Online TestTnpsc Exam
மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும், வரலாற்றுக்கு முந்தைய காலம் Online Test 9th Social Science Lesson 1 Questions in Tamil
மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும், வரலாற்றுக்கு முந்தைய காலம் Online Test 9th Social Science Lesso
Congratulations - you have completed மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும், வரலாற்றுக்கு முந்தைய காலம் Online Test 9th Social Science Lesso.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ ________ என்று அழைக்கப்படுகிறது.
தொல்லியல் | |
அறிவாற்றல் | |
புதைபடிவங்கள் | |
செய்பொருள் |
Question 1 Explanation:
(குறிப்பு: எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றங்களால் அறிவையும், புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது.)
Question 2 |
தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல்
தொல்லியல் | |
தொல்மானுடவியல் | |
மண்ணடுக்கியல் | |
பரிணாமவியல் |
Question 2 Explanation:
(குறித்து: தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து, மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.)
Question 3 |
மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல்
தொல்லியல் | |
தொல்மானுடவியல் | |
மண்ணடுக்கியல் | |
பரிணாமவியல் |
Question 4 |
புவி __________ ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
4.5 மில்லியன் | |
4.54 பில்லியன் | |
5.4 மில்லியன் | |
5.45 பில்லியன் |
Question 4 Explanation:
(குறிப்பு: ஒரு பில்லியன் = 100 கோடி, 1 மில்லியன் = 10 லட்சம்)
Question 5 |
- கூற்று 1: தொல்பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள்.
- கூற்று 2: புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 5 Explanation:
(குறிப்பு: நெடுங்காலம் - Era, காலம் – Period, உழி - Epoch)
Question 6 |
நுண்ணுயிரிகளின் வடிவில் உயிர்கள் தோன்றியதற்கான சான்றுகள் ___________ ஆண்டுகளுக்கு முன் காணப்படுகின்றன.
2.5 பில்லியன் | |
2.5 மில்லியன் | |
3.5 பில்லியன் | |
3.5 மில்லியன் |
Question 7 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- சுமார் 600 முதல் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லுயிரூழியில் பல செல் உயிரினங்கள் முதலில் தோன்றின.
- பழந்தொல்லுயிரூழியில் மீன்களும், ஊர்வனவும், பல்வேறு தாவரங்களும் தோன்றின.
- இடை தொல்லுயிரூழி காலகட்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 7 Explanation:
(குறிப்பு: பழந்தொல்லுயிரூழி (Palaeozoic) – 542 முதல் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இடைத் தொல்லுயிரூழி (Mesozoic) – 251 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.)
Question 8 |
ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதற்கு ___________ என்று பொருள்.
மேற்கத்திய மனிதக் குரங்கு | |
கிழக்கிந்திய மனிதக் குரங்கு | |
தெற்கத்திய மனிதக் குரங்கு | |
வடக்கத்திய மனிதக் குரங்கு |
Question 8 Explanation:
(குறிப்பு: ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள் காலத்தில் தோன்றின.)
Question 9 |
- கூற்று 1: ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் என்ற குரங்கினத்திலிருந்து நவீன மனித இனம் தோன்றியது.
- கூற்று 2: இன்று அழிந்துபோய்விட்ட இந்த ஆஸ்ட்ரோலாபித்திஸைன் இனம் மனிதனுக்கு மிக நெருங்கிய உறவுடைய இனமாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 10 |
வரலாறு எழுதுவது பண்டைய _________காலத்தில் தொடங்கியது.
ரோமானியர்கள் | |
கிரேக்கர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
சீனர்கள் |
Question 10 Explanation:
(குறிப்பு: இடைக்காலத்தில், பெரும்பாலும் சமயங்கள் குறித்த சிந்தனையே மேலாதிக்கம் செலுத்தியது.)
Question 11 |
வரலாற்றின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
ஆர்க்கிமிடிஸ் | |
அரிஸ்டாட்டில் | |
ஹெரோடோடஸ் | |
வாஸ்கோடாகாமா |
Question 11 Explanation:
(குறிப்பு: கிரேக்கத்தின் ஹெரோடோடஸ் (பொ.ஆ.மு.484 - 425) எழுதிய வரலாறு மனிதத்தன்மையுடனும், பகுத்தறிவுடனும் காணப்படுகிறது.)
Question 12 |
ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் என்பது _________ நூற்றாண்டுகள் ஆகும்.
பொ.ஆ. 13 – 14 | |
பொ.ஆ. 14 – 15 | |
பொ.ஆ. 15 – 16 | |
பொ.ஆ. 16 – 17 |
Question 12 Explanation:
(குறிப்பு: அறிவியல்பூர்வமான சிந்தனைகளும் கேள்விகளும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்தில்தான் ஏற்பட்டன.)
Question 13 |
மனிதர்களின் தோற்றம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கீழ்க்கண்ட எந்த காரணிகளால் சாத்தியமாகின?
- ஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொல்பொருள் சேகரிப்பின் மீதான ஆர்வம் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டமை
- பாறை அடுக்கியல், நிலவியல் சார்ந்த கருத்துகள் ஆகியவற்றின் வளர்ச்சி
- உயிரியல் பரிணாமம் குறித்த டார்வினின் கொள்கை
- தொடக்க கால எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியமை
அனைத்தும் சரி | |
1, 3, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 4 சரி |
Question 13 Explanation:
(குறிப்பு: மனிதன் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள், பண்டைய நாகரிகங்களின் கற்கருவிகள், செய்பொருள்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டவை ஆகியவையும் மனித தோற்றம் குறித்த ஆய்விற்கு வித்திட்டன.)
Question 14 |
இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை, உறவுமுறைகள் குறித்து ஆராய்வது
பாறையியல் | |
மண்ணடுக்கியல் | |
புவியியல் | |
தொல்லியல் |
Question 15 |
என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் மெசபடோமியாவில் _________ ஆண்டு அமைக்கப்பட்டது.
பொ.ஆ.மு. 420 | |
பொ.ஆ.மு 480 | |
பொ.ஆ.மு 530 | |
பொ.ஆ.மு 580 |
Question 15 Explanation:
(குறிப்பு: இளவரசி என்னிகால்டி, நவீன பாபிலோனிய அரசரான நபோனிடசின் மகள் ஆவார்.)
