மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Online Test 11th History Questions in Tamil
மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Online Test 11th History Questions in Tamil
Quiz-summary
0 of 90 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 90 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- Answered
- Review
-
Question 1 of 90
1. Question
- அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து_________பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு தொடங்கியது.
Correct
விளக்கம்: அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து (பொ.ஆ.மு. 327-325) பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு தொடங்கியது. அவர், தனது படையுடன் மேற்கு நோக்கி திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, வென்ற பகுதிகளை மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் விட்டுச் சென்றார்.
Incorrect

Question 2 of 90
2. Question
- அயல்நாட்டினரிடமிருந்து இந்தியாவை விடுவித்த ஒரு மீட்பராகப் போற்றப்பட்டவர்_____________
Correct
விளக்கம்: சந்திரகுப்த மௌரியரின் தொடக்ககாலப் படையெடுப்புகளில் ஒன்று, அயல்நாட்டுப் படையெடுப்பாளர்களுக்கு எதிரானதாகும். மேலும், அவர்களைத் தோற்கடித்த (மற்றும் அநேகமாகக் கொன்ற) பின்னர், சந்திரகுப்தர் அயல்நாட்டினரிடமிருந்து இந்தியாவை விடுவித்த ஒரு மீட்பராகப் போற்றப்பட்டார்.

Question 3 of 90
3. Question
- அலெக்சாண்டரின் திறமைமிக்க தளபதிகளுல் ஒருவர்___________
Correct
விளக்கம்: அலெக்சாண்டரின் திறமைமிக்க தளபதிகளுல் ஒருவரான செலியுகஸ் நிகேடர், பொ.ஆ.மு. 311க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலுமான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்.

Question 4 of 90
4. Question
- பொ.ஆ.மு. 305 வாக்கில் ___________என்பவர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தவர்.
Correct
விளக்கம்: பொ.ஆ.மு. 305 வாக்கில், சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும், இது அலெக்சாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடூரமான தோல்வி அல்ல. மாறாக, சந்திரகுப்தர் செலியுகஸீடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்.

Question 5 of 90
5. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளை உற்றுநோக்கி தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: செலியுகஸ் நிலப்பரப்புக்கு பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக்கொண்டார்.
Incorrect
விளக்கம்: செலியுகஸ் நிலப்பரப்புக்கு பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக்கொண்டார்.
-
Question 6 of 90
6. Question
- கூற்று 1: கிரேக்க நாட்டுத் தூதுவராக மெகஸ்தனிஸ், மௌரியரின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு அனுப்பப்பட்டார்.
கூற்று 2: இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் மெகஸ்தனிஸ் ஆவார்.
Correct
விளக்கம்: கிரேக்க நாட்டுத் தூதுவராக மெகஸ்தனிஸ், மௌரியரின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் மெகஸ்தனிஸ் ஆவார்.
Incorrect
விளக்கம்: கிரேக்க நாட்டுத் தூதுவராக மெகஸ்தனிஸ், மௌரியரின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் மெகஸ்தனிஸ் ஆவார்.
-
Question 7 of 90
7. Question
- சந்திரகுப்தரரின் மகன்______________
Correct
விளக்கம்: சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், மேற்காசியாவிலிருந்த கிரேக்க அரசுகளோடு தொடர்ந்து நட்புறவைப் பேணினார்.
Incorrect
விளக்கம்: சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், மேற்காசியாவிலிருந்த கிரேக்க அரசுகளோடு தொடர்ந்து நட்புறவைப் பேணினார்.
-
Question 8 of 90
8. Question
- கூற்று 1: எகிப்தின் இரண்டாவது தாலமி தூதர்களை அனுப்பியது பற்றியும் சிரியாவின் ஆன்டியோகஸீடனான பிம்பிசாரரின் கடிதப் போக்குவரத்து குறித்தும் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கூற்று 2: அசோகரும் அதே மரபின்படி கிரேக்க அரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார்.
Correct
விளக்கம்: எகிப்தின் இரண்டாவது தாலமி தூதர்களை அனுப்பியது பற்றியும் சிரியாவின் ஆன்டியோகஸீடனான பிந்துசாரரின் கடிதப் போக்குவரத்து குறித்தும் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அசோகரும் அதே மரபின்படி கிரேக்க அரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

Question 9 of 90
9. Question
- ஐந்து யவன அரசர்களைக் குறிப்பிடும் அசோகரின் பாறைக் கல்வெட்டு ஆணை எண்………………..
Correct
Incorrect
-
Question 10 of 90
10. Question
- பொருத்துக:
A) இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ் – சைரீன்
B) இரண்டாவது தாலமி பிலடெல்பஸ் – மாசிடோனியா
C) ஆன்டிகோகஸ் கொனடாஸ் – எகிப்து
D) மகஸ் – சிரியா
Correct
விளக்கம்:
A) இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ் – சிரியா
B) இரண்டாவது தாலமி பிலடெல்பஸ் – எகிப்து
C) ஆன்டிகோகஸ் கொனடாஸ் – மாசிடோனியா
D) மகஸ் – சைரீன்
Incorrect
விளக்கம்:
A) இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ் – சிரியா
B) இரண்டாவது தாலமி பிலடெல்பஸ் – எகிப்து
C) ஆன்டிகோகஸ் கொனடாஸ் – மாசிடோனியா
D) மகஸ் – சைரீன்
-
Question 11 of 90
11. Question
- இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்_____________
Correct
விளக்கம்: இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிட யவன (அல்லது யோன) என்ற பொதுவான சொல் பயன்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிட யவன (அல்லது யோன) என்ற பொதுவான சொல் பயன்படுத்தப்பட்டது.
-
Question 12 of 90
12. Question
- யவன என்ற சொல்___________மொழி சொல்லாகும்.
Correct
விளக்கம்: யவன அல்லது யோன என்ற சொல்லானது பாரசீக மொழியில் கிரேக்கர்களைக் குறிக்கும் “யயுனா” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களைக்கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

