Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

9th Tamil Part 9 Online Test – New Book

9th Tamil Questions - Part 9

Congratulations - you have completed 9th Tamil Questions - Part 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
20ம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் யார்?
A
காமராஜர்
B
பெரியார்
C
அண்ணா
D
எம்.ஜி.ஆர்
Question 2
கீழ்க்கண்டவற்றுள் பெரியாரை குறிக்கும் பெயர்கள் எவை ?
  1. வெண்தாடி வேந்தர்
  2.  பகுத்தறிவுப் பகலவன்
  3. வைக்கம் வீரர்
  4.  ஈரோட்டுச் சிங்கம்
A
அனைத்தும்
B
1, 3, 4
C
1, 4
D
3, 4
Question 3
பெரியார் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது ?
  1. மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.
  2. அடிமையாய் உறங்கிக் கிடந்த சமூகம் விழிப்பதற்குச் சுயமரியாதைப் பூபாளம் இசைத்தவர்.
  3. மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அரும்பாடுபட்டவர்.
  4. தானே முயன்று கற்று, சுயமாகச் சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர்.
A
அனைத்தும்
B
2, 4
C
3, 4
D
எதுவுமில்லை
Question 4
பெரியார் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது _____.
A
பகுத்தறிவுக் கொள்கை
B
மூடப்பழக்க வழக்கம்
C
சிந்தனை
D
செயல்
Question 5
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே ____ ஆகும்.
A
பகுத்தறிவு
B
மூடப்பழக்க வழக்கம்
C
சிந்தனை
D
செயல்
Question 6
“ சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் “ என்று கூறியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 7
சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால், வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகிறது. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 8
‘மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?' என்று பகுத்தறிவு வினாக்களை எழுப்பியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 8 Explanation: 
( “ மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று மதத்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்" என்றும் பெரியார் கூறினார்.)
Question 9
சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
A
செல்வம்
B
தொழில்
C
உரிமை
D
கல்வி
Question 10
" கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 11
" அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுய சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
அண்ணா
Question 12
'பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும்’ என்று நம்பியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
பாரதியார்
D
அண்ணா
Question 12 Explanation: 
(விளக்கம்: மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார் ")
Question 13
கீழ்க்கண்டவற்றுள் பெரியார் எதிர்த்தவை எவை?
  • 1.இந்தித் திணிப்பு                                               2. குலக்கல்வித் திட்டம்
  1. தேவதாசி முறை        4. கள்ளுண்ணல்     5. மணக்கொடை
A
அனைத்தும்
B
1, 3, 5
C
1, 2
D
1, 3, 4
Question 13 Explanation: 
(விளக்கம் : பெரியார் குழந்தைத் திருமணத்தையும் எதிர்த்தார்)
Question 14
" ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 15
' மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்' என்று கருதி ____, ___ ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் பெரியார் ஆழ்ந்து சிந்தித்தார்.
A
இலக்கியம், இலக்கணம்
B
இலக்கணம், பேச்சு
C
மொழி, இலக்கியம்
D
மொழி, இலக்கணம்
Question 16
" மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும். அத்துடன் அதனைக் கையாளும் மக்களும் அறிவுடையவராவர் " என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 17
பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
நாலடியார்
D
திருக்குறள்
Question 17 Explanation: 
(விளக்கம்: திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக் கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம்பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.)
Question 18
______ நூலை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்று பெரியார் கூறினார்.
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
நாலடியார்
D
திருக்குறள்
Question 18 Explanation: 
(விளக்கம்: இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன.)
Question 19
"மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
பாரதியார்
D
வள்ளலார்
Question 20
பெரியாரின் மொழி சீரமைப்புகளை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?
A
1987
B
1986
C
1968
D
1978
Question 20 Explanation: 
(விளக்கம்: உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஒள’ என்பதனை ‘அவ்' எனவும் சீரமைத்தார்)
Question 21
பெண்களுக்கு வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என பெரியார் கூறினார்?
A
33
B
40
C
50
D
43
Question 21 Explanation: 
(விளக்கம்: பொருளாதாரத்தில் பெண்கள் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கக் கூடாது. நன்கு கல்வி கற்று சுய உழைப்பில் பொருளீட்ட வேண்டும். தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும் என பெரியார் கூறினார்.)
Question 22
கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கூற்றுகள் எவை?
  1. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது.
  2. கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
  3. குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
  4. குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
A
அனைத்தும் சரி
B
2, 3
C
3, 4
D
1, 3, 4
Question 23
கீழ்க்கண்டவற்றுள் பெரியார் விதைத்த விதைகள் எவை?
