Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
GeographyOnline Test

11th Geography Notes Part 6 in Tamil – Online Test – New Book

இயற்கைப் பேரிடர் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு 11th Geography Questions in Tamil

Congratulations - you have completed இயற்கைப் பேரிடர் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு 11th Geography Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எத்தனை மில்லியன் மக்கள் வெவ்வேறு வகையான பேரிடர்களால் பாதிக்கப்படுகின்றனர்?
A
212 மில்லியன்
B
232 மில்லியன்
C
245 மில்லியன்
D
258 மில்லியன்
Question 1 Explanation: 
சமீப காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி, திட்டமிடாத நகரமயமாதல், சுற்றுப்புற சூழல் சீர்கேடு, பற்றாக்குறையுள்ள வளங்களுக்காக ஏற்படும் பிரச்சனை மற்றும் போட்டி, காலநிலை மாற்றம், கொள்ளை நோய்கள், வறுமை மற்றும் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சிகளின் அழுத்தம் ஆகிய காரணங்களால் பேரிடர் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.
Question 2
கியூகோ செயல் திட்ட வரைவில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டுள்ளன?
A
168
B
175
C
182
D
189
Question 2 Explanation: 
பேரிடர் அபாயக் குறைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து 2005 இல் 168 நாடுகள், வளர்ச்சி மற்றும் மனித நேயம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் இந்த வரைவில் கையெழுத்திட்டன.
Question 3
கியூகோ திட்ட வரைவில் கையெழுத்திட்ட நாடுகள் எத்தனை ஆண்டுகளுக்கு கையெழுத்திட்டன?
A
3
B
6
C
8
D
10
Question 3 Explanation: 
கியூகோ செயல் திட்ட வரைவு பேரிடரை எதிர்கொள்ளும் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் பேரிடர் அபாய குறைப்புக்கான திட்டத்தில் வளர்ச்சி மற்றும் மனித நேயம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் முதலீடு செய்யும் 10 ஆண்டுகளுக்கான ஒரு பல்முனை பங்கேற்பாளர்கள் மற்றும் பல்துறை திட்டமாகும்.
Question 4
பேரிடர் அபாய குறைப்பிற்கான பொது விழிப்புணர்வு எத்தனை அணுகுமுறைகளை கொண்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 4 Explanation: 
அவை பிரச்சாரம், பங்கேற்று கற்றல், முறைசாரா கல்வி மற்றும் முறைசார் பள்ளி சார்ந்த பங்களிப்பு போன்றவையாகும்.
Question 5
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  • பேரிடர் தொடர்புடைய குறிப்பிட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கலாம்.
  • பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களுடன் பேரிடர் எங்கு, எப்போது நிகழ்கிறதோ அதனுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 5 Explanation: 
இது தற்போதுள்ள தன்னார்வலர்களை அணி திரட்டுவதற்கும், குழுவிற்கு ஒத்துழைப்பதற்கும் மற்றும் குழுக்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கும் உதவிடும்.
Question 6
முறைசார் கல்வி சார்ந்த பங்களிப்பை முன்னிலைப்படுத்துவது எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 6 Explanation: 
அவை பள்ளிப் பாடத்திட்டத்தில் பள்ளி பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் அபாய குறைப்பு பற்றிய பாடத்தில் உட்படுத்துவதாகும். இவை முறையானது என கருதப்படுகிறது.
Question 7
கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வொரு பள்ளியும் அமைக்க வேண்டிய பள்ளி பேரிடர் குழுக்கள் யாவை?
    1. ஒருங்கிணைப்புக் குழு  2) விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழு  3) இடப் பாதுகாப்பு குழு  4) முதலுதவி குழு
A
1, 2 & 3
B
2, 3 & 4
C
1, 3 & 4
D
1, 2, 3 & 4
Question 7 Explanation: 
மேலும் தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றும் குழு, எச்சரிக்கை மற்றும் தகவல் குழு, பேருந்து பாதுகாப்பு குழு மற்றும் நீர் அல்லது உணவு ஏற்பாட்டுக்குழு ஆகியவற்றை ஒவ்வொரு பள்ளியும் அமைக்க வேண்டும் என்று பள்ளி பேரிடர் மேலாண்மை திட்டம் வலியுறுத்துகிறது.
