June 4th Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வங்கியானது 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அது முந்தைய மதிப்பீட்டில் 10.1 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. இது, உலக வங்கியின் ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்பு’ அறிக்கையின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. COVID-19’இன் இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
Incorrect

Question 2 of 50
2. Question
2021ஆம் ஆண்டில், உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களைப் பற்றிய த எகனாமிஸ்ட்டின் வருடாந்திர ஆய்வுப்பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களைப்பற்றிய த எகனாமிஸ்ட்டின் வருடாந்திர ஆய்வின்படி, ஆக்லாந்து (நியூசிலாந்து) உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் ஒசாகா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் உள்ளன.
- முன்னர் உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரமான வியன்னா 12ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. COVID-19’ஐ கையாளுவதில் வெற்றிகரமான அணுகுமுறை காரணமாக ஆக்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Question 3 of 50
3. Question
எந்த அரசியலமைப்பு ரீதியான பதவிக்கு அனுப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- மூத்த தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1984ஆஆம் ஆண்டு இஆப அதிகாரியான அவர், உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமைச்செயலராக பணியாற்றியுள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை அனுப் சந்திர பாண்டே மேற்பார்வையிடவுள்ளார்.

Question 4 of 50
4. Question
ஆபரேஷன் பாஞ்சியா XIV’ஐ நடத்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- “ஆபரேஷன் பாஞ்சியா XIV” என்ற பெயரிலான ஒரு பயிற்சியை பன்னாட்டுக்காவலகம் (INTERPOL) நடத்தியது. இதில், மருந்துகள் மற்றும் மருத்துவ தயாரிப்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட வலைத்தளங்கள் மற்றும் இணையசந்தைகள் உட்பட 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய இணைப்புகளை அவ்வமைப்பு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் இந்தியாவும் பங்கேற்றது. இந்தியாவுடன் 92 நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

Question 5 of 50
5. Question
“இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்” என்ற அறிக்கையின்படி, காலநிலை மாற்றம் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், இந்தியாவின் வறுமை விகிதம் எவ்வளவு உயரும்?
Correct
விளக்கம்
- ‘இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் இலண்டனைச்சார்ந்த உலகளாவிய மதியுரையகமான ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக 2040ஆம் ஆண்டளவில் இந்தியாவின் வறுமை 3.5 சதவி -கிதம் அதிகரிக்கும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
- 2100ஆம் ஆண்டளவில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 10% வரை இழக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Question 6 of 50
6. Question
வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சூறாவளி உருவாவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சீனாவின் கரையோர மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாள -ர்கள், வட இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் சூறாவளி உருவாவதைக்கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, காலநிலை மாற்றத் திட்டத்தின்கீழ், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

Question 7 of 50
7. Question
உழவின் பின்னணியில், ‘NUE’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- Nitrogen Use Efficiency (NUE) என்பது தாவரத்தால் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படும் பயனுறு நைட்ரஜனின் பின்னம் என வரையறுக்கப்படுகிறது. சமீபத்தில், இந்திய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள், அரிசியில் நைட்ரஜன் பயன்பாட்டு செயல்திறனுக்கான மரபணுக்களை அடையாளங்கண்டுள்ளனர். இது, நைட்ரஜன் மாசையும் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரங்களையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16000’க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆராய்ந்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் 6 உயர்திறன் மரபணுக்களை பட்டியலிட்டனர்.

Question 8 of 50
8. Question
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக்கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோவிஃபைண்ட் (CoviFind) என்பது ____?
Correct
விளக்கம்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது அண்மையில் மெட்வெக் நிறுவனத்தின் தன்பயன்பாட்டு COVID-19 விரைவான பிறபொருளெதிரியாக்கி பரிசோதனையான CoviFind’க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- உள்நாட்டிலேயே ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இப்பரிசோதனையின்மூலம், SARS-CoV-2 வைரஸை பதினைந்து நிமிடங்களுக் -குள் விரைவாக கண்டறிய முடியும்.

