October 2nd Week 2020 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘கரியமில உமிழ்வைத்தடுப்பது & எரிசக்தி மாற்றுத் திட்ட’த்திற்கான எந்த நாட்டின் தூதரகத்துடனான நோக்க அறிக்கையில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது?
Correct
தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில உமிழ்வைத் தடுப்பது மற்றும் எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்குமான நோக்க அறிக்கை ஒன்றில் NITI ஆயோக்கும், புது தில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் கையெழுத்திட்டுள்ளன. கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழிலமைப்புகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள்போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை இந்த ஒப்பந்தத்தின்மூலம் NITI ஆயோக்கும் நெதர்லாந்து தூதரகமும் உருவாக்கும்.
Incorrect

Question 2 of 50
2. Question
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊக்கியுடன்கூடிய எந்த மீயொலி ஏவுகணை, சமீபத்தில், வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது?
Correct
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களைக் கொண்டு தயாரான பிரமோஸ் ஏவுகணை, சமீபத்தில், வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊக்கி (booster), பறக்கும் பிரிவு போன்ற பல்வேறு உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய நவீன ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பாலாசூரில் அமைந்துள்ள சோதனை தளத்திலிருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது அதன் முந்தைய 290 கிமீ வரம்பிலிருந்து சுமார் 400 கிமீ என்ற புதிய வரம்பிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

Question 3 of 50
3. Question
எந்த வளைகுடா நாட்டின் எமிராக (ஆட்சியாளர்) ஷேக் நவாப் பதவியேற்றுள்ளார்?
Correct
ஷேக் நவாப் என்றும் அழைக்கப்படும் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா குவைத்தின் எமிர் (தலைவர்) ஆக பதவியேற்றுள்ளார். முந்தைய ஆட்சியாளர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா, சமீபத்தில், அமெரிக்காவில் தனது 91ஆம் வயதில் காலமானார். ஷேக் சபா, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சிசெய்தார்; புதிய பட்டத்தரசரான ஷேக் நவாபுக்கு தற்போது 83 வயதாகிறது.

Question 4 of 50
4. Question
16 ஆண்டுகளுக்குப் பிறகு கோலார் தங்க வயல்களில் ஆய்வு செய்யத் தொடங்கிய நிறுவனம் எது?
Correct
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல்களை (KGF) கனிம ஆய்வுக் கழகம் ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளது. கனிம ஆய்வுக் கழகம் என்பது சுரங்கங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மினி இரத்னா தகுதிபெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த ஆய்வு நடவடிக்கை, கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தங்க வயலை ஆராய்வது தொடர்பான பாரத் தங்கங்கள் ஆய்வு நிறுவனத்தின் சிக்கலைத் தீர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Question 5 of 50
5. Question
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் கூற்றுப்படி, முழு வளர்ச்சியடைந்த ஓர் இந்திய ஆண்மகனுக்கான புதிய சிறந்த எடை (ideal weight) என்ன?
Correct
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனமானது ஓர் இந்திய ஆணின் சிறந்த உடல் எடையை 2010ஆம் ஆண்டிலிருந்த 60 கிலோவிலிருந்து தற்போது 65 ஆகவும், இந்தியப் பெண்ணின் சிறந்த உடல் எடையை ஐம்பது கிலோவிலிருந்து ஐம்பத்தைந்து ஆகவும் உயர்த்தியுள்ளது. மேலும், வயது வந்த இந்தியர்களுக்கான வரம்பு தற்போது 19-39ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2010ஆம் ஆண்டில் 20-39ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Question 6 of 50
6. Question
இந்திய ஆயுதப்படை வீரர்கள் உருவாக்கும் புத்தாக்கங்களை அடையாளங்காணுவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ள முன்னெடுப்பின் பெயர் என்ன?
Correct
iDEX4Fauji என்பது இந்திய ஆயுதப்படை வீரர்களால் உருவாக்கப்படும் புத்தாக்கங்களை இனங்காண பாதுகாப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். ஆயுதப்படைகளின் உறுப்பினர்க -ளால் இனங்காணப்பட்ட புத்தாக்கங்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் / கள அமைப்புகளிடமிருந்து புதுமையான எண்ணங்கள் மேலோங்கச் செய்வதை இது அதிகரிக்கும். பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்அப் சவால்-4’ஐஉம் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

