Online TestTnpsc Exam
		
	
	
வேளாண்மை கூறுகள் Online Test 10th Social Science Lesson 4 Questions in Tamil
வேளாண்மை கூறுகள் Online Test 10th Social Science Lesson 4 Questions in Tamil
Congratulations - you have completed வேளாண்மை கூறுகள் Online Test 10th Social Science Lesson 4 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
மண் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
கனிமங்களின் கூட்டுப் பொருட்கள்  | |
மக்கிய தாவரங்கள்  | |
விலங்கினப் பொருட்கள்  | |
இவை அனைத்தும்  | 
Question 1 Explanation: 
 விளக்கம்: மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
Question 2  | 
மண்துகள்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
மூன்று   | |
இரண்டு   | |
நான்கு   | |
இவை அனைத்தும்  | 
Question 2 Explanation: 
 விளக்கம்: மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும். மண்துகள்கள், களிமண், மணல் மற்றும் மண்மண்டி படிவு (Silt) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பல்வேறு காலநிலை சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது. சில மண்வகைகள் தேயுருதல் காரணிகளால் அரிக்கப்பட்டு பின் படியவைக்கப்பட்டு உருவாகின்றன. மண்ணானது பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும்.
Question 3  | 
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1959   | |
1956   | |
1953  | |
1951  | 
Question 3 Explanation: 
 விளக்கம்: 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மணவகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அவை 1. வண்டல் மண் 2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் 5. காடு மற்றும் மலை மண் 6. வறண்ட பாலை மண் 7. உப்பு மற்றும் காரமண் 8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்.
Question 4  | 
இந்தியாவில் குறைந்த அளவு காணப்படும் மண்வகை எது?
சரளை மண்    | |
கரி மண் மற்றும் சதுப்பு மண்   | |
உப்பு மற்றும் கார மண்   | |
வறண்ட பாலை மண்  | 
Question 5  | 
தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
கரிசல் மண்                	 - 29.69%  | |
செம்மண்                  	 - 28%  | |
வண்டல் மண்                	 - 25.16%  | |
காடு மற்றும் மலை மண்     - 7.94%  | 
Question 5 Explanation: 
 விளக்கம்: 
கரிசல் மண்                 	- 29.69%
செம்மண்                    	- 28%
வண்டல் மண்                	- 22.16%
காடு மற்றும் மலை மண்     	- 7.94%
Question 6  | 
காதர் மற்றும் பாங்கர் எந்த மண்ணின் பிரிவுகள் ஆகும்?
சரளை மண்    | |
சதுப்பு மண்   | |
உப்பு மற்றும் கார மண்   | |
வண்டல்  மண்  | 
Question 7  | 
கரிசல் மண்ணின் கருப்பு நிறத்திற்கு காரணம்?
டைட்டானியம்   | |
இரும்பு தாது    | |
a) மற்றும் b)  | |
மெக்னீசியம்    | 
Question 8  | 
ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடைய மண் எது?
செம்மண்   | |
வண்டல் மண்   | |
கரிசல் மண்   | |
சரளை மண்  | 
Question 8 Explanation: 
 விளக்கம்: கரிசல் மண் தன்மைகள்: ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
Question 9  | 
பழமையான படிக பாறைகளான கிரானைட்,நைஸ் போன்ற பாறைகள், சிதைவடைவதால் உருவாகும் மண் வகை எது?
செம்மண்   | |
வண்டல் மண்   | |
கரிசல் மண்   | |
சரளை மண்   | 
Question 9 Explanation: 
 விளக்கம்: செம்மண் உருவாக்கம்: பழமையான படிக பாறைகளான கிரானைட்,நைஸ் போன்ற பாறைகள், சிதவடைவதால் உருவாகின்றன வேதியியல் பண்புகள்: இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது. நைட்ரஜன், இலைமக்குகள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகின்றன. மண்ணின் தன்மைகள்: மென்துகள்கள் இடையளவு குறிப்பிடப்பட்டுள்ள உப்புக்கரைசல், வெண்களிப் பாறைத்தாதுக்கள், சிறு வெடிப்புகளுடன் கூடிய செம்மண் படிவு.
Question 10  | 
தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்றவற்றில் காணப்படும் மண் வகை?
செம்மண்   | |
வண்டல் மண்   | |
கரிசல் மண்   | |
சரளை மண்   | 
Question 10 Explanation: 
 விளக்கம்: செம்மண் - தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்கண்ட்.
Question 11  | 
கீழ்க்கண்ட எந்த காரணத்தால் சரளை மண் உருவாகிறது?
கிரானைட்,நைஸ் பாறைகளின் சிதைவு   | |
பசால்ட் பாறைகளின் சிதைவு   | |
பௌதீக சிதைவு   | |
மண்சுவரல்   | 
Question 12  | 
காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளையும் மண் வகை எது?
செம்மண்   | |
வண்டல் மண்   | |
கரிசல் மண்   | |
சரளை மண்   | 
Question 12 Explanation: 
 விளக்கம்: சரளை மண் - அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்  போன்ற இடங்களில் பரவி காணப்படுகிறது. காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளையும் மண் வகை.
Question 13  | 
அதிக அளவிலான உப்பு, அமிலத்தன்மை, பாஸ்பேட், பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட் கொண்ட மண் எது?
செம்மண்   | |
காடு மற்றும் மலை மண்   | |
கரிசல் மண்   | |
வறண்ட மண்   | 
Question 13 Explanation: 
 விளக்கம்: வறண்ட பாலை மண் - உருவாக்கம்: வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது. தாவரங்கள் இல்லாமையால் இலை மக்கு சத்து குறைவாகக் காணப்படுகிறது. வேதியியல் பண்புகள்: அதிக அளவிலான உப்பு, அமிலத்தன்மை, பாஸ்பேட், பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட், உயிர்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் குறைவாகவும் காணப்படுகிறது. தன்மை: வெளிர்நிறம் குறைந்த இலை மக்கு சத்து புரைத்தன்மையுடையது, குறைந்த ஈரப்பதம் உடையது.
Question 14  | 
உப்பு மற்றும் கார மண் உருவாக காரணம்?
நுண்புழை நுழைவு   | |
மண் சுவரல்   | |
பௌதீக சிதைவு   | |
a) மற்றும் b)   | 
Question 14 Explanation: 
 விளக்கம்: உப்பு மற்றும் கார மண் உருவாக்கம்: வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது. வேதியியல் பண்புகள்: சோடியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் சல்பூரிக் அமிலம் காணப்படுகிறது. தன்மை: சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
Question 15  | 
உயிரினப் பொருட்கள் 10- 40 சதவீதம் வரைக் காணப்படும் மண் எது?
களிமண் மற்றும் சதுப்பு நிலம்  | |
காடு மற்றும் மலை மண்   | |
கரிசல் மண்   | |
வறண்ட மண்   | 
Question 15 Explanation: 
 விளக்கம்: உருவாக்கம்: உயிரினப் பொருட்களிலிருந்து ஈர காலநிலை உள்ள பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மையுடையது.அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது. வேதியியல் பண்புகள்: பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட், சத்துகள் குறைவாகவும், கனிசமான அளவில் உப்புக்கரைசல், உயிரினப் பொருட்கள் 10- 40 சதவீதம் வரைக் காணப்படுகிறது. தன்மை: ஈரத்தன்மையுடன் இலை மக்கைக் கொண்டும் கருமை நிறத்திலும் உள்ளது.
Question 16  | 
இந்தியாவில் 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளதை அறிவித்த இந்திய நிறுவனம் எது?
இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம்   | |
இந்திய அணுசக்தி கழகம்   | |
இந்திய மண் ஆராய்ச்சி நிறுவனம்   | |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்   | 
Question 16 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் மண் சீரழிவு என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது. இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள்:
மண் அரிப்பு 
மண் சீரழிவு 
நீர் தேங்குதல் 
உவர்ப்பு மற்றும் காரத்தன்மை 
உப்பு படிவுகள் ஆகியனவாகும்.
Question 17  | 
மேம்பட்ட பயிர் சாகுபடி கீழ்க்கண்டவற்றுள்  எம்முறைகளை  உள்ளடக்கியது?
சம உயரம்  உழுதல்   | |
பயிர் சுழற்சி முறை   | |
கரைகள்  கட்டுதல்   | |
இவை அனைத்தும்   | 
Question 17 Explanation: 
 விளக்கம்: மண் வள பாதுகாப்பும் மண்வள மேலாண்மையும்:
காடுகள் உருவாக்கம் 
அணைகள் மற்றும் குறுக்கணைகள் கட்டுதல் 
அதிக மேய்ச்சலை தடுத்தல் 
மேம்பட்ட பயிர் சாகுபடி முறைகளை பின்பற்றுதல் 
சம உயரம் உழுதல், - பயிர் சுழற்சி முறை, - கரைகள்  கட்டுதல், -  படிக்கட்டு வேளாண்மை, - பட்டை பயிரிடல், - காற்றெதிர் திசையில் மரங்கள் நடுதல்
Question 18  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
2014 ஆம் ஆண்டின் படி இந்தியாவில் சுமார் 15.8 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய் பாசன வசதியைப் பெற்றுள்ளன  | |
கால்வாய் பாசனத்தில் 40 சதவீதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.  | |
மேலும் வட மற்றும் மத்திய இந்தியாவில், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கால்வாய் பாசனம் காணப்படுகிறது.  | |
இவை அனைத்தும்  | 
Question 18 Explanation: 
 விளக்கம்: வற்றாத கால்வாய் : இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும். நம் நாட்டில் பெரும்பாலான கால்வாய்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இவ்வகை கால்வாய்கள் நீர்பாசனத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டின் படி இந்தியாவில் சுமார் 15.8 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய் பாசன வசதியைப் பெற்றுள்ளன. கால்வாய் பாசனத்தில் 60 சதவீதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக உத்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இவை அதிகம் உள்ளது. மேலும் தென் மற்றும் மத்திய இந்தியாவில், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கால்வாய் பாசனம் காணப்படுகிறது.
Question 19  | 
இந்தியாவில் மொத்த பாசன பரப்பளவில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனத்தின் கீழ் உள்ளது?
54%  | |
62%  | |
72%	  | |
46%	  | 
Question 19 Explanation: 
 விளக்கம்: கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும். இந்தியாவில் மொத்த பாசன பரப்பளவில் 62 சதவீதம் கிணற்று பாசனத்தின் கீழ் உள்ளது. இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்பாசன ஆதாரமாக உள்ளது. மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாதாப் பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது.
Question 20  | 
நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் காணப்படும் நீர்ப்பாசனம்?
திறந்தவெளிக் கிணறுகள்   | |
ஆழ்துளைக் கிணறுகள்  | |
ஏரி நீர்ப்பாசனம்  | |
கால்வாய் பாசனம்  | 
Question 20 Explanation: 
 விளக்கம்: கிணறுகள் இரண்டு வகைப்படும் 
அவை: 1. திறந்தவெளிக் கிணறுகள் 
2. ஆழ்துளைக் கிணறுகள்
1.  திறந்த வெளிக் கிணறுகள் நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகின்றது. இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
2.  ஆழ்த்துளைக் கிணறு ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகள் மற்றும் மென்பாறைகள் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.
Question 21  | 
இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறை எது?
கால்வாய் பாசனம்   | |
ஏரிப்பாசனம்   | |
கிணற்று நீர் பாசனம்    | |
இவை அனைத்தும்    | 
Question 21 Explanation: 
 விளக்கம்: ஏரி என்பது புவியின் மேற்பகுதியில் இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்வான நீர் தேங்கும் பகுதியாகும். பொதுவாக இவை ஆற்றின் குறுக்கே ஏற்படுத்தப்பட்டு ஏரியைச் சுற்றிலும் கரைகள் கட்டப்படுகின்றன. இங்கு நீரைச் சேகரித்து வேளாண்மை மற்றும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரிப்பாசனம் இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறையாகும். இப்பாசனமுறை ஏரிகள் மற்றும் குளங்களையும் உள்ளடக்கியது.
Question 22  | 
2013 – 2014 ஆம் ஆண்டு காலத்தில் கிணற்று பாசனத்தின் கீழ் சதவிகித பரப்பளவில் முதல் 5 மாநிலங்களுள் வரும் மாநிலம்/மாநிலங்கள்?
மத்தியபிரதேசம்   | |
உத்திரப்பிரதேசம்  | |
a) மற்றும் b)  | |
தமிழ் நாடு  | 
Question 22 Explanation: 
 விளக்கம்: 2017-ஆம் ஆண்டு இந்திய நீர்ப்பாசன புள்ளிவிவரப் புத்தகத்தின்படி, 2013 – 2014 ஆம் ஆண்டு காலத்தில் கிணற்று பாசனத்தின் கீழ் சதவிகித பரப்பளவில் முதல் 5 மாநிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Question 23  | 
எரிப்பாசனத்தில் முதன்மையாக உள்ள 5 மாநிலங்களில் பின்வருவனவற்றுள் எவை அடங்கும்?
மத்தியபிரதேசம்   | |
தமிழ் நாடு  | |
a) மற்றும் b)  | |
உத்திரப்பிரதேசம்  | 
Question 23 Explanation: 
 விளக்கம்: கீழ்க்கண்ட அட்டவணையில் ஏரிப்பாசனத்தில் முதன்மையாக உள்ள 5 மாநிலங்களைக் காணலாம்.
(ஆதாரம் – இந்தியாவின் நீர்ப்பாசன புள்ளி விவர வருடாந்திர புத்தகம் – 2017)
Question 24  | 
தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க கீழ்க்கண்டவற்றுள்   முக்கியமான காரணிகள் எவை?
கடினமானப் பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றம் உள்ள பகுதிகளில் கால்வாய்கள் கிணறுகள் தோண்டுவதற்கு கடினமாக உள்ளது.  | |
நீர்புகாப் பாறைகளில் நீர் கசிவு ஏற்படாது.  | |
மின் மிகை பகுதிகள் மற்றும் மென்பாறைகள் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது  | |
a) மற்றும் b)  | 
Question 24 Explanation: 
 விளக்கம்: தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க கீழ்க்கண்ட காரணிகள் முக்கியமானவைகளாகும். 1) கடினமானப் பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றம் உள்ள பகுதிகளில் கால்வாய்கள், மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு கடினமாக உள்ளது. 
2) இயற்கையாக உருவான பள்ளங்கள் நீர்தேக்கங்களாக பயன்படுகின்றன. 3) இப்பகுதியில் வற்றாத ஆறுகள் இல்லாமை. 4) நீர்புகாப் பாறைகளில் நீர் கசிவு ஏற்படாது. 5) குறைவான மக்கள் தொகைப் பரவலும் குறைவான வேளாண் நிலங்களும் உள்ளது.
Question 25  | 
தாவர வேர்களின் சிறிய பகுதிகளுக்கு பாய்ச்சப்பட்டு பெரிய மரங்கள், தோட்டப் பயிர்கள் போன்றவைகள் வளர்க்கவும் பயன்படுத்தப்படும் நீர்ப்பாசன முறை எது?