  1. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு.
  2. பெண்களுக்கான இடஒதுக்கீடு
  3. பெண்களுக்கான சொத்துரிமை
  4. குடும்ப நலத்திட்டம்
  5. சீர்திருத்த திருமணச் சட்டம் ஏற்பு
A
அனைத்தும் சரி
B
1, 4
C
1, 3, 5
D
2, 3, 5
Question 24
_____ என்னும் அருங்குணத்தை பெரியார் பெரிதும் வலியுறுத்தி அதற்கேற்பத் தானும் வாழ்ந்துக் காட்டினார்.
A
தன்னிறைவு
B
சினமின்மை
C
சிக்கனம்
D
நகைச்சுவை
Question 24 Explanation: 
(விளக்கம்: விழாக்களாலும், சடங்குகளாலும் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண்செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்றார்)
Question 25
எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
A
மதுரை
B
கோவை
C
கேரளா
D
சென்னை
Question 26
ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்  _____.
A
1937 நவம்பர் 13
B
1970 அக்டோபர் 5
C
1938 நவம்பர் 13
D
1970 ஜூன் 27
Question 27
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்
A
1937 நவம்பர் 13
B
1970 அக்டோபர் 5
C
1938 நவம்பர் 13
D
1970 ஜூன் 27
Question 28
பெரியாரின் சிந்தனைகள் குறித்த அறிஞரின் மதிப்பீடுகளில் எது சரியனது?
  1. பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல்
  2. பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி
  3. மனித நேயத்தின் அழைப்புமணி
  4. ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி
  5. சமூக சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
3, 4, 5 சரி
D
1, 3, 4 சரி
Question 29
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு ____.
A
1921
B
1923
C
1925
D
1927
Question 30
கீழ்க்கண்டவற்றுள் பெரியார் நடத்திய இதழ்கள் எவை?
  • 1.குடியரசு                                                  2. விடுதலை
  1. உண்மை 4. ரிவோல்ட்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3 சரி
D
1, 2 சரி
Question 30 Explanation: 
(விளக்கம்: ரிவேர்ல்ட் - ஆங்கில இதழ்)
Question 31
  • " தொண்டு செய்து பழுத்த பழம்
  • தூயதாடி மார்பில் விழும்
  • மண்டைச் சுரப்பை உலகு தொழும்
  • மனக்குகையில் சிறுத்தை எழும்"
  • இவ்வரிகள் யாரைக் குறிக்கின்றன?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெரியார்
D
அண்ணா
Question 32
  • " தொண்டு செய்து பழுத்த பழம்
  • தூயதாடி மார்பில் விழும்
  • மண்டைச் சுரப்பை உலகு தொழும்
  • மனக்குகையில் சிறுத்தை எழும்"
  • இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
அண்ணா
D
வைரமுத்து
Question 33
  • " முண்டி மோதும் துணிவே இன்பம்
  • உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி "
  • இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
நா.முத்துக்குமார்
B
ந. பிச்சமூர்த்தி
C
ஈரோடு தமிழன்பன்
D
தாராபாரதி
Question 33 Explanation: 
(விளக்கம்: ஒளியின் அழைப்பு என்னும் கவிதையில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது)
Question 34
'பெருமரத்துடன் போட்டியிடுகிறது' என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?
A
கமுகு
B
தென்னை
C
பனை
D
மூங்கில்
Question 35
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. விண் - வானம்
  2. ரவி - கதிரவன்
  3. கமுகு – பாக்கு
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 36
இலக்கணக் குறிப்புத் தருக.
  • பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர்
A
உவமைத் தொகைகள்
B
உருவகங்கள்
C
பண்புத்தொகைகள்
D
பெயரெச்சங்கள்
Question 36 Explanation: 
(விளக்கம்: உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது.