Question 8
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வினை எளிதில் கையாளும் விதத்தில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஒரு பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பேரிடர் மேலாண்மை திட்டம்
B
மாதிரி பயிற்சி
C
பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு
D
கியூகோ செயல் திட்ட வரைவு
Question 8 Explanation: 
மாதிரி பயிற்சியானது பள்ளி பேரிடர் மேலாண்மையில், முக்கிய பங்கு வகித்து, ஒரு ஆழமான கற்றல் அனுபவத்தை கொடுக்கின்றது. பள்ளி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவராலும் இது பிரதிபலிக்கப்பட்டும் மதிப்பீடு செய்யப்பட்டும் பின்பற்றப்படுகின்றது.
Question 9
புவிப் பரப்பில் உள்ள பாறைப் பகுதி மாறுவதால் நிலப்பகுதி திடீரென அசைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
நிலநடுக்கம்
B
எரிமலை வெடிப்பு
C
பாறை வெடிப்பு
D
நிலச்சரிவு
Question 9 Explanation: 
நிலநடுக்கமானது எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். நடுக்கத்தின் போது பொருட்சேதம், காயங்கள் மற்றும் உயிர் இழப்பு போன்றவை ஏற்படும்.
Question 10
கோர்க்கா நிலநடுக்கம் எந்த நாட்டில் ஏற்பட்டது?
A
பூட்டான்
B
நேபாளம்
C
ஜப்பான்
D
இந்தோனேசியா
Question 10 Explanation: 
ஏப்ரல் 2015 இல் நேபாள நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 9000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயமடைந்தனர். ஏப்ரல் 25ஆம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளி அமைந்திருந்தது.
Question 11
நேபாளம் - பீகார் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு எது?
A
1928
B
1930
C
1932
D
1934
Question 11 Explanation: 
இந்நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவை ஏற்படுத்தியது. இதில் 21 பேர் உயிரிழந்ததினால் ஏப்ரல் 25, 2015 என்பது நேபாளத்தின் வரலாற்றில் மிக மோசமான நாளாக அமைந்தது. இந்த நிலநடுக்கமானது லாங்க்டாங் பள்ளத்தாக்கில் மற்றொரு பெரிய அளவிலான பனி சரிவை ஏற்படுத்தியது. இதில் 250 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
Question 12
கீழ்கண்டவற்றுள் நிலநடுக்கத்தின் போது பின்பற்றப்படும் விதிமுறைகள் யாவை?
  1. அமைதியாக இருக்கவேண்டும் மற்றும் பதற்றம் அடைய தேவையில்லை.
  2. கண்ணாடி ஜன்னல்கள், கண்ணாடி கதவுகள் மற்றும் கீழே விழக்கூடிய பொருட்கள் ஆகியவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டும்.
  3. வீட்டில் இருந்தால் மின் சாதனங்கள் மற்றும் சமையல் எரிவாயுவினை விரைவாக அணைத்து விட வேண்டும்.
A
1 & 2
B
2 & 3
C
3 & 1
D
1, 2 & 3
Question 12 Explanation: 
மேலும் நிலநடுக்கத்தின்போது கட்டிடத்தை விட்டு விரைவாக வெளியே ஓடக் கூடாது. ஏனென்றால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி அதிகமான மக்கள் உயிர் இழக்க நேரிடும். மாடிப்படிகள், மாடிமுகப்பு மற்றும் மின்தூக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
Question 13
நிலநடுக்கத்திற்கு பின் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் சரியானது எது?
  1. நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் நாம் வசிப்பிடத்திற்கு திரும்பி செல்ல கூடாது. ஏனெனில் நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  2. எரிவாயு கசிவு மற்றும் மின்னணு சாதனங்கள் பழுது அடைந்து இருந்தால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  3. லாந்தர் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தக் கூடாது.
