November 1st Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, எத்தனை மாநிலங்களில் இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் இருக்கும்?
Correct
• 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தலா ஒரு இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் அமையப்பெறும். கால்நடைகளுக்கான புதிய ஊக்கமருந்து அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் வணிக ரீதியான விற்பனைக்கு முன்னதாக அவை இராசாளிகளில் பரிசோதிக்க -ப்பட வேண்டும் என்றும் இந்தத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இந்தச்செயல்திட்டத்தை தேசிய வனவுயிரி வாரியம் அங்கீகரித்துள்ளது.
Incorrect

Question 2 of 50
2. Question
அண்மையில், இந்திய மற்றும் கனடிய ஆராய்ச்சியாளர்கள், எந்த நாகரிக காலத்தில் பால் உற்பத்தி மேற்கொண்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்?
Correct
• கிமு 2500’இல் சிந்து சமவெளி நாகரிகத்தில் பால் உற்பத்தி இருந்ததை இந்தியா மற்றும் கனடாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. பாலுற்பத்தியின் ஆரம்பகால ஆதாரம் இதுவாகும். குஜராத்தின் கிராமப்புறப் பகுதியான கோட்டாடா பத்லியின் தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எச்சத்தின் வேதியியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் கிடைத்தன; அம்முடிவுகள் அவற்றில் பால் லிப்பிட்கள் இருப்பதைக் காட்டின.

Question 3 of 50
3. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IndiGenomes’ என்பதை வெளியிடும் நிறுவனம் எது?
Correct
• அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) தொகுதி ஆய்வகங்களான – CSIR -மரபணுத் தொகுதியியல் & ஒருங்கிணைந்த உயிரியல், தில்லி மற்றும் ஐதராபாத்தின் CSIR-செல்லுலார் & மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவை இந்திய மரபணுக்கள் குறித்த ஓராய்வை மேற்கொண்டன. ‘நியூக்ளிக் ஆஸிட் ரிசர்ச்’ என்ற அறிவியல்பூர்வ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய மாதிரிகளில் 32.23% தனித்துவமானதாக உள்ளது. அவையனைத்தும் இந்தியாவில் இருந்து வரிசைப் -படுத்தப்பட்ட மாதிரிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

Question 4 of 50
4. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, NISAR செயற்கைக்கோளை, எந்நாட்டோடு இணைந்து இந்தியா ஏவவுள்ளது?
Correct
• 2+2 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலுக்குப்பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, NASA-ISRO செயற்கை துளை ராடார் (NISAR) செயற்கைக்கோள் ஆனது 2022’க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி சூழல் விழிப்புணர்வு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) ஆகியவை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் ஒத்துழைக்கும்.

Question 5 of 50
5. Question
ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருதை வென்ற இந்திய அமைப்பு எது?
Correct
• ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருது வென்றவர்களுள் ஒருவராக இந்தியாவைச்சார்ந்த Global Himalayan Expedition அறிவிக்கப்பட்டுள்ளது. GHE என்பது ஓர் இந்திய அமைப்பாகும்; இது, தொலைதூர சமூகங்களுக்கு சூரிய ஆற்றலை அணுக உதவுவதற்காக சுற்றுலாவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

Question 6 of 50
6. Question
Global Investment Trends Monitor’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் & முதலீட்டு அமைப்பான UNCTAD, “உலகளாவிய முதலீட்டு போக்குகள் கண்காணிப்பு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின் அண்மைய பதிப்பின்படி, கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 49% அளவுக்கு சரிந்துள்ளது. இந்தச்சரிவு COVID-19 தொற்றின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வளர்ந்த பொருளாதாரங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

Question 7 of 50
7. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில்’ சேவை தொடங்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
• லாகூரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC)கீழ் முதல் போக்குவரத்து திட்டத்தை பாகிஸ்தான் அண்மையில் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டம், ஆறாண்டுகாலத்தில், $2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த லாகூர் ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில், சீன- பாகிஸ்தான் உறவுகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 250,000’க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரயில் சேவையைப் பயன்படுத்தி பயணிக்க முடியும்.

