Online TestTnpsc Exam
Tnpsctricks
மாநில அரசு Online Test 10th Social Science Lesson 9 Questions in Tamil
1 509 Less than a minute
மாநில அரசு Online Test 10th Social Science Lesson 9 Questions in Tamil
மாநில அரசு Online Test 10th Social Science Lesson 9 Questions in Tamil
Start
Congratulations - you have completed மாநில அரசு Online Test 10th Social Science Lesson 9 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒரு சீரான நிர்வாக அமைப்பினை ஏற்படுத்த ______ வழிவகுக்கிறது.
A | அரசியலமைப்பு |
B | சட்டமன்றம் |
C | உயர்நீதிமன்றம் |
D | உச்சநீதிமன்றம் |
Question 1 Explanation:
குறிப்பு: இந்திய அரசியலமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒரு சீரான நிர்வாக அமைப்பினை ஏற்படுத்துகிறது.
Question 2 |
இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றிக் கூறும் சரத்து
A | 52-78 |
B | 153-179 |
C | 152-237 |
D | 51-70 |
Question 2 Explanation:
குறிப்பு: இந்திய அரசியலமைப்பில் பகுதி-VI-ல் 152-237 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றிக் கூறுகிறது.
Question 3 |
ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பற்றிக் கூறிய சட்டப்பிரிவு
A | 300 |
B | 320 |
C | 340 |
D | 370 |
Question 3 Explanation:
குறிப்பு: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. (தற்போது நடைமுறையில் இல்லை).
Question 4 |
மாநில அரசின் நிர்வாக அமைப்புகளை வகைப்படுத்துக.
A | அமைச்சரவை, ஆளுநர், முதலமைச்சர் |
B | ஆளுநர், அமைச்சரவை, முதலமைச்சர் |
C | ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை |
D | முதலமைச்சர், ஆளுநர், அமைச்சரவை |
Question 4 Explanation:
குறிப்பு: மத்திய அரசைப் போன்று மாநில அரசுகளும் நிர்வாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை என்ற 3 பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.
Question 5 |
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நடைமுறைக்கு வந்த ஆண்டு
A | 1946 |
B | 1947 |
C | 1950 |
D | 1957 |
Question 5 Explanation:
குறிப்பு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு 1957 நவம்பர் 17ம் நாள் ஏற்கப்பட்டு 1957 நவம்பர் 26ம் நாள் நடைமுறைக்கு வந்தது.
Question 6 |
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றிக் கூறும் சட்டவிதி
A | 260 |
B | 154 |
C | 156 |
D | 235 |
Question 6 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 154(1)ன் படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாலோ, அரசியலமைப்பின் படி, செயல்படுத்தப்பட வேண்டும்.
Question 7 |
கீழ்க்கண்டவற்றில் ஆளுநரைப் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- குடியரசுத்தலைவரால் ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். குடியரசுத் தலைவரின் பேரில் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
- தனது சொந்த மாநிலத்திலேயே ஆளுநராக நியமிக்கப்படலாம்
- மாநில சட்டமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ ஆளுநரின் பணிநீக்கத்தில் பங்கு பெற முடியாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
A | 1 மட்டும் சரி |
B | 2 மட்டும் சரி |
C | 1,2 சரி |
D | 1,3 சரி |
Question 7 Explanation:
குறிப்பு: பொதுவாக ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார். குடியரசுத்தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம்.
Question 8 |
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்ய பின்பற்றப்படும் மரபுகளில் கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
- ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர், தான் எந்த மாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கக்கூடாது.
- ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன் மொழிய வேண்டும்.
A | 1 மட்டும் சரி |
B | 2 மட்டும் சரி |
C | 1,2 சரி |
D | 1,2 தவறு |
Question 8 Explanation:
குறிப்பு: ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்ய மேற்கூறிய இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன.
Question 9 |
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர்
A | பிரதமர் |
B | குடியரசுத்தலைவர் |
C | ஆளுநர் |
D | முதலமைச்சர் |
Question 9 Explanation:
குறிப்பு: மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஓர் ஆளுநர் ஆகவும், நிர்வாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் சர்க்காரியா குழு கூறிய ஆளுநர் நியமனம் பற்றிய ஆலோசனைகளில் தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க.
