Online TestTnpsc Exam
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Online Test 8th Social Science Lesson 21 Questions in Tamil
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Online Test 8th Social Science Lesson 21 Questions in Tamil
Congratulations - you have completed பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Online Test 8th Social Science Lesson 21 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது?
தேசிய வருமானம் | |
தேசிய வளம் | |
தேசிய பாதுகாப்பு | |
இவை எதுவும் இல்லை |
Question 1 Explanation:
(குறிப்பு - ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும்.இது நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்)
Question 2 |
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக பதவி வகிப்பவர் யார்?
இந்திய குடியரசு தலைவர் | |
முப்படைகளின் தலைமைத் தளபதி | |
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
இவர் யாருமல்ல |
Question 2 Explanation:
(குறிப்பு - இந்திய குடியரசு தலைவர் நாட்டின் தலைவராகவும் நமது பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவி நிலையும் வகிக்கிறார். அவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்)
Question 3 |
இந்தியாவின் ஆயுதப்படைகளுள் அல்லாதவை எது?
கடற்படை | |
விமானப்படை | |
ராணுவப் படை | |
சிறப்பு எல்லைப்புறபடை |
Question 3 Explanation:
(குறிப்பு - ஆயுதப்படை யானது நாட்டின் ராணுவ படை கடற்படை விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மை படைகள் ஆகும்)
Question 4 |
இந்திய ஆயுதப் படைகள் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன?
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் | |
மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் | |
மத்திய உள்துறை அமைச்சகம் | |
மத்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் |
Question 4 Explanation:
(குறிப்பு - இந்திய ஆயுதப் படைகள் ராணுவப் படை கடற்படை போன்றவற்றை உள்ளடக்கிய முதன்மை படைகள் ஆகும். அவைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன)
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் துணை ராணுவப்படை அல்லாதது எது?
- அசாம் ரைபிள்ஸ்
- மத்திய ஆயுத காவல்படை
- சிறப்பு எல்லைப்புற படை
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 5 Explanation:
(குறிப்பு - அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்படை ஆகியவை துணை இராணுவப் படைகள் ஆகும்.(Paramilitary Forces))
Question 6 |
மத்திய ஆயுத காவல் படைகள் குறித்த சரியான கூற்று எது?
- மத்திய ஆயுத காவல் படைகள் ஆவன, BSF, CRPF, ITBP, CISF, மற்றும் SSB ஆகும்.
- மத்திய ஆயுத காவல் படைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 6 Explanation:
(குறிப்பு - மத்திய ஆயுத காவல் படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது)
Question 7 |
கீழ்க்கண்ட படைப்பிரிவுகளுள் எது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு ராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றது?
ராணுவப் படை | |
சிறப்பு எல்லைப்புற படை | |
மத்திய ஆயுத காவல்படை | |
அசாம் ரைபிள்ஸ் |
Question 7 Explanation:
(குறிப்பு - மத்திய ஆயுத காவல் படை (CAPF), தங்களது பணிக்கு ஏற்றவாறு ராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது)
Question 8 |
இந்திய ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசிய போர் நினைவுச்சின்னம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
மும்பை | |
புதுடெல்லி | |
ஜம்மு காஷ்மீர் | |
லக்னோ |
Question 8 Explanation:
(குறிப்பு - தேசிய போர் நினைவுச்சின்னம் புதுடெல்லியில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது)
Question 9 |
இந்திய ராணுவப்படை யாருடைய தலைமையின் கீழ் வழிநடத்தப்படுகிறது?
ராணுவப் படை தளபதி | |
முப்படைத் தளபதி | |
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
மத்திய உள்துறை அமைச்சர் |
Question 9 Explanation:
(குறிப்பு - இந்திய ராணுவப்படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும். இது ஜெனரல் என்று அழைக்கப்படும் ராணுவ படை தளபதியால் வழி நடத்தப்படுகிறது)
Question 10 |
இந்திய ராணுவப்படை தளபதிக்கு வழங்கப்படும் அந்தஸ்து எது?
ஐந்து நட்சத்திர அந்தஸ்து | |
நான்கு நட்சத்திர அந்தஸ்து | |
மூன்று நட்சத்திர அந்தஸ்து | |
இது எதுவும் அல்ல |
Question 10 Explanation:
(குறிப்பு - இந்திய ராணுவப்படை தளபதிக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரல் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது)
Question 11 |
இந்திய ராணுவப்படை பற்றிய சரியான கூற்று எது?