A
1 & 2 மட்டும்
B
2 & 3 மட்டும்
C
1 & 3
D
1, 2 & 3
Question 13 Explanation: 
மேலும் தேவையான பொருட்களை அலமாரியில் இருந்து எடுக்கும் போது கவனமாக இருத்தல் வேண்டும். நிலநடுக்கம் பற்றிய வானொலி தகவல்களை கவனிக்க வேண்டும்.
Question 14
உயரமான சரிவு மிகுந்த பகுதியில் இருந்து சிதைந்த பாறைகள் நகர்வதை எவ்வாறு அழைக்கிறோம்?
A
நிலநடுக்கம்
B
எரிமலை வெடிப்பு
C
பாறை வெடிப்பு
D
நிலச்சரிவு
Question 14 Explanation: 
புவியீர்ப்பு விசையின் நேரடி தாக்கத்தினால் நிலச்சரிவு ஏற்படுகின்றது. மழைப் பொழிவு, பனி உருகுதல், ஆற்றின் அரிப்பு, வெள்ளப் பெருக்கு, நிலநடுக்கம், எரிமலை செயல்கள், மனித நடவடிக்கைகள் இணைந்து நிலச்சரிவு ஏற்படும்.
Question 15
கீழ்க்கண்டவற்றுள் நிலச்சரிவு ஏற்படும் போது செய்ய வேண்டிய செயல் முறைகளில் சரியானது எது?
  • நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களின் வழியாக வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்
  • நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 15 Explanation: 
ஓடை அல்லது ஆற்றின் அருகில் நீரோட்டமானது திடீரென்று அதிகரித்தாலோ குறைந்தாலோ மற்றும் தெளிந்த நீரானது சேற்றுடன் கலந்து வந்தாலோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம் மாற்றங்கள் ஏற்படுவது நிலச்சரிவின் அறிகுறிகளாகும்.
Question 16
கீழ்கண்டவற்றுள் நிகழ்விற்குப் பின் செய்ய வேண்டிய செயல்களில் சரியானது எது?
  • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  • மீட்புக் குழுவினருக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
  • உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சி களின் சமீபத்திய அவசர தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
1, 2 & 3
Question 16 Explanation: 
நிலச்சரிவினை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலச்சரிவில் காயம் அடைந்தவர்கள் மற்றும் சிக்கியவர்கள் இருக்கிறார்களா என அப்பகுதிக்கு அருகில் செல்லாமல் தொலைவிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
Question 17
இந்தியாவின் கடலோர இலையின் நீளம் எவ்வளவு?
A
7516 கி.மீ
B
7427 கி.மீ
C
7336 கி.மீ
D
7113கி.மீ
Question 18
உலகின் வெப்ப மண்டல பகுதியில் ஏற்படும் புயலில் இந்தியாவில் எத்தனை சதவீதம் உருவாகிறது?
A
4%
B
10%
C
14%
D
19%
Question 18 Explanation: 
முக்கியமான இயற்கைப் பேரிடர்களில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது புயலாகும்.
Question 19
இந்தியாவின் மொத்த புயல் பாதிப்பில் 71% எத்தனை மாநிலங்களில் ஏற்படுகிறது?
A
5
B
7
C
10
D
13
Question 19 Explanation: 
அவை குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம். அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் புயல் உருவாகலாம்.
Question 20
தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கை யாது?
A
10
B
13
C
17
D
20
Question 20 Explanation: 
தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்கள் மே - ஜூன் மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் புயலால் பாதிக்கப்படுகின்றது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.
Question 21
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏற்படும் வெப்ப மண்டலப் புயல்களின் எண்ணிக்கை யாது?
A
2 அல்லது 3
B
3 அல்லது 4
C
4 அல்லது 5
D
5 அல்லது 6
Question 21 Explanation: 
இந்த வெப்ப மண்டல புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் உருவாகி கடலோரப் பகுதிகளை தாக்குகின்றன. இவற்றில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் மிகவும் தீவிரமானதாக இருக்கும்.
