Online TestTamil
11th Tamil Part 5 Online Test – New Book
11th Tamil Iyal 5 Online Test - New Book Unit 5
11th Tamil Iyal 5 Online Test – New Book Unit 5
11th Tamil Questions - Part 5
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- கூற்று : கல்வி என்பதன் பொருள் 'கலலுதல்‘.
- காரணம் : அது கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக்கொண்டு வருவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 2 |
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு குறிப்பிடுகிறது.
காலிற்பிரிவு | |
கலத்திற்பிரிவு | |
ஓதல் பிரிவு | |
கல்விப்பிரிவு |
Question 3 |
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு _____ தோன்றும் எனக் கூறுகிறது.
நகை | |
செல்வம் | |
வியப்பு | |
பெருமிதம் |
Question 4 |
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கணங்களை கூறும் நூல்கள்
- நன்னூல்
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- ஆத்திச்சூடி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1 , 3 | |
1 , 4 |
Question 5 |
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
புறநானூறு – 188 | |
புறநானூறு – 183 | |
அகநானூறு – 188 | |
அகநானூறு – 183 |
Question 6 |
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி | |
ஒளவையார் | |
ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
Question 7 |
"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்
திரு.வி.க | |
அண்ணா | |
ராஜாஜி | |
மா. இராசமாணிக்கனார் |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழகத்தில் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் எது / எவை?
- 1.அறங்கூர் அவையம் 2. சமணப்பள்ளி
- 3 . பெளத்தப்பள்ளி 4. மன்றம்
அனைத்தும் சரி | |
1 , 3 சரி | |
1 , 3, 4 சரி | |
2 , 3, 4 சரி |
Question 9 |
பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பு ___
மன்றம் | |
அறங்கூர் அவையம் | |
சங்கம் | |
சமணப் பள்ளி |
Question 10 |
சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பிரிவினராக இருந்தனர்
2 | |
3 | |
4 | |
5 |
Question 11 |
சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்
- 1.சிறுவன் 2. மாணவன்
- 3.கேட்போன் 4. வாசிப்போன்
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 3 சரி | |
2 , 3 சரி |
Question 12 |
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'ஓதும் பள்ளி ‘ என்று கூறும் நூல்
பெரிய திருமொழி | |
திவாகர நிகண்டு | |
சீவக சிந்தாமணி | |
மணிமேகலை |
Question 13 |
சரியான இணையை தேர்ந்தெடு.
- பள்ளி - திவாகர நிகண்டு
- கல்லூரி - சீவக சிந்தாமணி
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 14 |
பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது
ஏடு | |
சுவடு | |
பொத்தகம் | |
பனுவல் |
Question 15 |
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
- உட்பொருளை குறிப்பவை– ஏடு, சுவடி, பொத்தம்
- ஓலைக்கற்றையை குறிப்பவை- பனுவல், நூல்
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 16 |
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய 4 கொடைகளும் _____ சமயத்தின் தலையாய அறங்களாகும்
வைணவம் | |
சமணம் | |
பெளத்தம் | |
சைவம் |
Question 17 |
சமணத்தை சேர்ந்த திகம்பரத் துறவிகள் மாணவர்களுக்கு கல்வியை எங்கு போதித்தனர்
சமணக் கோவில்கள் | |
மலைக்குகைகள் | |
பள்ளிக் கட்டிடங்கள் | |
மடங்கள் |
Question 18 |
- கூற்று : பள்ளி என்பதன் பொருள் படுக்கை
- காரணம் : படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று.
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 19 |
_____ என்னும் சொல் சமண பௌத்த சமயங்களின் கொடை ஆகும்.
கல்வி | |
மலை | |
பள்ளி | |
ஆசிரியர் |
Question 20 |
சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்குள்ளன.
பழனி மலை, கழுகுமலை | |
திருச்சி மலைக்கோட்டை ,வேலூர் | |
திருச்சி மலைக்கோட்டை ,கழுகுமலை | |
திருச்சி மலைக்கோட்டை, பழனி மலை |
Question 21 |
எழுத்தும் ,இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர்
ஆசிரியர் | |
கணக்காயர் | |
குரவர் | |
சான்றோர் |
Question 22 |
சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ___ ஆவர்.
ஆசிரியர் | |
கணக்காயர் | |
குரவர் | |
சான்றோர் |
Question 23 |
ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் ___.
ஆசிரியர் | |
கணக்காயர் | |
குரவர் | |
சான்றோர் |
Question 24 |
கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை___ எனப்பட்டன.
பள்ளிகள் | |
மன்றம் | |
சான்றோர் அவை | |
சபை |
Question 25 |
கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.