Question 7 of 50
7. Question
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக, எந்த நாட்டுடன் “உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை” இந்தியா அமைக்கவுள்ளது?
Correct
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, இந்தியாவும் வங்கதேசமும் ஓர், “உயர்மட்ட கண்காணிப்புக்குழுவை” அமைக்க உத்தேசித்துள்ளன. மெய்நிகராக நடைபெற்ற, இருநாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆலோசனை ஆணையக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கண்காணிப்புக் குழுவிற்கு வங்கதேசத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளரும் வங்கதேசத்துக்கான இந்திய உயராணையரும் இணைந்து தலைமை தாங்குவார்கள்.Incorrect
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, இந்தியாவும் வங்கதேசமும் ஓர், “உயர்மட்ட கண்காணிப்புக்குழுவை” அமைக்க உத்தேசித்துள்ளன. மெய்நிகராக நடைபெற்ற, இருநாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆலோசனை ஆணையக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கண்காணிப்புக் குழுவிற்கு வங்கதேசத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளரும் வங்கதேசத்துக்கான இந்திய உயராணையரும் இணைந்து தலைமை தாங்குவார்கள். -
Question 8 of 50
8. Question
CSIR – ஊரக வளர்ச்சிக்கான தொழினுட்பங்களை’ அறிமுகப்படுத்தியுள்ள நடுவணமைச்சகம் எது?
Correct
மத்திய அறிவியல் & தொழினுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஊரக வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். CSIR, உன்னத் பாரத் அபியான், ஐஐடி தில்லி மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றின் கூட்டு முயற்சியின்கீழ் இந்தத் தொழினுட்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தொழினுட்பங்களுள் மேம்பட்ட தேன்கூடு, ஈரப்பதமற்ற உலர்த்தி மற்றும் வேளாண் கழிவுகளை அடிப்படையாகக்கொண்ட மக்குந்தட்டுகள் ஆகியன அடங்கும்.

Question 9 of 50
9. Question
‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற முழக்கம் கீழ்க்காணும் எந்தத்திட்டம் அதன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் பயன்படுத்தப்பட்டது?
Correct
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறத் திட்டத்தின் (SBM-U) ஆறாமாண்டு நிறைவைக்கொண்டாடுகிறது. இதனை நினைவுகூரும் வகையில், ‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி மலங்கழித்தலற்ற நகர்ப்புறங்கள் (ODF) என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.________________________________________

Question 10 of 50
10. Question
இந்தியாவில் உள்ள மரபுசாரா துறைகள் & நுண் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக $1.9 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ள நாடு எது?
Correct
மரபுசாரா துறை தொழிலாளர்கள் உட்பட இந்தியாவில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை $1.9 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Question 11 of 50
11. Question
உலக நலவாழ்வு அமைப்பால், “நலமான முதுமை தசாப்தம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள தசாப்தம் எது?
Correct
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) 2020-2030’ஐ “நலமான முதுமை தசாப்தம்” என அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும் அக்.1 அன்று பன்னாட்டு முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. முதியோரின் நலன் மற்றும் சிறப்புத்தேவைகளில் கவனஞ்செலுத்துவதற்காக ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. “Pandemics: Do They Change How We Address Age and Ageing?” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 12 of 50
12. Question
இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையின் பெயரென்ன?
Correct
மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையை, “பழங்குடியினர் இந்தியா மின்-சந்தை” என்ற பெயரில் தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இச்சந்தை தொடங்கப்பட்டது. TRIFED’இன் இம்முயற்சி, நாட்டின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த பழங்குடி நிறுவன -ங்களின் உற்பத்தி மற்றும் கைவினைப்பொருட்களைக் விற்பனை செய்யும்.

Question 13 of 50
13. Question
பதிப்பாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்கத்திற்காக பணஞ்செலுத்த உறுதிபூண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
உலகெங்குமிருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இதற்காக, ‘கூகுள் நியூஸ் ஷோகேஸ்’ என்றவொன்றை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

Question 14 of 50
14. Question
‘Asteroid Mining Robot’ என்று பெயரிலான உலகின் முதல் சுரங்கப்பணி மேற்கொள்ளும் எந்திரத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ள நாடு எது?
Correct
உலகின் முதல் சுரங்கப் பணி மேற்கொள்ளும் ரோபோவை வரும் நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு சீனா அனுப்பவுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள தனியார் நிறுவனமான ஆர்ஜின் ஸ்பேஸ் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோ, “சிறுகல் சுரங்க ரோபோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரோபோ இடம்பெற்றுள்ள NEO-1 என்ற விண்கலத்துடன் சீனத்தின் லாங் மார்ச் ஏவுகலம் விண்ணுக்குச் செல்லவுள்ளது.