- இந்திய ராணுவப்படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
- தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை பாதுகாத்தல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.
- இயற்கைப் பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான மீட்புபணிகளையும் இது செய்கிறது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 11 Explanation:
(குறிப்பு - தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே டிசம்பர் 31, 2019 முதல் பொறுப்பேற்றுள்ளார்)
Question 12 |
இந்திய ராணுவம் ரெஜிமென்ட் என்ற அமைப்பு முறையைக் கொண்டது. இது செயல்பாட்டு ரீதியாகவும், புவியியல் அடிப்படையிலும்........... பிரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து படைபிரிவுகளாக | |
ஆறு படைபிரிவுகளாக | |
ஏழு படைபிரிவுகளாக | |
எட்டு படைபிரிவுகளாக |
Question 12 Explanation:
(குறிப்பு- இந்திய ராணுவ ரெஜிமெண்ட், ஏழு படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.)
Question 13 |
இந்திய கடற்படை குறித்த தவறான கூற்று எது?
கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பது ஆகும். | |
இது அட்மிரல் என்று அழைக்கப்படும் கடற்படைத் தளபதி யார் வழி நடத்தப்படுகிறது. | |
அட்மிரல் என்பவர் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர். | |
இந்திய கடற்படை 5 படைபிரிவுகளை கொண்டது. |
Question 13 Explanation:
(குறிப்பு - இந்திய கடற்படையானது மூன்று படைப் பிரிவுகளை கொண்டது. இந்திய கடல் எல்லைகளில் ஆக்கிரமிப்புகளை தடுத்தல் அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இது நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து இந்திய நிலப்பகுதி மக்கள் கடல் சார் நலன்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது)
Question 14 |
கீழ்க்காணும் பதவிகளுள், எது ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரி பதவி ஆகும்?
பீல்ட் மார்ஷல் | |
அட்மிரல் | |
ஜெனரல் | |
ஏர் சீப் மார்ஷல் |
Question 14 Explanation:
(குறிப்பு - ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரப் பதவி பீல்ட் மார்ஷல் என்பது ஆகும். இது இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவி ஆகும்)
Question 15 |
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் யார்?
சாம் மானெக்ஷா | |
கேஎம் கரியப்பா | |
அர்ஜுன் சிங் | |
பிபின் ராவத் |
Question 15 Explanation:
(குறிப்பு - சாம் மானெக்ஷா என்பவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ஆவார். கே.எம்.கரியப்பா இரண்டாவது பீல்ட் மார்ஷல் ஆவார்)
Question 16 |
இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி யார்?
அர்ஜுன் சிங் | |
பல்தேவ் சிங் | |
கரண் சிங் | |
உத்தம்சிங் |
Question 16 Explanation:
(குறிப்பு- இந்திய விமானப் படையில் மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜுன் சிங் ஆவார். இவர் முதலாவது உலகப் போர் மற்றும் இரண்டாவது உலகப் போரில் பணியாற்றி 1943ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ஆவார்)
Question 17 |
இந்திய ராணுவத்தின் மிக பழமையான காலாட் படை பிரிவுகளில் ஒன்றான மெட்ராஸ் ரெஜிமென்ட் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1753ஆம் ஆண்டு | |
1755ஆம் ஆண்டு | |
1758ஆம் ஆண்டு | |
1759ஆம் ஆண்டு |
Question 17 Explanation:
(மெட்ராஸ் ரெஜிமென்ட் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1758ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது)
Question 18 |
இந்திய ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்திய இந்திய சீனப் போர் நிகழ்ந்த ஆண்டு எது?
1960ஆம் ஆண்டு | |
1962ஆம் ஆண்டு | |
1964ஆம் ஆண்டு | |
1966ஆம் ஆண்டு |
Question 18 Explanation:
(குறிப்பு - இந்திய சீன போர் நிகழ்ந்த ஆண்டு 1962 ஆம் ஆண்டு. நவம்பர் 20, 1962ஆம் ஆண்டு இந்தப் போர் முடிவுக்கு வந்தது)
Question 19 |
இந்திய ராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளிகள் எங்கு நிறுவப்பட்டது?
