Online TestTnpsc Exam
வானிலையும் காலநிலையும் Online Test 8th Social Science Lesson 6 Questions in Tamil
வானிலையும் காலநிலையும் Online Test 8th Social Science Lesson 6 Questions in Tamil
Congratulations - you have completed வானிலையும் காலநிலையும் Online Test 8th Social Science Lesson 6 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
புவியின் வளிமண்டலதில் பெரும்பங்கு வகிப்பது கீழ்க்கண்டவற்றுள் எது ?
வாயு | |
ரசாயனம் | |
அயனிகள் | |
நுண்ணிய நீர்த்துளிகள்
|
Question 1 Explanation:
குறிப்பு- புவிமண்டலம் நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற பல வாயுக்களால் ஆனது.)
Question 2 |
புவியின் வளிமண்டலம் எத்தனை அடுக்குகளை கொண்டது?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
இவை எதுவும் இல்லை
|
Question 2 Explanation:
குறிப்பு - புவியின் வளிமண்டலமானது அடிவளிமண்டலம், இடைமண்டலம், அயனிமண்டலம், வெப்ப மண்டலம் போன்ற பல அடுக்குகளை கொண்டதாகும்)
Question 3 |
புவியின் வளிமண்டலத்தில் ஐந்தில்........... பங்கு நைட்ரஜன் நிரம்பியுள்ளது.
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஒரு |
Question 3 Explanation:
குறிப்பு - புவியின் வளிமண்டலத்தில் நைட்ரோஜனின் பங்களிப்பு 78% உள்ளது. இது ஐந்தில் நான்கு பங்காகும்.)
Question 4 |
புவியானது எந்த விசையால் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை தக்க வைத்துக்கொள்கிறது?
- அணுக்கரு விசை
- ஈர்ப்பு விசை
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 4 Explanation:
குறிப்பு - புவியானது தனது ஈர்ப்பு விசையால் வாயுக்களை புவியை விட்டு வெளியேறாமல் தனது வளிமண்டலத்தில் தக்க வைத்துக்கொள்கிறது. புவிஈர்ப்பு விசை புவியின் காந்த புலனால் உண்டாகிறது)
Question 5 |
பொருத்துக
- நைட்ரஜன் - a) 0.04%
- ஆக்சிஜன் - b) 78%
- ஆர்கான் - c) 21%
- மற்றவாயுக்கள் - d) 0.97%
I-b, II-c, IIId, IV-a
| |
I-d, II-b, III-a, IV-c
| |
I-b, II-d, III-a, IV-c
| |
I-c, II-b, III-d, IV-a
|
Question 5 Explanation:
குறிப்பு - வளிமண்டலத்திலுள்ள வாயுக்களில் ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்சிஜனும், மற்றும் இதர பல வாயுக்களும், நீராவியும் உள்ளது)
Question 6 |
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் எந்த கோளில் வளிமண்டலம் இல்லை?
வெள்ளி | |
புதன் | |
வியாழன் | |
செவ்வாய் |
Question 6 Explanation:
குறிப்பு - கோள்களில் புதனுக்கு மட்டும் வளிமண்டலம் இல்லை. எனவே அது சூரிய ஆற்றலை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் அதிக வெப்ப மாற்று நிகழ்வுகளை கொண்டிருக்கும்.)
Question 7 |
கிளைமேட் (Climate) என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
கிரேக்கம் | |
உருது | |
லத்தீன் | |
பிரென்ச் |
Question 7 Explanation:
கிளைமேட் என்ற வார்த்தை, கிளைமா என்ற பண்டைய கிரேக்க வார்த்தையில் இருந்து வந்ததாகும் )
Question 8 |
கிளைமோ என்றால் தமிழில்.................... என்று பொருளாகும்
சாய்வு கோணம்
| |
காலநிலை | |
வானிலை | |
சூழ்நிலை |
Question 8 Explanation:
குறிப்பு - கிளைமோ என்றால் தமிழில் சாய்வுகோணம் என்று பொருளாகும்.புவியின் சாய்வு கோணத்தை குறிக்க பயன்படுத்தபட்டது)
Question 9 |
வானிலை என்பது புவியின் எந்த மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது?
வளிமண்டல மாற்றம்
| |
நீர் மண்டல மாற்றம் | |
தரைமண்டல மாற்றம்
| |
காந்தமண்டல மாற்றம்
|
Question 9 Explanation:
குறிப்பு - வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம் போன்ற பலகூறுகளின் தன்மையை குறிப்பது வானிலை ஆகும்)
Question 10 |
பருவ மாற்றம் நடைபெறாத கோள் இவற்றுள் எது?
புதன் | |
வெள்ளி | |
பூமி | |
செவ்வாய் |
Question 10 Explanation:
குறிப்பு - புதன் கோளில் வளிமண்டலம் அல்லாத காரணத்தால் அங்கு பருவ மாற்றங்கள் ஏற்படுவதில்லை)
Question 11 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரி?
- வானிலை என்பது அடிக்கடி மாறக்கூடியது.
- வளியியல் என்பது வானிலையின் அறிவியல் பிரிவாகும்.
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 11 Explanation:
குறிப்பு - வானிலை என்பது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வராத்திலோ நடக்கக்கூடிய நிகழ்வாகும். இது அடிக்கடி மாறும். இதனை வளியியல் எனும் அறிவியல் பிரிவை கொண்டு அறிய முடியும்)
Question 12 |
காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை சுமார்..................... கணக்கிட்டு கூறுவதாகும்.
20 ஆண்டுகளுக்கு | |
15 ஆண்டுகளுக்கு | |
35 ஆண்டுகளுக்கு
| |
50 ஆண்டுகளுக்கு
|
Question 12 Explanation:
குறிப்பு - காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியை குறிப்பதாகும். வானிலையை போன்று காலநிலை அடிக்கடி மாறக்கூடியது அல்ல )
Question 13 |
வானிலையை தீர்மானிக்கும் கூறுகள் கீழே உள்ளவற்றில் எது?
காற்றழுத்தம் | |
சூரிய வெளிச்சம் | |
வெப்பம் | |
இவை அனைத்தும்
|
Question 13 Explanation:
குறிப்பு - வானிலையை சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம் போன்ற பலகூறுகள் தீர்மானிக்கிறது)
Question 14 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - வானிலையின் கூறுகளும் காலநிலையின் கூறுகளும் ஒன்றே ஆகும்.