Question 15 of 50
15. Question
“அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
Correct
மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது பட்டியலினத்தவர்களுக்கான கூட்டு மூலதன நிதியத்தின்கீழ், “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலினத்தைச் (SC) சார்ந்த மாணாக்கரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு எண்ணத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Question 16 of 50
16. Question
புதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?
Correct
புதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க இராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் மகளிர்க்கு அதிகாரமளிக்கும் விதமாக முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த முடிவை எடுத்துள்ளார். ‘சஹ்யோக் எவம் உபர் யோஜனா’வுக்கு `11 கோடி கூடுதல் செலவினத்துக்கும் அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மகளின் திருமணத் தேவைக்கு நிதி தேவைப்படும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

Question 17 of 50
17. Question
விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, எந்தப் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது?
Correct
விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, இந்தியக்கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டியுள்ளது. விரைவு ரோந்துக்கப்பல் வரிசையில் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பலாக இது உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட, அசாம் மாநிலத்தைச் சார்ந்த பதின்மவயது விடுதலைப் போராளியின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

Question 18 of 50
18. Question
இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) எவ்வாண்டில், வீனஸ் திட்டத்தை தொடங்கவுள்ளது?
Correct
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது வெள்ளிக் கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘வீனஸ்’ திட்டத்தை, எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவிள் தொடங்க முன்மொழிந்துள்ளது. பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES, இந்தப் பயணத்தில் ISRO உடன் கைகோர்க்கவுள்ளது. தற்போது, இருநாடுகளும் 2022’க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ISRO’இன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ குறித்து ஈடுபட்டு வருகின்றன.

Question 19 of 50
19. Question
எந்த அமைப்புக்கான புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ளார்?
Correct
இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இப்புதிய இலச்சினை, விளையாட்டு ஆளுமைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை திறமையாளர்களாக உருவாக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பயணத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கடந்த 1982’இல் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவப்பட்டது. இது, இந்தியாவில் விளையாட்டுக்கான மையமாக இருந்துவருகிறது.________________________________________

Question 20 of 50
20. Question
ஆபரேஷன் மை சகேலி’யைத் தொடங்கிய அமைப்பு எது?
Correct
தென்கிழக்கு இரயில்வே அமைப்பால், ‘ஆபரேஷன் மை சகேலி’ என்றவொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏறுமிடத்திலிருந்து இறங்குமிடம் வரை பெண் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதை இத்திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு சோதனைத் திட்டமாக, ஹெளரா – யெஷ்வந்த்பூர் துரந்தோ சிறப்பு இரயில், ஹெளரா – அகமதாபாத் சிறப்பு இரயில் மற்றும் ஹெளரா – மும்பை சிறப்பு இரயிலில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Question 21 of 50
21. Question
2020 அக்டோபர்.1 அன்று, எந்த ஆப்பிரிக்க நாடு தனது 60ஆவது விடுதலை நாளைக் கொண்டாடியது?
Correct
நைஜீரியா தனது 60ஆவது விடுதலை நாளை 2020 அக்.1 அன்று கொண்டாடியது. 1960 அக்.1 அன்று, நைஜீரியா, ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது, 2ஆம் எலிசபத் பேரரசியின் பிரதிநிதி, நைஜீரியாவின் அரசியலமைப்பை அந்நாட்டின் புதிய பிரதமரான அபுபக்கர் தபவா பலேவாவி -டம் ஒப்படைத்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்குப்பின், நைஜீரியா ஒரு குடியரசு நாடாக மாறியது.

Question 22 of 50
22. Question
10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம், எந்த நிறுவனத்துடனான `400 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பிரிவு, பத்து இலட்சம் பல்முனை கையெறி குண்டுகளுக்காக நாக்பூரைச் சார்ந்த எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனத்துடனான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) / டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தால் இந்தக் கையெறி குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னர், இதேபோன்ற தயாரிப்புகளை, ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியமானது இறக்குமதியோ அல்லது தயாரிக்கவோ செய்துகொண்டிருந்தன.