சொட்டு நீர்ப்பாசனம்   | |
தெளிப்பு முறை பாசனம்  | |
மையச்சுழல் நீர்ப்பாசனம்  | |
a) மற்றும் b)  | 
Question 25 Explanation: 
 விளக்கம்: நவீன நீர்ப்பாசன முறைகள்: இந்தியாவில் பல நவீன நீர்ப்பாசன முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முதன்மையானவை, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு முறை பாசனம் மற்றும் மையச்சுழல் நீர்ப்பாசனம் ஆகியனவாகும். சொட்டுநீர் பாசனம் என்பது தாவரங்களின் வேர்ப்பகுதிகளுக்கு சொட்டுநீராகப் பாய்ச்சுவதாகும். தாவர வேர்களின் சிறிய பகுதிகளுக்கு பாய்ச்சப்பட்டு பெரிய மரங்கள், தோட்டப் பயிர்கள் போன்றவைகள் வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Question 26  | 
கரும்பு மற்றும் சோளப்பயிர்களுக்கு ஏற்ற வகை பாசனம் எது?
சொட்டு நீர்ப்பாசனம்   | |
தெளிப்பு முறை பாசனம்  | |
மையச்சுழல் நீர்ப்பாசனம்  | |
a) மற்றும் b)  | 
Question 26 Explanation: 
 விளக்கம்: தெளிப்புப் பாசனம்என்பது பெயருக்கேற்றவாறு மழைப் பொழிவைப் போன்றே பயிர்களுக்கு நீர்த்துளிகளைத் தெளிப்பதாகும். தெளிப்பான் பயிர்களின் உயரத்திற்கேற்றவாறு மாற்றி 4 மீட்டருக்கும் அதிக உயரமான பயிர்களுக்குக் கூட பயன்படுத்தலாம். குறிப்பாக கரும்பு மற்றும் சோளப்பயிர்களுக்கு இவ்வகை பாசனம் பயன்படுத்தப்படுகிறது.
Question 27  | 
நீர்ச்சக்கரம் என்று அழைக்கப்படும் நீர்ப்பாசன முறை  எது?
சொட்டு நீர்ப்பாசனம்   | |
தெளிப்பு முறை பாசனம்  | |
மையச்சுழல் நீர்ப்பாசனம்  | |
a) மற்றும் b)  | 
Question 27 Explanation: 
 விளக்கம்: மைய சுழற்சி நீர்ப்பாசனம்: இது நீர்ச்சக்கரம் அல்லது வட்ட சுழற்சி நீர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் கருவியின் மையப்பகுதி சுழன்று கொண்டும் தெளிப்பான்கள் மூலம் பயிர்களுக்கு நீர்த் தெளிப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது.
Question 28  | 
பெரும்பாலான பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கம் எது?
குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கு நீர் வழங்குதல்  | |
வெள்ளத்தடுப்பு மற்றும் மீன்வள மேம்பாடு  | |
நீர் வழிப் போக்குவரத்து  | |
நீர் மின் சக்தி மற்றும் நீர்ப்பாசனம்  | 
Question 28 Explanation: 
 விளக்கம்: பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்கா க அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்என்றுஅழைக்கப்படுகிறது. நீர்ப்பாசனம், நீர்மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கு நீர் வழங்குதல், வெள்ளத்தடுப்பு, மீன்வள மேம்பாடு, நீர் வழிப் போக்குவரத்து போன்றவை இதன் பல்வேறு நோக்கங்களாகும். நீர் மின் சக்தி மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை பெரும்பாலான பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
Question 29  | 
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனாவின் முக்கிய நோக்கம்/கள் எது/எவை?
நன்னீர் பாசன திட்டம்  | |
குறைந்த அளவு நீரில் அதிக மகசூல்  | |
தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்தல்  | |
b) மற்றும் c)  | 
Question 29 Explanation: 
 விளக்கம்: குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா – (PMKY) ஆகும்.
Question 30  | 
ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எந்த திட்டத்தின் மூலம் 78 சதவீத நீர்
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா
ப்பாசன வசதியை பெற்றுள்ளன?
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா  | |
நன்னீர் பாசன திட்டம்  | |
நுண்நீர் பாசனத் திட்டம்  | |
b) மற்றும் a)  | 
Question 30 Explanation: 
 விளக்கம்: நீர் மேலாண்மையை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு நன்னீர் பாசன திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சொட்டு நீர் தெளிப்பான் போன்ற தொழில் நுட்பங்கள் வேளாண் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. நுண்நீர் பாசனத் திட்டத்தில் ஐந்து மாநிலங்கள் மட்டும் சுமார் 78 சதவீத நீர்ப்பாசன வசதியை பெற்றுள்ளது. அவை ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு.
Question 31  | 
பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் எந்த பல்நோக்கு திட்டத்தின் மூலம் பயனடைகின்றன?
பக்ரா நங்கல் திட்டம்   | |
சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்   | |
ஹிராகுட் திட்டம்   | |
இந்திரா காந்தி கால்வாய்த் திட்டம்   | 
Question 32  | 
தெகிரி அணை திட்டத்தினால் பயனடையும் மாநிலம் எது?
உத்தரகாண்ட்  | |
பஞ்சாப்  | |
ஹரியானா   | |
ஹிமாச்சல் பிரதேசம்  | 
Question 33  | 
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் எந்த பல்நோக்கு திட்டத்தின் மூலம் பயனடைகின்றன?
பக்ரா நங்கல் திட்டம்  | |
இந்திரா காந்தி கால்வாய்த் திட்டம்  | |
a) மற்றும் b)  | |
சர்தார் சரோவர் திட்டம்  | 
Question 34  | 
நாட்டின் மொத்த வருமானத்தில் வேளாண்மையின் பங்கு?
25%  | |
35%  | |
28%	  | |
40%  | 
Question 34 Explanation: 
 விளக்கம்: வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும்கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருட்களை வழங்குவதாகும். இந்தியா தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடென்றாலும் வேளாண்மை மூலம் 50 சதவீதத்திற்கும் மேலான மக்களுக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கின்றது.
Question 35  | 
கீழ்க்கண்டவற்றுள் இந்திய வேளாண்மையை நிர்ணயிக்கும் அமைப்பு சார் காரணிகள் எவை?
மண்  | |
நிலத்தோற்றம்  | |
காலநிலை  | |
வேளாண் நிலத்தின் அளவு  | 
Question 35 Explanation: 
 விளக்கம்: இந்திய வேளாண்மையை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சில முக்கியக் காரணிகளாவன. 1) இயற்கைக் காரணிகள் : நிலத்தோற்றம், காலநிலை மற்றும் மண்
2) அமைப்பு சார் காரணிகள் : வேளாண் நிலத்தின் அளவு, நில வாரம் முறை மற்றும் நிலச்சீர்திருத்தங்கள் 3) உட்கட்டமைப்பு காரணிகள் : நீர்ப்பாசனம், மின்சாரம், போக்குவரத்து, வரவு, சந்தை, காப்பீடு மற்றும் சேமிப்பு வசதிகள், 4) தொழில்நுட்பக் காரணிகள் : வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்கள் .
Question 36  | 
பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்படும் வேளாண் முறை எது?