- அதிகாரிகள் பயிற்சி பள்ளி, பூனா
- அதிகாரிகள் பயிற்சி பள்ளி, சென்னை
- அதிகாரிகள் பயிற்சி பள்ளி, கான்பூர்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 19 Explanation:
(குறிப்பு - அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள் (Officers Training Schools-OTS), பூனா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது)
Question 20 |
அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள், அதிகாரிகள் பயிற்சி அகாடமி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
1992ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள் | |
1994ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள் | |
1996ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள் | |
1998ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள் |
Question 20 Explanation:
(குறிப்பு - 1998ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள் முதல் அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள்(Officers Training Schools -OTS), அதிகாரிகள் பயிற்சி அகாடமி (Officers Training Academy - OTA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)
Question 21 |
இந்திய விமானப்படை குறித்த கூற்றுகளில் எது சரியானது?
- இந்திய விமானப்படையின் தலைவர், ஏர் சீப் மார்ஷல் என்று அழைக்கப்படுவார்.
- ஏர் சீப் மார்ஷல் என்பது நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட பதவி ஆகும்.
- இது ஐந்து படைப் பிரிவுகளை கொண்டது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 21 Explanation:
(குறிப்பு - இந்திய விமானப்படை ஏழு படை பிரிவுகளை கொண்டது)
Question 22 |
பொருத்துக
- பீல்ட் மார்ஷல் - a) கடற்ப்படை தளபதி
- ஜெனரல் - b) ஐந்து நட்சத்திர அந்தஸ்து
- அட்மிரல் - c) நான்கு நட்சத்திர அந்தஸ்து
- ஏர் சீப் மார்ஷல் - d) ராணுவப் படை தளபதி
I-b, II-d, III-a, IV-c | |
I-a, II-d, III-c, IV-b | |
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 22 Explanation:
(குறிப்பு - பீல்ட் மார்ஷல் பதவி மட்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை கொண்டது. கர்னல் அட்மிரல் ஏர் சீப் மார்ஷல் போன்ற பதவிகள் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டவை ஆகும்)
Question 23 |
பொருத்துக
- இந்திய ராணுவப்படை - a) SSB, BSF.
- இந்திய கடற்ப்படை - b) ரெஜிமண்ட்
- இந்திய விமானப்படை - c) மூன்று படைப்பிரிவு
- மத்திய ஆயுத காவல்படை - d) ஏழு படைப்பிரிவு
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 23 Explanation:
(குறிப்பு - ராணுவ படை, கப்பற்படை, விமானபடையின் தளபதிகள் முறையே ஜெனரல், அட்மிரல் மற்றும் ஏர் சீப் மார்ஷல் ஆவர் )
Question 24 |
இந்திய பாராளுமன்றத்தின் 1978 ஆம் ஆண்டு கடலோர காவல்படை சட்டத்தின்படி, இந்தியாவின் சுதந்திர ஆயுதப்படை இந்திய கடலோர காவல்படை......... ஆண்டு நிறுவப்பட்டது.
1978ஆம் ஆண்டு | |
1979ஆம் ஆண்டு | |
1980ஆம் ஆண்டு | |
1981ஆம் ஆண்டு |
Question 24 Explanation:
(குறிப்பு - இந்திய கடலோர காவல்படை 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது)
Question 25 |
............ சோழ மன்னர் முதலாம் ராஜேந்திரன் தென்கிழக்கு ஆசியாவின் கடல்சார் பகுதியான ஸ்ரீவிஜயம் மீது தன் கடற்படையெடுப்பை தொடங்கினார். மேலும் கீதா என்றழைக்கப்படும் கடாரம் பகுதியை வென்றார்.
1020ஆம் ஆண்டு | |
1025ஆம் ஆண்டு | |
1030ஆம் ஆண்டு | |
1035ஆம் ஆண்டு |
Question 25 Explanation:
( முதலாம் ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜி கருத்துக்கு எதிரான இந்த கடல்கடந்த படையெடுப்புக்கள் வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது)
Question 26 |
துணை ராணுவ படைகள் குறித்த சரியான கூற்று எது?
- உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்கவும் கடலோரப் பகுதியை பாதுகாக்கவும் ராணுவத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தும் படைகள் துணை இராணுவப் படைகள் என்று அழைக்கப்படுகிறது.
- அமைதிக் காலங்களில் துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கின்றன.