Question 37
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி
A
வேண்+டி
B
வேண்டு+ட்+இ
C
வேண்டு+இ
D
வேண்+டு+இ
Question 38
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – போகிறது
A
போ+கிறு+து
B
போ+கிறு+த்+உ
C
போ+கிறு+அ+த்+உ
D
போ+கிறு+அ+து
Question 39
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மலர்ச்சி
A
மலர்+சி
B
மலர்+ச்+ச்+இ
C
மலர்+ச்+சி
D
மலர்+ச்+இ
Question 40
" வேண்டி >> வேண்டு+இ " இதில் 'இ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பெயரெச்ச விகுதி
B
வினையெச்ச விகுதி
C
தொழிற்பெயர் விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 40 Explanation: 
(விளக்கம்: வினையெச்ச விகுதிகள் - உ, இ வேண்டு - பகுதி)
Question 41
" போகிறது >> போ+கிறு+அ+து” இதில் 'து' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பெயரெச்ச விகுதி
B
வினையெச்ச விகுதி
C
பலவின்பால் வினைமுற்று விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 41 Explanation: 
(விளக்கம்: ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் – து, று போ - பகுதி, கிறு - நிகழ்கால இடைநிலை, அ – சாரியை )
Question 42
“ மலர்ச்சி >> மலர்+ச்+சி"இதில் ‘சி’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பெயரெச்ச விகுதி
B
வினையெச்ச விகுதி
C
தொழிற்பெயர் விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 43
"இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?
A
வைரமுத்து
B
கல்கி
C
வல்லிக்கண்ணன்
D
நா. முத்துக்குமார்
Question 44
“ புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
வைரமுத்து
B
கல்கி
C
வல்லிக்கண்ணன்
D
நா. முத்துக்குமார்
Question 45
புதிய படைப்புச் சூழலில் மரபுக் கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் ____ எனப்பட்டன.
A
ஹைக்கூ
B
வசனக்கவிதைகள்
C
சிறுகதைகள்
D
புதுக்கவிதைகள்
Question 46
யாரின் வசனக் கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வல்லிக்கண்ணன்
D
சுரதா
Question 47
" புதுக்கவிதையின் தந்தை” எனப் போற்றப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வல்லிக்கண்ணன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 48
கீழ்க்கண்டவற்றுள் புதுக்கவிதையின் வேறு பெயர்கள் எவை?
  1. இலகு கவிதை
  2. கட்டற்ற கவிதை
  3. விலங்குகள் இலாக்கவிதை
  4. கட்டுக்குள் அடங்காக் கவிதை
A
அனைத்தும் சரி
B
1, 4 தவறு
C
2 , 4 தவறு
D
1, 2 சரி
Question 49
ந.பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?
  1. வழக்குறைஞர்
  2. ஆசிரியர்
  3. உயர்நீதிமன்ற நீதிபதி
  4. இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்
A
1, 2
B
1, 3
C
1, 2, 3
D
1, 4
Question 50
கீழ்க்கண்டவற்றுள் ந.பிச்சமூர்த்தி அவர்கள் துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?
  • 1.இந்தியா                         2. நவசக்தி               3. நவஇந்தியா
  1. ஹனுமான்
A
1, 4
B
1, 3
C
2, 4
D
3, 4
Question 51
கீழ்க்கண்டவற்றுள் ந.பிச்சமூர்த்தி அவர்கள் படைத்த இலக்கிய வகைமைகள் எவை?
  • 1.புதுக்கவிதை    2. சிறுகதை                         3. ஓரங்க நாடகங்கள்
  1. கட்டுரைகள்
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1, 2 சரி
D
1, 2, 3 சரி
Question 52
" ஸயன்ஸூக்கு பலி" என்பது யாருடைய சிறுகதை?
A
வல்லிக்கண்ணன்
B
கல்கி
C
ந.பிச்சமூர்த்தி
D
நா.முத்துக்குமார்
Question 52 Explanation: 
(விளக்கம்: " ஸயன்ஸூக்கு பலி" என்பது ந.பிச்சமூர்த்தி அவர்களின் முதல் சிறுகதை ஆகும்.)
Question 53
ந.பிச்சமூர்த்தி அவர்கள் எந்த ஆண்டு கலைமகள் பட்டம் பெற்றார்?
A
1931
B
1932
C
1934
D
1935
Question 54
ந.பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்?
  • 1.பிக்ஷு                 2.செல்லம்மாள்
  1. ரேவதி 4. பாக்கியம்
A
1, 2 சரி
B
1, 3 சரி
C
1, சரி
D
2, 4 சரி
Question 55
உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதை யார் மறுக்கிறார்?
A
ஜென்
B
லாவோட்சு
C
தாவோ
D
கன்பூசியஸ்
Question 56
  • " ஒரு பக்கம் இருத்தலின் பலன் கிடைக்கிறது;
  • இன்னொரு பக்கம் இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம்"
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
ஜென்
B
லாவோட்சு
C
தாவோ
D
கன்பூசியஸ்
Question 57
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – இணைகின்றன
A
இணை+கின்று+அ
B
இணை+கிறு+அன்+அ
C
இணை+கின்று+அன்+அ
D
இணை+கிறு+அ
Question 58
இலக்கணக் குறிப்புத் தருக - பாண்டம் பாண்டமாக
A
எண்ணும்மை
B
உம்மைத்தொகை
C
இரட்டைக்கிளவி
D
அடுக்குத் தொடர்
Question 58 Explanation: 
(விளக்கம்: ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.)
