Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

பெண்கள் மேம்பாடு Online Test 7th Social Science Lesson 20 Questions in Tamil

பெண்கள் மேம்பாடு Online Test 7th Social Science Lesson 20 Questions in Tamil

Congratulations - you have completed பெண்கள் மேம்பாடு Online Test 7th Social Science Lesson 20 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று 1: பெண்கள் சமத்துவத்திற்கான போராட்டமானது எந்த ஒரு பெண்ணியவாதிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல.
  • கூற்று 2: பெண்கள் சமத்துவத்திற்கான போராட்டமானது மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கூட்டு முயற்சியாகும்
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 1 Explanation: 
(குறிப்பு: ஒரு ஆணுக்கான கல்வி என்பது அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண்ணுக்கு வழங்கும் கல்வியானது, ஒரு தலைமுறைக்கான கல்வியாகும்.)
Question 2
“பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்" என்று கூறியவர்
A
நேரு
B
மகாத்மா காந்தியடிகள்
C
அம்பேத்கர்
D
பெரியார்
Question 2 Explanation: 
(குறிப்பு: பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று. அவர்களிடம் ஏற்கனவே உள்ள வலிமையை உலகம் உணரும் விதமாக மாற்றுவதே பெண்ணியம் ஆகும்.)
Question 3
பெண்களின் மேம்பாடு மற்றும் தனித்துவம் என்பது கீழ்க்கண்ட எந்த நிலையில் பெறும் முன்னேற்றத்தை குறிக்கும்?
  1. அரசியல்
  2. சமூகப் பொருளாதாரம்
  3. சமூகநல வாழ்வு
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 3
Question 3 Explanation: 
(குறிப்பு: இவையே பெண்களின் நிலைத்த மேம்பாட்டிற்கு ஆணிவேராகும்.)
Question 4
ஆண்பால், பெண்பால் குறித்த புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளில் சமூகத்தின் தாக்கம் எவ்விதம் என்பதை ஆராய்வதே ___________ எனப்படும்.
A
பாலின சமத்துவம்
B
சமூக ஒற்றுமை
C
பாலின வேறுபாடு
D
சமூகவியலில் பாலினம்
Question 4 Explanation: 
(குறிப்பு: சமூகவியலில் பாலினத்திற்கு இடையே வேறுபாட்டைக் காண்கிறோம்.)
Question 5
பாலியல் என்பது __________ கூற்றின்படி ஆண் அல்லது பெண் என சமூகத்தில் பயன்படுத்துவதாகும்.
A
வேதியியல் பண்பு
B
உயிரியல் பண்பு
C
இயற்பியல் பண்பு
D
விலங்கியல் பண்பு
Question 5 Explanation: 
(குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை மக்கள் பேசும்போது, பெரும்பாலும் பாலியல் பற்றிய கருத்துகளே பேசப்படுகின்றன.)
Question 6
கீழ்க்கண்டவற்றுள் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுபவை எவை?
  1. கல்வி
  2. பாலினப் பாகுபாடு பார்க்காதிருத்தல்
  3. சாதி, சமய பாகுபாடுகளின்மை
  4. இன பாகுபாடு
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3
D
2, 3, 4
Question 6 Explanation: 
(குறிப்பு: பாலின பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.)
Question 7
  • கூற்று 1: கல்விபெறும் பெண் குழந்தை, தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்பு சேர்க்கிறார்.
  • கூற்று 2: பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி, அறிவினை பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதி நிலை உயரவும் அவர்களின் சுய முன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 8
"நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச் செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கி நிற்கும் வல்லமைக் கொண்டவர்" என கூறியவர்
A
மகாத்மா காந்தி
B
ஆல்பிரட் மார்ஷல்
C
பராக் ஒபாமா
D
ஜவஹர்லால் நேரு
Question 8 Explanation: 
(குறிப்பு: 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், பராக் ஒபாமா இவ்வாறு உரையாற்றினார்.)
Question 9
உலகெங்கிலும் உள்ள கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட ___________ சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர்.
A
52
B
63
C
65
D
68
Question 9 Explanation: 
(குறிப்பு: எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.)
Question 10
பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் ___________ ஆண்டுகளுக்கு முன்பே ‘அனைவருக்கும் கல்வி’ என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.