- CRPF, ITBP, CISF போன்றவை துணை இராணுவப் படைகள் ஆகும்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 26 Explanation:
(குறிப்பு - CRPF, ITBP, CISF போன்றவை மத்திய ஆயுத காவல் படைகள் ஆகும். இவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன)
Question 27 |
அசாம் ரைபிள்ஸ் படை குறித்து கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
இது அசாம் பகுதியில் 1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. | |
இது கச்சார் லெவி எனப்பட்ட குடிப்படை( ராணுவப் பயிற்சி பெற்ற மக்கள் குழு) ஆகும். | |
அசாம் ரைபிள்ஸ் தற்போது 46 படைப்பிரிவுகளை கொண்டுள்ளது. | |
இது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. |
Question 27 Explanation:
(குறிப்பு - அசாம் ரைபிள்ஸ் என்னும் துணை இராணுவப் பாதுகாப்பு படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது)
Question 28 |
சிறப்பு எல்லைப்புற படை (Special Frontier Force) குறித்த கூற்றுகளில் எது சரியானது ?
- சிறப்பு எல்லைப்புற படை என்பது ஒரு துணை இராணுவ சிறப்புப்படை ஆகும்.
- இது 1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 28 Explanation:
(குறிப்பு - சிறப்பு எல்லைப்புறப்படையானது, 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் இப் படைப்பிரிவு புலனாய்வு பணியகத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது)
Question 29 |
துணை இராணுவப் படையில் இருந்த எந்த படைப்பிரிவு மத்திய ஆயுத காவல் படையாக மறுவரையறை செய்யப்படாதவை?
மத்திய ரிசர்வ் காவல் படை | |
இந்தோ திபெத்திய எல்லை காவல் | |
மத்திய தொழிலக பாதுகாப்பு படை | |
தேசிய மாணவர் படை |
Question 29 Explanation:
(குறிப்பு - மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ திபெத்திய எல்லை காவல், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு சேவை பணியகம் ஆகிய ஐந்து படைப்பிரிவுகள் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய ஆயுத கப்பல் படையாக மறு வரையறை செய்யப்பட்டது)
Question 30 |
துணை இராணுவப் படையில் இருந்த ஐந்து படைப்பிரிவுகள், மத்திய ஆயுத காவல் படை யாக மறுவரை செய்யப்பட்டபின் 2011ஆம் ஆண்டு முதல், எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது?
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் | |
மத்திய உள்துறை அமைச்சகம் | |
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
இவை எதுவும் அல்ல |
Question 30 Explanation:
(குறிப்பு - மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து படைப்பிரிவுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.அவை CRPF, ITBP, BSF, CISF மற்றும் SSB ஆகும் )
Question 31 |
மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புப் பிரிவான விரைவு அதிரடிப்படையின் (Rapid Action Force -RAF) முக்கிய பணிகள் ஆவன எது?
- கலவரத்தை கட்டுப்படுத்துதல்
- கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல்
- மீட்பு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
- அமைதியற்ற சூழ்நிலைகளை கையாளுதல்
I, II, III மட்டும் | |
I, III, IV மட்டும் | |
II, III, IV மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 31 Explanation:
(குறிப்பு - அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், உள்நாட்டு பாதுகாப்பினை திறம்பட பராமரிப்பதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவது மத்திய ரிசர்வ் காவல் படையின் நோக்கமாகும். மத்திய ரிசர்வ் காவல் படையின், ஒரு சிறப்பு படைப்பிரிவு விரைவு அதிரடிப்படை ஆகும்)
Question 32 |
இந்தோ திபெத் எல்லைக் காவல்படை குறித்த சரியான கூற்று எது?
- இது எல்லையைப் பாதுகாக்கும் ஒரு காவல் படை ஆகும்.
- இது அதிக உயரமான பகுதியில் செயல்படுவதில் சிறப்பு வாய்ந்தது.
- இந்திய சீன எல்லைப் பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதிகளை காக்கும் பணிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 32 Explanation:
(குறிப்பு - இந்தோ திபெத்திய எல்லை காவல் படை, 1962ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது)
Question 33 |
மத்திய தொழிலக பாதுகாப்பு படை குறித்த தவறான கூற்று எது?
- இது 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- முக்கிய அரசாங்க கட்டிடங்களை பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு, விமான நிலைய பாதுகாப்பு ஆகியன இதன் முக்கிய பணிகளாகும்.