Question 9 of 50
9. Question
உலக நலவாழ்வு அமைப்பின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் ____ மில்லியன் மக்கள் உணவுமூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு உணவுமூலம் பரவும் நோய்களின் பாதிப்புக -ளை மதிப்பிடுவதற்கு உதவும் ஒரு கையேட்டை வெளியிட்டது.
- சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துதற்கு உதவும் தரவு இடைவெளி -களைக் கண்டறிவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுமூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 0.12 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறார்கள் பாதுகாப்ப -ற்ற உணவை உட்கொள்வதால் மரணிக்கின்றனர் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Question 10 of 50
10. Question
தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது எந்த மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது அஸ்ஸாம் மாநிலத்தின் ஏழாவது தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், ரைமோனா, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்திற்குப்பின் (11), நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேசியப்பூங்காக்களைக்கொண்ட மாநிலம் அசாம். அந்தமான் மற்றும் நிகோபார் 9 தேசியப்பூங்காக்களைக் கொண்டுள்ளது.

Question 11 of 50
11. Question
சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடு, பின்வரும் எந்தக் கோளின் துணைக்கோளாகும்?
Correct
விளக்கம்
- NASA’இன் ஜூனோ விண்கலமானது சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடை பார்வையிட்டது. அது வியாழன்கோளின் துணைக் கோளும் சூரியக்குடும்பத்தில் ஒன்பதாவது மிகப்பெரிய வான்பொருளும் ஆகும். இந்த ஆய்வுக்கலம் கனிமீடின் உயர்தெளிவுத்திறன்கொண்ட நிழற்படங்களை எடுத்துள்ளது. இந்த நிழற்படங்கள், கனிமீடின் பள்ளம் மற்றும் மேற்பரப்பு அம்சங்களை அடையாளங்காண உதவக்கூடும்.

Question 12 of 50
12. Question
பின்வரும் எவ்வமைப்புக்கு, 5 MHz அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- இரயில்கள் & இரயில் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 700 MHz கற்றையில் 5 MHz அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு ஒதுக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய இரயில்வேயின் தகவல்தொடர்பு மற்றும் சமிக்ஞை முறைகளை மேம்படு -த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வலையமைப்பில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.
- இந்த அலைக்கற்றைவாயிலாக நீண்டகால பரிணாமத்தின் அடிப்படையில் வழித்தடங்களில் நடமாடும் ரயில் வானொலி தொலைத்தொடர்பை வழங்க இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ள முதலீடு சுமார் `25,000 கோடியாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவடையும்.

Question 13 of 50
13. Question
சர்வதேச இருப்புப்பாதைக்கடவு குறித்த விழிப்புணர்வு நாளை எந்த நகரத்தை அடிப்படையாகக்கொண்டு பன்னாட்டு இரயில்வே யூனியன் கடைப்பிடிக்கிறது?
Correct
- பன்னாட்டளவிலான இருப்புப்பாதைக்கடவு குறித்த விழிப்புணர்வு நாள் என்பது இருப்புப்பாதைக்கடக்கும்போது செய்யக்கூடிய பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனை பன்னாட்டு இரயில் போக்குவரத்து தொழிலமைப்பான பாரிஸைச் சார்ந்த சர்வதேச இரயில்வே யூனியன் முன்னெடுத்துள்ளது.

Question 14 of 50
14. Question
2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பைக்கொண்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- நடப்பு 2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பை வகித்துவரும் ஐக்கியப் பேரரசு இந்தியா, ஆஸி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியாவை உச்சிமாநாட்டிற்கு அழைத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய G7 உச்சிமாநாட்டின் அமர்வுகளில் மெய்நிகராக பங்கேற்கவுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், பிரான்ஸ், இந்தியாவை ‘நல்லெண்ண கூட்டாளராக’ அழைத்த பின்னர், G7 உச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமர் பங்கேற்பது இது இரண்டாம் முறையாகும்.