Question 13 of 90
13. Question
- பொருத்துக:
A) வடமேற்கு ஆப்கானிஸ்தான் – இலவங்கப்பட்டை இலை
B) விளாமிச்சை வேர்தைலம் – நறுமண தைலம்
C) தாளிசபத்திரி – துருக்கி
D) பிரிஜியா – பாக்ட்ரியா
Correct
விளக்கம்:
A) வடமேற்கு ஆப்கானிஸ்தான் – பாக்ட்ரியா
B) விளாமிச்சை வேர்தைலம் – நறுமண தைலம்
C) தாளிசபத்திரி – இலவங்கப்பட்டை இலை
D) பிரிஜியா – துருக்கி
Incorrect
விளக்கம்:
A) வடமேற்கு ஆப்கானிஸ்தான் – பாக்ட்ரியா
B) விளாமிச்சை வேர்தைலம் – நறுமண தைலம்
C) தாளிசபத்திரி – இலவங்கப்பட்டை இலை
D) பிரிஜியா – துருக்கி
-
Question 14 of 90
14. Question
- மௌரியர் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்__________
Correct
விளக்கம்: தந்தம், ஆமை ஓடுகள், முத்துகள், அவுரி முதலிய சாயங்கள், விளாமிச்சை வேர்த்தைலம் அல்லது மிச்சை (கங்கைப் பகுதியைச் சேர்ந்த ஒரு நறுமணத் தைலம்), தாளிசபத்திரி (ஒரு வாசனைப் பொருளாகப் பயன்படும் இலவங்கப்பட்டை இலை) மற்றும் அரிய மரங்கள் உள்ளிட்ட பல்வகையான ஆடம்பரப் பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

Question 15 of 90
15. Question
- கூற்று 1: கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கம், ராஜகிருகத்திலுள்ள நினைவுச் சின்னங்களிலிருந்து தெரியவருகிறது.
கூற்று 2: மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்புகளுக்குப், பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் நிர்வாக அமைப்பு முறைகளே தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
Correct
விளக்கம்: கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கம், பாடலிபுத்திரத்திலுள்ள நினைவுச் சின்னங்களிலிருந்து தெரியவருகிறது. மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்புகளுக்குப், பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் நிர்வாக அமைப்பு முறைகளே தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

Question 16 of 90
16. Question
- வடக்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்ட்ரியா) தொடங்கி சிரியா வரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு, பொ.ஆ.மு_________க்குப் பிறகு வலுவிழந்து சிதையத் தொடங்கியது.
Correct
விளக்கம்: வடக்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்டீரியா) தொடங்கி சிரியா வரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு, பொ.ஆ.மு. க்குப் பிறகு வலுவிழந்து சிதையத் தொடங்கியது.
Incorrect
விளக்கம்: வடக்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்டீரியா) தொடங்கி சிரியா வரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு, பொ.ஆ.மு. க்குப் பிறகு வலுவிழந்து சிதையத் தொடங்கியது.
-
Question 17 of 90
17. Question
- பாக்ட்ரியாவின் ஆளுநர் டியோடோடஸ்___________யை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, பாக்ட்ரியாவின் சுதந்திர அரசரானார்.
Correct
விளக்கம்: பாக்ட்ரியாவின் ஆளுநர் டியோடோடஸை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, பாக்ட்ரியாவின் சுதந்திர அரசரானார். பொ.ஆ.மு. 212இல் இருந்த பாக்டிரிய அரசர், யூதிடெமஸ் ஒரு கிரேக்கராவார்.
Incorrect
விளக்கம்: பாக்ட்ரியாவின் ஆளுநர் டியோடோடஸை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, பாக்ட்ரியாவின் சுதந்திர அரசரானார். பொ.ஆ.மு. 212இல் இருந்த பாக்டிரிய அரசர், யூதிடெமஸ் ஒரு கிரேக்கராவார்.
-
Question 18 of 90
18. Question
- நன்கு அறியப்பட்ட முதல் இந்தோ-கிரேக்க அரசர்____________
Correct
விளக்கம்: யூதிடெமஸைத் தொடர்ந்து அவரது மகன் (சுமார் பொ.ஆ.மு. 200 இல்) டெமிட்ரியஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்: மேலும், மற்றொரு டெமிட்ரியஸ், உத்தேசமாக இரண்டாம் டெமிட்ரியஸ்தான் (சுமார் பொ.ஆ.மு. 175), அறியப்பட்ட முதல் இந்தோ-கிரேக்க அரசராவார்.

Question 19 of 90
19. Question
- இந்தோ-கிரேக்க அரசர்களின் ஆட்சியை வேறுபடுத்திக் காட்டுவது_____________
Correct
விளக்கம்: இந்தோ-கிரேக்க அரசர்களின் நேர்த்திமிக்க நாணயங்களே அவர்களின் ஆட்சியை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சமாகும். கிரேக்க வெள்ளி நாணயங்களின் பாணியில் வடிக்கப்பட்டிருந்த அவை, ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசரின் உருவத்தையும், பெயரையும் தாங்கி இருந்தன. இவ்வாறாக அந்த நாணயங்கள், பல வகையான தலைக் கவசங்களோடு சித்திரிக்கப்பட்டுள்ளன.

