Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

மனித உரிமைகள் Online Test 9th Social Science Lesson 10 Questions in Tamil

மனித உரிமைகள் Online Test 9th Social Science Lesson 10 Questions in Tamil

Congratulations - you have completed மனித உரிமைகள் Online Test 9th Social Science Lesson 10 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்." என்று _________ மனித உரிமையை வரையறுக்கிறது.
A
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
B
ஐரோப்பிய யூனியன்
C
ஐ.நா சபை
D
WHO
Question 1 Explanation: 
(குறிப்பு: மனித உரிமையின் வரலாற்று வேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன.)
Question 2
இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப் போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும் ஐ.நா. சபை ___________ ஆண்டு தொடங்கப்பட்டது.
A
1942
B
1944
C
1945
D
1946
Question 2 Explanation: 
(குறிப்பு: மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை பெரும்பங்கு வகிக்கின்றது.)
Question 3
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை __________ அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.
A
1945 டிசம்பர் 5
B
1947 ஜனவரி 10
C
1948 பிப்ரவரி 10
D
1948 டிசம்பர் 10
Question 3 Explanation: 
(குறிப்பு: UDHR, பொது சபை தீர்மானம் 217Aன் படி நிறைவேற்றப்பட்டது.)
Question 4
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் ___________ உறுப்புகள் உள்ளன.
A
10
B
20
C
30
D
40
Question 4 Explanation: 
(குறிப்பு: அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான UDHR பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.)
Question 5
  • கூற்று 1: UDHR சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
  • கூற்று 2: UDHR பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 5 Explanation: 
(குறிப்பு: மனித உரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.)
Question 6
இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலாவை _________ ஆண்டு F.W. டி கிளார்க் விடுதலை செய்தார்.
A
1989
B
1990
C
1991
D
1992
Question 6 Explanation: 
(குறிப்பு: இன ஒதுக்கல் தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு ஆகும்.)
Question 7
ஆப்பிரிக்காவில் __________ ஆண்டு நடைபெற்ற பல்லினப்பொதுத் தேர்தலில் மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது.
A
1991
B
1992
C
1993
D
1994
Question 7 Explanation: 
(குறிப்பு: மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது.)
Question 8
ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகள் _____________ எனப்படும்.
A
மனித உரிமைகள்
B
பொருளாதார உரிமைகள்
C
சமூக உரிமைகள்
D
பண்பாட்டு உரிமைகள்
Question 9
ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை
A
மனித உரிமைகள்
B
பொருளாதார உரிமைகள்
C
சமூக உரிமைகள்
D
பண்பாட்டு உரிமைகள்
Question 9 Explanation: 
(குறிப்பு: ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன பொருளாதார உரிமைகளால் பாதுகாக்கப்படுகின்றன.)
Question 10
  • கூற்று 1: ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள் ஆகும்.
  • கூற்று 2: பண்பாட்டு மகிழ்வில் சமத்துவம், மனித கண்ணியம், பாகுபாடின்மை ஆகியவற்றையும் பண்பாட்டு உரிமை உள்ளடக்கியுள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 10 Explanation: 
(குறிப்பு: சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.)
Question 11
ஒவ்வொரு மனிதனுக்கும் இன, தேசிய, நிற, பால், வயது, சமயம் போன்ற பாகுபாடுகளின்றி, அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிப்பது
A
குடிமை உரிமைகள்
B
அரசியல் உரிமைகள்
C
சமூக உரிமைகள்
D
பண்பாட்டு உரிமைகள்
Question 12
அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகள்
A
குடிமை உரிமைகள்
B
அரசியல் உரிமைகள்
C
சமூக உரிமைகள்
D
பண்பாட்டு உரிமைகள்
Question 12 Explanation: 
(குறிப்பு: அரசியல் உரிமைகள் சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.)
Question 13
  • கூற்று 1: குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவை ஆகும்.
  • கூற்று 2: நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரத்தை அரசியல் உரிமைகள் அளிக்கின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 13 Explanation: 
(குறிப்பு: குடிமை மற்றும் அரசியல் உரிமைகள், ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.)
Question 14
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் __________ எனப்படும்.
A
குடிமை உரிமைகள்
B
அரசியல் உரிமைகள்
C
சமூக உரிமைகள்
D
அடிப்படை உரிமைகள்
Question 14 Explanation: 
(குறிப்பு: அடிப்படை உரிமைகள், குடிமக்களுக்கு பேசும் உரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை போன்ற மேலும் சில உரிமைகளை வழங்கி மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.)