Question 8 of 50
8. Question
பெண்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக எந்தத் தொழில்நுட்ப நிறுவனம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கூட்டிணைந்துள்ளது?
Correct
• மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கூட்டிணைந்ததாக அறிவித்தது. இக்கூட்டாண்மை, அடுத்த 10 மாதங்களில் இந்தியாவில் உள்ள இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. 70 ம.நேரத்திற்கும் மேலான பாடத்திட்ட உள்ளடக்கத்தை மைக்ரோசாப்ட் இலவசமாக வழங்கவுள்ளது.

Question 9 of 50
9. Question
Secure Application for Internet–SAI என்ற செய்தியிடல் செயலியை உருவாக்கியுள்ள ஆயுதப்படை எது?
Correct
• ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும்.
• இது, ‘end-to-end’ குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் Secure Application for Internet – SAI செயலி திகழ்கிறதுIncorrect
• ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும்.
• இது, ‘end-to-end’ குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் Secure Application for Internet – SAI செயலி திகழ்கிறது -
Question 10 of 50
10. Question
நிலம் மற்றும் சொத்துப் பதிவுக்காக, ‘தரணி’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Correct
• தெலுங்கானா மாநில முதலமைச்சார் கே சந்திரசேகர் இராவ் அண்மையில் நிலம் மற்றும் சொத்துப் பதிவுக்காக, ‘தரணி’ என்ற வலைதளத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம், நிலம் மற்றும் சொத்துப் பதிவுகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்திய முதல் மாநிலமாக தெலுங்கானா மாநிலம் மாறியுள்ளது. இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படாத சொத்து விவரங்கள் சட்டத்துக்குப் புறம்பானதாக கருதப்படுவதோடு, அவை மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்கவும்படாது.

Question 11 of 50
11. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘DRIP’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
• உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு `10,211 கோடி செலவிடப்படவுள்ளது. பத்தாண்டு காலத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

Question 12 of 50
12. Question
நலவாழ்வு & மருந்துத்துறையில் ஒத்துழைப்பு நல்கும் இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• நலவாழ்வு & மருந்துத்துறையில் இந்தியா-கம்போடியாவுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தி -ற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இருநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் நலவாழ்வுத்துறையில் இந்தியா, கம்போடியா நாடுகள் இடையேயான கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படும். இந்த ஒப்பந்தம், இருநாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாளிலிருந்து ஐந்தாண்டு வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

Question 13 of 50
13. Question
தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை பணியிடைநீக்கம் செய்தவர் யார்?
Correct
• தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை இந்தியக் குடியரசுத்தலைவர் இராம் நாத் கோவிந்த் பணியிடைநீக்கம் செய்துள்ளார். தில்லி பல்கலைக்கழக சட்டவிதிகளின்கீழ், கடும் முறைகேடு, கடமைகளை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அர்ப்பணிப்பற்ற தன்மை ஆகியவ -ற்றின் அடிப்படையில் இப்பணியிடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தியாகி, கடந்த 2016 மார்ச்சில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

Question 14 of 50
14. Question
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் பங்கேற்ற 19ஆம் கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?
Correct
• மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 19ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். SCO’இன் தலைமையகம் சீனத்தின் ஷாங்காயில் உள்ளது. சீனா, இந்தியா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், பாகிஸ்தான், இரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்புநாடுகளை SCO தன்னகத்தே கொண்டுள்ளது.

Question 15 of 50
15. Question
இந்திய வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்தப் பருவமழை, இந்தியாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டது?
Correct
• 2020 அக்டோபர்.28 அன்று தென்மேற்குப் பருவமழை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின்கீழ் (பின்னடையும் பருவமழை என்றும் அழைக்கப்ப -டுகிறது) தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மிகக்கனமழை பொழியும்.