Question 16 |
மிகப் பழமையான இயங்கிக் கொண்டிருக்கும் அருங்காட்சியகமான கேபிடோலைன் ____________ ஆண்டு அமைக்கப்பட்டது.
பொ.ஆ 530 | |
பொ.ஆ. 1280 | |
பொ.ஆ. 1471 | |
பொ.ஆ. 1677 |
Question 16 Explanation:
(குறிப்பு: கேபிடோலைன் அருங்காட்சியகம் இத்தாலியில் அமைக்கப்பட்டது.)
Question 17 |
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகமான ஆஷ்மோலியன் __________ ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.
பொ.ஆ. 1520 | |
பொ.ஆ. 1586 | |
பொ.ஆ. 1655 | |
பொ.ஆ. 1677 |
Question 17 Explanation:
(குறிப்பு: ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது.)
Question 18 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- உயிரியல் பரிணாம கொள்கை – என்னிகால்டி
- இயற்கைத் தேர்வு மற்றும் தகவமைப்பு - சார்லஸ் டார்வின்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 18 Explanation:
(குறிப்பு: உயிரியல் பரிணாம கொள்கை – ஹெர்பர்ட் ஸ்பென்சர்)
Question 19 |
- கூற்று 1: தங்களது சூழ்நிலைக்கு சிறந்த முறையில் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து, அதிகமாக இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு எனப்படும்.
- கூற்று 2: தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதை குறிக்கிறது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 20 |
சரியான இணையைத் தேர்ந்தெடு (சார்லஸ் டார்வின் நூல்கள் - வெளியிடப்பட்ட ஆண்டு)
- உயிரினங்களின் தோற்றம் குறித்து - 1859
- மனிதனின் தோற்றம் – 1871
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 21 |
கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், தடங்கள், அடையாளங்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது ____________ எனப்படும்.
உயிரிய அடையாளங்கள் | |
உயிரிய கழிவுகள் | |
உயிரியல் எச்சங்கள் | |
புதைப்படிவங்கள் |
Question 21 Explanation:
(குறித்து: புதைபடிவுகள் குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் என்று அழைக்கப்படுகிறது.)
Question 22 |
__________ காரணமாக விலங்கின் எலும்புகள் புதைப்படிவங்களாக பாதுகாக்கப்படுகின்றன.
படிகமாக்கல் | |
படியவைத்தல் | |
கனிமமாக்கல் | |
உறையவைத்தல் |
Question 22 Explanation:
(குறிப்பு: புதைபடிவ ஆய்வியல் - Palaeontology, கனிமமாக்கல் - Mineralization)
Question 23 |
மூன்று காலகட்ட முறை அல்லது முக்காலக் கொள்கையை முன்மொழிந்தவர்
ஜே.ஜே. தாம்சன் | |
சி.ஜே. தாம்சன் | |
என்னிகால்டி |
Question 23 Explanation:
(குறிப்பு: சி.ஜே. தாம்சன், கோபன்கேகனில் உள்ள டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் செய்பொருட்களைக் கற்காலத்தவை, வெண்கலக் காலத்தவை, இரும்புக் காலத்தவை என மூன்றாகப் பிரித்தார்.)
Question 24 |
____________ நூற்றாண்டிலிருந்து அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தியும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டும் அறிஞர்கள் தொல்பழங்காலம் மனிதகுலத்தின் தோற்றம், பண்டய நாகரிகங்கள் ஆகியன குறித்து ஆய்வுகள் செய்தனர்.
17 | |
18 | |
19 | |
20 |
Question 25 |
- கூற்று 1: எழுத்து முறையின் தோற்றம் மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
- கூற்று 2: எழுத்துமுறை அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் தொல்பழங்காலம் என்று குறிப்பிடப்படுகிறது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 25 Explanation:
(குறிப்பு: மனித வரலாற்றின் மொத்த காலத்தில் 99 விழுக்காட்டிற்கு மேல் விரவியிருப்பது தொல்பழங்காலத்தில்தான்.)
Question 26 |
- கூற்று 1: மனிதர்களுடன் சிம்பன்சி, கொரில்லா, உராங்உட்டான் ஆகிய உயிரினங்களை கிரேட் ஏப்ஸ் என அழைக்கப்படும் பெருங்குரங்குகள் வகை என குறிப்பிடுகின்றனர்.
- கூற்று 2: கொரில்லா மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 26 Explanation:
(குறிப்பு: சிம்பன்சி மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது.)
Question 27 |
சிம்பன்சி இனத்தின் மரபணுவை ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் _________ சதவீதம் ஒத்துள்ளன.
96 | |
97 | |
98 | |
99 |
Question 28 |
மனிதர்களின் மூதாதையர்கள் _________ என்று அழைக்கப்படுகின்றனர்.
ஹோமினிட் | |
ஹோமினின் | |
ஹோமோ ஹெபிலிஸ் | |
ஹோமோ சேப்பியன்ஸ் |
Question 28 Explanation:
(குறிப்பு: ஹோமினின் தோற்றம் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.)
Question 29 |
ஹோமோனின்கள் இனம் சுமார் ___________ ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.
8 முதல் 6 பில்லியன் | |
7 முதல் 5 பில்லியன் | |
8 முதல் 6 மில்லியன் | |
7 முதல் 5 மில்லியன் |
Question 29 Explanation:
(குறிப்பு: இந்த குழுவின் மிகத் தொடக்க இனமான ஆஸ்ட்ரோலாபித்திகஸின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.)
Question 30 |
ஆப்பிரிக்காவின் ___________ பள்ளத்தாக்கில் தொல்பழங்காலம் குறித்த சான்றுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன.
ஓல்டுவாய் பள்ளத்தாக்கு | |
லேடோலி பள்ளத்தாக்கு | |
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு | |
டாங் பள்ளத்தாக்கு |
Question 30 Explanation:
(குறிப்பு: கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு சிரியாவின் வடபகுதியிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் மத்திய மொசாம்பிக் வரை சுமார் 6,400 கி.மீ தூரம் பரவியுள்ள பள்ளத்தாக்கு போன்ற நிலப்பரப்பாகும்.)
