Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

9th Tamil Part 10 Online Test – New Book

9th Tamil Questions - Part 10

Congratulations - you have completed 9th Tamil Questions - Part 10. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்பது யாருடைய கூற்று
A
காந்தி
B
நேரு
C
தெறென்ஸ்
D
கோர்டன் ஆல்போர்ட்
Question 1 Explanation: 
(விளக்கம்: தெறென்ஸ் என்பவர் இலத்தீன் புலவர்)
Question 2
முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
A
காந்தி
B
நேரு
C
தெறென்ஸ்
D
கோர்டன் ஆல்போர்ட்
Question 2 Explanation: 
(விளக்கம்: கோர்டன் ஆல்போர்ட் என்பவர் உளநூல் வல்லுநர்.)
Question 3
கீழ்க்கண்டவற்றுள் முதிர்ந்த ஆளுமைக்கு  கோர்டன் ஆல்போர்ட் கூறிய மூன்று இலக்கணங்கள் எவை?
  • மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
  • பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
  • ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
  • அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தை கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 4
______ இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என்னும் உண்மையைப் பண்டைக் காலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.
A
நாகரிகம்
B
வியாபாரம்
C
முன்னேற்றம்
D
குறிக்கோள்
Question 5
"பூட்கையில்லோன் யாக்கை போல” என்று கூறியவர் யார்?
A
கணிமேதாவியார்
B
ஆலத்தூர் கிழார்
C
திருவள்ளுவர்
D
ஒளவையார்
Question 5 Explanation: 
(பொருள்: குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என புறநானூற்றில் ஆலத்தூர் கிழார் கூறியுள்ளார்.)
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  • விரிவாகும் ஆளுமையை உருவாக்கும் நோக்கம கொண்டுள்ள மக்கள் சமுதாயமே இன்பத்தை அளிக்கும் சமுதாயமாகக் காணப்படும்.
  • எந்த அளவிற்கு பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது மனிதநேயம் வளரும்.
  • பிறருக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை, பண்புடைய வாழ்க்கை ஆகின்றது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 6 Explanation: 
(விளக்கம்: எந்த அளவிற்கு பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது ஆளுமை வளரும்.)
Question 7
Altruism என்பது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
ஒழுக்கவியல்
B
ஆளுமை
C
மனித நேயம்
D
பிறர் நலவியல்
Question 8
சீன அறிஞர் லாவோட்சு அவர்கள் பிறந்த ஆண்டு?
A
பொ.ஆ.மு.600
B
பொ.ஆ.மு.604
C
பொ.ஆ.மு. 605
D
பொ.ஆ.மு.606
Question 9
சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்களின் காலம்?
A
பொ.ஆ.மு.550- 470
B
பொ.ஆ.மு.551 – 470
C
பொ.ஆ.மு.551 – 470
D
பொ.ஆ.மு. 550 – 479
Question 10
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் _____ தத்துவஞானிகள் ஆவர்.
A
ரஷ்ய
B
சீன
C
ஐரோப்பிய
D
கிரேக்க
Question 11
கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
  1. லாவோட்சு 2. கன்பூசியஸ் 3. பிளேட்டோ
  2. 4. அரிஸ்டாட்டில்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
1, 2, 4 சரி
Question 11 Explanation: 
(விளக்கம்: பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகள் கிரேக்கக் குடியினரை மட்டுமே தம் சிந்தனைக்கு உட்படுத்தினர்)
Question 12
பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.
A
பஃருளி மலை
B
விந்திய, சாத்பூரா
C
சாத்பூரா, இமயமலை
D
விந்தியமலை, இமயமலை
Question 12 Explanation: 
(விளக்கம்: வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும் என கருதப்பட்டது.)
Question 13
"மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது" என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை யார் கூறியது போல இருந்தது?
A
கிரேக்கர்கள்
B
சீனர்கள்
C
ஸ்டாயிக்வாதிகள்
D
பெளத்தர்கள்
Question 14
Ethics என்பதன் தமிழ்ச்சொல்லாக்கம் என்ன?
A
ஒழுக்கவியல்
B
ஆளுமை
C
மனித நேயம்
D
பிறர் நலவியல்
Question 15
“ இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளை பற்றிக் கூறியவர் யார்?
A
கோர்டன்
B
தெறன்ஸ்
C
ஆல்பர்ட் சுவைட்சர்
D
ஜி.யு.போப்
Question 15 Explanation: 
(விளக்கம்: ஆல்பர்ட் சுவைட்சர் என்பவர் ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆவார்.)
Question 16
தமிழ் இலக்கியத்தை ஆராயும் போது, பிறர் நலக் கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் புரப்புவதற்கு காரணமாய் இருந்தவர்கள் யார்?
A
நெசவாளர்கள்
B
இசைக் கலைஞர்கள்
C
வியாபாரிகள்
D
பாணர்கள், புலவர்கள்
Question 17
பண்டை தமிழர்கள் பிற நாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்க _____, _____ என்று வரையறுத்துக் கூறியுள்ளனர்.
