இனப்பெருக்க நலன் Online Test 12th Science Questions in Tamil

Quiz-summary
0 of 92 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 92 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- Answered
- Review
-
Question 1 of 92
1. Question
1)கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) அமைப்பு மற்றும் செயல் ரீதியாக இயல்பாக செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளை பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தை குறிப்பதே இனப்பெருக்க நலன் எனப்படும்.
ⅱ) ஆரோக்கியம் குறைந்த மக்கள் உடல்நலம் மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நன்முறையில் பாதுகாத்து சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாக தருகின்றனர்.
Correct
விளக்கம்: அமைப்பு மற்றும் செயல் ரீதியாக இயல்பாக செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளை பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தை குறிப்பதே இனப்பெருக்க நலன் எனப்படும். ஆரோக்கியமான மக்கள் உடல்நலம் மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நன்முறையில் பாதுகாத்து சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாக தருகின்றனர்.
எனவே உடல் நலம் என்பது சமூகம் சார்ந்த பிரச்சனை ஆகும்.
Incorrect

Question 2 of 92
2. Question
2) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இனப்பெருக்க மண்டலம் நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படாத ஒரு கூட்டமைப்பாகும்.
ⅱ) தொற்று நோய்கள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும்.
Correct
விளக்கம்: இனப்பெருக்க மண்டலம் நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கூட்டமைப்பாகும். எனவே தொற்று நோய்கள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும்.

Question 3 of 92
3. Question
3) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது/ எவை?
ⅰ) உலக அளவில் தினமும் சுமார் 800 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான தடுக்கக்கூடிய காரணங்களால் பாதிப்புற்று இறக்கின்றனர்.
ⅱ) இதில் 50 சதவீதம் பெண்கள் இந்தியர்கள் ஆவர்.
ⅲ) இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பேரில் 44 ஆகும். a) ⅰ), ⅱ), ⅲ)
Correct
விளக்கம்: உலக அளவில் தினமும் சுமார் 800 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான தடுக்கக்கூடிய காரணங்களால் பாதிப்புற்று இறக்கின்றனர். இதில் 20 சதவீதம் பெண்கள் இந்தியர்கள் ஆவர். அதேபோல் இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பேரில் 44 ஆகும். இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருந்தாலும் தாய் இறப்பு வீதம் பிற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகவே உள்ளது.

Question 4 of 92
4. Question
4) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) குடும்ப நலதிட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும்.
ⅱ) 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது.
ⅲ) இத்திட்டம் “ இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு “ என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள் :
குடும்ப நலதிட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும். 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் “ இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு “ என்று அழைக்கப்படுகிறது.

Question 5 of 92
5. Question
5) கீழ்கண்டவற்றுள் இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தேர்ந்தெடு.
ⅰ) உடல் நலம் மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
ⅱ) விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் தொடர்பான தகவல்களை தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வருதல்.
ⅲ) திருமண வயது அல்லாதவருக்கு குடும்ப கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் பற்றி அறிவுறுத்துதல்.
Correct
விளக்கம்:
* உடல் நலம் மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ உதவி அளித்தல்.
* விடலைப் பருவம் மற்றும் விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் தொடர்பான தகவல்களை தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வருதல்.
* தம்பதியர் மற்றும் திருமண வயதினருக்கு குடும்ப கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் பற்றி அறிவுறுத்துதல்.

Question 6 of 92
6. Question
6) இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் அல்லாதவற்றைத் தேர்ந்தெடு.
ⅰ) பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அளவிடுதல்
ⅱ) தாய் சேய் பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
Correct
விளக்கம்: * கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, மகப்பேற்றுக்குப் பிந்தைய தாய் சேய் பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* அரசு மற்றும் அரசு சாரா முகவாண்மைகளுக்கு ஆதரவளித்து இனப்பெருக்கம் சார்ந்த புதிய முறைகளை கண்டறிந்து நடைமுறையில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த ஊக்கம் அளித்தல்.

Question 7 of 92
7. Question
7) இனப்பெருக்க மற்றும் குழந்தை நல பாதுகாப்பு திட்டம் கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
ⅰ) குழந்தைகள் தடுப்பூசி திட்டம்
ⅱ) கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குதல்
ⅲ) ஜனனி சுரக்க்ஷா யோஜனா
Correct
விளக்கம்: மாபெரும் குழந்தைகள் தடுப்பூசி திட்டம், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குதல், ஜனனி சுரக்க்ஷா யோஜனா, ஜனனி சிசு சுரக்க்ஷா காரியகரம் ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய், வளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான ஒருங்கிணைந்த ஆரோக்கிய அணுகுமுறை, பிரதமரின் சுரக்ஷிட் மட்ரிட்வா அபியான் போன்றவை இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் திட்டங்களாகும்.

Question 8 of 92
8. Question
8) பனிக்குட துளைப்பு தொடர்பான கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) அம்னியொசெண்டேசிஸ் எனப்படும் பனிக்குட துளைப்பு குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.
ⅱ) இத்தொழில்நுட்பம் மூலம் வளர் கருவின் குரோமோசோம் குறைபாடு களை கண்டறியலாம்.
ⅲ) இத்தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி வளர் கருவின் மூளை வளர்ச்சி கண்டறியப்படுகிறது.
Correct
விளக்கம்: பனிக்குட துளைப்பு: (அம்னியொசெண்டேசிஸ்) மற்றும் அதன் சட்டபூர்வமான தடை :
சிறு குடும்ப விதிகள் மற்றும் குடும்பத்தில் ஆண் குழந்தையை பெற்று கொள்ளும் விருப்பம் போன்ற காரணங்களால் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் குறைந்து வருகிறது. அம்னியொசெண்டேசிஸ் எனப்படும் பனிக்குட துளைப்பு குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் வளர் கருவின் குரோமோசோம் குறைபாடு களை கண்டறியலாம். ஆனால் இத்தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி வளர் கருவின் பால் தன்மை கண்டறியப்படுகிறது.

Question 9 of 92
9. Question
9) கூற்று: அம்னியொசெண்டேசிஸ் தொழில் நுட்பத்திற்கு சட்டபூர்வமான தடை அவசியமாகிறது.
காரணம்: குழந்தையின் பால் தெரிந்து விட்ட பிறகு பெண் கருக்கொலை செய்ய வாய்ப்பு இல்லை.
Correct
விளக்கம்: குழந்தையின் பால் தெரிந்து விட்ட பிறகு பெண் கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.எனவே தொழில் நுட்பத்திற்கு சட்டபூர்வமான தடை அவசியமாகிறது.

Question 10 of 92
10. Question
10) பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் தேர்ந்தெடு.
ⅰ) மக்கள் தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விகிதம் பாலின விகிதம் எனப்படும்.
ⅱ) நம் நாட்டில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து 939 பெண்கள் என அதிகரித்துள்ளது.
Correct
விளக்கம்: பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை போன்றவை சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்:
மக்கள் தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விகிதம் பாலின விகிதம் எனப்படும். நம் இந்திய நாட்டில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து 919 பெண்கள் என குறைந்துள்ளது. இந்த விகிதத்தை சரி செய்ய மன நிலையிலும் மனப்பான்மையும் மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பாக இளைஞர்களிடம் இம் மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கைஅவசியமாகும்.

Question 11 of 92
11. Question
11) கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) நம் சமுதாயத்தில் பாலின பாகுபாடு நிலவுவதை பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை வெளிப்படையாக தெரிவிக்கின்றன.
ⅱ) தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவை கருக்கலைப்பு செய்வது பெண் கருக்கொலை எனப்படும்.
ⅲ) இவ்வாறு தேர்ந்தெடுத்து பெண் கருவை கருக்கலைப்பு செய்வதன் விளைவாக பாலின விகித சம நிலையில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
Correct
விளக்கம்: நம் சமுதாயத்தில் பாலின பாகுபாடு நிலவுவதை பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை வெளிப்படையாக தெரிவிக்கின்றன.
தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவை கருக்கலைப்பு செய்வது பெண் கருக்கொலை எனப்படும். பிறந்தபின் பெண் பச்சிளம் குழந்தைகளை கொல்வது பெண் சிசுக்கொலை எனப்படும். இவ்வாறு தேர்ந்தெடுத்து பெண் கருவை கருக்கலைப்பு செய்வதன் விளைவாகபாலின விகித சம நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Question 12 of 92
12. Question
12)கூற்று: UNDP’s G2 எனப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பாலின சமமின்மை குறியீடு (2018) பட்டியலிலுள்ள 177 நாடுகளில் நம் நாடு 135 ஆவது இடத்தில் உள்ளது
காரணம்: ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்பு குறைவாக உள்ளது.
Correct
விளக்கம்: ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்பு குறைவாக இருப்பதால்UNDP’s G2 எனப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பாலின சமமின்மை குறியீடு (2018) பட்டியலிலுள்ள 177 நாடுகளில் நம் நாடு 135 ஆவது இடத்தில் உள்ளது.

Question 13 of 92
13. Question
13) பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தேர்ந்தெடு.
ⅰ) பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில் குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது ⅱ) சிறந்த உணவு ஊட்டம்,கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றை பெண்களுக்கு அளிப்பதன் மூலம் பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Correct
விளக்கம் : பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையை தடுக்கும் வகையில் குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்ப தடைச்சட்டம் 1994 போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி பிறப்புக்கு முன் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தேர்ந்தெடுத்துகருக்கலைப்பு செய்யும் தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுள்ளது.சிறந்த உணவு ஊட்டம்,கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றை பெண்களுக்கு அளிப்பதன் மூலம் பாலின விகித வேறுபாடு மற்றும் பெண் சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Question 14 of 92
14. Question
14) யாருடைய பரிந்துரைகளின் படி ஆண் பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன?
Correct
விளக்கம் : POSCO சட்டம்( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை தடுத்தல்), பணிபுரியும் இடங்களில் பாலியல் தாக்குதல் விதி( தவிர்த்தல், தடுத்தல் மற்றும் நிவர்த்தி) மற்றும் நீதியரசர் வர்மா குழுவின் பரிந்துரைகளின்படி குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் ஆகியவை ஆண் பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதாகும்.