Question 31 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (ஹோமினிட்)
- நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.
- இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 32 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.(ஹோமினின்)
- ஹோமினின் எனப்படும் விலங்கியல் பழங்குடி இனம் மனித மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் (ஹோமோ செப்பியன்ஸ்) குறிக்கும்.
- இதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஆஸ்ட்ரலோபித்திசைங்கள் ஆகியன அடங்கும்.
- இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 32 Explanation:
(குறிப்பு: கொரில்லா எனப்படும் மனிதக் குரங்குகள் ஹோமினின் பழங்குடியில் அடங்காது.)
Question 33 |
முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனம்
நியாண்டர்தால் | |
ஹோமோ ஹெலிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஆஸ்ட்ரலோபித்திஸ் |
Question 33 Explanation:
(குறிப்பு: ஹோமோ ஹெபிலிஸ் இனம் ஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது.)
Question 34 |
__________ இனம் கைக்கோடரிகளைச் செய்தது.
நியாண்டர்தால் | |
ஹோமோ ஹெலிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஆஸ்ட்ரலோபித்திஸ் |
Question 34 Explanation:
(குறிப்பு: ஹோமோ எரக்டஸ் இனம் சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சுமார் 2 மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் இந்த இனம் ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.)
Question 35 |
உடற்கூறு ரீதியாக நவீன மனிதர்கள் என்றழைக்கப்படுபவர்கள்
ஹோமோ சேப்பியன்ஸ் | |
ஹோமோ ஹெலிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஆஸ்ட்ரலோபித்திஸ் |
Question 35 Explanation:
(குறிப்பு: நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.)
Question 36 |
நவீன மனிதர்கள் சுமார் ________ ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.
10,000 | |
25,000 | |
40,000 | |
60,000 |
Question 36 Explanation:
(குறிப்பு: சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி (பொனாபோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும்.)
Question 37 |
கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ள தொடக்ககாலக் கருவிகள் _________ ஆண்டுகள் முற்பட்டவை.
1.5 மில்லியன் | |
2.2 மில்லியன் | |
3.3 மில்லியன் | |
4.3 மில்லியன் |
Question 38 |
ஆப்பிரிக்காவின் ஓல்டுவாய் மலையிடுக்கில் கிடைத்துள்ள ஓல்டோவான் கருவிகள் __________ ஆண்டுகள் முற்பட்டவை.
3 முதல் 3.4 மில்லியன் | |
4 முதல் 4.5 மில்லியன் | |
2 முதல் 2.6 மில்லியன் | |
2 முதல் 3.6 மில்லியன் |
Question 38 Explanation:
(குறிப்பு: மனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள்) சுத்தியல் கற்களை பயன்படுத்தினர்.)
Question 39 |
கீழ்க்கண்ட எந்த மனித மூதாதையர்களின் பண்பாடு கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது?
- ஹோமோ சேப்பியன்ஸ்
- நியாண்டர்தால்
- ஹோமோ ஹெபிலிஸ்
- ஹோமோ எரக்டஸ்
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
3, 4 |
Question 39 Explanation:
(குறிப்பு: இவர்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள்.)
Question 40 |
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித மூதாதையர்களின் கைக்கோடரிகள் __________ ஆண்டுகள் பழமையானவை.
1.5 மில்லியன் | |
1.8 மில்லியன் | |
1.5 பில்லியன் | |
1.8 பில்லியன் |
Question 40 Explanation:
(குறிப்பு: மனித மூதாதையர்கள் (ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ்) தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக, கைக்கோடரி, வெட்டுக்கத்தி உள்ளிட்ட பல்வேறு கருவிகளைச் செய்தார்கள். இவை இருமுகக் கருவிகள் என அழைக்கப்படுகின்றன.)
Question 41 |
- கூற்று 1: இருமுகக் கருவிகள் சமபக்க உருவ அமைப்பைப் பெற்றுள்ளன.
- கூற்று 2: இருபுறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகளுக்கு இப்பெயர் இடப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 41 Explanation:
(குறிப்பு: இவை நமது மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.)
Question 42 |
அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுபவை
ஈட்டி | |
பாறை | |
கைக்கோடரி | |
மண்வெட்டி |
Question 42 Explanation:
(குறிப்பு: அச்சூலியன் கருவிகள் பொ.ஆ.மு 250,000 - 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.)
Question 43 |
அச்சூலியன் வகைக் கைக்கோடரிகள் முதன்முதலில் __________ நாட்டில் கண்டெடுக்கப்பட்டன.
இத்தாலி | |
கனடா | |
ரஷ்யா | |
பிரான்ஸ் |
Question 43 Explanation:
(குறிப்பு: பிரான்ஸில் செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதால் இவை அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.)
Question 44 |
இந்தியாவில் அச்சூலியன் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எவை?
- இசாம்பூர் – கர்நாடகா
- பிம்பெத்கா - மத்திய பிரதேசம்
- சென்னைக்கு அருகில்
- உத்திரபிரதேசம்
அனைத்தும் | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 45 |
பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு _________ எனப்படும்.
மூலக் கற்கள் | |
கருக்கல் | |
செதில் | |
அச்சூலியன் |
Question 46 |
________ என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும்.
மூலக் கற்கள் | |
கருக்கல் | |
செதில் | |
அச்சூலியன் |
Question 46 Explanation:
(குறிப்பு: கற்சுத்தியலால் கருக்கல்லிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.)
Question 47 |
__________ என்பவை கற்கருவிகள் செய்யப்பயன்படும் கற்கள் ஆகும்.
மூலக் கற்கள் | |
கருக்கல் | |
செதில் | |
அச்சூலியன் |
Question 48 |
உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் _________ ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கூறப்படுகிறது.
1 லட்சம் | |
2 லட்சம் | |
3 லட்சம் | |
4 லட்சம் |
Question 49 |
- கூற்று 1: தற்காலத்திற்கு சுமார் 3,98,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
- கூற்று 2: கற்கருவித் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 49 Explanation:
(குறிப்பு: கற்கருவிகள் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் முறைமைகளும் நுட்பங்களும் கற்கருவி (Lithic) தொழில்நுட்பம் எனப்படுகிறது.)