Question 15 of 50
15. Question
இந்தியாவின் முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள உலகளாவிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐநா வளர்ச்சித்திட்டமானது (UNDP) இந்தியாவின் முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டம்குறித்த சுயாதீன மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, இந்தத்திட்டத்தின் விளைவாக துறை வளர்ச்சி & ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- இது முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை பகுப்பாய்வு செய்து முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்கியது. UNDP’இன் இந்திய பிரதிநிதி, NITI ஆயோக்கிற்கு இந்த அறிக்கையை வழங்கினார்.

Question 16 of 50
16. Question
ஐநா பாதுகாப்பு அவையானது ____ உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பாகும்.
Correct
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு அவை என்பது 15 உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இவ்வவையின் வீட்டோ அதிகாரம்பெற்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆக அமெரிக்கா, இரஷ்யா, சீனா, ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. சமீபத்தில், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, கானா மற்றும் காபோன் ஆகிய 5 நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் சேருவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

Question 17 of 50
17. Question
வணிக அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, 2020-21இல் ____ சதவீதம் உயர்ந்துள்ளது.
Correct
விளக்கம்
- வணிக அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2020-21ஆம் ஆண்டில், இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி 51% உயர்ந்துள்ளது. இயற்கை வேளாண் பொருட்களின் வெளிப்புற ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் 689 மில்லியன் டாலர்களை விஞ்சி 1,040 மில்லியன் டாலர்களைத் தொட்டது.

Question 18 of 50
18. Question
IMD’இன் அண்மைய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில், இந்தியாவில், 2ஆவது அதிகபட்ச மாதாந்திர மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ள மாதம் எது?
Correct
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 1901’க்குப் பிறகு இந்த மே மாதத்தில் சராசரியாக 34.18°C வெப்பநிலை, நான்காவது மிகக்குறைந்த வெப்பநி -லையாக பதிவாகியுள்ளது.
- மே மாதத்தில், இந்தியாவில் இம்மழைப்பொழிவு கடந்த 1901ஆம் ஆண்டில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தலா ஒரு சூறாவளி உருவானது. ‘தக்தே’ புயல் அரபிக் கடலிலும், ‘யாஷ்’ சூறாவளி வங்காள விரிகுடாவிலும் உருவாகியது.

Question 19 of 50
19. Question
AISHE அறிக்கை 2019-20’இன்படி, ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்ன?
Correct
விளக்கம்
- 2019-20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை -யை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2019-20ஆம் ஆண்டில் 27.1%ஆக உள்ளது.
- இது கடந்த 2018-19ஆம் ஆண்டில் 26.3%ஆகவும், 2014-15ஆம் ஆண்டில் 24.3%ஆகவும் இருந்தது. கடந்த 2018-19ஆம் ஆண்டு 3.74 கோடியாக இருந்த ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை, 2019-20ஆம் ஆண்டில் 3.85 கோடியாக அதிகரித்து, 11.36 லட்சமாக (3.04%) வளர்ச்சியடைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்தது.

Question 20 of 50
20. Question
உலகின் மிகநீள வடமான ‘ஃபிர்மினா’வை கட்டமைத்த தொழில் நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரேசில், உருகுவே & அர்ஜென்டினாவை இணைக்கும் ‘Firmina’ என்ற கடலடிசெல்லும் வடத்தை உருவாக்கவுள் -ளதாக கூகிள் அறிவித்தது. உலகின் மிகநீளமான வடமாக இருக்கும் இந்த வடம், குறிபிடப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கு இடையில் இணைய இணைப்புத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த வடம், அமெரிக்காவின் கீழைக்கடற்கரையிலிருந்து அர்ஜென்டினா வரை இயங்கும். மேலும் தென்னமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.

