Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

மத்திய அரசு Online Test 10th Social Science Lesson 8 Questions in Tamil

மத்திய அரசு Online Test 10th Social Science Lesson 8 Questions in Tamil

Congratulations - you have completed மத்திய அரசு Online Test 10th Social Science Lesson 8 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய பாராளுமன்ற முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
இங்கிலாந்து
C
அயர்லாந்து
D
முன்னாள் சோவியத் யூனியன்
Question 1 Explanation: 
குறிப்பு: இந்திய பாராளுமன்ற முறை இங்கிலாந்து அல்லது பிரிட்டனில் இருந்து பெறப்பட்டது.
Question 2
இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசின் நிர்வாகம் பற்றிக் கூறும் சரத்து
A
52-78
B
53-79
C
54-80
D
51-70
Question 2 Explanation: 
குறிப்பு: இந்திய அரசியலமைப்பில் பகுதி-V-ல் 52-78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றிக் கூறுகிறது.
Question 3
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு
A
மத்திய அரசு
B
மாநில அரசு
C
உச்சநீதிமன்றம்
D
உயர்நீதிமன்றம்
Question 3 Explanation: 
குறிப்பு: இந்தியா ஒரு கூட்டாட்சி முறையிலான அரசு. இதன் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசாகும். இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது.
Question 4
மத்திய அரசின் நிர்வாக அமைப்புகளை வகைப்படுத்துக.
A
பிரதமர், அமைச்சரவைக்குழு, குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர்,
B
குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சரவைக்குழு, துணைக்குடியரசுத்தலைவர்,
C
குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சரவைக்குழு
D
குடியரசுத்தலைவர், பிரதமர், துணைக்குடியரசுத்தலைவர், அமைச்சரவைக்குழு
Question 4 Explanation: 
குறிப்பு: மத்திய அரசின் நிர்வாக உறவுகளை பற்றிக்கூறும் சரத்துகள் 256-263
Question 5
முப்படைகளின் தலைமை தளபதி
A
பிரதமர்
B
துணைக்குடியரசுத்தலைவர்
C
ஆளுநர்
D
குடியரசுத்தலைவர்
Question 5 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத்தலைவர் ஆவார்.
Question 6
சட்டமன்ற உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள்
A
260 - 270
B
245 – 255
C
280 – 290
D
235 – 245
Question 6 Explanation: 
குறிப்பு: சட்டமன்ற உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள் 245 – 255 ஆகும். இவை பகுதி XIன் கீழ் அமைந்துள்ளது.
Question 7
கீழ்க்கண்டவற்றில் குடியரசுத்தலைவரைப் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. மத்திய அரசின் நிர்வாகத்தலைவர் மற்றும் பெயரளவில் நிர்வாகம் பெற்றவர்.
  2. நீதித்துறையை அமைக்கும் பொறுப்பை பெற்றவர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1,2 சரி
D
ஏதுமில்லை
Question 7 Explanation: 
குறிப்பு: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத்தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின் படி செயல்படுத்துகிறார்.
Question 8
நிதி உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள்
A
260 - 270
B
245 – 255
C
280 – 290
D
268 – 294
Question 8 Explanation: 
குறிப்பு: நிதி உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள் 268 – 294 ஆகும். இவை பகுதி XIIன் கீழ் அமைந்துள்ளது.
Question 9
குடியரசுத்தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
A
பிரதமர்
B
முன்னாள் குடியரசுத்தலைவர்
C
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
D
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Question 9 Explanation: 
குறிப்பு: குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
Question 10
கீழ்க்கண்டவற்றுள் தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க.
  1. குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
  2. ஏற்கனவே குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராவர்.
  3. குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 2 தவறு
D
அனைத்தும் சரி
Question 10 Explanation: 
குறிப்பு: குடியரசுத்தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியது.
Question 11
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் யார்?