Question 15 of 92
15. Question
15) மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
ⅰ) மருத்துவ வசதிகளின் மேம்பாடு மற்றும் வளம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித வாழ்நாள் உயர்ந்துள்ளது.
ⅱ) ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் இந்திய மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டில் சீனாவை விஞ்சி விடும் என கூறப்பட்டுள்ளது
ⅲ) மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பு கட்டுப்பாடு மட்டுமே தீர்வாக அமையாது.
Correct
விளக்கம் :மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு:
மருத்துவ வசதிகளின் மேம்பாடு மற்றும் வளம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித வாழ்நாள் உயர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் இந்திய மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டில் சீனாவை விஞ்சி விடும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பு கட்டுப்பாடு மட்டுமே தீர்வாகும்.

Question 16 of 92
16. Question
16) கீழ்க்கண்டவற்றுள் மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தேர்ந்தெடு.
ⅰ) பல்வேறு கருத்தடை முறைகளை பயன்படுத்தி குடும்பத்தை சிறியதாக அமைத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
ⅱ) துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலம் மக்கள் தொகை பெருக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ⅲ) திருமண வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என உயர்த்தியது மற்றும் சிறு குடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள் அளிப்பது ஆகியவை மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகும்.
Correct
விளக்கம் : பல்வேறு கருத்தடை முறைகளை பயன்படுத்தி குடும்பத்தை சிறியதாக அமைத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். அரசு ஊடகங்களில் தரும் விளம்பரங்களும், சுவரொட்டிகள், “ நாம் இருவர் நமக்கு இருவர்”, “ நாம் இருவர் நமக்கு ஒருவர்” போன்ற முழக்கங்களை கொண்ட துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலம் மக்கள் தொகை பெருக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நமது நாட்டில் சட்டப்படியான திருமண வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என உயர்த்தியது மற்றும் சிறு குடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள் அளிப்பது ஆகியவை மக்கள்தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகும்.

Question 17 of 92
17. Question
17) சிறந்த கருத்தடை அமைப்பின் பண்பு
களைத் தேர்ந்தெடு.
ⅰ) பயனர் நட்பு
ⅱ) எளிதில் கிடைத்தல்
ⅲ) குறைந்த பட்ச பக்கவிளைவு
ⅳ) பாலுணர்வு உந்தலை தடை செய்யாமை
Correct
விளக்கம்:
கருத்தடை முறைகள்:
கருத்தடை முறைகளை தன்னிச்சை உடன் பயன்படுத்தி கருவுறுதலையோ அல்லது கருப்பையில் கரு பதித்தலையோ தடுத்தல் பொதுவாக குடும்பகட்டுபாடு எனப்படும். பயனர் நட்பு, எளிதில் கிடைத்தல், குறைந்த பட்ச பக்கவிளைவு மற்றும் பாலுணர்வு உந்தலை தடை செய்யாமை ஆகியவை ஒரு சிறந்த கருத்தடை அமைப்பின் பண்புகளாகும்.

Question 18 of 92
18. Question
18) கீழ்க்கண்டவற்றுள் தற்காலிக கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடு.
ⅰ) ஹார்மோன் தடுப்பு முறை
ⅱ) வேதிப்பொருள் பயன்பாட்டு முறை
ⅲ) கருவிகள் பயன்பாட்டு முறை
ⅳ) விலகல் முறை
Correct
விளக்கம்: தற்காலிக முறை, நிரந்தர முறை என கருத்தடை முறைகள் இருவகைப்படும். இயற்கை கருத்தடை முறை, வேதிப்பொருள் பயன்பாட்டு முறை, கருவிகள் பயன்பாட்டு முறை மற்றும் ஹார்மோன் தடுப்பு முறை போன்றன தற்காலிக முறையில் அடங்கும்.

Question 19 of 92
19. Question
19) கீழ்க்கண்டவற்றுள் இயற்கை கருத்தடை முறைகளைத் தேர்ந்தெடு.
ⅰ) பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை ⅱ) சீர் இயக்கமுறை
ⅲ) கருவிகள் பயன்பாட்டு முறை
ⅳ) விலகல் முறை
Correct
விளக்கம்: 1.இயற்கை கருத்தடை முறை:இம்முறையில் விந்து செல்களும் அண்ட செல்லும் சந்திப்பது தடுக்கப்படுகிறது. சீர் இயக்கமுறை ( பாதுகாப்பு காலம் ), விலகல் முறை, தொடர் தவிர்ப்பு மற்றும் பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை ஆகியன இயற்கை கருத்தடை முறைகள் ஆகும்.

Question 20 of 92
20. Question
20)சீர் இயக்கமுறை/ கால இடைவெளி முறை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் வாக்கில் அண்ட செல் வெளியேற்றம் நடைபெறும்.
ⅱ) வெளியேறிய அண்ட செல் ஏறத்தாழ இரண்டு நாட்கள் உயிருடன் இருக்கும்.
ⅲ) விந்தணுக்கள், பெண்ணின் இனப்பாதையில் சுமார் 24 மணி நேரம் உயிருடன் இருக்கும்.
Correct
விளக்கம் : அ) சீர் இயக்கமுறை/ கால இடைவெளி முறை( periodic abstinence rhythm method):மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் வாக்கில் அண்ட செல் வெளியேற்றம் நடைபெறும்.வெளியேறிய அண்ட செல் ஏறத்தாழ இரண்டு நாட்கள் உயிருடன் இருக்கும். விந்தணுக்கள், பெண்ணின் இனப்பாதையில் சுமார் 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த காலத்தில் கலவியை தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தலை தவிர்க்கலாம்.

Question 21 of 92
21. Question
21) பாலுணர்வு தொடர் தவிர்ப்பு முறை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இது மிகவும் எளிய நம்பகமான முறையாகும்.
ⅱ) கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது.
ⅲ) இம்முறையில் விந்தணுக்கள் கலவிக் கால்வாயை அடையாதபடி ஆண்கள் விந்து திரவ வெளியேற்றத்திற்கு முன் விலகிக் கொள்வர்.
Correct
விளக்கம் : ஆ) பாலுணர்வு தொடர் தவிர்ப்பு முறை (continuous abstinence ): இது மிகவும் எளிய நம்பகமான முறையாகும். கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பதன் மூலம் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது.
இ) விலகல் முறை கருத்தடை:
பழமையான இம்முறையில் விந்தணுக்கள் கலவிக் கால்வாயை அடையாதபடி ஆண்கள் விந்து திரவ வெளியேற்றத்திற்கு முன் விலகிக் கொள்வர்.

Question 22 of 92
22. Question
22) பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) பொதுவாக பெண்களில் பிரசவத்திற்கு பின் 10 முதல் 12 வாரங்களில் மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்குகிறது.
ⅱ) தாய்ப்பால் ஊட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ஆறு மாதங்கள் வரை தாமதம் ஆகலாம்.
ⅲ) இது ஒரு இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறையாகும்.
Correct
விளக்கம் : பாலூட்டும் கால மாதவிடாய் இன்மை: பொதுவாக பெண்களில் பிரசவத்திற்கு பின் 6 முதல் 8 வாரங்களில் மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்குகிறது. எனினும் தாய்ப்பால் ஊட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ஆறு மாதங்கள் வரை தாமதம் ஆகலாம். இந்த தாமத நிலைக்கு “ பாலூட்டும் கால மாதவிடாயின்மை” என்று பெயர். இது ஒரு இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறையாகும்.

Question 23 of 92
23. Question
23) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) குழந்தைகள் பால் உறிஞ்சுவதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பால் உற்பத்தி உயர்கின்றது.ⅱ) தாயின் ரத்தத்தில் ப்ரோலாக்டின் அளவு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது.
ⅲ) இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சியும் தடுக்கப்படுகின்றது.
Correct
விளக்கம் : குழந்தைகள் பால் உறிஞ்சுவதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பால் உற்பத்தி உயர்கின்றது. தாயின் ரத்தத்தில் ப்ரோலாக்டின் அளவு அதிகரிப்பதால் ஹைபோதலாமஸ் சுரக்கின்ற ஹார்மோனும் கோனடோட்ரோபின் விடுவிக்கும் ஹார்மோன் உற்பத்தியும் பிட்யூட்டரி சுரக்கின்ற கோனடோட்ரோபின் ஹார்மோன் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சியும் தடுக்கப்படுகின்றது.

Question 24 of 92
24. Question
24) பின்வருவனவற்றுள் வேதிப் பொருள் தடுப்பு முறையில் பயன்படுத்தபடுவனவற்றை தேர்ந்தெடு.
ⅰ) நுரைக்கும் மாத்திரைகள்
ⅱ) உட் கரையும் மாத்திரைகள்
ⅲ) ஜெல்லிகள் மற்றும் களிம்புகள்
Correct
விளக்கம் : தடுப்பு முறை: இம்முறையில் அண்ட செல் மற்றும் விந்துசெல் சந்திப்பு தடுக்கப்படுவதால் கருவுறுதல் நடைபெறுவது இல்லை.
அ ) வேதிப் பொருள் தடுப்பு:
நுரைக்கும் மாத்திரைகள், உட் கரையும் மாத்திரைகள், ஜெல்லிகள் மற்றும் களிம்புகள் ஆகியவை கலவிக் கால்வாயில் விந்தணுக்களை செயல் இழக்கச் செய்யும் சில வேதிப்பொருட்கள் ஆகும்.