பள்ளிகள் | |
மன்றம் | |
சான்றோர் அவை | |
சபை |
Question 26 |
____ என்பது செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.
பள்ளிகள் | |
மன்றம் | |
சான்றோர் அவை | |
சபை |
Question 27 |
____ என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
தென்காசி அருகிலுள்ள வேடல் | |
வந்தவாசி அருகிலுள்ள வேடல் | |
வந்தவாசி அருகிலுள்ள விளாப்பாக்கம் | |
தென்காசி அருகிலுள்ள விளாப்பாக்கம் |
Question 28 |
விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்
சமணக் குரவர்கள் | |
பட்டினிக்குரத்தி | |
திகம்பரர் | |
மகாவீரர் |
Question 29 |
பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் ___ என அழைக்கப்பட்டன .
பெண்கள் மடங்கள் | |
பெண்கள் சபை | |
பெண்கள் மடாலயங்கள் | |
பெண் பள்ளிகள் |
Question 30 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பட்டிமண்டபம் என்ற கலைவடிவம் சமயத்துறையிலிருந்து தோன்றியது.
- இது சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடமென நீலகேசி கூறுகிறது.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 31 |
" ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் " என்று கூறும் நூல்.
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
நீலகேசி | |
குண்டலகேசி |
Question 32 |
காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி
மெகஸ்தனிஸ் - சீன பயணி | |
மெகஸ்தனிஸ் - இத்தாலிய பயணி | |
யுவான் சுவாங் – இத்தாலிய பயணி | |
யுவான் சுவாங் – சீனப் பயணி |
Question 33 |
தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் அறிமுகம் செய்தவர்
ஜான் கூட்டன்பர்க் | |
ஹென்ரி ஆடம்ஸ் | |
ரெவரெண்ட் பெல் | |
தாமஸ் மன்றோ |
Question 34 |
தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைத்தனர்
- 1 . மெட்ராஸ் காலேஜ் 2. மெட்ராஸ் சிஸ்டம்
- பெல் சிஸ்டம் 4. மானிடரி சிஸ்டம்
அனைத்தும் சரி | |
2 , 3 சரி | |
2, 3, 4 சரி | |
1 , 2, 3 சரி |
Question 35 |
போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதுணையாக இருந்த கல்வி முறை
குருகுலக் கல்விமுறை | |
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை | |
உயர்நிலைக் கல்விமுறை | |
மரபுவழிக் கல்வி முறைகள் |
Question 36 |
குருகுலக் கல்விமுறை கீழ்க்கண்ட எவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது
- 1 . செய்து கற்றல் 2. வாழ்ந்து கற்றல்
- எளிமையாக வாழ்தல் 4. பகிர்ந்து கற்றல்
அனைத்தும் சரி | |
1, 2,4 சரி | |
1 ,2 , 3 சரி | |
2, 3, 4 சரி |
Question 37 |
மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை
குருகுலக் கல்விமுறை | |
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை | |
உயர்நிலைக் கல்விமுறை | |
மரபுவழிக் கல்வி முறைகள் |
Question 38 |
திண்ணைப் பள்ளிகள் எக்காலக்கட்டத்தில் கிராமங்களில் அதிக அளவில் இருந்தன.
17ம் நூற்றாண்டு | |
18ம் நூற்றாண்டு | |
19ம் நூற்றாண்டு | |
20 ம் நூற்றாண்டு |
Question 39 |
ஆங்கிலேயரால் நாட்டுக் கல்வி என அழைக்கப்பட்ட கல்வி அமைப்புகள் எவை?
- 1.திண்ணைப் பள்ளிகள் 2. பாடசாலைகள்
- மக்தாபுகள் 4. மதரஸாக்கள்
அனைத்தும் சரி | |
1, 2 | |
1, 2, 3 | |
1, 2,4 |
Question 40 |
திண்ணைப் பள்ளிக் கல்வி முறை குறித்த கூற்றுகளில் தவறானது எது?
இவை தெற்றிப் பள்ளிகள் எனவும் அழைக்கப்பட்டன. | |
இப்பள்ளிகள் ஒரே மாதிரியான வரன்முறையுடன் செயல்பட்டன. | |
இவற்றின் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப் படியே அமைந்திருந்தன. |
Question 41 |
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
12,894 | |
14,298 | |
14,892 | |
12, 498 |
Question 42 |
கீழ்க்கண்டவர்களும் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர்
உ.வே.சா | |
மீனாட்சி சுந்தரனார் | |
மீரா | |
கல்யாணசுந்தரனார் |
Question 43 |
மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ் தாத்தா உ.வே.சா பாடம் பயின்ற முறை
குருகுலக் கல்விமுறை | |
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை | |
உயர்நிலைக் கல்விமுறை | |
பாடசாலை முறை |
Question 44 |
- " கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
- மூத்தோரை இல்லா அவைக்களணும் – பத்துண்ணும்
- - - - - - - - - - -
- நன்மை பயத்தல் இல்"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
மணிமேகலை | |
நாலடியார் | |
திரிகடுகம் | |
புறநானூறு |
Question 45 |
சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 46 |
சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 47 |
பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 48 |
சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 49 |
1794ல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது
1826 | |
1835 | |
1859 | |
1857 |
Question 50 |
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
1826 | |
1910 | |
1854 | |
1857 |
Question 51 |
பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொக்த் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டு
1826 | |
1835 | |
1911 | |
1857 |
Question 52 |
1453 ம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து | |
ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி | |
தாமஸ் மன்றோ – இங்கிலாந்து | |
தாமஸ் மன்றோ – ஜெர்மனி |
Question 53 |
டச்சுக் காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு
1706 | |
1835 | |
1854 | |
1857 |
Question 54 |
டச்சுக்காரர்கள் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை அச்சடித்த இடம்
காரைக்கால் | |
தரங்கம்பாடி | |
நாகப்பட்டினம் | |
சென்னை |
Question 55 |
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி
சமஸ்கிருதம் | |
ஆங்கிலம் | |
தமிழ் | |
பாரசீகம் |
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்கள் தமிழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்ட போது செய்தவைகளில் சரியானது எது?
- அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி புத்தகங்களை அச்சடித்தனர்
- அறப்பள்ளிகளை நிறுவினர்.
- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவினர்.
அனைத்தும் சரி | |
1 , 2 சரி | |
1 , 3 சரி | |
2 , 3 சரி |
Question 57 |
எந்த ஆண்டின் சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
1813 | |
1833 | |
1853 | |
1856 |
Question 58 |
இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத் தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
இந்தியவாதிகள் | |
தெற்கத்தியவாதிகள் | |
கீழைத்தேயவாதிகள் | |
மேற்கத்தியவாதிகள் |
Question 59 |
மேற்கத்திய பாணிக் கல்வி முறையான ஆங்கில வழிக் கல்வி முறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று கூறியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
இந்தியவாதிகள் | |
தெற்கத்தியவாதிகள் | |
கீழைத்தேயவாதிகள் | |
மேற்கத்தியவாதிகள் |
Question 60 |
"ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது" என்று கூறியவர்
தாமஸ் மன்றோ | |
மெக்காலே | |
ஹென்றி ஆடம்ஸ் | |
சுர்லஸ்வுட் |
Question 61 |
கீழைத்தேயவாதிகள், மேற்கத்தியவாதிகளின் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு மற்றும் ஆண்டு
சார்லஸ் வுட் குழு – 1853 | |
சார்லஸ் வுட் குழு – 1854 | |
மெக்காலே குழு – 1834 | |
மெக்காலே குழு – 1835 |
Question 62 |
தற்கால கல்வியும் தேர்வு முறையும் எந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டவை
சார்லஸ் வுட் குழு – 1853 | |
சார்லஸ் வுட் குழு – 1854 | |
மெக்காலே குழு – 1834 | |
மெக்காலே குழு – 1835 |
Question 63 |
இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என அழைக்கப்படுவது எந்த கல்விக் குழுவின் அறிக்கை
மெக்காலே கல்விக் குழு | |
ஹண்டர் கல்விக் குழு | |
சார்லஸ் வுட் கல்விக் குழு | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 64 |
சீருடைமுறை, தாய் மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு
மெக்காலே கல்விக் குழு – 1835 | |
ஹண்டர் கல்விக் குழு - 1882 | |
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854 | |
ஹண்டர் கல்விக் குழு – 1854 |
Question 65 |
புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்த கல்விக் குழு
மெக்காலே கல்விக் குழு – 1835 | |
ஹண்டர் கல்விக் குழு - 1882 | |
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854 | |
ஹண்டர் கல்விக் குழு – 1854 |
Question 66 |
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் எழுதப் படிக்க தெரிந்தவரின் எண்ணிக்கை
10% | |
12% | |
15% | |
18% |
Question 67 |
14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு
14 | |
24 | |
54 | |
45 |
Question 68 |
- "தாய் மொழியிலே பயின்று
- யாதும் உளரென
- உலகின் உறவாகவே
- விரும்புகிறேன் நான் "
- என்று பாடியவர்
திரு.வி.க | |
அண்ணா | |
இரா.மீனாட்சி | |
வரதராசனார் |
Question 69 |
- "இங்கே, ஐம்பதாண்டு வேம்பு
- கோடையில் கொட்டும் பூக்களை
- எண்ணச் சொல்கிறார்கள்"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
பள்ளிக்கூடம் | |
பிள்ளைக்கூடம் | |
சிறகுகள் | |
நற்றிணை |
Question 70 |
- “ சொந்தமொழி கற்பிக்கும்
- இந்தப் பள்ளிக்கூடம்
- மிகவும் பிடித்துப் போய்விட்டது"
- இவ்வரிகள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதையில் உள்ளது
நெருஞ்சி | |
சுடு பூக்கள் | |
கொடி விளக்கு | |
மறுபயணம் |
Question 71 |
இரா.மீனாட்சி அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் அல்லாதது எது?