Question 50 |
இடைப் பழங்கற்காலப் பண்பாட்டு கருவிகள் கீழ்க்கண்ட எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன?
- ஆப்பிரிக்கா
- ஐரோப்பா
- வட அமெரிக்கா
- மேற்கு ஆசியா
- மத்திய ஆசியா
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
1, 4, 5 |
Question 50 Explanation:
(குறிப்பு: லெவலாய்சியன் (லெவலவா பிரெஞ்சு மொழி உச்சரிப்பு) கற்கருவி செய்யும் மரபு இடைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை.)
Question 51 |
லெவலாய்சியன் வகைக் கருவிகள் முதலில் கண்டெடுக்கப்பட்ட நாடு
கனடா | |
இங்கிலாந்து | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி |
Question 51 Explanation:
(குறிப்பு: லெவலாய்சியன் கருவிகள் கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட கருவிகள் ஆகும்.)
Question 52 |
தற்காலத்திற்கு முன் 2,83,000 முதல் 1,98,000 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் _________ பண்பாடு உருவானது.
கீழ் பழங்கற்கால பண்பாடு | |
இடை பழங்கற்கால பண்பாடு | |
மேல் பழங்கற்கால பண்பாடு | |
தொல்பழங்கற்கால பண்பாடு |
Question 52 Explanation:
(குறிப்பு: லெவலாய்சியன் வகைக் கருவிகள் பொ.ஆ.மு.28,000 வரை பயன்படுத்தப்பட்டன.)
Question 53 |
இடைப் பழங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இனம் __________ என்று அழைக்கப்படுகிறது.
நியாண்டர்தால் | |
ஹோமோ ஹெலிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஆஸ்ட்ரலோபித்திஸ் |
Question 53 Explanation:
(குறிப்பு: குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை. இவர்கள் இறந்தவர்களை புதைத்தனர்.)
Question 54 |
- கூற்று 1: இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த பண்பாடு, மேல் பழங்கற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
- கூற்று 2: மேல் பழங்கற்கால பண்பாட்டு மக்கள் சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகளைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தினார்கள்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு: கற்கருவி தொழிற்நுட்பத்தில் ஏற்பட்ட புதிய நுட்பங்கள் இந்தப் பண்பாட்டின் சிறப்பான கூறுகளில் ஒன்றாகும். கற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன.)
Question 55 |
___________காலக்கட்டத்தில் நுண்கற்கருவிகள் எனப்படும் குறுங் கற்கருவிகளும் பயன்பாட்டிற்கு வந்தன.
கீழ் பழங்கற்கால பண்பாடு | |
இடை பழங்கற்கால பண்பாடு | |
மேல் பழங்கற்கால பண்பாடு | |
தொல்பழங்கற்கால பண்பாடு |
Question 55 Explanation:
(குறிப்பு: இக்காலக்கட்ட மக்கள் தயாரித்த பல்வேறு செய்பொருள்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், மொழிகள் உருவானதையும் காட்டுகின்றன.)
Question 56 |
மனித பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தோன்றிய முதல் நவீன மனிதர்கள் _________ ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் சப்-சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்கு தெற்குபகுதியில் தோன்றினர்.
2,00,000 | |
2,50,000 | |
3,00,000 | |
3,50,000 |
Question 56 Explanation:
(குறிப்பு: சப் - சஹாரா பகுதியில் தோன்றிய இந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள்.)
Question 57 |
நவீன மனிதர்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிய காலகட்டத்தில் __________ ல் குரோ-மக்னான் என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
ஆப்பிரிக்கா | |
வட அமெரிக்கா | |
தென் அமெரிக்கா | |
ஐரோப்பா |
Question 58 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு. (மேல் பழங்கற்காலப் பண்பாடு)
கருவிகளையும் கலைப்பொருட்களையும் செய்யக் கொம்புகளும் தந்தங்களும் பயன்படுத்தப்பட்டன. | |
இக்கால மக்கள் ஆடைகளை அணியவில்லை. | |
சமைத்த உணவை உண்டனர். | |
இறந்தவர்கள் மார்பின் மீது கைகளை வைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். |
Question 58 Explanation:
(குறிப்பு: இக்கால மக்கள் ஆடைகளை அணிந்தனர். இக்காலக்கட்ட எலும்பாலான ஊசிகள், தூண்டில் முட்கள், குத்திட்டிகள், ஈட்டிகள் ஆகியவை படைப்பாக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன.)
Question 59 |
வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் _____________ பகுதிகளில் உருவாக்கப்பட்டன.
வட அமெரிக்கா, ஐரோப்பா | |
ஆசியா, ஆப்பிரிக்கா | |
ஐரோப்பா, ஆசியா | |
ஆசியா, வட அமெரிக்கா |
Question 59 Explanation:
(குறிப்பு: வீனஸ் வகையிலான பெண் தெய்வச் சிற்பங்கள் மேல் பழங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்தவை.)
Question 60 |
மேல் பழங்கற்காலப் பண்பாடு _________ ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
20,000 | |
30,000 | |
50,000 | |
60,000 |
Question 60 Explanation:
(குறிப்பு: மேல் பழங்கற்காலப் பண்பாடு, பனிக்காலம் முற்றுப்பெற்ற சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹோலோசின் காலகட்டம் வரை நீடித்தது.)
Question 61 |
பனிக்காலம் என்பது ________ ஆண்டுகளுக்கு முன் நிலவிய காலமாகும்.
4,000 | |
5,000 | |
6,000 | |
8,000 |
Question 61 Explanation:
(குறிப்பு: பனிக்காலம் என்பது உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் ஆகும்.)
Question 62 |
லாஸ்கா பாறை ஓவியங்கள் ________ ஆண்டுகள் பழமையானைவை.
15,000 | |
16,000 | |
17,000 | |
18,000 |
Question 62 Explanation:
(குறிப்பு: லாஸ்கா பாறை ஓவியங்கள் மேற்கு பிரான்சில் காணப்படுகின்றன.)
Question 63 |
- கூற்று 1: பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு இடைக்கற்காலம் என்று அறியப்படுகிறது.