- கூற்று 2 - வானிலையும், காலநிலையும் ஒன்றே ஆகும்
கூற்று 1 மட்டும் சரி
| |
கூற்று 2 மட்டும் சரி
| |
இரண்டு கூற்றுகளும் சரி
| |
இரண்டு கூற்றுகளும் தவறு
|
Question 14 Explanation:
குறிப்பு - வானிலையும் காலநிலையும் வெவ்வேறானவை. வானிலை குறுகியகால நிகழ்வைக் குறிக்கும். காலநிலை நீண்டகால நிகழ்வைக் குறிக்கும். எனினும் காலநிலையின் கூறுகளும் வானிலையின் கூறுகளும் ஒன்றே ஆகும்)
Question 15 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- புவி கோள வடிவமானது.
- கோளம்(Sphere) என்ற சொல் லத்தீன் மொழி வார்த்தையான 'ஸ்பைரா' என்பதில் இருந்து வந்தது.
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 15 Explanation:
குறிப்பு - புவி கோள வடிவம் உடையது. கோளம் என்ற வார்த்தை கிரேக்க மொழி வார்த்தையான ஸ்ஃபைரா என்ற வார்த்தையில் இருந்து வந்தது
Question 16 |
கீழ்க்காணும் செய்திகளில் எது தவறானது?
புவி கோள வடிவமானது.
| |
புவியின் மேற்பரப்பில் சூரிய கதிர்கள் ஒரே சீராக விழுவது இல்லை.
| |
புவியின் துருவப் பகுதிகள் சூரியனுடைய செங்குத்தாக கதிர்களை பெறுகின்றன.
| |
புவியின் துருவப் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது.
|
Question 16 Explanation:
குறிப்பு - புவியின் துருவப் பகுதிகள் சூரியனின் சாய்வான கதிர்களை பெறுகின்றன. எனவே அங்கு சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள காரணத்தினால், அங்கு கடும் குளிர் நிலவுகிறது)
Question 17 |
சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்?
8.3 நிமிடங்கள்
| |
6.5 நிமிடங்கள்
| |
7.2 நிமிடங்கள்
| |
9.7 நிமிடங்கள்
|
Question 17 Explanation:
குறிப்பு - சூரிய ஒளியானது சூரியனில் இருந்து தோன்றி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது)
Question 18 |
சூரியனின் செங்குத்தான கதிர்களை பெறும் இடங்கள் எவ்வாறு இருக்காது ?
மிக வெப்பமாக
| |
குறைந்த காற்றழுத்துடன்
| |
குளிர்காலம் குறைவாக
| |
வறண்ட வானிலை
|
Question 18 Explanation:
குறிப்பு - சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் இடங்களில் வெப்பம் காரணமாக குறைந்த காற்றழுத்தமண்டலமாக இருக்கும்)
Question 19 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி?
- I. வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
- II. வளிமண்டலத்தில் சில இடங்களில் காற்றழுத்தம் இருக்காது.
- III. புவிக்கு அருகில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்.
I, II மட்டும் சரி
| |
I, III மட்டும் சரி
| |
II, III மட்டும் சரி
| |
எல்லாமே சரி
|
Question 19 Explanation:
குறிப்பு - வெப்ப காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். புவிக்கு அருகில் குளிர்காற்று தங்கிவிடுவதால் அங்கு காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்)
Question 20 |
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்உள்ளவற்றுள் எதை பாதிக்கும்?
நீரோட்டம் | |
காற்றோட்டம் | |
காற்றழுத்தம் | |
இவை அனைத்தும்
|
Question 20 Explanation:
குறிப்பு - வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் மற்றும் காற்றழுத்த மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது)
Question 21 |
வெப்பநிலை என்பது எதில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும்?
- I. காற்று
- II. நிலம்
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 21 Explanation:
குறிப்பு - வெப்பநிலை அது காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும். வெப்பநிலை இடத்திற்கு இடம் மாறும்)
Question 22 |
வெப்பநிலை இடத்திற்கு இடம் மாற காரணிகளாய் உள்ளவற்றில் எது சரியானது ?
- I. புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொருத்து மாறும்
- II. புவி வெப்ப கதிர்வீச்சின் அளவை பொருத்து மாறும்.
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
இரண்டும் சரி
| |
இரண்டும் தவறு
|
Question 22 Explanation:
குறிப்பு - வெப்பமானது புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொருத்தும், புவிவெப்ப கதிர்வீச்சின் அளவை பொறுத்தும் வெப்பம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது)
Question 23 |
வெப்பநிலை கீழுள்ளவற்றுள் எதன் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
ஈரப்பதத்தின் அளவு
| |
ஆவியாதல்
| |
மழைப்பொழிவு | |
இவை அனைத்தும் |
Question 23 Explanation:
குறிப்பு - வெப்பநிலை மாறுதல் ஆனது ஈரப்பதத்தின் அளவு, ஆவியாதல், திரவமாதல், மழைப்பொழிவு ஆகியவற்றின் அளவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது)
Question 24 |
புவியானது சூரிய கதிர் வீச்சுகளில் வெப்ப ஆற்றல் பெறும் வழிமுறைகளில் தவறானது எது?
வெப்பக் கதிர்வீச்சு
| |
வெப்ப சலனம்.
| |
வெப்ப உந்துதல்
| |
வெப்பக் கடத்தல்
|
Question 24 Explanation:
(குறிப்பு - சூரிய கதிர் வீச்சுகளில் இருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் மூன்று வழிமுறைகளில் புவியை வந்து அடைகிறது. அவை வெப்பக் கதிர்வீச்சு வெப்பக் கடத்தல் மற்றும் வெப்ப சலனம் ஆகும்)
Question 25 |
கீழுள்ள கூற்றுகளில் எது சரியானது?
- I. புவியின் வளிமண்டலம் சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் தான் அதிக வெப்பமடைகிறது.
- II. புவியின் வளிமண்டலம் புவியின் கதிர்வீசலை விட சூரியக்கதிர் வீசலால் தான் அதிக வெப்பமடைகிறது.