Question 20 of 90
20. Question
- இந்திய வரலாற்றுக் குறிப்புகளின்படி யவனர்கள் படையெடுத்து வந்ததாகக் குறிப்பிடும் பகுதி__________
Correct
விளக்கம்: அக்காலகட்ட இந்திய வரலாற்றுக் குறிப்புகள், அயோத்தி (சாகோதம்), அதனினும் கிழக்கேயுள்ள மகதம் ஆகிய பகுதிகள் மீதும் யவணர்கள் படையெடுத்து வந்ததைக் கூறுகின்றன. இருப்பினும், கிரேக்கர்கள் தமக்கிடையிலான உட்பூசல்களால் குழுப்பத்திலிருந்ததாகத் தெரிவதால், இந்தப் பகுதிகள் எதையும் அவர்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருக்கவில்லை.

Question 21 of 90
21. Question
21. மௌரிய வம்சத்திற்கு பின்பு ஆட்சிக்கு வந்த வம்சம்____________
Correct
Incorrect
-
Question 22 of 90
22. Question
- கடைசி மௌரிய அரசரை தோற்கடித்து ஆட்சியை பறித்துக்கொண்ட சுங்கப் பேரரசர்____________
Correct
விளக்கம்: கடைசி மௌரிய அரசனுக்குப் பிறகு ஆட்சியைப் பறித்துக்கொண்ட சுங்கப் பேரரசர் புஷ்யமித்ரனுக்கு நிலங்களை விட்டுக் கொடுத்தனர். டெமிட்ரியஸ் இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்புகளை நாணயச் சான்றுகளும் நிரூபிக்கின்றன.

Question 23 of 90
23. Question
- கூற்று 1: டெமிட்ரியஸ் இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்புகளை நாணயச் சான்றுகள் நிரூபிக்கின்றன.
கூற்று 2: அவர் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களில், முகப்புப் பக்கத்தில் கரோஷ்டியிலும் பின் பக்கத்தில் கிரேக்கத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: டெமிட்ரியஸ் இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்புகளை நாணயச் சான்றுகள் நிரூபிக்கின்றன. அவர் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களில், முகப்புப் பக்கத்தில் கிரேக்கத்திலும் பின் பக்கத்தில் கரோஷ்டியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

Question 24 of 90
24. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: மேலும், முப்பதுக்கும் அதிகமான அரசர்களின் பெயர்களை அவர்களது நாணயங்களிலிருந்து அடையாளம் காணமுடிகிறது.
Incorrect
விளக்கம்: மேலும், முப்பதுக்கும் அதிகமான அரசர்களின் பெயர்களை அவர்களது நாணயங்களிலிருந்து அடையாளம் காணமுடிகிறது.
-
Question 25 of 90
25. Question
- இந்தோ-கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவர்___________
Correct
விளக்கம்: இந்தோ-கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர் (சுமார் பொ.ஆ.மு. 165/145-130), நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. அவரது நாணயங்கள் காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது அவரது ஆட்சிப் பரப்பு குறித்த ஒரு நல்ல குறிப்பைத் தருகிறது.

Question 26 of 90
26. Question
- மினாண்டர் பாஞ்சாலம் மற்றும் மதுரா அரசர்களோடு சேர்ந்து_________பகுதியை சூரையாடினார்.
Correct
Incorrect
-
Question 27 of 90
27. Question
- கங்கைப் பகுதியைச் சூறையாடிய மினாண்டரை கலிங்க அரசன் காரவேலனால் தடுத்து நிறுத்தமுடியவில்லை எனக் கூறும் கல்வெட்டு___________
Correct
Incorrect
-
Question 28 of 90
28. Question
- மினாண்டரின் நாணயங்களில் அவரைப் பற்றி கீழ்க்கண்ட எவ்வாறு குறிப்பிடப்படவில்லை.
Correct
விளக்கம்: பாடாலிபுத்திரத்தை மினாண்டர் வெற்றிகரமாகத் தாக்கியபோதிலும் தனது வெற்றியை நிலைப்படுத்திக்கொள்ளாமல் பின்வாங்கினார். அவரது நாணயங்களில் அவர் ஓர் “அரச” ராக, இரட்சகராக, மீட்பராக விவரிக்கப்பட்டுள்ளாரே தவிர ஒரு மாபெரும் வெற்றி வீரனாக விவரிக்கப்படவில்லை.

Question 29 of 90
29. Question
- மினாண்டரின் ஆசிரியர்_____________
Correct
விளக்கம்: மிலிந்த-பன்ஹா (மிலிந்தவின் வினாக்கள்) எனும் பௌத்தப் பிரதியில்தான் மினாண்டர் ஒரு பெருமைக்குரிய தலைவராக அறியப்படுகிறார். அதில் ஆசிரியர் நாகசேனருடன் பௌத்தம் குறித்த ஒரு கேள்வி-பதில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு பௌத்தராகி, பௌத்தத்தை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.

Question 30 of 90
30. Question
- பாகபத்ர அரசரின் அரசவைக்குத் தூதராக அனுப்பப்பட்டவர்____________
Correct
விளக்கம்: இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்ட மற்றொருவர் ஆன்டியால்சைடஸ் அல்லது ஆன்டியால்கிடாஸ் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு இவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம். இவர் பாகபத்ர அரசரின் அரசவைக்குத் தூதராக அனுப்பப்பட்டார்.