Question 21 of 50
21. Question
பாலைவனமயமாக்கலுக்கு எதிரான 14ஆவது ஐநா உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, பாலைவனமாதலை எதிர்த்துப்போராடுவதற்கான ஐநா உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14ஆவது உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.
- அண்மையில் ஐநா – ‘பாலைவனமாதல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப்பேச்சுவார்த்தை’யில் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வை ஐநா பொது அவையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் கூட்டினார்.

Question 22 of 50
22. Question
COVID-19 இரண்டாவது அலைக்குப் பிறகு மருத்துவ உயிர்வளி தேவையைச் சமாளிக்க, ‘இந்தியாவுக்கான O2 திட்டத்’தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- COVID-19 இரண்டாவது அலைக்குப் பிறகான மருத்துவ உயிர்வளியின் தேவையை எதிர்கொள்வதற்கு, ‘இந்தியாவிற்கான O2 திட்டத்’தை இந் -தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின்கீழ், அவசரகால மூலப் பொருட்களை தேசிய அளவில் விநியோகிப்பது, சிறிய அளவிலான O2 ஆலைகளை நிறுவுவது, அழுத்த கருவிகள், O2 கருவிகள், செறிவூட்டிகள், செயற்கை சுவாச வழங்கிகள் உள்ளிட்ட இறுதிகட்ட பொருட்களைத் தயாரிப்பது முதலிய பணிகளை தேசிய பிராணவாயுக் கூட்டமைப்பு மேற்கொள்கிறது.

Question 23 of 50
23. Question
நடப்பாண்டு (2021) உலக யோகா நாளை முன்னிட்டு AYUSH அமைச்சகம் வெளியிட்ட செயலியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- 7ஆவது உலக யோகா நாளின் தொடக்க நிகழ்வின்போது, “நமஸ்தே யோகா” என்ற திறன்பேசிசெயலி வெளியிடப்பட்டது. DD இந்தியா அலை வரிசையில் ஒளிபரப்பப்படவுள்ள காமன் யோகா புரோட்டோகால் தொடரின் தொடக்கத்தை இந்நிகழ்வு குறித்தது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இந்தத்தொடரை தயாரிக்கிறது. உலக யோகா நாளானது ஜூன்.21 அன்று கொண்டாடப்படுகிறது.

Question 24 of 50
24. Question
நடப்பாண்டு (2021) ‘குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாளின்’ கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள் ஜூன்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்காக ஜூன் 10 அன்று “Week of Action” என்பது தொடங்கப்பட்டது. “Act now: end child labour” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும்.

Question 25 of 50
25. Question
‘CAIMS’ எனப்படும் மேலாண்மை அமைப்புடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய தடகள காய மேலாண்மை முறையை (CAIMS) தொடங்கினார். இது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மருந்து & மறுவாழ்வு ஆதரவை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விளையாட்டு வீரர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிறந்த விளையாட்டு காய மேலாண்மை ஆதரவை வழங்குவதையும் CAIMS தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, காய சிகிச்சை நெறிமுறையை தரப்படுத்த இது உதவும்.

Question 26 of 50
26. Question
அண்மையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற ஜர்தாலு மாம்பழங்களை விளைவிக்கின்ற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- புவிசார் குறியீடுபெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பீகாரிலிருந்து இங்கிலாந்துக்கு வர்த்தக ரீதியில் முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டன. லக்னோவில் உள்ள APEDA’இன் கட்டும் மையத்திலிருந்து பீகார் அரசு, இந்திய தூதரகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து சாறு மற்றும் வாசனைமிக்க மாம்பழங்களை இங்கிலாந்துக்கு APEDA அனுப் -பியது. சிறந்த சுவை மற்றும் வாசனை கொண்ட ஜர்தாலு மாம்பழங்கள் 2018’ல் புவிசார் குறியீட்டை பெற்றன.