Question 23 of 50
23. Question
மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த எந்த முதன்மை போர் பீரங்கியிலிருந்து, DRDO, பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (anti-tank guided missile) பரிசோதனை செய்தது?
Correct
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் பொருத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (ATGM) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை, மகாராட்டிர மாநிலத்தின் அகமதுநகரிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த, ‘அர்ஜூன்’ என்ற முதன்மை போர் பீரங்கியிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ATGM, பல் வேறு தளங்களிலிருந்து ஏவுவதற்கான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Question 24 of 50
24. Question
2020 அக்டோபரில் நடத்தப்பட்ட, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் பெயர் என்ன?
Correct
அக்.2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, Vaishwik Bharatiya Vaigyanik (VAIBHAV) உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். இவ்வுச்சிமாநாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பன்னாட்டு மெய்நிகர் மாநாடாகும். இது, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இந்த உச்சிமாநாடு அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கித்தருகிறது.

Question 25 of 50
25. Question
கம்போடியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அதிகாரி யார்?
Correct
கம்போடியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார். இதை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 1999’ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான செல்வி. தேவயானி உத்தம் கோப்ரகடே, தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் இணைச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பெர்லின், இசுலா -மாபாத், ரோம் மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியத்தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

Question 26 of 50
26. Question
COVID-19 சிகிச்சைக்காக, மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR) COVID-19 தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ளது. ICMR மற்றும் ஹைதராபாத்தைச் சார்ந்த பயோலாஜிக்கல் E. லிட் ஆகியவை COVID-19 சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்புக்காக விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட எதிர்-ஊனீரை உருவாக்கியுள்ளன. இது, முன்னர், பல்வேறு வைரஸ் & பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ அறிவியலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Question 27 of 50
27. Question
சுவச் சுந்தர் சமுதாயிக் செளச்சாலயா பரப்புரையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
Correct
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சுவச் பாரத் திவாஸ் – 2020 கொண்டாடப்பட்டது; இதில், சுவச் பாரத் விருதுகள் வழங்கும் நிகழ்வும் அடங்கும். 2019 நவ.1 முதல் 2020 ஏப்ரல்.30 வரை ஏற்பாடு செய்யப்பட்ட சுவச் சுந்தர் சமுதாயிக் செளச்சாலயா பரப்புரையில், குஜராத் மாநிலத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் திருநெல்வேலிக்கு, ‘சிறந்த மாவட்ட விருது’ கிடைத்துள்ளது.

Question 28 of 50
28. Question
“Time Use Survey in India” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
தேசிய புள்ளியியல் அலுவலகமானது (NSO) 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், “இந்தியாவில் நேரப்பயன்பாட்டு ஆய்வை” நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு, சமீபத்தில், ஓர் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. ஊதியம் பெற்ற செயல்பாடுகள், பராமரிப்பு செயல்பாடுகள், ஊதியம் பெறாத செயல்பாடுகள் போன்றவற்றுக்காக செலவிடப்பட்ட நேரத்தை இந்த ஆய்வு அளவிடுகிறது. நகர்ப்புற மற்றும் ஊரகங்களில் உள்ள 1,38,799 வீடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வை NSO நடத்தியது.________________________________________

Question 29 of 50
29. Question
எந்த அமைப்பின்கீழ், ‘E Way Bill’ செயல்படுத்தப்படுகிறது?
Correct
‘E Way Bill’ முறையை மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியம் (CBIC) செயல்படுத்துகிறது. GST’இல் பதிவு செய்த ஒருவர் `50,000’க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ‘E Way Bill’ இல்லாமல் கொண்டு செல்லமுடியாது. 2020 செப்டம்பர் மாதத்தில் 5.74 கோடிக்கும் அதிகமான ‘E Way Bill’கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதிச்செயலாளர் Dr. அஜய் பூஷன் பாண்டே அண்மையில் தெரிவித்தார். இது, நாட்டில் வணிக நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

Question 30 of 50
30. Question
எவ்வமைப்பால், தரவு ஆளுகை தரக்குறியீடு (Data Governance Quality Index) ஆய்வு நடத்தப்படுகிறது?
Correct
தரவு ஆளுகைத் தரக் குறியீடு ஆய்வினை நாட்டின் மதியுரைகமான NITI ஆயோக், அதன் வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தால் நடத்துகிறது. மத்திய துறைசார் திட்டங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவு ஆளுகைத் தரக் குறியீட்டு ஆய்வின்கீழ், 65 துறைகளுள் உரங்கள் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Question 31 of 50
31. Question
எந்த வங்கியை நடத்துவதற்கு இயக்குநர்கள் குழுமத்தை நியமிக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
தனலக்ஷ்மி வங்கியை நடத்துவதற்கு இயக்குநர்கள் குழுமத்தை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியை நடத்துவதற்கு ஜி சுப்பிரமணிய ஐயர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இடைக்கால இயக்குநர்கள் குழுமத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பங்குதாரர்கள் அனைவரும், வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுனில் குர்பாக்சானியைத் தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.