- மாநில சட்டமன்ற குழுவால் தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஆளுநர் நியமனம் நடைபெறும்.
- முதலமைச்சரின் ஒப்புதலுடன் மாநில அரசால் தயாரிக்கப்படும் பட்டியலிலிருந்து ஆளுநர் நியமனம் நடைபெறும்.
- முதலமைச்சரால் நடத்தப்படும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் ஆளுநர் நியமனம் நடைபெறும்.
A | கூற்று 1 தவறு |
B | கூற்று 2 தவறு |
C | கூற்று 3 தவறு |
D | அனைத்தும் சரி |
Question 10 Explanation:
குறிப்பு: மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு சர்க்காரியா குழு ஆகும்.
Question 11 |
ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைப் பற்றிக் கூறும் சரத்து
A | 151-152 |
B | 157-158 |
C | 141-142 |
D | 147-148 |
Question 11 Explanation:
குறிப்பு: ஆளுநர் பதவிக்கு இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது. இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது.
Question 12 |
சட்டப்பிரிவு 163ன் படி, மாநில நிர்வாகத் தலைவராகிய _______ குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.
A | குடியரசுத்தலைவர் |
B | பிரதமர் |
C | முதலமைச்சர் |
D | ஆளுநர் |
Question 12 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.
Question 13 |
முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமிப்பவர்
A | குடியரசுத்தலைவர் |
B | ஆளுநர் |
C | பிரதமர் |
D | துணைக்குடியரசுத்தலைவர் |
Question 13 Explanation:
குறிப்பு: அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
Question 14 |
ஆங்கிலோ – இந்தியன் பிரிவிலிருந்து எத்தனை உறுப்பினர்களை மாநில சட்டமன்றத்திற்கு ஆளுநர் நியமனம் செய்கிறார்?
A | 2 |
B | 1 |
C | 3 |
D | 4 |
Question 15 |
________ பணியிடம் காலியாக இருக்கும் போது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
A | முதலமைச்சர் |
B | துணை முதலமைச்சர் |
C | கேபினட் அமைச்சர் |
D | சபாநாயகர் |
Question 15 Explanation:
குறிப்பு: சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் போது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
Question 16 |
மாநில அரசு வழக்கறிஞரின் ஊதியத்தை நிர்ணயம் செய்பவர்
A | குடியரசுத்தலைவர் |
B | ஆளுநர் |
C | பிரதமர் |
D | துணைக்குடியரசுத்தலைவர் |
Question 16 Explanation:
குறிப்பு: மாநில அரசு வழக்கறிஞரை நியமிப்பவராகவும், அவரது ஊதியத்தை நிர்ணயம் செய்பவராகவும் ஆளுநர் உள்ளார். ஆளுநர் விரும்பும் வரை அரசு வழக்கறிஞர் அவரது பதவியைத் தொடரலாம்.
Question 17 |
மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
A | பிரதமர் |
B | குடியரசுத்தலைவர் |
C | ஆளுநர் |
D | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 17 Explanation:
குறிப்பு: ஆளுநர் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன் துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
Question 18 |
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர்
A | பிரதமர் |
B | குடியரசுத்தலைவர் |
C | ஆளுநர் |
D | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 18 Explanation:
குறிப்பு: ஆளுநரால் இவர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. குடியரசுத்தலைவரால் மட்டுமே பணி நீக்கம் செய்யப்படும்.
Question 19 |
பின்வருவனவற்றுள் தவறானவற்றைத் தேர்ந்தெடு.
- ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால் அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
- பொதுத்தேர்தல் முடிந்து முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் நியமனத்திற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.
- ஆளுநர் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
A | கூற்று 1 தவறு |
B | கூற்று 2 தவறு |
C | கூற்று 3 தவறு |
D | அனைத்தும் சரி |
Question 19 Explanation:
குறிப்பு: நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
Question 20 |
கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்ட மேலவையின் _______ இடங்களுக்கு அவர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார்.