Question 16 of 50
16. Question
பத்தாவது இந்தியா-ஐக்கியப்பேரரசு பொருளாதார மற்றும் நிதியியல் பேச்சுவார்த்தையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
அரசுப்பள்ளி மாணாக்கருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?
Correct
• NEET தேர்வில் தெரிய அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த மாணாக்கருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த மசோதாவின்படி, மாநில அரசால் நிர்வகிக்கப்பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

Question 18 of 50
18. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சர்தார் படேல் விலங்கியல் பூங்கா’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் ‘ஜங்கிள் சபாரி’ என அழைக்கப்படும் சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த விலங்கியல் பூங்கா, ‘ஒற்றுமை சிலை’க்கு மிகவருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஆரோக்கிய வனம்’ என்ற ஒன்றையும் பிரதமர் திறந்து வைத்தார். சுமார் நானூறு வகையான தாவரம் மற்றும் மர வகைகளை இது கொண்டுள்ளது.

Question 19 of 50
19. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு ஆணையக் கூட்டத்துடன் தொடர்புடையது?
Correct
• 8ஆவது இந்திய-மெக்ஸிகோ கூட்டு ஆணையக் கூட்டமானது அண்மையில் காணொலிக்காட்சிமூலம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு இந்திய வெளியறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் மெக்ஸிக பிரதிநிதி மார்செலோ எப்ரார்ட்டும் தலைமைதாங்கினர். இருநாடுகளும், பொருளாதார ஆற்றலை ஊக்குவிக்கவும், அவர்களின், ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’யை வலுப்படுத்தவும் அப்போது ஒப்புக்கொண்டன.

Question 20 of 50
20. Question
QCI’உடன் இணைந்து, உட்கட்டமைப்புத்துறைக்கு, ‘தேசிய திட்டம் & திட்ட மேலாண்மைக் கொள்கை கட்டமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
Correct
• இந்தியாவின் உட்கட்டமைப்புத்துறையில் தீவிர சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் NITI ஆயோக், இந்திய தரக்கவுன்சில் ஆகியவை இணைந்து தேசிய திட்டம் மற்றும் திட்ட மேலாண்மைக் கொள்கை கட்டமைப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
• மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு, குறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய திட்ட நடைமுறை மற்றும் திட்டமேலாண்மைக்கான ‘இந்திய உட்கட் -டமைப்பு அறிவுசார் முறை’ என்ற நூலை வெளியிட்டார்.Incorrect
• இந்தியாவின் உட்கட்டமைப்புத்துறையில் தீவிர சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் NITI ஆயோக், இந்திய தரக்கவுன்சில் ஆகியவை இணைந்து தேசிய திட்டம் மற்றும் திட்ட மேலாண்மைக் கொள்கை கட்டமைப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
• மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு, குறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய திட்ட நடைமுறை மற்றும் திட்டமேலாண்மைக்கான ‘இந்திய உட்கட் -டமைப்பு அறிவுசார் முறை’ என்ற நூலை வெளியிட்டார். -
Question 21 of 50
21. Question
வழக்குரைஞர்கட்கு காப்பீடு வழங்குவதற்காக `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
• தேசிய தலைநகரத்தில் வசிக்கும் வழக்குரைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக தில்லி அமைச்சரவை, `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் வழக்குரைஞர்கள் நலத்திட்டத்தின்கீழ், `5 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் `10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. வழக்குரைஞர்களின் நலனுக்காக இந்நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைக்க, 13 பேர் கொண்ட குழு இராகேஷ் குமார் கன்னா தலைமையில் அமைக்கப்பட்டது.