Question 27 of 50
27. Question
உலகின் முதல் மர செயற்கைக்கோளான ‘WISA Woodsat’ஐ ஏவவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ‘WISA Woodsat’ என்பது ஒரு நானோ செயற்கைக்கோளாகும். அது, நியூசிலாந்திலிருந்து இவ்வாண்டின் இறுதிக்குள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. இது உலகின் முதல் மர செயற்கைக்கோள் ஆகும். இந்த நானோ செயற்கைக்கோள் என்பது கனசதுர வடிவ கட்டமைப்பாகும். பிர்ச் ஒட்டுப்பலகையால் ஆன அதன் உணரிகள் ஐரோப்பிய விண்வெளி முகாமையால் உருவாக்கப்பட்டதாகும். இது, ஓர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘இராக்கெட் லேப்’ உருவாக்கிய ஏவுகணை எலக்ட்ரானிலிருந்து ஏவப்படும்.

Question 28 of 50
28. Question
அண்மையில், சிறப்பு புலிட்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட டார்னெல்லா ஃப்ரேஷியர் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- புலிட்சர் பரிசு என்பது இதழியல் துறையில் வழங்கப்படும் மிகவும் மதிப்பு மிக்க விருதாகும். ஜார்ஜ் பிலாய்டின் மரணத்தை படமாக்கியதற்காக அமெரிக்க இளைஞியான டார்னெல்லா ஃப்ரேஷியர் இந்த விருதைப் பெற்றார். COVID தொற்றுநோய்குறித்த செய்திகளை சிறப்புற முறையில் வழங்கியதற்காக மதிப்புமிக்க பொது சேவைக்கான விருதை, நியூயார்க் டைம்சுக்கு புலிட்சர் குழுமம் வழங்கியது.

Question 29 of 50
29. Question
கடந்த 52 ஆண்டுகளில், 4 கிராண்ட்ஸ்லாம்களையும் இருமுறை வென்ற முதல் வீரர் யார்?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிப்போட்டியில் மூத்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஜோகோவிச், 52 ஆண்டுகளில், 4 கிராண்ட்ஸ்லாம்களை இரண்டு முறை வென்ற முதல் வீரரும் ஆனார்.

Question 30 of 50
30. Question
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உருவாக்கப்படவுள்ள மாநில -ம் எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பிற்காக நடுவண் கலாசாரம் மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- குஜராத்தின் ஆமதாபாத்திலிருந்து சுமார் 80 கிமீட்டர் தொலைவிலுள்ள லோத்தல் தளத்திற்கு அருகில், உலகத்தரம்வாய்ந்த வசதியுடன் உருவாக்கப்படவுள்ளது. பன்னாட்டு சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் இந்த வளாகத்தில், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் காட்சிப்படுத்தப்படும்.

Question 31 of 50
31. Question
BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது மின்சார போக்குவரத்து குறித்த BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் முந்நாள் மெய்நிகர் மாநாட்டை நடத்தியது. இவ்வாண்டு 13ஆவது BRICS உச்சிமாநாடானது, கல்வித்துறையின்கீழ் இந்தியா நடத்தும் நிகழ்வுகளின் ஒருபகுதியாக நடத்தப்பட்டது. BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகம் என்பது 5 BRICS உறுப்புநாடுகளைச்சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் ஒன்றியமாகும். BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனமாக IIT-மும்பை உள்ளது.

Question 32 of 50
32. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Data Lake’ என்பது பின்வரும் எந்த அமைப்பின் வலைத்தளமாகும்?
Correct
விளக்கம்
- வெளிப்படைத்தன்மை, சமீப தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க, நெடுஞ்சாலை திட்டப்பணிகளில், ஆளில்லா வானூர்திகள்மூலமான படப்பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கட்டாயமாக்கியுள்ளது.
- இதன்படி ஒப்பந்ததாரர்கள், நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளை மேற்பார்வை ஆலோசகரின் குழு தலைவர் முன்னி -லையில் டிரோன்மூலம் காணொளி எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டா லேக்’கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்பார்வை ஆலாசகர்கள் இதை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை, டிஜிட்டல் மாதாந்திர அறிக்கையில் சமர்ப்பிக்கவேண்டும்.