Question 31 of 90
31. Question
- பாகபத்ர அரசவையில் ஹீலியோடோரஸ் நிறுவிய தூணின் தலைப்பகுதி__________உருவத்தை கொண்டது.
Correct
விளக்கம்: பாகபத்ர அரசவையல் ஹீலியோடோரஸ் நிறுவின் தூணின் தலைப்பகுதி கருட உருவத்தை கொண்டது. கருட-துவஜ என்று அழைக்கப்பட்ட, வைணவக் கடவுள் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யும்விதமாக இத்தூண் அமைக்கப்பட்டது.

Question 32 of 90
32. Question
- ஹீலியோடோரஸ் நிறுவிய தூணானது கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
Correct
விளக்கம்: ஹீலியோடோரஸ் நிறுவிய தூணானது மத்தியபிரதேசம், விரிஷாவில் திறந்தவெளி மைதானத்தின் நடுவே அந்தத் தூண் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஹீலியோடோரஸ் நிறுவிய தூணானது மத்தியபிரதேசம், விரிஷாவில் திறந்தவெளி மைதானத்தின் நடுவே அந்தத் தூண் காணப்படுகிறது.
-
Question 33 of 90
33. Question
- வடமேற்கு இந்தியாவிலிருந்த இந்தோ-கிரேக்க அரசுகளை அகற்றியவர்___________
Correct
Incorrect
-
Question 34 of 90
34. Question
- சீனர்கள் பெருஞ்சுவரைக் கட்டியதன் நோக்கம்___________
Correct
Incorrect
-
Question 35 of 90
35. Question
- சாகர்களை கிழக்கு ஈரனாலிருந்து வெளியேற்றியவர்__________
Correct
விளக்கம்: கிழக்கு ஈரானிலிருந்து பார்த்திய ஆட்சியாளர் மித்ரடேட்ஸால் (பொ.ஆ.மு. 123-88) வெளியே தள்ளப்பட்ட சாகர்கள், பிறகு வடமேற்கு இந்தியாவை நோக்கித் திரும்பி, இறுதியில் சிந்துவெளிக்கும் சௌராஷ்டிரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியமர்ந்தனர்.

Question 36 of 90
36. Question
- இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர்____________
Correct
விளக்கம்: இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொகா ஆவார். காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ-கிரேக்க அரசுகளுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொகா ஆவார். காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ-கிரேக்க அரசுகளுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
-
Question 37 of 90
37. Question
- கூற்று 1: சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மாகாண ஆளுநர்களாக நியமித்தனர்.
கூற்று 2: சத்ரபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப் பட்டம் சூடிக்கொண்டதோடு, நடைமுறையில் சுதந்திர ஆட்சியாளர்களாயினர்.
Correct
Incorrect
-
Question 38 of 90
38. Question
- ருத்ரதாமனின் வெற்றிகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு____________
Correct
விளக்கம்: புகழ்பெற்ற சாக சத்ரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன் (பொ.ஆ.மு. 130-150). புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் (குஜராத்) அவரது வெற்றிகள் போற்றப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: புகழ்பெற்ற சாக சத்ரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன் (பொ.ஆ.மு. 130-150). புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் (குஜராத்) அவரது வெற்றிகள் போற்றப்பட்டுள்ளன.
-
Question 39 of 90
39. Question
- இந்தியாவில் சாகர்களை எதிர்த்து அதிக வெற்றி பெற்றவர்____________
Correct
விளக்கம்: காபூலை முதலில் கைப்பற்றிய பார்த்திய கோண்டோபெர்னெஸ் என்பவரால் சாகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காபூல் பள்ளத்தாக்கைக் குஷாணரிடம் அவர் இழந்தார் என்றாலும் இந்தியாவில் சாகர்களை எதிர்த்து அதிக வெற்றி பெற்றது அவர்தான்.

Question 40 of 90
40. Question
- ஆஃப்கானிஷ்தானை வென்றடக்கிய முதல் குஷாண அரசர்___________
Correct
விளக்கம்: ஆப்கானிஸ்தானை வென்றடக்கிய முதல் குஷாண அரசர், குஜிலா காட்பிசெஸ் ஆவார். அவரைத் தொடர்ந்து வந்தவர் விமா காட்பிசெஸ். இவ்விரு அரசர்களும் குஷாண ஆட்சிப் பகுதியைக் காந்தாரத்துக்கும் பஞ்சாபுக்கும் கிழக்கே மதுரா வரையில் கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் விரிவுபடுத்தினர்.

Question 41 of 90
41. Question
- குஷாண அரசர்களில் நன்கு அறியப்பட்டவர்_____________
Correct
விளக்கம்: குஷாண அரசர்களில் நன்கு அறியப்பட்டவர் கனிஷ்கர் ஆவார். பொ.ஆ. 78 தொடங்கி பொ.ஆ. 101 அல்லது 102 வரையிலும் ஆட்சி புரிந்ததாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குஷாண அரசர்களில் நன்கு அறியப்பட்டவர் கனிஷ்கர் ஆவார். பொ.ஆ. 78 தொடங்கி பொ.ஆ. 101 அல்லது 102 வரையிலும் ஆட்சி புரிந்ததாகக் கருதப்படுகிறது.
-
Question 42 of 90
42. Question
- இந்திய நாள்காட்டியில் சக சகாப்தத்தின் தொடக்க ஆண்டு_________
Correct
விளக்கம்: இந்திய நாள்காட்டியில் சக சகாப்தத்தின் தொடக்கமாக பொ.ஆ. 78 கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கனிஷ்கரின் காலம் பற்றி வரலாற்றாளர்கள் மாறுபடுவதோடு அவரது ஆட்சி, பொ.ஆ. 78க்கும் பொ.ஆ. 144க்கும் இடையில் எப்போதோ தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

