February 2nd Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
February 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு மனித சகோதரத்துவ நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.4 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் பன்னாட்டு மனித சகோதரத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. “எதிர்காலத்திற்கான பாதை” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும். 2019ஆம் ஆண்டு இதே நாளில், “உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித சகோதரத்துவம்” என்ற தலைப்பிலான ஆவணம் கையெழுத்தானது.
Incorrect

Question 2 of 50
2. Question
இந்திய-அமெரிக்கரான பவ்யா லால், பின்வரும் எந்த அமைப்பின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA’இன் செயல் தலைவராக இந்திய-அமெரிக்கர் பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக உறுப்பினராக பணியாற்றிவந்தார்.

Question 3 of 50
3. Question
‘The Little Book of Encouragement’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, அண்மையில், “The Little Book of Encouragement” என்ற நூலை எழுதினார். தொற்றுநோயால் முன்வைக்கப்படும் உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு, மக்க -ளுக்கு மேற்கோள்கள் மற்றும் ஞானபோதனைகள் இதில் இடம்பெற்று -ள்ளன. தீவிரவாதம், துருவமுனைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் திபெத் குறித்த அவரது கருத்துக்களை இந்தப் புதிய நூல் விவாதிக்கிறது.

Question 4 of 50
4. Question
நடப்பாண்டில் (2021) வரும் ‘உலக ஈரநிலங்கள் நாளுக்கான’ கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் புவியில் அதன் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி.2 அன்று உலக ஈர நிலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “ஈரநிலங்கள் மற்றும் நீர்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- நடப்பாண்டின் (2021) கருப்பொருள், நன்னீரின் ஆதாரமாக விளங்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

Question 5 of 50
5. Question
கடந்த 2020ஆம் ஆண்டின் ‘ஹிந்தி சொல்’லாக, ஆக்ஸ்போர்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?
Correct
விளக்கம்
- ஆக்ஸ்போர்டு குழுமம், கடந்த 2020ஆம் ஆண்டின் ஹிந்தி சொல்லாக ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல்லைத் தேர்வுசெய்துள்ளது. ஹிந்தியில், இது ‘தன்னம்பிக்கை’ எனப் பொருள்தருகிறது. ‘ஆதார்’ (2017), ‘நாரி சக்தி’ (2018) மற்றும் ‘சம்விதான்’ (2019) ஆகிய சொற்கள் ஆக்ஸ்போர்டால் முந்தைய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்தி சொற்களாகும்.
- பிரதமரின் உரையைத் தொடர்ந்து, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல் அதிக அளவில் பயன்பாட்டில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Question 6 of 50
6. Question
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தற்போது LIC ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநராக மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வருகிறார். 2021 ஜனவரி.31 அன்று ஓய்வுபெற்ற T C சுசீல் குமாருக்கு பதிலாக சித்தார்த்த மொஹந்தி நியமிக்கப்பட்டார். LIC’க்கு நான்கு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் ஒரு தலைவர் உள்ளனர்.

Question 7 of 50
7. Question
இலகுரக தேஜஸ் வானூர்தியை பின்வரும் எவ்வமைப்பிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், நடுவண் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) என்ற இடத்தில் புதிய ஆலையைத் திறந்துவைத்தார். இது, இந்தியாவின் உள்நாட்டு போர் வானூர்தியான இலகு ரக தேஜஸ் வானூர்தியின் உற்பத்தியை இரட்டி -ப்பாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
- HAL நிறுவனத்திடமிருந்து 83 இலகு ரக தேஜஸ் வானூர்திகளை வாங் -குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் `48000 கோடி மதிப்பிலான ஒப்பந் -தத்தில் கையெழுத்திட்டது. இது, மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொ -ள்முதல் என்று கூறப்படுகிறது.

Question 8 of 50
8. Question
கலிவேளி ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கலிவேளி ஏரி என்பது ஒரு கரையோர ஏரியும் ஈரநிலமுமாகும். இது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி வங்கக்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை அடுத்து தென்னிந்தியா -வின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரி இதுவாகும்.
- இந்த ஈரநிலங்களை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முதல் அறிவிப்பை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், 1972ஆம் ஆண்டு வனவுயிரி பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அண்மையில் வெளியிட்டது.