Question 25 of 92
25. Question
25) இயக்க முறை தடுப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) கலவிக்கு முன் ஆண்களில் ஆண்குறி மற்றும் பெண்களின் கலவிக் கால்வாய் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றை மூட பயன்படுத்தப்படும் மெல்லிய படல அமைப்பு கருத்தடை உறையாகும்.
ⅱ) இவற்றின் பயன்பாட்டால் கலவியின் போது வெளியேறும் விந்து திரவம் பெண் இனப்பெருக்க பாதையில் நுழைவது தடுக்கப்படுகின்றது.
ⅲ) கருத்தடை உறைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
Correct
விளக்கம் : ஆ) இயக்க முறை தடுப்பு:
கலவிக்கு முன் ஆண்களில் ஆண்குறி மற்றும் பெண்களின் கலவிக் கால்வாய் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றை மூட பயன்படுத்தப்படும் மெல்லிய படல அமைப்பு கருத்தடை உறையாகும்.
இவற்றின் பயன்பாட்டால் கலவியின் போது வெளியேறும் விந்து திரவம் பெண் இனப்பெருக்க பாதையில் நுழைவது தடுக்கப்படுகின்றது. கருத்தடை உறைகள் ஒரு முறை பயன்பாட்டிற்கு மட்டுமே.

Question 26 of 92
26. Question
26)கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) கருத்தடை உறைகளின் பயன்பாடு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது.
ⅱ) பாலி யூரிதேன், ரப்பர், மற்றும் ஆட்டுத்தோல் பொருட்களைக் கொண்டு கருத்தடை உறைகள் தயாரிக்கப்படுகின்றன.
ⅲ) திரைச் சவ்வுகள்,கருப்பை வாய் மூடிகள், மறைப்பு திரைகள் மென்மையான ரப்பர் பொருளால் ஆன மேற்கூறிய பொருட்கள் பெண்களின் கலவிக்கால்வாயில் பொருத்தப் படுவதால் கலவியின்போது விந்து செல்கள் உள்நுழைவது தடுக்கப்படுகின்றது.
Correct
விளக்கம் : கருத்தடை உறைகளின் பயன்பாடு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. பாலி யூரிதேன், ரப்பர், மற்றும் ஆட்டுத்தோல் பொருட்களைக் கொண்டு கருத்தடை உறைகள் தயாரிக்கப்படுகின்றன.
திரைச் சவ்வுகள்,கருப்பை வாய் மூடிகள், மறைப்பு திரைகள் மென்மையான ரப்பர் பொருளால் ஆன மேற்கூறிய பொருட்கள் பெண்களின் கலவிக்கால்வாயில் பொருத்தப் படுவதால் கலவியின்போது விந்து செல்கள் உள்நுழைவது தடுக்கப்படுகின்றது.

Question 27 of 92
27. Question
27) அண்டகத்திலிருந்து அண்ட செல்கள் விடுபடுதலை தடுப்பதுடன் கருப்பைவாய் திரவத்தை கெட்டியாக்கி விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தடுக்கும் முறை எது?
Correct
விளக்கம் : ஹார்மோன் வழி தடுப்பு :
இப்பொருட்கள் அண்டகத்திலிருந்து அண்ட செல்கள் விடுபடுதலை தடுப்பதுடன் கருப்பைவாய் திரவத்தை கெட்டியாக்கி விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தடுக்கின்றது.

Question 28 of 92
28. Question
28) வாய்வழி கருத்தடை மாத்திரைகள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இவ்வகை மாத்திரைகளை பயன்படுத்துவதால் FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அண்ட செல் விடுபடுதல் தவிர்க்கப்படுகின்றது.
ⅱ) பொதுவாக கூட்டு மாத்திரைகள் பலராலும் கருத்தடை மாத்திரைகள் ஆக பயன்படுத்தப்படுகின்றன.
ⅲ) இதில் செயற்கை புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உள்ளன.
Correct
விளக்கம் : வாய்வழி கருத்தடை மாத்திரைகள்:
இவ்வகை மாத்திரைகளை பயன்படுத்துவதால் FSH மற்றும் LH ஹார்மோன்களின் உற்பத்தி தடுக்கப்பட்டு அண்ட செல் விடுபடுதல் தவிர்க்கப்படுகின்றது. பொதுவாக கூட்டு மாத்திரைகள் பலராலும் கருத்தடை மாத்திரைகள் ஆக பயன்படுத்தப்படுகின்றன. இதில் செயற்கை புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உள்ளன.

Question 29 of 92
29. Question
29) கீழ்க்கண்டவற்றுள் கருத்தடை மாத்திரை எது?
Correct
விளக்கம்: லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பான சாஹெலி எனும் கருத்தடை மாத்திரையில் சென்ட்குரோமேன் எனும் ஸ்டீராய்டு அல்லாத பொருள் உள்ளது.

Question 30 of 92
30. Question
30) உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) மருத்துவ நிபுணர்களால் பெண்களின் கலவை கால்வாய் வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருவியாகும்.
ⅱ) இவை தாமிரம் வெளிவிடும் வகை, ஹார்மோன் வெளிவிடும் வகை மற்றும் மருந்தில்லா வகை என பல வகைகளில் கிடைக்கின்றன.
ⅲ) இக்கருவிகள் கருப்பையினுள் விந்து செல்கள் விழுங்கப் படுதலை அதிகரிக்கின்றன.
Correct
விளக்கம் : உள் கருப்பை சாதனங்கள்:
இவை மருத்துவ நிபுணர்களால் பெண்களின் கலவை கால்வாய் வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருவியாகும். இவை தாமிரம் வெளிவிடும் வகை, ஹார்மோன் வெளிவிடும் வகை மற்றும் மருந்தில்லா வகை என பல வகைகளில் கிடைக்கின்றன. இக்கருவிகள் கருப்பையினுள் விந்து செல்கள் விழுங்கப் படுதலை அதிகரிக்கின்றன.

Question 31 of 92
31. Question
31) கர்ப்பத்தைத் தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு சரியான தீர்வாக அமைவது எது?
Correct
விளக்கம்: கர்ப்பத்தைத் தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு உள் கருப்பை சாதனங்கள் சரியான தேர்வாகும். இந்தியாவின் பிரபலமான கருத்தடை முறையான இதன் வெற்றி வீதம் 95% முதல் 99 சதவீதம் ஆகும்.

Question 32 of 92
32. Question
32) தாமிரம் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) தாமிரத்தின் அளவைப் பொறுத்து இவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
ⅱ) CuT – 380A, NovT CuT380Ag., multiload 375 போன்ற கருவிகள் கருப்பைக்குள் வெளியிடும் தனித்த தாமிரம் மற்றும் தாமிர உப்புகள் விந்து இயக்கத்தை தடை செய்கின்றன.
ⅲ) இதில் கருப்பையினுள் 2 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
Correct
விளக்கம் : தாமிரம் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் :
தாமிரத்தின் அளவைப் பொறுத்து இவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. CuT – 380A, NovT CuT380Ag., multiload 375 போன்ற கருவிகள் கருப்பைக்குள் வெளியிடும் தனித்த தாமிரம் மற்றும் தாமிர உப்புகள் விந்து இயக்கத்தை தடை செய்கின்றன. இதில் கருப்பையினுள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

Question 33 of 92
33. Question
33) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) புரோஜஸ்டாசர்ட் மற்றும் LNG 20 என்பன சில ஹார்மோன் வெளியிடும் உள் கருப்பை சாதனங்களாகும்.
ⅱ) இதிலிருந்து வெளிப்படும் ஹார்மோன் கருப்பை வாய் சுரக்கும் கோழைப்பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்துகிறது.
ⅲ) இதனால் விந்து செல்கள் கருப்பை வாயின் உள் நுழைவதை தடை செய்கின்றன.
Correct
விளக்கம் : ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள்:
புரோஜஸ்டாசர்ட் மற்றும் LNG 20 என்பன சில ஹார்மோன் வெளியிடும் உள் கருப்பை சாதனங்களாகும். இதிலிருந்து வெளிப்படும் ஹார்மோன் கருப்பை வாய் சுரக்கும் கோழைப்பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்தி விந்து செல்கள் கருப்பை வாயின் உள் நுழைவதை தடை செய்கின்றன.

Question 34 of 92
34. Question
34) மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இவை துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டு உள்ளன.
ⅱ) லிப்பஸ் வளையம் என்பது இரட்டை எஸ் வடிவ நெகிழிக் கருவியாகும்
Correct
விளக்கம் : மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள்:
இவை நெகிழி அல்லது துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டு உள்ளன. லிப்பஸ் வளையம் என்பது இரட்டை எஸ் வடிவ நெகிழிக் கருவியாகும்.

Question 35 of 92
35. Question
35) மேலும் குழந்தைகள் வேண்டாம் என கருதும் மக்கள் பயன்படுத்தும் முறை எது?
Correct
விளக்கம் : நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் எனப்படுபவை மேலும் குழந்தைகள் வேண்டாம் என கருதும் மக்கள் பயன்படுத்தும் முறைகளாகும்.

Question 36 of 92
36. Question
36) அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறையானது மேலும் கருத்தரிப்பதை விரும்பாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்படும் நிரந்தர கருத்தடை முறையாகும்.
ⅱ) இதன்மூலம் இனச் செல்களின் இயக்கம் மற்றும் கருத்தரித்தல் ஆகியவை தடுக்கப்படுகின்றது.
Correct
விளக்கம் : அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல்: இம்முறையானது மேலும் கருத்தரிப்பதை விரும்பாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்படும் நிரந்தர கருத்தடை முறையாகும். இதன்மூலம் இனச் செல்களின் இயக்கம் மற்றும் கருத்தரித்தல் ஆகியவை தடுக்கப்படுகின்றது.

Question 37 of 92
37. Question
37) கருக்குழல் தடை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இது அறுவை சிகிச்சை மூலம் கருத்தரித்தலை தடுக்கும் முறையாகும். ⅱ) இம்முறையில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் சிறு வெட்டு மூலமாகவோ அல்லது கலவி கால்வாய் வழியாக இரு அண்ட நாளங்களும் வெட்டப்படுகின்றன.
ⅲ) பின்னர் இருவெட்டு முனைகளும் இணைத்து முடிச்சிட்டு கட்டப்படுகின்றன.
Correct
விளக்கம் : கருக்குழல் தடை:
இது அறுவை சிகிச்சை மூலம் கருத்தரித்தலை தடுக்கும் முறையாகும். இம்முறையில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் சிறு வெட்டு மூலமாகவோ அல்லது கலவி கால்வாய் வழியாக இரு அண்ட நாளங்களும் வெட்டப்படுகின்றன. பின்னர் இருவெட்டு முனைகளும் இணைத்து முடிச்சிட்டு கட்டப்படுகின்றன.
இதனால் கருவுறுதல் நிகழ்வதும் கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதும் தடுக்கப்படுகின்றது.