Question 22
புயலின் போது மணிக்கு  _____ வேகத்தில் காற்று வீசும்.
A
65 – 117 கி.மீ
B
72 – 133 கி.மீ
C
76 – 139 கி.மீ
D
80 – 145 கி.மீ
Question 22 Explanation: 
பெரும்பாலான புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி அதனைத்தொடர்ந்து அரபிக்கடலிலும் உருவாகும். இதன் விகிதமானது ஏறக்குறைய 4:1 ஆகும்.
Question 23
புயல் வருவதற்கு முன் செய்ய வேண்டியவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  1. உயரமான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
  2. பேட்டரியால் இயங்கும் வானொலி பெட்டி, பிளாஸ்டிக் டார்ச் விளக்கு, மண்ணெண்ணெய், தீப்பெட்டி முதலியவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
  3. முதலுதவி சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
எதுவும் இல்லை
Question 23 Explanation: 
புயல் வருவதற்கு முன் தாழ்வான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும். கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
Question 24
புயல் வருவதற்கு முன் செய்ய வேண்டியவற்றில் எத்தனை நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்?
A
2 நாள்
B
4 நாள்
C
ஒரு வாரம்
D
இரண்டு வாரம்
Question 24 Explanation: 
குறைந்தது ஏழு நாட்களுக்கு தேவையான உணவு பொருள், எரிபொருள், குடிநீர் உயிர் காக்கும் மருந்து முதலியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
Question 25
புயலின் போது செய்ய  வேண்டியவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  1. புயலின் போது கட்டிடத்திற்கு உள்ளே இருந்தால் கண்டிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும்.
  2. அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வைக்க வேண்டும்.
  3. கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தூசிகளில் இருந்து பாதுகாக்க கைகளால் அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
1, 2 & 3
Question 25 Explanation: 
மேலும் காட்டுப்பகுதியில் இருந்தால் காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். வாகனத்தில் இருந்தால், ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு வாகனத்தின் உள்ளேயே இருப்பது நன்று.
Question 26
கீழ்க்கண்டவற்றுள் வெள்ளப்பெருக்கில் விளைவாக பரவும் தொற்று நோய்கள் எவை?
  • 1) மலேரியா          2) புற்றுநோய்          3) எய்ட்ஸ்          4) காலரா
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
1 & 4
Question 26 Explanation: 
வெள்ளை பெருக்கானது குறிப்பாக கிராமப்புறங்களில் ஏராளமான மக்களுக்கு இன்னல்களை தந்திருக்கிறது.
Question 27
இந்தியாவின் ஆண்டு சராசரி மழை அளவு எவ்வளவு?
A
1000 மி.மீ
B
1150 மி.மீ
C
1250 மி.மீ
D
1375 மி.மீ
Question 27 Explanation: 
இது நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. உலகில் அதிக வெள்ளப்பெருக்கு பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அமைவது பருவ காற்று, அதிக வண்டல் படிவுகள் கொண்ட அவற்றின் அமைப்பு மற்றும் இமயமலைத்தொடர் போன்ற செங்குத்தான சிதைவடைய கூடிய மலைகள் ஆகும்.
Question 28
வர்தா புயல் ஏற்பட்ட ஆண்டு எது?
A
2015
B
2016
C
2017
D
2018
Question 28 Explanation: 
இந்த புயல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சென்னையை தாக்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் 10 பேர் இறந்ததாக தகவல் அளித்தது. காட்டில் அதிகபட்ச வேகமானது ஒரு மணி நேரத்திற்கு 130 கிலோ மீட்டருக்கு மேல் பதிவாகியுள்ளது.
Question 29
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்படும் ஆண்டு மழைப்பொழிவு எவ்வளவு?
A
1500 மி.மீ
B
1800 மி.மீ
C
2500 மி.மீ
D
2700 மி.மீ
Question 29 Explanation: 
ஆண்டு மழை பொழிவானது மேற்கு கடற்கரை, மேற்கு தொடர்ச்சி மலை, காசி குன்றுகள் மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் அதிகமான மழைபொழிவு பதிவாகிறது.