- III. புவி கதிர்வீசல் ஒளி பிரதிபலிப்பு மூலம் சூரிய வெப்பத்தை வளிமண்டலத்திற்கு செலுத்தி, வளிமண்டலத்தில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி
| |
I, III மட்டும் சரி
| |
எல்லாமே சரி
|
Question 25 Explanation:
குறிப்பு - சூரிய கதிர்வீச்சானது, புவியின் ஒளி பிரதிபலிப்பு மூலம் வளிமண்டலத்தை அடைகிறது. அங்கு பசுமை வாயுக்களால் தடுக்கப்பட்டு வெப்பத்தை உண்டாக்குகிறது.)
Question 26 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- I. வெப்பநிலை செங்குத்தாக மட்டும் மாறுபடும்.
- II. வெப்பநிலை கிடைமட்டமாக மட்டும் மாறுபடும்.
- III. வெப்பநிலை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் என இரண்டு நிலையிலும் மாறுபடுகிறது.
I மட்டும் சரி
| |
II மட்டும் சரி
| |
III மட்டும் சரி
| |
எல்லாமே தவறு
|
Question 26 Explanation:
குறிப்பு - வெப்பநிலையானது செங்குத்தாகவும் மற்றும் கிடைமட்டமாகவும் வேறுபடும்)
Question 27 |
வெப்பநிலையானது ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும்.................. என்ற அளவில் குறைந்து கொண்டே செல்கிறது.
6.5°C | |
7.5°C | |
8.5°C | |
9.5°C
|
Question 27 Explanation:
குறிப்பு - வெப்பநிலை ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்து கொண்டே போகும். இதனை வெப்ப குறைவு வீதம் என்பர்)
Question 28 |
வெப்ப பரவலை தீர்மானிக்கும் காரணிகளில் தவறானது எது?
கடலிலிருந்து தூரம்
| |
இயற்கை தாவரங்கள்
| |
கடலலை சீற்றம்
| |
அட்சரேகை |
Question 28 Explanation:
குறிப்பு - வெப்ப பரவலை அட்சரேகை உயரம் கடல் நீரோட்டம் இயற்கை தாவரங்கள் ஆகியன பாதிக்கும் காரணிகளாகும். கடல் சீற்றம் வெப்ப பரவலை பாதிக்காது.)
Question 29 |
கீழே உள்ளவற்றில் சம அளவு கோடு அல்லாதவை எது?
ஐசோதெர்ம் | |
ஐசோடோப்பு | |
ஐசோஹெல் | |
ஐசோபார் |
Question 29 Explanation:
குறிப்பு - ஐசோடோப்பு என்பது ஒரே மாதிரியான அணு எண்ணை கொண்ட தனிமத்தை குறிப்பதாகும். அது சமநிலை கோடு அல்ல.)
Question 30 |
காற்றழுத்தம் தொடர்பான சமஅளவு கோடு கீழ் உள்ளவற்றுள் எது?
ஐசோஹெல் | |
ஐசோதெர்ம் | |
ஐசோபார் | |
ஐசோக்ரைம் |
Question 30 Explanation:
குறிப்பு - ஐசோபார் என்பது சம காற்றழுத்த கோடு ஆகும். இது ஒரே அளவிலான காற்றழுத்த நிலையைக் குறிப்பதாகும்)
Question 31 |
பொருத்துக
- I. ஐசோக்ரைம் - a) சம காற்றழுத்த கோடு
- II. ஐசெல்லோபார் - b) சம சூரியவெளிச்ச கோடு
- III. ஐசோஹைட்ஸ் - c) சராசரி சம வெப்பநிலை கோடு
- IV. ஐசோஹெல் - d) சம மழை அளவு கோடு
I-c, II-a, III-d, IV-b
| |
I-a, II-d, III-c, IV-b
| |
I-d, II-a, III-c, IV-b
| |
I-b, II-d, III-c, IV-a
|
Question 31 Explanation:
குறிப்பு - நில வரைபடங்களை வானிலை கூறுகளின் பரவலை சம அளவு போட்டு வரைபடம் மூலம் நில வரைபடங்களை வானிலை கூறுகளின் பரவலை சம அளவு போட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது)
Question 32 |
வெப்பமானி எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது
வெப்பநிலை | |
வெப்பக் கதிர்வீச்சு
| |
வெப்ப சலனம்
| |
இவை எதுவும் இல்லை
|
Question 32 Explanation:
குறிப்பு - வெப்பமானி காற்றின் வெப்பநிலையை அளவிட பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீவன்சன் திரை வெப்பமானி, குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பமானி போன்றவைகளை வானியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.)
Question 33 |
ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை எப்போது பதிவாகிறது?
பிற்பகல் ஒரு மணி முதல் 4 மணி வரை
| |
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை
| |
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
| |
பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை |
Question 33 Explanation:
குறிப்பு - ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை பிற்பகல் 2 மணி முதல் 4 வரை பதிவாகிறது. வளிமண்டலம் புவி கதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் இது நடக்கிறது.)
Question 34 |
ஒருநாளின் குறைந்தபட்ச வெப்பநிலை எப்போது பதிவாகிறது?
அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை
| |
அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை
| |
காலை 6 மணி முதல் 9 மணி வரை
| |
அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை
|
Question 34 Explanation:
குறிப்பு - ஒருநாளின் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை பதிவாகிறது. புவி கதிர்வீசலால் வெளியேறும் வெப்பம் குறைவாக இருப்பதால் இந்த காலகட்டத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகிறது)
Question 35 |
வெப்பநிலையை அளவிட பயன்படும் அளவுகளில் தவறானது எது?
செல்சியஸ் | |
பாரன்ஹீட் | |
கெல்வின் | |
கொதிநிலை |
Question 35 Explanation:
(குறிப்பு - வெப்பநிலையை பாரன்ஹீட் செல்சியஸ் மற்றும் கெல்வின் போன்ற அளவுகளில் அளவிடலாம். கொதிநிலை என்பது ஒரு திரவப் பொருள் வாயுப் ஆக மாற எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச வெப்பநிலை ஆகும்)
Question 36 |
உடல் வெப்பநிலையை அறிய உதவும் வெப்பமானி எது?