Question 15
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகள் எவை?
  1. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
  2. அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை
  3. சமத்துவ உரிமை
  4. சுதந்திர உரிமை
  5. சுரண்டலுக்கு எதிரான உரிமை
  6. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
A
அனைத்தும்
B
3, 4, 5, 6
C
1, 2, 3, 5, 6
D
1, 3, 4, 5
Question 16
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது
A
சுதந்திர உரிமை
B
சமத்துவ உரிமை
C
சுரண்டலுக்கு எதிரான உரிமை
D
சமய சுதந்திர உரிமை
Question 16 Explanation: 
(குறிப்பு: சமயம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுப்படுத்தலோ, ஒதுக்குதலோ சட்டத்திற்கு புறம்பானதாகும். அவ்வாறு நடத்தப்பட்டால் ஒருவர் நீதிமன்றத்தை அணுகலாம்.)
Question 17
___________ வகையான சுதந்திரங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
A
4
B
5
C
6
D
7
Question 17 Explanation: 
(குறிப்பு: சுதந்திர உரிமை பேச்சுரிமை ஆயுதமின்றி கூடும் உரிமை சங்கங்கள் அமைக்கும் உரிமை இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை)
Question 18
சுரண்டலுக்கெதிரான உரிமையின் படி ___________ வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
A
14
B
15
C
16
D
17
Question 18 Explanation: 
(குறிப்பு: சுரண்டலுக்கெதிரான உரிமையின் படி, எந்த ஒரு ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது.)
Question 19
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை)
  1. குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.
  2. குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 20
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்)
A
அரசமைப்பு கூட்டம் பண்பாட்டினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமையை வழங்கியுள்ளது.
B
கல்விக்கூடங்களை அமைக்கவும், நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.
C
சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம்.
D
மக்களால் நிறுவப்பட்ட மத நிறுவனங்களுக்கு அரசு மானியங்கள் வழங்குவதில்லை.
Question 20 Explanation: 
(குறிப்பு: மத நிறுவனங்களில் சாதி, நிற, இனம் அல்லது சமய வேறுபாட்டினைக் காரணம் கூறி யாருக்கும் அனுமதி மறுத்தல் கூடாது.)
Question 21
ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு __________ எனப்படும்.
A
அரசமைப்பு தீர்வு
B
கொள்கைத் தீர்மானம்
C
நீதிப் பேராணை
D
அடிப்படை உரிமை
Question 22
மனித உரிமைகள் தொடர்பான கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A
மனித உரிமைகள் என்பவை மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத்தோடும் வாழுகின்ற உரிமைகள் ஆகும்.
B
மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன.
C
அவசரக் காலங்களில் இவற்றை பறிக்க இயலும்.
D
மனித உரிமைகள் பன்னாடு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.
Question 22 Explanation: 
(குறிப்பு: மனித உரிமைகளை பறிக்க இயலாது.)
Question 23
அடிப்படை உரிமைகள் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும்.
  2. இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.
  3. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
  4. அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 4 சரி
Question 23 Explanation: 
(குறிப்பு: ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின்படி அரசானது குறைந்தபட்ச உரிமைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அது மேலும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளைப் போல் செயல்படுத்தப்பட வேண்டும்.)
Question 24
  • கூற்று: ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
  • காரணம்: அடிப்படை உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டவை ஆகும்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 24 Explanation: 
(குறிப்பு: ஒரு செயல் அரசமைப்பு சட்டத்தின்படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.)
Question 25
  • கூற்று 1: அரசியலமைப்புச் சட்டங்களுக்கான உரிமையின்படி பிரத்திகா யாஷினி நீதிமன்றத்தை அணுகியதின் மூலம் தனது வேலைவாய்ப்பு உரிமையை வென்றார்.
  • கூற்று 2: 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு: 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெறவில்லை.)
Question 26
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ___________ சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டன.
A
40
B
41
C
42
D
43
Question 26 Explanation: 
(குறிப்பு: 1976ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன.)
Question 27
இந்திய அரசமைப்பு சட்டம் _________ அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
A
6
B
8
C
9
D
11
Question 28
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் __________ ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது.
A
2005
B
2006
C
2007
D
2008
Question 28 Explanation: 
(குறிப்பு: இந்த சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.)