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திரபிரசாத்
C
டாக்டர் B.R. அம்பேத்கர்
D
டாக்டர் சச்சிதானந்தசின்ஹா
Question 11 Explanation: 
குறிப்பு: டாக்டர் இராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்திர தலைவர் ஆவார்.
Question 12
கீழ்க்கண்டவற்றில் தவறானதைத் தேர்ந்தெடு.
A
ராஷ்டிரபதி பவன் – புது டெல்லி
B
ராஷ்டிரபதி நிலையம் – ஹைதராபாத்
C
ரிட்ரீட் கட்டிடம் – சிம்லா
D
அமர் ஜவன் ஜோதி - புது டெல்லி
Question 12 Explanation: 
குறிப்பு: ராஷ்டிரபதி பவன் – புது டெல்லி குடியரசுத்தலைவரின் இல்லம் ஆகும். மேலும் ராஷ்டிரபதி நிலையம் – ஹைதராபாத் மற்றும் ரிட்ரீட் கட்டிடம் – சிம்லா ஆகிய இடங்களிலும் அவருக்கு அலுவலகத்துடன் கூடிய இல்லங்கள் அமைந்துள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறார்.
Question 13
குடியரசுத்தலைவர் எத்தனை வகையான அதிகாரங்களைப் பெற்றுள்ளார்?
A
5
B
6
C
7
D
8
Question 13 Explanation: 
குறிப்பு: 1. நிர்வாக அதிகாரங்கள் 2. சட்டமன்ற அதிகாரங்கள் 3. நிதி அதிகாரங்கள் 4. நீதி அதிகாரங்கள் 5. இராணுவ அதிகாரங்கள் 6. இராஜதந்திர அதிகாரங்கள் 7. நெருக்கடி நிலை அதிகாரங்கள்
Question 14
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்
A
பிரதமர்
B
குடியரசுத்தலைவர்
C
ஆளுநர்
D
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Question 14 Explanation: 
குறிப்பு: பிரதமர், முப்படைகளின் தளபதி, மாநில ஆளுநர்கள், தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட ஏனையோரையும் குடியரசுத்தலைவர் நியமனம் செய்து வைக்கிறார்.
Question 15
மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் சரத்து
A
66
B
88
C
98
D
77
Question 15 Explanation: 
குறிப்பு: இந்திய அரசியலமைப்புச்சட்டம் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது.
Question 16
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்தலைவர் எந்த அவையில் நியமிக்கிறார்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
சட்டசபை
D
இரு அவைகளிலும்
Question 16 Explanation: 
குறிப்பு: மேலும் ஆங்கிலோ – இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் நியமிக்கிறார்.
Question 17
நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்
A
பிரதமர்
B
குடியரசுத்தலைவர்
C
ஆளுநர்
D
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Question 17 Explanation: 
குறிப்பு: மக்களவையின் 5 ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு உண்டு.
Question 18
பின்வருவனவற்றுள் தவறானவற்றைத் தேர்ந்தெடு.
  1. குடியரசுத்தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  2. குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
  3. நிதி மசோதாவைக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் நேரடியாக அறிமுகம் செய்யலாம்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 18 Explanation: 
குறிப்பு: நிதி மசோதாவைக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் நேரடியாக அறிமுகம் செய்ய முடியாது.
Question 19
மத்திய அரசின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை மத்திய நிதி அமைச்சர் குடியரசுத்தலைவரின் அனுமதி பெற்ற பின்னர் எங்கு சமர்ப்பிக்கிறார்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
சட்டமன்றம்
D
உச்சநீதிமன்றம்
Question 19 Explanation: 
குறிப்பு: நாட்டின் நிதிக்கு குடியரசுத்தலைவரே முழு பொறுப்பாவார்.
Question 20
இந்தியாவின் முதல் நிதிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1947
B
1949
C
1950
D
1951
Question 20 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் முதல் நிதிக்குழு 1951ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை குடியரசுத்தலைவரே அமைக்கிறார்.