Question 30
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் பகுதிகளின் விகிதம் எவ்வளவு?
A
1/5
B
1/3
C
1/8
D
1/6
Question 30 Explanation: 
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 23 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குட்படுகின்றன. மேலும் 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு அதாவது தோராயமாக நாட்டின் மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு வெள்ளப் பெருக்கு பாதிப்பிற்குட்படுகிறது.
Question 31
நம் நாட்டில் தேசிய வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A
1945
B
1954
C
1975
D
1992
Question 32
வெள்ளப்பெருக்கு முன் செய்யக்கூடியவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  1. கைபேசியை மின்னேற்றம் செய்ய வேண்டும்.
  2. சிறிய மர சாமான்கள் மற்றும் மின்சாதன பொருட்களை கட்டில் மற்றும் மேசையின் மேல் வைக்க வேண்டும்.
  3. கழிவு மற்றும் அனைத்து கழிவு நீர் செல்லும் துளைகளையும் மணல் மூட்டைகளை கொண்டு மூடிவிடவேண்டும்.
A
1 & 2
B
2 & 3
C
3 & 1
D
1, 2 & 3
Question 32 Explanation: 
மேலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சமீபத்திய வானிலை செய்திகளையும், வெள்ள எச்சரிக்கையையும் அறிந்து கொள்ள வேண்டும். திடமான கயிறுகள், லாந்தர் விளக்கு, டார்ச், கூடுதல் பேட்டரிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
Question 33
வறட்சிக்கு முதன்மை காரணம் எது?
A
வெப்பம்
B
மழை பற்றாக்குறை
C
வறண்ட காற்று
D
எதுவும் இல்லை
Question 33 Explanation: 
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலத்தின் ஒரு பகுதிக்கு மழை பற்றாக்குறையாக உள்ளதை வறட்சி என்கிறோம். இதனால் மண், பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
Question 34
இந்தியாவின் மொத்த பரப்பில் எத்தனை சதவீதம் வறட்சிக்கு உட்பட்டதாகும்?
A
68%
B
70%
C
72%
D
76%
Question 34 Explanation: 
மொத்த நிலப்பரப்பில் 35% பகுதிகள் 750 மில்லி மீட்டர் முதல் 125 மில்லி மீட்டருக்கு இடையிலான மழைப்பொழிவினை பெறுகின்றது. இதனை வறட்சி பகுதி என்கிறோம்.
Question 35
நாள்பட்ட வறட்சி பகுதி பெரும் மழைப்பொழிவின் அளவு எவ்வளவு?
A
650 மி.மீ
B
750 மி.மீ
C
800 மி.மீ
D
850 மி.மீ
Question 35 Explanation: 
இந்தியாவில் 33% பகுதிகள் 750 மில்லி மீட்டருக்கும் குறைவான மழை பொழிவை பெறுகின்றன. இவை நாள்பட்ட வறட்சி பகுதி என அழைக்கப்படுகிறது.
Question 36
வறட்சி காலத்திற்கு முன் செய்ய வேண்டியவற்றில் சரியானதை தேர்ந்தெடு.
  1. நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
  2. கால்வாய்களை கட்டுதல் அல்லது ஆற்றின் பாதையை மாற்றி அமைத்தல் மூலமாக நீர் பாசனம் செய்யலாம்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 36 Explanation: 
மேலும் மழை நீர் அறுவடை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். கழிவு நீரினை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Question 37
கீழ்க்கண்டவற்றுள் வறட்சியின் போது செய்ய வேண்டிய செயல்களில் சரியானது எது?
  1. பருத்தி ஆடைகளையும், தொப்பியும் அணிய வேண்டும்.
  2. போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.
