Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் Online Test 7th Social Science Lesson 23 Questions in Tamil

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் Online Test 7th Social Science Lesson 23 Questions in Tamil

Congratulations - you have completed வரி மற்றும் அதன் முக்கியத்துவம் Online Test 7th Social Science Lesson 23 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"சூரியன், தான் பூமியிடமிருந்து உறிஞ்சிய ஈரப்பதத்தைப் பன்மடங்கு திருப்பித் தருகிறது. அதுபோல, மன்னன் தன் குடிமக்களிடம் வரிவசூலித்து, அவர்களின் நலத்திற்காகவே மீண்டும் செலவு செய்கிறான்." என்று கூறியவர்
A
கம்பர்
B
கபிலர்
C
காளிதாஸ்
D
இளங்கோவடிகள்
Question 2
  • கூற்று 1: வழக்கமாக அரசால் விதிக்கப்படும் வரியையே வரிவிதிப்பு என்கிறோம்.
  • கூற்று 2: வரி விதிப்பு என்பது வருமானம், முதலீட்டால் பெறும் ஆதாயம், சொத்து போன்ற அனைத்து வகைக்கும் விதிக்கப்படும் வரியைக் குறிக்கும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 2 Explanation: 
(குறிப்பு: வரி விதிப்பு என்பது பெயராகவோ செயலாகவோ இருக்கலாம். ஆயினும், அது செயல்பாட்டையே குறிக்கிறது. அச்செயலால் விளையும் வருவாயையே 'வரிகள்’ என்கிறோம்.)
Question 3
"வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும். இதில், பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை. இப்பங்களிப்பின் மூலம், பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.” என்ற கூற்று யாருடையது?
A
ஆடம் ஸ்மித்
B
அமர்த்தியாசென்
C
ஜெகதீஷ் பகவதி
D
சேலிக்மன்
Question 3 Explanation: 
(குறிப்பு: வரி செலுத்துவோர், எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும்.)
Question 4
வரியாகச் செலுத்தப்படும் மொத்தத்தொகையும் எங்கு இருப்பு வைக்கப்படுகிறது?
A
தேசியமயமாக்கப்பட்ட வங்கி
B
ரிசர்வ் வங்கி
C
அரசு கருவூலம்
D
தனியார் வங்கி
Question 4 Explanation: 
(குறிப்பு: வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிருணயிப்பது என்பதையும் அரசே தீர்மானிக்கிறது.)
Question 5
ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்புக் கோட்பாடுகள் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 5 Explanation: 
(குறிப்பு: நால்வகையான வரிவிதிப்புக் கோட்பாடுகள் சமத்துவ விதி உறுதிப்பாட்டு விதி வசதி விதி சிக்கன விதி)
Question 6
மக்கள் தத்தமது வசதிக்கேற்ற வகையில் செலுத்துவதற்காக அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று __________விதியாகும்.
A
சிக்கன விதி
B
வசதி விதி
C
உறுதிப்பாட்டு விதி
D
சமத்துவ விதி
Question 6 Explanation: 
(குறிப்பு: மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதையே இவ்விதி விளக்குகிறது.)
Question 7
__________விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.
A
சிக்கன விதி
B
வசதி விதி
C
உறுதிப்பாட்டு விதி
D
சமத்துவ விதி
Question 7 Explanation: 
(குறிப்பு: வசூலிக்கப்படும் வரியின் மூலம், வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை, இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது.)
Question 8
  • கூற்று 1: வசதி விதியில், வரி செலுத்துவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில், வரி விதிக்கப்ட்டு வசூலிக்கப்படுகிறது.
  • கூற்று 2: சிக்கன விதியின் படி வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 8 Explanation: 
(குறிப்பு: சிக்கன விதியின்படி, வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.)
Question 9
வரிவிதிப்பில் எத்தனை வகைகள் உள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 9 Explanation: 
(குறிப்பு: வரிவிதிப்பு வகைகள் விகிதாச்சார வரி வளர் வீத வரி தேய்வு வீத வரி)
Question 10
வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரிவிதிப்பது ___________ ஆகும்.
A
வளர் வீத வரி
B
தேய்வு வீத வரி
C
விகிதாச்சார வரி
D
சமத்துவ வரி
Question 10 Explanation: 
(குறிப்பு: விகிதாச்சார வரியில் வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.)