A | மூன்றில் ஒரு பங்கு |
B | நான்கில் ஒரு பங்கு |
C | ஐந்தில் ஒரு பங்கு |
D | ஆறில் ஒரு பங்கு |
Question 20 Explanation:
குறிப்பு: மாநில சட்ட மேலவையின் ஆறில் ஒரு பங்கு இடங்களுக்கு கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து ஆளுநர் நியமனம் செய்கிறார்.
Question 21 |
குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும்பொழுது குடியரசுத்தலைவரின் பெயரில் மாநிலத்தில் நேரடியாக ஆட்சி செய்பவர்
A | பிரதமர் |
B | அமைச்சரவைக்குழு |
C | ஆளுநர் |
D | குடியரசுத்தலைவர் |
Question 21 Explanation:
குறிப்பு: குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும்பொழுது குடியரசுத்தலைவரின் பெயரில் மாநிலத்தில் நேரடியாக ஆட்சி செய்பவர் ஆளுநர்
Question 22 |
ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கும் இந்திய அரசியலமைப்புச்சட்டம்
A | 158 |
B | 158 3(A) |
C | 168 |
D | 168 3(A) |
Question 22 Explanation:
குறிப்பு: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 158 3(A)-ன் படி, ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
Question 23 |
எந்த ஆண்டில் உயர்நீதிமன்றங்கள் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது?
A | 1762 |
B | 1882 |
C | 1862 |
D | 1852 |
Question 23 Explanation:
குறிப்பு: 1862ல் உயர்நீதிமன்றங்கள் கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன. 1950க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர்நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர்நீதிமன்றமாக விளங்கியது.
Question 24 |
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ________ கையொப்பமிட வேண்டும்.
A | பிரதமர் |
B | சட்டத்துறை அமைச்சர் |
C | குடியரசுத்தலைவர் |
D | ஆளுநர் |
Question 24 Explanation:
குறிப்பு: மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநரால் கையொப்பமிட வேண்டும். அதன் பின்னரே சட்டமாகும். ஆனால் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் பரீசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
Question 25 |
மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்டப்பிரிவு
A | சட்டப்பிரிவு 352 |
B | சட்டப்பிரிவு 356 |
C | சட்டப்பிரிவு 213 |
D | சட்டப்பிரிவு 218 |
Question 25 Explanation:
குறிப்பு: ஆளுநர் பிறப்பிக்கும் இந்த அவசர சட்டம் 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
Question 26 |
மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்பவர்
A | நிதிஅமைச்சர் |
B | முதலமைச்சர் |
C | ஆளுநர் |
D | துணை முதல்வர் |
Question 26 Explanation:
குறிப்பு: மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.
Question 27 |
கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- ஆளுநரின் முன் அனுமதியுடன் தான் பணமசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும். ஆளுநரின் பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது.
- அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது.
A | கூற்று 1 தவறு |
B | கூற்று 2 தவறு |
C | கூற்று 3 தவறு |
D | எதுவுமில்லை |
Question 27 Explanation:
குறிப்பு: அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
Question 28 |
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
A | பிரதமர் |
B | துணைப்பிரதமர் |
C | ஆளுநர் |
D | துணைக்குடியரசுத்தலைவர் |
Question 28 Explanation:
குறிப்பு: அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்க முடியும்.
Question 29 |
மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம் என்று கூறும் சட்டப்பிரிவு
A | 356 |
B | 350 |
C | 301 |
D | 358 |
Question 29 Explanation:
குறிப்பு: மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.
Question 30 |
கீழ்க்காணும் கூற்றுகளில் ஆளுநரின் சிறப்புரிமைகளில் தவறானவை எவை?
- ஆளுநர் தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
- ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது. இவருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
- ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
A | கூற்று 1 தவறு |
B | கூற்று 2 தவறு |
C | கூற்று 3 தவறு |
D | அனைத்தும் சரி |
Question 30 Explanation:
குறிப்பு: ஆளுநரின் சிறப்புரிமைகள் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 361(1)ன் கீழ் வருகிறது.