A
அந்நிய நாடு, அந்நிய தேயம்
B
பிறர் நாடு, பிறர் தேயம்
C
மொழிமாறும் நாடு, மொழிபெயர்தேயம்
D
வெளிநாடு, வெளிதேயம்
Question 18
____ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
A
புறத்திணை
B
அகத்திணை
C
சங்க இலக்கியம்
D
உரைநடை
Question 19
யாருடைய நிலப்பிரிப்பு முறை உலகின் பிரிவாக அமைந்தது.
A
அகத்தியர்
B
தொல்காப்பியர்
C
இளங்கோவடிகள்
D
திருவள்ளுவர்
Question 20
"படுதிரை வையம் பாத்திய பண்பே" என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
திருக்குறள்
D
சிலப்பதிகாரம்
Question 20 Explanation: 
(விளக்கம்: தொல்காப்பியத்தில் 948 வது பாடல்)
Question 21
கீழ்க்கண்டவற்றுள் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது எவற்றையெல்லாம் கற்று வந்தனர்?
  • 1.பெரும்பொழுது                                                2. சிறுபொழுது
  1. வானிலை 4. கருப்பொருள்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 2, 4
Question 22
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ______ என்பவனைப் போற்றுவதற்குக் காரணம் அவன் நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான்.
A
பாரி
B
ஓரி
C
காரி
D
ஆய்
Question 23
  • "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
  • அறவிலை வணிகன் ஆய் அலன்"
  • இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
A
அகநானூறு
B
புறநானூறு
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 23 Explanation: 
(விளக்கம்: இப்பாடல் புறநானூற்றில் 134 வது பாடல்)
Question 24
பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் என்பதை விளக்கும் " உண்டாலம்ம இவ்வுலகம் " என்ற வரி எந்நூலில் இடம் பெற்றுள்ளது.
A
அகநானூறு
B
புறநானூறு
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 25
  • "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
  • தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே"
  • இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
A
அகநானூறு
B
புறநானூறு
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 25 Explanation: 
(விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் 214 பாடல், 11-13வது வரிகள் )
Question 26
  • " இமயத்தீண்டி இன்குரல் பயிற்றிக்
  • கொண்டல் மாமழை பொழிந்த
  • நுண்பஃ றுளியினும் வாழிய பலவே”
  • இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
A
அகநானூறு
B
புறநானூறு
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 26 Explanation: 
(விளக்கம்: புறநானூறு 34 வது பாடல்,21- 23வது வரிகள்)
Question 27
திருக்குறளில் கூறப்படும் 'பூட்கைமகன்’ என்பதன் பொருள் யாது?
A
செல்வமகன்
B
தொழில்புரியும் மாந்தன்
C
குறிக்கோள் மாந்தன்
D
விவசாயம் செய்பவர்
Question 28
தமிழ் மக்கள் " சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் _____ எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.
A
இத்தாலியன்ஸ்
B
சைமன்ஸ்
C
சாப்பியன்ஸ்
D
உரோமன்ஸ்
Question 29
உரோமர்கள் போற்றிய "Sapens" என்பதன் பொருள் யாது?
  • 1.இலட்சியபுருஷன்                                          2. அறிவுடையோன்
  1. சான்றோன்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 30
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
  • உரோமையருடைய "சாப்பியன்ஸ்" அல்லது சான்றோன் என்பவன் சமுதாயத்திலிருந்து விலகி, தம் சொந்த பண்புகளையே வளர்க்க வேண்டும்.
  • உரோமையருடைய சான்றோர் அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 31
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
  1. ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் பலர்.
  2. அவர்கள் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருவர்.
  3. திருக்குறளின் சான்றோர் சிலர்.
  4. அவர்களின் இயல்புகள் எல்லாம் பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நட்பு முதலான அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2 , 3, 4 சரி
D
2 , 4 சரி
Question 31 Explanation: 
(விளக்கம்: ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் ஒரு சிலரே. திருக்குறளின் சான்றோர் பலர்.)
Question 32
ஒவ்வொரு மனிதனையும் சான்றோன் ஆக்குதல் ____ ன் நோக்கம்
A
தாய்
B
தந்தை
C
சமூகம்
D
கல்வி
Question 32 Explanation: 
(விளக்கம்: ஒவ்வொரு தாயும் தம் மகன் சான்றோன் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும்.)
Question 33
" தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தருவது” என்று யார் யாரிடம் கூறினார்?
A
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரிடம் கூறியது
B
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் கூறியது
C
கோப்பெருஞ்சோழனின் அமைச்சர் பிசிராந்தையாரிடம் கூறியது
D
கோப்பெருஞ்சோழனுக்கு அவரது அமைச்சர் கூறியது
Question 33 Explanation: 
(விளக்கம்: புறநானூறு 191 வது பாடல்)
Question 34
____ நாட்டுச் சிந்தனையாளர்கள் ஏறத்தாழத் தமிழ்ப் புலவர்களைப் போல அதே காலத்தில் ஒன்றே உலகம் என்ற கொள்கையைப் பாராட்டி வந்தனர்
A
சீனா
B
ஜப்பான்
C
உரோம
D
ரஷ்ய
Question 35
பின்வருவனவற்றுள் ஸ்டாயிக்வாதிகள் கற்பித்தவை எவை?