நெருஞ்சி முள் | |
சுடு பூக்கள் | |
கொடி விளக்கு | |
மறுபயணம் |
Question 72 |
இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது.
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். | |
1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார் | |
ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். | |
இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார் . |
Question 73 |
- " பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
- விரி கதிர்ப் பொற்கலத்து ஒருவகை ஏந்திப்
- புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
- உண்என்று"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
ஐங்குறுநூறு | |
புறநானூறு | |
நற்றிணை | |
குறுந்தொகை |
Question 74 |
- "ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
- அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்க் தனள் கொல்"
- இவ்வரிகளை பாடியவர்
பேயனார் | |
கபிலர் | |
ஓரம்போகியார் | |
போதனார் |
Question 75 |
- "அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
- பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடலில் அமைந்துள்ள திணை மற்றும் துறை
முல்லை, கணவனின் நிலை உரைத்தல் | |
மருதம் , தந்தையின் நிலை உரைத்தல் | |
பாலை, மகள் நிலை உரைத்தல் | |
மருதம், தன் நிலை உரைத்தல் |
Question 76 |
‘மகள் நிலை உரைத்தல்’ என்னும் துறை வேறு எவ்வாறு அழைக்கப் படுகிறது.
மகள்மருட்சி | |
மனைமருட்சி | |
மனைமகள் மருட்சி | |
செவிலித்தாய் மருட்சி |
Question 77 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- வறன், கொழுஞ்சோறு
செல்வம், பெருஞ்செல்வம் | |
வறுமை, பெருஞ்செல்வம் | |
செல்வம், போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து | |
வறுமை, போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து |
Question 78 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- பிரசம், மதுகை
தேன், பெருமிதம் | |
பெருமிதம், தேன் | |
இனிப்பு, கடுஞ்சொல் | |
கடுஞ்சொல், இனிப்பு |
Question 79 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- புடைத்தல் – கோல் கொண்டு ஓச்சுதல்
- கொழுநன் குடி – கணவனுடைய வீடு
- உள்ளாள் – நினையாள்
அனைத்தும் சரி | |
1 , 2 சரி | |
1 , 3 சரி | |
2 , 3 சரி |
Question 80 |
இலக்கணக் குறிப்புத் தருக
- வெண்சுவை, தீம்பால்
வினைதொகைகள் | |
தொழிற்பெயர்கள் | |
பண்புத்தொகைகள் | |
வினையெச்சங்கள் |
Question 81 |
இலக்கணக் குறிப்புத் தருக
- விரிகதிர், ஒழுகுநீர்
வினைதொகைகள் | |
தொழிற்பெயர்கள் | |
பண்புத்தொகைகள் | |
வினையெச்சங்கள் |
Question 82 |
இலக்கணக் குறிப்புத் தருக
- பந்தர், கொண்ட
தொழிற்பெயர், பெயரெச்சம் | |
ஈற்றுப் போலி, பெயரெச்சம் | |
வினையெச்சம், பெயரெச்சம் | |
பெயரெச்சம், வினையெச்சம் |
Question 83 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து
மெலி +த்(ந்) + த் + உ | |
மெலி + த் + த்(ந்) + உ | |
மெலிந்து+உ | |
மெலிந்+த்+உ |
Question 84 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மறுத்து
மறு+த் + உ | |
மறுத்+து | |
மறு + த் + த் + உ | |
மறு+த்+து |
Question 85 |
"மெலிந்து >> மெலி + த்(ந்) +த் + உ"
- இதில் 'உ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
தொழில் பெயர் விகுதி | |
வினை முற்று விகுதி |
Question 86 |
"சிறுமை + கோல்>>சிறுகோல் "
இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
இனமிகல் | |
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் | |
ஈறு போதல் | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். |
Question 87 |
"பொன் + சிலம்பு பொற்சிலம்பு"
- இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
இனமிகல் | |
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் | |
ணன வல்லினம் வர ட ற வும் | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் |
Question 88 |
எட்டுத்தொகை நூல்களுள் 'நல்ல திணை’ என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடைய நூல்
நற்றிணை | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
புறநானூறு |
Question 89 |
நற்றிணையில் அமைந்துள்ள மொத்த பாடல்கள் மற்றும் அவற்றின் அடிவரையறை
401, 3 - 12 அடி | |
401, 9-12 அடி | |
400, 3-12 அடி | |
400 , 9-12 அடி |
Question 90 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையை தொகுப்பித்தவர்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | |
கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி | |
கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி |
Question 91 |
நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்
கபிலர் | |
பேயனார் | |
போதனார் | |
பெருந்தேவனார் |
Question 92 |
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல்
குறுந்தொகை | |
புறநானூறு | |
நற்றிணை | |
அகநானூறு |
Question 93 |
சங்க காலப் புலவரான போதனார் நற்றிணையில் எத்தனையாவது பாடலை பாடியுள்ளார்
110 | |
112 | |
120 | |
100 |
Question 94 |
நற்றிணையில் பேதனாரின் பாடல் எத்தனை அடிகளை கொண்டதாக அமைந்துள்ளது.