Question 38 of 92
38. Question
38) விந்து குழல் தடை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறை அறுவை சிகிச்சை மூலம் ஆண்களின் இனப்பெருக்கத் திறனை தடுக்கும் முறையாகும்.
ⅱ) இம்முறையில் ஆண்களின் விதைப்பையில் ஏற்படுத்தப்படும் ஒரு சிறு துளை வழியே விந்துக்கள் அகற்றப்படுகின்றன.
ⅲ) வெட்டப்பட்ட பகுதிகளை மீண்டும் இணைத்து முடிச்சிடப்படுகின்றன.
Correct
விளக்கம் : விந்து குழல் தடை :
இம்முறை அறுவை சிகிச்சை மூலம் ஆண்களின் இனப்பெருக்கத் திறனை தடுக்கும் முறையாகும்.இம்முறையில் ஆண்களின் விதைப்பையில் ஏற்படுத்தப்படும் ஒரு சிறு துளை வழியே இரு விந்து நாளங்களும் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட பகுதிகளை மீண்டும் இணைத்து முடிச்சிடப்படுகின்றன. இதனால் சிறுநீர் வடிகுழாயினுள் விந்தணுக்கள் நுழைய முடிவதில்லை. எனவே வெளிப்படும் விந்து திரவத்தில் விந்து செல்கள் காணப்படுவதில்லை.

Question 39 of 92
39. Question
39) மருத்துவ ரீதியான கருக்கலைப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) அறுவை சிகிச்சையோ கருவிகள் உள் நுழைத்தலோ இன்றி விருப்பத்துடனோ அல்லது வேண்டும் என்றோ, கரு வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் மருத்துவமுறை மருத்துவ ரீதியான கருக்கலைப்பு ஆகும்.
ⅱ) கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டமான 12 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.
ⅲ) இதனால் பெண்ணின் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுகிறது.
Correct
விளக்கம் : மருத்துவ ரீதியான கருக்கலைப்பு:
அறுவை சிகிச்சையோ கருவிகள் உள் நுழைத்தலோ இன்றி விருப்பத்துடனோ அல்லது வேண்டும் என்றோ, கரு வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் மருத்துவமுறை மருத்துவ ரீதியான கருக்கலைப்பு ஆகும். கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டமான 12 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும். இதனால் பெண்ணின் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுவது இல்லை. இரண்டாம் மும்மாத கரு வளர்ச்சியின் போது வளர் கரு தாயின் உடல் திசுவில் நன்கு இணைந்துள்ளதால் கருக்கலைப்பு செய்வது அதிக ஆபத்தை விளைவிக்கும். எனவே மருத்துவரீதியான அவசியம் மற்றும் சில சமூக பயன்களையும் கருதி மத்திய அரசு 1971ஆம் ஆண்டு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கியது. இச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் பாலின பாகுபாடு மற்றும் சட்டவிரோதமான பெண் சிசுக்கொலை போன்றவற்றை தடை செய்து சில கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டது.

Question 40 of 92
40. Question
40) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) தகுதியற்ற போலி மருத்துவர்களால் செய்யப்படும் சட்டவிரோதமான கருக்கலைப்பு பாதுகாப்பு அற்றது.
ⅱ) உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
ⅲ) குறிப்பாக முதல் கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வது கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
Correct
விளக்கம் : தகுதியற்ற போலி மருத்துவர்களால் செய்யப்படும் சட்டவிரோதமான கருக்கலைப்பு பாதுகாப்பு அற்றது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக முதல் கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வது கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

Question 41 of 92
41. Question
41) பால்வினை நோய்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) பால்வினை தொற்றுகள் என்பது பால்வினை நோய்கள் இனப்பெருக்க பாதை தொற்று அல்லது வெனிரல் நோய்கள் என்றும் முன்பு அழைக்கப்பட்டது
ⅱ) பால்வினை நோய் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது.
ⅲ) கல்லீரல் புற்றுநோய் நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் பரவுகின்றன.
Correct
விளக்கம் : பால்வினை நோய்கள் :
பால்வினை தொற்றுகள் என்பது பால்வினை நோய்கள் இனப்பெருக்க பாதை தொற்று அல்லது வெனிரல் நோய்கள் என்றும் முன்பு அழைக்கப்பட்டது. பால்வினை நோய் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. கல்லீரல் அழற்சி -B மற்றும் ஹெச்ஐவி தொற்றுகள் பால் உறவினால் மட்டுமன்றி நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் ரத்தம் செலுத்துதல் மற்றும் தொற்று கொண்ட தாயிடமிருந்து சேய்க்கும் பரவுகின்றன. 15 முதல் 24 வயதினருக்கு இத்தகு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Question 42 of 92
42. Question
42) கீழ்க்கண்டவற்றுள் பாக்டீரியா பால் வினைத் தொற்றுகளைத் தேர்ந்தெடு.
ⅰ) வெட்டை நோய்
ⅱ) கிரந்தி
ⅲ) டிரைக்கோ மோனியாசிஸ்
Correct
விளக்கம் : வெட்டை நோய்( கொனேரியா ), கிரந்தி ( சிஃபிலிஸ் ), கான்க்ராய்ட் (மேகப்புண்), கிளாமிடியாசிஸ், லிம்போகிரானுலோமா வெனரியம் என்னும் அரையாப்பு கட்டி போன்றவை பாக்டீரியா பால்வினை தொற்று நோய்களாகும். கல்லீரல் அழற்சி பி பிறப்புறுப்பு அக்கி, பிறப்புறுப்பு மருக்கள், மற்றும் எய்ட்ஸ் போன்றன வைரஸ் பால்வினை தொற்று நோய்களாகும்.

Question 43 of 92
43. Question
43) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) டிரைக்கோ மோனியாசிஸ், ஒரு புரோட்டோசோவா பால்வினை தொற்று ஆகும்.
ⅱ) கேண்டிடியாசிஸ் ஒரு பூஞ்சை தொற்று ஆகும்.
ⅲ) பூஞ்சை, புரோட்டோசோவா, பாக்டீரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பால்வினை தொற்றுகளை உயிர் எதிர்ப்பொருட்கள் மற்றும் பிற மருந்துகளால் குணப்படுத்தலாம்.
Correct
விளக்கம் : டிரைக்கோ மோனியாசிஸ், ஒரு புரோட்டோசோவா பால்வினை தொற்று ஆகும். கேண்டிடியாசிஸ் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். பூஞ்சை, புரோட்டோசோவா, பாக்டீரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பால்வினை தொற்றுகளை உயிர் எதிர்ப்பொருட்கள் மற்றும் பிற மருந்துகளால் குணப்படுத்த லாம்.

Question 44 of 92
44. Question
44) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) வைரஸ்களால் ஏற்படும் பால்வினை தொற்றுக்களை குணப்படுத்த இயலும்.
ⅱ) ரப்பரால் ஆன கருத்தடை உறைகளை பயன்படுத்துவதால் பால்வினை தொற்று பரவும் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம்.
ⅲ) ஆனால் நோய் பரவும் ஆபத்தை முழுமையாக தவிர்க்க இயலாது.
Correct
விளக்கம் : வைரஸ்களால் ஏற்படும் பால்வினை தொற்றுக்களை குணப்படுத்த இயலாது எனினும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ரப்பரால் ஆன கருத்தடை உறைகளை பயன்படுத்துவதால் பால்வினை தொற்று பரவும் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம். ஆனால் நோய் பரவும் ஆபத்தை முழுமையாக தவிர்க்க இயலாது.

Question 45 of 92
45. Question
45) பால்வினை நோய்கள் குறித்த வருமுன் காத்தல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) முன்பின் தெரியாதவர் உடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.
ⅱ) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்.
ⅲ) சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுதல்.
Correct
விளக்கம் : பால்வினை நோய்களை வருமுன் காத்தல்:
அ ) முன்பின் தெரியாதவர் உடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.
ஆ ) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்.
இ ) சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுதல்.

Question 46 of 92
46. Question
46) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) உலக சுகாதார நிறுவனத்தின் 2017 அறிக்கையின்படி உலக அளவில் ஒவ்வொரு நாளும் பால்வினை தொற்றால் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பாதிப்படைகின்றனர்.
ⅱ) 5.1 மில்லியன் எச்ஐவி தொற்று கொண்ட மக்களுடன் உலக அளவில் எச்ஐவி பாதிப்பு அதிகம் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.
Correct
விளக்கம் : உலக சுகாதார நிறுவனத்தின் 2017 அறிக்கையின்படி உலக அளவில் ஒவ்வொரு நாளும் பால்வினை தொற்றால் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பாதிப்படைகின்றனர். 2.1 மில்லியன் எச்ஐவி தொற்று கொண்ட மக்களுடன் உலக அளவில் எச்ஐவி பாதிப்பு அதிகம் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

Question 47 of 92
47. Question
47) கருப்பைவாய் புற்றுநோய் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) பால் வழி பரவும் வைரசான மனித பாப்பிலோமா வைரஸ் கருப்பை வாய் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது.
ⅱ) இதனால் கருப்பை வாய் செல்கள் கருப்பை வாய் பிறழ்வாக்கம் என்னும் இயல்புக்கு மாறான வளர்ச்சியை அடைகிறது.
ⅲ) காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு போன்றன கருப்பை வாய்ப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
Correct
விளக்கம் : கருப்பைவாய் புற்றுநோய் :
பால் வழி பரவும் வைரசான மனித பாப்பிலோமா வைரஸ் கருப்பை வாய் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது. இதனால் கருப்பை வாய் செல்கள் கருப்பை வாய் பிறழ்வாக்கம் என்னும் இயல்புக்கு மாறான வளர்ச்சியை அடைகின்றன.
இடுப்பு வலி, கலவி கால்வாய் திரவ மிகை போக்கு, இயல்புக்கு மாறான ரத்தப்போக்கு போன்றன கருப்பை வாய்ப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

Question 48 of 92
48. Question
48) கீழ்க்கண்டவற்றுள் கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளைத் தேர்ந்தெடு.
ⅰ) பலருடன் பாலியல் தொடர்பு
ⅱ) கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்துதல்
ⅲ) விலகல் முறை
Correct
விளக்கம் : கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் :
- பலருடன் பாலியல் தொடர்பு
- கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாக பயன்படுத்துதல்.