Question 9 of 50
9. Question
‘கோபர்தன்’ திட்டத்திற்காக ஒருங்கிணைந்த இணையதளத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது சமீபத்தில், ‘கோபர்தன்’ திட்டத்திற்கு என ஓர் ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை கண்காணிப்பதை இந்தத்தளம் நோக்கமாகக்கொண்டுள்ளது. கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் உழவர்களின் வருவாயை மேம்படுத்துவ -தற்கும் இந்திய அரசாங்கத்தால் ‘கோபார்தன்’ திட்டம் தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் – கட்டம் 2’இன்கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

Question 10 of 50
10. Question
2021 பிப்ரவரியில், இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ‘ஏரோ இந்தியா’ கண்காட்சிக்கு இடையே இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியது.
- “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும். இம்மாநாட்டின்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகள், LCA மற்றும் பிற ஆயுத அமைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது

Question 11 of 50
11. Question
IUCN சிவப்புப்பட்டியலின்படி, மீன்பிடி பூனையின் (Fishing Cat) வகைப்பாடு என்ன?
Correct
விளக்கம்
- ‘மீன்பிடி பூனை’ என்பது ஈரநிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப்படும் ஒரு சிறப்புப் பூனை இனமாகும். IUCN சிவப்புப்பட்டியலின்படி, இப்பூனை இனங்கள் அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனங்கள் (vulnerable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி பூனை பாதுகாப்பு கூட்டணி என்ற ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணி, உலகெங்கிலும் உள்ள பாதுகாவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களை உள்ளடக்கியதாகும்.

Question 12 of 50
12. Question
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப தொழில்முனைவோர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான சோகோவின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாரியத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாள் தலைமைதாங்குகிறார்.
- ISRO’இன் முன்னாள் தலைவர் K ராதாகிருஷ்ணன், கல்வி உறுப்பினர் அன்சுமான் திரிபாதி மற்றும் முன்னாள் தூதர் அருண் K சிங் ஆகியோர் இந்த வாரியத்தின் பிற புதிய உறுப்பினர்களாவர்.

Question 13 of 50
13. Question
இந்தியாவின் முதல் இடி, மின்னல் குறித்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலம் பாலசூரில் நாட்டின் முதல் இடி, மின்னல் குறித்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. புவி அறிவியல் அமைச்சகம், IMD, DRDO மற்றும் ISRO இடையேயான ஒத்துழைப்பில் இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். மின்னல் தாக்குதல்களால் நிகழும் மனித இறப்பு மற்றும் சொத்து இழப்பு ஆகியவற்றைக் குறைப்பதை இந்த ஆராய்ச்சி நிலையம் தனது நோக்கமாகக்கொண்டு செயல்படும்.

Question 14 of 50
14. Question
எந்த உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனம் இந்தியாவில் அதன் கட்டண நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது?
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், பின்வரும் எந்நாட்டுடனான முதல் கூட்டு செயற்குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது?
Correct
விளக்கம்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா – பக்ரைன் இடையே முதல் கூட்டு செயற்குழுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்தியா – பக்ரைன் இடையே கடந்த 2018’இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சூரிய ஒளி எரிசக்தி, வளியாற்றல் மற்றும் தூய கைட்ரஜன் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.

Question 16 of 50
16. Question
‘முதலீடு ஒப்புதல் பிரிவு’ என்ற ஒற்றை சாளர அனுமதி அமைப்பை அமைக்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- தொழிற்சாலைகளுக்கு பல்வேறு அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் அளிப்பதற்கு ஒற்றைச் சாளர முறையை அமைப்பதற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இதன்மூலம், முதலீட்டாளர்கள் பல்வேறு தளங்கள் / அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இந்தப் பிரிவு, கடந்த ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த டிஜிட்டல் தளம் தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து மத்திய மற்றும் மாநில அனுமதிகளையும் ஒப்புதல்களையும் பெறுவதற்கு உதவும்.

Question 17 of 50
17. Question
1.75 கோடி பயனாளிகளைத் தாண்டிய பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா, எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது?
Correct
விளக்கம்
- பிரதமர் மாத்ரு வந்தனா திட்டம் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு திட்டமாகும். இது, 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் முதல் குழந்தையின் பிறப்பின் போது, மூன்று தவணைகளில் `5,000 பெறுகின்றனர். இந்தத் திட்டம், 2020ஆம் ஆண்டு வரை, 1.75 கோடி பயனாளிகளை தாண்டிவிட்டதாக அவ்வமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