இடப்பெயர்வு வேளாண்மை   | |
வறண்ட நில வேளாண்மை   | |
தன்னிறைவு வேளாண்மை  | |
கலப்பு வேளாண்மை   | 
Question 36 Explanation: 
 விளக்கம்:  பல்வேறு இயற்கைச் சூழல் மற்றும் கலாச்சாரம் காரணமாக இந்தியாவில் பல்வேறு வேளாண்முறைகள் மற்றும் பயிர்சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அ)  தன்னிறைவு வேளாண்மை இந்தியாவில் கணிசமான அளவு விவசாயிகள் தன்னிறைவு வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள். இம்முறையில் விவசாய நிலவுடைமை சிறிய அளவிலானது. விவசாயிகள் ஏழ்மையாக இருப்பதால், இயந்திரங்கள் மற்றும் அதிக செலவு கொண்ட நவீன யுத்திகளை பயன்படுத்த முடிவதில்லை. பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதம் உள்ளவை அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ,சணல் மற்றும் புகையிலை ஆகியவை சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறையாதலால் குறைவான உற்பத்தியை அளிக்கிறது. பஞ்சாப் இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் சிலபகுதிகளில் இவ்வகை வேளாண்முறை பின்பற்றப்படுகிறது.
Question 37  | 
பழங்குடி இன மக்களால் மேற்கொள்ளப்படும் வேளாண் முறை எது?
இடப்பெயர்வு வேளாண்மை   | |
வறண்ட நில வேளாண்மை   | |
தன்னிறைவு வேளாண்மை  | |
கலப்பு வேளாண்மை  | 
Question 37 Explanation: 
 விளக்கம்: இவ்வகை வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களைஅகற்றி சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டு அல்லது மூன்றாண்டுகள் சாகுபடிக்குப் பிறகு, மண்ணின் வளம் குறைவதால் அவ்விடத்தைக் கைவிட்டு மக்கள் வேறொரு புதிய இடத்திற்குச் செல்வர்.இவ்வாறாக இது தொடர்ச்சியாக நடைபெறும் சில உணவுபயிர்களும், காய்வகை பயிர்களும் மனித உழைப்பின் மூலம் பயிரிடப்படுகிறது. இவை ’வெட்டுதல்’ மற்றும் ’எரித்தல்’ வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.
Question 38  | 
தவறான இணையை தேர்ந்தெடு
ஜூம் - அசாம்   | |
பொன்னம் - கேரளா   | |
பொடு - ஆந்திரப்பிரதேசம்   | |
பீரா – ஒடிசா  | 
Question 39  | 
பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை  பெறும் நோக்கம் கொண்ட வேளாண் முறை எது?
இடப்பெயர்வு வேளாண்மை   | |
தீவிர  வேளாண்மை   | |
தன்னிறைவு வேளாண்மை  | |
கலப்பு வேளாண்மை  | 
Question 39 Explanation: 
 விளக்கம்: தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும். சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்ச லை  பெறுவது இதன் நோக்கமாகும். இந்த இயந்திரமயமாக்கல் மற்றும் தீவிரப்படுத்துதல் மூலம் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை குறிப்பாக பசுக்கள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகளை பெரிய பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை செய்கிறது. இந்தியாவில் பஞ்சாப் இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசப் பகுதிகளில் இத்தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.
Question 40  | 
கீழ்க்கண்டவற்றுள் வறண்ட நில வேளாண்மையின்  கூறுகள் எது/எவை?
பாசன வசதி உதவியுடன் பயிரிடப்படும் பயிர்களும் இவ்வேளாண்மையின் கீழ் பயிரிடப்படுகின்றன.  | |
இத்தகைய சூழ்நிலையில் விளைச்சல் பொதுவாக குறைவாகவே இருக்கும்.  | |
இது இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற வறண்ட பகுதிகளில் நடைபெறுகிறது.  | |
இவை அனைத்தும்  | 
Question 40 Explanation: 
 விளக்கம்: வறண்ட நில வேளாண்மை நீர் பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இவ்வகையான வேளாண்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை தாங்கக் கூடியவை. பாசன வசதி உதவியுடன் பயிரிடப்படும் பயிர்களும் இவ்வேளாண்மையின் கீழ் பயிரிடப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் விளைச்சல் பொதுவாக குறைவாகவே இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு ஒரு பயிர் மட்டுமேபயிரிடப்படுகின்றது. இது இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற வறண்ட பகுதிகளில் நடைபெறுகிறது.
Question 41  | 
விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் முறை எது?
கூட்டு வேளாண்மை   | |
நவீன வேளாண்மை   | |
தன்னிறைவு வேளாண்மை   | |
கலப்பு வேளாண்மை   | 
Question 41 Explanation: 
 விளக்கம்: கலப்பு வேளாண்மை-  கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.
Question 42  | 
மலைச்சரிவுகளில் மண் அரிப்பை தடுக்க உதவுவது எது?
பாறைகள்   | |
கால்வாய்கள்   | |
படிக்கட்டு முறை   | |
பள்ளத்தாக்குகள்   | 
Question 42 Explanation: 
 விளக்கம்: படிக்கட்டு முறை வேளாண்மை இவ்வேளாண்மை முறையானது மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நிலங்கள் இயற்கையாகவே சரிவு அமைப்பை கொண்டவை மலைச்சரிவுப் பகுதிகள் சமப்படுத்தப்பட்டு நிலத்தை நிலையான வேளாண் பகுதிகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சமமான நிலப்பகுதி குறைவாக இப்பகுதிகளில் உள்ளது. படிக்கட்டு நிலங்கள் சிறிய சமமான நிலப்பகுதிகளாக உருவாக்கப்படுகின்றன. மலைச் சரிவுகளில் உள்ள படிக்கட்டுமுறை அமைப்பு மண் அரிப்பை தடுக்கிறது. இந்தியாவில் பஞ்சாப், மேகாலயா, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் படிக்கட்டுமுறை வேளாண்மை பின்பற்றப்படுகிறது.
Question 43  | 
ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலம் எந்த பருவத்திற்கு உரியது?
காரிப்     | |
ராபி   | |
சையத்    | |
மேற்கண்ட எதுவுமில்லை     | 
Question 44  | 
இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை எத்தனை  பிரிவுகளாக பிரிக்கலாம்?
நான்கு      | |
ஐந்து   | |
மூன்று     | |
இரண்டு   | 
Question 44 Explanation: 
 விளக்கம்: இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உணவுப் பயிர்கள் – கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு இன்னும் பிற. 2. வாணிபப் பயிர்கள் - கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் 3. தோட்டப்பயிர்கள் - தேயிலை, காபி, இரப்பர் 4. தோட்டக்கலைப் பயிர்கள் - பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்
Question 45  | 
இந்திய வேளாண்மை பெரும்பாலும் எவ்வகைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது?
உணவுப்பயிர்கள்   | |
தோட்டக்கலைப்பயிர்கள்    | |
தோட்டப்பயிர்கள்      | |
வாணிபப்பயிர்கள்   | 
Question 45 Explanation: 
 விளக்கம்: உணவுப்பயிர்கள் அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உணவுப் பயிர்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும் இதில் அரிசி கோதுமை, கம்பு, சோளம், மக்காச்சோளம், பார்லி, கேழ்வரகு, பயறு மற்றும் பருப்பு வகைகள் ஆகியன முக்கியமானவையாகும்.
Question 46  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.   | |
240C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் நெல் பயிரிடப்படுகிறது.  | |
வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.  | |
இவை அனைத்தும்  | 
Question 46 Explanation: 
 விளக்கம்: நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இது அயனமண்டலப் பயிராகும். 240C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
Question 47  | 
இந்தியாவில் நெல் எத்தனை முறைகளில் பயிரிடப்படுகிறது?