Question 59
இலக்கணக் குறிப்புத் தருக -வாயிலும் சன்னலும்
A
எண்ணும்மை
B
உம்மைத்தொகை
C
இரட்டைக்கிளவி
D
அடுக்குத் தொடர்
Question 59 Explanation: 
(விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)
Question 60
"இணைகின்றன >> இணை+கின்று+அன்+அ " இதில் 'அ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
B
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
C
பலவின்பால் வினைமுற்று விகுதி
D
தொழிற்பெயர் விகுதி
Question 60 Explanation: 
(விளக்கம்: பலவின்பால் வினைமுற்று விகுதிகள் - அ, ஆ இணை – பகுதி,கின்று – நிகழ்கால இடைநிலை, அன் -சாரியை)
Question 61
‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?
A
ஜென்
B
லாவோட்சு
C
தாவோ
D
லாமார்க்
Question 62
‘தாவோ தே ஜிங்' என்ற கவிதையை இயற்றிய லாலோட்சு எந்நாட்டை சேர்ந்தவர் ?
A
ரஷ்யா
B
சீனா
C
ஜப்பான்
D
ஐரோப்பா
Question 63
‘தாவோ தே ஜிங்' என்ற கவிதையை இயற்றிய லாலோட்சு எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ?
A
பொ.ஆ.பி 2
B
பொ.ஆ.மு 2
C
பொ.ஆ.பி 3
D
பொ.ஆ.மு 3
Question 64
சீன சிந்தனையின் பொற்காலமாக கருதப்படுவது எந்த காலம்?
A
பொ.ஆ.பி 2 ம் நூற்றாண்டு
B
பொ.ஆ.மு 2 நூற்றாண்டு
C
பொ.ஆ.பி 3 நூற்றாண்டு
D
பொ.ஆ.மு 3 நூற்றாண்டு
Question 65
கீழ்க்கண்டவர்களுள் சீனக் கவிஞர் லாவோட்சுவின் சமகாலத்தவர் யார்?
A
லாமார்க்
B
டால்ஸ்டாய்
C
கன்பூசியஸ்
D
ஜென்
Question 66
லாவோட்சு கீழ்க்கண்ட எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்?
A
ஜென் சிந்தனை
B
தாவோவியம்
C
கம்யூனிசம்
D
சோஷியலிசம்
Question 67
கன்பூசியஸ் ____ஐ மையமாக வைத்து சிந்தித்தார்.
A
இன்றைய வாழ்வின் மகிழ்ச்சி
B
செல்வம்
C
ஒழுக்கம்
D
நடுவுநிலை
Question 68
லாவோட்சு____ என்னும் சிந்தனையை முன்வைத்தார்.
A
இன்றைய வாழ்வின் மகிழ்ச்சி
B
செல்வம்
C
ஒழுக்கம்
D
நடுவுநிலை
Question 69
தாவோவியம் என்பது கீழ்க்கண்ட எதை வலியுறுத்துகிறது?
A
இன்றைய வாழ்வின் மகிழ்ச்சி
B
செல்வம்
C
ஒழுக்கம்
D
நடுவுநிலை
Question 70
  • " ஆரக்கால் முப்பதும்
  • சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன;
  • ஆனால், சக்கரத்தின் பயன்
  • அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது"
  • என்ற வரிகள் இடம் பெற்றுள்ள கவிதை
A
ஒளியின் அழைப்பு
B
தாவோ தே ஜிங்
C
யசோதர காவியம்
D
இயற்கை
Question 71
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • அறம், விரதம்
A
அறிவு, செயல்
B
கொடுமை, செயல்
C
நற்செயல், மேற்கொண்ட நன்னெறி
D
நற்செயல், பசி
Question 72
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • வெகுளி, ஞானம்
A
ஒன்றும் அறியாத, உலகம்
B
சினம், உலகம்
C
ஒன்றும் அறியாத, அறிவு
D
சினம், அறிவு
Question 73
  • "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
  • போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக"
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூலை இயற்றியவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
சீத்தலை சாத்தனார்
C
சேக்கிழார்
D
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 73 Explanation: 
(விளக்கம்: இவ்வரிகள் யசோதர காவியம் நூலில் இடம்பெற்றுள்ளன.)
