7th Tamil Unit 1 Online Test – New Book
7th Tamil Unit 1 Questions - New Book
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1) உலக மொழிகளில் தொன்மையான நம் தமிழ்மொழி வாழ்வுக்குத் தேவையான எவற்றை கூறுவதாக “எங்கள் தமிழ்” செய்யுள் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது?
Correct
விளக்கம்: தமிழ் மொழி தொன்மையும் இனிமையும் வளமையும் உடையது. இது வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுகிறது.
Incorrect

Question 2 of 100
2. Question
2) “இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
Correct
விளக்கம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்கள் “எங்கள் தமிழ்” என்னும் தலைப்பின் கீழ் இப்பாடலை இயற்றியுள்ளார். நம் தமிழ் மொழியானது அச்சத்தை நீக்கி இன்பம் தருகிற தேன் போன்ற மொழி எனக் கூறுகிறார்.

Question 3 of 100
3. Question
3) நம் காப்பிய மொழியான தமிழ்மொழி தமிழ் மக்களின் எதுவாக விளங்குகிறது?
Correct
விளக்கம்: அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிற தமிழ்மொழி, தமிழ் மக்களின் குரலாக விளங்குகிறது. அது அனைவரிடமும் அன்பையும், அறத்தையும் தூண்டுகிறது.

Question 4 of 100
4. Question
4) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் எதை கொள்கையாகவும் கொண்டு,
எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவுகிறது?Correct
விளக்கம்: கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும். இத்தகைய பெருமை வாய்ந்தது நம் தமிழ் மொழி.

Question 5 of 100
5. Question
5) “பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதரையும் இகழாது” என்னும் வரிகள் எந்த தலைப்பின் கீழ் இயற்றப்பட்டது?Correct
விளக்கம்: தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மை போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். இக்கருத்தை உள்ளடக்கிய இப்பாடல் வரிகள் நாமக்கல் கவிஞர் இயற்றிய “எங்கள் தமிழ்” என்னும் பாடல் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.

Question 6 of 100
6. Question
6) எங்கள் தமிழ்மொழி எதைப் போன்ற மொழி என நாமக்கல் கவிஞர் “எங்கள் தமிழ்” என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்?
Correct
விளக்கம்: எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி என நாமக்கல் கவிஞர் கூறுகிறார். மேலும் இது அருள்நெறி அறிவைத் தரும் என்றும் உரைக்கிறார்.

Question 7 of 100
7. Question
7) தவறானதைத் தேர்க.
Correct
விளக்கம்: ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
குறி – குறிக்கோள், நோன்பு – விரதம், பொழிகிற – தருகின்றIncorrect
விளக்கம்: ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
குறி – குறிக்கோள், நோன்பு – விரதம், பொழிகிற – தருகின்ற -
Question 8 of 100
8. Question
8) “காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர் வெ. இராலிங்கனார் “கந்தியக் கவிஞர்”என்றும் அழைக்கப்படுகிறார்.

Question 9 of 100
9. Question
9) கூற்றுகளை ஆராய்க.
1. நாமக்கல் கவிஞர், தமிழறிஞர், கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்
2. இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கினார்Correct
விளக்கம்: நாமக்கல் கவிஞர் எனப் பெயர் பெற்ற வெ.இராமலிங்கனார் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர், தமிழஞர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார்.

Question 10 of 100
10. Question
10) “எங்கள் தமிழ்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதே “எங்கள் தமிழ்”என்னும் பாடல். மலைக்கள்ளன், என்கதை, சங்கொலி ஆகியவை நாமக்கல் கவிஞரின் பிற நூல்களாகும்.

Question 11 of 100
11. Question
11) “கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது……” என்னும் பாடலை இயற்றியவர் யார்?Correct
விளக்கம்: விடுதலைப்போராட்ட வீரரான வெ. இராலிங்கனார் பல முறை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டணை பெற்றுள்ளார். இவர் இயற்றியதே “கத்தி யின்றி ரத்த மின்றி” எனத் தொடங்கும் பாடல்.

Question 12 of 100
12. Question
12) “குரலாகும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: குரல் + ஆகும் = குரலாகும். “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ல்” மற்றும் “ஆ” புணர்ந்து “லா” என மாறியது.

Question 13 of 100
13. Question
13) வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: வான் + ஒலி = வானொலி. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ன்” மற்றும் “ஞ” புணர்ந்து “னொ” என மாறியது.

