Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Online Test 6th Social Science Lesson 9 Questions

வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Online Test 6th Social Sc

Congratulations - you have completed வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Online Test 6th Social Sc. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

வேத காலம் என்பது எந்த காலகட்டம் (பொ..மு)? 

A
1600 – 500
B
1500 – 500
C
1600 – 600
D
1500 – 600
Question 1 Explanation: 
சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. ஆரியரின் வருகையால் வேத காலம் எனும் கால கட்டம் தொடங்கியது. வேதங்கள் என்பதிலிருந்து இப்பெயரை பெற்றது. முன் வேத காலம் (1500-1000), பின் வேத காலம் (1000-600).
Question 2
கீழ்கண்டவற்றுள் ஆரியர்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. ஆரியர்கள் இந்தோ ஆரிய மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள்.
  2. கால்நடை மேய்ப்பது இவர்களின் முதன்மையான தொழிலாகும்.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 2 Explanation: 
கால்நடைகளை மேய்ப்பது இவர்களின் முதன்மைத் தொழில் என்றாலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் இவர்கள் பின்பற்றினர்.
Question 3

ஆரியர்கள் கீழ்கண்ட எந்த கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்

A
கைபர்
B
போலன்
C
நாதுலா
D
ரோடாங்
Question 3 Explanation: 
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாக குடிபெயர்ந்து இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
Question 4

கீழ்கண்டவற்றுள் தொடக்க வேத காலத்தை சார்ந்த பகுதிகள் யாவை

  1. தட்ச சீலம்
  2. அயோத்தி
  3. இந்திரப்பிரஸ்தம்
  4. ஹரப்பா
A
1 & 2
B
2 & 3
C
3 & 4
D
1 & 4
Question 4 Explanation: 
வேத காலம் தொடக்க வேதகாலம் மற்றும் பின் வேதகாலம் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது. அயோத்தி மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவை பின் வேதகாலத்தைச் சார்ந்த பகுதிகள் ஆகும்.
Question 5

நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும் வேளாண்  முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது

A
இயற்கை வேளாண் முறை
B
செயற்கை வேளாண் முறை
C
அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை
D
எதுவும் இல்லை
Question 5 Explanation: 
அந்நிலத்தில் குறுகிய கால கட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றோரிடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.
Question 6

கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு

  1. ஏறத்தாழ  கி. மு 1000 ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்
  2. இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றை பரவலாக பயன்படுத்தினர்
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 7

ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது

A
குஜராத்
B
பஞ்சாப்
C
கங்கை சமவெளி
D
மத்திய இந்தியா
Question 7 Explanation: 
அப்போது அப்பகுதி சப்தசிந்து அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்று அழைக்கப்பட்டது. ரிக் வேத கால ஆரியர்கள் நாடோடிகள் ஆவர். அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
Question 8

வேதங்கள் எத்தனை?

2

A
2
B
3
C
4
D
6
Question 8 Explanation: 
வேதங்கள் நான்கு வகைப்படும். அவை ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வன ஆகும். இதில் ரிக் வேதம் முன் வேத காலத்தை சேர்ந்தது. இதர வேதங்கள் பின் வேத காலத்தை சேர்ந்தவை ஆகும்.
Question 9

வேத கால இலக்கியங்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்

A
2
B
3
C
4
D
5
Question 9 Explanation: 
அவை சுருதிகள் மற்றும் ஸ்மிருதிகள் ஆகும். நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும். ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்கள் ஸ்மிருதி என்பதாகும்.
Question 10

சுருதி என்பது ______.

A
எழுதுதல்
B
எழுதப்பட்ட பிரதி
C
வரைதல்
D
கேட்டல்
Question 10 Explanation: 
சுருதி கேட்டல் அல்லது எழுதபடாதது என்னும் பொருள் கொண்டது. அவைகள் புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை என கருதப்பட்டவை. இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன.
Question 11

ஸ்மிருதி என்பதன் பொருள்  _____.