நான்கு      | |
ஐந்து   | |
மூன்று     | |
இரண்டு   | 
Question 47 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது. 1. விதைத் தூவல் முறை 2. ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை 3. நாற்று நடுதல் முறை
Question 48  | 
கீழ்க்கண்டவற்றுள் அதிக விளைச்சல் தரும் நெல் ரகம் எது?
CR தான் 205  | |
A.R. தான் 306    | |
CRR 451  | |
இவை அனைத்தும்   | 
Question 48 Explanation: 
 விளக்கம்: அதிக விளைச்சல் தரும் விதைகளான (CR தான் 205, A.R. தான் 306 ,CRR 451, போன்றவை) அதிகரித்ததன் காரணமாக பல பழமையான நெல் வகைகள் மறைந்து போயிற்று. மேற்கு வங்கம், (முதல் மாநிலம்) உத்திரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளன.
Question 49  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
நெல் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.  | |
நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவீதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 54 சதவீத பங்கையும் கோதுமை வகிக்கிறது.    | |
இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15°C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20-25°C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.  | |
இவை அனைத்தும்   | 
Question 49 Explanation: 
 விளக்கம்: பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும். நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவீதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 54 சதவீத பங்கையும் கோதுமை வகிக்கிறது. இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15°C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20-25°C வெப்பநிலையும் தேவைப்படுகிறது. சுமார் 85 சதவீதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. இதைத் தவிர மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.
Question 50  | 
கீழ்க்கண்டவற்றுள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பயிர் எது?
கோதுமை  | |
சோளம்   | |
திணை  | |
இவை அனைத்தும்   | 
Question 50 Explanation: 
 விளக்கம்: சோளம்: நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர் சோளம் ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட பயிராகும். இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக் கூடியது. இத்தானியத்தில் கார்போ-ஹைட்ரேட், புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு மலிவான உணவாக விளங்குகிறது. இது நாட்டின் பல பகுதிகளில் கால் நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கியப்பயிராகவும் இது விளங்குகிறது. மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இவற்றின் முதன்மையான உற்பத்தியாளர்களாகும்.
Question 51  | 
கீழ்க்கண்டவற்றுள் கம்பு உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது?
இராஜஸ்தான்  | |
உத்திரப்பிரதேசம்   | |
ஹரியானா  | |
குஜராத்  | 
Question 51 Explanation: 
 விளக்கம்: கம்பு: கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிராகும். இது ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிராகும். கம்பு பயிரின் தண்டுப்பகுதி கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூறை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில் இராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளராகவும் அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் அதிக உற்பத்தியை தருபவைகளாகவும் உள்ளன.
Question 52  | 
ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல்  பீர் மற்றும் விஸ்கி தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுவது எது?
கோதுமை  | |
சோளம்   | |
திணை  | |
பார்லி  | 
Question 52 Explanation: 
 விளக்கம்: வாற்கோதுமை (பார்லி): பார்லி நம் நாட்டின் முக்கியமான தானியப் பயிர்களுள் ஒன்றாகும். இது ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல் பார்லி நீர், பீர் மற்றும் விஸ்கி தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்கள் இரண்டும் இவற்றின் முதன்மை உற்பத்தியாளர்கள் ஆகும்.
Question 53  | 
பயிர்சுழற்சி பயிரிடல் முறையில் வழக்கமாக பயிரிடப்படும் பயிர் எது?
கோதுமை  | |
சோளம்   | |
திணை  | |
பருப்பு வகைகள்   | 
Question 53 Explanation: 
 விளக்கம்: பருப்பு வகைகள் அவரை இனத்தைச் சார்ந்த பல பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து செறிந்ததும் ஆகும். இவை மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இவை வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண் வளத்தை அதிகரிக்கின்றது. எனவே இப்பயிர்கள் பயிர்சுழற்சி பயிரிடல் முறையில் வழக்கமாக பயிரிடப்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியை செய்யும் நாடு இந்தியாவாகும். மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முதன்மை மாநிலங்களாகும்.
Question 54  | 
சர்க்கரை உற்பத்தியில் நம் நாடு எந்த இரு நாடுகளுக்கு அடுத்து படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது?
அமெரிக்கா மற்றும் சீனா   | |
கியூபா மற்றும் பிரேசில்   | |
அர்ஜென்டினா மற்றும் சீனா   | |
சீனா மற்றும் ரஷ்யா   | 
Question 54 Explanation: 
 விளக்கம்: கரும்பு இந்தியாவின் மிக முக்கியமான வாணிபப்பயிராகும். இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும். இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப் பொருளை அளிக்கிறது. இது நம் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவாகும். சர்க்கரை உற்பத்தியை தவிர வெல்லம், நாட்டுச்சக்கரை, சாராய தொழிற்சாலைக்கான கரும்புச்சாறு மற்றும் காகித தொழிற்சாலைக்கு தேவையான கரும்பு சக்கைகளையும் அளிக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் நம் நாடு கியூபா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
Question 55  | 
இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது?
மகாராஷ்ட்ரா  | |
கர்நாடகா  | |
உத்திரப்பிரதேசம்  | |
தமிழ்நாடு   | 
Question 55 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் உத்திரப்பிரதேசம் இதன் முதன்மை உற்பத்தியாளராகும். அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.
Question 56  | 
மொத்த பருத்தி உற்பத்தியில் 79% பங்களிப்பை வழங்கும் மாநிலம்/மாநிலங்கள் எது/எவை?
குஜராத்  | |
மகாராஷ்டிரா   | |
ஆந்திரப்பிரதேசம்    | |
இவை அனைத்தும்   | 
Question 56 Explanation: 
 விளக்கம்: பருத்தி: பருத்தி இந்தியாவின் முக்கியமான வாணிபப்பயிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருட்களை அளிக்கிறது. பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் 79% பங்களிப்பை வழங்குகின்றன.
Question 57  | 
கீழ்க்கண்டவற்றுள் சணல் பயிரிடும் மாநிலம் அல்லாதது எது?
பீகார்  | |
அசாம்   | |
மேகாலயா  | |
நாகாலாந்து  | 
Question 57 Explanation: 
 விளக்கம்: சணல்: சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும். இது வண்டல் மண்ணில் நன்கு வளரும். இது சணல் தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது. கோனிப்பைகள், கம்பளங்கள், கயிறு, நூலிழைகள், போர்வைகள், துணிகள், தார்பாலின், திரைச்சீலைகள் போன்ற பொருட்கள் தயாரிக்க சணல் நார் பயன்படுத்தப்படுகிறது. சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் வைகிக்கிறது. பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.
Question 58  | 
வார்னிஷ், மருந்துப் பொருட்கள் வாசனைப்பொருட்கள் போன்றவை தயாரிக்கப்பயன்படுவது எது?
சோளம்   | |
பார்லி   | |
எண்ணெய் வித்துக்கள்   | |
பருப்பு வகைகள்   | 
Question 58 Explanation: 
 விளக்கம்: எண்ணெய் வித்துக்கள்: இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்துவை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும். நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணெய் மற்றும் பிண்ணாக்குகள், மசகு எண்ணெய், வார்னிஷ், மருந்துப் பொருட்கள் வாசனைப்பொருட்கள், மெழுகு, சோப்பு, உரம் கால்நடைத்தீவனம் போன்றவை தயாரிக்கப்பயன்படுகின்றன.
Question 59  | 
குஜராத் மாநிலம் கீழ்க்கண்டவற்றுள் எதன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது?