Question 22 of 50
22. Question
எந்தத் தயாரிப்பின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கு BIS குறியீட்டை அரசு கட்டாயமாக்கியுள்ளது?
Correct
• BIS குறியீடற்ற எந்தவொரு தோல் பாதணிகளையும் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வணிகம் செய்யவோ, இறக்குமதி செய்யவோ (அ) சேமித்து வைக்கவோ முடியாது என இந்திய அரசு அறிவித்து உள்ளது. தொழிற்துறை & உள்நாட்டு வணிகத்தை ஊக்கப்படுத்துவதற்கான துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியாவில் மலிவான தோல் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 23 of 50
23. Question
கீழ்க்காண்பனவற்றுள் அண்மையில் கப்பல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு மசோதா எது?
Correct
• கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா -2020’க்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
• கப்பல் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துக்களை அனுப்பலாம்.Incorrect
• கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா -2020’க்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
• கப்பல் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துக்களை அனுப்பலாம். -
Question 24 of 50
24. Question
. “SERB POWER” திட்டமானது அரசாங்கத்தால் எந்தப் பிரிவை இலக்காகக்கொண்டு தொடங்கப்பட்டது?
Correct
• அறிவியல் & தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதற்கு பெண் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட SERB POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) திட்டத்தை அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்திய அரசின் அறிவியல் & தொழினுட்பத்துறையின் சட்டரீதியான அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

Question 25 of 50
25. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ANTRIX கழகம் என்பது எவ்வமைப்பின் வணிகப் பிரிவாகும்?
Correct
• ANRIX கார்ப்பரேஷன் என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) வணிகப்பிரிவாகும். இது விண்வெளித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. 2005ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்காக பெங்களூரைச் சார்ந்த துளிர் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவிற்கு $1.2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் ANTRIX கார்ப்பரேஷனிடம் கோரியுள்ளது.

Question 26 of 50
26. Question
T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் யார்?
Correct
• கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெய்ல், சமீபத்தில் T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச்சாதனையை புரிந்தார். 690 சிக்ஸர்களை அடித்த கீரோன் பொல்லார்ட் இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். IPL 2020’இன் தற்போதைய பதிப்பில், கிறிஸ் கெய்ல், இதுவரை மொத்தம் 276 ரன்கள் எடுத்துள்ளார்.

Question 27 of 50
27. Question
மங்களூரு வானூர்தி நிலையத்தை ஐம்பதாண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள குழுமம் எது?
Correct
• அண்மையில், அதானி குழுமமானது மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கைப்பற்றியது. PPP முறைமூலம் மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய மூன்று வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகள், மேலாண்மை & மேம்பாட்டுக்கான சலுகை ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டன.

Question 28 of 50
28. Question
கல்வியின் நிலை குறித்த ஆண்டறிக்கை (ASER) 2020’இன்படி, கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைகளில் எத்தனை சதவீதம் பேர் நேரலை ஆன்லைன் வகுப்புகளுக்கான அணுகலைப் பெறுகின்றனர்?
Correct
• கிராமப்புற இந்தியா முழுவதும் சீரற்ற முறையில் 60,000 மாணாக்கரிடம் தொலைபேசி வாயிலாக மேற்கொண்ட கருத்துக்கேட்பின் அடிப்படையில், கல்வி நிலை குறித்த அறிக்கை – 2020 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைகளில் 11% பேருக்கு மட்டுமே நேரலை இணையவழி வகுப்புகளுக்கான அணுகல் கிடைக்கின்றது. கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைக -ளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே இணையவழிக் கற்றல் அணுகல் இருந்தது. நாட்டில் நிலவும் டிஜிட்டல் சமத்துவமின்மையை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Question 29 of 50
29. Question
அண்மையில் திறக்கப்பட்ட, “கெவாடியா சுற்றுலா சுற்று” என்பதன் கருப்பொருள் என்ன?
Correct
• அண்மையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், சிலை வளாகத்தைச் சுற்றியுள்ள 17 சுற்றுலாத் திட்டங்களைத் திறந்து வைத்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
• பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த 17 சுற்றுலாத் திட்டங்களும், “ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ், “கெவாடியா சுற்றுலா சுற்று” என அழைக்கப்படுகின்றன.Incorrect
• அண்மையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், சிலை வளாகத்தைச் சுற்றியுள்ள 17 சுற்றுலாத் திட்டங்களைத் திறந்து வைத்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
• பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த 17 சுற்றுலாத் திட்டங்களும், “ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ், “கெவாடியா சுற்றுலா சுற்று” என அழைக்கப்படுகின்றன. -
Question 30 of 50
30. Question
பொது விவகாரங்கள் அட்டவணை-2020’இல் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
• பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்ட பொது விவகாரங்கள் குறியீடு–2020’இன்படி, கேரள மாநிலம், பெரிய மாநிலங்கள் பிரிவில் சிறந்த ஆளுகை உடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
• நிர்வாக செயல்திறனின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இப்பட்டியலில் கடைசி இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.Incorrect
• பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்ட பொது விவகாரங்கள் குறியீடு–2020’இன்படி, கேரள மாநிலம், பெரிய மாநிலங்கள் பிரிவில் சிறந்த ஆளுகை உடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
• நிர்வாக செயல்திறனின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இப்பட்டியலில் கடைசி இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது. -
Question 31 of 50
31. Question
பிரமோஸ் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையை சோதனை செய்ததற்காக, அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டைகர்ஷார்க்ஸ் படையணி’, எந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்?
Correct
• வங்காள விரிகுடாவில், சுகோய் போர் விமானத்திலிருந்து, ’பிரமோஸ்’ என்ற சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையின் புதிய பதிப்பை இந்திய வான்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இவ்விமானம் தஞ்சாவூரைச் சார்ந்த டைகர்ஷார்க்ஸ் படையணிக்கு சொந்தமானதாகும். அண்மையில், இந்தியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையான, ‘பிரமோசையும்’ கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ‘ருத்ரம்-1’ஐயும் பரிசோதித்தது.