பாதரச வெப்பமானி
| |
மின் வெப்பமானி | |
ஸ்டீவன்சன் திரை வெப்பமானி
| |
குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பமானி.
|
Question 36 Explanation:
குறிப்பு - உடல் வெப்பநிலையை பாதரச வெப்பமானி கொண்டு அளவிடுகிறார்கள். இதில் பாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும்)
Question 37 |
பாரன்ஹீட் அளவு முறையில் நீரின் கொதி நிலை என்ன?
273°F | |
253°F | |
100°F | |
212°F |
Question 37 Explanation:
குறிப்பு - பாரன்ஹீட் அளவு முறையில் நீரின் கொதிநிலை யானது 212 டிகிரி பாரன்ஹீட் ஆகும். மேலும் நீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட் ஆகும்)
Question 38 |
ஒருநாளின் குறைந்தபட்ச வெப்பநிலை 70°F ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 80°F ஆகவும் இருப்பின், அந்நாளின் வெப்பநிலை வீச்சு என்ன?
75°F | |
65°F | |
80°F | |
70°F |
Question 38 Explanation:
குறிப்பு - வெப்பநிலை வீச்சு = குறைந்தபட்ச வெப்பநிலை+ அதிகபட்ச வெப்பநிலை/2 = 80+70/2= 75°F)
Question 39 |
ஒரு நாளில் அமையும் உச்ச வெப்ப நிலைக்கும் நீச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தினசரி வெப்பநிலை வீச்சு
| |
வெப்பநிலை வீச்சு மாறுதல்
| |
வெப்பநிலை வீச்சு மாற்றம்
| |
இவை எதுவுமல்ல
|
Question 39 Explanation:
குறிப்பு - ஒரு நாளில் அமையும் உச்ச வெப்ப நிலைக்கும் மற்றும் நீச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு தின வெப்ப வியாப்தி அல்லது தினசரி வெப்பநிலை வீச்சு என அழைக்கப்படுகிறது)
Question 40 |
ஒருநாளின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள............... வெப்பநிலை வீச்சு ஆகும்.
சராசரி | |
வித்தியாசம் | |
பெருக்கல் தொகை
| |
கூட்டுத்தொகை |
Question 40 Explanation:
(குறிப்பு - வெப்பநிலை வீச்சு என்பது ஒரு இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள சராசரி வெப்பநிலை ஆகும்)
Question 41 |
வெப்பநிலை வீச்சை கணக்கிட ஒருநாளில் எத்தனை மணி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்?
8 மணி நேரம்
| |
12 மணி நேரம்
| |
16 மணி நேரம்
| |
24 மணி நேரம்
|
Question 41 Explanation:
குறிப்பு - வெப்பநிலை வீச்சு என்பது ஒரு இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை க்கு இடையே உள்ள சராசரி ஆகும்)
Question 42 |
தினசரி வெப்பநிலை வீச்சு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தின வெப்ப வியாப்தி | |
தின வெப்ப மாறுதல்.
| |
தின வெப்ப குறியீடு
| |
இவை எதுவுமில்லை
|
Question 42 Explanation:
குறிப்பு - ஒரு நாளில் அமையும் உச்ச வெப்ப நிலைக்கும் நீச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு தின வெப்ப வியாதி அல்லது தினசரி வெப்பநிலை வீச்சு என அழைக்கப்படும்)
Question 43 |
சம வெப்ப கோடுகள் என்பது?
அட்சய ரேகை கோடுகள் | |
தீர்க்கரேகை கோடுகள்
| |
கற்பனைக் கோடுகள்
| |
எல்லாமே தவறு
|
Question 43 Explanation:
குறிப்பு - சம அளவு வெப்பநிலை கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் சம வெப்ப கோடுகள் ஆகும்)
Question 44 |
புவியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலை இருக்க காரணம்?
புவியின் நில அமைப்பு
| |
புவியின் கோள வடிவம்
| |
புவியின் ஈர்ப்பு சக்தி
| |
புவியின் வாயுமண்டலம்
|
Question 44 Explanation:
குறிப்பு - புவியின் கோள வடிவமே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலை பெறுவதற்கு காரணமாக அமைகிறது)
Question 45 |
புவியின் வெப்ப மண்டலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 45 Explanation:
குறிப்பு - புவியின் வெப்ப மண்டலங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அயன மண்டலம், மித வெப்ப மண்டலம் மற்றும் குளிர் மண்டலம் ஆகும்)
Question 46 |
கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியை எந்த வெப்பமண்டலமாக அழைப்பர்?
வெப்ப மண்டலம்
| |
மித வெப்ப மண்டலம்
| |
குளிர் மண்டலம்
| |
அதிக வெப்ப மண்டலம்
|
Question 46 Explanation:
குறிப்பு - கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி வெப்பமண்டலம் (Torrid Zone ) என்று அழைக்கப்படும்)
Question 47 |
அயன மண்டலம் என்று அழைக்கப்படுவது எது?
வெப்ப மண்டலம் | |
மித வெப்ப மண்டலம் | |
குளிர் மண்டலம் | |
இவை எதுவும் அல்ல |
Question 47 Explanation:
(குறிப்பு – வெப்பமண்டலம் (Torrid Zone), அயன மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இது கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது)
Question 48 |
சூரியனின் செங்குத்தான கதிர்களை பெறும் வெப்பமண்டலம் எது?
அயன மண்டலம் | |
மித வெப்ப மண்டலம் | |
குளிர் மண்டலம் | |
இது எதுவும் இல்லை |
Question 48 Explanation:
(குறிப்பு - அயன மண்டலம் சூரியனிடமிருந்து செங்குத்தான கதிர்களை பெறுவதால் அதிகபட்சமான வெப்பத்தை பெறுகிறது)
Question 49 |
மித வெப்ப மண்டலம் குறித்த தவறான செய்தி எது?
- இது கடக ரேகைக்கும் ஆர்க்டிக் வட்டத்திற்கு இடைப்பட்ட பகுதி
- இது மகர ரேகைக்கும் அண்டார்டிகா வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி
- இது சூரியனின் செங்குத்தான கதிர்களை பெரும் பகுதி.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 49 Explanation:
(குறிப்பு - மிதவெப்ப மண்டலமானது வட அரைக்கோளத்தில் கடக ரேகைக்கும் ஆர்டிக் வட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. தென் அரைக்கோளத்தில் மகர ரேகைக்கும் அண்டார்டிக் வட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் சூரியனின் சாய்வான கதிர்களை பெறுகிறது)
Question 50 |
சூரியக்கதிர்களின் படுகோணம் துருவத்தை நோக்கி செல்ல செல்ல...................