Question 14 of 100
14. Question
14) “நெறி” என்னும் சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: “நெறி” என்பதன் பொருள் “வழி” ஆகும்.
Incorrect
விளக்கம்: “நெறி” என்பதன் பொருள் “வழி” ஆகும்.
-
Question 15 of 100
15. Question
15) தவறான கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: ஒரு பாடலின் முடிவிலுள்ள எழுத்து, அசை, சீர் அல்லது அடி ஆனது அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமைந்தால் அது “அந்தாதி” எனப்படும்.

Question 16 of 100
16. Question
16) சரியானதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: ஒப்புமை – இணை, முகில் – மேகம், அற்புதம் – வியப்பு, உபகாரி – வள்ளல்
Incorrect
விளக்கம்: ஒப்புமை – இணை, முகில் – மேகம், அற்புதம் – வியப்பு, உபகாரி – வள்ளல்
-
Question 17 of 100
17. Question
17) “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலின் ஆசியரியர் யார்?
Correct
விளக்கம்: தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதேபோல் இலக்கிய வளமும், இலக்கண வளமும் நிறைந்தது. இதுபோல தமிழ்நாட்டின் பெருமைகள் ஒன்றிரண்டல்ல பலவாகும் என்பதை உணர்த்தும் “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலை உடுமலை நாராயணக் கவி இயற்றினார்.

Question 18 of 100
18. Question
18) “முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?Correct
விளக்கம்: முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான்வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இக்கருத்தை கொண்ட இப்பாடல் வரிகள் உடுமலை நாராணயக்கவி இயற்றிய ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம்பெற்றுள்ளது.

Question 19 of 100
19. Question
19) “ஒன்றல்ல இரண்டல்ல” பாடலின் கருத்துப்படி தவறான இணையைத் தேர்க
Correct
விளக்கம்: தேன் மணம் கமழுவது – தென்றது, சுவை மிகுந்தது – கனிகள், பொன் போன்றது – கனிகள், பொன் போன்றது – தானியக் கதிர்கள், பகைவரை வென்றதைப் பாடுவது – பரணி இலக்கியம்.

Question 20 of 100
20. Question
20) பின்வருவனவற்றுள் எது இசைப்பாடல்?
Correct
விளக்கம்: திருக்குறள் – பொதுமை கருத்துக்களை கூறும் நூல்
பரணி – பகைவரை வென்றதைப் பாடுவது
பரிபாடல் – ஓர் இசை பாடல் வடிவிலான நூல்
அகநானூறு – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.Incorrect
விளக்கம்: திருக்குறள் – பொதுமை கருத்துக்களை கூறும் நூல்
பரணி – பகைவரை வென்றதைப் பாடுவது
பரிபாடல் – ஓர் இசை பாடல் வடிவிலான நூல்
அகநானூறு – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. -
Question 21 of 100
21. Question
21) “பகுத்தறிவுக் கவிராயர்” என்று புகழப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பியதால் உடுமலை நாராயணக் கவி “பகுத்தறிவுக் கவிராயர்” எனப் போற்றப்படுகிறார்.

Question 22 of 100
22. Question
22) நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இவர் தமிழ்த் திரைப்பட பாடாலாசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகளை எழுதிய பெருமை இவரையே சாரும்.

Question 23 of 100
23. Question
23) வானில் கீழ்க்கண்ட எது திரண்டால் மழை பொழியும்?
Correct
விளக்கம்: வானில் மேகக்கூட்டங்கள் திரண்டால் மழை பொழியும். மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் முகில்.

Question 24 of 100
24. Question
24) “இரண்டல்ல” என்னும் செல்லைப் பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: இரண்டல்ல = இரண்டு + அல்ல. “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, இரண்டு + அல்ல என்பது இரண்டல்ல என புணருகிறது.

Question 25 of 100
25. Question
25) “தந்துதவும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: தந்துதவும் = தந்து + உதவும். தந்து + உதவும் என்பது “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, என்பது தந்துதவும் என புணரும்.

Question 26 of 100
26. Question
26) ஒப்புமை + இல்லாத என்பதைச் சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: ஒப்புமை + இல்லாத = ஒப்பில்லாத. “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விதி கெட்டு ஒப்பு இல்லாத என்றானது. பின் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி ஒப்(ப்+உ) + இல்லாத என்பது ஒப்ப் + இல்லாத என்றாது. இறுதியாக “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி, ஒப்பில்லாத என்றானது.