Question 32 of 50
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆரம்ப்’ என்பது எந்தப் பயனாளிகளுடன் தொடர்புடையது?
Correct
• ‘ஆரம்ப்’ என்ற பெயரில் இந்திய குடிமைப்பணிகள் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டமானது கடந்த 2019ஆம் ஆண்டில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. சமீபத்தில், பிரதமர், LBSNAA முசோரியில் இந்திய குடிமைப்பணிகள் பயிற்சிபெறும் அதிகாரிகளுடன் காணொலிக்காட்சியின் ஊடாக கலந்துரையாடினார். இது, ‘AARAMBH’ திட்டத்தின் ஒருபகுதியாகும்.

Question 33 of 50
33. Question
வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திற்கான திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
• சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அண்மையில், பொது வழங்கல் முறைமைமூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கினார். மெய்நிகராக, மாநில உருவான நாளன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றை ஒழிப்பதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரும்பு, வைட்டமின் B12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும் இச்செறிவூட்டப்பட்ட வலுவூட்டப்பட்ட அரிசி.

Question 34 of 50
34. Question
ஏழைக்குடும்பங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ‘இலவச இணையம்’ திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய மாநிலம் எது?
Correct
• இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஏழை வீடுகளுக்கு இலவச, அதிவேக இணையத்தை வழங்க கேரள மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. இதன்மூலம், இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய முதன்மை மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இது, நடுவணரசின் பாரத்நெட் திட்டத்திற்கு ஒத்ததாகும். கேரள கண்ணாடியிழை வலையமைப்புத் திட்டம் அல்லது KFON, பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிட் தலைமையிலான கூட்டமைப்பிற்கு இதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

Question 35 of 50
35. Question
COVID-19 குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு நிமிட இணையவழி விளையாட்டை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
• மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு டிஜிட்டல் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். சிறார்கள் மத்தியில் விழிப்புண -ர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த விளையாட்டு 12 மொழிகளில் இலவசமாகக் கிடைக்கப்பெறுகிறது. இந்த விளையாட்டு, பிரபல ‘சூப்பர் மேரியோ’ விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Question 36 of 50
36. Question
இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து, “உத்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு” என்றவொன்றை அமைக்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
• AYUSH துறையின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், AYUSH துறை அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘உத்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு’ ஏற்படுத்தவுள்ளது. AYUSH அமைச்சகத்தின் உத்திகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தப் பிரிவு செயல்படும். AYUSH அமைச்சகத்தின் திட்டங்களை செயல்படுத்த இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு தனது பயிற்சிபெற்ற நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும்.