  1. உலகில் ஒற்றுமை உண்டு
  2. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர்
  3. எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 36
ஒன்றே உலகம் என்ற மனப்பான்மையும் கொள்கையும் முதன் முதல் மேலை நாட்டில் யாரால் போற்றப்பட்டது?
A
உரோமானியர்கள்
B
கிரேக்கர்கள்
C
ஸ்டாயிக்வாதிகள்
D
சீனர்கள்
Question 37
"எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
கோர்டன்
B
தெறன்ஸ்
C
ஆல்பர்ட் சுவைட்சர்
D
செனக்கா
Question 38
" நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் யார்?
A
மார்க்ஸ் அரேலியஸ்
B
தெறன்ஸ்
C
ஆல்பர்ட் சுவைட்சர்
D
செனக்கா
Question 39
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 40
திருவள்ளுவரை "உலகப் புலவர் " என்று போற்றியவர் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜி.யு.போப்
D
திரு.வி.க
Question 41
மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பு_______கும் ஸ்டாயிக்வாதிகளுக்கும் பொதுவான ஒரு தன்மை.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 42
யார், எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார்?
A
மார்க்ஸ் அரேலியஸ்
B
கால்டுவெல்
C
தொல்காப்பியர்
D
வள்ளுவர்
Question 43
"உள்ளற்க உள்ளம் சிறுகுவ", " உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்று கூறியவர் யார்?
A
அகத்தியர்
B
தொல்காப்பியர்
C
இளங்கோவடிகள்
D
திருவள்ளுவர்
Question 44
"உள்ளற்க உள்ளம் சிறுகுவ", " உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” ஆகியவை முறையே எத்தனையாவது  குறள்?
A
596, 798
B
595, 897
C
798, 596
D
897, 595
Question 45
தனிநாயகம் அடிகள், எங்குள்ள பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை  ஆற்றினார்?
A
லண்டன்
B
கனடா
C
சிங்கப்பூர்
D
இலங்கை
Question 45 Explanation: 
(விளக்கம்: இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.)
Question 46
தனிநாயகம் அடிகள் தொடங்கி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?
A
தமிழ்நாடு
B
தமிழர் நாகரிகம்
C
தமிழ்ப் பண்பாடு
D
தமிழர் பண்பாடு
Question 47
கீழ்க்கண்டவற்றுள் தனிநாயகம் அடிகள் எவை தொடங்க காரணமாக இருந்தார்?
  1. அகில உலகத் தமிழாய்வு மன்றம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. இந்திய தமிழாய்வு மன்றம்
A
அனைத்தும்
B
1, 2
C
1, 3
D
2, 3
Question 48
தனிநாயகம் அடிகள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
  1. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
  2. அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
  3. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பினார்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 49
“ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
A
மல்லர்
B
மணக்குடவர்
C
பரிப்பெருமாள்
D
பரிதி
Question 50
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?
A
1995 – தஞ்சாவூர்
B
1966 – கோலாலம்பூர்
C
1968 – சென்னை
D
1987 – மொரீசியசு
Question 50 Explanation: 
(விளக்கம்: 1989 – மொரீசியசு)
Question 51
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?
A
1960 – பாரீசு
B
1974 – மதுரை
C
1981 – யாழ்பாணம்
D
1987 – கோலாலம்பூர்
Question 51 Explanation: 
(விளக்கம்: 1970 – பாரீசு 1974 – யாழ்பாணம் 1981 – மதுரை)
Question 52
கீழ்க்கண்டவற்றுள் உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் எவை?
  • 1.மலேசியா                                  2. இந்தியா               3. பிரான்சு
  1. இலங்கை 5. மலேசியா 6. மொரீசியஸ்
A
அனைத்தும் சரி
B
1, 2, 4, 6 சரி
C
1, 2, 3, 5 சரி
D
2, 3, 4, 5 சரி
Question 53
2010ல் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
A
சென்னை
B
மதுரை
C
தஞ்சாவூர்
D
கோவை
Question 54
____ன் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள் ஆகும்.
A
உரைநடைக் கவிதை
B
ஹைக்கூ
C
வசனக் கவிதை
D
செய்யுள்கள்
Question 55
புதுக்கவிதையின் வரலாறு ____ ஆண்டுகளை எட்டுகிறது.
A
50
B
100
C
150
D
200
Question 56
புதுக்கவிதைகள்  ______ஐ வலியுறுத்துவனவாக இருக்கின்றன.
A
ஈகை
B
கருணை
C
மனிதநேயம்
D
ஆளுமை
Question 57
  • “சைக்கிளில் வந்த
  • தக்காளிக் கூடை சரிந்து
  • முக்கால் சிவப்பில் உருண்டது
  • அனைத்துத் திசைகளிலும் பழங்கள்”
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
அமுதோன்
B
நா.முத்துக்குமார்
C
கவிஞர் பாஷோ
D
கல்யாண்ஜி
Question 57 Explanation: 
(விளக்கம்: இவ்வரிகள் அக்கறை என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.)