Question 74
  • " நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
  • காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே "
  • இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
ஏலாதி
D
யசோதர காவியம்
Question 75
இலக்கணக் குறிப்புத் தருக
  • ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க
A
பெயரெச்சங்கள்
B
வினையெச்சங்கள்
C
வியங்கோள் வினைமுற்றுகள்
D
வினைத் தொகைகள்
Question 75 Explanation: 
(விளக்கம்: 'க' என முடியும் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுகள் ஆகும்)
Question 76
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க
A
கா+ க்+க்+அ
B
கா+க் + அ
C
கா+ அ + க்+அ
D
கா+க்+க
Question 77
"காக்க " என்பதன் பகுபத உறுப்புகளில் ‘க’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
B
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
C
பலவின்பால் வினைமுற்று விகுதி
D
வியங்கோள் வினைமுற்று விகுதி
Question 77 Explanation: 
(விளக்கம்: வியங்கோள் வினைமுற்று விகுதிகள் -க, இய, இயர். கா + க் + க >>>கா- பகுதி, க் - சந்தி)
Question 78
ஆக்க வேண்டுவது ____ என யசோதர காவியம் கூறுகிறது.
A
அறம்
B
வெகுளி
C
ஞானம்
D
விரதம்
Question 79
போக்க வேண்டுவது ____ என யசோதர காவியம் கூறுகிறது.
A
அறம்
B
வெகுளி
C
ஞானம்
D
விரதம்
Question 80
நோக்குவது ஏதெனில் _____ நோக்குக.
A
அறம்
B
வெகுளி
C
ஞானம்
D
விரதம்
Question 81
நாம் காக்க வேண்டியது ____ என யசோதர காவியம் கூறுகிறது.
A
அறம்
B
வெகுளி
C
ஞானம்
D
விரதம்
Question 82
யசோதரகாவியம் எவ்வகை காப்பியங்களுள் ஒன்று?
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
ஐஞ்சிறுங்காப்பியம்
D
ஐம்பெருங்காப்பியம்
Question 83
யசோதர காவியம் எம்மொழியிலிருந்து தமிழிற்கு தழுவப்பெற்றதாகும்?
A
பிரெஞ்சு
B
சீனமொழி
C
போர்ச்சுக்கீசியம்
D
வட மொழி
Question 84
யசோதர காவியம் எந்த சமயத்தை சார்ந்த முனிவரால் இயற்றப்பட்டது?
A
சைவம்
B
வைணவம்
C
சமணம்
D
பெளத்தம்
Question 85
யசோதர காவியம் எந்த நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது?
A
கோசல நாடு
B
மகத நாடு
C
சோழ நாடு
D
அவந்தி நாடு
Question 85 Explanation: 
(விளக்கம்: யசோதர காவியம் ‘ யசோதரன்' என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.)
Question 86
யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டது?
A
3
B
4
C
5
D
6
Question 87
யசோதர காவியத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
A
300 (அ) 320
B
300 (அ) 330
C
320 (அ) 330
D
320 (அ) 350
Question 88
"தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என்று கூறியவர் யார்?
A
ஒளவையார்
B
கம்பர்
C
தொல்காப்பியர்
D
வள்ளுவர்
Question 89
கீழ்க்கண்டவர்களுள் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்தவர்கள் யார்?
  • 1.தாகூர்                 2. டி.கே.சி                 3. வல்லிக்கண்ணன்
  1. அண்ணா 5. இராஜநாராயணன்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 89 Explanation: 
(விளக்கம்: நேரு, மு.வரதராசனார், கு. அழகிரிசாமி ஆகியோரும் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.)
Question 90
மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் ______.
A
எழுத்திலக்கணம்
B
சொல்லிலக்கணம்
C
பொருள் இலக்கணம்
D
யாப்பிலக்கணம்
Question 91
யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A
3
B
4
C
5
D
6
Question 92
கீழ்க்கண்டவற்றுள் யாப்பின் உறுப்புகள் எவை?
  • 1. எழுத்து               2. அசை                     3. சீர்               4.தளை
  1. அடி 6. தொடை
A
அனைத்தும் சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 3, 4 சரி
D
4, 5, 6 சரி
Question 93
_____ இயலில் யாப்பின் உறுப்புகள் அனைத்தும் விளக்கப்படுகின்றன.
A
எழுத்தியல்
B
சொல்லியல்
C
உறுப்பியல்
D
பொருளியல்
Question 94
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
A
3
B
4
C
5
D
6
Question 95
கீழ்க்கண்டவற்றுள் யாப்பிலக்கண அடிப்படையில் அமைந்த எழுத்துகளின் வகைகள் எவை?