சோளம்   | |
பார்லி   | |
எண்ணெய் வித்துக்கள்   | |
பருப்பு வகைகள்   | 
Question 59 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் பிற முக்கிய மாநிலங்களாகும். நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.
Question 60  | 
ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுபவை எவை?
உணவுப்பயிர்கள்    | |
வாணிபப்பயிர்கள்    | |
a) மற்றும் b)   | |
தோட்டப்பயிர்கள்    | 
Question 60 Explanation: 
 விளக்கம்: தோட்டப்பயிர்கள்: தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளது. கடற்கரைப் பகுதிகளுக்கு அருகாமையில்இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும். தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப் பயிர்களாகும்.
Question 61  | 
தேயிலை குறித்த பின்வரும் கூற்றுகளுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
தேயிலை அயன மண்டல மற்றும் உபஅயன மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரமாகும்.  | |
தேயிலை பயிரிட குறைந்த தொழிலாளர்களும், அதிகமான நிழலும், குறைந்த மழையளவும் தேவை.  | |
வேர்களில் தண்ணீர் தேங் கி  இருக்க வேண்டும்.  | |
இவை அனைத்தும்  | 
Question 61 Explanation: 
 விளக்கம்: தேயிலை அயன மண்டல மற்றும் உபஅயன மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரமாகும். தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும், மிதமான நிழலும், அதிக மழையளவும் தேவை. ஆனால் வேர்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள். 1. பூகி (BOHEA) – சீனாவின் பிறப்பிடம் 2. அசாமிகா (ASSAMICA) – இந்தியாவின் பிறப்பிடம் இவ்விரண்டின் கலப்பின் மூலம் பல வீரியமுள்ள தேயிலை உருவாக்கப்பட்டுள்ளன.
Question 62  | 
இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது?
தமிழ்நாடு  | |
கேரளா  | |
மேற்கு வங்கம்   | |
அசாம்  | 
Question 62 Explanation: 
 விளக்கம்: உலகத்தேயிலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் அசாம் ஆகும். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் தேயிலை பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.
Question 63  | 
உலக காபி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாவது   | |
ஐந்தாவது   | |
ஏழாவது   | |
பதினோராவது   | 
Question 63 Explanation: 
 விளக்கம்: காபி: இவை நிழல்களில் நன்றாக வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளர்கிறது. காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை: 1. அராபிகா – தரம் மிக்கதும், இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும். 2. ரொபஸ்டா – தரம் குறைந்த வகை உலக காபி உற்பத்தியில் இந்தியா 7 வது இடத்தை வகிக்கிறது.
Question 64  | 
கர்நாடக மாநிலம் காபி உற்பத்தியில் உலக அளவில் எத்தனை சதவீதத்தைக்கொண்டுள்ளது?
2.5%  | |
3.5%  | |
7%  | |
1.5%  | 
Question 64 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் காப்பி உற்பத்தியில் கர்நாடகம் முதன்மையான உற்பத்தியாளராக திகழ்கிறது. இம்மாநிலம் இந்திய உற்பத்தியில் 71 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 2.5 சதவீதத்தையும் அளிக்கிறது. (ஆதாரம் இந்திய காபி வாரியம் 2018).
Question 65  | 
இரப்பர் பயிரிட ஏற்ற காலநிலை எது?
அயன மண்டல காலநிலை   | |
உப அயன மண்டல காலநிலை  | |
ஈரப்பத காலநிலை   | |
வெப்ப ஈரப்பத அயன மண்டல காலநிலை   | 
Question 65 Explanation: 
 விளக்கம்: இரப்பர்: 1902 ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலில் இரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது. வெப்ப ஈரப்பத அயன மண்டல காலநிலை இரப்பர் பயிரிட ஏற்றதாகும்.
Question 66  | 
இரப்பர் உற்பத்தி குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
வெப்பநிலை 20°C க்கும் அதிகம், மழைப்பொழிவு 300 செ.மீக்கு மேல்  | |
பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன.  | |
கேரளா தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும்.  | |
இவை அனைத்தும்  | 
Question 66 Explanation: 
 விளக்கம்: (வெப்பநிலை 20°C க்கும் அதிகம், மழைப்பொழிவு 300 செ.மீக்கு மேல்) பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன. கேரளா தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும்.
Question 67  | 
நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் எது?
தமிழ்நாடு   | |
கேரளா   | |
ஆந்திரா   | |
கர்நாடகா  | 
Question 67 Explanation: 
 விளக்கம்: நறுமணப் பயிர்கள்: பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு இந்தியா உலக புகழ் பெற்றதாகும். இந்நறுமணப் பொருட்கள் பெரும்பாலும் உணவிற்கு சுவையூட்டியாகவும், மருந்துப்பொருட்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மிளகு, மிளகாய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், பட்டை மற்றும் பாக்கு போன்ற நறுமணப் பொருட்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. கேரளா நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும்.
Question 68  | 
பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது  இடம் வகிக்கிறது?
இரண்டாவது    | |
மூன்றாவது    | |
நான்காவது   | |
முதலாவது   | 
Question 68 Explanation: 
 விளக்கம்: தோட்டக்கலை பயிர்கள் தோட்டக் கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிகளைக் குறிக்கிறது. உடல்நலத்திற்குத் தேவையான தாது சத்துகள், வைட்டமின்கள், நார்சத்துக்கள், பழங்கள் மற்றும் காய்வகைகள் அதிகம் உள்ளதால் இவை மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
Question 69  | 
கீழ்க்கண்ட மாநிலங்களில் ஆப்பிள் எங்கு அதிகம் விளைகிறது?
இமாச்சல பிரதேசம்    | |
பஞ்சாப்   | |
உத்திரப்பிரதேசம்    | |
மகாராஷ்டிரா   | 
Question 69 Explanation: 
 விளக்கம்: ஆப்பிள் இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் அதிகம் விளைகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழை பயிரிடப்படுகிறது. மகராஷ்ட்ரா, உத்திரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு மற்றும் திராட்சை பயிரிடப்படுகிறது. உலககாய்வகைகள்உற்பத்தியில் இந்தியா மட்டும் 13 சதவீதத்தை அளிக்கிறது.
Question 70  | 
கால்நடைகள் குறித்த பின்வரும் கூற்றுகளுள் தவறான ஒன்றை தேர்ந்தெடு.
ஊட்டசத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.  | |
வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிக்கின்றன.  | |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடைகள் சுமார்  10சதவீதத்தையும், வேளாண் உற்பத்தியில் 50% சதவீதத்தையும் தன் பங்களிப்பாக அளிக்கின்றன.  | |
நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் இவை விளங்குகின்றன.  | 
Question 70 Explanation: 
 விளக்கம்: கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவை சமூக கலாச்சாரப் பாதுகாப்பதும் தன் பங்களிப்பை தருகின்றது. ஊட்டசத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது. வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிக்கின்றன. நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் இவை விளங்குகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடைகள் சுமார் 4 சதவீதத்தையும், வேளாண் உற்பத்தியில் 25.6% சதவீதத்தையும் தன் பங்களிப்பாக அளிக்கின்றன.
Question 71  | 
2012 ஆம் ஆண்டு எத்தனையாவது கால்நடை வளர்ப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
19 வது   | |
20 வது   | |
30 வது   | |
9 வது   | 
Question 71 Explanation: 
 விளக்கம்: 2012 ஆம் ஆண்டில் (இந்திய அரசு 2014) நடத்திய 19வது கால்நடை வளர்ப்பு கணக்கெடுப்பின் படி இந்தியா உலகிலேயே அதிக கால்நடைகளைக் கொண்ட நாடாக உள்ளது. உலகின் மொத்த கால்நடைகளில் 11.6 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இவற்றில் மாடுகள் 37.3%, வெள்ளாடுகள் 26.4%, எருமைகள் 21.2%, செம்மறியாடுகள் 12.7%, மற்றும் பன்றிகள் 2.0% ஆகும்.