Question 27 of 100
27. Question
27) எதன் மூலம் மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது?
Correct
விளக்கம்: தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி. அதுவே மனிதரின் சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

Question 28 of 100
28. Question
28) தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?
Correct
விளக்கம்: தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் உள்ளன.

Question 29 of 100
29. Question
29) கூற்று: தற்போது பல மொழிகள் உலகில் உள்ளன.
காரணம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியாக ஒலிக்குறியீடுகளை உருவாக்கினர்.Correct
விளக்கம்: பல குழுக்களாக வாழ்ந்த மக்கள் அவர்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.

Question 30 of 100
30. Question
30) மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?
Correct
விளக்கம்: நேரில் காண இயலாத நிலையில் செய்திகளைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியே காரணமாகிறது.

Question 31 of 100
31. Question
31) மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?
Correct
விளக்கம்: வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவதே பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியில் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி.எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் 2ம் நிலை ஆகும்.

Question 32 of 100
32. Question
32) எந்த வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடி பயன்பாட்டிற்கு உரியது?
Correct
விளக்கம்: வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது. இதேபோல், ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி உடனடி பயன்பாட்டிற்கு உரியது.

Question 33 of 100
33. Question
33) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
Correct
விளக்கம்: மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி ஆகும். இது உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். பேச்சுமொழி, அதன் கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

Question 34 of 100
34. Question
34) சரியான விடையை தேர்வு செய்க.
1. பேச்சுமொழி மொழியின் உயிர்நாடி ஆகும்.
2. பேசப்படும் சொற்கள் மட்டுமின்றிப் பேசுபவரின் உடல்மொழி ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள்.Correct
விளக்கம்: பேச்சுமொழியில் ஒரு சொல்லை அழுத்திக் கூறும்போது ஒரு பொருளையும், சாராணமாக கூறும் போது வேறு பொருளையும் உணர்த்துகிறது. அதே போல் பேசுபவரின் உடல்மொழி மற்றும் முகப்பாவனை போன்றவை நினைத்த கருத்தை சரியாக உணர்த்த உதவுகிறது.

Question 35 of 100
35. Question
35) “குழந்தையை நல்லா கவனிங்க” என்னும் கூற்றிலுள்ள “கவனி” என்னும் சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: இதேபோல் “நில் கவனி செல்” என்ற கூற்றில் “கவனி” என்பது கவனித்துச் செல் என்னும் “பாதுகாப்பு பொருளை உணத்துகிறது”.

Question 36 of 100
36. Question
36) “என்னால் போக முடியாது” என்னும் தொடரை ஓங்கி ஒலிக்கும் போது அது உணர்த்துவது என்ன?
Correct
விளக்கம்: இதை மென்மையாக “என்னால் போக முடியாது” என்று கூறும் போது அது இயலாமையை உணர்த்துகிறது. ஒலியின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப அதன் பொருள் மாறுபடுகிறது.

Question 37 of 100
37. Question
37) “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: இவ்வரிகள் நன்னூல் நூற்பாவில் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதாகும்.

Question 38 of 100
38. Question
38) எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே எனக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அந்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவை அன்றி வேறுவகையான மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே” என மு. வரதராசனார் கூறுகிறார்.

Question 39 of 100
39. Question
39) பேச்சு வழக்கில் மாறுபடக்கூடிய ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (எ.கா) “இருக்கிறது” என்னும் சொல்லை ‘இருக்கு’, ‘இருக்குது’இ ‘கீது’ என்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படுகிறது.

Question 40 of 100
40. Question
40) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு பதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: ஒரே மொழியை பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதுண்டு. வாழும் இடத்தில் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள் எனப்படும்.

Question 41 of 100
41. Question
41) தமிழின் கிளைமொழிகளில் பொருந்தாது எது?
Correct
விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகளாகும்.

Question 42 of 100
42. Question
42) ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?
Correct
விளக்கம்: பேச்சு மொழிக்கு நாம் தந்த வரி வடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால் தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.

Question 43 of 100
43. Question
43) எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?
Correct
விளக்கம்: எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் அதன் வரி வடிவம் மாறுபடும்.