Question 31 |
மாநில அரசாங்கத்தின் தலைவர்
A | முதலமைச்சர் |
B | ஆளுநர் |
C | அமைச்சரவைக்குழு |
D | சபாநாயகர் |
Question 31 Explanation:
குறிப்பு: அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற முறையில் அமைந்த அரசில், ஆளுநர் மாநிலத்தின் பெயரளவு நிர்வாகியாகவும், முதலமைச்சர் உண்மையான நிர்வாகியாகவும் உள்ளனர்.
Question 32 |
முதலமைச்சரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A | 6 |
B | 5 |
C | 4 |
D | 7 |
Question 32 Explanation:
குறிப்பு: முதலமைச்சரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும் அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம். சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கின்றாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.
Question 33 |
பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையத்தை அமைக்கிறார்?
A | 5 |
B | 6 |
C | 2 |
D | 4 |
Question 33 Explanation:
குறிப்பு: பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒரு முறை நிதி ஆணையம் ஒன்றை ஆளுநர் அமைக்கிறார்.
Question 34 |
இந்தியா சுதந்திரம் அடைந்த போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
A | C. இராஜகோபாலாச்சாரி |
B | M. பக்தவச்சலம் |
C | O.P. இராமசாமி |
D | K. காமராஜர் |
Question 34 Explanation:
குறிப்பு: இந்தியா சுதந்திரம் அடைந்த போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் C. இராஜகோபாலாச்சாரி. 1947 முதல் 1949 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.
Question 35 |
அமைச்சரவையின் தலைவர்
A | ஆளுநர் |
B | முதலமைச்சர் |
C | துணைக்குடியரசுத்தலைவர் |
D | குடியரசுத்தலைவர் |
Question 35 Explanation:
குறிப்பு: மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்.
Question 36 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும், ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார். சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
- சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார். எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
A | கூற்று 1 சரி |
B | கூற்று 1 சரி |
C | கூற்று 1,2 சரி |
D | ஏதுமில்லை |
Question 37 |
அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுப்பவர்
A | ஆளுநர் |
B | முதலமைச்சர் |
C | துணைக்குடியரசுத்தலைவர் |
D | குடியரசுத்தலைவர் |
Question 37 Explanation:
குறிப்பு: அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுப்பவர் முதலமைச்சர் ஆவார்.
Question 38 |
ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு
A | 164 |
B | 154 |
C | 164(1) |
D | 154(1) |
Question 38 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது மற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் நியமிக்க வழிவகை செய்கிறது.
Question 39 |
முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை விழுக்காடு இருக்க வேண்டும்?
A | 15% |
B | 25% |
C | 35% |
D | 45% |
Question 39 Explanation:
குறிப்பு: முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு இருக்க வேண்டும் எனச் சட்டப்பிரிவு 164(1A) கூறுகிறது.
Question 40 |
முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவும் வேண்டும் என்று கூறும் சரத்து
A | 162 |
B | 163(1) |
C | 164(1) |
D | 165 |
Question 40 Explanation:
குறிப்பு: முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவும் வேண்டும் என்று கூறும் சரத்து 163(1).
Question 41 |
சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் எத்தனை மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்?
A | 7 |
B | 4 |
C | 6 |
D | 8 |
Question 41 Explanation:
குறிப்பு: அமைச்சரவைக் குழுவின் அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
Question 42 |
ஆளுநருக்கும், அமைச்சரவைக்குமிடையே பாலமாக செயல்படுபவர்
A | முதலமைச்சர் |
B | பிரதமர் |
C | துணைப்பிரதமர் |
D | குடியரசுத்தலைவர் |
Question 42 Explanation:
குறிப்பு: ஆளுநருக்கும், அமைச்சரவைக்குமிடையே செய்தித்தொடர்புகளில் முதன்மையாக விளங்குகிறார்.
Question 43 |
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளில் பற்றிய கூற்றில் தவறானதைத் தேர்ந்தெடு.