  • 1.குறில்                  2. நெடில்                  3. ஒற்று                    4. உயிர்        5. மெய்
A
1, 2, 3
B
2, 3, 4
C
3, 4, 5
D
1, 2, 5
Question 96
எழுத்துக்களால் ஆனது ____ எனப்படும்.
A
அசை
B
தளை
C
சீர்
D
அடி
Question 97
ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ சேர்ந்து நிற்பது ___ ஆகும்.
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 98
அசை எத்தனை வகைப்படும்?
A
2
B
2
C
4
D
5
Question 99
கீழ்க்கண்டவற்றுள் அசைகளின் வகைகள் யாவை?
  1. நேரசை               2. நிரையசை                       3. ஓரசை                  4. ஈரசை
A
1, 2
B
2, 3
C
3, 4
D
1, 4
Question 100
அசைப் பிரிப்பில் _____ எழுத்தைக் கணக்கிடுவதில்லை.
A
குறில்
B
நெடில்
C
ஒற்று
D
உயிர்
Question 101
கீழ்க்கண்டவற்றுள் நேரசையை சேர்ந்த பகுப்புகள் எவை?
  • 1.தனிக்குறில்                                          2. தனிக்குறில் ஒற்று
  1. தனிநெடில் 4. தனிநெடில் ஒற்று
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 4 சரி
Question 102
கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுள் எவை நேரசையை சேர்ந்தவை?
  1. பல்                       2. அணி                     3. பால்                       4. விழா
A
1, 3
B
2, 4
C
1, 2
D
2, 3
Question 102 Explanation: 
(விளக்கம்: 2, 4 ஆகியவை நிரையசை)
Question 103
கீழ்க்கண்டவற்றுள் நிரையசையை சேர்ந்த பகுப்புகள் எவை?
  • இருகுறில்                     2. இருகுறில் ஒற்று                      3. குறில் நெடில்
  1. குறில் நெடில் ஒற்று
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 4 சரி
Question 104
கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுள் எவை நிரையசையை சேர்ந்தவை?
  1. அணில்               2. அணி                     3. விழா                     4. விழார்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 4 சரி
Question 105
ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் _____ ஆகும்.
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 106
பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது?
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 107
சீர் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 108
கீழ்க்கண்டவற்றுள் சீர்களின் வகைகள் யாவை?
  • 1.ஓரசைச் சீர்                                            2. ஈரசைச்சீர்
  1. மூவசைச்சீர் 4. நாலசைச்சீர்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 4 சரி
Question 109
கீழ்க்கண்ட  கூற்றுகளில் எது சரியானது?
  1. நேர் என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது நேர்பு எனப்படும்.
  2. நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது நிரைபு எனப்படும்.
  3. நேர்பு, நிரைபு ஆகியவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 110
கீழ்க்கண்டவற்றுள் ஈரசைச் சீர்களுக்கு உரிய வேறு பெயர்கள் யாவை?
  • 1.இயற்சீர்                                                  2. ஆசிரிய உரிச்சீர்
  1. வெண்பா உரிச்சீர் 4. வெண்சீர்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
2, 4 சரி
Question 111
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. நேர் – நாள்
  2. நிரை – மலர்
  3. நேர்பு – காசு
  4. நிரைபு – பிறப்பு
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 112
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
  1. நேர் நேர் – தேமா
  2. நிரை நேர் – புளிமா
A
அனைத்தும்
B
1 மட்டும் தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 112 Explanation: 
(விளக்கம்: தேமா, புளிமா ஆகியவை மாச்சீர் என அழைக்கப்படுகின்றன.)
Question 113
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
  1. நிரை நிரை -கருவிளம்
  2. நிரை நேர் – கூவிளம்
A
அனைத்தும்
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
எதுவுமில்லை
Question 113 Explanation: 
(விளக்கம்: கருவிளம், கூவிளம் ஆகியவை விளச்சீர் என அழைக்கப்படுகின்றன.
Question 114
காய்ச்சீர்களை _____ என்று அழைக்கிறோம்.