Question 44 of 100
44. Question
44) தவறானதைத் தேர்க
Correct
விளக்கம்: எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழிநடையில் அமைகிறது. ஆனால் பேச்சுமொழியில் சிந்திக்க நேரம் குறைவு மற்றும் திருத்த இயலாததால் திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.

Question 45 of 100
45. Question
45) இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.Correct
விளக்கம்: பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.

Question 46 of 100
46. Question
46) இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?
Correct
விளக்கம்: இரட்டை வழக்கு மொழியை உலக வழக்கு செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்

Question 47 of 100
47. Question
47) குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?
Correct
விளக்கம்: கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையில் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமாகின்றன.

Question 48 of 100
48. Question
47) மொழித்தூய்மை எதில் பேணப்படுகிறது?
Correct
விளக்கம்: பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைகிறது. எழுத்துமொhழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும், பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம்பெறுகின்றன.

Question 49 of 100
49. Question
49) பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: பேச்சுமொழியில் ‘இ’ என்பதை ‘எ’ என்றும் ‘உ’ என்பதை ‘ஒ’ என்றும் ஒலிப்பர்.
(எ.கா) ‘இலை’ என்பதை ‘எல’ என்றும் ‘உலகம்’ என்பதை ‘ஒலகம்’ என்றும் ஒலிப்பர்.Incorrect
விளக்கம்: பேச்சுமொழியில் ‘இ’ என்பதை ‘எ’ என்றும் ‘உ’ என்பதை ‘ஒ’ என்றும் ஒலிப்பர்.
(எ.கா) ‘இலை’ என்பதை ‘எல’ என்றும் ‘உலகம்’ என்பதை ‘ஒலகம்’ என்றும் ஒலிப்பர். -
Question 50 of 100
50. Question
50) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?
Correct
விளக்கம்: ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு பேச்சு மொழியும், காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியும் தேவைப்படுகிறது.

Question 51 of 100
51. Question
51) தமிழ் எவ்வகை மொழி?
Correct
விளக்கம்: மேடைப்பேச்சு, வானொலி, ஊடகம் போன்றவற்றில் தமிழ் பேச்சு மொழியாகவும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவற்றில் எழுத்து மொழியாகவும் செயல்பட்டு வருவதால் தமிழ் இரட்டை வழக்கு மொழி ஆகும்.

Question 52 of 100
52. Question
51) மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் எது அக்காலத்தில் பயன்பட்டு வந்தது?
Correct
விளக்கம்: அக்காலத்தில் மேடைப் பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறி பேச்சுத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Question 53 of 100
53. Question
53) பேச்சுமொழி நீண்ட காலம் நிலைத்து நிற்க காரணமாக அமைவது எது?
Correct
விளக்கம்: இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Question 54 of 100
54. Question
54) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்பது யாருடைய ஆசை?Correct
விளக்கம்: எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும், வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக விளைந்துள்ள அனைத்திற்கும் தமிழில் பெயர்கள் காணவும், செந்தமிழைச் செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும் என பாரதிதாசன் ஆசை கொண்டார்.

Question 55 of 100
55. Question
55) மொழியின் முதல் நிலை பேசுதல் மற்றும் _________ ஆகியனவாகும்?
Correct
விளக்கம்: மொழியின் முதல் நிலை, பேசுதல், கேட்டல் மொழியின் இரண்டாம் நிலை, படித்தல், எழுதுதல்

Question 56 of 100
56. Question
56) சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?
Correct
விளக்கம்: சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.

Question 57 of 100
57. Question
57) பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை யார் தம் பேச்சில் இயல்பாய் பயன்படுத்துகின்றனர்?
Correct
விளக்கம்: பொருட்செறிவுமிக்க சொலடைகளை நாட்டுப்புற மக்கள தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய சிறப்பாகும்.

Question 58 of 100
58. Question
58) பொருத்துக.
a. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – 1. எதிர்ப்பு
b. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – 2. ஓட்டம் பிடித்தல்
c. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – 3. திரும்பி வராது
d. நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம் – 4. மதிப்புCorrect
விளக்கம்: 1. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – திரும்பி வராது
2. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – எதிர்ப்பு
3. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – மதிப்புIncorrect
விளக்கம்: 1. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – திரும்பி வராது
2. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – எதிர்ப்பு
3. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – மதிப்பு -
Question 59 of 100
59. Question
59) “ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்” என்ற சொலவடை கூறும் கருத்து என்ன?
Correct
விளக்கம்: ஒரு அந்துப்பூச்சி இருந்தால் போதும், அது பல்கி பெருகி மொத்த நெல்லையும் கெடுத்துவிடும் என்பதே இதன் பொருள்.