Question 58
  • இலக்கணக் குறிப்புத் தருக.
  • உருண்டது, போனது
A
ஒன்றன்பால் வினைமுற்றுகள்
B
பலவின்பால் வினைமுற்றுகள்
C
தன்மை பன்மை வினைமுற்றுகள்
D
முன்னிலை பன்மை வினைமுற்றுகள்
Question 58 Explanation: 
(விளக்கம்: ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் – து, று உருண்டது, போனது ஆகியவை 'து' என்னும் விகுதியை கொண்டு முடிவதால் இவை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் ஆகும்.
Question 59
இலக்கணக் குறிப்புத் தருக – சரிந்து
A
பெயரெச்சம்
B
வினையெச்சம்
C
தொழிற்பெயர்
D
வினைத்தொகை
Question 59 Explanation: 
(விளக்கம்: வினையெச்சம் என்பது ஒரு வினை முற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இச்சொற்கள் உ, இ என முடிவு பெறும் சரிந்து என்பது ' உ’ என்று முடிவுறுவதால் வினையெச்சம் ஆகும்)
Question 60
இலக்கணக் குறிப்புத் தருக – அனைவரும்
A
எண்ணும்மை
B
உம்மைத் தொகை
C
பண்புத்தொகை
D
முற்றும்மை
Question 61
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சரிந்து
A
சரிந்த+உ
B
சரி+த்(ந்)+உ
C
சரி+த்(ந்)+த்+உ
D
சரி+ந்+து
Question 62
" சரிந்து >> சரி+த்(ந்) +த்+உ" இதில் ‘உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்.
A
பெயரெச்சவிகுதி
B
வினையெச்சவிகுதி
C
தொழிற்பெயர் விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 62 Explanation: 
(விளக்கம்: வினையெச்சவிகுதிகள் - உ, இ சரி - பகுதி, த் – சந்தி(ந் ஆனது விகாரம்), த் - இறந்த கால இடைநிலை, உ - வினையெச்சவிகுதி)
Question 63
  • “பழங்களை விடவும்
  • நசுங்கிப் போனது
  • அடுத்த மனிதர்கள்
  • மீதான அக்கறை”
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
A
பழங்கள்
B
அக்கறை
C
மனிதாபிமானம்
D
இறக்கம்
Question 64
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?
A
கல்யாணபெருமாள்
B
கல்யாணசுந்தரம்
C
கல்யாண்
D
கல்யாணராமன்
Question 65
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி எது/எவை இயற்றுவதில் ஈடுபட்டுள்ளார்.
  1. சிறுகதை 2. கவிதை 3. கட்டுரை
  2. நாவல் 5. உரைநடை
A
அனைத்தும் சரி
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 2, 3, 4
Question 66
கல்யாணசுந்தரம் அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.
A
வாணிதாசன்
B
கல்யாண்ஜி
C
வண்ணதாசன்
D
கல்யாண்
Question 67
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்களின் கவிதை நூல்கள் எவை?
  • 1.புலரி                    2. மணல் உள்ள ஆறு                   3. முன்பின்
  1. ஆதி 5. அந்நியமற்ற நதி
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 4, 5 சரி
D
1, 3, 5 சரி
Question 68
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பு எது?
A
சில இறகுகள் சில பறவைகள்
B
கலைக்க முடியாத ஒப்பனைகள்
C
அகமும் புறமும்
D
உயரப் பறத்தல்
Question 69
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ____ என்ற பெயரில் வெளியானது.
A
சில இறகுகள் சில பறவைகள்
B
கலைக்க முடியாத ஒப்பனைகள்
C
அகமும் புறமும்
D
உயரப் பறத்தல்
Question 70
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய சிறுகதை நூல்கள் எவை?
  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. உயரப் பறத்தல்
  4. ஒளியிலே தெரிவது
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 4, 5 சரி
D
1, 3, 5 சரி
Question 71
கல்யாண்ஜி அவர்கள் ____ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்.
A
கலைக்க முடியாத ஒப்பனைகள்
B
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
C
உயரப் பறத்தல்
D
ஒரு சிறு இசை
Question 72
கல்யாண்ஜி அவர்கள் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்?
A
2015
B
2016
C
2017
D
2018
Question 73
  • "இந்தக் காட்டில்
  • எந்த மூங்கில்
  • புல்லாங்குழல்?"
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
அமுதோன்
B
நா.முத்துக்குமார்
C
கவிஞர் பாஷோ
D
கல்யாண்ஜி
Question 74
  • "பிம்பங்களற்ற தனிமையில்
  • ஒன்றிலொன்று முகம் பார்த்தன
  • சலூன் கண்ணாடிகள் "
  • இவ்வரிகள் யாருடையது?