- கூற்று 2: இக்காலக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண்கருவிகளைப் பயன்படுத்தினர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 64 |
இடைக்கற்கால மக்கள் சுமார் ___________ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு சிறு செய்பொருள்களை உருவாக்கினர்.
3 மி.மீ | |
3 செ.மீ | |
5 மி.மீ | |
5 செ.மீ |
Question 64 Explanation:
(குறிப்பு: மைக்ரோலித் எனப்படும் நுண்கற்கருவிகள் மிகச்சிறிய கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும்.)
Question 65 |
- கூற்று 1: இடைக்கற்கால மக்கள் பிறைவடிவ, முக்கோணம் சரிவகம் போன்ற கணித வடிவியல் அடிப்படையிலான கருவிகளையும் செய்தனர்.
- கூற்று 2: இடைக்கற்கால மக்கள் கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் ஆகியவற்றைச் செய்தனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 65 Explanation:
(குறிப்பு: இடைக்கற்கால கருவிகள் மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டன.)
Question 66 |
வடமேற்கு ஐரோப்பாவில், இடைக்கற்கால மக்கள் __________ ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்கள்.
2000 முதல் 5000 | |
5000 முதல் 7000 | |
7000 முதல் 10000 | |
10000 முதல் 5000 |
Question 66 Explanation:
(குறிப்பு: இடைக்கற்காலத்தின் காலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமாக வேறுபடுகிறது. சில பகுதிகளில் அவர்கள் வேளாண் காலத்திற்கு முந்தைய காலகட்டத்தினராக இருந்தார்கள்.)
Question 67 |
இடைக்கற்காலப் பண்பாடு இந்தியாவில் ____________ ஆண்டு வாக்கில் தோன்றியது.
பொ.ஆ.மு 5000 | |
பொ.ஆ.மு 7000 | |
பொ.ஆ.மு 10000 | |
பொ.ஆ.மு 15000 |
Question 67 Explanation:
(குறிப்பு: தமிழ்நாட்டில் இரும்புக்காலம் தொடங்கும் வரை, அதாவது பொ.ஆ.மு.1000 வரை இடைக்கற்காலம் தொடர்ந்தது.)
Question 68 |
வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை __________காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
கீழ் பழங்கற்கால பண்பாடு | |
இடை பழங்கற்கால பண்பாடு | |
மேல் பழங்கற்கால பண்பாடு | |
புதிய கற்காலப் பண்பாடு |
Question 68 Explanation:
(குறிப்பு: புதிய கற்காலம் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும்.)
Question 69 |
- கூற்று 1: வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெசபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் புதிய கற்காலத்துக்கான தொடக்கக் காலச் சான்றுகள் காணப்படுகின்றன.
- கூற்று 2: சுமார் பொ.ஆ.மு 10000லிருந்து பொ.ஆ.மு 5000 க்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 70 |
கீழ்க்கண்டவற்றுள் 'பிறை நிலப்பகுதி’யில் அடங்குபவை எவை?
-
- எகிப்து
- இஸ்ரேல்-பாலஸ்தீனம்
- ஈரான்
- ஈராக்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 4 |
Question 70 Explanation:
(குறிப்பு: மேற்கண்ட பகுதிகள் பிறை நிலவின் வடிவத்தில் காணப்படுகின்றன.)
Question 71 |
___________ ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பாகத்தில் (பாகிஸ்தான்) உள்ள மெஹர்காரில் கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன.
பொ.ஆ.மு 5000 | |
பொ.ஆ.மு 6000 | |
பொ.ஆ.மு 7000 | |
பொ.ஆ.மு 8000 |
Question 71 Explanation:
(குறிப்பு: சுமார் பொ.ஆ.மு 7000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பே இந்தியாவிலும், சீனாவிலும் அரிசி விளைவிக்கப்பட்டிருக்கக் கூடும்.)
Question 72 |
செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் ___________ ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன.
பொ.ஆ.மு 6000 | |
பொ.ஆ.மு 8000 | |
பொ.ஆ.மு 10000 | |
பொ.ஆ.மு 12000 |
Question 72 Explanation:
(குறிப்பு: முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு நாய் ஆகும்.)
Question 73 |
__________ நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்பட்டன.
சிந்துவெளி நாகரிகம் | |
சீன நாகரிகம் | |
சுமேரிய நாகரிகம் | |
மெசபடோமிய நாகரிகம் |
Question 73 Explanation:
(குறிப்பு: புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.)
Question 74 |
பொருத்துக. (பண்டைய தமிழகத்தின் பண்பாடுகள்)
- பழங்கற்காலம் i) 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் பொ.ஆ.மு. 8000 வரை
- இடைக் கற்காலம் ii) பொ.ஆ.மு. 8000 முதல் பொ.ஆ.மு 1300 வரை
- புதியகற்காலம் iii) பொ.ஆ.மு. 2000 முதல் பொ.ஆ.மு 1000 வரை
- இரும்புக் காலம் iv) பொ.ஆ.மு 1300 முதல் பொ.ஆ.மு 500 வரை
- பண்டைய வரலாற்று காலம் v) பொ.ஆ.மு.300 முதல் பொ.ஆ.300 வரை
ii i iii iv v | |
iii i iv ii i | |
v iv iii ii i | |
i ii iii iv v |
Question 75 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (பண்டைய தமிழகத்தில் பழங்கற்கால பயன்பாட்டுக் கூறுகள்)
- கைக்கோடரி, வெட்டுக்கத்தி
- வேட்டையாடுதல்
- உணவு சேகரித்தல்
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
1, 2 சரி |
Question 76 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (பண்டைய தமிழகத்தில் இடைக்கற்கால பயன்பாட்டுக் கூறுகள்)
- நுண்கற்கருவிகள் உலோகம் பற்றி அறிந்திருந்தனர்.
- விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடினர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 76 Explanation:
(குறிப்பு: நுண்கற்கருவிகள் உலோகம் பற்றி இடைக்கற்கால மக்களுக்கு தெரியாது.)
Question 77 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (பண்டைய தமிழகத்தில் புதியகற்கால பயன்பாட்டுக் கூறுகள்)
- மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள்
- நுண்கற்கருவிகள்
- விலங்குகளை பழக்குதல்
- பயிரிடுதல்
- குழுக்களின் பெருக்கம்
- வேட்டையாடுவோர் - உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான குழுக்களும் ஒரே சமயத்தில் வாழ்ந்தன.