Question 60 of 100
60. Question
60) தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: தமிழ் எழுத்து முதலெழுத்து சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்தில் 30 எழுத்துக்களும், சார்பெழுத்தில் 10 வகையும் உள்ளன.

Question 61 of 100
61. Question
61) முதலெழுத்துகள் என்பவை எவை?
Correct
விளக்கம்: உயிரெழுத்துக்கள் 12 மற்றும் மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துக்களும் முதலெழுத்துகள் எனப்படுகின்றன.

Question 62 of 100
62. Question
62) வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து
Correct
விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து குறைந்து ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.

Question 63 of 100
63. Question
63) குற்றியலுகரம் – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். ஈறுபோதல் விதிப்படி “மை விகுதி கெட்டு குறு + இயல் + உகரம் என்றானது. பின் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி, குற் + இயல் + உகரம் என்றானது. “தன்னொற்றிரட்டல்” என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + உகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் “உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி குற்றியலுகரம் என்றானது.

Question 64 of 100
64. Question
64) கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,
Correct
விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ½ மாத்திரையாக ஒலிக்கும். இது குற்றியலுகம் எனப்படும்.

Question 65 of 100
65. Question
65) தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் எத்தனை மாத்திரை அளவுக்கு ஒலிக்கும்?
Correct
விளக்கம்: தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். இதே போல், வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்

Question 66 of 100
66. Question
66) பொருந்தாததைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: காசு, பயறு, சால்பு ஆகியவை குற்றிலுகரச் சொற்கள். மாவு என்பது முற்றியலுகரம் ஆகும். வு என்பது வல்லின உகரமல்ல. அதனால் அது தனது ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

Question 67 of 100
67. Question
67) தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?
Correct
விளக்கம்: தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய 4 எழுத்து சாரியைப் பயன்படுத்துகிறோம்.

Question 68 of 100
68. Question
68) தமிழ் எழுத்துக்களை அதன் எழுத்து சாரியையுடன் பொருத்துக.
a. குறில் – 1. கேனம்
b. நெடில் – 2. காரம்
c. குறில், நெடில் – 3. கான்
d. ஆயுதம் – 4. கரம்Correct
விளக்கம்: 1. குறில் – கரம்
2. நெடில் – கான்
3. குறில், நெடில் – காரம்
4. ஆயுதம் – கேனம்Incorrect
விளக்கம்: 1. குறில் – கரம்
2. நெடில் – கான்
3. குறில், நெடில் – காரம்
4. ஆயுதம் – கேனம் -
Question 69 of 100
69. Question
69) பொருத்துக.
a. அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – 1. நெடில்
b. ஐகான், ஒளகான் – 2. ஆயுதம்
c. மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – 3. குறில்
d. அஃகேனம் – 4. குறில், நெடில்Correct
விளக்கம்: அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – குறில்
ஐகான், ஒளகான்- நெடில்
மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – குறில், நெடில்
அஃகேனம் – ஆயுதம்Incorrect
விளக்கம்: அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – குறில்
ஐகான், ஒளகான்- நெடில்
மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – குறில், நெடில்
அஃகேனம் – ஆயுதம் -
Question 70 of 100
70. Question
70) குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. நெடில் தொடர் குற்றியலுகரம் 2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம் 3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் 4. வன் தொடர் குற்றியலுகரம் 5. மென் தொடர் குற்றியலுகரம் 6. இடைத் தொடர் குற்றியலுகரம்

Question 71 of 100
71. Question
71) சரியான கூற்றை தேர்வு செய்க.
1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றிலுகரம்
2. இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே அமையும் (எ.கா) பாகு, மாசு, பாடு, காடு, ஆறு.Correct
விளக்கம்: எப்போதும் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஈரெழுத்துச் சொல்லாகவே மட்டுமே அமையும். அவை தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உதாரணமாக காது என்ற சொல்லில் கா என்ற தனிநெடிலைத் தொடர்ந்து து என்ற குற்றியலுகரச் சொல் வருகிறது.