A
அமுதோன்
B
நா.முத்துக்குமார்
C
கவிஞர் பாஷோ
D
கல்யாண்ஜி
Question 75
  • "வெட்டுக்கிளியின் சப்தத்தில்
  • மலையின் மெளனம்
  • ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
அமுதோன்
B
நா.முத்துக்குமார்
C
கவிஞர் பாஷோ
D
கல்யாண்ஜி
Question 76
குறுந்தொகை என்பது எவ்வகை இலக்கிய நூல்?
A
அற இலக்கியம்
B
புற இலக்கியம்
C
அக இலக்கியம்
D
நீதி இலக்கியம்
Question 76 Explanation: 
(விளக்கம்: குறுந்தொகைப் பாடல்கள் யாவும் இயற்கைக் காட்சிகள் மூலம் நாட்டு வளத்தைப் படம் பிடித்துக் காட்டுவன.)
Question 77
குறுந்தொகை____ என்னும் அடைமொழிக் கொண்டு அழைக்கப்படுகிறது.
A
ஓங்கு
B
நல்
C
நல்ல
D
நன்மை
Question 78
உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் ____ வழியாகத் தொடங்கினார்.
A
உரைநடைக் கவிதை
B
பத்திரிக்கைகள்
C
வசனக் கவிதை
D
செய்யுள்கள்
Question 79
  • "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
  • பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
  • மென்சினை யாஅம் பொளிக்கும்
  • அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”
  • இப்பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
புறநானூறு
Question 79 Explanation: 
(விளக்கம்: இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது)
Question 80
  • "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
  • பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
  • மென்சினை யாஅம் பொளிக்கும்
  • அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”
  • இப்பாடலை இயற்றியவர் யார்?
A
குறிஞ்சி கபிலர்
B
ஓதலாந்தையார்
C
பாலை பாடிய பெருங்கடுங்கோ
D
ஓரம்போகியார்
Question 81
  • "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
  • பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
  • என்னும் குறுந்தொகை பாடல் எந்த திணையை சார்ந்தது?
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
பாலை
Question 81 Explanation: 
(துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.)
Question 82
"நசை பெரிது உடையர் "
  • இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
A
வழங்குதல்
B
தொந்தரவு
C
கடுஞ்சொல்
D
விருப்பம்
Question 83
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • நல்கல், பொளிக்கும்
A
விருப்பம், அளிக்கும்
B
அன்பு, அளிக்கும்
C
வழங்குதல், உரிக்கும்
D
அன்பு, உரிக்கும்
Question 84
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • பிடி, வேழம்
A
ஆண் யானை, பெண் யானை
B
பெண் யானை, ஆண் யானை
C
ஆண் குரங்கு, பெண் குரங்கு
D
பெண் குரங்கு, ஆண் குரங்கு
Question 85
" மென்சினை யாஅம் பொளிக்கும்” இதில் ‘யா’ என்பதன் பொருள்
A
ஒரு வகை யானை
B
ஒரு வகை மரம்
C
ஒரு வகை குரங்கு
D
ஒரு வகை மலர்
Question 86
‘யா’ என்பது எவ்வகை நிலத்தில் வளரும் மரம்?
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
பாலை
Question 87
"தோழி அவர் சென்ற ஆறே!” இவ்வடிகளில் குறிப்பிடப்படும் 'ஆறு' என்பதன் பொருள்
A
எண்
B
நதி
C
வழி
D
நிரை
Question 88
இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய
A
இன்னிசை அளபெடை
B
செய்யுளிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
வினையெச்சம்
Question 88 Explanation: 
(விளக்கம்: ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். மேலும் இது ‘ இ’ என்னும் எழுத்தை பெற்று வரும். களைஇய – இ என்னும் எழுத்தை பெற்று வந்துள்ளது.)
Question 89
இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை, மென்சினை
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
உவமைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 89 Explanation: 
(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும். பெருமை + கை, மென்மை+ சினை)
Question 90
இலக்கணக் குறிப்புத் தருக – பொளிக்கும்
A
உம்மைத்தொகை
B
எண்ணும்மை
C
செய்யும் என்னும் வினைமுற்று
D
செய்யும் என்னும் வினையெச்சம்
Question 90 Explanation: 
(விளக்கம்: பொளிக்கும் என வந்து வினைமுற்றை குறிக்கிறது.)
Question 91
இலக்கணக் குறிப்புத் தருக – பிடிபசி
A
2ம் வேற்றுமைத்தொகை
B
6 ம் வேற்றுமைத்தொகை
C
4 ம் வேற்றுமைத்தொகை
D
7 ம் வேற்றுமைத்தொகை
Question 91 Explanation: 
(விளக்கம்: 6ம் வேற்றுமை உருபு – அது பிடிபடி - பிடியினது பசி என 6ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் இது 6 ம் வேற்றுமைத்தொகை எனப்படும்.)