Question 49 of 92
49. Question
49) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) கருப்பை வாய் புற்றுநோயை எச்பிவி ஆய்வு மற்றும் பாப் பூச்சு சோதனை போன்ற கூட்டு சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
ⅱ) எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் போன்ற ஆய்வுகள் மூலம் இப்புற்றுநோயின் நிலைகளை அறியலாம்.
ⅲ) இதனை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வேதி மருந்து சிகிச்சை பயன்படுகிறது.
Correct
விளக்கம் : கருப்பை வாய் புற்றுநோயை எச்பிவி ஆய்வு மற்றும் பாப் பூச்சு சோதனை போன்ற கூட்டு சோதனைகள் மூலம் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் போன்ற ஆய்வுகள் மூலம் இப்புற்றுநோயின் நிலைகளை அறியலாம். இதனை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வேதி மருந்து சிகிச்சை பயன்படுகிறது.

Question 50 of 92
50. Question
50) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கு முன் ஏற்படும் முந்தைய மாற்றங்களை கண்டறியலாம்.
ⅱ) 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ⅲ) தடுப்பூசிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
Correct
விளக்கம் : நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கு முன் ஏற்படும் முந்தைய மாற்றங்களை கண்டறியலாம். எனவே 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

Question 51 of 92
51. Question
51) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) பால் பண்புகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அதாவது 9 முதல் 13 வயது உடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதன் மூலம் முதல் நிலை தடுப்பு தொடங்குகிறது.
ⅱ) வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
ⅲ) சத்தான உணவு, புகையிலை பயன்பாடு, இளம் வயது திருமணம், ஓரிணை இனப்பெருக்க முறை மற்றும் சீரான உடற்பயிற்சி போன்றன மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை குறைக்கலாம்
Correct
விளக்கம் : பால் பண்புகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அதாவது 9 முதல் 13 வயது உடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதன் மூலம் முதல் நிலை தடுப்பு தொடங்குகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சத்தான உணவு, புகையிலை பயன்பாடு தவிர்த்தல், இளம் வயது திருமணத்தை தவிர்த்தல், ஓரிணை இனப்பெருக்க முறை மற்றும் சீரான உடற்பயிற்சி போன்றன மூலம் கருப்பை வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை குறைக்கலாம்.

Question 52 of 92
52. Question
52) TNHSP – தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் அங்கமான தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் பின்வரும் எந்த பரிசோதனைகளை இலவசமாக செய்கின்றது?
ⅰ) கருப்பைவாய் புற்றுநோய்
ⅱ) மார்பக புற்றுநோய்
ⅲ) மூளைப் புற்றுநோய்
Correct
விளக்கம் : TNHSP – தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் அங்கமான தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனைகளை இலவசமாக செய்கின்றன.

Question 53 of 92
53. Question
53) மலட்டுத்தன்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) தடையற்ற பாலின இணை வாழ்விற்கு பிறகும் கருவுற இயலாமை அல்லது குழந்தையை உருவாக்க இயலாமை மலட்டுத் தன்மை எனப்படும் ⅱ) அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான எண்ணிக்கையில் விந்து செல்களை உருவாக்க இயலாமை
ⅲ) ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாத தன்மை மலட்டுதன்மை எனப்படும்
Correct
விளக்கம் :மலட்டுத்தன்மை:
தடையற்ற பாலின இணை வாழ்விற்கு பிறகும் கருவுற இயலாமை அல்லது குழந்தையை உருவாக்க இயலாமை மலட்டுத் தன்மை எனப்படும். அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான எண்ணிக்கையில் விந்து செல்களை உருவாக்க இயலாமை அல்லது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாத தன்மை மலட்டுதன்மை எனப்படும்.

Question 54 of 92
54. Question
54) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்ந்தெடு.
ⅰ) பிட்யூட்டரி சுரப்பி அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் கட்டிகள் உருவாதல்
ⅱ) இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்திக்கு காரணமான மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்
ⅲ) கருப்பை வாய் மற்றும் அண்ட நாளங்களின் குறை வளர்ச்சி
Correct
விளக்கம் : பிட்யூட்டரி சுரப்பி அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் கட்டிகள் உருவாதல், இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்திக்கு காரணமான மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கருப்பை வாய் மற்றும் அண்ட நாளங்களின் குறை வளர்ச்சி, இளவயதில் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

Question 55 of 92
55. Question
55) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) நீண்டகால மன அழுத்தத்தால் உடல் நலத்தின் பல்வேறு கூறுகளில் குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ⅱ) காட்மியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட நச்சுப்பொருட்களை உட்கொள்ளல்.
ⅲ) புகையிலை, தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு
Correct
விளக்கம் : நீண்டகால மன அழுத்தத்தால் உடல் நலத்தின் பல்வேறு கூறுகளில் குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காட்மியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட நச்சுப்பொருட்களை உட்கொள்ளல், புகையிலை, தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு இனச்செல் சுரப்பிகளின் பாதிப்பு மற்றும் அதிக வயது ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணம் ஆகின்றன.

Question 56 of 92
56. Question
56) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்களைத் தேர்ந்தெடு.
ⅰ) இடுப்புக்குழி வீக்க நோய்
ⅱ) கருப்பை தசைநார் கட்டிகள்
ⅲ) கலவிக்கால்வாய் உட்படல வளர்ச்சி
Correct
விளக்கம் : மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்கள் :
இடுப்புக்குழி வீக்க நோய், கருப்பை தசைநார் கட்டிகள், கருப்பை உட்படலம் வளர்ச்சி போன்றவை பெண்களின் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

Question 57 of 92
57. Question
57) கீழ்க்கண்டவற்றுள் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள் அல்லாதவற்றைத் தேர்ந்தெடு.
ⅰ) பெண்களின் உடலில் கொழுப்பு அளவு அதிகரித்தல் அல்லது பசி இன்மை.
ⅱ) உடல் எடை கூடி விடுமோ என்ற அச்சத்தால் உணவு உண்பதில் ஏற்படும் உடல் நலக் கோளாறு.
ⅲ) ஆண்கள் இறுக்கமான உடைகளை அணிவதால் விந்தகத்தின் வெப்பநிலை உயர்ந்து விந்துசெல் உற்பத்தி பாதிக்கப்படுதல்.
Correct
விளக்கம் : பெண்களின் உடலில் கொழுப்பு அளவு குறைதல் அல்லது பசி இன்மை.அதாவது உடல் எடை கூடி விடுமோ என்ற அச்சத்தால் உணவு உண்பதில் ஏற்படும் மன நலக் கோளாறு.
ஆண்கள் இறுக்கமான உடைகளை அணிவதால் விந்தகத்தின் வெப்பநிலை உயர்ந்து விந்துசெல் உற்பத்தி பாதிக்கப்படுதல்.

Question 58 of 92
58. Question
58) பின்வருவனவற்றுள் மலட்டுத் தன்மைக்கான காரணங்களைத் தேர்ந்தெடு.
ⅰ) நன்கு கீழ் இறங்காத விந்தகங்கள் மற்றும் வேரிகோசீல் எனப்படும் விதைப்பை சிறைகளின் வீக்கம்.
ⅱ) பெண்களின் தன் வாழ்க்கை துணைவரின் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பு பொருள் உருவாதல்.
ⅲ) ஆண்களில் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுய தடைகாப்பு விளைவு உருவாதல்.
Correct
விளக்கம் : நன்கு கீழ் இறங்காத விந்தகங்கள் மற்றும் வேரிகோசீல் எனப்படும் விதைப்பை சிறைகளின் வீக்கம்.
பெண்களின் தன் வாழ்க்கை துணைவரின் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்பு பொருள் உருவாதல்.
ஆண்களில் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுய தடைகாப்பு விளைவு உருவாதல்.

Question 59 of 92
59. Question
59) மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” தொடர்பான கீழ்க் கண்டவற்றில் தவறானவற்றைத் தேர்ந்தெடு.
ⅰ) அனைத்து பெண்களும் கருப்பையுடன் பிறக்கின்றனர்.
ⅱ) சிலருக்கு அண்டகங்கள் இருக்காது.
ⅲ) இந்நிலைக்கு “மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” என்று பெயர்.
Correct
விளக்கம் : அனைத்து பெண்களும் அண்டகங்களுடன் பிறக்கின்றனர். ஆனால் சிலருக்கு கருப்பை இருக்காது. இந்நிலைக்கு “மேயர் ரோகிடன்ஸ்கி நோய் குறைபாடு” என்று பெயர்.

Question 60 of 92
60. Question
60) இனப்பெருக்க துணை தொழில்நுட்பங்கள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இன செல்கள் மற்றும் கருமுட்டைகளை உடலுக்கு வெளியில் கையாண்டு கர்ப்பமடைய செய்யும் செயல்முறை தொகுப்பு இனப்பெருக்க துணை தொழில்நுட்பம் எனப்படும்.
ⅱ) இது மலட்டுத் தன்மை உடைய தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
Correct
விளக்கம் : இனப்பெருக்க துணை தொழில்நுட்பங்கள் :
இன செல்கள் மற்றும் கருமுட்டைகளை உடலுக்கு வெளியில் கையாண்டு கர்ப்பமடைய செய்யும் செயல்முறை தொகுப்பு இனப்பெருக்க துணை தொழில்நுட்பம் எனப்படும்.
இது மலட்டுத் தன்மை உடைய தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

Question 61 of 92
61. Question
61) இனப்பெருக்கத் துணை தொழில்நுட்பம் கீழ்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது?
ⅰ) கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல்
ⅱ) உடல் வெளி கருவுறுதல்
ⅲ) அண்ட நாளத்தின் உள் செலுத்துதல்
Correct
விளக்கம் : இத்தொழில் நுட்பத்தில் கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல், உடல் வெளி கருவுறுதல், கருமுட்டையை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல், இனச் செல்களை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல், கரு இடமாற்றம், அண்ட செல் சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல், கரு பதிவுக்கு முன்பே மரபியல் குறைகளை கண்டறிதல், அண்ட செல் மற்றும் விந்து செல்கள் தானம் மற்றும் வாடகைத்தாய்மை ஆகியன அடங்கும்.