குறையும் | |
அதிகரிக்கும் | |
மாறாது | |
மாறிக்கொண்டே இருக்கும் |
Question 50 Explanation:
(குறிப்பு - சூரியக்கதிர்களின் படுகோணம் துருவத்தை நோக்கி செல்ல செல்ல குறையும். அதற்கு காரணம் புவியின் கோள வடிவம் சாய்வாக இருப்பதே)
Question 51 |
ஆர்டிக் வட்டத்திற்கும் வட துருவப் பகுதிக்கு இடையேயும் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயன மண்டலம். | |
மித வெப்ப மண்டலம் | |
உறைபனி மண்டலம் | |
இது எதுவும் இல்லை |
Question 51 Explanation:
(குறிப்பு - உறைபனி மண்டலம் ஆர்டிக் வட்டத்திற்கும் வட துருவப் பகுதிக்கு இடையையும், மற்றும் அண்டார்டிக் வட்டத்திற்கும் தென் துருவப் பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளது)
Question 52 |
கீழ்க்காணும் செய்திகளில் எது சரியானது?
- குளிர் மண்டலம், துருவ மண்டலம் என்று அழைக்கப்படுகிறது
- குளிர் மண்டலம் ஆண்டுதோறும் குறைந்த வெப்பத்தை பெறுகிறது.
- குளிர் மண்டலம் பனியால் சூழப்பட்டுள்ளது.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 52 Explanation:
(குறிப்பு - குளிர் மண்டலம் ஆண்டுதோறும் குறைந்த வெப்பத்தை பெறுவதால் இப்பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது. இது துருவ மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது)
Question 53 |
பொருத்துக
- அயனமண்டலம் - a) மூன்று வகை
- மித வெப்ப மண்டலம் - b) செங்குத்தான கதிர்
- உறைபனி மண்டலம் - c) சாய்வான கதிர்
- வெப்ப மண்டலங்கள் - d) துருவ மண்டலம்
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-c, III-d, IV-b | |
I-d, II-a, III-c, IV-b | |
I-c, II-b, III-a, IV-d |
Question 53 Explanation:
(குறிப்பு- வெப்ப மண்டலங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அயனமண்டலம், மித வெப்ப மண்டலம் மற்றும் துருவ மண்டலம் ஆகும்)
Question 54 |
பொருத்துக
- ஆர்டிக் வட்டம் - a) 23°30'வ
- அண்டார்டிக் வட்டம் - b) 23°30'தெ
- கடகரேகை - c) 66°30'தெ
- மகர ரேகை - d) 66°30'வ
I-d, II-c, III-a, IV-b | |
I-d, II-c, III-b, IV-a | |
I-c, IId, III-a, IV-b | |
I-c, II-d, III-b, IV-a |
Question 54 Explanation:
(குறிப்பு - ஆர்க்டிக் வட்டம், அண்டார்டிக் வட்டம், கடக ரேகை, மகர ரேகை மற்றும் நிலநடுக்கோடு ஆகியவற்றை கொண்டு புவியின் வெவ்வேறு இடங்களில் வெப்ப நிலைகளை கணக்கிடுகிறார்கள்)
Question 55 |
நிலநடுக்கோடு எவ்வாறு குறிக்கப்படுகிறது?
நிலநடுக்கோடு 0°வ | |
நிலநடுக்கோடு 0°தெ | |
நிலநடுக்கோடு 0° | |
இவை எதுவுமில்லை |
Question 55 Explanation:
(குறிப்பு - நிலநடுக்கோடு 0°, என குறிக்கப்படுகிறது. புவியை இரு சமமான அரைக்கோள பகுதிகளாகப் பிரிப்பதால், இது வடக்கு அல்லது தெற்கு எனக் குறிக்கப்படுவது இல்லை)
Question 56 |
புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை எது?
56.7°C | |
54.6°C | |
57.6°C | |
65.7°C |
Question 56 Explanation:
(குறிப்பு - புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை 56.7 டிகிரி செல்சியஸ் ஆகும். 1913 ஆம் ஆண்டு, ஜூலை பத்தாம் நாள் பதிவானது)
Question 57 |
புவியின் மிக அதிகபட்ச வெப்பநிலை எங்கு பதிவானது?
சகாரா பாலைவனம் | |
தார் பாலைவனம் | |
கிரீன்லாந்து மலைத்தொடர் | |
ஆல்ப்ஸ் மலைத்தொடர் |
Question 57 Explanation:
(குறிப்பு - உலகின் மிக அதிகபட்ச வெப்பநிலை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள கிரீன்லாந்து மலைத்தொடரில் பதிவானது)
Question 58 |
புவியில் பதிவான மிக குறைந்த பட்ச வெப்பநிலை எது?
-89.2°C | |
-79.2°C | |
-69.2°C | |
-99.2°C |
Question 58 Explanation:
(குறிப்பு - புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை -89.2°C ஆகும். இது 1983 ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் நாள் பதிவானது)
Question 59 |
உலகில் இதுவரை மிகக் குறைந்த பட்ச வெப்பநிலை எங்கு பதிவானது?
ஆர்டிக் பகுதி | |
அண்டார்டிக் பகுதி | |
ஸ்விட்சர்லாந்து பகுதி | |
ஐஸ்லாந்து பகுதி |
Question 59 Explanation:
(குறிப்பு - உலகில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அண்டார்டிகாவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையத்தில் பதிவாகியது)
Question 60 |
உலகில் இதுவரை மிக அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மிக குறைந்த பட்ச வெப்பநிலை எந்த மாதத்தில் பதிவாகியுள்ளது?
ஜூலை | |
நவம்பர் | |
பிப்ரவரி | |
டிசம்பர் |
Question 60 Explanation:
(குறிப்பு - உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மிக குறைந்த பட்ச வெப்பநிலை முறையே ஜூலை மாதம் பத்தாம் நாள் மற்றும் 21ஆம் நாள் பதிவாகியுள்ளது)
Question 61 |
மழை நீரானது புவியை நோக்கி விட காரணம் எது?