Question 11
ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரிவிகிதமும் அதிகரிப்பது __________ ஆகும்.
A
வளர் வீத வரி
B
தேய்வு வீத வரி
C
விகிதாச்சார வரி
D
சமத்துவ வரி
Question 11 Explanation: 
(குறிப்பு: வளர் வீத வரியில் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க வரிவிகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.)
Question 12
"வருமானத்திற்கு 5% வரி விகிதம் விதிக்கப்படுகிறது, ஒருவர் ரூபாய் 1000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவர் ரூபாய் 50 செலுத்த வேண்டும். மற்றொருவர், ரூபாய் 5000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவரும் ரூபாய் 50 செலுத்த வேண்டும்." இவ்வகை வரி விதிப்பு முறை கீழ்க்கண்ட எவற்றை சார்ந்தது
A
வளர் வீத வரி
B
தேய்வு வீத வரி
C
விகிதாச்சார வரி
D
சமத்துவ வரி
Question 12 Explanation: 
(குறிப்பு: விகிதாச்சார வரி என்பது, வரி செலுத்துபவர்களின் வருமானவரி விகிதத்தை மாற்றாமல் விட்டுவிடுகிறது.)
Question 13
"ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில், அதற்கான வரிவிகிதம் 10%. ஆகவே அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும். இதனைப் போலவே, மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25%. அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2500. வேறொருவர் ரூபாய் 100,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50% எனில் அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000. " இவ்வகை வரி விதிப்பு முறை கீழ்க்கண்ட எவற்றை சார்ந்தது
A
வளர் வீத வரி
B
தேய்வு வீத வரி
C
விகிதாச்சார வரி
D
சமத்துவ வரி
Question 14
  • கூற்று 1: வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது.
  • கூற்று 2: அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 14 Explanation: 
(குறிப்பு: சுகாதார நலவாழ்வுக்காக செலவழிக்கப்படும் தொகை, வரிப்பணத்தில் இருந்தே பெறப்படுகிறது. வரிகள் இல்லையெனில் இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம்.)
Question 15
அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக அளவிலான தொகை ___________ கு செலவிடப்படுகிறது.
A
நலவாழ்வு
B
ஆட்சி நிர்வாகம்
C
கல்வி
D
வீட்டுவசதி
Question 15 Explanation: 
(குறிப்பு: மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.)
Question 16
வரிப்பணம் கீழ்க்கண்ட எவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது?
  1. நலவாழ்வு
  2. ஆட்சி நிர்வாகம்
  3. கல்வி
  4. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டுவசதி போன்ற பிற.
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
அனைத்தும்
Question 16 Explanation: 
(குறிப்பு: வரிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குத் (GDP) தம் பங்களிப்பை வழங்குகின்றன.)
Question 17
அதிகமாக வருமானம் ஈடுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி ___________ வரியாகும்.
A
வளர் வீத வரி
B
தேய்வு வீத வரி
C
விகிதாச்சார வரி
D
சமத்துவ வரி
Question 17 Explanation: 
(குறிப்பு: தேய்வு வீத வரியில் அதிக அளவு வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும், குறைந்த அளவு வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரி விகிதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.)
Question 18
கீழ்க்கண்டவற்றுள் நேர்முக வரி அல்லாதது எது?
A
செல்வ வரி
B
நிறுவன வரி
C
மூலதன ஆதாய வரி
D
விற்பனை வரி
Question 18 Explanation: 
(குறிப்பு: வருமானவரி, செல்வ வரி, நிறுவன வரி, மூலதன ஆதாய வரி ஆகியவை அரசுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் நேர்முக வரிகளாகும்.)
Question 19
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது _________.
A
மாட்சி
B
அரசு
C
மக்கள்
D
அமைச்சர்
Question 19 Explanation: 
(குறிப்பு: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.)
Question 20
கீழ்க்கண்டவற்றுள் மறைமுக வரிகள் எனவ?