A
20
B
30
C
40
D
50
Question 11
  • கூற்று 1: ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களேயாகும்.
  • கூற்று 2: இளம்பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள்கடத்தல்கள் கணிசமாக குறைக்கப்படும் என்று ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 12
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பினைப் பற்றிய ஆய்வின்படி, கீழ்க்கண்ட எவற்றின் மூலம் பெண்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைக்கலாம்?
A
குடிமைப் பணி, குடிமைக் கல்வி
B
குடிமைக் கல்வி, குடிமைப் பயிற்சி
C
குடிமைப் பயிற்சி, குடிமை பணி
D
வறுமைக் குறைப்பு, குடிமைக் கல்வி
Question 12 Explanation: 
(குறிப்பு: உலகம் முழுவதும் பெண்கள் வாக்காளர்களாகவே உள்ளனர். அவர்களது அரசியல் ஈடுபாடு கட்டுப்படுத்தப்படுகிறது.)
Question 13
கல்வி அறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகரித்து ஐந்து வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று பரிந்துரைத்துள்ள நிறுவனம்
A
ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம்
B
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பு
C
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம்
D
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்
Question 14
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் பரிந்துரைப்படி, பின்தங்கிய நாடுகளில் __________ பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது.
A
1/2
B
1/3
C
1/4
D
2/3
Question 14 Explanation: 
(குறிப்பு: எந்த நாடுகளில் பெண் குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ அவர்களின் திருமணம் நான்கு ஆண்டுகள் வரை தள்ளிப்போகிறது எனவும் இப்பரிந்துரை கூறுகிறது.)
Question 15
UNESCO வின் கூற்றுப்படி, ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் ___________ சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது.
A
10%
B
20%
C
30%
D
40%
Question 15 Explanation: 
(குறிப்பு: ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.)
Question 16
10 சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக ________ சதவிகிதம் அதிகரிக்கின்றது.
A
2%
B
3%
C
4%
D
5%
Question 16 Explanation: 
(குறிப்பு: பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உயருகிறது.)
Question 17
பெண்களுக்கான முதல் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு
A
1825
B
1834
C
1838
D
1848
Question 17 Explanation: 
(குறிப்பு: சாவித்ரிபாய் மற்றும் அவரது கணவர் ஜோதிராவ் புலே இருவரும் இணைந்து இப்பள்ளியை தொடங்கினர்.)
Question 18
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?
A
விஜயலட்சுமி பண்டிட்
B
அன்னை தெரசா
C
சாவித்ரிபாய் புலே
D
சரோஜினி நாயுடு
Question 18 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் பெண்கல்வியை செயல்வடிவமாக்கியவர் ஜோதிராவ் புலே ஆவார்.)
Question 19
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பெண் யார்?
A
சிறிமாவோ பண்டார நாயக
B
வாலென்டினா தெரேஷ் கோவா
C
ஜன்கோ தபே
D
சார்லோட் கூப்பர்
Question 19 Explanation: 
(குறிப்பு: சார்லோட் கூப்பர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.)
Question 20
எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் பெண் _____________.
A
சிறிமாவோ பண்டார நாயக
B
வாலென்டினா தெரேஷ் கோவா
C
ஜன்கோ தபே
D
சார்லோட் கூப்பர்
Question 20 Explanation: 
(குறிப்பு: ஜன்கோ தபே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்.)
Question 21
உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
A
சிறிமாவோ பண்டார நாயக
B
வாலென்டினா தெரேஷ் கோவா
C
ஜன்கோ தபே
D
சார்லோட் கூப்பர்
Question 21 Explanation: 
(குறிப்பு: சிறிமாவோ பண்டாரநாயக என்பவர் இலங்கையை சேர்ந்தவர்.)
Question 22
_________ என்ற பெண்மணி விண்வெளிக்கு முதன்முதலில் சென்றவர் ஆவார்.
A
சிறிமாவோ பண்டார நாயக
B
வாலென்டினா தெரேஷ் கோவா
C
ஜன்கோ தபே
D
சார்லோட் கூப்பர்
Question 22 Explanation: 
(குறிப்பு: வாலென்டினா தெரேஷ் கோவா, சோவியத் ஒன்றியத்தை சேர்ந்தவர்.)