Question 37 of 50
37. Question
அலெக்சிஸ் வாஸ்டைன் போட்டியில் வென்ற சஞ்சீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
• 91 கிலோ பிரிவில் நாண்டஸில் நடந்த அலெக்சிஸ் வாஸ்டைன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றார். 52 கிலோ பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றார். காயம் காரணமாக போட்டியாளர் வெளியேறிய காரணத்தால் 75 கிலோ பிரிவில், ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். கவீந்தர் சிங் பிஷ்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவையல்லாமல், இந்தியா, மேலும் மூன்று வெண்கலப்பதக்கங்களை வென்றது.

Question 38 of 50
38. Question
கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், கீழ்க்காணும் எந்தத் தேதியில் உருவாக்கப்பட்டன?
Correct
• நவ.1ஆம் தேதி, தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாள் மாநில நாள் அல்லது மாநில உருவாக்கம் நாள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 1956’இல் உருவாக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா 1966’இல் உருவாக்கப்பட்டன.

Question 39 of 50
39. Question
தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
Correct
• தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்விதிகள், பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு பணியமர்த்துநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சங்கங்கள் தாங்கள் பணிநிறுத்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக முன்னறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் அது கட்டளையிடுகிறது. தொழிலாளர் குறியீடுகளை, 2021 ஏப்.1 முதல் செயல்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

Question 40 of 50
40. Question
3. BRICS வர்த்தக கருத்துக்களம், 2020’ஐ நடத்திய நாடு எது?
Correct
• BRICS வர்த்தக கருத்துக்களத்தின் முக்கியமான ஆண்டு நிகழ்வான BRICS வர்த்தக கருத்துக்களம், 2020 ஆனது அக்டோபர்.20-28 வரை இரஷ்யாவால் நடத்தப்பட்டது. இரஷ்யாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை சேம்பர் தலைவர் BRICS வணிக கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ளார். “BRICS Business Partnership: Common Vision for Sustainable Inclusive Development” என்ற தலைப்பில் காணொலிக்காட்சி வழியாக இந்தக் கருத்துக்களம் நடைபெற்றது.

Question 41 of 50
41. Question
வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக, எந்த அமைப்பை அரிசி ஆலைகளுடன் இணைந்துகொள்ள அரசு கேட்டுக்கொண்டுள்ளது?
Correct
• வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யுமாறு இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நியாய விலைக் கடைகள் மற்றும் பிற நலத்திட்டங்கள்மூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்குமாறு, அந்தக் கழக்கத்திடம் கோரப்பட்டுள்ளது. “வலுவூட்டப்பட்ட அரிசி குறித்த நடுவணரசின் திட்டம் மற்றும் பொது வழங்கல் முறைமை வழியாக விநியோகித்தல்” என அடையாளம் காணப்பட்ட 15 மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள், தலா ஒரு மாவட்டத்தில் இதனை செயல்படுத்துகின்றன.

Question 42 of 50
42. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ருதுஜா போசாலேவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
• எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற $15,000 டாலர் பரிசுத்தொகை கொண்ட ITF பெண்கள் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், செக் குடியரசின் அன்னா சிஸ்கோவாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய டென்னிஸ் வீரர் ருதுஜா போசலே (24) ஒற்றையர் பட்டத்தை வென்றார். அவர் முன்னாள் ஆசிய ஜூனியர் சாம்பியனும் தேசிய மகளிர் சாம்பியனும் ஆவார்.

Question 43 of 50
43. Question
அண்மையில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) வெளியிட்ட ஓரரறிக்கையின்படி, அடுத்த சில பத்தாண்டுகளில் எத்தனை இந்திய நகரங்கள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்?
Correct
• இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த சில தசாப்தங்களில் முப்பது இந்திய நகரங்களில் நீர் பற்றாக்குறையானது அதிகரிக்கும். ‘WWF Water Risk Filter’ அறிக்கையின்படி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முப்பது இந்திய நகரங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
• உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.Incorrect
• இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த சில தசாப்தங்களில் முப்பது இந்திய நகரங்களில் நீர் பற்றாக்குறையானது அதிகரிக்கும். ‘WWF Water Risk Filter’ அறிக்கையின்படி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முப்பது இந்திய நகரங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
• உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. -
Question 44 of 50
44. Question
மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகத்துடன் இணைந்து MSME கடன் நலக் குறியீட்டை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• டிரான்ஸ் யூனியன் CIBIL ஆனது மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகத்துடன் இணைந்து ‘MSME கடன் நலக்குறியீட்டை’ வெளியிட்டுள்ளது. இக்குறியீடு, இந்தியாவில் MSME துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை அளவிடுகிறது.