Question 18 of 50
18. Question
அண்மையில் இந்தியாவிடமிருந்து COVID-19 தடுப்பூசிகளைப் பெற்ற பார்படோஸின் தலைநகரம் எது?
Correct
விளக்கம்
- பார்படோஸ் என்பது வட அமெரிக்காவின் கரீபியன் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு நாடாகும். இது ஒரு தன்னாட்சிமிக்க பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடாகும். அதன் தலைநகராக பிரிட்ஜ்டவுன் உள்ளது. COVID-19 தடுப்பூசிகளை வழங்கியமைக்காக, பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி இந்திய அரசுக்கு நன்றிதெரிவித்துள்ளார். 2.87 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை உடைய இந்நாட்டில், 1641 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Question 19 of 50
19. Question
ICMR’இன் செரோ ஆய்வின் மூன்றாம் சுற்றின்படி, இந்தியர்களில் ஒவ்வொரு ஐந்துபேருக்கு எத்தனை பேர் COVID-19 (கொரோனா) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய செரோலாஜிகல் ஆய்வின் மூன்றாம் சுற்றின்படி, ஐந்தில் ஒரு இந்தியர் SARS-CoV-2 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்து உள்ளது. நாடு தழுவிய இந்த ஆய்வு 2020 டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்தது.
- ஒரு நபருக்கு SARS-CoV-2 கொரோனா வைரஸை எதிர்க்கும் பிறபொருளெதிரிகள் (antibody) உள்ளதா என்பதை செரோலாஜிக்கல் சோதனை கண்டறிகிறது.

Question 20 of 50
20. Question
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையை இந்தியா எந்த சங்கத்துடன் நடத்தியது?
Correct
விளக்கம்
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இப்பேச்சுவார்த்தைக்கு வர்த்தக & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைகளை வலியுறுத்தி, கடந்த 2020 ஜூலை மாதம் நடைபெற்ற 15ஆவது இந்திய – ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் முக்கிய வெளிப்பாடாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது

Question 21 of 50
21. Question
நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் யார்?
Correct
விளக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட், 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சென்னையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஜோ ரூட் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது, அவரது ஐந்தாவது இரட்டை சதமாகும்

Question 22 of 50
22. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Brookesia nana என்பது எந்தக் குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும்?
Correct
விளக்கம்
- ஒரு ஜெர்மன்-மடகாஸ்கன் பயணக்குழு, மடகாஸ்கரில் ஒரு பச்சோந்தி கிளையினத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது, புவியில் இதுவரை கண்டறியப்பட்ட ஊர்வனங்களிலேயே மிகச்சிறியதுவாக இருக்கலாம். Brookesia nana என்று பெயரிடப்பட்ட இந்த ஆணின ஊர்வனத்தின் உடல் மட்டும் 13.5 மிமீட்டரும், முழு உடலும் (வால் வரை) 22 மிமீட்டரும் உள்ளது. அறிவுயலாளர்களின் கூற்றுப்படி, வட மடகாஸ்கர் மழைக்காடு -களுக்கு சொந்தமான இவ்வினங்கள் அழிவுறு நிலையில் உள்ளன.

Question 23 of 50
23. Question
‘தோழி’ என்றவொரு திட்டத்தைத்தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Question 24 of 50
24. Question
பிரதமர் உர்ஜா கங்கை திட்டத்தின் ஒருபகுதியான தோபி–துர்கா -பூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒருபகுதியாக, 348 கிமீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ஹால்தியா தூய்மைப்படுத்துதல் வளாகத்தில் இரண்டாம் கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- ஏற்றுமதி-இறக்குமதியின் முக்கிய முனையமாக ஹால்தியா வளர்ச்சி அடைவதற்கு இந்தத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

Question 25 of 50
25. Question
இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் (geothermal field development) திட்டம் நிறுவப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் புவிவெப்ப கள மேம்பாட்டுத் திட்டம் லடாக் யூனியன் பிரதேசமான லேவில் நிறுவப்படவுள்ளது. லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தத் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

Question 26 of 50
26. Question
2021 சன்டான்ஸ் திரைப்பட விழாவில், ‘பார்வையாளர்கள் விருது’ வென்ற இந்திய ஆவணப்படம் எது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில், “Writing with Fire” என்ற இந்திய ஆவணப்படம், ஆவணப்பட பிரிவில், ‘பார்வையாளர்கள் விருதை’ வென்றது. இந்தப் படம் தலித் பெண்கள் நடத்தும் இந்தியாவின் ஒரே செய்தித்தாளான, ‘கபர் லஹாரியா’ உருவானதை விவரிக்கிறது.
- உலகெங்குமுள்ள தன்னெழுச்சிக் கலைஞர்களை அங்கீகரித்து வரும், அமெரிக்காவைச் சார்ந்த சன்டான்ஸ் இலாப நோக்கற்ற நிறுவனம் இந்த விழாவை நடத்துகிறது.