A
வரைதல்
B
எழுதப்பட்ட பிரதி
C
கேட்டல்
D
எழுதுதல்
Question 11 Explanation: 
ஸ்மிருதி நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை, ஸ்மிருதி என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும். ஸ்மிருதி என்பவை இதிகாசங்கள், புராணங்கள் ஆகும். மேலும் ஸ்மிருதியின் சூத்திரங்கள் தர்ம சூத்திரம், மனுஸ்மிருதி மற்றும் நாரத ஸ்மிருதி ஆகும்.
Question 12

சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் எந்த உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது

A
முண்டக உபநிடதம்
B
மாண்டூக்கிய உபநிடதம்
C
மைத்திரி உபநிடதம்
D
கதா உபநிடதம்
Question 12 Explanation: 
இதன் பொருள் வாய்மையே வெல்லும் என்பதாகும். இது இந்தியாவின் தேசிய குறிக்கோள் ஆகும்.
Question 13

ரிக்வேத கால அரசியலின் அடிப்படை அலகு எது

A
தனிமனிதன்
B
குடும்பம்
C
குலம்
D
கிராமம்
Question 13 Explanation: 
ரிக் வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். குலம் என்பதே அரசியலின் அடிப்படை அலகாகும். இதன் தலைவர் குலபதி ஆவார்.
Question 14

ரிக் வேதகாலத்தில் இனக் குழுவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்

A
குலபதி
B
விசயபதி
C
ராஜன்
D
கிராமணி
Question 14 Explanation: 
பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமம் ஆகும். கிராமத்திற்கு கிராமணி தலைவராவார். பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு விஸ் ( குலம் ) என்று அழைக்கப்பட்டது. இதன் தலைவர் விசயபதி ஆவார்.
Question 15

இனக் குழுவின் தலைவர்  ஜனஸ்யகோபா என்பதன் பொருள்

A
தலைவர்
B
மக்களின் தலைவர்
C
பாதுகாவலர்
D
மக்களின் பாதுகாவலர்
Question 15 Explanation: 
ரிக் வேத காலத்தில் பல இனக் குழு அரசுகள்( ராஷ்டிரம் ) இருந்தன. எடுத்துக்காட்டு பரதர், மத்சயர், புரு.
Question 16

கீழ்க்கண்ட  அதிகார மன்றங்களுள் பழமையானது எது

A
விதாதா
B
சபா
C
சமிதி
D
கணா
Question 16 Explanation: 
தனது இனக்குழுவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பதே ராஜனின் முக்கிய பொறுப்பாகும். அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புக்களால் கட்டுப்படுத்தப்பட்டது. விதாதா என்றால் இனக்குழுவின் பொதுக்குழு என்பதாகும்.
Question 17

சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு

  1. சபா  - மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு
  2. சமிதிமூத்தோர்களை கொண்ட மன்றம்
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 17 Explanation: 
சபா - மூத்தவர்களை கொண்ட மன்றம், சமிதி - மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.
Question 18
அரசியல், பொருளாதாரம், ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு உதவியாக இருந்தவர் யார்?
A
புரோகிதர்
B
அமைச்சர்
C
சேனானி
D
கிராமணி
Question 18 Explanation: 
அரசர் தனக்கு உதவி செய்வதற்காக புரோகிதர் ஒருவரை பணியில் அமர்த்திக் கொண்டார்.
Question 19

பின் வேத காலம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. பின் வேதகாலத்தில் சமிதி, சபா ஆகியவை அதிக முக்கியத்துவம் பெற்றன
  2. விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 19 Explanation: 
பின் வேதகாலத்தில் பல ஜனாக்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாயின. சபா, சமிதி ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. புதிய அரசுகள் தோன்றின.
Question 20
வேத காலத்தில்  பாலி  என்பது _____
A
விவசாய நிலம்
B
மக்கள் அரசனுக்கு கொடுத்த காணிக்கை
C
அரசன் மக்களுக்கு கொடுத்த காணிக்கை
D
மத வரி
Question 20 Explanation: 
பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கை ஆகும். பின் வேதகாலத்தில் இது ஒரு வரியாக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது. ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாக செலுத்த வேண்டும்.
Question 21