Question 23
இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகத்தை மகர்ஷிகார்வே ____________ ஆண்டு புனேவில் தொடங்கினார்.
A
1910
B
1914
C
1916
D
1918
Question 23 Explanation: 
(குறிப்பு: முதல் மகளிர் பல்கலைக்கழகமான SNDT பல்கலைக்கழகம் ஐந்து மாணவிகளுடன் தொடங்கப்பட்டது.)
Question 24
மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்
A
சரோஜினி நாயுடு
B
விஜலட்சுமி பண்டிட்
C
சுஷ்மா ஸ்வராஜ்
D
இந்திரா காந்தி
Question 25
மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்
A
சரோஜினி நாயுடு
B
கிரண்பேடி
C
சுஷ்மா ஸ்வராஜ்
D
இந்திரா காந்தி
Question 25 Explanation: 
(குறிப்பு: மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார்.)
Question 26
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
A
சரோஜினி நாயுடு
B
அருந்ததி ராய்
C
சுஷ்மா ஸ்வராஜ்
D
இந்திரா காந்தி
Question 26 Explanation: 
(குறிப்பு: சரோஜினி நாயுடு ஒன்றிணைந்த மாகாணங்களின் பொறுப்பாளர் ஆனார்.)
Question 27
_____________ என்பவர் ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் ஆவார்.
A
சரோஜினி நாயுடு
B
விஜலட்சுமி பண்டிட்
C
சுஷ்மா ஸ்வராஜ்
D
இந்திரா காந்தி
Question 27 Explanation: 
(குறிப்பு: விஜயலட்சுமி பண்டிட் 1953ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அவையின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றார்.)
Question 28
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற ஆண்டு
A
1964
B
1965
C
1966
D
1969
Question 28 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி ஆவார்.)
Question 29
இந்தியாவின் முதல் பெண் காவல்துறை உயர்அதிகாரியாக கிரண்பேடி பொறுப்பேற்ற ஆண்டு
A
1962
B
1969
C
1972
D
1975
Question 30
அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
A
1972
B
1978
C
1979
D
1982
Question 30 Explanation: 
(குறிப்பு: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அன்னை தெரசா ஆவார்.)
Question 31
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்
A
அருந்ததி ராய்
B
பிரதிபா பாடீல்
C
பச்சேந்திரி பால்
D
மீராசாகிப் பாத்திமா பிவி
Question 31 Explanation: 
(குறிப்பு: 1984 ஆம் பச்சேந்திரி பால் எவரெஸ்ட்டை அடைந்தார்.)
Question 32
புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண்
A
அருந்ததி ராய்
B
பிரதிபா பாடீல்
C
பச்சேந்திரி பால்
D
மீராசாகிப் பாத்திமா பிவி
Question 32 Explanation: 
(குறிப்பு: அருந்ததி ராய் 1997 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்றார்.)
Question 33
முதல் பெண் குடியரசு தலைவராக பிரதிபா பாடீல் பதவியேற்ற ஆண்டு
A
2002
B
2007
C
2012
D
2017
Question 34
மக்களவையின் சபாநாயகர் பதவிவகித்த முதல் பெண் சபாநாயகர்
A
அருந்ததி ராய்
B
மீராகுமார்
C
பச்சேந்திரி பால்
D
மீராசாகிப் பாத்திமா பிவி
Question 34 Explanation: 
(குறிப்பு: மீராகுமார் 2009 ஆண்டு மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்தார்.)
Question 35
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி மீராசாகிப் பாத்திமா பிவி.
  2. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்.
  3. இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் சுச்சித கிருபாளினி.
A
1 மட்டும் தவறு
B
3 மட்டும் தவறு
C
1, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 36
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு
  1. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை இயக்குநர் கிரண்பேடி.
  2. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
  3. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 36 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் முதல் பெண் காவல்துறை இயக்குநர் காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா.)
Question 37
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணங்களில் தவறானதை தேர்ந்தெடு.
A
பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
B
சமூகப் பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு
C
பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது.
D
பள்ளிகளில் அதிக தக்க வைப்பு வீதம் மற்றும் குறைந்த இடைநிற்றல் விகிதம்.