Question 27 of 50
27. Question
சமக்ர சிக்ஷா திட்ட நிதியுதவி பெற்ற உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு யாருடைய பெயரைச் சூட்ட கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது?
Correct
விளக்கம்
- சமக்ரிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியுதவிபெறும் 383 உறைவிடப் பள்ளிகள் மற்றும் 680 விடுதிகளுக்கு, ‘‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸ் உறைவிடப் பள்ளிகள்’ என்று கல்வி அமைச்சகம் பெயரிடவுள்ளது.
- குறைவான மக்கள்தொகைகொண்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் பள்ளிப்படிப்பை மேம்படுத்துவதற்காக சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், உறைவிடப்பள்ளிகளைத்தொடங்கி நடத்துதற்கு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது.

Question 28 of 50
28. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘வணிக நம்பிக்கைக் குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- வணிக நம்பிக்கைக்குறியீட்டை (Business Confidence Index) தில்லியைச் சார்ந்த பொருளாதார மதியுரையகமான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) உருவாக்கியுள்ளது. இதன் சமீப பதிப்பின் படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது & மூன்றாம் காலாண்டுகளுக்கு இடையே இக்குறியீடு, 29.6% அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், 500 நிறுவனங்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டவை.

Question 29 of 50
29. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “அல்-அமல்” என்பது பின்வரும் எந்த நாட்டின் ஆளில்லா விண்வெளி ஆய்வுக்கலமாகும்?
Correct
விளக்கம்
- ‘அல்-அமல்”, (அரபியில் ‘நம்பிக்கை’), என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆளில்லா விண்வெளி ஆய்வுக்கலமாகும். இவ்விண்வெளித்திட்டம் அரபு நாடுகளின் முதல் விண்வெளித் திட்டமாகும். இது, செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையை அடைந்து, அதன் வானிலை குறித்து ஆய்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜப்பானிலிருந்து இந்த ஆய்வுக் கலத்தை ஏவியது. 2024ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா ஊர்தி ஒன்றை திங்களுக்கு அனுப்பவும் ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

Question 30 of 50
30. Question
உலக பருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கடந்த 2019ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, பிப்.10ஆம் தேதியை உலக பருப்பு நாளாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உழவு அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக, கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. #Love_ Pulses என்ற முழக்க வரியினைக்கொண்டு இந்த ஆண்டுக்கான (2021) உலக பருப்பு நாள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது.

Question 31 of 50
31. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, தபோவன் ஹைடல் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதை அடுத்து நிகழ்ந்த பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றனர். ரிஷிகங்கா சிறிய நீர்மின்திட்டம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன் திட்டம் ஆகிய இரண்டு நீர்மின் திட்டங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் சேதமடைந்தன. இத்திட்டங்கள், மாநிலத்தின் தெளலிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

Question 32 of 50
32. Question
ATP கோப்பைக்கான டென்னிஸ் போட்டியை வென்ற நாடு எது?
Correct
விளக்கம்
- அண்மையில் மெல்போர்னில் நடந்த ATP கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், இரஷ்யா இத்தாலியை தோற்கடித்தது.
- டேனியல் மெட்வெடேவ் மற்றும் ஆண்ட்ரி ரூப்லெவ் ஆகியோர் ஒற்றையர் போட்டிகளில் நேர் செட்களில் வென்றனர். இந்த வெற்றியின் மூலம், இரண்டு ரஷ்ய வீரர்களும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிக்கு முன்னேறினர். யர்ரா வேலி கிளாசிக் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் ஆஷ்லீ பார்ட்டி தனது ஒன்பதாவது WTA ஒற்றையர் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய ஓப்பனில் நுழைகிறார்.

Question 33 of 50
33. Question
‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி, ‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற நூலை எழுதியுள்ளார். முகமது ஹமீது அன்சாரியின் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
- முகமது ஹமீது அன்சாரி அவர்கள் தொடர்ந்து இருமுறை இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார்.