- புவியீர்ப்பு விசையினால்
- மழைநீரின் கனத்தால்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 61 Explanation:
(குறிப்பு - வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது, நீர் சுருங்குதல் மூலம் பூரித நிலையை அடைந்து நீர் துளிகளாய் மாறுகிறது. அந்த நீர்த்துளிகள் கனம் காரணமாகவும் புவியின் ஈர்ப்பு விசை காரணமாகவும் புவியை நோக்கி விழுகிறது)
Question 62 |
புவியில் நன்னீரின் ஆதாரம் எது?
- மழை
- கடல்
- பனியாறு
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 62 Explanation:
(குறிப்பு - புவியின் நன்னீர் ஆதாரம் மழை மற்றும் பனியாறுகள் ஆகும். இவை புவியில் நன்னீரை உருவாக்குகிறது)
Question 63 |
கீழுள்ள கூறுகளில் எது சரியானது?
- மழைப்பொழிவு நிலநடுக்கோட்டு பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
- மழைப்பொழிவு நிலநடுக்கோட்டு பகுதிகளில் குறைவாக இருக்கும்
- மழைப்பொழிவு துருவப் பகுதிகளை நோக்கி செல்லச்செல்ல குறையும்
- மழைப்பொழிவு துருவப் பகுதிகளை நோக்கி செல்ல செல்ல அதிகரிக்கும்
I, III மட்டும் சரி | |
I, IV மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
II, IV மட்டும் சரி |
Question 63 Explanation:
( குறிப்பு - மழைப்பொழிவு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அதிகமாகவும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கும். நிலநடுக்கோட்டு பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் மற்றும் நீர் சுருங்குதல் அதிகமாக நடைபெற்று அதிக மழை பொழிவை தருகிறது)
Question 64 |
காற்றழுத்தம் பற்றிய தவறான செய்தி எது?
இது புவியின் மேற்பரப்பில் உள்ள காற்றின் எடையாகும் | |
இது புவியின் கீழ்பரப்பில் உள்ள காற்றின் எடையாகும் | |
இது வளிமண்டல அழுத்தம் என அழைக்கப்படுகிறது | |
இது காற்றழுத்தமானியால் கணக்கிடப்படுகிறது. |
Question 64 Explanation:
(குறிப்பு - புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள காற்றின் எடை வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் என அழைக்கப்படுகிறது. இது காற்றழுத்தமானியால் அளவிடப்படுகிறது)
Question 65 |
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தில் அளவு என்ன?
1013.25மில்லிபார் | |
1023.25மில்லிபார் | |
1033.25மில்லிபார் | |
1043.25மில்லிபார் |
Question 65 Explanation:
(குறிப்பு - கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு 1013.25மில்லிபார் ஆகும். இது காற்றழுத்தமானியால் அளவிடப்படுகிறது)
Question 66 |
பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு............... ஆகும்.
2.03 கிலோ/ச.செ.மீ | |
3.03 கிலோ/ச.செ.மீ | |
1.03 கிலோ/ச.செ.மீ | |
4.03 கிலோ/ச.செ.மீ |
Question 66 Explanation:
( பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு 1.03 கிலோ/ச.செ.மீ ஆகும். இது காற்றழுத்தமானியால் அளவிடப்படுகிறது.)
Question 67 |
வளிமண்டல அழுத்தமானது...............
மாறிக் கொண்டே இருக்கக் கூடியது | |
நிலையானது | |
அதிகரித்துக்கொண்டே இருக்கக்கூடியது. | |
குறைந்துகொண்டே இருக்கக்கூடியது |
Question 67 Explanation:
( குறிப்பு - வளிமண்டல அழுத்தமானது மாறிக் கொண்டே இருக்கக் கூடியதாகும். இது கிடையாகவும், செங்குத்தாகவும் காணப்படுகிறது)
Question 68 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- குறைந்த காற்றழுத்த பகுதி என்பது, வளி மண்டல பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருப்பது.
- குறைந்த காற்றழுத்த பகுதி என்பது, வளி மண்டல பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் அதிகமாக இருப்பது
- அதிக காற்றழுத்த பகுதி என்பது, வளி மண்டல பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் அதிகமாக இருப்பது
- அதிக காற்றழுத்த பகுதி என்பது, வளி மண்டல பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருப்பது
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, IV மட்டும் சரி | |
II, IV மட்டும் சரி |
Question 68 Explanation:
( குறிப்பு - வளிமண்டல பகுதியில் இருக்கும் அழுத்தத்தை விட அதிகமாக இருப்பது அதிக காற்றழுத்த பகுதி எனவும், குறைவாக இருப்பது குறைந்த காற்றழுத்த பகுதி எனவும் அழைக்கப்படுகிறது)
Question 69 |
காற்று குறித்த தவறான செய்தி எது?
- கிடைமட்டமாக வீசக் கூடியது
- அதிக காற்றழுத்த பகுதிகளிலிருந்து குறைந்த காற்றழுத்தபகுதியை நோக்கி வீசும்
- குறைந்த காற்றழுத்த பகுதிகளிலிருந்து அதிக காற்றழுத்த பகுதி நோக்கி வீசும்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி | |
எல்லாமே தவறு |
Question 69 Explanation:
(குறிப்பு - காற்று கிடைமட்டமாக வீச கூடியது. காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள திசையை நோக்கி காற்று வீசும்)
Question 70 |
உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் எது?
1063 mb | |
1073 mb | |
1083 mb | |
1093 mb |
Question 70 Explanation:
(குறிப்பு - உலகில் இதுவரை பதிவான அதிகபட்ச அழுத்தம் 1083 mb ஆகும். இது 1968 ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் நாள் பதிவானது)
Question 71 |
உலகில் இதுவரை பதிவான மிக குறைந்தபட்ச அழுத்தம் எது?
673 mb | |
870 mb | |
972 mb | |
765 mb |
Question 71 Explanation:
(குறிப்பு - உலகில் இதுவரை பதிவான குறைந்தபட்ச அழுத்தம் 870 mb ஆகும். இது 1929ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் நாள் பதிவானது)
Question 72 |
இதுவரை உலகில் அதிகபட்ச அழுத்தம் எங்கு பதிவாகி உள்ளது?