  3. பேரிடர் மற்றும் மக்கள் சேவைக்கான தகவலை அறிய உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
A
1 & 2
B
2 & 3
C
3 & 1
D
1, 2 & 3
Question 37 Explanation: 
மேலும் வறட்சியின் போது வெப்பம் அதிகமாக இருந்தால் உடனடியாக நிழலான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். வறட்சிக்கு பின் சூரிய வெப்ப தாக்குதலால் மயக்கமடைந்தால் அவசர மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Question 38
மின்னல் உருவாக்கும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு?
A
5 முதல் 10 ஆம்பியர்
B
10 முதல் 20 ஆம்பியர்
C
10 முதல் 15 ஆம்பியர்
D
15 முதல் 20 ஆம்பியர்
Question 38 Explanation: 
இடியுடன் கூடிய வளிமண்டலம் மின்சார வெளியேற்றத்தை மின்னல் என்கிறோம். இது பொதுவாக இடியுடன் கூடிய மழை மற்றும் சில நேரங்களில் எரிமலை வெடிப்பு அல்லது புழுதி புயலின்போது ஏற்படுகின்றது.
Question 39
ஒரு ஆண்டுக்கு சராசரியாக எத்தனை பேர் மின்னலினால் உயிரிழக்கின்றனர்?
A
1000
B
1500
C
2000
D
2500
Question 39 Explanation: 
மின்னலின் தாக்கங்கள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் மின்னல் உயரமான பொருட்களை தான் தாக்குகிறது. இது மரத்தை உடைத்து தீ பிடிக்க செய்யும். மேலும் இதில் கட்டிடத்தின் வெளியில் செல்கின்ற மின்சார கம்பி மற்றும் அலை உணரிகளைத் தாக்கி தீ விபத்துக்களை ஏற்படுத்தும்.
Question 40
மின்னல் வெளிப்படும் போது அதன் வெப்பம் எவ்வளவு?
A
8895.20° செல்சியஸ்
B
8992.64° செல்சியஸ்
C
9573.30° செல்சியஸ்
D
9982.20° செல்சியஸ்
Question 40 Explanation: 
மின்னலினால் தான் இடி ஒலி ஏற்படுகிறது. அதிக வெப்பம் கொண்ட மின்னல் ஒத்த அதிர்வு குழாயில் பயணிக்கிறது. இந்த குழாயில் காற்று விரைவாக கடந்து சென்று சுருங்கி விரியும்போது அதிர்வலை ஏற்பட்டு இடி சத்தம் எழுகிறது.
Question 41
எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்து இடி ஓசை கேட்க முடியும்?
A
25
B
19
C
16
D
28
Question 41 Explanation: 
மேலும் இடி மின்னல் பாய்வு வினாடிக்கு 80,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
Question 42
ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் எவ்வளவு?
A
2 முதல் 3 கி.மீ
B
3 முதல் 4 கி.மீ
C
4 முதல் 5 கி.மீ
D
5 முதல் 6 கி.மீ
Question 42 Explanation: 
மின்னலினால் ஒரு மரம் வெடித்து சிதறடிக்ககூடும். மின்னலின் போது 15 மில்லியன் வோல்ட் மின்சாரம் தோன்றி மரத்தின் கிளையில் விழும்போது வெப்பம் மரத்தைக் கடந்து சென்று, அதன் ஈரப்பதத்தை வெப்பப்படுத்தி நீராவியாக வெளிப்பட்டு அதன் அடிமரத்தை வெடிக்க செய்கிறது.
Question 43
மின் வெட்டொளி உலக அளவில் ஒரு நாளைக்கு எத்தனை முறை ஏற்படுகிறது?
A
1 மில்லியன்
B
2 மில்லியன்
C
3 மில்லியன்
D
4 மில்லியன்
Question 43 Explanation: 
மின் வெட்டொளி உலக அளவில் ஒரு நாளைக்கு 3 மில்லியன் முறை அல்லது ஒரு வினாடிக்கு 40 முறை ஏற்படுகிறது.
Question 44
ஒரு சராசரி மின் வெட்டொளி தொடர்ச்சியாக ஒளிரக்கூடிய 100 வாட் மின்விளக்கை எத்தனை மாதங்களுக்கு ஒளிரச் செய்யும்?