Question 43 of 90
43. Question
- நான்காவது பௌத்த மகாசங்கத்தை கூட்டிய புரவலர்________ஆவார்.
Correct
விளக்கம்: ஆர்வமிக்க ஒரு பௌத்த ஆதரவாளரான கனிஷ்கர், நான்காம் பௌத்த ஆதரவாளரான கனிஷ்கர், நான்காம் பௌத்த மகாசங்கத்தை கூட்டிய புரவலர் ஆவார். (மூன்றாம் மகாசங்கம் அசோகரின் ஆட்சி காலத்தில் பாடலிபுத்திரத்தில் நடந்தது.) இக்காலத்தில் மஹாயானம் பௌத்தம் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவாகியிருந்தது. பொளத்தத்தைப் போதிப்பதற்காகச் சீனாவுக்கு அனுப்பப்பட்ட மதப் பரப்புநர்களைக் கனிஷ்கர் ஆதரித்தார்.

Question 44 of 90
44. Question
- மூன்றாவது பொளத்த மகாசங்கத்தை கூட்டிய புரவலர்__________ஆவார்.
Correct
Incorrect
-
Question 45 of 90
45. Question
- பொளத்தத்தைப் போதிப்பதற்காகச் சீனாவுக்கு அனுப்பப்பட்ட மதப் பரப்புநர்களைக் ஆதரித்தவர்___________
Correct
Incorrect
-
Question 46 of 90
46. Question
- குஷாணர்களின் நாணயங்கள் குஷாண ஆட்சியாளர்களை கீழ்க்கண்ட எவ்வாறு குறிப்பிடுகிறது.
Correct
விளக்கம்: குஷாணரின் நாணயங்கள் உயர்ந்த தரமுள்ளவை என்பதோடு ரோமானிய நாணயங்களின் எடைத் தரங்களுக்கு ஒத்திருந்தன. அவை குஷாண ஆட்சியாளர்களை “அரசர்களின் அரசர்”, “ஸீசர்”, “அகிலத்தை ஆள்பவன்” என்பன போன்ற பிற பட்டப் பெயர்களால் குறிப்பிடுகின்றன.

Question 47 of 90
47. Question
- கனிஷ்கர்___________பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
Correct
விளக்கம்: கனிஷ்கரின் நாணயங்களும் கூடவே மதுரா அருகே காணப்படும் அவரது சிலையும் அவர் மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதற்குச் சான்று கூறும் விதத்தில், வார்பூட்டிய அங்கி, நீண்ட மேலங்கி, காலணிகளும் அணிந்தவராகக் காணப்படுகிறார்.

Question 48 of 90
48. Question
- சீனாவும் பாகிஸ்தானும் இணைந்த மேற்கொண்ட “காரகோரம் நெடுஞ்சாலைத் திட்டம்” நிறைவு பெற்ற ஆண்டு.
Correct
விளக்கம்: சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட, 1979ஆம் ஆண்டு நிறைவு பெற்ற, காரகோரம் நெடுஞ்சாலைத் திட்டம், தொல்லியலாளர்களுக்கும் வரலாற்றாளர்களுக்கும் பெரும் பலன்களை அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்: சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட, 1979ஆம் ஆண்டு நிறைவு பெற்ற, காரகோரம் நெடுஞ்சாலைத் திட்டம், தொல்லியலாளர்களுக்கும் வரலாற்றாளர்களுக்கும் பெரும் பலன்களை அளித்துள்ளது.
-
Question 49 of 90
49. Question
- கூற்று 1: ஹீஸ்னா பாறைக் கல்வெட்டு முதல் இரண்டு காட்பிசெசுகள் குறித்து குறிப்பிடுகிறது.
கூற்று 2: கனிஷ்கரை தேவபுத்ர (கடவுள் மகன்) என்றும் மஹாராஜா என்றும் குறிப்பிடும் கல்வெட்டு ஹதிகும்பா பாறைக் கல்வெட்டாகும்.
Correct
விளக்கம்: ஹீஸ்னா பாறைக் கல்வெட்டு முதல் இரண்டு காட்பிசெசுகள் குறித்து குறிப்பிடுகிறது. கனிஷ்கரை தேவபுத்ர (கடவுள் மகன்) என்றும் மஹாராஜா என்றும் குறிப்பிடும் கல்வெட்டு ஹீஸ்னா பாறைக் கல்வெட்டாகும்.