  1. சேவை வரி
  2. பொழுதுபோக்கு வரி
  3. சுங்க வரி
  4. மதிப்பு கூட்டு வரி
  5. ஆடம்பர வரி
A
அனைத்தும்
B
1, 3, 4
C
2, 4, 5
D
2, 3, 4, 5
Question 20 Explanation: 
(குறிப்பு: உற்பத்தி அல்லது விற்பனைக்காகப் பொருள் மற்றும் சேவை மீது விதிக்கப்படும் வரி மறைமுகவரி ஆகும். கலால் வரி, விற்பனை வரி ஆகியவையும் மறைமுக வரிகளில் அடங்கும்.)
Question 21
'நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்' என்னும் தனி வாரியம் (CBDT) எந்த சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது?
A
மத்திய வருமானச் சட்டம் 1951
B
மத்திய வருமானச் சட்டம் 1958
C
மத்திய வருமானச் சட்டம் 1969
D
மத்திய வருமானச் சட்டம் 1963
Question 22
இன்றய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள்  எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 22 Explanation: 
(குறிப்பு: இருவகை வரிகள் நேர்முக வரி மறைமுக வரி)
Question 23
நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரி _________.
A
சொத்துவரி
B
நிறுவன வரி
C
விற்பனை வரி
D
தொழில் வரி
Question 23 Explanation: 
(குறிப்பு: காப்புரிமை, வட்டி, இந்தியாவிலுள்ள மூலதனச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம், தொழில்நுட்பப் பணிகளுக்காகவும், பங்கீடுக்காகவும் பெறப்படும் கட்டணங்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது.)
Question 24
  • கூற்று 1: ஒருவர் வைத்துள்ள சொத்துகளின் மதிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி, சொத்துவரி ஆகும்.
  • கூற்று 2: ஒவ்வோர் ஆண்டும் நடைமுறையிலுள்ள சந்தை மதிப்புகளைப் பொருத்து, அதே அளவில் வரி வசூலிக்கப்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 24 Explanation: 
(குறிப்பு: முன்னோர்களின் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி, சொத்து வரியாகும். இத்தகைய வரிகளை அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.)
Question 25
ஒருவர் வெகுமதியாக பெறும் பொருள்களின் மதிப்புக்கேற்ப விதிக்கப்படும் வரி __________.
A
வருமான வரி
B
வருமான வரி
C
சொத்து வரி
D
அன்பளிப்பு வரி
Question 26
ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை, மற்றொருவர் மீது மாற்ற இயலும் முறையையே ___________ என்கிறோம்.
A
நேர்முக வரி
B
மறைமுக வரி
C
மதிப்புக் கூட்டு வரி
D
சரக்கு மற்றும் சேவை வரி
Question 26 Explanation: 
(குறிப்பு: எடுத்துக்காட்டு ஒரு பொருளை (மகிழுந்து / இரு சக்கர வண்டி போன்றவை) விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அந்தப் பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார். அவரிடமிருந்து அந்த பொருளை யார் வாங்குகிறார்களோ, அவர்களே பின்னர் அந்தப் பொருளுக்கான வரிச்சுமை முழுவதையும் ஏற்கிறார்கள்.)
Question 27
சேவை வரியில், சேவையைப் பெறுபவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு, ___________க்கு செலுத்தப்படுகிறது.
A
மத்திய அரசு
B
மாநில அரசு
C
மத்திய மற்றும் மாநில அரசு
D
ரிசர்வ் வங்கி
Question 27 Explanation: 
(குறிப்பு: சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும்.)
Question 28
  • கூற்று 1: விற்பனை செய்யப்படும் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி, விற்பனை வரி.
  • கூற்று 2: விற்பனை வரி என்பது ஒரு நேர்முக வரியாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 28 Explanation: 
(குறிப்பு: விற்பனை வரி ஒரு மறைமுக வரியாகும். ஏனெனில், பொருள் விற்பனை செய்பவர் செலுத்த வேண்டிய வரிச்சுமை, அந்தப் பொருளை வாங்குபவர் மீது சுமத்தப்படுகிறது.)
Question 29
மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் பொருள்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய வரி ___________ ஆகும்.
A
அன்பளிப்பு வரி
B
பொழுதுபோக்கு வரி
C
ஆயத்தீர்வை வரி
D
சேவை வரி
Question 29 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் கலால் (ஆயத்தீர்வை) வரி மத்திய அரசால் சுமத்தப்படுகிறது.)