A
இயற்சீர்கள்
B
ஆசிரிய உரிச்சீர்கள்
C
வெண்பா உரிச்சீர்கள்
D
வெண்சீர்கள்
Question 115
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. நேர் நேர் நேர் – தேமாங்காய்
  2. நேர் நிரை நேர் – புளிமாங்காய்
  3. நிரை நிரை நேர் – கருவிளங்காய்
  4. நிரை நேர் நேர்-கூவிளங்காய்
A
1, 2 தவறு
B
1 , 3 தவறு
C
2, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 116
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. நேர் நேர் நிரை – தேமாங்கனி
  2. நேர் நிரை நிரை – கூவிளங்கனி
  3. நிரை நிரை நிரை – கருவிளங்கனி
  4. நிரை நேர் நிரை- புளிமாங்கனி
A
அனைத்தும் சரி
B
1 , 3 சரி
C
2, 3 சரி
D
எதுவுமில்லை
Question 117
______ல் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும். பிற சீர்கள் வாரா.
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 118
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே மட்டுமே வரும்; பிற தளைகள் வாரா.
  2. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீர்களில் முடியும்.
 
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 119
பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் ____ எனப்படும்.  
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 119 Explanation: 
விளக்கம்: தளை ஒன்றியும் ஒன்றாமலும் வரும்
Question 120
தாளை எத்தனை வகைப்படும்?  
A
2
B
4
C
5
D
7
Question 120 Explanation: 
விளக்கம்: நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை கலித்தளை ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றாத வஞ்சித்தளை )
Question 121
மா முன் நேர்' வருவது ____தளை.  
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 122
‘மா முன் நிரை, விள முன் நேர்' வருவது _____தளை.    
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 123
'விள முன் நிரை’ வருவது ____தளை.      
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 124
‘ காய் முன் நேர்' வருவது ____தளை.      
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 125
‘காய் முன் நிரை' வருவது ____தளை.  
A
கலித்தளை
B
நேரொன்றாசிரியத்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 126
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. கனி முன் நிரை – ஒன்றிய வஞ்சித்தளை
  2. கனி முன் நேர்- ஒன்றாத வஞ்சித்தளை
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
எதுவுமில்லை
Question 127
இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது ____ எனப்படும்.  
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 128
அடி எத்தனை வகைப்படும்?  
A
2
B
3
C
5
D
7
Question 128 Explanation: 
விளக்கம்: குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி)
Question 129
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
இரண்டு சீர்கள் – குறளடி
B
மூன்று சீர்கள் – சிந்தடி
C
ஐந்து சீர்கள் – கழிநெடிலடி
D
நான்கு சீர்கள் – அளவடி
Question 130
ஆறு சீர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது _____.
A
நெடிலடி
B
கழிநெடிலடி
C
சிந்தடி
D
அளவடி
Question 131
____ என்னும் செய்யுள் உறுப்பு பாடலில் உள்ள அடிகள்தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.  
A
தொடை
B
சீர்
C
தளை
D
அடி
Question 131 Explanation: 
விளக்கம்: தொடை - தொடுத்தல்.பாடலின் அடிகளிலோ சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது தொடை ஆகும்
Question 132
தொடை எத்தனை வகைப்படும்?  
A
5
B
6
C
7
D
8
Question 133
கீழ்க்கண்டவற்றுள் தொடைகளின் வகைகள் எவை?
    1. மோனை 2. எதுகை 3. இயைபு
  1. அளபெடை 5. முரண்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 2, 3, 5 சரி
D
1, 2, 5 சரி
Question 133 Explanation: 
(விளக்கம்:வகைகள் மோனை எதுகை இயைபு அளபெடை முரண் இரட்டை அந்தாதி செந்தொடை)
Question 134
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது ____ எனப்படும்.
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 135
அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது ____ எனப்படும்.
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 136
அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது ____ எனப்படும்.
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 137
  1. " ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
                 ஒன்றினால் ஏற்றிக் கொளல் இதில் அமைந்துள்ள தொடை
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 138
  1. " திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
                 அறனல்ல செய்யாமை நன்று " இதில் அமைந்துள்ள தொடை
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 139
  • " வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
                மந்திசிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் " இதில் அமைந்துள்ள தொடை
A
மோனை தொடை
B
எதுகைத் தொடை
C
இயைபுத் தொடை
D
அந்தாதித் தொடை
Question 140
  • கூற்று: பெரியார் உயிர் எழுத்துகளில் '' என்பதனை 'அய்' எனவும்ஒள' என்பதனைஅவ் எனவும் சீரமைத்தார்.
  • காரணம்: சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று, காரணம் இரண்டும் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் தவறு
D
கூற்று தவறு, காரணம் சரி
Question 140 Explanation: 
(விளக்கம்: சில மெய்யைழுத்துகளை குறைப்பதன் மூலம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை குறைந்து தமிழ் மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் என கருதினார்.)
Question 141
  • காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
                ஞாலத்தின் மாணப் பெரிது" – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது?