Question 72 of 100
72. Question
72) முப்பாற் புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
விளக்கம்: முப்பாற்புள்ளி அல்லது அஃகேனம் அல்லது தனிநிலை எனப்படும். ஃ என்ற ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனப்படும். உதாரணம்: எஃகு, அஃது.

Question 73 of 100
73. Question
73) தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எது?
Correct
விளக்கம்: தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) அரசு (ர=ர்+அ)

Question 74 of 100
74. Question
74) க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 மெய் எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?
Correct
விளக்கம்: வல்லின மெய்யெழுத்துக்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர் குற்றியலுகரம் ஆகும். (எ.கா) . பாக்கு, பேச்சு

Question 75 of 100
75. Question
75) மென் தொடர் குற்றியலுகரத்தில் வரும் மெய்யெழுத்துகள் எவை?
Correct
விளக்கம்: மெல்லின மெய்யழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய 6 எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

Question 76 of 100
76. Question
76) இடைத் தொடர் குற்றியலுகரம் என்பது என்ன?
Correct
விளக்கம்: இடையின (ய், ர், ல், வ், ழ், ள) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) எய்து, மார்பு

Question 77 of 100
77. Question
77) பொருத்தமற்றதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: ஒன்பது, வரலாறு, கயிறு ஆகியவை உயிர்த் தொடர் குற்றியலுகரச் சொற்கள். உப்பு என்பது வன் தொடர் குற்றியலுகரச் சொல்லாகும்.

Question 78 of 100
78. Question
79) எந்த எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத் தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை?
Correct
விளக்கம்: சு, டு, று ஆகியவை இறுதியாக அடையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. அதேபோல், கு, து, பு ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச்சொற்கள் உண்டு

Question 79 of 100
79. Question
78) சரியான விடையை தேர்வு செய்க.
1. வ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
2. ந் என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.Correct
விளக்கம்: வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. மேலும் ந்-ஐ தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் உண்டு (எ.கா) பந்து

Question 80 of 100
80. Question
80) பிரித்தெழுதுக – வரகியாது
Correct
விளக்கம்: வரகியாது = வரகு + யாது. வரகு + யாது-இதில் முதல் சொல்லின் இறுதியிலுள்ள ‘கு’ என்றும் ‘கி’ என்று ஒலிக்கிறது. அதாவது, உகரமானது இகரமாக திரிந்து ஒலிக்கிறது. குற்றியலிகரத்தின் படி வரகு + யாது என்பது வரகியாது என புணரும்.

Question 81 of 100
81. Question
81) குற்றியலிகரம் – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: குற்றியலிகரம் = குறுமை + இயல் + கரம் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு குறு + இயல் + இகரம் என்றானது. பின் உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி. கு(ற்+உ) + இயல் + இகரம் = குற் + இயல் + இகரம் என்றானது. பின் தன்றொட்டிரட்டல் என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + இகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி குற்றியலிகரம் என்றானது.

Question 82 of 100
82. Question
82) குற்றியலுகரம் தனது ஒரு மாத்திரைலிருந்து எத்தனை மாத்திரையாக மாறி ஒலிக்கும்?
Correct
விளக்கம்: குற்றியலிகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி அரை மாத்தரை அளவில் ஒலிக்கும். இங்கு உகரம் ஆனது இகரமாக மாறி குறைந்து ஒலிக்கிறது.

Question 83 of 100
83. Question
83) தவறானதைத் தேர்க.
Correct
விளக்கம்: நாடியாது, கேண்மியா, சென்மியா ஆகியவை குற்றியலிகரச் சொற்கள், சால்பு என்பது குற்றியலுகரச் சொல்

Question 84 of 100
84. Question
84) எந்த சார்பெழுத்து தற்போது உரைநடை வழக்கில் இல்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது?
Correct
விளக்கம்: குற்றியலிகரத்தில் பயன்படுத்தப்படும் சார்பெழுத்தானது தற்போது உரைநடை வழக்கிழந்து இலக்கிய வழக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Question 85 of 100
85. Question
85) தவறானதைத் தேர்க.
Correct
விளக்கம்: குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம் எனப்பிரியும்.
Incorrect
விளக்கம்: குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம் எனப்பிரியும்.
-
Question 86 of 100
86. Question
86) திணை எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: திணை 2 வகைப்படும். அவை உயர்திணை மற்றும் அஃறிணை. ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்