Question 92
இலக்கணக் குறிப்புத் தருக – அன்பின
A
ஒன்றன்பால் வினைமுற்று
B
பலவின்பால் உயர்திணை வினைமுற்று
C
பலவின்பால் அஃறிணை வினைமுற்று
D
தன்மை பன்மை வினைமுற்று
Question 92 Explanation: 
(விளக்கம்: படர்க்கைப் பன்மை வினைமுற்று அ, ஆ, வ அன்பின – ‘அ’ என்ற விகுதி கொண்டு அஃறிணையை குறிக்கிறது)
Question 93
இலக்கணக் குறிப்புத் தருக – நல்கலும் நல்குவர்
A
உம்மைத்தொகை
B
எண்ணும்மை
C
செய்யும் என்னும் வினைமுற்று
D
எச்ச உம்மை
Question 93 Explanation: 
(விளக்கம்: சொல்லின் இடையில் 'உம்' இணைந்த அனைத்துச் சொல்மீதும் முற்றுவினை இணைந்து உம்மைப் பொருள் முற்றுப்பெறுவது எச்ச உம்மை ஆகும்.)
Question 94
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உடையர்
A
உடை+யர்
B
உடை+ய்+ஆர்
C
உடை+ய்+அர்
D
உடைய+ அர்
Question 95
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பொளிக்கும்
A
பொளி+க்+கும்
B
பொளி+க்+உம்
C
பொளி +க்+க்+கும்
D
பொளி+க்+க்+உம்
Question 96
"உடையர் >>> உடை+ய்+அர்" இதில் ‘அர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
வினையெச்ச விகுதி
D
தன்மை பன்மை வினைமுற்று
Question 96 Explanation: 
(விளக்கம்: பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர்,ப, மார் உடை – பகுதி, ய் - சந்தி (உடம்படு மெய்) )
Question 97
"பொளிக்கும் >> பொளி+க்+க்+உம்" இதில் 'உம்' எனபதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
வினையெச்சவிகுதி
B
தொழிற்பெயர் விகுதி
C
வினைமுற்று விகுதி
D
வியங்கோள் வினைமுற்று விகுதி
Question 97 Explanation: 
(விளக்கம்: பொளி - பகுதி, க் - சந்தி, க் - எதிர்கால இடைநிலை)
Question 98
குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?
A
எட்டுத்தொகை
B
பத்துப் பாட்டு
C
ஐம்பெருங்காப்பியம்
D
ஐஞ்சிறுங்காப்பியம்
Question 98 Explanation: 
(விளக்கம்: இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.)
Question 99
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?
A
400
B
401
C
402
D
403
Question 100
குறுந்தொகையில் உள்ள பாடல்களின் அடி எல்லை எவ்வளவு?
A
9-12 அடி
B
4-8 அடி
C
3-6 அடி
D
4-12 அடி
Question 101
குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
A
உ.வே.சா
B
ஞானப்பிரகாசம்
C
செளரிப் பெருமாள் அரங்கனார்
D
ஆறுமுக நாவலர்
Question 102
பாலை பாடிய பெருங்கடுங்கோ கீழ்க்கண்ட எந்த மரபைச் சேர்ந்தவர்?
A
சேர மரபு
B
சோழ மரபு
C
பாண்டிய மரபு
D
பல்லவர் மரபு
Question 103
பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
ஐங்குறுநூறு
D
கலித்தொகை
Question 104
  • "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
  • பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
  • என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?
A
27
B
28
C
37
D
38
Question 105
சு.சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
A
இராமநாதபுரம்-திப்பணம்பட்டி
B
தூத்துக்குடி- திப்பணம்பட்டி
C
திருநெல்வேலி – திப்பணம்பட்டி
D
விருதுநகர் – திப்பணம்பட்டி
Question 106
சு.சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
A
200
B
300
C
400
D
350
Question 107
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் எவை?
  • 1.வாடாமல்லி                 2. பாலைப் புறா                  3. மண்சுமை
  1. தலைப்பாகை 5. காகித உறவு
A
அனைத்தும் சரி
B
1, 2, 5 சரி
C
2, 3, 5 சரி
D
2, 3, 4 சரி
Question 108
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?
A
வாடாமல்லி
B
குற்றம் பார்க்கில்
C
மண்சுமை
D
வேரில் பழுத்த பலா
Question 109
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசை  பெற்ற சிறுகதைத் தொகுதி எது?
A
வாடாமல்லி
B
குற்றம் பார்க்கில்
C
மண்சுமை
D
வேரில் பழுத்த பலா
Question 110
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
  1. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
  2. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது 'அணி’ இலக்கண இயல்பாகும்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு.
Question 111
அணிகளில் இன்றியமையாதது _____ அணி ஆகும்.
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பின்வருநிலையணி
Question 112
"மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?
  1. இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.
  2. பாதம் – உவமேயம்
  3. மலர் – உவமை
  4. போன்ற – உவமஉருபு
A
அனைத்தும் சரி
B
1, 4 சரி
C
2, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 112 Explanation: 
(விளக்கம்: இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாக கூறப்படுகிறது.)
Question 113
  • " இனிய உளவாக இன்னாத கூறல்
  • கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
  • என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பின்வருநிலையணி
Question 114
உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக் கூறும் தன்மை ____ எனப்படும்.
A
உவமை
B
உருவகம்
C
உவம உருபு
D
உவமேயம்
Question 115
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ____அணி ஆகும்.