- ஆண்டு வரவு செலவுத்திட்டம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது. மாநிலத்தின் செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
- ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா எனத் தீர்மானிக்கிறது
A | கூற்று 1 தவறு |
B | கூற்று 2 தவறு |
C | கூற்று 2 தவறு |
D | ஏதுமில்லை |
Question 44 |
ஈரவை சட்டமன்றங்களை பெற்றுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை
A | 8 |
B | 7 |
C | 9 |
D | 6 |
Question 44 Explanation:
குறிப்பு: ஈரவை சட்டமன்றங்களை பெற்றுள்ள மாநிலங்கள்: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர்.
Question 45 |
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை வரை இருக்கலாம்?
A | 26 |
B | 27 |
C | 32 |
D | 36 |
Question 45 Explanation:
குறிப்பு: தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி (234) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234ல் 15 விழுக்காடு.
Question 46 |
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?
A | 500 |
B | 400 |
C | 300 |
D | 200 |
Question 46 Explanation:
குறிப்பு: சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும், குறைந்தபட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
Question 47 |
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வளவு இருக்க வேண்டும்?
A | 3ல் ஒரு பங்கு |
B | 2ல் ஒரு பங்கு |
C | 4ல் ஒரு பங்கு |
D | 5ல் ஒரு பங்கு |
Question 47 Explanation:
குறிப்பு: சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3ல் ஒரு பங்கு இருக்க வேண்டும்.
Question 48 |
நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்டப்பேரவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
A | 32 |
B | 34 |
C | 36 |
D | 40 |
Question 48 Explanation:
குறிப்பு: நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்டப்பேரவையில் 36 உறுப்பினர்கள் உள்ளனர்.
Question 49 |
அமைச்சரவையின் உட்கரு எது?
A | கேபினட் |
B | மாநிலங்களவை |
C | மாநில சட்டசபை |
D | மக்களவை |
Question 49 Explanation:
குறிப்பு: அமைச்சரவையின் உட்கரு கேபினட் என்ற சிறிய அமைப்பு. இது மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
Question 50 |
சட்டமன்றம் கலைக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை __________
A | இழப்பார் |
B | இழக்க மாட்டார் |
C | நிரந்திரமாக்குவார் |
D | ஏதுமில்லை |
Question 51 |
சட்ட மேலவைக்கான தேர்தல் அடிப்படையில் பொருத்துக.
- (1)உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் - 12ல் ஒரு பங்கு
- (2) பட்டதாரிகள், பட்டதாரி ஆசிரியர்கள் - 6ல் ஒரு பங்கு
- (3) கலை, இலக்கியம், அறிவியல் - 3ல் ஒரு பங்கு
A | 1 3 2 |
B | 2 3 1 |
C | 2 1 3 |
D | 1 2 3 |
Question 51 Explanation:
குறிப்பு: சட்ட மேலவைக்கான தேர்தலில் 3ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களாலும், 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 6ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலை, இலக்கியம், அறிவியல், சமூகசேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்.
Question 52 |
சட்டமேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 3ல் ஒரு பங்குக்கு மிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40க்கு குறையாமலும் இருக்க வேண்டுமெனக் கூறும் அரசியலமைப்பு சரத்து
A | 121(1) |
B | 123 |
C | 171(1) |
D | 124 |
Question 53 |
சட்டமேலவையின் மறுபெயர்
A | மாநிலங்களவை |
B | மக்களவை |
C | விதான் பரிஷத் |
D | நிர்வச்சான் சதான் |
Question 53 Explanation:
குறிப்பு: சட்டமேலவை இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகின்றது.
Question 54 |
எந்த ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது?
A | 1980 |
B | 1986 |
C | 1987 |
D | 1990 |
Question 54 Explanation:
குறிப்பு: 1986ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
Question 55 |
சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவு
A | 168 |
B | 167 |
C | 169 |
D | 170 |
Question 55 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 169 சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி விவரிக்கிறது.