Question 30
பொழுதுபோக்கு வரி யாரால் வசூலிக்கப்படுகிறது?
A
மத்திய அரசு
B
மாநில அரசு
C
மத்திய மற்றும் மாநில அரசுகள்
D
ஊராட்சி அமைப்புகள்
Question 30 Explanation: 
(குறிப்பு: பொழுதுபோக்குவரிகளுக்கு (எ.கா) - திரைப்படங்களுக்கான கட்டணங்கள், காணொலி விளையாட்டுகள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், விளையாட்டு தொடர்பான செயல்பாடுகள் போன்றவை.)
Question 31
சரக்கு மற்றும் சேவை வரி கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது?
  1. விற்பனை
  2. உற்பத்தி
  3. பயன்பாடு
  4. பொருட்களின் அளவு
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 31 Explanation: 
(குறிப்பு: தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.)
Question 32
கீழ்க்கண்டவற்றுள் சரக்கு மற்றும் சேவை வரிகளின் வகைகள் எவை?
  1. மாநில சரக்கு மற்றும் சேவை வரி
  2. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி
  3. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி
A
1, 2
B
2, 3
C
1, 3
D
1, 2, 3
Question 33
__________எழுதிய அர்த்தசாஸ்திரத்தின் கூற்றுப்படி, பண்டைய காலங்களில் வரிவிதிக்கப்பட்டு ரொக்கமாகவும், வேறு வகையாகவும் சேகரிக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.
A
பாணர்
B
காளிதாசர்
C
கெளடில்யர்
D
தெனாலிராமன்
Question 34
மறைமுக வரிகளின் நவீன வரலாறு ________ நூற்றாண்டின் முற்பகுதியில் மத்திய கலால் வரி விதிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது.
A
17
B
18
C
19
D
20
Question 34 Explanation: 
(குறிப்பு: 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உப்பு, சர்க்கரை, வாகன எரிபொருள் போன்றவற்றுக்கு கலால்வரி விதிக்கப்பட்டது.)
Question 35
இந்தியாவில் மதிப்புக்கூட்டு வரி (VAT) முதன்முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
பஞ்சாப்
B
டெல்லி
C
குஜராத்
D
ஹரியானா
Question 35 Explanation: 
(குறிப்பு: 2003ஆம் ஆண்டு ஹரியானாவில் VAT அறிமுகப்படுத்தப்பட்டது.)
Question 36
பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் _________ ஆண்டு VAT அறிமுகப்படுத்தப்பட்டது.
A
2004
B
2005
C
2006
D
2007
Question 37
சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
A
2016 ஜூன் 1
B
2017 ஜூன் 30
C
2017 ஜூலை 31
D
2017 ஜூலை 1
Question 37 Explanation: 
(குறிப்பு: சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது நாம் வாங்கும் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி ஆகும்.)
Question 38
  • கூற்று 1: அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும்.
  • கூற்று 2: சாலை/பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும் குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் சுங்கம் மற்றும் சாலை வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 39
பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி அல்ல?
A
சேவை வரி
B
மதிப்பு கூட்டப்பட்ட வரி
C
சொத்து வரி
D
சுங்க வரி
Question 39 Explanation: 
(குறிப்பு: அரசுக்கு நேரடியாக வரி செலுத்தும் ஒருவரின் வருமானம் அல்லது சொத்துகளின் மீது சொத்து வரிவிதிக்கப்படுகிறது.)
Question 40
பின்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
A
சேவை வரி
B
செல்வ வரி
C
விற்பனை வரி
D
வளர்விகித வரி
Question 40 Explanation: 
(குறிப்பு: உண்மையான சொத்துவரி, தனியாள் சொத்துவரி, வருமானவரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவை நேர்முக வரிகளாகும்.)
Question 41
தூய்மை பாரத வரி எப்போது தொடங்கப்பட்டது?
A
2014 அக்டோபர் 2
B
2015 அக்டோபர் 2
C
2014 நவம்பர் 15
D
2015 நவம்பர் 15
Question 41 Explanation: 
(குறிப்பு: இந்திய அரசால், தூய்மை பாரத வரி விதிக்கப்படுகிறது. இதன் வரி விகிதம் 0.5% ஆகும்.)
Question 42
தற்போது _______க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.