அனைத்தும் சரி | |
1, 2, 4, 5, 6 | |
1, 2, 4, 6 | |
1, 2, 3, 6 |
Question 78 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (பண்டைய தமிழகத்தில் இரும்புக்கால பயன்பாட்டுக் கூறுகள்)
- பெருங்கற்கால ஈமச்சடங்கு முறை
- உணவு சேகரிப்போரும் மேய்ச்சல் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் வாழ்தல்
- குழுத் தலைவர் வாழ்தல்
- கடல் வழி வணிகம்
- கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள் உருவாக்குதல்
- கைவினைத்திறன்களில் சிறப்பு நிபுணர்கள் உருவாகுதல் - குயவர்கள், கொல்லர்கள்
அனைத்தும் சரி | |
1, 2, 3, 5 சரி | |
1, 2, 3, 5, 6 சரி | |
1, 2, 3, 4, 6 சரி |
Question 78 Explanation:
(குறிப்பு: இரும்பின் பயன்பாடு பற்றி இவர்கள் அறிந்திருந்தனர்.)
Question 79 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (பண்டைய தமிழகத்தின் பண்டைய வரலாற்று மற்றும் சங்ககால பயன்பாட்டுக் கூறுகள்)
- இரும்புக்கால மரபுகளோடு சேர சோழ பாண்டிய மன்னர்களின் வளர்ச்சி காணப்பட்டது.
- வீரர்களை வழிபடுதல்
- இலக்கிய மரபு
- கடல்வழி வணிகம்
அனைத்தும் சரி | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 80 |
கீழ்க்கண்ட எந்த இடங்களில் பழைய மற்றும் இடைக்கற்காலத் தொல்பொருள்கள் கிடைத்துள்ளன?
- அதிரம்பாக்கம்
- அஜந்தா
- ஆற்காடு
- குடியம் குகை
1, 4 | |
2, 3 | |
1, 4 | |
2, 4 |
Question 81 |
ஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் _____________ல் உருவாக்கப்பட்டன.
ஆப்பிரிக்கா | |
கனடா | |
தமிழ்நாடு | |
குஜராத் |
Question 81 Explanation:
(குறிப்பு: இப்பழங்கற்கால கருவிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக அதிரம்பாக்கம் குடியம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளன.)
Question 82 |
அதிரம்பாக்கத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளும், காஸ்மிக் கதிர் ஆய்வுகளும் அங்கு _________ ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருப்பதை காட்டுகின்றன.
2 மில்லியன் | |
1.5 மில்லியன் | |
2.5 மில்லியன் | |
3 மில்லியன் |
Question 82 Explanation:
(குறிப்பு: மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள், பானைகள், விலங்குகளின் எலும்புகள், மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்தகால வாழ்க்கை முறையை புரிந்துகொள்வது 'தொல்லியல் அகழாய்வு’ எனப்படும்.)
Question 83 |
கொசஸ்தலையாறு பகுதிகளில் வாழ்ந்த மனித மூதாதையர்கள் ___________ என்ற வகையைச் சேர்ந்தவர்கள்.
நியாண்டர்தால் | |
ஹோமோ ஹெலிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஆஸ்ட்ரலோபித்திஸ் |
Question 83 Explanation:
(குறிப்பு: கொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.)
Question 84 |
___________ ஆண்டு சர். இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்.
1763 | |
1854 | |
1862 | |
1863 |
Question 84 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் இப்படிப்பட்ட கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். எனவே இந்த கைக்கோடரிகள் சென்னை கற்கருவித் தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன.)
Question 85 |
கீழ்ப் பழங்கற்கால கருவிகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் காணப்படுகின்றன?
- பல்லாவரம்
- குடியம் குகை
- அதிரம்பாக்கம்
- வடமதுரை
- எருமை வெட்டிப்பாளையம்
- பாரிகுளம்
அனைத்தும் | |
1, 2, 4, 5 | |
2, 3, 5 | |
2, 3, 4, 6 |
Question 85 Explanation:
(குறிப்பு: கீழ் பழங்கற்காலத்தில் கைக்கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் முக்கியமான கருவி வகைகள் ஆகும்.)
Question 86 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- கீழ் பழங்கற்காலக் கருவிகள் வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளிலும் கிடைத்துள்ளன.
- இப்பகுதி மக்கள் செய்பொருட்களுக்கு பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகளை பயன்படுத்தியுள்ளனர்.
- தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாட்டிற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 87 |
_________ ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் சில பகுதிகளும் தமிழ்நாடும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன.
பொ.ஆ.மு. 2000 | |
பொ.ஆ.மு 3000 | |
பொ.ஆ.மு 4000 | |
பொ.ஆ.மு 5000 |
Question 87 Explanation:
(குறிப்பு: கடல் மட்ட உயர்வின் காரணமாக் கன்னியாகுமரிக்கருகே சில நிலப்பகுதிகளும், இலங்கை இந்திய இணைப்பும் கடலுக்கடியில் சென்றிருக்கலாம்.)
Question 88 |
அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு __________ ஆண்டுகளுக்கு முந்தையது என கணக்கிடப்பட்டுள்ளது.
1 மில்லியன் | |
1.5 மில்லியன் | |
2 மில்லியன் | |
2.5 மில்லியன் |
Question 88 Explanation:
(குறிப்பு: இந்தக் காலகட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்புவரை நீடித்தது.)
Question 89 |
பூமிக்கடியில் இருந்து வெளிப்படும் உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து தோன்றியவை
பசால்ட் பாறைகள் | |
படிவுப் பாறைகள் | |
உருமாறியப் பாறைகள் | |
இடைப்பாறைகள் |
Question 89 Explanation:
(குறிப்பு: பசால்ட் பாறைகள் என்பவை எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும்.)
Question 90 |
தமிழ்நாட்டில் இடைப் பழங்கற்கால பண்பாடு ___________ காலக்கட்டத்தில் உருவானது.
3,00,000 - 2,00,000 | |
3,50,000 – 1,50,000 | |
3,85,000 - 1,72,000 | |
2,85,000 - 1,50,000 |
Question 90 Explanation:
(குறிப்பு: இக்காலகட்டத்தில் கருவிகளின் வகைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன. அளவில் சிறிய செய்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.)
