதல் சிறப்பு மையத்தை நிறுவவுகிறது. உயிரியல் வளங்கள் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான சிறப்பு மையமான இதனை உயிரித்தொழினுட்பத்துறை அங்கீகரித்துள்ளது. இதன் புதிய கட்டடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு கட்டுமானம் ஆகியவை `50 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

Question 42 of 50
42. Question
வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை அமைக்கும் திட்டத்தை (BOLD) செயல்படுத்துகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பாலைவனமாவதைத் தடுக்கவும் மற்றும் ஊரக பொருளாதாரத்துக்கு உதவவும் ஜைசல்மரில் உள்ள தனோத் கிராமத்தில், மூங்கில் சோலை திட்டத்தை (Bamboo Oasis on Lands in Drought) காதி கிராம தொழிற்புற ஆணையம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கியது. இந்தத் திட்டமானது நிலம் பாலையாவதை குறைப்பதோடு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பன்னோக்கு ஊரக தொழிற்துறைக்கும் உதவியாக இருக்கும். இந்த மூங்கில் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Question 43 of 50
43. Question
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் அமைந்து உள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) ஏழு லித்தியம் ஆய்வுத்திட்டங்களை எடுத்துள்ளது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
- அணுவாற்றல் துறையின்கீழ் வரும் ஆய்வு & ஆராய்ச்சிக்கான அணு கனிமங்கள் இயக்குநரகம் (AMDER) கர்நாடகா மற்றும் இராஜஸ்தானில் லித்தியம் ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு திட்டங்களின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது. `18,100 கோடி மதிப்பிலான இந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமானது சமீபத்தில் இந்தியாவில் மின்சார வாகன போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக லித்தியம் அயன் மின்கலங்களை உருவாக்குவதாக அறிவித்தது.

Question 44 of 50
44. Question
ஹரப்ப நகரமான ‘தோலாவிரா’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மேற்கு குஜராத் மாநிலத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள ஹரப்ப நகரமான ‘தோலவிரா’, UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியாவின் 40ஆவது தளமாக இது மாறியுள்ளது. இத்தளம், 1968ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நீர் மேலாண்மை, சிறப்பு வாய்ந்த புதை குழிகள்போன்ற தனித்துவமான பண்புகளுக்கு அது பெயர்பெற்றது.

Question 45 of 50
45. Question
உலக பொருளாதார கண்ணோட்டம்’ என்னுமோர் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியமானது “Fault Lines widen in the Global Recovery” என்ற தலைப்பில் 2021 ஜூலை மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்டத்தின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக பொருளாதாரமானது 2021’இல் 6.0 சதவீதமும், 2022’ இல் 4.9 சதவீதமும் வளரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 2021-22’க்கு ஆன இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை, 12.5 சதவீதத்திலிருந்து 9.5% ஆக பன்னாட்டுச் செலவாணி நிதியம் குறைத்துள்ளது.

Question 46 of 50
46. Question
C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தான ‘Ravidasvir’ஐ பதிவுசெய்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தை மலேசியா பதிவுசெய்துள்ளது. இது உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு, அணுகக்கூடிய சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது. ‘Ravidasvir’ என்ற மருந்து தற்போதுள்ள ‘Sofosbuvir’உடன் பயன்படுத்த ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய மருந்து, மலேசிய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, எகிப்திய மருந்து உற்பத்தியாளரான பார்கோவுடன் இணைந்து புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான முன்னெடுப்பால் (ஜெனீவாவை சார்ந்த இலாபநோக்கமற்ற மருந்து அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.

Question 47 of 50
47. Question
K2 சிகரத்தை அடைந்த இளம்வயது நபரான ஷெரோஸ் காஷிப் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- பாகிஸ்தானைச் சார்ந்த மலையேற்ற வீரரான ஷெரோஸ் காஷிப் (19), உலகின் 2ஆம் உயரமான மலைச்சிகரமானதும் சராசரி கடல்மட்டத்தில் இருந்து 8,611 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதுமான K2 சிகரத்தை அடைந்த மிகவும் இளம்வயது நபராக மாறியுள்ளார். சமீபத்தில் 2021 மே மாதத்தில், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பாகிஸ்தானிலிருந்து உலகின் மிக உயரமான சிகரத்தை எட்டிய இளம்வயது நபராக அவர் ஆனார்.

Question 48 of 50
48. Question
“அனைவருக்கும் நல்லுணவு – Good Food for All” போட்டியை நடத்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- நலமான & நிலைத்த உணவுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக மாறுபட்ட மற்றும் தாக்கம் நிறைந்த தீர்வுகளை வழங்கும் ‘சிறந்த சிறு வணிகங்களை’ தேடும் நோக்கில், “அனைவருக்கும் நல்லுணவு” என்ற போட்டியை ஐநா அவை நடத்தியது.
- இப்போட்டியில், இந்தியாவைச்சார்ந்த மூன்று நிறுவனங்கள் – சமையல் ரூட்ஸ், ஊர்ஜா டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் இந்தியா மற்றும் தாரு நேச்சுரல்ஸ் ஆகியவை “சிறந்த சிறு வணிகங்களுக்கான” வெற்றியாளர்களுள் ஒன்றாக இடம்பெற்றன.

Question 49 of 50
49. Question
நீரிடி & திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிஷ்த்வார் மாவட்டம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான கிஷ்த்வார் மாவட்டம் நீரிடி மற்றும் கடுமையான வெள்ளத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. அம் மாநிலத்தின் பேரிடர் மீட்புப்படை இதற்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மலைப்பகுதி மற்றும் கடினமான நிலப்பரப்பின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு காணப்பட்டது.

Question 50 of 50
50. Question
ஐநா அவையால், “பன்னாட்டு நட்பு நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2011’இல், ஐநா பொது அவையானது ஜூலை.30ஆம் தேதியை சர்வதேச நட்பு நாளென அறிவித்தது. இந்நாள் பல்வேறு கலாச்சாரங்கள், நாடுகள் மற்றும் மதங்களின் மக்களிடையே நட்பு பிணைப்பை உருவாக்கி உலக அமைதியை அடைய உதவும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை என்பது கடந்த 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பது, சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் பல்வேறு நாடுகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படுவது போன்றவை ஐநா அமைப்பின் முக்கிய நோக்கமாகும். தற்போது, 193 நாடுகள் ஐநா அவையின் உறுப்பினர்களாக உள்ளன.

Leaderboard: August 1st Week 2021 Current Affairs Online Test Tamil