Question 34 of 50
34. Question
தேசிய தோட்டக்கலை கண்காட்சி – 2021’இன் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- 5 நாள் நடைபெறும் தேசிய தோட்டக்கலை கண்காட்சியானது பிப்ரவரி 8 முதல் பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. “Horticulture for Start-up and Stand-up India” என்பது இந்தக் கண்காட்சி -க்கான கருப்பொருளாகும்.

Question 35 of 50
35. Question
“இந்திய எரிசக்தி கண்ணோட்டம் – 2021” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமையின், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’க்கு இணங்க, இந்தியா, 2030’க்குள் உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சிநிற்கும். அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும்.
- அடுத்த 20 ஆண்டுகளில் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு, இந்தியா, கூடுதலாக $1.4 டிரில்லியன் டாலர்களை செலவழிக்க வேண்டும்.

Question 36 of 50
36. Question
‘இந்திய பொம்மை கண்காட்சி’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடும், பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘இந்திய பொம்மை கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்படுகிறது. 2021 பிப்.27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் இக்காண்காட்சி நடைபெறும். இதன்சமயம் மாநில அரசுகளின் வலையரங்குகள், அறிவு அமர்வுகள் மற்றும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

Question 37 of 50
37. Question
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான தனது 98ஆம் டெஸ்டில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, அனில் கும்ப்ளே, கபில் தேவ், இரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் டெஸ்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Question 38 of 50
38. Question
எக்கனாமிக் டைம்ஸ் விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த வணிக சீர்திருத்தவாதி விருதை’ வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2021) எக்கனாமிக் டைம்ஸ் விருதுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு, ‘ஆண்டின் சிறந்த வணிக சீர்திருத்தவாதி’ வழங்கப்பட்டது. இந்தத் தேர்வுக் குழுவுக்கு, ஆல்பாபெட் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தலைமைதாங்கினார்.
- ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதானது HDFC வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஆதித்யா பூரிக்கு வழங்கப்பட்டது. ‘ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதை’ ஆதார் பூனவல்லா பெற்றார்.

Question 39 of 50
39. Question
‘உலக நீடித்த வளர்ச்சி குறித்த உச்சிமாநாட்டை’ நடத்துகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ‘உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு’ என்பது எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இவ்வுச்சிமாநாட்டின் முக்கிய பங்காளர்களாகும். TERI என்பது புது தில்லியைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். இவ்வுச்சிமாநாட்டின் இருபதாவது பதிப்பு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்படவுள்ளது.
- “Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

Question 40 of 50
40. Question
‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ ஆனது ஆண்டுதோறும் பிப்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாளின்’ ஆறாமாண்டு நாளாகும். ஐநா அவை இந்நாளை கடைப்பிடிக்கி -ன்கிறது. “Women Scientists at the forefront of the fight against COVID-19” என்பது 2021’இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 41 of 50
41. Question
பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் கவுன்சிலிடமிருந்து உலக ‘வாடிக்கையாளரின் குரல்’ விருதைப் பெற்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?
Correct
விளக்கம்
- பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையமானது பன்னாட்டு விமான நிலையங்கள் கவுன்சிலிடமிருந்து உலக ‘வாடிக்கையாளரின் குரல்’ விருதைப் பெற்றுள்ளது.
- 2020’இல் COVID-19 தொற்றுகாலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்த வானூர்தி நிலையங்களை இந்த விருது அங்கீக -ரிக்கிறது. இந்தக் கவுன்சிலின்படி, பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், பயணிகளின் கருத்துக்களை சேகரிப்பதில் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளைக் காட்டியுள்ளது.

Question 42 of 50
42. Question
‘லாலந்தர் (அ) ஷட்டூட் அணை’யைக் கட்டுவதற்காக பின்வரும் எந்நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் ஹனிப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இதில் கையெழுத்திட்டனர்.
- காபூல் மாநகரத்தின் பாதுகாப்பான குடிநீருக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அருகிலுள்ள பகுதிகளின் நீர்ப்பாசனத்திற்கும் லாலந்தர் அணை பங்காற்றும். இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவு அணைக்கு (சல்மா அணை) பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டப்படவி -ருக்கும் இரண்டாவது முக்கிய அணை இதுவாகும்.