I மட்டும் தவறு | |
II மட்டும் தவறு | |
இரண்டும் தவறு | |
இரண்டும் சரியானது |
Question 33 Explanation:
(குறிப்பு - மத்திய தொழிலக பாதுகாப்பு படை 1969ஆம் ஆண்டு, மார்ச் 10ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.)
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் ராணுவப் படை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பு எது?
மத்திய தொழிலக பாதுகாப்பு படை | |
மத்திய ரிசர்வ் காவல் படை | |
தேசிய மாணவர் படை | |
எல்லை பாதுகாப்பு படை |
Question 34 Explanation:
(குறிப்பு - தேசிய மாணவர் படை என்பது ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும். இது ஒரு தன்னார்வ அமைப்பாகும்.)
Question 35 |
பொருத்துக
- அக்டோபர் 7ஆம் நாள் - a) ராணுவ தினம்
- ஜனவரி 15ஆம் நாள் - b) கடலோர காவல்படை தினம்
- பிப்ரவரி 1ஆம் நாள் - c) மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம்
- மார்ச் 10ஆம் நாள் - d) விரைவு அதிரடிப்படை தினம்
I-d, II-a, III-b, IV-c | |
I-a, II-d, III-c, IV-b | |
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 35 Explanation:
(குறிப்பு - நம் நாட்டின் முக்கிய படைகளை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு படைக்கும் அது தோன்றிய நாளை, அந்தப் படையின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எ.கா. மார்ச் 10 ஆம் நாள் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உருவானது. எனவே ஆண்டுதோறும் மார்ச் 10ஆம் நாள் மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது)
Question 36 |
தவறான இணை எது?
விமானப்படை தினம் - அக்டோபர் 8 | |
கடற்படை தினம் - டிசம்பர் 5 | |
ஆயுதப் படைகள் கொடி தினம் - டிசம்பர் 7 | |
விரைவு அதிரடிப்படை தினம் - அக்டோபர் 7 |
Question 36 Explanation:
(குறிப்பு - கடற்படை தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது)
Question 37 |
சிறப்பு சேவை பணியகம் /சாஷாஸ்திர சீமா பால்(Special Service Bureau / Sashastra Seema Bal) எனப்படும் எல்லை ஆயுதப்படையால் பாதுகாக்கப்படும் எல்லைப் பகுதிகள் எது?
- இந்தியா - நேபாளம் எல்லைப்பகுதி
- இந்தியா - பூட்டான் எல்லை பகுதி
- இந்தியா - சீனா எல்லை பகுதி
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 37 Explanation:
(குறிப்பு - சிறப்பு சேவை பணியகம் என்றழைக்கப்படும் எல்லை ஆயுதப்படை, இந்தியா-நேபாளம் மற்றும் இந்தியா-பூட்டான் எல்லைப்பகுதிகளை பாதுகாக்கிறது)
Question 38 |
ஊர்க்காவல் படை குறித்த தவறான கூற்று எது?
இந்திய ஊர்காவல்படை ஒரு தன்னார்வ படை ஆகும். | |
இது இந்திய காவல்துறைக்கு துணையாக பணியாற்றுகிறது. | |
இப்படையில் உறுப்பினர்கள் தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழில்துறை பணியாளர்கள் ஆகியோர்களிலிருந்து நியமிக்கப்படுகிறார்கள். | |
18 வயது முதல் 60 வயது உடைய அனைத்து இந்திய குடிமக்களும் ஊர்க்காவல் படையில் சேர தகுதி உடையவர்கள் ஆவர். |
Question 38 Explanation:
(குறிப்பு - 18 வயது முதல் 50 வயது உடைய அனைத்து இந்திய குடிமக்களும் ஊர்க்காவல் படையில் சேர தகுதி உடையவர்கள் ஆவர். இவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களது நேரத்தை ஒதுக்குகின்றனர்)
Question 39 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- ஊர்க்காவல் படையினருக்கு பதவிக்காலம் என்பது இல்லை. 50 வயது நிறைவடையும் வரை பணிபுரியலாம்.
- ஊர்க்காவல் படையினருக்கு பதவி காலம் உண்டு.
- ஊர்க்காவல் படையினரின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி |
Question 39 Explanation:
(குறிப்பு - இந்திய ஊர்க்காவல் படை என்பது ஒரு தன்னார்வ படை ஆகும். இதில் பணி புரிவோரின் பதவி காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்)
Question 40 |
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அதன் காலனித்துவ பாதிப்புகளின் பின்னணியிலிருந்து உருவானது ஆகும்.