Question 21
நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிக்கவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம்
A
71
B
72
C
73
D
74
Question 21 Explanation: 
குறிப்பு: தன்னுடைய அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் குடியரசுத்தலைவர் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. (நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரும்போது தவிர)
Question 22
மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை எந்த சட்டப்பிரிவு குடியரசுத்தலைவருக்கு வழங்கியுள்ளது?
A
53(2)
B
54(2)
C
54
D
55
Question 22 Explanation: 
குறிப்பு: மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு.
Question 23
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிப்பவர்
A
பிரதமர்
B
அமைச்சரவைக்குழு
C
குடியரசுத்தலைவர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 23 Explanation: 
குறிப்பு: இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களை வரவேற்கிறார். மேலும் வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
Question 24
கீழ்க்கண்டவற்றை நெருக்கடி நிலை அதிகாரங்களின் அடிப்படையில் பொருத்துக.
  • (1) போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி       -  சட்டப்பிரிவு 360
  • (2) மாநிலத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்                                    -   சட்டப்பிரிவு 352
  • (3) நிதி நெருக்கடி                                                                                         -    சட்டப்பிரிவு 356
A
3 1 2
B
1 2 3
C
1 3 2
D
2 1 3
Question 24 Explanation: 
குறிப்பு: இந்திய அரசியலமைப்புச் சட்டம் மேற்கூறிய அனைத்து நெருக்கடி நிலை அதிகாரங்களையும் குடியரசுத்தலைவருக்கு வழங்கியுள்ளது.
Question 25
கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் அதிகபட்சமாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
A
அ) கேரளா
B
ஆ) பஞ்சாப்
C
அ, ஆ இரண்டும்
D
மேற்கூறிய ஏதுமில்லை
Question 25 Explanation: 
குறிப்பு: கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Question 26
கீழ்க்காணும் கூற்றுகளில் குடியரசுத்தலைவரின் நீக்கம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. குடியரசுத்தலைவர் சட்டப்பிரிவு – 61ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
  2. தன்னுடைய பணித்துறப்பு கடித்தினை குடியரசுத்தலைவர் பிரதமரிடம் அளிக்க வேண்டும்.
  3. தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 3 தவறு
D
எதுவுமில்லை
Question 26 Explanation: 
குறிப்பு: தன்னுடைய பணித்துறப்பு கடித்தினை குடியரசுத்தலைவர் துணைக்குடியரசுத்தலைவரிடம் அளிக்க வேண்டும்.
Question 27
குடியரசுத்தலைவர் அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் சட்டப்பிரிவு
A
361(1)
B
362
C
362(1)
D
364
Question 27 Explanation: 
குறிப்பு: குடியரசுத்தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் சட்டப்பிரிவு 361(1) ஆகும்.
Question 28
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிப்பவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
ஆளுநர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 28 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் துணைக்குடியரசுத்தலைவர் பதவி அமெரிக்க துணைக் குடியரசுத்தலைவரின் பதவியைப் போன்றது.
Question 29
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிப்பவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
ஆளுநர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 29 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் துணைக்குடியரசுத்தலைவர் பதவி அமெரிக்க துணைக் குடியரசுத்தலைவரின் பதவியைப் போன்றது.
Question 30
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. 64வது சட்டப்பிரிவின் படி துணைக்குடியரசுத்தலைவர் பதவி வகிக்கிறார். இவர் துணைக்குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் போது மாநிலங்களவை உறுப்பினரவாதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. துணைக்குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மற்றும் இவர் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  3. புதிய துணைக்குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை அவரின் பணிகளை மாநிலங்களவையின் துணைத்தலைவர் செய்வார்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 30 Explanation: 
குறிப்பு: துணைக்குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் போது இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மத்திய-மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவியில் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Question 31
இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத்தலைவர் யார்?
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திரபிரசாத்
C
டாக்டர் B.R. அம்பேத்கர்
D
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
Question 31 Explanation: 
குறிப்பு: சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆவார்.