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பின்வருநிலையணி
Question 116
  • "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
  • வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
  • அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் என்றதோர்
  • பைங்கூழ் சிறுகாலைச் செய்"
  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பின்வருநிலையணி
Question 116 Explanation: 
(விளக்கம்: இப்பாடலில், இன்சொல் - நிலமாகவும், வன்சொல் - களையாகவும், வாய்மை - எருவாகவும், அன்பு - நீராகவும், அறம் -கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.)
Question 117
பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 117 Explanation: 
(விளக்கம்: வகைகள் சொற்பின்வருநிலையணி பொருள்பின்வருநிலையணி சொற்பொருள்பின்வருநிலையணி)
Question 118
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே ____ அணியாகும்.
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டுவமையணி
D
பின்வருநிலையணி
Question 119
முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது _____அணியாகும்.
A
சொற்பின்வருநிலையணி
B
பொருள்பின்வருநிலையணி
C
சொற்பொருள்பின்வருநிலையணி
D
எடுத்துக்காட்டுவமையணி
Question 120
  • "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  • துப்பாய தூஉம் மழை"
  • என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
A
சொற்பின்வருநிலையணி
B
பொருள்பின்வருநிலையணி
C
சொற்பொருள்பின்வருநிலையணி
D
எடுத்துக்காட்டுவமையணி
Question 120 Explanation: 
(விளக்கம்: இக்குறளில் 'துப்பு' என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது. துப்பார்க்கு – உண்பவர்க்கு துப்பு - நல்ல, நன்மை துப்பு - உணவு)
Question 121
செய்யுளில் முன்வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____அணியாகும்.
A
சொற்பின்வருநிலையணி
B
பொருள்பின்வருநிலையணி
C
சொற்பொருள்பின்வருநிலையணி
D
எடுத்துக்காட்டுவமையணி
Question 122
  • "அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
  • நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்
  • விண்டன கொன்றை விரிந்த கருவிளை
  • கொண்டன காந்தள் குலை"
  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
பொருள் பின்வரு நிலையணி
Question 122 Explanation: 
(விளக்கம்: இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.)
Question 123
  • "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
  • மாடல்ல மற்றை யவை”
  • இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
பொருள் பின்வரு நிலையணி
Question 123 Explanation: 
(விளக்கம்: இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.)
Question 124
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____அணி.
A
சொற்பின்வருநிலையணி
B
பொருள்பின்வருநிலையணி
C
சொற்பொருள்பின்வருநிலையணி
D
எடுத்துக்காட்டுவமையணி
Question 125
  • " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
  • பொய்யா விளக்கே விளக்கு”
  • இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
A
சொற்பின்வருநிலையணி
B
பொருள்பின்வருநிலையணி
C
சொற்பொருள்பின்வருநிலையணி
D
எடுத்துக்காட்டுவமையணி
Question 125 Explanation: 
(விளக்கம்: இக்குறட்பாவில் 'விளக்கு' என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.)
Question 126
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _____ அணி ஆகும்.
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
வஞ்சப்புகழ்ச்சியணி
Question 127
  • "தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
  • மேவன செய்தொழுக லான்"
  • இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
வஞ்சப்புகழ்ச்சியணி
Question 127 Explanation: 
(விளக்கம்: கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.)
Question 128
  • "பாரி பாரி என்றுபல ஏத்தி,
  • ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
  • பாரி ஒருவனும் அல்லன்;
  • மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே”
  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
வஞ்சப்புகழ்ச்சியணி
Question 128 Explanation: 
(விளக்கம்: இப்பாடல் பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.)
Question 129
  • கீழ்காணும் குறட்பாவில் அமைந்த அணி வகையை கண்டறி.
  • “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
  • ஆழி எனப்படு வார்"
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
ஏகதேச உருவக அணி
D
வஞ்சப்புகழ்ச்சியணி
Question 129 Explanation: 
(விளக்கம்: இக்குறளில் சான்றாண்மைப் பண்பினைக் கரை என உருவகித்த ஆசிரியர் சான்றோரைக் கடல் என உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆகும்.)
Question 130
  • "தீயவை தீய பயத்தலால் தீயவை
  • தீயினும் அஞ்சப்படும்”
  • இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
சொற்பொருள் பின்வருநிலையணி
Question 130 Explanation: 
(விளக்கம்: தீய என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளது.)
Question 131
  • கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுகள்
  • "மண்ணரசி மடக்காமலேயே
  • பிடித்துக் கொண்டிருக்கும்
  • பச்சைக் குடைகள் “
A
எடுத்துக்காட்டுவமையணி
B
உவமையணி
C
உருவக அணி
D
சொற்பொருள் பின்வருநிலையணி
Question 131 Explanation: 
(விளக்கம்: மண்ணை அரசியாகவும் மரங்களைக் குடையாகவும் உருவகம் செய்திருப்பதால் இது உருவக அணி ஆகும்.)