தொடக்க வேதகால சமுதாயத்திற்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டன

A
2
B
3
C
4
D
6
Question 21 Explanation: 
அவை பொது மக்கள் விஸ் என்றழைக்கப்பட்டனர். போர்வீரர்கள் சத்ரியர்கள் எனவும் மதகுருமார்கள் பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
Question 22

பின் வேத கால சமுதாயத்திற்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டன

A
2
B
3
C
4
D
6
Question 22 Explanation: 
பிற்கால கட்டத்தில் திறன்கொண்ட ஆரியர் அல்லாத மக்களை ஆரியர்கள் தமது சமுதாய ஏற்பட்டுக்குள் கொண்டு வர நேர்ந்தது. அப்போது நான்கு இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது. மதகுருவான பிராமணர், போரிடும் சத்ரியர், நிலவுடைமையாளர்களான வைசியர், வேலைத் திறன் கொண்ட சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் கொண்ட சமூக அமைப்பு உருவானது.
Question 23

ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. இவர்கள் குழந்தை திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை
  2. இவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 23 Explanation: 
ரிக் வேதகாலத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார். பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினர். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள தடைகள் இல்லை. பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்த பங்கும் வகிக்கவில்லை.
Question 24

பின் வேத காலத்தில் பெண்களின் நிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
  2. சாதிகளுக்கு இடையிலான திருமணம் ஊக்குவிக்கப்பட்டது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 24 Explanation: 
பின் வேதகாலத்தில் சமூகத்தில் மட்டுமன்றி குடும்பத்திலும் கூட பெண்களின் பங்கும் அவர்களுக்கான நிலையும் குறைந்துபோனது. பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது. திருமணம் தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன. கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை. சாதிகளுக்கு இடையிலான திருமணம் நிராகரிக்கப்பட்டது.
Question 25

கீழ்க்கண்ட எந்த நிற மண்பாண்டம் ரிக்வேத காலத்தைச் சார்ந்தது

A
பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டம்
B
கருப்பு வெள்ளை நிற மண்பாண்டம்
C
சிவப்பு மஞ்சள் நிற மண்பாண்டம்
D
சிவப்பு கருப்பு நிற மண்பாண்டம்
Question 25 Explanation: 
வேதக்கால பொருளாதாரமானது கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும் கலந்ததாகும். ரிக் வேத கால ஆரியர்களின் முதன்மை தொழில் கால்நடை மேய்ப்பது என்றாலும் மரவேலை செய்வோரும், தேர்கள் செய்வோரும், மண்பாண்டங்கள் செய்வோரும், உலோக வேலை செய்வோரும், துணி நெய்வோரும், தோல் வேலை செய்பவர்களும் இருந்தனர்.
Question 26

வேதகால மக்களின் முதன்மை பயிர் எது

A
கோதுமை
B
பருத்தி
C
நெல்
D
பார்லி
Question 26 Explanation: 
சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாக குடியேறிய பின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினர். யவா என்ற பார்லி அவர்களின் முதன்மைப் பயிராகும். கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்களால் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக்வேத காலத்தில் அவைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் இரு போகம் சாகுபடி செய்யப்பட்டது.
Question 27

பின் வேத காலப் பண்பாடு எவ்வாறு அழைக்கப்பட்டது

A
வர்ணம் தீட்டப்பட்ட சிவப்பு நிற மண்பாண்ட பண்பாடு
B
வர்ணம் தீட்டப்பட்ட மஞ்சள் நிற மண்பாண்ட பண்பாடு
C
வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மண்பாண்ட பண்பாடு
D
வர்ணம் தீட்டப்பட்ட கருப்பு நிற மண்பாண்ட பண்பாடு
Question 27 Explanation: 
பின் வேத காலத்தில் ஆரியர்கள் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர். தொடக்க வேதகால கைவினைஞர்களோடு நகை செய்பவர், சாயத் தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும் சமூகத்தில் இடம்பெற்றிருந்தனர்.
Question 28

சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு

  1. தங்கம்                                     - சியாமா 
  2. இரும்பு                                    - ஹிரண்யா 
  3. தாமிரம் அல்லது செம்பு    அயாஸ் 
A
1
B
2
C
3
D
எதுவும் இல்லை
Question 28 Explanation: 
ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் தங்கம் – ஹிரண்யா; இரும்பு – சியாமா ஆகும்.
Question 29

பின்வருவனவற்றுள் வெள்ளி நாணயத்தின் பெயர் எது

A
கிருஷ்ணாலா
B
நிஷ்கா
C
சத்மனா
D
தினாராஸ்
Question 29 Explanation: 
பின் வேதகாலத்தில் வணிகம் பெருகியது. பண்டமாற்று முறை பரவலாக காணப்பட்டது (பொருள் கொடுத்துப் பொருள் வாங்குவது). அவர்கள் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.
Question 30

ரிக்வேத காலத்தில் வணங்கிய பெண் தெய்வம் உஷா என்பதன் பொருள் என்ன

Question 30 Explanation: 
ரிக்வேத கால ஆரியர்கள் பெரும்பாலும் நிலம் மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர். பிருத்வி(நிலம்), அக்னி( நெருப்பு), வாயு(காற்று), வருணன்(மழை), இந்திரன்(இடி) போன்றவற்றை வழங்கினர். மேலும் அதிதி ( நித்திய கடவுள் ), உஷா( விடியற்காலை தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர்.
Question 31

ரிக்வேத காலத்தில் மத முறை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. அக்காலத்தில் கோவில்கள் இல்லை
  2. பசு புனிதமான விலங்காக கருதப்பட்டது
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 31 Explanation: 
ரிக்வேத கால மக்களின் மதம் சடங்கு முறைகளை மையமாகக் கொண்டது. வேத மந்திரங்களை பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது. குழந்தைகள்(பிரஜா), பசு( கால்நடைகள் ), செல்வம் ( தனா ) ஆகியவற்றின் நலனுக்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர். சிலை வழிபாடும் வழக்கத்தில் இல்லை.
Question 32

பின் வேதகாலத்தில் பிரஜாபதி என்பவர்

A
படைப்பவர்
B
காப்பவர்
C
அழிப்பவர்
D
கொடுப்பவர்
Question 32 Explanation: 
பின்வேத காலத்தில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும், அது பரம்பரை தொழிலாகவும் ஆனது. ஆரியரல்லாத கடவுள்களும் ஏற்பட்டிருக்கலாம். இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர். பிரஜாபதி( படைப்பவர் ), விஷ்ணு ( காப்பவர் ), ருத்ரன் ( அழிப்பவர் ) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர். வேள்விகளும், சடங்குகளும் மிகவும் விரிவடைந்தன.
Question 33

கீழ்கண்டவற்றுள் குருகுல கல்விமுறை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. குருகுலம் என்னும் சொல் குரு( ஆசிரியர் ), குலம் ( குடும்பம் அல்லது வீடு ) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்
  2. வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களை கற்றனர்
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 33 Explanation: 
இம்முறையில் மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து அவருக்கு சேவை செய்வதோடு கல்வியும் கற்று அறிவை பெருக்கிக் கொள்வர். இரு பிறப்பாளர்கள் மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாக சேர்க்கப்படுவர். பெண்களுக்கு பொதுக்கல்வி அளிக்கப்படவில்லை.
Question 34
பொருத்துக.
  1. பிரம்மச்சரியம் - 1. மாணவப் பருவம்
  2. கிரகஸ்தம் – 2. திருமண வாழ்க்கை
  3. வனப் பிரஸ்தம் – 3. காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்
  4. சன்னியாசம் – 4. மோட்சம் அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்
A
1 3 4 2
B
2 1 3 4
C
1 2 3 4
D
4 1 2 3
Question 34 Explanation: 
பின் வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் என்ற கோட்பாடு உருவாயின. அவை நான்கு ஆஸ்ரமங்கள் என்ற அழைக்கப்பட்டன. இவை வயதின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
Question 35

தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சம காலத்தில் நிலவிய பண்பாடுகள் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. வட இந்தியாவின் பின் வேதகால பண்பாடும், தென் இந்தியாவின் இரும்பு காலமும் சம காலத்தை சேர்ந்தவை
  2. பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்க காலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்து போகிறது
  3. இந்தியாவின் செம்பு காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகால பண்பாடாகும்
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 35 Explanation: 
வட இந்தியாவின் தொடக்க கால வேதப் பண்பாடு இந்திய துணை கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புகால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. மக்கள் செம்பையும் கல்லையும் ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தியதால் இது செம்பு காலகட்டம் என்று தமிழில் அழைக்கப்பட்டது. ஹரப்பா பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னரும் கூட செம்பு காலப் பண்பாடு தொடர்ந்து நிலவியது. இரும்பு காலத்தின் முடிவில் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் கி. மு 600 – கி. பி 100 காலடி எடுத்து வைத்தனர். கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளது.
Question 36

மெகாலித் என்பது  ______ சொல்லாகும்.

A
கிரேக்க
B
இலத்தீன்
C
சமஸ்கிருதம்
D
அரபு
Question 36 Explanation: 
பெருங் கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Mega என்றால் பெரிய , lith என்றால் கல் என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
Question 37

தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/ இரும்புக்கால தொல்லியல் ஆய்விடமான ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

A
திருநெல்வேலி மாவட்டம்
B
தூத்துக்குடி மாவட்டம்
C
திருச்சி மாவட்டம்
D
கன்னியாகுமரி மாவட்டம்
Question 37 Explanation: 
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மண்பாண்டங்கள்( கருப்பு, சிவப்பு ) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
Question 38

தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

A
ஆதிச்சநல்லூர்
B
தர்மபுரி
C
கீழடி
D
பையம்பள்ளி
Question 38 Explanation: 
இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்பு பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
Question 39

கீழடியில் நடந்த அகழாய்வில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருள்கள் கிடைத்துள்ளன

A
மெசபடோமியா
B
சீனா
C
பெர்சியன்
D
ரோம்
Question 39 Explanation: 
இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்புக்கு மேலும் சில சான்றுகளாகும். தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார்.
Question 40

கீழ்கண்ட எந்த இடத்தில் அரிசி நிரம்பிய பானை கண்டெடுக்கப்பட்டது

A
கொடுமணல்
B
பொருந்தல்
C
நரசிங்கம்பட்டி
D
கும்மாளமருதப்பட்டி
Question 40 Explanation: 
இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழு முனைகள் ஆகியவை தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கு சான்றுகளாய் உள்ளன. இங்கு கிடைத்துள்ள அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.
Question 41

கீழ்க்கண்ட எந்த இடத்தில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன

A
பையம்பள்ளி
B
பொருந்தல்
C
ஆதிச்சநல்லூர்
D
திருவண்ணாமலை
Question 41 Explanation: 
இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களாவன இரும்பினால் செய்யப்பட்ட தொல்பொருட்களோடு பெருங்கற்காலத்து கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்டங்கள். ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
Question 42

கொடுமணல் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது

A
பட்டினப்பாலை
B
அகநானூறு
C
பொருநராற்றுப்படை
D
பதிற்றுப்பத்து
Question 42 Explanation: 
இங்கு தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நூல் சுற்றி வைக்கப்படும் சூழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
Question 43

தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

  1. புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்கால புதைப்பு முறைகளை பின்பற்றத் தொடங்கினர்.
  2. இறந்தவர்களைப் புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானைகள் முதுமக்கள் தாழிகள் என்று அழைக்கப்பட்டன.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 43 Explanation: 
இம்முறையின் படி இறந்தவர்களின் உடல் பெரிய மண்பாண்டத்தில் வைக்கப்படும். ஏனைய சில பொருட்களும் அதனுடன் வைக்கப்படும். இந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இரும்பை குறித்த அறிவை பெற்றிருந்த சமூகமாக கூடி வாழ தெரிந்திருந்த மிகவும் முன்னேறிய தமிழ் நாகரிகத்திற்கான சாட்சிகளாகும்.
Question 44

கற்திட்டைகள்  புதைப்பு முறை கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் காணப்பட்டது?