Question 32
எந்த சட்டப்பிரிவின்படி, துணைக்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத்தலைவர் போல மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
66(2)
B
66(1)
C
46(1)
D
46(2)
Question 32 Explanation: 
குறிப்பு: சட்டப்பிரிவு 66(1) துணைக்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத்தலைவர் போல மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைக் கூறுகிறது.
Question 33
குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத்தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும்போது குடியரசுத்தலைவரின் பணிகளைச் செய்பவர்?
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
D
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Question 33 Explanation: 
குறிப்பு: 1969-ல் இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி M.ஹிதயதுல்லா குடியரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
Question 34
துணைக்குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னர் துணைக்குடியரசுத்தலைவர் ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்?
A
14
B
15
C
16
D
17
Question 34 Explanation: 
குறிப்பு: மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக்குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னர் துணைக்குடியரசுத்தலைவர் ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.
Question 35
ராஜ்யசபாவின் பதவி வழி தலைவராகச் செயல்படுபவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
துணைக்குடியரசுத்தலைவர்
D
குடியரசுத்தலைவர்
Question 35 Explanation: 
குறிப்பு: துணைக்குடியரசுத்தலைவர் அவர் வகிக்கும் பணியின் நிமித்தமாக மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார்.
Question 36
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. குடியரசுத்தலைவர் உடல்நலக்குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாதபோதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் துணைக்குடியரசுத்தலைவர் குடியரசுத்தலைவரின் பணிகளைக் கவனிப்பார்.
  2. குடியரசுத்தலைவர் பதவித்துறப்பு, இறப்பு, அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டின் மூலம் பதவி நீக்கும் போது துணைக்குடியரசுத்தலைவர் அதிகபட்சமாக 6 மாத காலத்திற்கு அவர் பணிகளைக் கவனிப்பார்.
A
கூற்று 1 சரி
B
கூற்று 2 சரி
C
கூற்று 1,2 சரி
D
ஏதுமில்லை
Question 37
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது எந்தச் சட்டப்பிரிவின்படி துணைக்குடியரசுத்தலைவர் வாக்கு அளிக்கலாம்?
A
100
B
101
C
102
D
103
Question 37 Explanation: 
குறிப்பு: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100-ன் படி மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது துணைக்குடியரசுத்தலைவர் வாக்கு அளிக்கலாம்.
Question 38
மாநிலங்களவையின் சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிப்பது எது?
A
அ) முடிவு வாக்கு
B
ஆ) காஸ்டிங் ஓட்டு
C
அ, ஆ இரண்டும்
D
மேற்கூறிய ஏதுமில்லை
Question 38 Explanation: 
குறிப்பு: துணைக்குடியரசுத்தலைவர் இந்த விருப்புரிமை அதிகாரத்தைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கும் அதிகாரம் பெற்றவர். அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.
Question 39
இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது எந்த நாட்டு அரசியலமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
A
அயர்லாந்து
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
முன்னாள் சோவியத் யூனியன்
Question 39 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மினிஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்மினிஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை வெஸ்மினிஸ்டர் முறை என்று அழைக்கப்படுகிறது.
Question 40
மத்திய அமைச்சரவையின் தலைவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
குடியரசுத்தலைவர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 40 Explanation: 
குறிப்பு: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
Question 41
குடியரசுத்தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடும் சரத்து
A
74
B
74(1)
C
64
D
64(1)
Question 41 Explanation: 
எந்த அவையின் பெரும்பான்மைக்கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
Question 42
எந்த அவையின் பெரும்பான்மைக்கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
அ, ஆ இரண்டும்
D
மாநில சட்டசபை
Question 42 Explanation: 
குறிப்பு: மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத்தலைவர் எந்தக்கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம்.
Question 43
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களை நிர்ணயிப்பவர் குடியரசுத்தலைவர்.