Question 132
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
A
கொம்பு
B
மலையுச்சி
C
சங்கு
D
மேடு
Question 133
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
A
நிலையற்ற வாழ்க்கை
B
பிறருக்காக வாழ்தல்
C
இம்மை மறுமை
D
ஒன்றே உலகம்
Question 134
இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை வேழம்
A
இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை வேழம்
B
2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
C
7ம் வேற்றுமைத் தொகை
D
7ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
Question 134 Explanation: 
(விளக்கம்: 2ம் வேற்றுமை உருபு – ஐ பெருங்கை வேழம் -பெருங்கையை உடைய வேழம் என 2ம் வேற்றுமை உருபும் உடைய என்ற சொல்லும் மறைந்து வந்துள்ளதால் இது
Question 135
‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது?
A
ஆண் யானை
B
பெண் யானை
C
தலைவன்
D
தோழி
Question 136
‘பாஞ்சாலி சபதம்' என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
மீனாட்சி சுந்தரனார்
Question 137
ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?
A
இராமாயணம்
B
மகாபாரதம்
C
சிலப்பதிகாரம்
D
நன்னூல்
Question 138
_____ நூற்றாண்டில் கம்பரின் இராமாயணம் இலக்கியம் என தகுதி பெற்றதோடு ஆய்வுக்குரிய பெருநூலாகவும் கருதப்பட்டது.
A
18
B
19
C
20
D
21
Question 139
இலக்கிய நோக்கில் கம்பர் நூல், எவ்வாறு காவியம் எனச் சிறக்கிறது? என்பதை யார் விரிவாக ஆராய்கிறார்?
A
சுப்பிரமணிய சிவா
B
ஞானி
C
வ.சுப.மாணிக்கம்
D
அ.பாண்டுரங்கன்
Question 140
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
  • அடடா என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
A
அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
B
அடடா!’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
C
‘அடடா’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
D
அடடா!’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
Question 141
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
  • பிள்ளைத்தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன
A
பிள்ளைத்தமிழ் நூல்கள் "முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன ".
B
பிள்ளைத்தமிழ் நூல்கள் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன '.
C
பிள்ளைத்தமிழ் நூல்கள், 'முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், முதலியன’.
D
பிள்ளைத்தமிழ் நூல்கள், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன.
Question 142
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
  • ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று என்று கூறினார்
A
ஆசிரியர் மாணவர்களிடம் "மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று " என்று கூறினார்.
B
ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று " என்று கூறினார்.
C
ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே, கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று" என்று கூறினார்.
D
ஆசிரியர் மாணவர்களிடம், 'மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று ‘ என்று கூறினார்.
Question 143
  • ''வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
  • சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
  • ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
  • என்ற வரிகளை இயற்றியவர் யார்?
A
திரு.வி.க
B
மீனாட்சி சுந்தரனார்
C
கால்டுவெல்
D
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
Question 144
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. நளவெண்பா – கம்பன்
  2. கலிங்கத்துப்பரணி - சயங்கொண்டார்
  3. விருத்தம் என்னும் ஒண்பா – புகழேந்திப் புலவர்
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
2 மட்டும் சரி
D
1, 2 சரி
Question 144 Explanation: 
(விளக்கம்: நளவெண்பா – புகழேந்திப் புலவர் விருத்தம் என்னும் ஒண்பா – கம்பன்)
Question 145
தவறான இணையைத் தேர்ந்தெடு
  • ஒட்டக்கூத்தர் - கோவை, உலா, அந்தாதி
  • கலம்பகம் - இரட்டைப் புலவர்கள்
  • வசை – காளமேகப்புலவர்
A
1, 2 தவறு
B
2 , 3 தவறு
C
1, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 146
  • " எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
  • தம்முயிர்போல் எண்ணி உள்ளே
  • ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்"
  • இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
கம்பர்
B
கபிலர்
C
வள்ளலார்
D
இளங்கோவடிகள்
Question 147
பொருத்துக
  • குரிசில்   i) அச்சு
  • நயம்        ii) மேன்மை
  • இருசு       iii) தலைவன்
  • தலையளி         iv) செலுத்துதல்
  • உய்த்தல்            v) கருணை
A
i ii iii iv v
B
iii i ii iv v
C
v iv iii ii i
D
iii ii i v iv
Question 148
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. மனிதம் – Humane
  2. ஆளுமை – Personality
  3. பண்பாட்டுக் கழகம் - Cultural Academy
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2 , 3 சரி
Question 149
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  • வசனகவிதை – Simile
  • உவமையணி – Metaphor
  • உருவக அணி – Free verse
A
அனைத்தும் தவறு
B
1, 2 தவறு
C
1 , 3 தவறு
D
2, 3 தவறு
Question 149 Explanation: 
(விளக்கம்: வசனகவிதை – Free verse உவமையணி – Simile உருவக அணி – Metaphor)
Question 150
சரியான இணையைத் தேர்ந்தெடு
  1. சிற்பியின் மகள் - பூவண்ணன்
  2. அப்பா சிறுவனாக இருந்த போது - அலெக்சாந்தர் ரஸ்கின் .
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 150 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!