Question 29
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ___________ ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
A
1992 அக்டோபர் 2
B
1992 அக்டோபர் 12
C
1993 அக்டோபர் 2
D
1993 அக்டோபர் 12
Question 29 Explanation: 
(குறிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.)
Question 30
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  2. இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 31
கீழ்க்கண்டவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் எவை?
  1. மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்துதல்.
  2. மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  3. மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  4. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  5. மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
A
அனைத்தும்
B
1, 2, 4, 5
C
2, 3, 4, 5
D
1, 3, 4, 5
Question 32
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993ல் பிரிவு ________ல் உள்ளது.
A
19
B
20
C
21
D
22
Question 32 Explanation: 
(குறிப்பு: மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும்.)
Question 33
மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு _________ற்கு இணையான அதிகாரம் உண்டு.
A
குற்றவியல் நீதிமன்றம்
B
உரிமையியல் நீதிமன்றம்
C
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
D
உச்சநீதிமன்றம்
Question 33 Explanation: 
(குறிப்பு: உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தின் மூலம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.)
Question 34
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.
  2. இதன் நோக்கங்களும், பணிகளும் மாநில எல்லைக்குட்பட்டதாகும்.
  3. இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை இறுதி தீர்ப்பின் மூலம் கட்டளையிடலாம்.
A
1 மட்டும் தவறு
B
1, 3 தவறு
C
3, 4 தவறு
D
4 மட்டும் தவறு
Question 34 Explanation: 
(குறிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரை செய்யலாம்.)
Question 35
ஐக்கிய நாடுகள் சபை __________ வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது.
A
16
B
17
C
18
D
19
Question 35 Explanation: 
(குறிப்பு: இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் காணப்படுகிறது.)
Question 36
ஐ.நா சபை குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட நாள்
A
1988 நவம்பர் 2
B
1988 நவம்பர் 20
C
1989 நவம்பர் 20
D
1989 நவம்பர் 2
Question 37
குழந்தைகளுக்கான உரிமைகளில் தவறானது எது?
A
குடும்ப சூழலுக்கான உரிமை
B
சமூக பாதுகாப்பு உரிமை
C
வாழ்வதற்கான உரிமை
D
சம வேலைவாய்ப்பு பெறும் உரிமை
Question 37 Explanation: 
(குறிப்பு: குழந்தைகளுக்கான இதர உரிமைகள் கல்விக்கான உரிமை பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை)
Question 38
குழந்தைகளின் வாழ்வதற்கான உரிமை என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது?
  1. பிறப்புரிமை
  2. உணவு, உடை, இருப்பிடத்திற்கான உரிமை
  3. கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை
A
அனைத்தும்
B
1, 2
C
1, 3
D
2, 3
Question 38 Explanation: 
(குறிப்பு: ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத் தகுதி பெறுகின்றது.)
Question 39
இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய ஆண்டு
A
2007
B
2008
C
2009
D
2010
Question 39 Explanation: 
(குறிப்பு: அரசமைப்பின் பிரிவு 21Aல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க இச்சட்டம் உதவுகிறது.)
Question 40
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு. (இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009)
  1. ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.
  2. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது.
  3. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1, 3
D
2, 3
Question 40 Explanation: 
(குறிப்பு: ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத் தகுதி பெறுகின்றது.)
Question 41
குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெறுவதற்கான காரணங்கள் எவை?
  1. ஏழ்மை
  2. பாலினப் பாகுபாடு
  3. சிதறிய குடும்பங்கள்
  4. நகர்ப்புற வாழ்க்கை
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 41 Explanation: 
(குறிப்பு: குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.)
Question 42
ஆபத்து காலத்தில் உதவிட காவலன் SOS செயலி ___________ அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
A
தெலுங்கானா
B
ஆந்திரா
C
கர்நாடகா
D
தமிழ்நாடு
Question 42 Explanation: 
(குறிப்பு: பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ள இயலும்.)
Question 43
பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும்போது, வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
A
2014 ஏப்ரல்
B
2015 ஏப்ரல்
C
2017 ஏப்ரல்
D
2018 ஏப்ரல்
Question 43 Explanation: 
(குறிப்பு: குற்றவியல் திருத்தச் சட்டம் 2018 - இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.)
Question 44
கீழ்க்கண்டவற்றுள் எவை POSCO சட்டம் – 2012 ன் அம்சங்கள்?