A
3 மாதம்
B
2 மாதம்
C
4 மாதம்
D
5 மாதம்
Question 45
ஒளியானது சராசரியாக ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்தினையும் எவ்வளவு நேரத்திற்குள் கடந்து செல்லும்?
A
2 வினாடி
B
3 வினாடி
C
2 நிமிடம்
D
3 நிமிடம்
Question 45 Explanation: 
மின்னலுக்கும் இடிக்கும் இடையே மிகக் குறைவான நேரமே இருக்கும் சூழலில் மின்னல் ஏற்பட்டால் அதிக ஆபத்தை விளைவிக்கும்.
Question 46
பின்வருவனவற்றுள் மின்னல் ஏற்படும்போது செய்ய வேண்டியவற்றில் சரியானது எது?
  1. மின்னலின் பொழுது குளிக்கக்கூடாது
  2. வெப்பமூட்டியை பயன்படுத்தக்கூடாது.
  3. வெட்ட வெளியில் இருந்தால் தாழ்வான பகுதி அல்லது பள்ளமான பகுதியை அடையாளம் கண்டு குத்துக்காலிட்டு அமர வேண்டும்.
A
1 & 2
B
2 & 3
C
3 & 1
D
1, 2 & 3
Question 46 Explanation: 
மேலும் கட்டிடத்தின் உள்ளே இருந்தால் கதவு, ஜன்னல், புகைப்போக்கி மற்றும் காற்றோட்ட குழாய் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும். தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் இதர மின் சாதனங்கள் மின் இணைப்பில் இருந்தால் கண்டிப்பாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
Question 47
மின்னல் ஏற்படும்போது மரம் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும்?
A
10 – 20 மீட்டர்
B
20 – 30 மீட்டர்
C
30 – 40 மீட்டர்
D
40 – 50 மீட்டர்
Question 47 Explanation: 
மின்னலின்போது வெட்டவெளியில் இருந்தால் மரத்திற்கு கீழ் நிற்கக் கூடாது. உயரமான மரங்களை மின்னல் தாக்கும். குறிப்பாக தனியாக இருக்கும் ஒற்றை மரத்திற்கு அருகில் செல்ல கூடாது.
Question 48
கீழ்க்கண்ட எதை மின்னல் தாக்காது?
A
புதர்கள்
B
மரங்கள்
C
புல்வெளி
D
உயரமான கட்டிடங்கள்
Question 49
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  • மின்னலின் போது குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.
  • மின்னல் வரும் பொழுது வேகமாக ஓட வேண்டும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 49 Explanation: 
மின்னலின் போது குடைபிடித்துக் கொண்டு செல்லக்கூடாது. மேலும் மின்னலின் பொழுது ஓடக்கூடாது. மிக மெதுவாக நடந்து சென்று இருப்பிடத்தை அடைய வேண்டும். ஏனெனில் ஓடும் பொழுது ஏற்படும் காற்றானது மின்னலை ஈர்க்கும்.
Question 50
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  1. தண்ணீர் குழாய்கள் வழியே மின்னல் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது.
  2. மின்சார கம்பிகள், இடிதாங்கி, அலை உணரி, ஜன்னல் போன்றவற்றிற்கு அருகில் செல்லக் கூடாது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 50 Explanation: 
மேலும் மிதிவண்டி மற்றும் நாணயங்கள் போன்ற உலோகப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. நுரையீரலை பாதுகாத்துக் கொள்ள ஒரு ஈரத் துணியை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
Question 51
பேரிடரின் இடையூறுகள் மற்றும் பேரழிவுகளின் பாதிப்புகளை குறைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மீட்சித்திறன்
B
விரிதிறன்
C
தயார் நிலை
D
பேரிடர் அபாய குறைப்பு
Question 51 Explanation: 
மேலும் ஒரு சமுதாயத்தின் திறனை சமாளிக்கும், அபாயத்தை எதிர்கொள்ளும் மற்றும் ஒரு பேரழிவின் விளைவுகளில் இருந்து மீட்பது விரிதிறன் என்றழைக்கப்படுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!