Question 72  | 
2012 ஆம் ஆண்டின் படி இந்திய வேளாண்சார் கால் நடைகளின் எண்ணிக்கையில் அதிகளவில் காணப்படும் இனம்?
Question 72 Explanation: 
 விளக்கம்: 2012 ஆம் ஆண்டின் படி இந்திய வேளாண்சார் கால் நடைகளின் எண்ணிக்கை.
Question 73  | 
அதிக அளவிலான கால்நடைகளை கொண்ட இந்திய மாநிலம் எது?
ஆந்திரா   | |
கேரளா   | |
மகாராஷ்டிரா   | |
உத்திரப்பிரதேசம்   | 
Question 74  | 
உலக அளவில் எந்த நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா மாடுகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது?
அமேரிக்கா     | |
சீனா   | |
பிரேசில்    | |
கியூபா   | 
Question 74 Explanation: 
 விளக்கம்: மாடுகள் இந்தியாவில் மொத்த கால்நடைகளில் மாடுகள் 37.3 சதவீதமாகும். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மாடுகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் மத்தியப்பிரதேசம் 10.3 சதவீதம், உத்தரப்பிரதேசம்10.2 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளம் 8.7 சதவீதம் மாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாடுகள் பல்வேறு இனங்களைச் சார்ந்ததாகும். இவை 1. பால் இனம் 2. இழுவை இனம் மற்றும் 3. கலப்பு அல்லது பொது இனம்.
Question 75  | 
ஏழை மக்களின் பசு என்றழைக்கப்படுவது எது?
எருமை     | |
பன்றி   | |
கழுதை     | |
வெள்ளாடு    | 
Question 75 Explanation: 
 விளக்கம்:  வெள்ளாடுகள் ஏழை மக்களின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடுகள், பால், இறைச்சி, தோல் மற்றும் உரோமம் போன்றவற்றை அளிக்கின்றன. இது நாட்டின் இறைச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போதைய நிலையில் இராஜஸ்தான் 16 சதவீத எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
Question 76  | 
இந்தியாவில் பால் உற்பத்தியின் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளவை?
எருமைகள்   | |
பசுக்கள்   | |
பருத்தி  | |
வெள்ளாடு    | 
Question 76 Explanation: 
 விளக்கம்: எருமைகள் இந்தியாவில் பால் உற்பத்தியின் ஒரு முக்கிய ஆதாரமாக எருமைகள் உள்ளன. உத்தரப்பிரதேசம் அதிகப்படியான எருமைகளையும் (28.2%). அதனைத் தொடர்ந்து இராஜஸ்தான் (9.6%) மற்றும் ஆந்திரபிரதேசம் (7.9%)-ம் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன.
Question 77  | 
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட்டது?
1900  | |
1919  | |
1909  | |
1859    | 
Question 77 Explanation: 
 விளக்கம்: இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919-ல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 19 வது கால்நடைக் கணக்கெடுப்பு 2012-ல் எடுக்கப்பட்டது. கால்நடைக் கணக்கெடுப்பு ஐந்து வருட இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. இறுதி கால்நடைக் கணக்கெடுப்பு 2017-ல் மேற்கொள்ளப்பட்டது.
Question 78  | 
தமிழ் நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது.  | |
மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு மண்டல இணை இயக்குநர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  | |
இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் 1. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.  | |
இவை அனைத்தும்   | 
Question 78 Explanation: 
 விளக்கம்:  தமிழ் நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது. மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு மண்டல இணை இயக்குநர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் 1. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.
Question 79  | 
பால் உற்பத்தியில் முதன்மை மாநிலங்களாகத் திகழ்பவை எவை?
- i) இராஜஸ்தான்
 - ⅱ) உத்தரப்பிரதேசம்
 - ⅲ) மத்தியப்பிரதேசம்
 - ⅳ) கேரளா
 
i, ⅱ, ⅲ  | |
ⅱ, ⅲமட்டும்   | |
i,ⅱ,ⅲ,ⅳ  | |
ⅲ,ⅳமட்டும்   | 
Question 79 Explanation: 
 விளக்கம்: மாநில மற்றும் யூனியன் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை 2016-17 ஆம் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 163.7 மில்லியன் டன்களாகும். இவ்வுற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 27.6 மில்லியன் டன்களையும் (16.8%), இராஜஸ்தான் 19.4 மில்லியன் டன்களையும் (11.8%), மத்தியப்பிரதேசம் 13.4 மில்லியன் டன்களையும் (8.2%) உற்பத்தி செய்து பால் உற்பத்தியில் முதன்மை மாநிலங்களாகத் திகழ்கின்றன.
Question 80  | 
இறைச்சி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்   | |
மகாராஷ்ட்ரா  | |
மேற்கு வங்காளம்  | |
கேரளா  | 
Question 80 Explanation: 
 விளக்கம்: இறைச்சியைப் பொறுத்தவரை மொத்த உற்பத்தியானது 7.4 மில்லியன் டன்களாகும். இதில் உத்திரப்பிரதேசம் 1.3 மில்லியன் டன்களுடன் (18.2%) முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து நாட்டின் இறைச்சி உற்பத்தியில் மகாராஷ்ட்ரா 0.8 மில்லியன் டன்களையும் (11.4%), மேற்கு வங்காளம் 0.7 மில்லியன் டன்களையும் (9.6%) உற்பத்தி செய்து உள்ளன.
Question 81  | 
நம் நாட்டின்  ரோம உற்பத்தியில் முன்னிலை வகிக்கும்  மாநிலம் எது?
இராஜஸ்தான்  | |
உத்தரப்பிரதேசம்  | |
மத்தியப்பிரதேசம்  | |
கேரளா  | 
Question 81 Explanation: 
 விளக்கம்: நம் நாட்டின் மொத்த ரோம உற்பத்தி 43.5 மில்லியன் கிலோகிராமாகும். இராஜஸ்தான் மாநிலம் 14.5 மில்லியன் கிலோவுடன் முதல் இடத்தையும், (32.9%) அதனைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் 7.3 மில்லியன் கிலோ கிராம் (16.7%) மற்றும் கர்நாடகம் 6.6 மில்லியன் கிலோ கிராம் உற்பத்தி (15.1%) முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
Question 82  | 
உலக மீன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு எது?
இந்தியா   | |
ஜப்பான்   | |
சீனா   | |
ரஷ்யா   | 
Question 82 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் மீன் வளர்ப்பு ஒரு முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகும். இத்துறை வளர்ந்து வரும் துறையாகவும் பல்வேறு வளங்களைக் கொண்டதாகவும் உள்ளது. மீன் பிடி தொழிலானது இந்தியாவின் கடலோர மாநிலங்களில் ஒரு முக்கிய தொழிலாகக் 14 மில்லியன் மக்கள் தொகைக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. உலக மீன் உற்பத்தியில் 3% சதவீதத்துடன் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மீன் பிடி தொழில் உணவு உற்பத்தியை அதிகரித்தல், வேலைவாய்ப்பை உருவாக்கல், ஊட்டச்சத்து அளித்தல், அன்னிய செலாவாணி ஈட்டல் போன்ற பல வழிகளில் உதவி புரிகிறது.
Question 83  | 
தீவுக்கூட்டங்களை சேர்க்காமல் இந்திய கடற்கரையின் நீளம்?