Question 33 of 50
33. Question
ஆழ்கடல் திட்டத்தை செயல்படுத்தும் நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதலளித்து -ள்ளது. இதன்மூலம் ஆழ்கடல் வளங்கள் ஆராயப்பட்டு நிலையான பயன்பாட்டுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
- ஒவ்வொரு கட்டமாக, ஐந்தாண்டு காலத்துக்கு அமல்படுத்தப்படவுள்ள இந்த ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்தின் செலவு `4,077 கோடியாக இருக்கும்.

Question 34 of 50
34. Question
நடப்பாண்டின் (2021) உலக குருதிக்கொடை நாள் நிகழ்வுகளை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.14 அன்று உலக குருதிக்கொடை நாள் கடை -ப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான குருதியின் தேவை மற்றும் குருதி மாற்றத்திற்குத் தேவையான குருதியின் உயிர்காக்கும் கூறுகள்குறித்து உலகம் முழுவதும் இந்நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2021ஆம் ஆண்டில் வரும், உலக குருதிக்கொடை நாளுக்கான வாசகமாக, “Give blood and keep the world beating” உள்ளது.
- இத்தாலி தனது தேசிய குருதி மையம்மூலம், நடப்பாண்டின் (2021) உலக குருதிக்கொடை நாள் நிகழ்வுகளை நடத்தியது.

Question 35 of 50
35. Question
இந்தியா வானிலை ஆய்வு மையமும் ICMR’உம், கீழ்காணும் எந்த நோய்க்கான வல்லுநர் குழுவை அமைத்துள்ளன?
Correct
விளக்கம்
- இந்தியா வானிலை ஆய்வு மையமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), “மலேரியா நோ மோர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலேரியா மற்றும் காலநிலை தொடர்பான இந்திய இருமுகமை வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளது.
- இந்தியாவில் மலேரியாவை விரைவாக கண்டறிவதற்கான காலநிலை அடிப்படையிலான தீர்வுகளை ஆராய்ந்து வழங்குவதை இக்குழு நோக்க -மாகக் கொண்டுள்ளது.

Question 36 of 50
36. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘நியூ ஷெப்பர்ட்’ என்பது எந்த விண்வெளி முகமையின் ஏவுகல அமைப்பாகும்?
Correct
- அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆர்ஜின், அண்மையில், நியூ ஷெப்பர்டில் பயணிப்பதற்கான முதல் இருக்கைக்கான இணையவழி ஏலத்தை நிறைவு செய்தது.
- சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஏவுகல அமைப்பு இது. இவ்விருக்கையை ஏலமெடுக்க 159 நாடுகளிலிருந்து 7,600’க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். $28 மில்லியன் டாலருக்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். அவர், ஜெஃப் பெசோஸுடன் ‘நியூ ஷெப்பர்டில்’ விண்வெளிக்கு பறப்பார்.

Question 37 of 50
37. Question
இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் மத்திய பிரதேச மாநிலம் 64.1 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சுகாதார இயக்க -த்தால் வெளியிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ஒடிஸா 59.3 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்த ஆண்டு மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது; அது 2018-19ஆம் ஆண்டில் 18ஆவது இடத்தில் இருந்தது.
- கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட 50%, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் 59%, வளரிளம்பருவ பெண்கள் 54% மற்றும் கர்ப்பிணி அல்லாத பாலூட்டாத பெண்களில் 53% பேர் இந்தியாவில் இரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்

Question 38 of 50
38. Question
2021 – உலக கொடுக்கும் குறியீட்டை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நடப்பாண்டிற்கான (2021) உலக கொடுக்கும் குறியீட்டை சேரிட்டீஸ் எய்ட் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய முடக்கங்கள், உலகெங்குமுள்ள நாடுகளின் போக்கை மாற்றியுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. உலகின் தாராள மனப்பாங்கு -டைய நாடுகளில் இந்தியா பதினான்காவது இடத்தில் உள்ளது. அந்தக் குறியீட்டில், இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது.