Question 50 of 90
50. Question
- காரகோரம் நெடுஞ்சாலைக் குறித்தக் கருத்துகளில் சரியானதைக் கண்டறி:
1) காரகோரம் நெடுஞ்சாலை நெடுகிலும் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருள்கள், பௌத்தத்தைப் பரப்புகிற தங்களின் பணிக்காகப் பௌத்தத் துறவிகள் சீனாவுக்குச் சென்றது இச்சாலையில்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
2) பௌத்த மதத் துறவிகளைப் பின்பற்றி வணிகர்களும் இச்சாலை வழியாகச் சென்றுள்ளனர். இதனால் சீனாவிலிருந்து பட்டு, மேற்காசிய நாடுகளிலிருந்து குதிரைகள் ஆகியனவற்றை இந்தியா இறக்குமதி செய்ய இச்சாலை ஒரு முக்கிய வணிக வழியாக மாறியது.
Correct
Incorrect
-
Question 51 of 90
51. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: மஹாயானம் பௌத்த மதம் புத்தரை மனித வடிவில் சித்தரிப்பதை அனுமதித்தது.
Incorrect
விளக்கம்: மஹாயானம் பௌத்த மதம் புத்தரை மனித வடிவில் சித்தரிப்பதை அனுமதித்தது.
-
Question 52 of 90
52. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளைக் கவனித்து பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: இவ்வாறான குகைகள் மஹாயான மரபின் ஒரு பகுதியாக இந்தக் குகைகளில் புத்தரின் பெரிய அளவு சிலைகள் செதுக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: இவ்வாறான குகைகள் மஹாயான மரபின் ஒரு பகுதியாக இந்தக் குகைகளில் புத்தரின் பெரிய அளவு சிலைகள் செதுக்கப்பட்டன.
-
Question 53 of 90
53. Question
- கனிஷ்கர் கீழ்க்கண்ட யாருடைய புரவலராகத் திகழ்ந்தார்.
Correct
விளக்கம்: பௌத்த ஆசான் நாகார்ஜீனர், பௌத்த தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: பௌத்த ஆசான் நாகார்ஜீனர், பௌத்த தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தார்.
-
Question 54 of 90
54. Question
- பொருத்துக:
A) அஸ்வகோஷர் – அர்த்தசாஸ்திரம்
B) மெகஸ்தனிஸ் – காமசூத்ரம்
C) வாத்சயாயனார் – இன்டிகா
D) கௌடில்யர் – புத்தசரிதம்
Correct
விளக்கம்:
A) அஸ்வகோஷர் – புத்தசரிதம்
B) மெகஷ்தனிஸ் – இன்டிகா
C) வாத்சயாயனார் – காமசூத்ரம்
D) கௌடில்யர் – அர்த்தசாஸ்திரம்
Incorrect
விளக்கம்:
A) அஸ்வகோஷர் – புத்தசரிதம்
B) மெகஷ்தனிஸ் – இன்டிகா
C) வாத்சயாயனார் – காமசூத்ரம்
D) கௌடில்யர் – அர்த்தசாஸ்திரம்
-
Question 55 of 90
55. Question
- சரிபுத்ரப்ரகரண என்ற சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர்___________
Correct
விளக்கம்: அஸ்வகோஷர் அவரது புத்தசரிதம் நூலுக்காகப் புகழ்பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரகரண என்ற முதல் சம்ஸ்சிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: அஸ்வகோஷர் அவரது புத்தசரிதம் நூலுக்காகப் புகழ்பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரகரண என்ற முதல் சம்ஸ்சிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.
-
Question 56 of 90
56. Question
- காந்தாரக்கலைப் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் காந்தாரக்கலை வளர்ச்சியடைந்தன.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் காந்தாரக்கலை வளர்ச்சியடைந்தன.
-
Question 57 of 90
57. Question
- நவீன ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தக்காணப் பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டக் காலம்.
Correct
Incorrect
-
Question 58 of 90
58. Question
- சரியாக பொருந்தாத இணையைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) பாண்டியர் – மதுரை
B) சேரர் – வஞ்சி
C) சோழர் – உறையூர்
D) பல்லவர் – காஞ்சிபுரம்
Incorrect
விளக்கம்:
A) பாண்டியர் – மதுரை
B) சேரர் – வஞ்சி
C) சோழர் – உறையூர்
D) பல்லவர் – காஞ்சிபுரம்
-
Question 59 of 90
59. Question
- மூவேந்தர்களை தனது பேரரசின் எல்லையிலிருந்த அரசுகள் என்று குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு____________
Correct
Incorrect
-
Question 60 of 90
60. Question
- சங்க இலக்கியத்தின் காலம்___________
Correct
விளக்கம்: பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்த, சங்க இலக்கியம் என்று அறியப்படுகிற தமிழ் இலக்கியங்களின் தொகுப்பிலிருந்து தமிழ்ப் பகுதி குறித்த விரிவான தகவல்களை பெறமுடிகிறது.

Question 61 of 90
61. Question
- இந்தியக் கடற்கரையிலிருந்த துறைமுகங்கள், அங்கு நிகழ்ந்த வணிகம் ஆகிய தகவல்களை வழங்கும் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட வரலாற்று சான்றான “எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ்” கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டைச் சார்ந்தது.
Correct
Incorrect
-
Question 62 of 90
62. Question
- கூற்று 1: பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டின் முடிவில், கிரேக்க அரசுகளை அகற்றிவிட்டு மத்திய தரைக் கடல் உலகின் வல்லரசாக ரோம் மேலெழுந்தது.
கூற்று 2: மேலும் ரோமானியக் குடியரசு, பொ.ஆ.மு. 27இல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.
Correct
விளக்கம்: பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில், கிரேக்க அரசுகளை அகற்றிவிட்டு மத்திய தரைக் கடல் உலகின் வல்லரசாக ரோம் மேலெழுந்தது. மேலும் ரோமானியக் குடியரசு, பொ.ஆ.மு. 27இல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.