ரஷ்யா | |
ஜெர்மனி | |
அமெரிக்கா | |
பிரேசில் |
Question 72 Explanation:
(குறிப்பு - ரஷ்யாவில் உள்ள அகாட் என்ற இடத்தில் கடல் மட்டத்தில் உலகின் மிக அதிகபட்ச அழுத்தம் பதிவானது)
Question 73 |
இதுவரை உலகில் குறைந்தபட்ச அழுத்தம் எங்கு பதிவாகி உள்ளது?
பசிபிக் பெருங்கடல் | |
பசிபிக் பெருங்கடல் | |
ஆர்டிக் பெருங்கடல் | |
அட்லாண்டிக் பெருங்கடல் |
Question 73 Explanation:
(குறிப்பு - பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள குவாம் என்ற கடல்பகுதியில் உலகின் மிக குறைந்தபட்ச அழுத்தம் பதிவானது)
Question 74 |
குறைவான காற்றழுத்த மண்டலம் எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
H | |
K | |
L | |
M |
Question 74 Explanation:
( குறிப்பு - குறைவான காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்தான L மூலம் குறிக்கப்படுகிறது. L என்பது ஆங்கிலத்தில் Low (தமிழில் குறைவு என்று பொருள்) என்பதை குறிக்கும்)
Question 75 |
அதிக காற்றழுத்த மண்டலம் எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
H | |
K | |
L | |
M |
Question 75 Explanation:
( குறிப்பு - அதிக காற்றழுத்த மண்டலம் ஆங்கில எழுத்தான H மூலம் குறிக்கப்படுகிறது. H என்பது ஆங்கிலத்தில் High (தமிழில் அதிகம் என்று பொருள் ) என்பதை குறிக்கும்)
Question 76 |
குறைந்த காற்றழுத்த மண்டலம் குறித்து தவறான செய்தி எது?
இது L என்று குறிக்கப்படுகிறது. | |
இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது | |
இது எதிர் சூறாவளி காற்று என்றும் அழைக்கப்படுகிறது. | |
இது மேகமூட்டத்தையும், காற்றையும், மழை பொழிவையும் உருவாக்குகிறது. |
Question 76 Explanation:
(குறிப்பு - குறைந்த காற்றழுத்த மண்டலம் சூறாவளி என்று அழைக்கப்படுகிறது)
Question 77 |
அதிக காற்றழுத்த மண்டலம் குறித்த தவறான செய்தி எது?
இது H என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது | |
இது எதிர் சூறாவளி காற்றுகள் என்று அழைக்கப்படுகிறது. | |
அதிக காற்றழுத்த மண்டலம் புயல் சூறாவளி போன்ற வானிலையை உருவாக்குகிறது. | |
அதிக காற்றழுத்த மண்டலம் அதிக அழுத்த மண்டலம் எனவும் அழைக்கப்படும். |
Question 77 Explanation:
(குறிப்பு - அதிக அழுத்த மண்டலம் அமைதியான வானிலையை தரும்.)
Question 78 |
சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காண................. பயன்படுகிறது.
ஐசோபார் - சம காற்றழுத்த கோடு | |
ஐசோஹைட்ஸ் - சம மழையளவு கோடு | |
ஐசெல்லோபார் - செம காற்று அழுத்த மாறுபாட்டு கோடு | |
இவை எதுவுமில்லை |
Question 78 Explanation:
(குறிப்பு - சம அழுத்தக் கோடு சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலான பயன்படுகிறது. இது ஐசோபார் எனவும் அழைக்கப்படுகிறது)
Question 79 |
மிகப்பெரிய காற்று அழுத்த வேறுபாடு கீழ்க்கண்டவற்றுள் எதை தீர்மானிக்கிறது?
- புவியின் காற்று அமைப்பு
- புயல் காற்று
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 79 Explanation:
( குறிப்பு - மிகப்பெரிய காற்று அழுத்த வேறுபாடு உள்ள போது அது புவியின் காற்று அமைப்பையும், புயல் காற்றையும் தீர்மானிக்கிறது. புயல்கள் காற்றழுத்த மாறுபாடு நிலைகளால் உருவாகி, புயல் காற்றினை உருவாக்குகிறது)
Question 80 |
வளிமண்டல காற்றழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகளுள் தவறானது எது?
வளிமண்டல வெப்பநிலை. | |
காற்று சுழற்சி. | |
பூமியின் தன்சுழற்சி | |
பூமியின் கோள வடிவம் |
Question 80 Explanation:
(குறிப்பு - வளிமண்டல காற்று அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் உயரம், வளிமண்டல வெப்பநிலை, காற்று சுழற்சி, பூமியின் தன்சுழற்சி, நீராவி மற்றும் வளிமண்டல புயல்கள் போன்றவைகளாகும். பூமியின் கோள வடிவம் இதை பாதிப்பதில்லை)
Question 81 |
வளிமண்டல அழுத்தம் வேறுபாட்டை தொடர்ச்சியாக பதிவு செய்ய........... பயன்படுகிறது.
காற்றழுத்த பதிவுத்தாள் | |
காற்றழுத்த பதிவு கருவி | |
காற்றழுத்தமானி | |
இவை எதுவுமில்லை |
Question 81 Explanation:
(குறிப்பு - வளிமண்டல அழுத்தம் வேறுபாட்டை தொடர்ச்சியாக பதிவு செய்ய காற்றழுத்த பதிவுத்தாள் பயன்படுகிறது. காற்று அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி பயன்படுத்தப்படுகிறது)
Question 82 |
வளிமண்டலத்தின் தொகுதியில் ஈரப்பதத்தின் அளவு என்ன?
0-5% | |
0-10% | |
0-8% | |
0-7% |
Question 82 Explanation:
(குறிப்பு - ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் தொகுதியில் 0-5% வரை இருக்கும் )
Question 83 |
ஈரப்பதத்தின் அளவு நிலநடுக்கோட்டில் இருந்து துருவத்தை நோக்கி செல்லும் போது..............