Question 91 |
தமிழ்நாட்டின் இடைப்பழங்கற்காலப் பண்பாட்டின் கருவிகள் எவை?
- கருகற்கள்
- 2. கற்செதில்கள்
- சுரண்டும் கருவி
- கத்தி
- துளைப்பான்
- லெவலாய்சியன் செதில்கள்
- கைக்கோடரி
- பிளக்கும் கருவி
அனைத்தும் | |
1, 2, 4, 6, 7 | |
2, 4, 6, 7, 8 | |
2, 3, 5, 6, 8 |
Question 91 Explanation:
(குறிப்பு: முந்தைய காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்த கருவிகள் அளவில் சிறியவையாக உள்ளன.)
Question 92 |
இடைப் பழங்கற்கால பண்பாட்டின் சான்றுகள் தமிழ்நாட்டின் எந்த பகுதிகளில் காணப்படுகின்றன?
- தே. புதுப்பட்டி
- சீவரக்கோட்டை
- தஞ்சாவூர்
- அரியலூர்
- காஞ்சிபுரம்
1, 2, 3, 4 | |
1, 2 | |
1, 2, 4 | |
2, 3, 4 |
Question 93 |
இடைக்கற்காலத்தின் வேட்டையாடி-உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் கிடைத்துள்ளன?
- சென்னை
- வட ஆற்காடு
- தர்மபுரி
- சேலம்
- கோயம்புத்தூர்
- அரியலூர்
- புதுக்கோட்டை
- மதுரை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
அனைத்தும் | |
2, 3, 5, 6, 8 | |
1, 3, 5, 6, 9 | |
2, 4, 6, 8, 11 |
Question 94 |
- கூற்று 1: தூத்துக்குடி அருகே உள்ள 'தேரி’ பகுதிகளில் இடைக்கற்கால கற்கருவிகள் பல கிடைத்துள்ளன.
- கூற்று 2: இப்பகுதியில் உள்ள சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி 'தேரி’என்று அழைக்கப்படும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 94 Explanation:
(குறிப்பு: தென் தமிழ்நாட்டில் கிடைத்ததைப் போன்ற இடைக்கற்காலக் கருவிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.)
Question 95 |
தமிழ்நாட்டில் இடைக்கற்காலப் பண்பாடு குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இக்கால மக்கள் செர்ட், குவார்ட்ஸாலான சிறிய செதில்களையும் கருவிகளையும் பயன்படுத்தினர்.
- இக்காலத்தின் கருவி வகைகள் சுரண்டும் கருவிகள், பிறை வடிவம், முக்கோண வடிவம் என்று பல வடிவங்களில் இருந்தன.
- மக்கள் உயிர் வாழ விலங்குகளை வேட்டையாடினார்கள்.
- பழங்கள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளைச் சேகரித்தார்கள்.
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 95 Explanation:
(குறிப்பு: சுரண்டும் கருவிகள் ஒரு மேற்பரப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுகின்றன. இவை இன்று சமயலறையில் காய்கறிகளின் தோலை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளைப் போன்றவை.)
Question 96 |
- கூற்று 1: விலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு புதியகற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
- கூற்று 2: வேட்டையாடுதல் புதிய கற்காலப் பண்பாட்டின் முக்கியமான தொழிலாக இருந்தது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 96 Explanation:
(குறிப்பு: கால்நடை மேய்த்தல் புதிய கற்காலப் பண்பாட்டின் முக்கியமான தொழிலாக இருந்தது. இவர்கள் சிறு கிராமங்களில் வசித்தார்கள். வீடுகள் கூரை வேயப்பட்டிருந்தன.)
Question 97 |
புதியகற்கால ஊர்களுக்கான சான்று தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த இடங்களில் கிடைத்துள்ளன?
- பையம்பள்ளி - வேலூர்
- தர்மபுரி
- காஞ்சிபுரம்
- சென்னை
2, 3 | |
1, 3 | |
1, 2 | |
1, 4 |
Question 97 Explanation:
(குறிப்பு: புதியகற்கால பண்பாட்டில் தட்டிகளின் மீது களிமண் பூசி உருவாக்கப்படும் முறையில் சுவர்கள் கட்டப்பட்டன.)
Question 98 |
புதியகற்கால பண்பாட்டின் மட்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றும் தமிழகத்தில் முதன்முதலில் கிடைத்த இடம்
தர்மபுரி | |
கொடுமணல் | |
பையம்பள்ளி | |
தொப்பிக்கல் |
Question 98 Explanation:
(குறிப்பு: பையம்பள்ளி வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கேழ்வரகு, கொள்ளு பச்சைபயறு ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன.)
Question 99 |
- கூற்று 1: புதியகற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலம் இரும்புக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
- கூற்று 2: இரும்புக்காலம் சங்ககாலத்திற்கு பிந்தைய காலம் ஆகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 99 Explanation:
(குறிப்பு: இரும்புக்காலம் சங்ககாலத்திற்கு முந்தைய காலம் ஆகும். இரும்புக் காலம் நல்ல பண்பாட்டு வளர்ச்சி உருவான காலகட்டம் ஆகும்.)
Question 100 |
தமிழ்நாட்டின் எந்த இடங்களில் இரும்புக் காலத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன?
- ஆதிச்சநல்லூர் – திருநெல்வேலி
- சாணூர் – மதுராந்தகம்
- சித்தன்னவாசல் – புதுக்கோட்டை
அனைத்தும் | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 100 Explanation:
(குறிப்பு: தமிழகம் முழுவதும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.)
Question 101 |
- கூற்று 1: இரும்புக்கால மக்கள் இரும்பு, வெண்கலப் பொருட்களையும், தங்க அணிகலன்களையும் பயன்படுத்தினார்கள்.
- கூற்று 2: இரும்புக்கால மக்கள் சங்காலான அணிகலன்களையும், செம்மணிக்கல் மற்றும் பளிங்காலான மணிகளையும் பயன்படுத்தினார்கள்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 101 Explanation:
(குறிப்பு: இரும்புக்காலம் சங்ககாலத்திற்கு முந்தைய காலம் ஆகும். இரும்புக் காலம் நல்ல பண்பாட்டு வளர்ச்சி உருவான காலகட்டம் ஆகும்.)