Question 39 of 50
39. Question
கெல்ஃபாண்ட் சவால் – 2021’ஐ வென்ற செஸ் வீரர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய செஸ் வீரர் D குகேஷ், $15,000 பரிசு மதிப்புடைய கெல்ஃபாண்ட் சவால் செஸ் பட்டத்தையும், மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப் பயணத்திற்கான நுழைவுச்சீட்டையும் வென்றார். 15 வயதான குகேஷ், பிரக்னானந்தாவுக்கு எதிரான போட்டி உட்பட நான்கு சுற்றுகளையும் வென்றார். 2019 மார்ச்சில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தகுதிபெற்ற இரண்டாவது இளம் வீரரானார் இவர்.

Question 40 of 50
40. Question
‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கை – 2021’இன்படி SDG குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
- நீடித்த வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பானது அண்மையில் நீடித்த வளர்ச்சி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, SDG குறியீட்டில் பின்லாந்து 85.9 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சுவீடன் மற்றும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. 193 நாடுகளுள், 60.1 மதிப்பெண்களுடன் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளது.

Question 41 of 50
41. Question
அண்மையில் வெளியிடப்பட்ட எந்த அறிக்கை “The race against time for smarter development” என்ற தலைப்பில் இருந்தது?
Correct
விளக்கம்
- UNESCO அறிவியல் அறிக்கையின் ஏழாவது பதிப்பானது அண்மையில், “The race against time for smarter development” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது அறிவியல் துறையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடுகள் பின்பற்றி வரும் வளர்ச்சிப்பாதை குறித்து விரிவாக பகுப்பாய்வு செய்கிறது.

Question 42 of 50
42. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, இணையதளமான ‘ISIபீடியா’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போட்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமையிலான பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘ISIபீடியா’ என்றவொரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அணுகக்கூடிய தரவு, வரைபடங்கள் மற்றும் கோட்டுருக்கள் மற்றும் உலகளாவிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட நாடு அளவிலான தகவல்களை வழங்குகிறது. காலநிலை தாக்க அறிவியலை பொதுமக்கள் அணுகுமாறு செய்வதைத் தவிர, பகுப்பாய்வுகள்பற்றிய நுண்ணறிவையும் இது வழங்குகிறது.

Question 43 of 50
43. Question
CSIR-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பானது PIVA என்ற கருவியை உருவாக்கியுள்ளது. அது எதன் மதிப்பை அளவிடுகிறது?
Correct
விளக்கம்
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பானது Precision Iodine Value Analyzer தொழில்நுட்பத் -தை உருவாக்கியுள்ளது. PIVA என்பது ஐயோடின் மதிப்பை அளவிடுவதற்கான ஒரு கருவியாகும். இது, தாவர எண்ணெய்களில், நிறைவுறாத அளவை அளவிடும். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த உணவு சோதனை உபகரணத்திற்கு இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Question 44 of 50
44. Question
பின்வரும் எந்தச்சட்டத்தின்கீழ் NAFED பதிவு செய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிட் (NAFED) கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களின் கூட்டுறவு சந்தைப்படுத்தலை ஊக்குவி -ப்பதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. அண்மையில், NAFED “NAFED செறிவூட்டப்பட்ட தவிட்டெண்ணெயை” அறிமுகப்படுத்தியது.
- இது, இவ்வெண்ணெயின் இறக்குமதியை வெகுவாகாக் குறைப்பதோடு, ஆத்ம நிர்பார் பாரத் முன்னெடுப்புக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Question 45 of 50
45. Question
பைன் தீவு பனிப்பாறை அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- பைன் தீவு பனிப்பாறை என்பது அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனி நீரோடைகளுள் ஒன்றாகும். மேலும் அது அப்பகுதியில் வேகமாக உருகி வரும் பனியடுக்குகளுள் ஒன்றாகவும் உள்ளது. வாஷிங்டன் பல்கலை மற்றும் பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு ஆகியவற்றின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பைன் தீவு பனிப்பாறையின் பனி அடுக்குகள் விரைவாக உடைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக உருகினால் உலகின் கடல் மட்டங்களில் 0.5 மீ உயர்வு ஏற்படக்கூடும்.