12 | |
13 | |
14 | |
15 |
Question 95 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பொற்கலம், பொற்சிலம்பு
7 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள் | |
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள் | |
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள் | |
6 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள் |
Question 96 |
தொல்காப்பியம் கீழ்க்கண்ட எவற்றிற்கு இலக்கணம் வகுத்துக் கூறுகிறது.
- 1.எழுத்து 2. சொல் 3. பொருள் 4. வாழ்வு
அனைத்தும் சரி | |
1 , 2, 3 சரி | |
1 , 3, 4 சரி | |
2 , 3, 4 சரி |
Question 97 |
சரியான இணையை தேர்ந்தெடு
- இகக்கும் – குற்றம்
- இழுக்கு – குற்றம்
- வினாயவை – கேட்டவை
அனைத்தும் சரி | |
1 , 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 98 |
- "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
- பெருக நூலிற் பிழைபா டிலனே “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நன்னூல் | |
தொல்காப்பியம் | |
நற்றினை | |
புறநானூறு |
Question 99 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- அறிதல், கேட்டல்
தொழிற்பெயர், வினையெச்சம் | |
வினையெச்சம், வினை முற்று | |
தொழிற்பெயர், தொழிற்பெயர் | |
வினையெச்சம், வினையெச்சம் |
Question 100 |
இலக்கணக் குறிப்புத் தருக – நனிஇகக்கும்
வினை முற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 101 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – விடுத்தல்
விடு+த் +த் + அல் | |
விடு +த் + அல் | |
விடு+த் + தல் | |
விடுத்து + அல் |
Question 102 |
"விடு +த் + தல்" என்பதில் 'தல்’ என்பதின் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
தொழில் பெயர் விகுதி | |
வினை முற்று விகுதி |
Question 103 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – அறிந்து
அறிந்+து | |
அறிந்+த் + உ | |
அறி +த்(ந்) + த் + உ | |
அறி+த் + த்(ந்) + உ |
Question 104 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – இழுக்கின்றி
Question 105 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – முறையறிந்து
Question 106 |
தொல்காப்பியம் முதன் முதலில் பதிக்கப்பட்ட ஆண்டு
1947 | |
1847 | |
1874 | |
1974 |
Question 107 |
கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பிய அதிகாரங்களில் அல்லாதது எது?
எழுத்து | |
சொல் | |
பொருள் | |
யாப்பு |
Question 108 |
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?
9 | |
18 | |
27 | |
36 |
Question 109 |
கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்களுள் அல்லாதவர் யார்?
- 1.இளம்பூரணர் 2. நச்சினார்க்கினியர்
- 3 . கல்லாடனார் 4. பேராசிரியர்
அனைத்தும் சரி | |
1, 2 | |
1 , 3 | |
1,2,4 |
Question 110 |
- " முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் “
- இவ்வரிகள் யாருடைய சிறப்பை கூறுகிறது.
ஆசிரியரின் சிறப்பு | |
மாணவரின் சிறப்பு | |
பெற்றோரின் சிறப்பு | |
கடவுளின் சிறப்பு |
Question 111 |
- " வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்
- பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் “
- என்னும் தொல்காப்பியப் பாடல் யாருடைய உரை விளக்கத்தில் இடம்பெற்றுள்ளது
இளம்பூரணர் | |
நச்சினார்க்கினியர் | |
கல்லாடனார் | |
பேராசிரியர் |
Question 112 |
நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல்
நன்னூல் | |
பாயிரம் | |
தொல்காப்பியம் | |
நிகண்டு |
Question 113 |
பாரதியார் எப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
தஞ்சை உயர்நிலைப் பள்ளி | |
எட்டயபுர சேதுபதி உயர்நிலைப்பள்ளி | |
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி | |
மெட்ராஸ் உயர்நிலைப்பள்ளி |
Question 114 |
சுதேசமித்ரன் இதழில் பாரதி ஏற்றுக் கொண்ட பொறுப்பு
எழுத்தாளர் | |
உதவி ஆசிரியர் | |
ஆசிரியர் | |
எதுவுமில்லை |
Question 115 |
கீழ்க்கண்டவற்றில் பாரதி பணியாற்றிய இதழ்கள் யாவை?
- 1.சக்ரவர்த்தினி 2. பாலபாரதி 3. விஜயா
- சூர்யோதயம் 5 . கர்மயோகி
அனைத்தும் சரி | |
1 , 2, 3 சரி | |
2 , 3, 5 சரி | |
1 , 3, 4 சரி |
Question 116 |
கீழ்க்கண்டவறறுள் பாரதி தம் படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் எவை?