அதிகரிக்கும் | |
குறையும் | |
மாறாது | |
மாறிக்கொண்டே இருக்கும் |
Question 83 Explanation:
(குறிப்பு - நிலநடுக்கோட்டிலிருந்து துருவத்தை நோக்கி செல்லும் போது ஈரப்பதம் அளவு குறையும். துருவப் பகுதிகளில் வெப்பநிலை குறைவதால் ஆவியாதல் குறைகிறது எனவே காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைகிறது)
Question 84 |
ஈரப்பதம் குறித்த தவறான கூற்று எது?
ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட காற்றில் உள்ள நீராவியின் எடை ஈரப்பதம் எனப்படும். | |
சுய ஈரப்பதம் கிராம் நீராவி / கிலோகிராம் காற்று எனக் குறித்து காட்டப்படுகிறது. | |
ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது என குறித்து காட்டப்படுவது ஒப்பு ஈரப்பதம் ஆகும். | |
ஒப்பு ஈரப்பதம் சராசரி சதவிகிதம் உரையில் காணப்படுகிறது. |
Question 84 Explanation:
(குறிப்பு - ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது என குறித்து காட்டப்படுவது உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity)என்று அழைக்கப்படுகிறது)
Question 85 |
கீழுள்ள கூறுகளில் எது தவறானது?
- ஹைட்ரோமீட்டர் கொண்டு காற்றின் ஈரப்பதத்தை அளக்கலாம்.
- பொதுவாக வெப்ப காற்று குளிர் காற்றை விட அதிக நீராவியை தக்க வைத்துக் கொள்ளும்.
- காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும் போது காற்று பூரித நிலையை அடையும்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 85 Explanation:
(குறிப்பு - காற்றின் ஈரப்பதத்தை அளக்கும் கருவி ஹைக்ரோ மீட்டர் ( ஈர நிலைமானி ) என்று அழைக்கப்படும்
Question 86 |
மழை உருவாகுவதில் உள்ள படிநிலைகளில் கீழே உள்ளவற்றில் எது தவறானது?
வெட்ட வெளியில் உள்ள நீரானது நீராவியாக மாறும், அது காற்றில் ஈரப்பதத்தை உண்டாக்கும். | |
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 75% அடையும் போது காற்று பூரித நிலையை அடையும். | |
பூரித நிலையில் வெப்பநிலை பனிப்புள்ளி நிலைக்கு சென்றுவிடும். | |
இந்த நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருக்கமாக மேகங்கள் மற்றும் மலைக்கு வித்திடும். |
Question 86 Explanation:
(குறிப்பு - காற்று பூரித நிலை என்பது, காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்போது உருவாகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காட்டில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கு உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படுகிறது)
Question 87 |
காற்றின் அழுத்தம் குறைவதால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு...............
குறையும் | |
அதிகரிக்கும் | |
மாறிக்கொண்டே இருக்கும் | |
மாறாது |
Question 87 Explanation:
(குறிப்பு - காற்றின் அழுத்தம் குறைவதனால் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவு குறையும். மிக உயரமான இடங்களில் காற்றின் அழுத்தமும், காற்றில் ஆக்ஸிஜன் அளவும் மிகவும் குறைவாக இருக்கும்)
Question 88 |
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரை படங்களின் தொகுப்பை தொகுத்தவர் யார்?
அல்-பலாஹி | |
எரக்டஸ் | |
தாலமி | |
மெர்கட்டர் |
Question 88 Explanation:
( குறிப்பு - அல்பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அரேபியா நாட்டு பயணிகளிடமிருந்து காலநிலை பற்றிய விவரங்களை சேகரித்து, காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டார்)
Question 89 |
கோள் காற்றுக்கு தவறான எடுத்துக்காட்டு எது?
வியாபார காற்று | |
மேலைக் காற்று. | |
துருவ காற்று | |
கடல் காற்று |
Question 89 Explanation:
(குறிப்பு - கோள் காற்றுகள் ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்று ஆகும்)
Question 90 |
பருவக்காற்று குறித்த தவறான கூற்று எது?
பருவக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும் | |
கோடை காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் | |
குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் | |
கடல் காற்று பருவக்காற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். |
Question 90 Explanation:
(குறிப்பு - கடல் காற்று என்பது ஒரு பிரதேச காற்று ஆகும். பிரதேச காற்றுகள் என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும்)
Question 91 |
பொருத்துக
- காற்று - a) தலக்காற்றுகள்
- பருவ காற்று - b) வியாபார காற்று
- பிரதேசக்காற்று - c) கோடைகாலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது
- கோள் காற்று - d) கிடைமட்டமாக நகர்தல்
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-d, III-b, IV-a | |
I-d, II-b, III-a, IV-c | |
I-b, II-a, III-b, IV-d |
Question 91 Explanation:
(குறிப்பு - காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை கோள் காற்றுகள், பருவகால காற்றுகள் மற்றும் தலக்காற்று ஆகும்)
Question 92 |
காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவியின் பெயர் என்ன?
காற்று நிலைமானி | |
பியோபோர்டு அளவை. | |
பாரோமீட்டர் | |
அனிமோமீட்டர் |
Question 92 Explanation:
(குறிப்பு - பியோ போர்டு அளவை என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது. இது 1805ஆம் ஆண்டு பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் உருவாக்கப்பட்டது)
Question 93 |
மீட்டிரோ க்ராப் என்ற கருவி கொண்டு கீழ்க்கண்டவற்றுள் எந்த வானிலை கூற்றினை பதிவு செய்ய முடியும்?
காற்றின் திசை, வேகம் | |
சூரிய வெளிச்சம் | |
மழை | |
இவை அனைத்தும் |
Question 93 Explanation:
(குறிப்பு - மீட்டிரோகிராப் என்ற கருவி மூலம் காற்றின் திசை, வேகம் சூரிய வெளிச்சம், மழை ஆகிய வானிலை கூறுகளை வரை கோட்டு படத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். இது ட்ரிபிள் ரெஜிஸ்டர் எனவும் அழைக்கப்படுகிறது)
Question 94 |
வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவு எதைப் பொறுத்து அமைகிறது?
வெப்பநிலை | |
காற்று திசை | |
நீராவி | |
இது எதுவும் இல்லை |
Question 94 Explanation:
( குறிப்பு - ஈரப்பதம் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு வெப்பநிலையின் அளவைப் பொறுத்து அமைகிறது)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 94 questions to complete.