Question 43 of 50
43. Question
சோயுஸ்-2 ஏந்தி ஏவூர்தியானது (carrier rocket) கீழ்க்காணும் எந்த நாட்டின் முதன்மை ஏவுகலமாகும்?
Correct
- சோயுஸ்-2 என்பது இரஷ்யாவின் முதன்மை முந்நிலை ஏவுகலமாகும். அது செயற்கைக்கோள்களை தாழ்வட்டச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது. சோயுஸ் ஏவுகணையின் நவீன வடிவந்தான் இது. சோயுஸ் -2 ஏவுகலத்தைப் பயன்படுத்தி, 12’க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த சுமார் நாற்பது செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இரஷ்ய நாடு திட்டமிட்டுள்ளது. இதில், தென் கொரியாவின் CAS500-1 (Compact Advanced Satellite 500) செயற்கைக்கோளும் அடங்கும்.

Question 44 of 50
44. Question
2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில், முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்களின்படி, 2018 முதல் 24,56,291 பேர், `3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- இத்திட்டத்தின்கீழ், பிப்ரவரி.4ஆம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து `19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் குஜராத்தும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு `5 இலட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.

Question 45 of 50
45. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையின் சமீப அறிக்கையின்படி, எரிசக்தி நுகர்வுகளில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
Correct
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமையானது அண்மையில், ‘இந்திய எரிசக்தி நுகர்வு குறித்த கண்ணோட்டம் – 2021’ஐ வெளியிட்டது. அவ்வறிக்கை -யின்படி, அதிகம் எரிசக்தி நுகர்வைக்கொண்ட உலக நாடுகளின் பட்டி -யலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- 2030’க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை விஞ்சியிருக்கும். அடுத்த இருபதாண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை வளர்ச்சி பங்கு அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டியிருக்கும். இந்தியாவின் எரிசக்தி நுகர்வு, 2040 ஆம் ஆன்டுக்குள் $8.6 டிரில்லியன் டாலர்களை எட்டும்.

Question 46 of 50
46. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுவமித்வா’ திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- ‘SVAMITVA’ என்பது 2020’இல் மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத் -தின்கீழ் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது சர்வே ஆப் இந்தி -யாவால் ஆளில்லா விமானத்தின்மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவ -தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பஞ்சாயத்து இராஜ் அமைச்சகத்துக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில், ‘SVAMITVA’ திட்டத்திற்கு `200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தை ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த `79.65 கோடி பட்ஜெட் செலவினத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Question 47 of 50
47. Question
‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல்திட்ட’த்தை தயாரிப்பதற்கான துணைக்குழுவை அமைத்துள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரின் அண்மைய அறிவிப்பின்படி, ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்ட’த்தை தயாரிக்க NITI ஆயோக் ஒரு உபகுழுவை அமைத்துள்ளது.
- இந்த உப-குழுவில் பல்வேறு அமைச்சகங்கள், நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழூள்ள தொழிலாளர் பணியகம், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அகில இந்திய ஆய்வை நடத்தவுள்ளது.

Question 48 of 50
48. Question
அதிகமான மக்கள்தொகைகொண்ட பின்வரும் எந்த நாடு, பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில், 15% சரிவைக்கண்டுள்ளது?
Correct
விளக்கம்
- கடந்த 2020’இல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 10.04 மில்லியனாகும்; இது கடந்த ஆண்டின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.
- தரவுகளின்படி, பிறப்பு வீதத்தில் சரிவை பதிவு செய்வது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்காக 1970’களின் பிற்பகுதியில், ‘ஒரு குழந்தை திட்ட’த்தை சீனா அறிமுகப்படுத்தியது. 2016’இல் அத்திட்டம் கைவிடப்பட்டது.

Question 49 of 50
49. Question
இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் என்பது குருகிராமை தலைமையிடமாகக்கொண்ட ஓர் அரசுக்கு சொந்தமான மருந்து, மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பு நிறுவனமாகும். அண்மையில், இந்திய மருந்து & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனம், பெங்கால் இரசாயனம் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & மருந்துப்பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள முதலீடுகளை திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

Question 50 of 50
50. Question
நாட்டில் NGOS பெறும் அயல்நாட்டு மானியங்கள், கீழ்க்காணும் எந்தச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன?
Correct
விளக்கம்
- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் அயல்நாட்டு மானியங்கள் அனைத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (அ) FCRAமூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
- உள்துறை அமைச்சகத்தில் பதிவுசெய்த பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு தனித்துவமான FCRA பதிவெண் வழங்கப்படும்; அது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். சமீப அரசாங்க தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், FCRA சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 20,600’க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Leaderboard: February 2nd Week 2021 Current Affairs Online Test Tamil