  1. இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. அக்குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதிசெய்கிறது.
  2. பாலியல் வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ, குடும்ப உறுப்பினரோ, அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும்.
  3. குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ, அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
  4. பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 2, 4
D
1, 3, 4
Question 44 Explanation: 
(குறிப்பு: POSCO சட்டம் - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்.)
Question 45
உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண்
A
1001
B
1008
C
1068
D
1098
Question 45 Explanation: 
(குறிப்பு: இது இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை ஆகும்.)
Question 46
பச்பன் பச்சாவ் அந்தோலன் போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர்
A
மலாலா
B
கைலாஷ் சத்யார்த்தி
C
அன்னை தெரசா
D
அப்துல்கலாம்
Question 46 Explanation: 
(குறிப்பு: பச்பன் பச்சாவ் அந்தோலன் – இளமையைக் காப்பாற்று இயக்கம்)
Question 47
கைலாஷ் சத்யார்த்தி ‘குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணி வகுப்பை’ நடத்திய ஆண்டு
A
1992
B
1994
C
1996
D
1998
Question 47 Explanation: 
(குறிப்பு: உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப இந்த அணிவகுப்பை நடத்தினார்.)
Question 48
குறைபாடுகள் உடைய குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட _________க்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
A
1.2%
B
2.3%
C
3.4%
D
4.5%
Question 48 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட புள்ளிவிவரம் உலகளாவிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் ஆகும்.)
Question 49
பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது எனக் கூறும் இந்திய அரசமைப்பு பிரிவு
A
பிரிவு 28
B
பிரிவு 45
C
பிரிவு 22
D
பிரிவு 24
Question 50
  • கூற்று 1: தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 1989 ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது.
  • கூற்று 2: மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2002ல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 50 Explanation: 
(குறிப்பு: மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ல் திருத்தங்களை மேற்கொண்டது.)
Question 51
பதினான்கு வயது நிறைவடையும்வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என கூறும் இந்திய அரசமைப்பு பிரிவு
A
பிரிவு 28
B
பிரிவு 45
C
பிரிவு 22
D
பிரிவு 24
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
  • கூற்று: உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
  • காரணம்: நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 53
பெண் தொழிலாளர்களுக்காக டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் எவை?
  1. சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
  2. பெண் தொழிலாளர் நல நிதி
  3. பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
  4. பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள்
  5. நிலக்கரிச் சுரங்கங்களில் சுரங்கப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தப்படுவதற்கான தடையை மீட்டெடுத்தல்
A
அனைத்தும்
B
1, 3, 4, 5
C
2, 4, 5
D
1, 3, 5
Question 54
ரோசா பார்க் ஐக்கிய அமெரிக்காவில் குடிமை உரிமைகள் இயக்கத்தை தொடங்கிய ஆண்டு
A
1947
B
1945
C
1953
D
1955
Question 54 Explanation: 
(குறிப்பு: ரோசா பார்க் மாண்டகோமெரியிலிருந்து அலபாமா வரை செல்லும் நகரப் பேருந்தில் தனக்கான இடத்தை ஆங்கிலேயருக்கு தர மறுப்பதின் மூலம் இவ்வியக்கத்தை தொடங்கினார்.)
Question 55
பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் __________ இட ஒதுக்கீட்டினைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
A
50%
B
59%
C
69%
D
70%
Question 55 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் பிரிவில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.)
Question 56
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையே ___________ சதவீத அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின்கீழும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
A
20%, 3%
B
33%, 3%
C
33%, 4%
D
33%, 5%
Question 56 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.)
Question 57
தமிழ்நாட்டில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின்கீழும் முன்னுரிமை அடிப்படையில் ____________ சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
A
18%
B
20%
C
33%
D
37%
Question 58
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு)
A
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 26.5%
B
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் - 3.5%
C
ஆதிதிராவிடர் – 18%
D
பழங்குடியினர் – 3%
Question 58 Explanation: 
(குறிப்பு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் - 20%, பிற்படுத்தப்பட்டோர் - 26.5%)
Question 59
இந்தியாவின் மக்கள்தொகையில் _________ சதவிகிதம் பழங்குடியின மக்கள் உள்ளனர்.