Question 45 of 50
45. Question
வணிக எதிர்பார்ப்பு ஆய்வை (Business Expectation Survey) நடத்துகிற அமைப்பு எது?
Correct
• வணிக எதிர்பார்ப்பு ஆய்வினை தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான கவுன்சில் (NACER) நடத்துகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் வணிக நம்பிக்கைக் குறியீடானது ஆண்டின் முதல் காலாண்டில் 46.4 ஆகக்குறைந்து, நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 65.5 ஆக உயர்ந்து காணப்படுகிறது. NCAER என்பது புது தில்லியில் அமைந்துள்ள, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலாப-நோக்கற்ற மதியுரையகமாகும். நந்தன் நிலகேனி, NCAER நிர்வாகக் குழுவின் தலைவராகவும், Dr சேகர் ஷா, NCAER’இன் தற்போதைய தலைமை இயக்குநராகவும் உள்ளனர்.

Question 46 of 50
46. Question
காற்றின் தரமேம்பாட்டிற்காக, 15 மாநிலங்களுக்கு, நடுவணரசு, எவ்வளவு நிதியுதவி அறிவித்துள்ளது?
Correct
• பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு 15 மாநிலங்களுக்கு `2200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த இந்நிதியுதவி பயன்படுத்தப்படும். காற்றின் தர மேம்பாட்டிற்காக வழங்கப்படும் மானியத்தின் முதல் தவணை இதுவாகும்.

Question 47 of 50
47. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராஜா கிருஷ்ணமூர்த்தி, மூன்றாவது முறையாக எந்த நாட்டின் சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Correct
• இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜனநாயக பேரவை உறுப்பினரான இராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர், எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது குடும்பம் தமிழ்நாட்டில் வசித்து வந்தது. இவர் முதன்முதலாக கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Question 48 of 50
48. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, லுஹ்ரி நிலை-I நீர்மின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• 210 MW லுஹ்ரி நிலை-1 நீர்மின் திட்டத்திற்கு 1,810 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் பாய்ந்தோடும் சட்லுஜ் ஆற்றில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு 758.20 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிட் செயல்படுத்துகிறது.

Question 49 of 50
49. Question
பிரசாத் திட்டத்தின்கீழ், எந்த நகரத்தில், ‘சுற்றுலா உதவி மையம்’ திறக்கப்பட்டுள்ளது?
Correct
• மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின்கீழ், “குருவாயூரின் வளர்ச்சி, கேரளா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா உதவி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
• Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தால் 2014-15’இல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.Incorrect
• மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின்கீழ், “குருவாயூரின் வளர்ச்சி, கேரளா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா உதவி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
• Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தால் 2014-15’இல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. -
Question 50 of 50
50. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கூட்டுப்பணிக்குழுவில், இந்தியாவுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
• முதலீடுகள் தொடர்பான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உயர்மட்ட கூட்டுப்பணிக் குழுவின் எட்டாவது கூட்டத்தை இந்தியா மெய்நிகர் வடிவத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அபுதாபி அமீரகத்தின் நிர்வாக சபை உறுப்பினர் சேக் ஹமேத் பின் சையீத் அல் நயான் ஆகியோர் தலைமைதாங்கினர். ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளா -தார உறவை மேம்படுத்துவதற்காக, கடந்த 2012ஆம் ஆண்டில் கூட்டுப்பணிக்குழு உருவாக்கப்பட்டது.

Leaderboard: November 1st Week 2020 Current Affairs Online Test Tamil