Question 63 of 90
63. Question
- கீழ்க்கண்டக்கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில், எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தார்.
2) அது வரை, இந்தியாவுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையிலான கடல் வணிகம், அரபியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
3) மேலும் ரோமாபுரிக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை போன்ற பொருள்களின் உற்பத்தி மையங்கள் தென்னிந்தியாவில் எங்கிருந்தன என்பதைப் பற்றிய அறிவை அரபியர்களே ஏகபோகமாக கொண்டிருந்தனர்.
Correct
விளக்கம்: பொ.ஆ. முதல் நூற்றாண்டில், எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தார்.
Incorrect
விளக்கம்: பொ.ஆ. முதல் நூற்றாண்டில், எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தார்.
-
Question 64 of 90
64. Question
- “இந்தோ ரோமானிய வணிக நிலையம்” என்றழைக்கப்பட்ட இடம்__________
Correct
விளக்கம்: ரோம் ஒரு குடியரசாக இருந்தபோதே ரோமுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடயிலான வணிகம் செழித்திருந்தது. அக்காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயங்களும் கலைப் பொருள்களும், “இந்தோ-ரோமானிய வணிக நிலையம்” என்று கூறப்பட்டுவந்த, புதுச்சேரிக்கு அருகேயுள்ள அரிக்கமேட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Question 65 of 90
65. Question
- மேற்குக் கரையிலிருந்து, ரோமானிய வணிகர்கள் நிலவழியே__________கணவாயைக் கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தன.
Correct
Incorrect
-
Question 66 of 90
66. Question
- பொருத்துக:
A) கொடுமணல் – புதுச்சேரி
B) படியூர் – வேலூர்
C) வாணியம்பாடி – திருப்பூர்
D) அரிக்கிமேடு – ஈரோடு
Correct
விளக்கம்:
A) கொடுமணல் – ஈரோடு
B) படியூர் – திருப்பூர்
C) வாணியம்பாடி – வேலூர்
D) அரிக்கிமேடு – புதுச்சேரி
Incorrect
விளக்கம்:
A) கொடுமணல் – ஈரோடு
B) படியூர் – திருப்பூர்
C) வாணியம்பாடி – வேலூர்
D) அரிக்கிமேடு – புதுச்சேரி
-
Question 67 of 90
67. Question
- ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த ஒரு நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கிற சுரங்கங்கள் அமைந்துள்ள இடம்_________
Correct
விளக்கம்: கொடுமணல்(ஈரோடு), படியூர்(திருப்பூர்), வாணியம்பாடி(வேலூர்) ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த ஒரு நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கிற சுரங்கங்களிருந்தன.
Incorrect
விளக்கம்: கொடுமணல்(ஈரோடு), படியூர்(திருப்பூர்), வாணியம்பாடி(வேலூர்) ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த ஒரு நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கிற சுரங்கங்களிருந்தன.
-
Question 68 of 90
68. Question
- _________யில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
Correct
விளக்கம்: ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில், உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.(உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் இங்கே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.)

Question 69 of 90
69. Question
- முற்பட்டக் காலத்தில் ரோமானிய நாணயங்கள் அதிகளவு காணப்பட்ட இடம்____________
Correct
Incorrect
-
Question 70 of 90
70. Question
- கூற்று 1: பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டின் முடிவில், ரோமானியக் கப்பல்கள் தமிழகத்தின் கோரமண்டல் எனப்படும் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்குப் பணயிக்கத் தொடங்கின.
கூற்று 2: மேலும் இந்தத் துறைமுகங்களில் பலவும் பெரிப்பிளஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Correct
விளக்கம்: பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டின் முடிவில், ரோமானியக் கப்பல்கள் தமிழகத்தின் கோரமண்டல் எனப்படும் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்குப் பணயிக்கத் தொடங்கின. மேலும் இந்தத் துறைமுகங்களில் பலவும் பெரிப்பிளஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Question 71 of 90
71. Question
- பொருந்தாத இணையைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) நவுரா – கண்ணனூர்
B) தொண்டி – பொன்னானி
C) படியூர் – திருப்பூர்
D) சோழமண்டலம் – கோரமண்டல்
Incorrect
விளக்கம்:
A) நவுரா – கண்ணனூர்
B) தொண்டி – பொன்னானி
C) படியூர் – திருப்பூர்
D) சோழமண்டலம் – கோரமண்டல்
-
Question 72 of 90
72. Question
- கூற்று 1: முசிறி அல்லது முசிரிஸ் என்பது தெற்கே அமைந்திருந்த ஒரு முக்கியத் துறைமுகமாகும்.
கூற்று 2: இது, பாரம்பரியாமாக் கொடுமணல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: முசிறி அல்லது முசிரிஸ் என்பது மேலும் தெற்கே அமைந்திருந்த ஒரு முக்கியத் துறைமுகமாகும். இது, பாரம்பரியாமாக் கொடுங்களுர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: முசிறி அல்லது முசிரிஸ் என்பது மேலும் தெற்கே அமைந்திருந்த ஒரு முக்கியத் துறைமுகமாகும். இது, பாரம்பரியாமாக் கொடுங்களுர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
Question 73 of 90
73. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: அநேகமாக மேற்குக் கடற்கரையில் இருந்த துறைமுகங்களில் மிகவும் பரபரப்பான வணிக மையம் முசிறியாகும்.
Incorrect
விளக்கம்: அநேகமாக மேற்குக் கடற்கரையில் இருந்த துறைமுகங்களில் மிகவும் பரபரப்பான வணிக மையம் முசிறியாகும்.
-
Question 74 of 90
74. Question
- கூற்று 1: நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள், திரும்பிச்செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன. இது, அடிப்படையான நுகர்வுப் பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதைச் சுட்டுகிறது.
கூற்று 2: அதே நேரத்தில், சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்குப் பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு, பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
Correct
Incorrect
-
Question 75 of 90
75. Question
- இந்தியாவிலிருந்து ரோமுக்குச் சென்ற கப்பல்கள்__________யைச் சுமந்து சென்றன.
Correct
விளக்கம்: இந்தியாவிலிருந்து ரோமுக்குச் சென்ற கப்பல்கள், மிளகு. அதிக அளவில் முத்துகள், தந்தம், பட்டுத்துணி, செல்வமிக்க ரோமானியர்களிடையே தனிப் பயன்பாட்டுக்கென மிகதியாக தேவைப்பட்ட ஒருவகை நறுமணத் தைலமான கங்கைப் பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட விளாமிச்சை வேர்த் தைலம், இலவங்கப் பட்டை மர இலையான தாளிசபத்திரி எனும் நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு ஆகியவற்றைச் சுமந்து சென்றன.