A
நாள்
B
மலர்
C
காசு
D
பிறப்பு
Question 142
முண்டி மோதும் துணிவே இன்பம்இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
A
மகிழ்ச்சி
B
வியப்பு
C
துணிவு
D
மருட்சி
Question 143
விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
A
பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
B
பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
C
பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
D
பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
Question 144
ஞானம் என்பதன் பொருள் யாது?
A
தானம்
B
தெளிவு
C
சினம்
D
அறிவு
Question 145
  • " நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே,
                நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே என்று கூறியவர் யார்?
A
நபிகள் நாயகம்
B
உமர் கய்யாம்
C
பெரியார்
D
ந.பிச்சமூர்த்தி
Question 146
நேர்க்கூற்றாக மாற்றுக. மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார்.
A
"மறுநாள் வீட்டுக்கு வருவேன்" என்று முரளி கூறினார்.
B
“ நாளை வீட்டுக்கு வருவேன்" என்று முரளி கூறினார்.
C
"நான் நாளை வீட்டிற்கு வருவேன்" என்று முரளி கூறினார்.
D
" தான் நாளை வீட்டிற்கு வருவேன்" என்று முரளி கூறினார்.
Question 147
"மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் " பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக.
A
காலை நாஷ்டாவிற்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான்.
B
காலை நாஷ்டாவிற்கு இரண்டு தோசைகள் உணவு விடுதியில் சாப்பிட்டான்.
C
காலை உணவிற்கு இரண்டு தோசைகள் உணவு விடுதியில் சாப்பிட்டான்.
D
காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகள் உணவு விடுதியில் சாப்பிட்டான்.
Question 148
அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ஒலி மரபுப்பிழைகளைத் திருத்துக
A
அகவும் மயிலும், கூவும் ஆந்தையும், அலறும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
B
கூவும் மயிலும், அலறும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
C
அலறும் மயிலும், அகவும் ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
D
அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
Question 149
  • "கோழிக் குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின" -பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக.
A
கோழிக் குருளைகளை பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின.
B
கோழிக் குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குருளைகள் ஓடின.
C
கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள் ஓடின.
D
கோழிக் குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்கன்றுகள் ஓடின.
Question 150
  • " திங்கள்முடி சூடுமலை
  •                          தென்றல்விளை யாடுமலை
  •                   தங்குமுகில் சூழுமலை
  •                           தமிழ்முனிவன் வாழுமலை
  • என்று பாடியவர் யார்?
A
கம்பர்
B
கபிலர்
C
இளங்கோவடிகள்
D
குமரகுருபரர்
Question 151
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
பகலவன் – கருவிளம்
B
மலர்ச்சி – புளிமா
C
தாவோவியம் – தேமாங்கனி
D
வெற்றிடம் – புளிமா
Question 151 Explanation: 
( விளக்கம்: வெற்றிடம் - கூவிளம்)
Question 152
பொருத்துக
    1. வயம் i) வெற்றி
    2. ஓதம் ii) கடல்
    3. பொலிதல் iii) மிகுதல்
    4. துவக்கம் iv) தெளிவு
    5. நடலை v) துன்பம்
A
i ii iii iv v
B
ii iii iv i v
C
iii ii i v iv
D
v iv iii ii i
Question 153
  • பொருத்துக
    1. நேர் நேர் நிரை i) கருவிளங்காய்
    2. நிரை நிரை நேர் ii) கூவிளம்
    3. நேர் நிரை iii) தேமாங்காய்
    4. நிரை நிரை iv) தேவமாங்கனி
    5. நேர் நேர் நேர் v) கருவிளம்
A
i ii iii iv v
B
iv i ii v iii
C
iii ii i v iv
D
v iv iii ii i
Question 154
பொருத்துக.  
  • எழுத்துச் சீர்திருத்தம் i) Reforming the Letters
  • எழுத்துரு ii) Font
  • மெய்யியல் iii) Philosophy
  • அசை iv) Syllable
  • எதுகைத் தொடை v) Rhyme
A
i ii iii iv v
B
iv i ii v iii
C
iii ii i v iv
D
v iv iii ii i
Question 155
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
பெரியாரின் சிந்தனைகள் - வே.ஆனைமுத்து
B
அஞ்சல் தலைகளின் கதை - எஸ்.பி. சட்டர்ஜி
C
தங்கைக்கு – பெரியார்
D
தம்பிக்கு – அண்ணா
Question 155 Explanation: 
( விளக்கம்: தங்கைக்கு - மு.வரதராசன் )
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 155 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!