- கலைமகள் 2. தேசபக்தன் 3 . கதாரத்னாகரம்
- 4 . ஞான பானு 5 . காமன்வீல்
அனைத்தும் சரி | |
1 , 2, 5 சரி | |
1, 3, 5 சரி | |
1 , 3, 4, 5 சரி |
Question 117 |
தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் " தான் " என்ற ஒன்றை ஒழித்தவர்
பாரதிதாசன் | |
பாரதி | |
அண்ணா | |
திரு.வி.க |
Question 118 |
தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாக கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _____
பாரதிதாசன் | |
பாரதி | |
அண்ணா | |
திரு.வி.க |
Question 119 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதியின் புனைப்பெயர்களில் அல்லாதது எது?
- 1.சாவித்திரி 2. வேதாந்தி 3 . நித்திய தீரர்
- 4 . காசி 5. செல்லம்மா
அனைத்தும் சரி | |
1 , 2, 5 சரி | |
1, 3, 5 சரி | |
1 , 3, 4, 5 சரி |
Question 120 |
பாரதி,தமிழில் ____ என்ற பெயரில் கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்.
சித்திரம் | |
சித்திராவளி | |
கருத்துப்பட இதழ் | |
சித்திரா இதழ் |
Question 121 |
தமிழ் இதழ்களில் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பாரதிக்கு ஏறபடுத்திய இதழ்கள்
- 1.லண்டன் பஞ்ச் 2 .இந்தி பஞ்ச்
1 மட்டும் | |
2 மட்டும் | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 122 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதி கருத்துப் படங்களை வெளியிட்ட இதழ்கள் எவை?
- 1.இந்தியா 2. விஜயா 3. சித்திராவளி 4 . கர்மயோகி
அனைத்தும் சரி | |
1 , 2 சரி | |
1 , 2, 3 சரி | |
2 , 3, 4 சரி |
Question 123 |
கீழ்கண்டவற்றுள் பாரதியிடம் துணையாசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?
- 1.பி.பி.சுப்பையா 2. ஹரிஹரர் 3. என்.நாகசாமி
- வ.ராமசாமி 5. கனகசுப்பையா
அனைத்தும் சரி | |
1 , 2, 3, 4 சரி | |
1, 2,3, 5 சரி | |
1 , 3, 4, 5 சரி |
Question 124 |
தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதி | |
அண்ணா | |
திரு.வி.க |
Question 125 |
பாரதி பெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்
சக்ரவர்த்தினி | |
பாலபாரதி | |
விஜயா | |
சூர்யோதயம் |
Question 126 |
- "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
- ஒண்மை யுறஓங்கும் உலகு “
- இக்குறள் வெண்பாவை எழுதியவர்
திருவள்ளுவர் | |
திரு.வி.க | |
பாரதி | |
பாரதிதாசன் |
Question 127 |
பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ்
சக்ரவர்த்தினி | |
இந்தியா | |
விஜயா | |
சூர்யோதயம் |
Question 128 |
இந்தியா என்பது எவ்வகையான இதழ் ?
மாத இதழ் | |
நாளிதழ் | |
வார இதழ் | |
வருட இதழ் |
Question 129 |
- கூற்று : பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்.
- காரணம் : சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணினார்.
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 130 |
பாரதி இறந்து போவதற்கு முதல் நாள் இரவில் யாரைப் பற்றிய வியாசம் எழுத வேண்டும் என கூறினார்?
காந்தி | |
அமானுல்லா கான் | |
சிதம்பரனார் | |
கால்டுவெல் |
Question 131 |
பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார் என கூறுவது
பாரதியப் பற்றி நண்பர்கள் - ரா.அ.பத்மநாபன் | |
பாரதியப் பற்றி நண்பர்கள் – பார்த்திபன் | |
பாரதியப் பற்றி இதழாளர்கள் - ரா.அ.பத்மநாபன் | |
பாரதியப் பற்றி இதழாளர்கள் – பார்த்திபன் |
Question 132 |
பாரதி தம் மனைவி செல்லம்மாவை எந்தெந்த புனைப்பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.
- கண்ணம்மா 2. சரஸ்வதி 3. வள்ளி
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
2 , 3 சரி |
Question 133 |
பாரதி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு பாரதியே முன்னோடி. | |
தலைப்பிடலை 'மகுடமிடல்’ என்று பாரதி கூறினார் | |
சக்ரவர்த்தினி போன்ற இதழ்களில் 1906-1907 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் பாரதி கலந்து பயன்படுத்தினார். | |
பாரதி தம் நண்பர்கள் பெயரையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் புனைப்பெயரில் |
Question 134 |
உவமை கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்
- 1.வினை 2. பயன் 3. வடிவம் 4. உரு
அனைத்தும் சரி | |
1, 2,4 சரி | |
1 ,2 , 3சரி | |
2, 3, 4 சரி |
Question 135 |
"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம் "
இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளது
நன்னூல் | |
தொல்காப்பியம் | |
பாயிரம் | |
திருவாசகம் |
Question 136 |
"கண்ணன் புலி போலப் பாய்ந்தான்" இத்தொடரில் அமைந்துள்ள உவமை, உவமேயம் முறையே ____ ,____
கண்ணன், புலி | |
புலி, கண்ணன் | |
புலி, போல | |
புலி, பாய்ந்தான் |
Question 137 |
ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் ___ எளியதும் தொன்மை மிக்கதாகவும் உள்ளது.