  1. வீரராகவபுரம்
  2. கும்மாள மருதுப்பட்டி
  3. நரசிங்கம்பட்டி
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 44 Explanation: 
இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இக்கற்திட்டைகள் வீரராகவபுரம்( காஞ்சிபுரம் மாவட்டம் ), கும்மாள மருதுப்பட்டி ( திண்டுக்கல் மாவட்டம் ), நரசிங்கம்பட்டி ( மதுரை மாவட்டம் ) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
Question 45
பிரிட்டானிய மொழியில்  மென் என்றால் _____  மற்றும்  கிர் என்றால் _____ என்று பொருள்.
A
கல், சிறிய
B
மென்மையான, கல்
C
கல், நீளமான
D
வலிமையான, கல்
Question 45 Explanation: 
ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும். திருப்பூர் மாவட்டம் சிங்கிரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன. இவை உப்பாற்றின் இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடுமணலிலும் இதுபோன்ற நினைவு தூண்கள் உள்ளன.
Question 46

இறந்துபோன வீரனின் நினைவை போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது

A
வீரக்கல்
B
நடுக்கல்
C
நினைவுக்கல்
D
பெயர் கல்
Question 46 Explanation: 
தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தை தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான்கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன.
Question 47
தொடக்க வேதகாலம்____________காலப்பகுதியைச் சார்ந்தது.
A
செம்புக் காலம்
B
கற்காலம்
C
வெண்காலக்காலம்
D
இரும்புக்காலம்
Question 48
தொடக்க வேதகாலம்____________முழுவதும் பரவியிருந்தது.
A
தென்னிந்தியா
B
வட இந்தியா
C
வட மேற்கிந்தியா
D
கிழக்கிந்தியா
Question 49
தொடக்க வேதகாலம்___________நாகரிகத்தைச் சார்ந்ததாக இருந்துள்ளது.
A
நகர நாகரிகம்
B
செம்பு நாகரிகம்
C
கிராம நாகரிகம்
D
வெண்கல் நாகரிகம்
Question 50
கூற்று 1: ரிக்வேதகால ஆரியர்கள் நாடோடிகல் ஆவர். கூற்று 2: அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 2 சரி, 1 தவறு
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 51
வேதகாலம் குறித்த தொல்பொருள் சான்றுகள் கிடைத்த இடங்களுல் அல்லாதது எது.
A
சிந்து மற்றும் கங்கை நிலப்பகுதி
B
பஞ்சாப்
C
உத்திர பிரதேசம்
D
மத்திய பிரதேசம்
Question 51 Explanation: 
விளக்கம்: சிந்து மற்றும் கங்கை நதிப்பகுதிகளிலும் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கருவிகள், மட்பாண்டங்கள் ஆகியன.
Question 52
வேதகால சமூகம்___________வழிச் சமூகமாக இருந்தது.
A
தாய்
B
தந்தை
C
மூத்தோர்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 52 Explanation: 
விளக்கம்: வேதகால சமூகம் தந்தை வழிச் சமூகமாகும். வெள்ளை நிறத்தோல்கொண்ட ஆரியர்கள் கருப்பு நிறத் தோல் கொண்ட ஆரியல்லாதவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர்.
Question 53
7. பொருத்துக: A) மதகுருமாரர் - 1. சத்ரியர் B) போரிடுபவர்கள் - 2. பிராமணர் C) நில உடைமையாளர் - 3. சூத்திரர் D) வேலைத் திறன் கொண்டவர் - 4. வைசியர்
A
A-1, B-2, C-3, D-4
B
A-2, B-1, C-4, D-3
C
A-1, B-3, C-2, D-4
D
A-2, B-1, C-3, D-4
Question 53 Explanation: 