Question 62 of 92
62. Question
62) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இச்செயல் முறை குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு செய்யக்கூடிய சிகிச்சை முறையாகும்.
ⅱ) இம்முறையில் கணவர் அல்லது உடல் நலம் மிக்க விந்து கொடையாளர் இடமிருந்து விந்து திரவம் சேகரிக்கப்படுகிறது.
ⅲ) அண்டத்தை தூண்டி அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Correct
விளக்கம் : கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :
இச்செயல் முறை குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு செய்யக்கூடிய சிகிச்சை முறையாகும். இம்முறையில் கணவர் அல்லது உடல் நலம் மிக்க விந்து கொடையாளர் இடமிருந்து விந்து திரவம் சேகரிக்கப்படுகிறது. அண்டத்தை தூண்டி அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்னர் சேகரிக்கப்பட்ட விந்து செல்கள் நுண் குழல் மூலம் கலவி கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படுகின்றன பின்னர் விந்து செல்கள் அண்ட நாளத்தை நோக்கி நீந்திச் சென்று கருவுறுதல் நிகழ்ந்து இயல்பான கர்ப்பம் ஏற்படுகின்றது.

Question 63 of 92
63. Question
63) உடல் வெளிக் கருவுறுதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இத் தொழில்நுட்பத்தில் அண்ட செல்கள் மற்றும் விந்து செல்கள் உடலுக்கு வெளியில் ஆய்வகத்தில் இணைய வைக்கப்படுகின்றன.
ⅱ) இவ்வாறு கருவுற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவுற்ற முட்டைகள் பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படுகின்றன.
ⅲ) மீதம் உள்ள உபரி வளர் கருக்கள் உறைநிலை பதப்படுத்துதல் முறையில் எதிர்காலத் தேவைக்கு பாதுகாக்கப்படுகின்றன.
Correct
விளக்கம் : உடல் வெளிக் கருவுறுதல் அல்லது சோதனைக்குழாய் குழந்தை:
இத் தொழில்நுட்பத்தில் அண்ட செல்கள் மற்றும் விந்து செல்கள் உடலுக்கு வெளியில் ஆய்வகத்தில் இணைய வைக்கப்படுகின்றன.இவ்வாறு கருவுற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவுற்ற முட்டைகள் பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படுகின்றன. அங்கு அவை கருப்பைச் சுவரில் பதிந்து வளர தொடங்குகின்றன. மீதம் உள்ள உபரி வளர் கருக்கள் உறைநிலை பதப்படுத்துதல் முறையில் எதிர்காலத் தேவைக்கு பாதுகாக்கப்படுகின்றன.

Question 64 of 92
64. Question
64) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) தொடக்கத்தில் இனப்பெருக்கத் துணை தொழில்நுட்பமானது வளராத அடைபட்ட மற்றும் பாதிப்படைந்த அண்ட நாளம் கொண்ட பெண்களுக்கு பயனளித்தது.
ⅱ) தற்போது இத்தொழில்நுட்பம் பல்வேறு காரணிகளால் ஏற்படும் மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்ய பயன்படுகின்றது.
Correct
விளக்கம் : விளக்கம் : தொடக்கத்தில் இனப்பெருக்கத் துணை தொழில்நுட்பமானது வளராத அடைபட்ட மற்றும் பாதிப்படைந்த அண்ட நாளம் கொண்ட பெண்களுக்கு பயனளித்தது. தற்போது இத்தொழில்நுட்பம் பல்வேறு காரணிகளால் ஏற்படும் மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்ய பயன்படுகின்றது.

Question 65 of 92
65. Question
65) கீழ்க்கண்டவற்றுள் இனப்பெருக்க துணை தொழில்நுட்ப சுழற்சியின் படிநிலைகளைத் தேர்ந்தெடு.
ⅰ) அண்டகத்தை தூண்டுதல்
ⅱ) அண்ட செல்களை வெளிக்கொணர்தல்
ⅲ) கருவுறச் செய்தல்
Correct
விளக்கம் : அண்டகத்தை தூண்டுதல், அண்ட செல்களை வெளிக்கொணர்தல், கருவுறச் செய்தல், கரு வளர்ப்பு மற்றும் கரு இட மாற்றம் ஆகியன இத்தொழில்நுட்ப சுழற்சியின் அடிப்படை படிநிலைகள் ஆகும்.

Question 66 of 92
66. Question
66) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) hCG ஊசியை உடலில் செலுத்திய 24 முதல் 48 மணி நேரம் கழித்து பொது மயக்கமூட்டல் செய்யப்படுகிறது.
ⅱ) சிறிய அறுவை சிகிச்சை மூலம் மியோலி வழிகாட்டியை பயன்படுத்தி பெண்ணின் அண்டத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது
ⅲ) இம் முட்டை / அண்டம் பிற புற செல்களிலிருந்து பிரிக்கப்படுகின்றது
Correct
விளக்கம் : hCG ஊசியை உடலில் செலுத்திய 34 முதல் 38 மணி நேரம் கழித்து பொது மயக்கமூட்டல் செய்து சிறிய அறுவை சிகிச்சை மூலம் மியோலி வழிகாட்டியை பயன்படுத்தி பெண்ணின் அண்டத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. இம் முட்டை / அண்டம் பிற புற செல்களிலிருந்து பிரிக்கப்படுகின்றது அதேவேளையில் விந்து செல்களும் சிறப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகின்றன. பின்னர் இன செல்கள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன.

Question 67 of 92
67. Question
67) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) ஒரு முட்டையை கருவுறச் செய்ய ஆயிரம் முதல் பத்தாயிரம் நகரும் திறனுடைய விந்தணுக்கள் தேவைப்படுகின்றன.
ⅱ) பின்னர் கருமுட்டையானது செல் புரிதலுக்கு உட்படுத்தப்படுகிறது.
ⅲ)எட்டு செல் நிலைக்கு மேற்பட்ட கருவை கருப்பையினுள் செலுத்தும் முறை “ கரு மாற்று தொழில்நுட்பம் “ எனப்படும்.
Correct
விளக்கம் : ஒரு முட்டையை கருவுறச் செய்ய 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் நகரும் திறனுடைய விந்தணுக்கள் தேவைப்படுகின்றன. பின்னர் கருமுட்டையானது செல் புரிதலுக்கு உட்படுத்தப்பட்டு 8 செல் நிலைக்கு மேற்பட்ட கருவை கருப்பையினுள் செலுத்தும் முறை “ கரு மாற்று தொழில்நுட்பம் “ எனப்படும்.

Question 68 of 92
68. Question
68) கரு உறை நிலை குளிரூட்டும் முறை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) உடல் வெளி கருவுறுதல் நிகழ்வில் தேவைக்கு அதிகமான கருக்கள் உருவானால் உபரி கருக்கள் புறநிலை குளிரூட்டும் முறை மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
ⅱ) தேவையான நேரத்தில் மாற்றி பொருத்தி கருத்தரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை பெறலாம்.
ⅲ) இதனால் மீண்டும் அண்டகத்தை தூண்டி அண்ட செல்களை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.
Correct
விளக்கம் : கரு உறை நிலை குளிரூட்டும் முறை :
உடல் வெளி கருவுறுதல் நிகழ்வில் தேவைக்கு அதிகமான கருக்கள் உருவானால் உபரி கருக்கள் புறநிலை குளிரூட்டும் முறை மூலம் பாதுகாக்கப்படுகின்றன. தேவையான நேரத்தில் மாற்றி பொருத்தி கருத்தரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை பெறலாம். இதனால் மீண்டும் அண்டகத்தை தூண்டி அண்ட செல்களை எடுக்க வேண்டிய தேவை இல்லை.

Question 69 of 92
69. Question
69) கருமுட்டையை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இது உடல் வெளி கருவுறுதல் தொழில்நுட்பம் போன்றது.
ⅱ) இம்முறையில் ஆறு பிளாஸ்டோமியர்களைக் கொண்ட கருமுட்டை லேப்ராஸ்கோபி முறையில் அண்ட நாளத்தினுள் செலுத்தப்படுகிறது.
ⅲ) கருமுட்டையில் இயல்பான செல் பிரிதல் நிகழ்ந்து கருக்கோளம் தோன்றி கருப்பையை நோக்கி நகர்ந்து பதிகின்றது.
Correct
விளக்கம் : கருமுட்டையை அண்ட நாளத்தின் உள் செலுத்துதல்:
இது உடல் வெளி கருவுறுதல் தொழில்நுட்பம் போன்றது. இம்முறையில் எட்டு பிளாஸ்டோமியர்களைக் கொண்ட கருமுட்டை லேப்ராஸ்கோபி முறையில் அண்ட நாளத்தினுள் செலுத்தப்படுகிறது. கருமுட்டையில் இயல்பான செல் பிரிதல் நிகழ்ந்து கருக்கோளம் தோன்றி கருப்பையை நோக்கி நகர்ந்து பதிகின்றது.
கருப்பை உள் இட மாற்றம்:
8 பிளாஸ்டோமியர்களைவிட அதிகமான செல்களை கொண்ட கருவானது கருப்பையினுள் செலுத்தப்பட்டு முழுவளர்ச்சி அடைகிறது.