  2. நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 1,2 சரி
D
ஏதுமில்லை
Question 43 Explanation: 
குறிப்பு: பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களை நிர்ணயிப்பது நாடாளுமன்றம் ஆகும்.
Question 44
பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு
A
78
B
79
C
80
D
81
Question 44 Explanation: 
குறிப்பு: பிரதம அமைச்சரே அமைச்சரவையின் தலைவர்.
Question 45
குடியரசுத்தலைவருக்கும் அமைச்சரவைக்கும் பாலமாக செயல்படுபவர்
A
ஆளுநர்
B
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C
பிரதமர்
D
துணைப்பிரதமர்
Question 45 Explanation: 
குறிப்பு: பிரதமர் நாட்டின் முக்கியச் செய்தித்தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
Question 46
சர்வதேச மாநாடுகளில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்பவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
ஆளுநர்
D
வெளியுறவுத்துறைச்செயலர்
Question 46 Explanation: 
குறிப்பு: சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் கலந்து கொள்கிறார்.
Question 47
மொத்த மக்களவை உறுப்பினர்களில் _____ மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது.
A
5%
B
10%
C
15%
D
20%
Question 47 Explanation: 
குறிப்பு: ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதமர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது.
Question 48
மத்திய அமைச்சர்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்?
A
5
B
3
C
6
D
4
Question 48 Explanation: 
குறிப்பு: மத்திய அமைச்சர்கள் கேபினட் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள், இராசாங்க அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
Question 49
அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்கள்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
மாநில சட்டசபை
D
குடியரசுத்தலைவர்
Question 49 Explanation: 
குறிப்பு: அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் கீழவையாகிய லோக் சபாவிற்கு பொறுப்புடையவர்கள்.
Question 50
பொருத்துக.
  • (1) மூத்த அமைச்சர்கள்                   -           இணை அமைச்சர்கள்
  • (2) 2வது வகையினர்                        -           ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  • (3) 3வது வகையினர்                        -           இராசாங்க அமைச்சர்கள்
A
1 3 2
B
3 1 2
C
2 1 3
D
1 2 3
Question 50 Explanation: 
குறிப்பு: நிர்வாகத்தின் மையக்கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் அல்லது ஆட்சிக்குழு ஆகும். அமைச்சரவைக்குழுவின் 2வது வகையினர் இராசாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக்குழுவின் 3வது வகையினர் இணை அமைச்சர்கள்.
Question 51
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பொறுப்பு அமைச்சர்கள் இராசாங்க அமைச்சர்கள். அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
  2. அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக்கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை கேபினட் அமைச்சரவை மேற்கொள்கிறது.
  3. கேபினட் மற்றும் இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் உதவி புரிபவர்கள் இணை அமைச்சர்கள்
A
கூற்று 1 தவறு
B
கூற்று 2 தவறு
C
கூற்று 3 தவறு
D
அனைத்தும் சரி
Question 51 Explanation: 
குறிப்பு: பல்வேறு நாடுகளின் தூதர்களை நியமிப்பதிலும் அமைச்சரவை முக்கியப் பங்கு வகிக்கிறது.
Question 52
இந்திய நாடாளுமன்றத்தைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புச்சட்டப்பிரிவு
A
74 – 121
B
75 – 123
C
79 – 122
D
78 – 124
Question 52 Explanation: 
குறிப்பு: இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி Vல் 79 முதல் 122 வரையுள்ள சட்டப்பிரிவுகள் இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட்காலம், அலுவலகர்கள், செயல்முறைகள், சிறப்புச்சலுகைகள், அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
Question 53
இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
A
3
B
5
C
7
D
9
Question 53 Explanation: 
குறிப்பு: குடியரசுத்தலைவர், ராஜ்யசபா, லோக் சபா ஆகிய மூன்று பகுதிகளை இந்திய நாடாளுமன்றம் கொண்டள்ளது.