6100  | |
7517   | |
7500  | |
6517  | 
Question 83 Explanation: 
 விளக்கம்: இந்திய கடற்கரையின் நீளம் 6100 கி.மீ ஆகும். தீவுக் கூட்டங்களின் கடற்கரையையும் சேர்த்து மொத்த நீளம் 7517 கி.மீ ஆகும். இந்தியாவில் மீன் பிடி தொழில் இருவகைகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது. 1) கடல் மீன் பிடிப்பு 2) உள்நாட்டு (அ) நன்னீர் மீன்பிடிப்பு.
Question 84  | 
இந்திய கடற்கரை மாநிலங்களில் எந்த மாநிலம்  கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது?
கேரளா   | |
தமிழ்நாடு    | |
குஜராத்   | |
ஆந்திரா   | 
Question 84 Explanation: 
 விளக்கம்: கடல் மீன் பிடிப்பு கடற்கரைப்பகுதி, கடற்கைரையை ஒட்டியபகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமானப் பகுதிகளில் 200 மீட்டர் ஆழம் வரை உள்ள கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. இது கடற்கரை மாநிலங்களில் கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.
Question 85  | 
இந்தியாவில் எந்த மாநிலம்  உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
கேரளா   | |
தமிழ்நாடு    | |
குஜராத்   | |
ஆந்திரா   | 
Question 85 Explanation: 
 விளக்கம்: உள்நாட்டு மீன் பிடிப்பு நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
Question 86  | 
இந்தியாவின் முதல் ஐந்து மீன் பிடி மாநில
கோவா  
ங்களுள் அல்லாதது?
கோவா    | |
தமிழ்நாடு    | |
குஜராத்   | |
ஆந்திரா  | 
Question 86 Explanation: 
 விளக்கம்: இந்தியாவில் மீனவர்களால் பிடிக்கப்படும் முக்கியமான மீன் வகைகள் கெளுத்தி, ஹெர்கிங்ஸ், கானாங் கெளுத்தி, பெர்சல், ஈல்மீன் முல்லட்டை மீன் போன்றவையாகும். 2014-15ம் ஆண்டின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 65.77 இலட்சம் டன்களாகவும் ஆனால் கடல்மீன் உற்பத்தியானது 34.91 இலட்சம் டன்களாக உள்ளது. ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் கேரளம் மற்றும் தமிழ்நாடு இந்தியாவின் முதல் ஐந்து மீன் பிடி மாநிலங்களாகும்.
Question 87  | 
இந்தியாவில் எத்தனை சதவீத நில உடமையாளர்கள் குறு விவசாயிகளாக உள்ளனர்?
59%  | |
60%  | |
67%  | |
75%  | 
Question 87 Explanation: 
 விளக்கம்: இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் சில இயற்கை காரணிகளாகவும் வேறு சில செயற்கை காரணிகளாகவும் உள்ளன. அவை சிறிய மற்றும் குறு நில உடமை இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறிய மற்றும் துண்டாக்கப்பட்ட நில உடமையாளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் 67சதவீத நில உடமையாளர்கள் (1 ஹெக்டேருக்கும் குறைவு) குறு விவசாயிகளாக உள்ளனர்.
Question 88  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
வளமற்ற மண் இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடியின்றி வேளாண்மைக்கு உட்படுத்தபட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.  | |
நீர்ப்பாசன பற்றாக்குறை இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியை பெற்றிருக்கின்றது.    | |
a) மற்றும் b)  | |
இவற்றில் எதுவுமில்லை  | 
Question 88 Explanation: 
 விளக்கம்: அதிக செலவின உள்ளீடுகள் அதிக விளைச்சலுக்கும் தொடர் வேளாண் உற்பத்திக்கும் விதைகள் அடிப்படையான ஒரு உள்ளீடாகும். அதிக விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு-குறு விவாசயிகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது. வளமற்ற மண் இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடியின்றி வேளாண்மைக்கு உட்படுத்தபட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன பற்றாக்குறை இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியை பெற்றிருக்கின்றது. வேளாண்மையின் நம்பகத்தன்மைக்கு, நீர்ப்பாசன வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
Question 89  | 
கீழ்க்கண்டவற்றுள் நீர்ப்பாசன விவசாயிகள் மேற்கொள்ளும் பிரச்சனைகள் எவை?
ⅰ) மழை
ⅱ) மின்சாரம்
ⅲ) அதிக வெப்பம்
ⅳ) கடினமான நிலப்பரப்பு
ⅴ) தொழிலாளர்
ⅵ) எரிபொருள்
 ⅱ), ⅲ), ⅳ), ⅴ), ⅵ)  | |
ⅲ), ⅳ)  | |
ⅳ), ⅴ), ⅵ)  | |
ⅴ), ⅵ)  | 
Question 90  | 
விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்காரணம்?
தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை  | |
மழை இன்மை   | |
தொழிலாளர் இன்மை   | |
தரமான உற்பத்தி இன்மை  | 
Question 90 Explanation: 
 விளக்கம்: இயந்திரமயமாக்க பற்றாக்குறை நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரமயமாக்கப்பட்டிருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை செய்யப்படுகிறது. மண் அரிப்பு காற்று மற்றும் நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் நிலப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகளைக் கண்டறிந்து சரியான முறையில் மீண்டும் அதனை வளமையானதாக மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். வேளாண் சந்தை இந்தியாவின் கிராமப்புற விவசாயப் பொருட்களின் சந்தை மோசமான வடிவத்திலேயே காணப்படுகிறது. தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாயப் பொருட்களின் விலையில் அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
Question 91  | 
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
விவசாயகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்  | |
போக்குவரத்து வசதியின்மை இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின்மையாகும்.  | |
வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும்.  | |
இவற்றில் எதுவுமில்லை  | 
Question 91 Explanation: 
 விளக்கம்: சேமிப்பு கிடங்கு வசதியில்லாமை கிராமப்புற பகுதிகள் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். போக்குவரத்து வசதியின்மை இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின்மையாகும். தற்சூழலில் இலட்சக்கணக்கான கிராமங்களில் பிரதான இணைப்புச் சாலைகள் இல்லாமலோ அல்லது சந்தை மையங்களுடன் இணைக்கப்படாமலோ உள்ளது. மூலதனப் பற்றாக்குறை வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Question 92  | 
பொன் புரட்சி பின்வரும் எதனோடு தொடர்புடையது?
பழங்கள்   | |
தேன்   | |
தோட்டக்கலைப்பயிர்   | |
இவை அனைத்தும்   | 
Question 93  | 
இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான பாசன  முறை எது?
கால்வாய் பாசனம்   | |
ஏரிப்பாசனம்   | |
கிணற்று நீர் பாசனம்    | |
இவை அனைத்தும்    | 
Question 93 Explanation: 
 விளக்கம்: மொத்த பாசனப்பரப்பில் கால்வாய்ப்பாசனத்தின் பரப்பு 24% ஆகும். தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி, பருமன் மிகுந்த வளமான மண், வற்றாத நீர் மூலங்கள், மற்றும் அதிக நீர்ப்பிடிப்பு கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் முக்கிய ஆதாரமாக உள்ளது.
Question 94  | 
குழாய்க்கிணறு மூலம் பாசனம் பெறும் நிலத்தின் பரப்பளவு?
46%   | |
24%  | |
16%  | |
14%  | 
Question 95  | 
கால்வாய் பாசனத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு   | |
மூன்று   | |
நான்கு   | |
ஐந்து   | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 95 questions to complete.