Question 37 Explanation: 
(குறிப்பு: பள்ளிகளில் குறைந்த தக்க வைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு ஆகியவை பெண் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணங்கள் ஆகும்.)
Question 38
கீழ்க்கண்டவற்றுள் எவை நீடித்த நிலையான வளர்ச்சிக்கு அவசியக் காரணிகள் ஆகும்?
  1. பெண்கள் முன்னேற்றம்
  2. மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம்
  3. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை குறைப்பது
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 3
Question 38 Explanation: 
(குறிப்பு: மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின்போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.)
Question 39
பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
  2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது.
  3. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி இலக்கினை அடைவதன் மூலம் பெண்களால் பொருளாதார முன்னேற்றம் அடைய முடிகிறது.
  4. மூன்று அல்லது அதற்கு மேலான பெண்கள் ஒரு நிறுவனத்தில் செயல்படும்போது, அனைத்து பரிமாணங்களிலும் அந்த நிறுவனம் வளர்ச்சியடைகிறது.
A
4 மட்டும்
B
2 மட்டும்
C
2, 3
D
எதுவுமில்லை
Question 40
உலகின்  மொத்த மக்கள்தொகையில் எத்தனை சதவிகித பெண்கள் உள்ளனர்?
A
40%
B
50%
C
60%
D
52%
Question 40 Explanation: 
(குறிப்பு: தனிப்பட்ட உரிமைகள் சமூக, சமத்துவம் அரசியல் சக்தி மற்றும் பொருளாதார வாய்ப்பு ஆகியவை பெண் அதிகாரமளிப்பின் அம்சங்களாகும்.)
Question 41
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
21.59
C
16.68
D
23.98
Question 41 Explanation: 
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 74.04 கல்வி கற்ற நபர்களில் 82.14 ஆண்களும், 65.46 பெண்களும் உள்ளனர்.)
Question 42
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
21.59
C
16.68
D
23.98
Question 42 Explanation: 
(குறிப்பு: 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 64.83 கல்வி கற்ற நபர்களில் 75.26 ஆண்களும், 53.67 பெண்களும் உள்ளனர்.)
Question 43
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
A
பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
B
அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்.
C
மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
D
வளர்ந்த நாடுகள் மட்டும்
Question 43 Explanation: 
(குறிப்பு: உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன.)
Question 44
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
A
பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
B
பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
C
மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
D
மேலே உள்ள அனைத்தும்
Question 45
1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
26.62
C
25.05
D
23.98
Question 45 Explanation: 
(குறிப்பு: 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 52.21 கல்வி கற்ற நபர்களில் 64.13 ஆண்களும், 39.29 பெண்களும் உள்ளனர்.)
Question 46
1981 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
26.62
C
25.05
D
23.98
Question 46 Explanation: 
(குறிப்பு: 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 43.57 கல்வி கற்ற நபர்களில் 56.38 ஆண்களும், 29.76 பெண்களும் உள்ளனர்.)
Question 47
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
26.62
C
25.05
D
23.98
Question 47 Explanation: 
(குறிப்பு: 1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 34.45 கல்வி கற்ற நபர்களில் 45.96 ஆண்களும், 21.97 பெண்களும் உள்ளனர்.)
Question 48
1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் ___________.
A
24.84
B
26.62
C
25.05
D
23.98
Question 48 Explanation: 
(குறிப்பு: 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 28.3 கல்வி கற்ற நபர்களில் 40.4 ஆண்களும், 15.35 பெண்களும் உள்ளனர்.)
Question 49
__________ ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி வீதம் 18.30 ஆகும்.
A
1951
B
1952
C
1949
D
1950
Question 49 Explanation: 
(குறிப்பு: 1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 18.33 கல்வி கற்ற நபர்களில் 27.16 ஆண்களும், 8.86 பெண்களும் உள்ளனர்.)
Question 50
பின்வருவனவற்றுள் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
A
மோசமான பேறு கால ஆரோக்கியம்
B
ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
C
எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதல்
D
பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
Question 51
ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுவது ___________.
A
பாலினம்
B
கல்வி
C
சமூக அம்சங்கள்
D
பொருளாதார நிலை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!