- நாட்டின் வெளியுறவு என்பது சில கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 40 Explanation:
(குறிப்பு - வெளியுறவுக் கொள்கை என்பது இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பு ஆகும்)
Question 41 |
இந்தியாவின் வெளியுறவு கொள்கையின், கீழ்காணும் அடிப்படைக் கொள்கைகளுள் தவறானது எது?
ஆயுதக் குவிப்பு | |
தேசிய நலனை பாதுகாத்தல் | |
காலனித்துவம், இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல். | |
நட்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தல். |
Question 41 Explanation:
(குறிப்பு - ஆயுதக் குவிப்பு என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுள் தவறானது ஆகும். ஆயுதக் குறைப்பு என்பது இந்தியாவின் அடிப்படை கொள்கையாகும்)
Question 42 |
ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கைகளில் தவறானது எது?
- ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.
- பரஸ்பர ஆக்கிரமிப்பு
- பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது இருத்தல்.
- பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
- அமைதியாக இணைந்து இருத்தல்.
I மட்டும் தவறு | |
II மட்டும் தவறு | |
III மட்டும் தவறு | |
V மட்டும் தவறு |
Question 42 Explanation:
(குறிப்பு - ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கைகளுள் பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை என்பது ஒரு கொள்கையாகும். பஞ்சசீல கொள்கைகள் என்பது உலக அமைதிக்கான நேருவின் ஐந்து கொள்கைகள் ஆகும்)
Question 43 |
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
மகாத்மா காந்திஜி | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் ராதாகிருஷ்ணன் | |
விகே கிருஷ்ண மேனன் |
Question 43 Explanation:
(குறிப்பு - அணி சேராமை என்ற சொல் விகே கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கிய அம்சமாக இது விளங்குகிறது)
Question 44 |
அணி சேராமை என்பது எந்த போருக்குப் பின்னர் தோன்றிய நோக்கம் ஆகும்?
முதலாம் உலகப் போர் | |
இரண்டாம் உலகப்போர் | |
சீன - ரஷ்ய போர் | |
கார்கில் போர் |
Question 44 Explanation:
( குறிப்பு - இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான ராணுவ கூட்டில் இணையாமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரிப்புக்காக அணிசேரா என்ற நோக்கம் உருவானது)
Question 45 |
அணிசேரா இயக்கத்தின் நிறுவன நாடுகளில் தவறானவை எது?
இந்தியா | |
ஆஸ்திரேலியா | |
எகிப்து | |
கானா |
Question 45 Explanation:
(குறிப்பு - அணிசேரா இயக்கத்தை நிறுவிய தலைவர்கள் இந்தியா, யூகோஸ்லேவியா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் கானாவின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் ஆவர்)
Question 46 |
அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்களுள் அல்லாதவர் யார்?
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு | |
யூகோஸ்லாவியாவின் டிட்டோ | |
எகிப்தின் நாசர் | |
சிங்கப்பூரின் லீ குவான் யூ |
Question 46 Explanation:
(குறிப்பு - அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்கள் இந்தியா, யூகோஸ்லேவியா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் கானா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்)
Question 47 |
இந்திய வெளியுறவு கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாக கருதப்படுவது எது?
- இனவெறிக் கொள்கைக்கு எதிராகவும், நெல்சன் மண்டேலாவிற்கு ஆதரவாகவும் போராடி 1990 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வைத்தது.
- அணி சேராமை இயக்கத்தின் மூலம் இரண்டாம் உலகப் போரில் பங்கு கொள்ளாமல், போரை தடுத்து நிறுத்தியது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 47 Explanation:
(குறிப்பு - ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா இனவெறிக்கு எதிராக போராடிய ஒரு உறுதியான போராடி ஆவார். அவர் கைது செய்யப்பட்ட பின், இனவெறிக் கொள்கைக்கு எதிராகவும் இவருக்கு ஆதரவாகவும் இந்தியா போராடி 1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாக கருதப்படுகிறது)
Question 48 |
கீழ்க்காணும் எந்த நாட்டுடன் இந்தியா நிலா எல்லையை பகிர்ந்து கொள்வது இல்லை?