A
5.4%
B
8.6%
C
9.4%
D
10.7%
Question 59 Explanation: 
(குறிப்பு: இவர்கள் தொடர்ந்து அவர்களுக்கே உரிய பழக்கவழக்கங்களோடு வாழ்வதோடு மட்டும் அல்லாமல் பல நேரங்களில் உலகின் பிற பகுதி மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாத நிலையிலும் வாழ்கின்றனர். இதுவே அவர்களைப் பாதுகாப்பதற்கானச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.)
Question 60
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் எப்போது இயற்றப்பட்டது?
A
2003 அக்டோபர்
B
2004 அக்டோபர்
C
2005 அக்டோபர்
D
2006 அக்டோபர்
Question 60 Explanation: 
(குறிப்பு: அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்கு இச்சட்டம் உதவுகிறது.)
Question 61
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கோரப்படும் தகவல்கள் __________ நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும்.
A
15
B
20
C
25
D
30
Question 61 Explanation: 
(குறிப்பு: 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவில்லை எனில், தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.)
Question 62
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு ___________ அலுவலர் உதவி செய்ய வேண்டும்.
A
கிராம நிர்வாக அலுவலர்
B
வட்டாட்சி அலுவலர்
C
கிராம நிர்வாக அலுவலர்
D
மாவட்ட ஆட்சியர்
Question 62 Explanation: 
(குறிப்பு: அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு அரசுத்துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.)
Question 63
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது ___________.
A
சமூகம்
B
பொருளாதார
C
அரசியல்
D
பண்பாடு
Question 64
தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
எல்லைப் பாதுகாப்புப் படை
B
மத்திய சேமக்காவல் படை
C
உளவுத்துறைப் பணியகம்
D
அரசுப் பள்ளிகள்
Question 64 Explanation: 
(குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் அரசு ஆவணங்களான கோப்புகள், அறிக்கைகள், தாள்கள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் போன்றவை கிடைக்கப்பெறலாம்.)
Question 65
இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பு பிரிவு
A
24ஏ
B
29பி
C
39பி
D
39ஏ
Question 66
கீழ்க்காண்பனவற்றுள் தொழிலாளர் நலனில் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்புகள் எவை?
  1. தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  2. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்
  3. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்களை அமைத்தல்
  4. தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்
  5. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்
  6. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி
A
அனைத்தும்
B
2, 3, 5, 6
C
1, 2, 4, 6
D
1, 3, 5, 6
Question 67
அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை
A
சொத்துரிமை
B
மதச் சுதந்திரத்துக்கான உரிமை
C
மதச் சுதந்திரத்துக்கான உரிமை
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 68
  • கூற்று 1: கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில் ஏறக்குறைய 12-14 மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.
  • கூற்று 2: பெண்களின் இப்பிரச்சனையைப் பரிசீலித்து குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில் 2008 ஜுலை மாதத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 68 Explanation: 
(குறிப்பு: கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில் 2018 ஜுலை மாதத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.)
Question 69
"ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது." என்று கூறியவர்
A
அம்பேத்கர்
B
காந்தியடிகள்
C
ஜான்.எஃப்.கென்னடி
D
ஆபிரகாம் லிங்கன்
Question 70
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான்-எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
A
சமத்துவ உரிமை
B
சுதந்திர உரிமை
C
குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
D
சமய சுதந்திர உரிமை
Question 70 Explanation: 
(குறிப்பு: பல்வேறு தொழிலகங்களில் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தினையும், உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றையும் இழக்கின்றனர். இது வறுமை மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படாத வாழ்விற்கு வழிவகுக்கும்.)
Question 71
_________கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
A
இலக்கியம்
B
அமைதி
C
இயற்பியல்
D
பொருளாதாரம்
Question 72
பொருத்துக.
  1. வாக்களிக்கும் உரிமை                            i) பண்பாட்டு உரிமை
  2. சங்கம் அமைக்கும் உரிமை                    ii) சுரண்டலுக்கெதிரான உரிமை
  3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை iii) அரசியல் உரிமை
  4. இந்து வாரிசுரிமைச் சட்டம்                       iv) சுதந்திர உரிமை
  5. குழந்தை தொழிலாளர்                                 v) 2005
A
v iii i ii iv
B
iii iv i v ii
C
i iii ii iv v
D
iii iv ii i v
Question 73
கைலாஷ் சத்யார்த்தி மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து _________ற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகளை மீட்டுள்ளனர்.
A
80000
B
82000
C
84000
D
86000
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!