Question 46 of 50
46. Question
விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ‘விவாடெக்’ என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப மாநாடு ஆகும். அது பிரான்ஸின் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் மோடி, 2021 விவாடெக் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அங்கு, தொழில்நுட்ப முன்னணியில் இந்தியா மற்றும் பிரான்ஸின் நெருங்கிய தொடர்பை அவர் எடுத்துரைத்தார்.

Question 47 of 50
47. Question
சில்வர்லைன் என்பது பின்வரும் எந்த மாநிலத்தின் முதன்மை இரயில் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- பகுதியளவு அதிவேக இரயில் திட்டமான சில்வர்லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கேரள மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. `63,940 கோடி செலவிலான இத்திட்டம், கேரளத்தின் வட மற்றும் தென்பகுதிகளை இரயில் மூலம் இணைத்து பயண நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது, சமீபத்திய காலங்களில் அம்மாநிலத்தில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றாகும்.

Question 48 of 50
48. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘இன்டர்ஸ்டெல்லர் பவுண்டரி எக்ஸ்ப்ளோரர் (IBEX) செயற்கைக்கோளை’ ஏவிய விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- NASA’இன் புவியைச் சுற்றிவரும் இன்டர்ஸ்டெல்லர் பவுண்டரி எக்ஸ்ப்ளோரர் (IBEX) செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட தரவைப்பயன்படுத்தி முதன்முறையாக பரிதிசார்கோளத்தின் எல்லையை அறிவியலாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர். இது சூரியனும் விண்மீன் வளிகளும் எவ்வாறு தொடர்புகொள்கின்றன என்பதற்கான சிறந்த புரிதலை வழங் -கும். இந்தப்பகுதியின் முப்பரிமாண வரைபடம் பரிதிசார்கோளம் என்று அழைக்கப்படுகிறது.

Question 49 of 50
49. Question
போலந்து ஓப்பன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை யார்?
Correct
விளக்கம்
- வார்சாவில் நடந்த போலந்து ஓப்பனில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் மேட்டியோ பெல்லிகோன் நிகழ்வு (மார்ச்) மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் (ஏப்ரல்) ஆகியவற்றில் அவர் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
- இறுதிப்போட்டியில், 8-0 என்ற புள்ளிக்கணக்கில் உக்ரைனின் கிறிஸ்டி -யானா பெரெசாவுக்கு எதிராக வினேஷ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி, அவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடத்திற்கு கொண்டுசெல்லும்.

Question 50 of 50
50. Question
சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாள் கடைப்பிடிக்கப்ப -டும் தேதி எது?
Correct
விளக்கம்
- சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாளானது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.16 அன்று கொண்டாடப்படுகிறது.
- “Recovery and resilience through digital and financial inclusion” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். தனி நபர்கள் அல்லது கூட்டு செயற்பாடுகள்மூலம் பணமனுப்புவதன் தாக்கத்தை அதிகரிக்கக்கூடிய வழிகளைக்கண்டறிய அரசாங்கங்கள், தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு சமூகங்கள் ஆகியவற்றுக்கு இந்நாள் அழைப்புவிடுக்கிறது.

Leaderboard: June 4th Week 2021 Current Affairs Online Test Tamil