Question 56 |
மாநிலப்பட்டியலிலுள்ள அனைத்துத்துறைகள் மீதும், பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம் ஆனால் அதே சட்டத்தை மத்திய அரசு இயற்றும் பொழுது மாநில அரசின் சட்டம் _____________
A | செயல்படும் |
B | செயலற்றதாகிவிடும் |
C | பரிசீலிக்கப்படும் |
D | தாமதமாக செயல்படும் |
Question 56 Explanation:
குறிப்பு: அரசியலமைப்பின்படி மாநிலப்பட்டியலிலுள்ள அனைத்துத்துறைகள் மீதும், பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம் ஆனால் அதே சட்டத்தை மத்திய அரசு இயற்றும் பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகிவிடும்.
Question 57 |
சட்டப்பிரிவு 169-ன்படி சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் ________ பங்கு உறுப்பினர்கள் வாக்களித்தால் சட்ட மேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
A | இரண்டில் மூன்று பங்கு |
B | நான்கில் மூன்று பங்கு |
C | ஐந்தில் இரண்டு பங்கு |
D | மூன்றில் இரண்டு பங்கு |
Question 57 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 169-ன்படி சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்ட மேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் சட்ட மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.
Question 58 |
ஒவ்வொரு மசோதாவும் சட்டமன்றத்தில் எத்தனை நிலைகளுக்குப் பிறகு நிறைவேறுகிறது?
A | 5 |
B | 3 |
C | 4 |
D | 6 |
Question 58 Explanation:
குறிப்பு: மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேறுகிறது. ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்பு அம்மசோதா சட்டமாகிறது.
Question 59 |
மாநில நிர்வாகத்துறையை கட்டுப்படுத்தும் அமைப்பு
A | அமைச்சரவை |
B | நாடாளுமன்றம் |
C | சட்டமன்றம் |
D | சட்ட மேலவை |
Question 59 Explanation:
குறிப்பு: சட்டமன்றம் நிர்வாகத்துறையை கட்டுப்படுத்துகிறது. அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
Question 60 |
சட்டமன்றம் ஈரவைகளைக் கொண்டிருக்கும் போது அதிக அதிகாரம் பெற்ற அவை
A | மக்களவை |
B | இ, ஈ இரண்டும் |
C | இ) சட்டமன்ற மேலவை |
D | ஈ) சட்டமன்ற கீழவை |
Question 60 Explanation:
குறிப்பு: சட்டமன்றம் ஈரவைகளைக் கொண்டிருக்கும் போது மேலவையைக் காட்டிலும் சட்டமன்றக் கீழவை அதிக அதிகாரங்களுடன் விளங்குகிறது.
Question 61 |
பண மசோதாவினை ______ல் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்
A | சட்டமன்ற மேலவை |
B | சட்டமன்ற கீழவை |
C | மாநில சட்டசபை |
D | நாடாளுமன்றம் |
Question 61 Explanation:
குறிப்பு: சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது. பண மசோதாவினை கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.
Question 62 |
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- மாநில அளவில் உயர்நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும். இருப்பினும் உச்சநீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
- ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ஆளுநரால் தீர்மானிக்கப்படுகிறது.
A | கூற்று 1 மட்டும் |
B | கூற்று 2 மட்டும் |
C | கூற்று 1,2 மட்டும் |
D | ஏதுமில்லை |
Question 62 Explanation:
குறிப்பு: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத்தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.
Question 63 |
எந்த ஆண்டு மற்றும் எத்தனையாவது சட்டத்திருத்தத்தின்படி, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது?
A | 1956, 7-வது சட்டத்திருத்தம் |
B | 1966, 17-வது சட்டத்திருத்தம் |
C | 1946, 7-வது சட்டத்திருத்தம் |
D | 1976, 17-வது சட்டத்திருத்தம் |
Question 63 Explanation:
குறிப்பு: கவுகாத்தியிலுள்ள உயர்நீதிமன்றம் ஏழு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது. டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
Question 64 |
தற்போது இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை
A | 50 |
B | 41 |
C | 25 |
D | 21 |
Question 64 Explanation:
குறிப்பு: தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் (2019 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டு அமராவதியில் இயங்கும் ஆந்திரப்பிரதேசத்தின் புதிய உயர்நீதிமன்றத்தையும் சேர்த்து) மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
Question 65 |
பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகச் செயல்படும் உயர்நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
A | டெல்லி |
B | சண்டிகர் |
C | பஞ்சாப் |
D | ஹரியானா |
Question 65 Explanation:
குறிப்பு: பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர்நீதிமன்றம் பொதுநீதிமன்றமாக உள்ளது.