Question 32 of 50
32. Question
ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர்.2ஆம் தேதியை ஐநா அவை ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறது. 2007 ஜூன்.15 அன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன்மூலம் ஐநா பொது அவை இந்நாளை அறிவித்தது. கல்வி & விழிப்புணர்வு மூலம் அகிம்சையின் சாராம்சத்தை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். மகாத்மா காந்தி தனது அகிம்சை இயக்கமான, ‘சத்யாகிரகத்தின்’ மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவராவார்.

Question 33 of 50
33. Question
செய்திகளில் இடம்பெற்ற மாதாபி பூரி புச், எந்த அமைப்பின் முதலாவது முழுநேர பெண் உறுப்பினராக உள்ளார்?
Correct
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முதல் முழுநேர பெண் உறுப்பினர் மாதாபி பூரி புச் ஆவார். தனியார் துறையிலிருந்து SEBI வாரியத்திற்கு உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் நபரும் இவராவார். 2020 அக்டோபர் 4 முதல் மேலும் ஓராண்டுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து அமைச்சரவையின் நியமனக்குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

Question 34 of 50
34. Question
ஒடிசா சோதனை தளத்திலிருந்து பரிசோதனை செய்யப்பட்ட, அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையின் பெயர் என்ன?
Correct
‘செளரியா’ என்ற பெயரிலான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையை இந்தியா தனது ஒடிசா சோதனை தளத்திலிருந்து சோதனை செய்தது. இந்த ஏவுகணை 1000 கிமீ தொலைவுக்கு அப்பாலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ‘செளரியா’, இந்தியாவின் K-15 ஏவுகணையின் தரை வகையினதாகும். 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்டதாகும் இது.

Question 35 of 50
35. Question
எந்தத் தலைவரின் பிறந்தநாளின்போது, ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்படுகிறது?
Correct
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2 அன்று ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்ப -டுகிறது. ‘உலக விலங்குப்பாதுகாப்பு & விலங்குகளுக்கான ஆசியக்கூட்டணி’ உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், ‘Pledge to #FastAgainstSlaughter’ என்ற பரப்புரை நடைபெற்றது.

Question 36 of 50
36. Question
எந்நகரின் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக இந்தியக்கடற்படை ‘வான்வழி விதைப்பு’ செயல்முறையை மேற்கொண்டது?
Correct
இந்தியக்கடற்படையானது பெருநகர விசாகப்பட்டின மாநகராட்சியுடனிணைந்து விசாகப்பட்டினத்தில் ‘வான்வழி விதைப்பை’ மேற்கொண்டது. இம்முயற்சி, விசாகப்பட்டினம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது. கடற்படை உலங்கூர்திகளில் இருந்து ஐந்து இடங்களில் கிட்டத்தட்ட 6.25 டன் விதைப்பந்துகள் வீசப்பட்டுள்ளன.

Question 37 of 50
37. Question
பெண்கள் குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நான்காவது உலக மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டை ஐநா அவை கடந்த 1995 செப்டம்பரில் சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தியது. இம்மாநாட்டின் 25ஆவது ஆண்டுவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து அவர் அப்போது எடுத்துரைத்தார்.

Question 38 of 50
38. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘P-8A’ என்னும் கடல்சார் ரோந்து வானூர்தி சார்ந்த நாடு எது?
Correct
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடற்படையைச் சார்ந்த ‘P-8A’ என்ற கடல்சார் ரோந்து வானூர்தி, அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் தரையிறங்கியது. இருதரப்பு தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தத்தின்கீழ் எரிபொருள் நிரப்புவதற்காக USA P-8A வானூர்தி போர்ட் பிளேரில் தரையிறங்கியது இதுவே முதன்முறையாகும். இந்த ஒப்பந்தம், ‘Logistics Exchange Memorandum of Agreement (LEMOA)’ என்றும் அழைக்கப்படுகிறது.________________________________________