Question 70 of 92
70. Question
70) அண்ட நாளத்தின் உள் இனச்செல் இடமாற்றம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறையில் அண்டகத்தில் இருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு விந்து செல்களுடன் சேர்த்து ஒரு அண்ட நாளத்தின் உள் வைக்கப்படுகின்றது.
ⅱ) கருவுறுதல் நிகழ்ந்த பின் உருவாகும் கரு முட்டை கருப்பையை நோக்கி நகர்ந்து கருப்பையின் உட்படலத்தில் பதிக்கின்றது.
Correct
விளக்கம் :
அண்ட நாளத்தின் உள் இனச்செல் இடமாற்றம்:
இம்முறையில் அண்டகத்தில் இருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு விந்து செல்களுடன் சேர்த்து ஒரு அண்ட நாளத்தின் உள் வைக்கப்படுகின்றது.
கருவுறுதல் நிகழ்ந்த பின் உருவாகும் கரு முட்டை கருப்பையை நோக்கி நகர்ந்து கருப்பையின் உட்படலத்தில் பதிகின்றது.

Question 71 of 92
71. Question
71) சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறையில் ஒரே ஒரு விந்து செல்லை முட்டையின் குவிய புள்ளியில் செலுத்தி கருவுறச் செய்யப்படுகின்றது.
ⅱ) அதாவது முட்டையின் சைட்டோபிளாசத்திற்குள் விந்து செல்லானது மிக கவனமாக செலுத்தப்படுகின்றது.
ⅲ) இதில் கருவுறுதல் வீதம் 90 சதவீதம் ஆகும்.
Correct
விளக்கம் : அண்ட சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல்:
இம்முறையில் ஒரே ஒரு விந்து செல்லை முட்டையின் குவிய புள்ளியில் செலுத்தி கருவுறச் செய்யப்படுகின்றது. அதாவது முட்டையின் சைட்டோபிளாசத்திற்குள் விந்து செல்லானது மிக கவனமாக செலுத்தப்படுகின்றது. இதில் கருவுறுதல் வீதம் 75 முதல் 85 சதவீதம் ஆகும். கருமுட்டை எட்டு செல் கருக்கோள நிலையை அடைந்தவுடன் பெண்ணின் கருப்பைக்குள் மாற்றப்பட்டு கர்ப்பமடைய செய்யப்படுகின்றது.

Question 72 of 92
72. Question
72) வாடகைத்தாய்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) தாய்மை அடைய முடியாத பெண்ணிற்கு அல்லது பெண்களுக்கு வேறொரு பெண் ஒப்பந்த முறையில் கருவை சுமந்து குழந்தையை பெற்று தரும் முறை வாடகைத்தாய்மை எனப்படும்.
ⅱ) இச்செய்முறையில் உடல் வெளி கருவுருதல் முறையில் கரு உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு கரு வளர்க்கப்படுகிறது.
ⅲ) இதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தாய்மை அடைய முடியாத பெண் தாயாகும் பேறு பெறுகின்றார்.
Correct
விளக்கம் : வாடகைத்தாய்மை:
தாய்மை அடைய முடியாத பெண்ணிற்கு அல்லது பெண்களுக்கு வேறொரு பெண் ஒப்பந்த முறையில் கருவை சுமந்து குழந்தையை பெற்று தரும் முறை வாடகைத்தாய்மை எனப்படும். இசெய்முறையில் உடல் வெளி கருவுருதல் முறையில் கரு உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு கரு வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தாய்மை அடைய முடியாத பெண் தாயாகும் பேறு பெறுகின்றார்.

Question 73 of 92
73. Question
73) ஆண்களின் மலட்டுத்தன்மை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) விந்து செல்கள் இல்லாத விந்து திரவம் குறைந்தபட்சம் இருமுறை வெளிப்பட்டால் இந்நிலைக்கு ஏஜூஸ் பெர்மியா என்று பெயர்.
ⅱ) இந்நிலை மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் மக்களிடம் காணப்படுகின்றது.
Correct
விளக்கம் : ஆண்களின் மலட்டுத்தன்மை:
விந்து செல்கள் இல்லாத விந்து திரவம் குறைந்தபட்சம் இருமுறை வெளிப்பட்டால் இந்நிலைக்கு ஏஜூஸ் பெர்மியா என்று பெயர். இந்நிலை மொத்த மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம் மக்களிடம் காணப்படுகின்றது.

Question 74 of 92
74. Question
74) விந்தகத்திலிருந்து விந்து சேகரித்தல் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறையில் நுண்ணிய அறுவை மூலம் விதைப்பையை துளையிட்டு விந்தகத்திலிருந்து விந்து சேகரிக்கப்படுகிறது.
ⅱ) இக்கீறல் வழியாக நுண்ணோக்கி உதவியுடன் ஒன்று அல்லது இரு விந்தகங்களிலும் உள்ள விந்தக நுண் குழல்களை விரிவடையச் செய்து விந்துசெல் உற்பத்தியாகும் பகுதியிலிருந்து சிறிதளவு திசுவை வெளியே எடுத்து விந்து செல்களின் உற்பத்தி மேம்படுத்தப்படுகிறது.
ⅲ) இம்முறை தொன்மையான உயிர்த்திசு தொழில்நுட்பத்தை விட மேம்பட்ட முறையாகும்.
Correct
விளக்கம் : விந்தகத்திலிருந்து விந்து சேகரித்தல்:
இம்முறையில் நுண்ணிய அறுவை மூலம் விதைப்பையை துளையிட்டு விந்தகத்திலிருந்து விந்து சேகரிக்கப்படுகிறது. இக்கீறல் வழியாக நுண்ணோக்கி உதவியுடன் ஒன்று அல்லது இரு விந்தகங்களிலும் உள்ள விந்தக நுண் குழல்களை விரிவடையச் செய்து விந்துசெல் உற்பத்தியாகும் பகுதியிலிருந்து சிறிதளவு திசுவை வெளியே எடுத்து விந்து செல்களின் உற்பத்தி மேம்படுத்தப்படுகிறது. இம்முறை தொன்மையான உயிர்த்திசு தொழில்நுட்பத்தை விட மேம்பட்ட முறையாகும்.

Question 75 of 92
75. Question
75) மீயொலி வரியோட்டம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) மீயொலி பயன்பாடு ஒரு ஆபத்தில்லா முறையாகும்.
ⅱ) இம்முறையில் பயன்படுத்தப்படும் கடத்தி வயிற்றுப் பகுதி அல்லது கலவி கால்வாய் பகுதியில் கொடுக்கும் அழுத்தம் மிதமான அசௌகரியத்தை மட்டுமே தருகின்றது.
ⅲ) இம்முறையில் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது.
Correct
விளக்கம் : கருவின் குறைபாடுகளை கர்ப்பகால தொடக்கத்திலேயே கண்டறிதல்:
மீயொலி வரியோட்டம்:
மீயொலி பயன்பாடு ஒரு ஆபத்தில்லா முறையாகும். இம்முறையில் பயன்படுத்தப்படும் கடத்தி வயிற்றுப் பகுதி அல்லது கலவி கால்வாய் பகுதியில் கொடுக்கும் அழுத்தம் மிதமான அசௌகரியத்தை மட்டுமே தருகின்றது.
இம்முறையில் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதில்லை. மீயொலி வரைவை பயன்படுத்தி முதல் மும்மாத கரு வளர்ச்சியின் போதே பிறப்புத் தேதி, கருவின் எண்ணிக்கை மற்றும் கர்ப்ப கால தொடக்கத்தில் தோன்றும் பிரச்சனைகளை கண்டறியலாம்.

Question 76 of 92
76. Question
76) பனிக்குட துளைப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இம்முறையில் வளர்க்கருவை சூழ்ந்துள்ள பனிக்குட திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம்களின் பிறழ்ச்சி களை கண்டறியலாம்.
ⅱ) இச்செயல் முறை பொதுவாக 35 முதல் 40 வார கரு வளர்ச்சி கொண்ட கருவுற்ற பெண்களில் செய்யப்படுகின்றது.
ⅲ) இச்செயல் முறையில் மிக மெல்லிய நீண்ட ஊசியை வயிற்றறை வழியாக பனிக்குட பைக்குள் செலுத்தி சிறிதளவு பனிக்குட திரவ மாதிரி சேகரிக்கப்படுகிறது.
Correct
விளக்கம் : பனிக்குட துளைப்பு:
இம்முறையில் வளர்க்கருவை சூழ்ந்துள்ள பனிக்குட திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம்களின் பிறழ்ச்சி களை கண்டறியலாம். இச்செயல் முறை பொதுவாக 15 முதல் 20 வார கரு வளர்ச்சி கொண்ட கருவுற்ற பெண்களில் செய்யப்படுகின்றது. இச்செயல் முறையில் மிக மெல்லிய நீண்ட ஊசியை வயிற்றறை வழியாக பனிக்குட பைக்குள் செலுத்தி சிறிதளவு பனிக்குட திரவ மாதிரி சேகரிக்கப்படுகிறது. இத்திரவத்தில் வளர் கருவின் உடலிலிருந்து உதிர்ந்த செல்கள் காணப்படுகின்றன.

Question 77 of 92
77. Question
77) மீயொலி நிழல் உரு தொழில்நுட்பம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) மீயொலி நிழல் உரு தொழில்நுட்பம் பலவகைப்படும்.
ⅱ) மிகப் பொதுவான வகை ஆகிய இருபரிமாண மீயொலி நிழல் உரு, வளர் குழந்தையின் ஒரு பண்பை மட்டும் விளக்கும் தட்டையான படத்தை மட்டுமே தரும்.
ⅲ) முப்பரிமாண நிழலுரு முறையில் திரையில் தெரியும் நிழலுருவின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை மருத்துவர் பார்க்க இயலாது.
Correct
விளக்கம் : மீயொலி நிழல் உரு தொழில்நுட்பம் பலவகைப்படும். மிகப் பொதுவான வகை ஆகிய இருபரிமாண மீயொலி நிழல் உரு, வளர் குழந்தையின் ஒரு பண்பை மட்டும் விளக்கும் தட்டையான படத்தை மட்டுமே தரும். முப்பரிமாண நிழலுரு முறையில் திரையில் தெரியும் நிழலுருவின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை மருத்துவர் பார்க்க இயலும். இதனால் கருவின் ஆரோக்கிய நிலையையும் அறிய இயலும். நவீன தொழில்நுட்பமான நாற் பரிமாண மீயொலி மேல் உருவைக் கொண்டு மருத்துவர்கள் வளர் குழந்தையின் உண்மையான அசைவு போன்ற நேரடி செயல் காட்சிகளை முப்பரிமாண காட்சியுடன் அறியலாம்.