Question 66 |
உலகிலுள்ள மிகப்பெரிய நீதித்துறை வளாகங்களில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?
A | 1 |
B | 2 |
C | 3 |
D | 4 |
Question 66 Explanation:
குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் ஆகும்.
Question 67 |
ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதியை நியமனம் செய்ய அனுமதியளிக்கும் சட்டப்பிரிவு
A | சட்டப்பிரிவு 216 |
B | சட்டப்பிரிவு 201 |
C | சட்டப்பிரிவு 206 |
D | சட்டப்பிரிவு 226 |
Question 67 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 216-ன் படி ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் காலத்திற்கேற்றவாறு நியமனம் செய்கிறார்.
Question 68 |
அடிப்படை உரிமைகளுக்காக பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கும் சரத்து
A | சட்டப்பிரிவு 226 |
B | சட்டப்பிரிவு 201 |
C | சட்டப்பிரிவு 206 |
D | சட்டப்பிரிவு 216 |
Question 68 Explanation:
குறிப்பு: இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
Question 69 |
எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உயர் நீதிமன்ற நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறைத்தது?
A | 1961 |
B | 1974 |
C | 1976 |
D | 1988 |
Question 69 Explanation:
குறிப்பு: 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உயர் நீதிமன்ற நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறைத்தது மற்றும் தடை செய்தது. இருப்பினும் 1977 ஆம் ஆண்டு 43 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு நீதிப்புனராய்வு அதிகாரத்தை வழங்கியது.
Question 70 |
உயர் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு
A | 221 மற்றும் 222 |
B | 232 மற்றும் 233 |
C | 226 மற்றும் 227 |
D | 228 மற்றும் 229 |
Question 70 Explanation:
குறிப்பு: நீதிப்புனராய்வு என்பது மத்திய – மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது முரண்பட்டதா என்பதை ஆராய உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஒர் அதிகாரமாகும். நீதிப்புனராய்வு என்ற சொல் இருப்பினும் அரசியலமைப்பில் பயன்படுத்தப்படவில்லை. 226 மற்றும் 227-வது சட்டப்பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி வெளிப்படையாக கூறுகிறது.
Question 71 |
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகமாக எந்த நீதிமன்றம் விளங்குகிறது?
A | உயர்நீதிமன்றம் |
B | உச்சநீதிமன்றம் |
C | மாவட்டநீதிமன்றம் |
D | மேற்கூறிய அனைத்தும் |
Question 71 Explanation:
குறிப்பு: உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன. இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.
Question 72 |
சார் நிலை நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு
A | உயர்நீதிமன்றம் |
B | உச்சநீதிமன்றம் |
C | மாவட்டநீதிமன்றம் |
D | மேற்கூறிய அனைத்தும் |
Question 72 Explanation:
குறிப்பு: உச்ச நீதிமன்றம் இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவது போல் உயர் நீதிமன்றம் சார் நிலை நீதிமன்றங்களை தனது ஆணையினால் கட்டுப்படுத்துகின்றது
Question 73 |
மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து உயர்நீதிமன்றம் யாருடன் ஆலோசிக்கிறது?