Question 54
மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேச உறுப்பினர்களால் மாநிலங்களவைக்கு மறைமுகத்தேர்தல் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
A
228
B
238
C
248
D
258
Question 54 Explanation: 
குறிப்பு: மாநிலங்களவை மொத்தம் 250 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில் 238 உறுப்பினர்கள் மறைமுகத்தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 12 பேர் குடியரசுத்தலைவர் மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
Question 55
மத்திய அரசின் சட்டமியற்றும் அங்கமாகத் திகழ்வது
A
உயர்நீதிமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
மாநில சட்டசபை
D
நாடாளுமன்றம்
Question 55 Explanation: 
குறிப்பு: நாடாளுமன்றத்தில் மேலவை மற்றும் கீழவை என இரு அவைகள் உள்ளன.
Question 56
நாடாளுமன்றத்தின் உண்மையான அதிகாரம் பெற்றவர்
A
ஆளுநர்
B
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C
பிரதமர்
D
துணைப்பிரதமர்
Question 57
நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராவதற்கு எத்தனை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்?
A
18
B
21
C
25
D
30
Question 57 Explanation: 
குறிப்பு: மக்களவையிலோ அல்லது எந்தவொரு சட்டமன்றத்திலோ உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
Question 58
மாநிலங்களவையின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?
A
5
B
6
C
7
D
8
Question 58 Explanation: 
குறிப்பு: மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது.
Question 59
மாநிலங்களவையில் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்?
A
1/5
B
1/5
C
1/3
D
1/6
Question 59 Explanation: 
குறிப்பு: மாநிலங்களவையில் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன.
Question 60
அகில இந்தியப்பணியை உருவாக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
மாநில சட்டசபை
D
நாடாளுமன்றம்
Question 60 Explanation: 
குறிப்பு: 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் அகில இந்தியப்பணியை உருவாக்கவும், நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.
Question 61
நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ __________க்கு அதிகாரம் இல்லை.
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
மாநில சட்டசபை
D
நாடாளுமன்றம்
Question 61 Explanation: 
குறிப்பு: மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும்.
Question 62
நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள் மாநிலங்களவை ஒப்புதல் அளிக்க வேண்டும்?
A
10
B
12
C
13
D
14
Question 62 Explanation: 
குறிப்பு: மாநிலங்களவை நிதி மசோதாவிற்கு 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்.
Question 63
இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 63 Explanation: 
குறிப்பு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை மக்களவை ஆகும்.
Question 64
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
550
B
545
C
552
D
545
Question 64 Explanation: 
குறிப்பு: மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இதில் 530 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 20 பேர் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், 2 பேர் ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து குடியரசுத்தலைவராலும் நியமிக்கப்படுகின்றனர். தற்போது 13 பேர் மட்டும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மக்களவை 545 பேரை மட்டும் கொண்டுள்ளது.
Question 65
மக்களவையில் உறுப்பினராக எத்தனை வயது பூர்த்த்யடைந்திருக்க வேண்டும்?
A
25
B
35
C
45
D
30
Question 65 Explanation: 
குறிப்பு: மக்களவையில் உறுப்பினராக மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியிலும் இருத்தல் கூடாது.
Question 66
நம்பிக்கையில்லாத்தீர்மானம் _________ல் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
A
நாடாளுமன்றம்
B
மக்களவை
C
மாநிலங்களவை
D
மாநில சட்டசபை
Question 66 Explanation: 
குறிப்பு: நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும்.
Question 67
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
மாநிலங்களவை – 18; மக்களவை – 39
B
மாநிலங்களவை – 28; மக்களவை – 38
C
மாநிலங்களவை – 39; மக்களவை – 18
D
மாநிலங்களவை – 38; மக்களவை – 28
Question 67 Explanation: 
குறிப்பு: மாநிலங்களவையிலிருந்து 18 பேரும், மக்களவையிலிருந்து 39 பேரும் தமிழகத்திலிருந்து உறுப்பினர்களாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Question 68
மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர்
A
சபாநாயகர்
B
குடியரசுத்தலைவர்
C
பிரதமர்
D
துணைப்பிரதமர்
Question 68 Explanation: 
குறிப்பு: மக்களவை உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி முக்கியப்பங்கு வகிக்கிறது.