Question 78 of 92
78. Question
78)குழந்தை பிறப்புக்கு முன் தாய் சேய் இணைப்பு திசுவின் சிறு பகுதியை ஆய்வு செய்து குரோமோசோம் பிறழ்ச்சியை அறியும் முறை எது??
Correct
விளக்கம்: கோரியான் நுண் நீட்சி மாதிரி ஆய்வு:
குழந்தை பிறப்புக்கு முன் தாய் சேய் இணைப்பு திசுவின் சிறு பகுதியை ஆய்வு செய்து குரோமோசோம் பிறழ்ச்சி ஏதும் இருந்தால் அறியலாம்.

Question 79 of 92
79. Question
79) கரு கண்காணிப்புக் கருவியின் பயன்பாடுகளை தேர்ந்தெடு.
ⅰ) வளர் கருவின் இதயத்துடிப்பு வீதம்
ⅱ) கர்ப்பகால இறுதியில் நடைபெறும் செயல்கள்
ⅲ) பிரசவ வலி
Correct
விளக்கம் : கரு கண்காணிப்புக் கருவி:
இக்கருவியை கொண்டு வளர் கருவின் இதயத்துடிப்பு வீதம் மற்றும் கர்ப்பகால இறுதியில் நடைபெறும் செயல்கள் மற்றும் பிரசவ வலி போன்றவற்றை கண்டறியலாம்.

Question 80 of 92
80. Question
80) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) வளர் கருவின் சராசரி இதயத் துடிப்பு வீதம் ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சினைகளையும் இக்கருவி காட்டுகிறது.
ⅱ) டாப்ளர் கருவி என்னும் கையடக்கமான கண்காணிப்பு கருவி வளர் கருவின் இதயத்துடிப்பு வீதத்தை கண்டறிய பயன்படுகிறது.
ⅲ) பெரும்பாலும் மகப்பேறின் போது தொடர் மின்னணு கரு கண்காணிப்பு செய்யப்படுகின்றது.
Correct
விளக்கம் : வளர் கருவின் சராசரி இதயத் துடிப்பு வீதம் ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சினைகளையும் இக்கருவி காட்டுகிறது. டாப்ளர் கருவி என்னும் கையடக்கமான கண்காணிப்பு கருவி வளர் கருவின் இதயத்துடிப்பு வீதத்தை கண்டறிய பயன்படுகிறது. பெரும்பாலும் மகப்பேறின் போது தொடர் மின்னணு கரு கண்காணிப்பு செய்யப்படுகின்றது.

Question 81 of 92
81. Question
81) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் “மம்மோகிராம்” எனப்படும் மார்பக பரிசோதனையையும் செய்து பார்ப்பதன் மூலம் தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறியலாம்.
ⅱ) இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல் பாட்டுக்கு உதவுவதால் வைட்டமின் ஈ மலட்டுத் தன்மைக்கு எதிர் வைட்டமின் என அழைக்கப்படுகிறது.
ⅲ) இனப்பெருக்க ஹார்மோன்கள் அடோல்ப் பியூடெனன்ட் என்பவரால் கண்டறியப்பட்டது.
Correct
விளக்கம் :
மார்பக சுய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிதல்:
40 வயதுக்கு குறைவான இளம் பெண்களில் மீயொலி பரிசோதனையையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் “மம்மோகிராம்” எனப்படும் மார்பக பரிசோதனையையும் செய்து பார்ப்பதன் மூலம் தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறியலாம்.
இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல் பாட்டுக்கு உதவுவதால் வைட்டமின் ஈ மலட்டுத் தன்மைக்கு எதிர் வைட்டமின் என அழைக்கப்படுகிறது.
இனப்பெருக்க ஹார்மோன்கள் அடோல்ப் பியூடெனன்ட் என்பவரால் கண்டறியப்பட்டது.

Question 82 of 92
82. Question
82) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ⅱ) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ⅲ) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு NACO, 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Correct
விளக்கம் : ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு NACO, 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கிரந்தி மற்றும் வெட்டை நோய் பொதுவாக சர்வதேச நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 83 of 92
83. Question
83) கீழ்க்கண்டவற்றுள் கோனேரியா அல்லது வெட்டை நோயின் அறிகுறிகளை தேர்ந்தெடு.
ⅰ) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்ணின் கருப்பை வாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
ⅱ) பிறப்பு பாதையில் வலி, சீழ் வடிதல்,
ⅲ) சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு
Correct
விளக்கம் : சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்ணின் கருப்பை வாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு. பிறப்பு பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.
நீஸ்ஸெரியா கொனோரியே நோய்க்காரணி ஆகும்.
காலம் இரண்டிலிருந்து ஐந்து நாட்களாகும்.

Question 84 of 92
84. Question
84) கீழ்க்கண்டவற்றுள் மேகப்புண் நோயின் அறிகுறிகளை தேர்ந்தெடு.
ⅰ) இனப்பெருக்க உறுப்புகளின் புறப் பகுதிகளில் வலியற்ற புண்கள்
ⅱ) தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம்
ⅲ) சிறுநீர் கழிக்கும் போது வலி
Correct
விளக்கம் : முதல் நிலை :இனப்பெருக்க உறுப்புகளின் புறப் பகுதிகளில் வலியற்ற புண்கள்.
இரண்டாம் நிலை : தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு
மூன்றாம் நிலை : மூக்கு கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதிகளில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநல பாதிப்பு, பார்வை கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றவை.
காலம் 10 லிருந்து 90 நாட்கள் ஆகும்.

Question 85 of 92
85. Question
85) சிறுநீரக இனப்பெருக்க பாதை மற்றும் சுவாச பாதை ஆகியவற்றில் தூண் எபித்தீலிய செல் பாதிப்பு பின்வரும் எந்த நோய்க்கான அறிகுறியாகும்?
Correct
விளக்கம் : கிளாமிடியா டிராகோமேடிஸ் இந்த நோய்க்கான காரணி ஆகும்.கண்ணிமை அரிப்பு,சிறுநீரக இனப்பெருக்க பாதை, சுவாச பாதை மற்றும் கண்ணின் கன்ஜக்டிவா ஆகியவற்றில் தூண் எபித்தீலிய செல் பாதிப்பு நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் அல்லது ஆறு வாரங்கள் நோய் வெளிப்படும் காலம் ஆகும்.

Question 86 of 92
86. Question
86) லிம்போ கிரானுலோமா வெனிரியத்தின் நோய்க்கான அறிகுறிகளைத் தேர்ந்தெடு.
ⅰ) பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு
ⅱ) சிறுநீர் வடிகுழாய் அழற்சி
ⅲ) உள் கருப்பை வாய் அழற்சி
Correct
விளக்கம் : பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு,சிறுநீர் வடிகுழாய் அழற்சி,உள் கருப்பை வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய் போன்றவை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் அல்லது ஆறு வாரங்கள் நோய் வெளிப்படும் காலம் ஆகும்.கிளாமிடியா டிராகோமேடிஸ் இந்த நோய்க்கான காரணி ஆகும்

Question 87 of 92
87. Question
87) ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ் வைரசினால் ஏற்படும் நோய் எது?
Correct
விளக்கம் : பெண்களின் பெண்குறி வெளி இதழ், கலவி கால்வாய், சிறுநீர் வடிகுழாய், ஆகியனவற்றை சுற்றி புண் கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையே ரத்தப்போக்கு, தொடை இடுக்குகளில் நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் போன்றவை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். நோய் வெளிப்படும் காலம் இரண்டிலிருந்து 21 நாட்கள், சராசரியாக 6 நாட்கள் ஆகும்.

Question 88 of 92
88. Question
88) மனித பாப்பிலோமா வைரஸ் ஏற்படுத்தும் நோய் எது?
Correct
விளக்கம் : இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பை வாய், மலவாயை சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் ஆகியன நோய்க்கான காரணிகள் ஆகும். நோய் வெளிப்படும் காலம் 1 முதல் 8 மாதங்கள் ஆகும்.

Question 89 of 92
89. Question
89) கீழ்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸினால் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது.
ⅱ) நோய் வெளிப்படும் காலம் இரண்டு முதல் ஆறு வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும்.
ⅲ) மஞ்சள் காமாலை இந்த நோயின் அறிகுறியாகும்
Correct
விளக்கம் : ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸினால் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை, சோர்வு, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி, கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். நோய் வெளிப்படும் காலம் 30 லிருந்து 80 நாட்கள் ஆகும்.

Question 90 of 92
90. Question
90) மனித தடைகாப்பு குறைப்பு வைரஸினால் ஏற்படும் நோய் எது?
Correct
விளக்கம் : நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல் போன்றவை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.நோய் வெளிப்படும் காலம் இரண்டு முதல் ஆறு வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும்.

Question 91 of 92
91. Question
91) கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நோய் காரணியால் ஏற்படும் நோய் எது?
Correct
விளக்கம் : வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவி கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம், கலவிக்கால்வாயில் அரிப்பு மற்றும் புண்கள், கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு, வலியுடன் சிறுநீர் கழித்தல் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இது பூஞ்சை பால்வினை தொற்று நோயாகும்.

Question 92 of 92
92. Question
92) கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா பால்வினை தொற்று நோய் எது?
Correct
விளக்கம் : களவி கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவி கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, விந்தகம் மேல் சுருள் நாள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும். டிரைக்கோமோனாஸ் வாஜினாலிஸ் இந்நோய்க்கான காரணியாகும். நோய் வெளிப்படும் காலம் 4லிருந்து 28 நாட்களாகும்.

Leaderboard: இனப்பெருக்க நலன் Online Test 12th Science Questions in Tamil