A
8%
B
10%
C
14%
D
15%
Question 43
நேர்முக வரி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
வரி செலுத்துவோர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாது.
B
தனியாள் மற்றும் நிறுவனங்கள் பெறும் வருமானங்கள் மீது வரிவிதிக்கப்படுகிறது.
C
பணவீக்க அழுத்தம் உண்டு.
D
வரித் தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன.
Question 43 Explanation: 
(குறிப்பு: நேர்முக வரியில் பணவீக்க அழுத்தம் இல்லை. நெகிழ்வுத் தன்மை குறைவு.)
Question 44
மறைமுக வரி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும்.
B
பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரிவிதிக்கப்படுகிறது.
C
பணவீக்க அழுத்தம் உண்டு.
D
வரித்தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன.
Question 44 Explanation: 
(குறிப்பு: மறைமுக வரியில் வரித்தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன. நெகிழ்வுத் தன்மை அதிகம்.)
Question 45
  • கூற்று 1: நிதி நிர்வாகத்திற்கு வருவாயை குறைப்பதே வரி விதிப்பதன் நோக்கமாகும்.
  • கூற்று 2: வரி விதிப்பு, நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 45 Explanation: 
(குறிப்பு: நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும்.)
Question 46
ஓர் அரசின் திறனுக்கேற்ப வரிகளை உயர்த்துவது, அதன் ___________ என்றழைக்கப்படுகிறது.
A
நிதி மேம்பாடு
B
வரிவிகித உயர்வு
C
நிதித் திறன்
D
பணவீக்கம்
Question 46 Explanation: 
(குறிப்பு: போக்குவரத்து, சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வு திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி, கலையும் பண்பாடும், பொதுப்பணி, பொதுக் காப்பீடு போன்ற பொருளாதார உள்கட்டமைப்புகளுக்காக வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது.)
Question 47
  • கூற்று 1: செலவுகள், வரி வருவாயை விட அதிகமாகும்போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது.
  • கூற்று 2: வாராக் கடன்களைத் திரட்டுவதற்கு, வரிகளிலிருந்து ஒருபகுதியும் செலவழிக்கப்படலாம்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 47 Explanation: 
(குறிப்பு: நலவாழ்வுக்கும் பொதுப்பணிகளுக்கும் தேவைப்படும் நிதிகளுக்கு வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது.)
Question 48
கீழ்க்கண்டவற்றுள் எவை பொதுப்பணிகளுள் அடங்கும்?
  1. கல்வித்திட்டங்கள்
  2. வயதானவர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள்
  3. வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான ஊக்கத்தொகைகள்
  4. பொதுப்போக்குவரத்துகள், ஆற்றல், நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள்.
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3, 4
D
1, 3, 4
Question 49
பொருத்துக.
  1. வரி விதிப்புக் கொள்கை       i) நேர்முக வரி
  2. சொத்து வரி                             ii) சரக்கு மற்றும் சேவை வரி
  3. சுங்க வரி                                 iii) ஆடம்ஸ்மித்
  4. 01.07.2017                                 iv) குறைந்த நெகிழ்ச்சி உடையது
  5. நேர்முக வரி                             v) மறைமுக வரி
A
ii iii iv v i
B
iii iv v i ii
C
iii i v ii iv
D
iv i v ii iii
Question 50
GST மத்திய அரசால் வசூலிக்கப்பட்டாலும், கீழ்க்கண்ட எந்தப் பொருட்கள் மீதான வரியை மாநில அரசு தனித்தனியாக வசூலிக்கிறது?
  1. பெட்ரோலியப் பொருட்கள்
  2. ஆல்கஹால்
  3. மின்சாரம்
  4. காய்கறி, உணவு தானியங்கள்
A
அனைத்தும்
B
1, 2
C
1, 2, 4
D
1, 3, 4
Question 50 Explanation: 
(குறிப்பு: காய்கறிகள், உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அத்தியாவசிய பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.)
Question 51
GST வரி எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது?
A
3
B
4
C
5
D
6
Question 51 Explanation: 
(குறிப்பு: 0%, 5%, 12%, 18%, 28% என ஐந்து அடுக்குகளாக GST பிரிக்கப்பட்டுள்ளது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!