Question 87 of 100
87. Question
87) முக்கனிகள் எனப்படுபவை யாவை?
Correct
விளக்கம்: மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் முக்கனிகள் எனப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் முக்கனிகள் எனப்படுகின்றன.
-
Question 88 of 100
88. Question
88) பொருந்தாததை தேர்க
Correct
விளக்கம்: முத்தமிழ் எனப்படுபவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகியவை ஆகும்.
Incorrect
விளக்கம்: முத்தமிழ் எனப்படுபவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகியவை ஆகும்.
-
Question 89 of 100
89. Question
89) ஒலியியல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் எது?
Correct
விளக்கம்: Journalism – இதழியல்
Puppetry – பொம்மலாட்டம்
Orthography – எழுத்திலக்கணம்Incorrect
விளக்கம்: Journalism – இதழியல்
Puppetry – பொம்மலாட்டம்
Orthography – எழுத்திலக்கணம் -
Question 90 of 100
90. Question
90) “Linguistics” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஊடகம் – Media, பருவ இதழ் – Magazine, உரையாடல் – Dialogue, மொழியியல் – Linguistics

Question 91 of 100
91. Question
91) பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
Correct
விளக்கம்: ஆறு என்பது நெடில் தொடர்க் குற்றியலுகரம் பசு, விடு, கரு ஆகியவை முற்றிலுகரச் சொற்கள் ஆகும்.

Question 92 of 100
92. Question
92) பொருந்தாத சொற்களை எழுதுக.
Correct
விளக்கம்: பாக்கு, பாட்டு, பத்து ஆகியவை வன்தொடர்க் குற்றிலுகரம். பஞ்சு என்பது மென்தொடர் குற்றியலுகரமாகும்.

Question 93 of 100
93. Question
93) பொருந்தாத சொற்களை எழுதுக.
Correct
விளக்கம்: ஆறு, மாசு, பாகு ஆகியவை நெடில்தொடர்க் குற்றியலுகரங்கள். அது என்பது முற்றியலுகரம் ஆகும்.

Question 94 of 100
94. Question
94) பொருந்தாத சொல்லை எழுதுக
Correct
விளக்கம்: அரசு என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் எய்து, மூழ்கு, மார்பு ஆகியவை இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

Question 95 of 100
95. Question
95) பொருந்தாத சொல்லை எழுதுக.
Correct
விளக்கம்: பண்பு, மஞ்சு, கண்டு மென்தொடர்க் குற்றிலுகரச் சொற்கள். எஃகு என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரமாகும்.

Question 96 of 100
96. Question
96) கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது எவ்வாறு ஒலிக்கும்?
Correct
விளக்கம்: கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரையாகவே ஒலிக்கிறது.

Question 97 of 100
97. Question
97) ஒன்று என்று குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்?
Correct
விளக்கம்: ஒன்று என்ற குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவு 2. ஒ-1 மாத்திரை. ன்-½ மாத்திரை று-½ மாத்திரை (சொல்லின் இறுதியில் வருவதால று தனது 1 மாத்திரை அளவிலிருந்து ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்)

Question 98 of 100
98. Question
98) பொருந்தாததைத் தேர்க.
Correct
விளக்கம்: கழுகு, சிங்கம், மலை ஆகியவை அஃறிணை ஆண் என்பது ஆறறிவுக் கொண்ட மனிதனைக் குறிப்பதால் அது உயர்திணை

Question 99 of 100
99. Question
99) தவறானைத் தேர்க.
Correct
விளக்கம்: பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது பேச்சுமொழி. மேலும், பேச்சுமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

Question 100 of 100
100. Question
100) எனப்படுவது+யாது என்பது எவ்வாறு புணரும்?
Correct
விளக்கம்: எனப்படுவது + யாது = எனப்படுவதியாது. எனப்படுவது என்பதிலுள்ள உகரமானது இகரமாக திரிந்து எனப்படுவதியாது என மாறுகிறது.

Leaderboard: 7th Tamil Unit 1 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
Question no 14,29,33,34,35,36,37,30 check the answers
Pl check 14th
Most questions rong answeraa set panni irukinga sir
Yes
pls check question 29,30,33,34,35,36,37
14,30,33,34,36,37,51 check the answer
Please check 14,29,33,37,91
Most questions rong answeraa set panni irukinga sir
2nd question kaadum kadalum inbam tharubavai nu explain pannirukinga, ans 1 and 3 nu mention pannirukinga