Question 102 |
- கூற்று: இரும்புக் காலம், பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
- காரணம்: இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தினர்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல |
Question 102 Explanation:
(குறிப்பு: இறந்தவர்களின் உடலோடு ஈமப்பொருட்களாக, இரும்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் புதைக்கப்பட்டன.)
Question 103 |
சரியான இணையைக் தேர்ந்தெடு.
- டோல்மென் - கற்திட்டை
- சிஸ்ட் – கல்லறைகள்
- மென்ஹீர் – நினைவுச்சின்னக் குத்துக்கல்
- சார்க்கோபேகஸ் – ஈமத்தொட்டிகள்
அனைத்தும் சரி | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 104 |
கொடக்கல் அல்லது குடைக்கல், தொப்பிக்கல், பத்திக்கல் ஆகிய ஈமச்சின்னங்களின் வகைகள் ___________ல் காணப்படுகின்றன.
தமிழ்நாடு | |
கேரளா | |
கர்நாடகா | |
ஆந்திரா |
Question 105 |
_________ என்பவை சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி போன்றவை ஆகும்.
டோல்மென் | |
சிஸ்ட் | |
சார்க்கோபேகஸ் | |
மென்ஹீர் |
Question 105 Explanation:
(குறிப்பு: சார்க்கோபேகஸ்ஸிற்கு சில சமயங்களில் பல கால்களை வைத்துத் தயாரிப்பார்கள்.)
Question 106 |
- கூற்று 1: அர்ன் என்பவை மட்பாண்ட சாடிகள் ஆகும்.
- கூற்று 2: இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்டன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 106 Explanation:
(குறிப்பு: மேஜை போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் ஈமச்சடங்கின் நினைவுச்சின்னமாக நிறுவப்பட்டன.)
Question 107 |
__________ என்பது மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது.
டோல்மென் | |
சிஸ்ட் | |
சார்க்கோபேகஸ் | |
மென்ஹீர் |
Question 107 Explanation:
(குறிப்பு: சிஸ்ட் என்பது நான்கு புறமும் நான்கு கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும். சிஸ்ட்டுகளில் ‘போர்ட் ஹோல்’ எனப்படும் இடுதுளை ஒன்று ஒருபுறம் இடப்பட்டிருக்கும்.)
Question 108 |
ஈமச்சின்னங்களுக்குள் நெல்லை வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் தமிழ்நாட்டில் எங்கு கிடைத்துள்ளன?
- ஆதிச்சநல்லூர் – திருநெல்வேலி
- பொருந்தல் – பழனி
- கொடுமணல் – ஈரோடு
அனைத்தும் | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 108 Explanation:
(குறிப்பு: இரும்புக்கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டனர் என்பதை ஈமச்சின்னங்களுக்குள் உள்ள நெல்லை வைத்து அறிய முடிகிறது.)
Question 109 |
- கூற்று 1: குடித்தலைமை முறை என்பது ஒரு படிநிலைச் சமூகம் ஆகும்.
- கூற்று 2: இதில் தலைமைப் பதவி ரத்த உறவுமுறை அடிப்படையில்
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 109 Explanation:
(குறிப்பு: இரும்புக்கால சமூகத்தில் பல குழுக்கள் இருந்தன. இவற்றில் சில, ஒரு தலைவருக்குக் கீழான சமூகங்களாகத் தம்மை அமைத்துக்கொண்டன.)
Question 110 |
___________நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகள் அவரது ஆட்சிப் பகுதிக்கு வெளியே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.
பொ.ஆ.மு. இரண்டு | |
பொ.ஆ.மு மூன்று | |
பொ.ஆ.மு நான்கு | |
பொ.ஆ.மு ஐந்து |
Question 110 Explanation:
(குறிப்பு: மெளரியர் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, சத்தியபுத்திரர்கள் அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்களது அரசியல் அதிகாரம் இரும்பு காலத்திலேயே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கருதலாம்.)
Question 111 |
- கூற்று 1: இரும்புக்கால, சங்க கால மக்கள் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.
- கூற்று 2: கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 111 Explanation:
(குறிப்பு: தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.)
Question 112 |
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் __________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
ஹோமோ சேபியன்ஸ் | |
நியாண்டர்தால் மனிதன் |
Question 113 |
- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
- வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
- வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.
- வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
1 சரி | |
1, 2 சரி | |
1, 4 சரி | |
2, 3 சரி |
Question 113 Explanation:
(குறிப்பு: தொல்பழங்காலத்திற்கு எழுத்துப்பூர்வ சான்றுகள் கிடையாது. வரலாற்றுக் காலத்திற்கு எழுத்துப்பூர்வமான சான்றுகளும் உண்டு, தொல்லியல் சான்றுகளும் உண்டு.)
Question 114 |
விவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழைய கற்காலம் | |
இடைக் கற்காலம் | |
புதிய கற்காலம் | |
பெருங்கற்காலம் |
Question 115 |
- கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக்கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது | |
கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை. | |
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்றும் காரணமும் தவறானவை |
Question 116 |
பொருத்துக.
- பழங்கால மானுடவியல் i) டெரிஸ்
- கோடரிக்கருவிகள் ii) வீனஸ்
- கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள் iii) அச்சூலியன்
- செம்மணல் மேடுகள் iv) நுண்கற்காலம்
- சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள் v) மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
ii i v iii iv | |
v iii ii i iv | |
iii i v iv ii | |
v iv iii ii i
|
Question 117 |
- கூற்று: பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
- காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல் நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. | |
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை. | |
கூற்று சரி; காரணம் தவறு | |
கூற்றும் காரணமும் தவறனாவை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 117 questions to complete.
Sir please check question no. 18
Ans – 2 mattum sari….
—————–
Question no. 52
sir please check the question
3,85,000 to 1,98,000
———————
Question no.74
4. IRUMBU KALAM- pothu aandu muthal 1300 muthal pothu aandu muthal 300 varai
—————
Question no 50.
Sir please check the answers
D) 2,4,5 —- correct answer