Question 69
கீழ்க்காணும் கூற்றுக்களில் சபாநாயகரின் செயல்பாடுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
  1. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா எனத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் சபாநாயகர். பண மசோதாவை தீர்மானிப்பதில் இவருடைய முடிவே இறுதியானது.
  2. மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். நாடாளுமன்ற இரு கூட்டுக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பார்.
  3. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போது அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்கு தலைமை வகிப்பார்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 70
கட்சித்தாவல் தடைச்சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
A
1961
B
1974
C
1985
D
1988
Question 70 Explanation: 
குறிப்பு: 1985ம் ஆண்டு கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி இந்திய அரசியலமைப்புச்சட்டம் 10வது அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
Question 71
பொருத்துக.
  • (1) பட்ஜெட் கூட்டத்தொடர்                      -           நவம்பர் மற்றும் டிசம்பர்
  • (2) மழைக்காலக் கூட்டத்தொடர்          -           பிப்ரவரி – மே
  • (3) குளிர்காலக் கூட்டத்தொடர்              -           ஜூலை – செப்டம்பர்
A
3 1 2
B
2 1 3
C
1 2 3
D
2 3 1
Question 71 Explanation: 
குறிப்பு: நாடாளுமன்ற கூட்டத்தொடர்களான பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி – மே வரையிலும், மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை – செப்டம்பர் வரையிலும், குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பரிலும் நடைபெறுகிறது.
Question 72
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ______________க்கு அதிகாரம் உண்டு
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
மாநில சட்டசபை
D
நாடாளுமன்றம்
Question 72 Explanation: 
குறிப்பு: குடியரசுத்தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக்கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
Question 73
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு
A
72
B
74
C
76
D
80
Question 73 Explanation: 
குறிப்பு: இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி. குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
Question 74
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி பெற எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்?
A
8
B
9
C
11
D
10
Question 74 Explanation: 
குறிப்பு: இந்தியக்குடிமகனாகவும், ஏதாவது ஒரு உயர்நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவோ அல்லது குடியரசுத்தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராகவோ இருத்தல் வேண்டும்.
Question 75
அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் எது?
A
நிர்வாகம்
B
சட்டமன்றம்
C
நீதித்துறை
D
மத்திய அரசு
Question 75 Explanation: 
குறிப்பு: குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
Question 76
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன்
A
சட்டமன்றம்
B
உயர்நீதிமன்றம்
C
உச்சநீதிமன்றம்
D
மாநிலங்களவை
Question 76 Explanation: 
குறிப்பு: உச்சநீதிமன்றம் நாட்டின் முதன்மை நீதிமன்றம் ஆகும். இதன் தலைமையிடம் டெல்லியில் அமைந்துள்ளது.
Question 77
இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A
1949
B
1950
C
1951
D
1952
Question 77 Explanation: 
குறிப்பு: புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ம் நாள் துவங்கப்பட்டது.
Question 78
1950ம் ஆண்டின் அரசியலமைப்பின் தொடக்கத்தில் எத்தனை நீதிபதிகளை உச்சநீதிமன்றம் கொண்டிருந்தது?
A
10
B
12
C
8
D
7
Question 78 Explanation: 
குறிப்பு: 1950ம் ஆண்டின் அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்சநீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
Question 79
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர்
A
பிரதமர்
B
துணைப்பிரதமர்
C
குடியரசுத்தலைவர்
D
துணைக்குடியரசுத்தலைவர்
Question 79 Explanation: 
குறிப்பு: இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் குடியரசுத்தலைவர். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் ஆலோசனையுடன் குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்.
Question 80
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி பெற எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருத்தல் வேண்டும்?