இலங்கை | |
பாகிஸ்தான் | |
சீனா | |
வங்கதேசம் |
Question 48 Explanation:
(குறிப்பு - இந்தியா இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது)
Question 49 |
இந்தியாவின் எல்லை நாடுகளை பொருத்துக
- பாகிஸ்தான் - a) தென்மேற்கு
- நேபாளம் - b) வடமேற்கு
- இலங்கை- c) வடக்கு
- மாலத்தீவு - d) தென்கிழக்கு
I-b, II-c, III-d, IV-a | |
I-a, II-d, III-c, IV-b | |
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 49 Explanation:
(குறிப்பு - இந்தியா வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை எல்லையாக கொண்டுள்ளது. வடக்கில் சீனா, நேபாளம் மற்றும் பூட்டானை எல்லையாக கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள தேசமும், தூரக் கிழக்கில் மியான்மரும், தென்கிழக்கில் இலங்கையும், தென்மேற்கில் மாலத்தீவையும் எல்லையாகக் கொண்டுள்ளது)
Question 50 |
இந்தியா எந்த நாட்டுடன் மிக அதிகமான வெள்ளைப் பகுதியை பகிர்ந்து கொள்கிறது?
சீனா | |
வங்கதேசம் | |
பாகிஸ்தான் | |
நேபாளம் |
Question 50 Explanation:
(குறிப்பு - இந்தியா வங்கதேசத்துடன் மிகநீண்ட எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்கிறது. அதாவது 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூர எல்லையை வங்கதேச நாட்டுடன் இந்தியா பகிர்ந்துகொள்கிறது )
Question 51 |
கீழ்க்காணும் நாடுகளில் எந்த நாடு இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக அமைந்துள்ளது?
மியான்மர் | |
இந்தோனேஷியா | |
கம்போடியா | |
சிங்கப்பூர் |
Question 51 Explanation:
(குறிப்பு - மியான்மர் இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் பாலமாக அமைந்துள்ளது)
Question 52 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- தென் கிழக்கு ஆசியா இந்தியாவின் வட கிழக்கிலிருந்து ஆரம்பமாகிறது.
- கிழக்கு செயல்பாடு என்ற கொள்கை ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருப்பதை உறுதி செய்கிறது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 52 Explanation:
(குறிப்பு - கிழக்கு செயல்பாடு என்ற கொள்கை நோக்கம் இந்தியா ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதை உறுதிப்படுத்துதலும், இந்தோ பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பன்முக சமநிலையை உறுதி செய்வது ஆகும்)
Question 53 |
சார்க் கூட்டமைப்பு எத்தனை உறுப்பு நாடுகளை கொண்டது?
எட்டு | |
ஒன்பது | |
ஏழு | |
ஆறு |
Question 53 Explanation:
(குறிப்பு - தெற்காசிய நாடுகள் இடையே சகோதரத்துவ பிணைப்புகளை வளர்ப்பதற்காகவும், ஒத்துழைப்பு மற்றும் அமைதியான முறையில் இணைந்திருத்தல் ஆகியவற்றுக்காகவும், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது(SAARC). இதில் 8 நாடுகள் உறுப்பினர் நாடுகளாக உள்ளன)
Question 54 |
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்றழைக்கப்படும் சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்லாதது எது?
இலங்கை | |
பாகிஸ்தான் | |
மியான்மர் | |
வங்கதேசம் |
Question 54 Explanation:
(குறிப்பு - சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியன ஆகும்)
Question 55 |
BCIM என்னும் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடு அல்லாதது எது?
இந்தியா | |
சீனா | |
மாலத்தீவு | |
வங்காளதேசம் |
Question 55 Explanation:
(குறிப்பு - BCIM என்னும் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் இந்தியா, சீனா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகும். பொருளாதார போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்து ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க இக்கூட்டமைப்பு உதவுகிறது)
Question 56 |
பிம்ஸ்டெக் என்னும் அமைப்பை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- இது 8 நாடுகளை உறுப்பினராக கொண்டது.
- இது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி ஆகும்.
- இதன் உறுப்பு நாடுகள் ஆவன, வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 56 Explanation:
(குறிப்பு - பன்னாட்டு வர்த்தகம் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவது பிம்ஸ்டெக் அமைப்பின் நோக்கமாகும்)
Question 57 |
BBIN என்னும் கூட்டமைப்பில் கையெழுத்து இடாத நாடு எது?