Question 39 of 50
39. Question
‘CORPAT’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?
Correct
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைய செய்திக்குறிப்பில், ‘பாங்கோசாகர்’ மற்றும் Coordinated Patrol (CORPAT) ஆகிய இரண்டு பயிற்சிகள் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையில் நடைபெறும். சர்வதேச கடலெல்லைப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்துப்பணியில் இருநாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இக் கூட்டு ரோந்துப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பிரதமரின் SAGAR (Security and Growth for All in the Region) முன்னெடுப்பின் ஒருபகுதியாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

Question 40 of 50
40. Question
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் யார்?
Correct
இந்திய பொது நிர்வாக நிறுவனம் (IIPA) என்பது மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஓர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, IIPA’இன் பதவிவழித் தலைவராக உள்ளார்.மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் இந்திய பொது நிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் “தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை” ஏற்பாடுசெய்தன. இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு மெய்நிகர் முறையில் நடந்தேறியது.

Question 41 of 50
41. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற V S காயதோன்டி சார்ந்தது எது?
Correct
மும்பை ஏலக்கூடமான புந்தோலில் நடைபெற்ற ஏலத்தில், `32 கோடிக்கு விலைபோனதை அடுத்து, VS காயதோன்டியின் அவ்வோவியம், ஓர் இந்திய கலைஞரின் மிகவும் விலையுயர்ந்த கலைப்படைப்பு ஆக மாறியுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அப்பெயரிடப்படாத எண்ணெய் வண்ண ஓவியத்தை பன்னாட்டு வாங்குபவர் ஒருவர் வாங்கியுள்ளார். இதன்மூலம் VS காயதோன்டியின் மற்றொரு கலைப்படைப்பு, 2015ஆம் ஆண்டில் நிகழ்த்திய `29.3 கோடி சாதனையை இது முறியடித்தது.

Question 42 of 50
42. Question
நடப்பாண்டில் (2020) கடற்படை பதவியேற்பு விழாவை நடத்திய நகரம் எது?
Correct
நடப்பாண்டு (2020) கடற்படை பதவியேற்பு விழா, விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்டுள்ளது. விழாவின் போது, நடப்பாண்டு குடியரசு நாளன்று அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயல் புரிந்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படைத் துணைத்தலைவர் அதுல் குமார் ஜெயின், கடந்த ஆண்டு (2019) சிறப்பாக செயல்பட்ட புகழ்பெற்ற கடற்படை அலகுகளுக்கு, சிறப்புப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.

Question 43 of 50
43. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PARAM சித்தி – AI’ என்றால் என்ன?
Correct
நவீன கணித்திறன் வளர்ச்சி மையமானது (C-DAC) இந்தியாவின் மிகப்பெரிய HPC-AI மீத்திறன் கணினியான, ‘பரம் சித்தி – AI’ஐ அமைக்கவுள்ளது. இந்த முயற்சிக்கு CDAC அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் அபிஷேக் தாஸ் தலைமைதாங்கினார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மீத்திறன் கணினியில் (super-computer), 210 AI பெட்டாபிளாப்கள் இருக்கும்; இது NVIDIA DGX சூப்பர்POD கட்டமைப்பினை அடிப்படையாகக்கொண்டு இருக்கும்.Incorrect
நவீன கணித்திறன் வளர்ச்சி மையமானது (C-DAC) இந்தியாவின் மிகப்பெரிய HPC-AI மீத்திறன் கணினியான, ‘பரம் சித்தி – AI’ஐ அமைக்கவுள்ளது. இந்த முயற்சிக்கு CDAC அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் அபிஷேக் தாஸ் தலைமைதாங்கினார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மீத்திறன் கணினியில் (super-computer), 210 AI பெட்டாபிளாப்கள் இருக்கும்; இது NVIDIA DGX சூப்பர்POD கட்டமைப்பினை அடிப்படையாகக்கொண்டு இருக்கும். -
Question 44 of 50
44. Question
தனது வணிக மென்பொருள் தொகுப்புக்கு ‘Workspace’ என மறுபெயரிட்டுள்ள தொழினுட்ப நிறுவனம் எது?
Correct
கூகிள் தனது வணிக கருவிகளின் தொகுப்புக்கு, ‘Google Workspace’ என மறுபெயரிட்டுள்ளது. மின் -அஞ்சல் மற்றும் ஆவணத்திருத்தம் உள்ளிட்ட இந்தத்தொகுப்பு முன்னர் ‘G Suite brand’ என்ற பெயரில் அறியப்பட்டது. 2016ஆம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சக ஊழியர்களுடன் காணொளிவழி அரட்டையை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட சில புதிய அம்சங்களையும் கூகிள் அறிமுகம் செய்துள்ளது.