Question 76 of 90
76. Question
- கூற்று 1: ரோமானியக் கப்பல்கள் சோழமண்டலக் கடற்கரையுடன் வணிகத்தைத் தொடங்கியதும், இந்தப் பகுதியின் நேர்த்தியான பருத்தித் துணிகளும்கூட முக்கியமான ஏற்றுமதிப் பண்டமாயின.
கூற்று 2: ரோமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள்கள்: நாணயங்கள், புஷ்பராகக் கல், அஞ்சனம், பவழம், கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் ஆகியனவாகும்.
Correct
Incorrect
-
Question 77 of 90
77. Question
- கூற்று 1: தமிழ்ப் பகுதியிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பு, ரோமிலிருந்து இறக்குமதியான பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும்.
கூற்று 2: மேலும் பொ.ஆ. முதல் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பேரரசர் டைபீரியஸ் ஆட்சியின் போது வணிகத்தின் அளவு உச்சத்தை எட்டியது.
Correct
Incorrect
-
Question 78 of 90
78. Question
- ஒவ்வோராண்டும் இந்தியாவுடனான வணிகத்தால் ரோமாபுரிக்கு___________மில்லியன் செஸ்டர்செஸ் இழப்பு ஏற்பட்டது.
Correct
விளக்கம்: ஒவ்வோராண்டும் இந்தியாவுடனான வணிகத்தால் ரோமாபுரிக்கு 55 மில்லியன் செஸ்டர்செஸ்(பண்டைய ரோமானியப் பணம்) இழப்பு ஏற்பட்டது என்றொரு புகார் எழுந்தது.
Incorrect
விளக்கம்: ஒவ்வோராண்டும் இந்தியாவுடனான வணிகத்தால் ரோமாபுரிக்கு 55 மில்லியன் செஸ்டர்செஸ்(பண்டைய ரோமானியப் பணம்) இழப்பு ஏற்பட்டது என்றொரு புகார் எழுந்தது.
-
Question 79 of 90
79. Question
- ________என்பவர் ரோம் நாட்டுச் செல்வ வகுப்பினரின் ஆடம்பரப் பொருள் நுகர்வைத் தடை செய்து சட்டமியற்றினார்.
Correct
விளக்கம்: பேரரசர் வெஸ்பேசியன் ரோம் நாட்டுச் செல்வ வகுப்பினரின் ஆடம்பரப் பொருள் நுகர்வைத் தடை செய்து சட்டமியற்றினார். அதையடுத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடைய பண்டங்களாக பருத்தித் துணிகள், மிளகு ஆகியவை மட்டுமே என்றாயிற்று.

Question 80 of 90
80. Question
- சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்____________
Correct
விளக்கம்: சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம் புகார்(பூம்பகார்) ஆகும். இங்கே யவன வணிகர்கள், துறைமுகப் பகுதியில் குறிப்பாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தனர்.

Question 81 of 90
81. Question
- கீழ்க்கண்டவற்றுள் “யவணர” பற்றிய குறிப்புகளுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: அநேகமாக யவணர்களின் கண்கள் சாம்பல் அல்லது நீல நிறத்தில் இருந்ததால் வன்கண் யவனர் எனச் சுட்டப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்: அநேகமாக யவணர்களின் கண்கள் சாம்பல் அல்லது நீல நிறத்தில் இருந்ததால் வன்கண் யவனர் எனச் சுட்டப்பட்டுள்ளனர்.
-
Question 82 of 90
82. Question
- ________ஆற்றுப்படுகையில் பெரிய அளவுகளில் சேர நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
Correct
விளக்கம்:அமராவதி ஆற்றுப் படுகையில் பெரிய அளவுகளில் சேர நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் மிகப் பெரிய அளவுகளில் இந்தோ-கிரேக்க, குஷாண நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை, பணமயமாக்கத்தின் அளவு குறித்து அதே போன்ற ஒரு முடிவுக்கே இட்டுச்செல்கிறது.

Question 83 of 90
83. Question
83. சரியான முறைப்படி வரிசைப்படுத்துக:
Correct
Incorrect
-
Question 84 of 90
84. Question
- காந்தாரக்கலை கீழ்க்கண்ட யாருடைய காலத்தில் வளர்ச்சிப்பெற்றது.
Correct
விளக்கம்: குஷாணர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர், பௌத்தத்தின் மகாயானப் பரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
Incorrect
விளக்கம்: குஷாணர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர், பௌத்தத்தின் மகாயானப் பரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
-
Question 85 of 90
85. Question
குஷாண நாணயங்கள்__________நாணயங்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன.
Correct
Incorrect
-
Question 86 of 90
86. Question
- இந்தோ – கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பணி_______என்று குறிப்பிடப்பட்டது.
Correct
Incorrect
-
Question 87 of 90
87. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றது எது?
Correct
Incorrect
-
Question 88 of 90
88. Question
- சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்___________
Correct
Incorrect
-
Question 89 of 90
89. Question
- ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்.
(i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
(ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 90 of 90
90. Question
- செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு_________தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
Correct
Incorrect
Leaderboard: மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Online Test 11th History Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||