விளக்கம்: A) மதகுருமாரர் - 1. பிராமணர் B) போரிடுபவர்கள் - 2. சத்ரியர் C) நில உடைமையாளர் - 3. வைசியர் D) வேலைத் திறன் கொண்டவர் -4. சூத்திரர்
Question 54
கூற்று 1: 2015 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. கூற்று 2: இப்பொருள்கள் கி.மு. (பொ.ஆ.மு) 100ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
A
கூற்று 1 சரி, 2 தவறு
B
கூற்று 2 சரி, 1 தவறு
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 54 Explanation: 
விளக்கம்: 2017 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. இப்பொருள்கள் கி.மு. (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
Question 55
பொருத்துக: A) ஆதிச்சநல்லூர் - 1. திண்டுக்கல் மாவட்டம் B) கீழடி - 2. வேலூர் மாவட்டம் C) பொருந்தல் - 3. சிவகங்கை மாவட்டம் D) பையம்பள்ளி - 4. தூத்துக்குடி மாவட்டம்
A
1 2 3 4
B
2 1 4 3
C
1 3 2 4
D
4 3 1 2
Question 55 Explanation: 
விளக்கம்: A) ஆதிச்சநல்லூர் - 1. தூத்துக்குடி மாவட்டம் B) கீழடி - 2. சிவகங்கை மாவட்டம் C) பொருந்தல் - 3. திண்டுக்கல் மாவட்டம் D) பையம்பள்ளி - 4. வேலூர் மாவட்டம்
Question 56
பொருத்துக: A) கொடுமணல் - 1. காஞ்சிபுரம் மாவட்டம் B) கும்மாளமருதுபட்டி - 2. ஈரோடு மாவட்டம் C) நரசிங்கம்பட்டி - 3. திண்டுக்கல் மாவட்டம் D) வீரராகவபுரம் - 4. மதுரை மாவட்டம்
A
1 2 3 4
B
2 3 4 1
C
1 3 2 4
D
4 3 1 2
Question 56 Explanation: 
விளக்கம்: A) கொடுமணல் - 1. ஈரோடு மாவட்டம் B) கும்மாளமருதுபட்டி - 2. திண்டுக்கல் மாவட்டம் C) நரசிங்கம்பட்டி - 3. மதுரை மாவட்டம் D) வீரராகவபுரம் - 4. காஞ்சிபுரம் மாவட்டம்
Question 57
பொருத்துக: A) சிங்கிரிபாளையம் - 1. தேனி மாவட்டம் B) வெம்பூர் - 2. ஈரோடு மாவட்டம் C) குமரிக்கல் - 3. திருப்பூர் மாவட்டம் D) வெள்ளாளன் கோட்டை - 4. தூத்துக்குடி மாவட்டம்
A
3 1 2 4
B
2 3 4 1
C
1 3 2 4
D
4 3 1 2
Question 57 Explanation: 
விளக்கம்: A) சிங்கிரிபாளையம் - 1. திருப்பூர் மாவட்டம் B) வெம்பூர் - 2. தேனி மாவட்டம் C) குமரிக்கல் - 3. ஈரோடு மாவட்டம் D) வெள்ளாளன் கோட்டை - 4. தூத்துக்குடி மாவட்டம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 57 questions to complete.

7 Comments

      1. Hi Winmeen/Tnpsctricks Team..
        Sathya G candidate posted one comment on February 2, 2020. you people also replied on the next day. But till now the issue is not solved. This is showing how winmeen is careless on there job…

        1. This is not limited test series to give complete set of one product without any defect. If any mistakes or correction Students should maintain some healthy relationships with admin and ask us to change wrong questions in online test. instead of mentioning careless or some negative comments, approach us, call us ask us we will support life time.

    1. question 18 is correct only – one point included in question…there is no explanation for this question. so we put related points in explanation. question 34 we have corrected now and cleared cache –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!