Question 45 of 50
45. Question
சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை, இந்தியா, எந்நாட்டோடு இணைந்து நடத்தவுள்ளது?
Correct
தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறப்பு கவனஞ்செலுத்தி COVID-19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க, இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை நடத்த இரு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Question 46 of 50
46. Question
தேசிய தூய்மை கங்கை திட்டமானது இந்திய வனவுயிரி நிறுவனத்துடன் இணைந்து எந்த வனவுயிரி தொடர்பான திட்டத்தைத் தொடங்கியுள்ளது?
Correct
தேசிய தூய்மை கங்கை திட்டமானது இந்திய வனவுயிரி நிறுவனம் & வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து ‘எனது கங்கை எனது ஓங்கில்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2020 அக்.5 அன்று அனுசரிக்கப்பட்ட, கங்கையாற்றில் வாழும் ஓங்கில்கள் நாளை முன்னிட்டு இது தொடங்கப்பட்டது. கங்கையாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் ஓங்கில்கள் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டமும் தொடங் -கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், கங்கை ஓங்கில்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விழிப்புணர்வு பரப்புரைகள் நடத்தப்படும்.

Question 47 of 50
47. Question
எந்தப் பொதுத்துறை வங்கியின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
தினேஷ் குமார் காராவை பாரத வங்கியின் (SBI) தலைவராக நடுவணரசு நியமித்துள்ளது. 2020 அக்.7 முதல் மூன்றாண்டு காலத்திற்கு அவர் SBI வங்கியின் தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Question 48 of 50
48. Question
சென்னையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட, இந்தியக் கடலோரக் காவல்படையின் ஏழாவது ரோந்துக் கப்பலின் பெயரென்ன?
Correct
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்ட ‘விக்ரகா’ எனப்பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக்கப்பலின் வெள்ளோட்டம் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த 2015’ஆம் ஆண்டு ஏழு ரோந்துக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை L&T நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீர்’, ‘விஜயா’, ‘வராஹா’, ‘விராத்’, ‘வஜ்ரா’ ஆகிய ஆறு ரோந்துக்கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடு -த்தப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், ‘விக்ரஹா’ 7ஆவதும் கடைசியுமாகும். ரோந்துக்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரு தனியார் துறை கப்பல்கட்டுந்தளம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.Incorrect
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்ட ‘விக்ரகா’ எனப்பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக்கப்பலின் வெள்ளோட்டம் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த 2015’ஆம் ஆண்டு ஏழு ரோந்துக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை L&T நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீர்’, ‘விஜயா’, ‘வராஹா’, ‘விராத்’, ‘வஜ்ரா’ ஆகிய ஆறு ரோந்துக்கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடு -த்தப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், ‘விக்ரஹா’ 7ஆவதும் கடைசியுமாகும். ரோந்துக்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரு தனியார் துறை கப்பல்கட்டுந்தளம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். -
Question 49 of 50
49. Question
இந்தியாவில், எந்த மாதத்தில், ‘வனவுயிரி வாரம்’ கொண்டாடப்படுகிறது?
Correct
வனவுயிரிகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் அக்.1 முதல் 8 வரை இந்தியாவில், ‘வனவுயிரி வாரம்’ கொண்டாடப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள்மூலம் வனவுயிரிகளின் வாழ்வை பாதுகாப்பதற்குமாக, 1952ஆம் ஆண்டில் வனவுயுரி வாரம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. நடப்பாண்டு, இந்திய வனவுயிரி நிறுவனம், இதுதொடர்பாக இணையவழிக் கருத்தரங்கத் தொடரை ஏற்பாடு செய்து வருகிறது.

Question 50 of 50
50. Question
வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘கிஸான் ரத்’ திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Correct
வேளாண் பொருட்களை குறித்த நேரத்தில் விற்பனை செய்வதற்காக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ‘கிஸான் ரத்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் செயலி தேசிய தகவல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வலுவான வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அஸ்ஸாம் வேளாண்-வணிக மற்றும் கிராமிய உருமாற்றம் திட்டம் (APART) இதனை வெளியிடும்.

Leaderboard: October 2nd Week 2020 Current Affairs Online Test Tamil