A
3
B
5
C
8
D
10
Question 80 Explanation: 
குறிப்பு: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி பெற இந்தியக்குடிமகனாகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 10 ஆண்டுகள் செயலாற்றியிருத்தல் வேண்டும்.
Question 81
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவியில் நீடிக்கலாம்?
A
55
B
65
C
70
D
75
Question 81 Explanation: 
குறிப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர். தற்காலிக அடிப்படையில் (ad-hoc basis) உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச்சட்டம் வழிவகை செய்கிறது.
Question 82
__________ம் ஆண்டு இந்திய அரசுச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
A
1920
B
1925
C
1930
D
1935
Question 82 Explanation: 
குறிப்பு: 1935-ம் ஆண்டு இந்திய அரசுச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
Question 83
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு
A
1990
B
2004
C
2010
D
2015
Question 83 Explanation: 
குறிப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2004-ல் தொடங்கப்பட்டது.
Question 84
ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
உச்சநீதிமன்றம்
D
உயர்நீதிமன்றம்
Question 84 Explanation: 
குறிப்பு: ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் உள்ளது. இது நீதிப்புணராய்வு எனப்படும்.
Question 85
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
  2. பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்சநீதிமன்றத்தில் கருத்தினைப் பெற அரசியலமைப்புச்சட்டம் குடியரசுத்தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
  3. மாநில உயர்நீதிமன்றங்கள், உரிமையியல், குற்றவியல், அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 86
பொருத்துக (குடியரசுத்தலைவர்கள்)
  • (1) அ.ப.ஜ. அப்துல் கலாம்             -           1969 - 1974
  • (2) சங்கர் தயாள் சர்மா                  -           2012 - 2017
  • (3) நீலம் சஞ்சீவி ரெட்டி                  -           2002 - 2007
  • (4) பிரனாப் முகர்ஜி                         -           1977 – 1982
  • (5) வி.வி. கிரி                                     -           1992 – 1997
A
5 4 1 3 2
B
4 3 2 1 5
C
3 2 1 4 5
D
2 3 5 1 4
Question 87
உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தவோ அல்லது வேறு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவோ நீதிப்பேராணை பிறப்பிக்க முடியும் எனக் கூறும் சரத்து
A
224
B
225
C
226
D
227
Question 87 Explanation: 
குறிப்பு: அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும்.
Question 88
அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளை வழங்குகிறது?
A
3
B
4
C
5
D
6
Question 88 Explanation: 
குறிப்பு: 1. ஆட்கொணர் நீதிப்பேராணை 2. கீழ்நீதிமன்றங்களுக்கு விடுக்கும் கட்டளை நீதிப்பேராணை 3. வழக்கு விசாரணை தடை நீதிப்பேராணை 4. தடைமாற்று நீதிப்பேராணை 5. உரிமை வினவு நீதிப்பேராணை
Question 89
நாட்டின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
A
உயர்நீதிமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
குடும்ப நல நீதிமன்றம்
D
மாவட்ட நீதிமன்றம்
Question 89 Explanation: 
குறிப்பு: நாட்டின் இறுதி முடிவு எடுக்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் உச்சநீதிமன்றம்
Question 90
ஆண்டுகளின் அடிப்படையில் பிரதம அமைச்சரை வகைப்படுத்துக.
  • (1) மொரார்ஜி தேசாய்
  • (2) லால் பகதூர் சாஸ்திரி
  • (3) வி.பி. சிங்
  • (4) டி. தேவகவுடா
  •  (5) மன்மோகன் சிங்
A
1964 – 1966
B
1977 – 1979
C
1989 – 1990
D
2004-2014
E
None
Question 90 Explanation: 
விடைகள்: (1) மொரார்ஜி தேசாய் - 1977 – 1979; (2) லால் பகதூர் சாஸ்திரி - 1964 – 1966; (3) வி.பி. சிங் - 1989 – 1990; (4) டி. தேவகவுடா - 1977 – 1979; (5) மன்மோகன் சிங் - 2004-2014
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 90 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!