நேபாளம் | |
மியான்மர் | |
பூட்டான் | |
வங்கதேசம் |
Question 57 Explanation:
(குறிப்பு - BBIN என்னும் கூட்டமைப்பு வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளை கொண்டவை. பயணிகள் சரக்கு மற்றும் எரிசக்தி மேம்பாடு ஆகியவைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டமைப்பு BBIN ஆகும்)
Question 58 |
பொருத்துக
- SAARC கூட்டமைப்பு - a) இலங்கை உறுப்பு நாடு அல்லாதது.
- BCIM கூட்டமைப்பு - b) தாய்லாந்து உறுப்பு நாடு
- BIMSTEC கூட்டமைப்பு c) நான்கு உறுப்பு நாடுகள்.
- BBIN கூட்டமைப்பு - d) மியான்மர் உறுப்பு நாடு அல்லாதது
I-d, II-a, III-b, IV-c | |
I-a, II-d, III-c, IV-b | |
I-d, II-c, III-a, IV-b | |
I-c, II-a, III-b, IV-d |
Question 58 Explanation:
(குறிப்பு - இந்தியா SAARC, BCIM, BIMSTEC, BBIN ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினர் நாடாக பங்கு வகிக்கிறது. இதன் மூலம் இந்தியா தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே உயர்ந்த நிலையைக் கொண்டுள்ளது. மேலும் பிற நாடுகளுடன் நட்புறவு கொள்கையை, முதன்மை வெளியுறவுக் கொள்கையாக கொண்டுள்ளது)
Question 59 |
கீழ் காணும் கூற்றுகளில் எது சரியானது?
- இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக குடியரசு தலைவர் உள்ளார்.
- இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக குடியரசுதலைவர் உள்ளார்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 59 Explanation:
(குறிப்பு - இந்திய முப்படைகளின் தளபதியாக, பிபின் ராவத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்
Question 60 |
இந்தியாவின் முப்படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
தளபதி பிபின் ராவத் | |
தளபதி தனோவா | |
தளபதி பதாரியா | |
சஞ்சீவ் சிங் |
Question 60 Explanation:
(குறிப்பு - இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றுள்ளார்.)
Question 61 |
இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பதவி குறித்த சரியான கூற்று எது?
- முப்படை தலைமை தளபதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணிபுரிவார்.
- பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நான்கு செயலாளர்கள் பதவிகளுடன் சேர்த்து ஐந்தாவதாக உருவாக்கப்பட்ட பதவி முப்படை தலைமை தளபதி பதவி ஆகும்.
- முப்படை தலைமை தளபதியாக இருந்தாலும், பிற படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு போட முடியாது.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 61 Explanation:
(குறிப்பு - முப்படைகளின் தலைமைத் தளபதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பணிபுரிவார். தற்போதைய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் என்பவராவார்)
Question 62 |
இந்தியாவில் முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பதவி எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
2011ஆம் ஆண்டு முதல் | |
2013ஆம் ஆண்டு முதல் | |
2015ஆம் ஆண்டு முதல் | |
2019ஆம் ஆண்டு முதல் |
Question 62 Explanation:
(குறிப்பு - இந்தியாவில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஒருவரை நியமனம் செய்வது குறித்து பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு சுதந்திர தினம் அன்று அறிவித்தார். முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் டிசம்பர் 30ஆம் நாள், 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றார்)
Question 63 |
முப்படை தலைமை தளபதியின் ஓய்வு வயது என்ன?
60 வயது | |
62 வயது | |
64 வயது | |
65 வயது |
Question 63 Explanation:
(குறிப்பு - முப்படைகளின் தலைமைத் தளபதியின் ஓய்வு வயது 65 ஆகும். முப்படைகளின் தளபதிகளின் ஓய்வு வயது 60 ஆகும்.)
Question 64 |
முப்படை தலைமை தளபதி குறித்த கூற்றுகளுள் தவறானது எது?
- முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்படுபவர் ஒரு படைத்தளபதியாக இருந்திருக்க வேண்டும்
- முப்படை தலைமை தளபதி பதவி நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 64 Explanation:
(குறிப்பு - முப்படை தலைமை தளபதி பதவி என்பது நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டது ஆகும். முப்படைகளில் ஏதேனும் ஒரு படையின் தளபதியாக பதவி வகித்தவர், முப்படை தலைமை தளபதி பதவிக்கு தகுதியானவர் ஆவார்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 64 questions to complete.