A | பிரதமர் |
B | குடியரசுத்தலைவர் |
C | முதலமைச்சர் |
D | ஆளுநர் |
Question 73 Explanation:
குறிப்பு: மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து ஆளுநரால் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதிகளைத் தவிர, மற்ற நீதிப்பணிகளுக்கு நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
Question 74 |
கீழ்க்காணும் கூற்றுக்களில் சபாநாயகரின் செயல்பாடுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
- சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
- மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
- உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
A | கூற்று 1 மட்டும் சரி |
B | கூற்று 2 மட்டும் சரி |
C | கூற்று 3 மட்டும் சரி |
D | அனைத்தும் சரி |
Question 75 |
பொருத்துக
- ஆட்கொணர்வு நீதிப் பேராணை - குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
- கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை - தவறாக ஒருவர் காவலில் வைக்கப்படுதல்
- தடையுறுத்தும் நீதிப்பேராணை - கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் இடும் ஆணை
- தகுதி வினவும் நீதிப்பேராணை - கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை அறிதல்
- ஆவணக் கேட்பு பேராணை - பொதுப்பதவிக்கு தவறாக வரும் ஒருவரைத் தடுத்தல்
A | 5 1 2 3 4 |
B | 5 2 3 1 4 |
C | 1 4 3 2 5 |
D | 2 1 3 4 5 |
Question 75 Explanation:
குறிப்பு:
ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus)
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் நீதிமன்ற காவலில் வைத்த அதிகாரிக்கோ அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்ற ஆணை மூலம் விடுவிக்கப்படுவார்.
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் இடும் ஆணை (Mandamus) ஆகும். ஓர் அரசு அலுவலர் அல்லது ஒரு கழகம் அல்லது மற்ற நிறுவனங்கள் பணியை விரைந்து நிறைவேற்றுமாறு கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. இதனால் தடைப்பட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படுகின்றன.
தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையைத் தாண்டி செயல்படாமல் இது தடுக்கிறது.
தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo Warranto)
பொதுப்பதவிக்கு தவறாக வரும் ஒருவரை இது தடுக்கிறது. இதன் படி ஒருவர் அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்டப் பதவியை வகிக்கிறார் என்பதை தெளிவுபடுத்திக் கோரும் நீதிப்பேராணை ஆகும்.
ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
கீழ் நீதிமன்றங்களிடமிருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், ஆதாரங்கள், கோப்புகள் ஆகியவற்றை உயர் நீதிமன்றங்கள் கேட்டுபெறும் ஆணை. இதன்மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.
Question 76 |
கீழ்க்காணும் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது?
A | சட்டப்பிரிவு 32 |
B | சட்டப்பிரிவு 37 |
C | சட்டப்பிரிவு 31 |
D | சட்டப்பிரிவு 39 |
Question 76 Explanation:
குறிப்பு: சட்டப்பிரிவு 32-ன் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிட உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரம் பெரியதாகும். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் இவைகளை வெளியிடுகிறது. உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் மட்டுமின்றி சாதாரண சட்டமீறலுக்கும் நீதிப்பேராணைகளை வெளியிட முடியும்.
Question 77 |
எந்த நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது?
A | மாவட்ட நீதிமன்றங்கள் |
B | சார்பு நீதிமன்றங்கள் |
C | இராணுவ நீதிமன்றங்கள் |
D | குடும்பநல நீதிமன்றங்கள் |
Question 77 Explanation:
குறிப்பு: இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.
Question 78 |
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் யார்?
A | சர்தார் உஜ்ஜல் சிங் |
B | M. M. இஸ்மாயில் |
C | சுர்ஜித் சிங் பர்னாலா |
D | P.C. அலெக்ஸாண்டர் |
Question 78 Explanation:
குறிப்பு: 1969 முதல் 1971 வரை பதவியில் இருந்தார்.
Question 79 |
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
A | 58 |
B | 59 |
C | 61 |
D | 62 |
Question 80 |
ஆண்டுகளின் அடிப்படையில் முதலமைச்சர்களை வகைப்படுத்துக.
- (1) C. இராஜகோபாலச்சாரி
- (2) M.G. ராமச்சந்திரன்
- (3) M. பக்தவச்சலம்
- (4) K. காமராஜர்
- (5) P.S. குமாரசாமி ராஜா
A | ஆண்டுகள் – 1963 – 1967 |
B | 1952 – 1954 |
C | 1949 - 1952 |
D | 1954 – 1963 |
E | None |
Question 80 Explanation:
விடைகள்: (1) C. இராஜகோபாலச்சாரி - 1952 – 1954; (2) M.G. ராமச்சந்திரன் – 1977 - 1987;
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 80 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
1 509 Less than a minute
You scored 54 out of 80. Your performance has been rated as Not bad!