உவமை | |
உவமேயம் | |
உவம உருபு | |
பகுதி |
Question 138 |
சங்கப்பாடல்களில் பெரும்பாலும் ___அணி இடம் பெறுகிறது.
எடுத்துக்காட்டுவமையணி | |
பிறிது மொழிதல் அணி | |
உவமை அணி | |
சொல் பின்வரு நிலையணி |
Question 139 |
- "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
- நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
புறநானூறு | |
நன்னூல் | |
அகநானூறு |
Question 140 |
- ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
- நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
- இப்பாடல் யாரால் யாருக்காகப் பாடப்பட்டது.
ஒளவையாரால் பாரிக்கு | |
ஒளவையாரால் அதியமானுக்கு | |
கபிலரால் பாரிக்கு | |
கபிலரால் அதியமானுக்கு |
Question 141 |
- "கண்ணீரை நீ துடைத்தபோது
- நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட
- வானம் போல் உன் முகம்
- இருண்டு போயிருந்தது "
- -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள கவிதை
மெளன மயக்கங்கள் | |
மயக்கங்கள் | |
வெளிச்சம் | |
பிள்ளைக்கூடம் |
Question 142 |
- "அவர்கள் மூளையில் விதையைப் போல்
- தூவப்பட வேண்டிய அறிவு
- ஆணியைப் போல அறையப்படுகின்றது "
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
வினை உவமை | |
பயன் உவமை | |
மெய் உவமை | |
உரு உவமை |
Question 143 |
- " வறண்ட வாழ்வு துளிர்க்க
- மழை போல் வந்தாய் நீ "
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
வினை உவமை | |
பயன் உவமை | |
மெய் உவமை | |
உரு உவமை |
Question 144 |
- "சுருக்கிய குடையைப் போலத்
- தோன்றும் அசோக மரம்"
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
வினை உவமை | |
பயன் உவமை | |
மெய் உவமை | |
உரு உவமை |
Question 145 |
- "சோடிய விளக்காய் மாலை நேரச் சூரியனின்
- மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது "
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
வினை உவமை | |
பயன் உவமை | |
மெய் உவமை | |
உரு உவமை |
Question 146 |
ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் போது அது _____ எனப்படுகிறது
உவமை | |
உவமேயம் | |
உவம உருபு | |
உருவகம் |
Question 147 |
உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ______.
உவமை | |
உவமேயம் | |
உவம உருபு | |
உருவகம் |
Question 148 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
உருவகத் தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமையும். | |
உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம் | |
உவமையை விட உருவகம் ஆழமானது | |
உருவகத்தில் உவமானமும் உவமேயமும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது. |
Question 149 |
தீ போல் சினம் என்பதை சினத்தீ என்று கூறியவர்
பாரதிதாசன் | |
பாரதி | |
கம்பர் | |
இளங்கோவடிகள் |
Question 150 |
- "வானக் கருமை கொல்லோ?
- பட்டுக் கருநீலப் புடவை
- பதித்த நல்வயிரம்
- நட்ட நடுநிசியில் – தெரியும்
- நட்சத்திரங்களடி …."
- என்று பாடியவர்
பாரதிதாசன் | |
பாரதி | |
கம்பர் | |
இளங்கோவடிகள் |
Question 151 |
"எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி " இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
வினை உருவகம் | |
பயன் உருவகம் | |
வடிவ உருவகம் | |
உரு உருவகம் |
Question 152 |
"ஆகாசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ ... "
இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
வினை உருவகம் | |
பயன் உருவகம் | |
வடிவ உருவகம் | |
உரு உருவகம் |
Question 153 |
"நீல வயலின் நட்சத்திர மணிகள் … "
- இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
வினை உருவகம் | |
பயன் உருவகம் | |
வடிவ உருவகம் | |
உரு உருவகம் |
Question 154 |
“ மலைக் கிழவியின் நரைத்த கூந்தல்..."
- இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
வினை உருவகம் | |
பயன் உருவகம் | |
வடிவ உருவகம் | |
உரு உருவகம் |
Question 155 |
கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ____ என்பர்.
உள்ளுறை உவமம் | |
உவமேயம் | |
உவம உருபு | |
உருவகம் |
Question 156 |
அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக் கொள்ளும் வடிவமாக பயன்படுவது
உள்ளுறை உவமம் | |
உவமேயம் | |
உவம உருபு | |
உருவகம் |
Question 157 |
உள்ளுறை குறித்த செய்திகளில் தவறானது எது?
- வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும்
- குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்
அனைத்தும் சரி | |
1 மட்டும் | |
2 மட்டும் சரி | |
இரணடும் தவறு. |
Question 158 |
இலக்கியங்களில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமைவது ____ ஆகும்.
உள்ளுறை உவமம் | |
உவமேயம் | |
உவம உருபு | |
உருவகம் |
Question 159 |
- "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
- குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை
- தூங்கு தோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
- பாம்பு மதன் அழியும் பானாட் கங்குல் "
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்
புறநானூறு – ஒளவை | |
அகநானூறு -கோப்பெருங் கிழார் | |
அகநானூறு -பெருங்குன்றூர் கிழார் | |
புறநானூறு -பெருங்குன்றூர்கிழார். |
Question 160 |
இறைச்சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
உள்ளுறை போன்றே இறைச்சியும் அகப்பாடலில் வரும் உத்தி ஆகும் | |
இது குறிப்புப் பொருளில் வரும் | |
இறுத்தல் என்றால் தாங்குதல் என்று பொருள் | |
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும். |
Question 161 |
- " நடைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
- பிடிபசி களை இய பெருங்கை வேழம்"
- _ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
அகநானூறு |
Question 162 |
கீழ்க்கண் கூற்றுகளில் கூற்றுகளில் தவறானது எது?
உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை . | |
உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை . | |
உள்ளுறை உவமம் கவிதை பொருளோடு சேர்ந்து காணப்படுகிறது. | |
இறைச்சி பொருள் கவிதை பொருளின் அகத்தே உவமேயமாய் நிற்கும் |
Question 163 |
- “ நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
- அம்ம நாணுதும் நும்மொடு நகையே "
- _ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை | |
குறுந்தொகை | |
புறநானூறு | |
அகநானூறு |
Question 164 |
- " ஒட்டுப்போடாத ஆகாயம் போல –
- இந்த உலகமும் ஒன்றேதான் "
- இக் கவிதைகளில் பயின்று வருவது
உவமை | |
உருவகம் | |
உள்ளுறை | |
இறைச்சி |
Question 165 |
கீழ்க்கண்வற்றுள் "இறைச்சி " பற்றிய கூற்றைத் தேர்க
குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் | |
ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் | |
வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும். | |
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள் |
Question 166 |
ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ____.
நூல் | |
ஓலை | |
எழுத்தாணி | |
தாள் |
Question 167 |
ஜி.யு.போப் அவர்கள் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு
1835 | |
1836 | |
1839 | |
1832 |
Question 168 |
ஜி.யு.போப் அவர்கள் முதன் முதலில் தமிழ் சொற்பொழிவாற்றிய இடம்
தஞ்சாவூர் | |
சாந்தோம் | |
கொடைக்கானல் | |
மதுரை |
Question 169 |
ஜி.யு.போப் அவர்கள் மொழிப்பெயர்த்த நூல்கள்
- திருக்குறள்
- திருவாசக ஆங்கில மொழிப்பெயர்ப்புகள்
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 170 |
ஜி.யு.போப் அவர்கள் வாழ்ந்த காலம்
1820-1890 | |
1820-1908 | |
1809-1890 | |
1809-1908 |
Question 171 |
இலக்கணக் குறிப்புத் தருக – பிறந்தார்
வினைத்தொகை | |
வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
பெயரெச்சம் |
Question 172 |
பொருத்துக.
- தொல்காப்பியம் i) சங்க நூல்
- திருக்குறள் ii) பக்தி நூல்
- புறநானூறு iii) அற நூல்
- திருவாசகம் iv) இலக்கண நூல்
iv iii I ii | |
iii i ii iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 173 |
" மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்
கால்டுவெல் | |
ஜி. யு.போப் | |
விவேகானந்தர் | |
திரு.வி.க |
Question 174 |
- "மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
- மாதர் அறிவைக் கெடுத்தார். "
- இவ்வரிகளை பாடியவர்
பாரதி | |
பாரதிதாசன் | |
ஜி.யு.போப் | |
கால்டுவெல் |
Question 175 |
பொருத்துக
- உள்கட்டமைப்பு i) Infrastructure
- செம்மொழி ii) classical language
- மூதாதையர் iii) ancestor
- மதிப்புக் கல்வி iv) value education
- மன ஆற்றல் v) mental abilities
i ii iii iv v | |
iii i v iv ii | |
ii v iii iv i | |
ii i iv iii v |
Question 176 |
"இந்தியாவில் இருந்த வழிமுறையே இங்கிலாந்தில் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு வர வழிகாட்டி இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது." என்று கூறியவர்
கால்டுவெல் | |
கால்டுவெல் | |
தரம் பால் | |
திரு.வி.க |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 176 questions to complete.