Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil

பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil

Congratulations - you have completed பணம் மற்றும் கடன் Online Test 9th Social Science Lesson 11 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"பொருள் வருகின்ற வழி சிறிதாயினும் கேடு இல்லை. போகின்ற வழி அதனை விடப் பெருகக் கூடாது" என பொருள் தரும் குறள்
A
செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்.
B
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒழுங்கு.
C
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.
D
அருள்என்னும் அன்புஈன் குழுவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு.
Question 2
வணிகத்தின் முதல் வடிவம்
A
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்கள்
B
நாணயங்கள்
C
காகித பணம்
D
வங்கிகள்
Question 2 Explanation: 
(குறிப்பு: பண்டமாற்று முறை எ.கா: அதிக உணவுப்பொருட்கள் இருந்தால், அவற்றை மண்பாண்டங்கள் உபரியாக வைத்திருப்பவர்களிடம் பண்டமாற்றம் செய்தனர். அதே போல ஒரு பகுதியில் அதிகம் உற்பத்தியாகும் தானியம் இன்னொரு பகுதியில் அதிகம் காணப்படும் விளைபொருளுக்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டது.)
Question 3
  • கூற்று 1: நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
  • கூற்று 2: ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 3 Explanation: 
(குறிப்பு: வெவ்வேறு நாகரிகங்களுக்கு இடையிலான பண்டமாற்று முறையே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் ஆகும்.)
Question 4
சிந்துவெளி நாகரிகக் காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் கீழ்க்கண்ட அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன?
  1. எகிப்து
  2. ஈரான்
  3. ஈராக்
  4. ஜெர்மனி
A
அனைத்தும்
B
1, 3
C
1, 2
D
2, 4
Question 4 Explanation: 
(குறிப்பு: எகிப்து, ஈராக் ஆகியவை பண்டைய மெசபடோமியா பகுதிகள் ஆகும்.)
Question 5
  • கூற்று 1: தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
  • கூற்று 2: மிளகு மற்றும் நறுமணப்பொருட்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்றே அழைக்கப்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 6
‘ருபியா' என்ற வெள்ளி நாணயம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
பாபர்
B
அக்பர்
C
ஷெர்ஷா சூரி
D
ஜஹாங்கீர்
Question 6 Explanation: 
(குறிப்பு: தனது அரசாட்சியில் ஷெர்ஷா சூரி (1540 - 1546) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார்.)
Question 7
ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ருபியா நாணயத்தின் எடை
A
152 கிராம்178 கிராம்
B
168 கிராம்
C
172 கிராம்.
D
178 கிராம்
Question 7 Explanation: 
(குறிப்பு: ருபியா நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.)
Question 8
கீழ்க்கண்டவற்றுள் ‘புராதன பணமாக’ பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் எவை?
  1. தங்கம்
  2. இரும்பு
  3. வெள்ளி
  4. செம்பு
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 8 Explanation: 
(குறிப்பு: பண்டமாற்று பொருள்களின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவதில் பிரச்சனைகள் இருந்தன. இதற்கு விடைகான பண்டங்களை மாற்றிக்கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.)
Question 9
"ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கும்படிச் செய்வது பொருளே ஆகும்” என்னும் பொருளுடைய திருக்குறள்
A
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
B
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
C
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின்.
D
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்
Question 10
  • கூற்று: உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம்.
  • காரணம்: பண்டைய காலத்தில் உலோகம் அரிய பொருளாகவும் நீண்ட காலம் பராமரிக்கக்கூடியதாகவும் மதிப்பு மாறாததாகவும் இருந்தது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 11
யாருடைய காலத்தில் வணிகக் குழுக்கள் தமக்கெனப் படைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
A
முற்கால சோழர்கள்
B
பிற்கால சோழர்கள்
C
முற்கால பாண்டியர்கள்
D
பிற்கால பாண்டியர்கள்
Question 11 Explanation: 
(குறிப்பு: பிற்காலச் சோழர்கள் ஆட்சியின்போது தமிழக வணிகர்களின் ஏற்றுமதித் தேவையை ஈடுசெய்ய சிறு வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடன் உதவி அளித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் காணப்படுகின்றன.)
Question 12
கி.மு 1100 காலக் கட்டத்தில் சீனர்கள் பயன்படுத்திய சிறு நாணயங்கள் __________ல் செய்யப்பட்டிருந்தன.
A
இரும்பு
B
தங்கம்
C
வெள்ளி
D
வெண்கலம்
Question 12 Explanation: 
(குறிப்பு: கி.மு1100 காலக் கட்டத்தில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 13
கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தில் மனிதன் பண்டமாற்று முறையைக் கையாண்டான்?
A
கி.மு. 9000
B
கி.மு. 600
C
கி.மு 1100
D
கி.மு. 1290
Question 13 Explanation: 
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் மனிதன் தன்னிடம் மிகுதியாக உள்ள பொருளைக் கொடுத்து தனக்குத் தேவையான இன்னொரு பொருளைப் பெற்றுக் கொண்டான்.)
Question 14
மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் காகிதப் பணப்பரிவர்த்தனை பரவத் தொடங்கிய காலம்
A
கி.மு.1250
B
கி.மு. 600
C
கி.மு 1100
D
கி.மு. 1290
Question 14 Explanation: 
(குறிப்பு: லிதியா நாட்டு அரசர் அலியாதீஸ், வணிக பரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்த போவதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். இந்த நாடு இப்போது துருக்கியின் ஒரு பகுதியாக உள்ளது.)
Question 15
____________காலக்கட்டத்தில் பரிவர்த்தனைகளுக்காக தங்க முலாம் பூசப்பட்ட நாணயம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
A
கி.பி. 1290
B
கி.பி. 1661
C
கி.பி. 1250
D
கி.பி. 650
Question 16
_________ ஆண்டு மார்கோபோலோ பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.
A
கி.பி.1200
B
கி.பி. 1250
C
கி.பி 1290
D
கி.பி. 1280
Question 17
காகிதப் பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த ஆண்டு
A
கி.பி 1442
B
கி.பி 1556
C
கி.பி 1658
D
கி.பி. 1661
Question 17 Explanation: 
(குறிப்பு: காகிதப்பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்த புதிதில் அதற்கு பெரிதாக வரவேற்பு இல்லை.)
Question 18
தந்தி மூலமான மின்னணு பணப்பரிவர்த்தனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1760
B
கி.பி.1826
C
கி.பி.1850
D
கி.பி.1860
Question 19
கிரெடிட் கார்டை ________ என்பவர் உருவாக்கினார்.
A
ஜான் ஸ்டெப்பர்ட்
B
டொனால்ட் வெட்சல்
C
ஜான் பிக்கின்ஸ்
D
ஜாக் கில்பி
Question 19 Explanation: 
(குறிப்பு: கடன் அட்டை கி.பி. 1946 ல் உருவாக்கப்பட்டது.)
Question 20
Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை _________ ஆண்டு இந்தியாவிற்கு வந்தது.
A
2008
B
2012
C
2015
D
2016
Question 20 Explanation: 
(குறிப்பு: Near Field Communication பணப்பரிவர்த்தனை முறை பிரிட்டனில் 2008ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை பண பரிவர்த்தனைக்கு 7 முதல் 8 நொடிகள் மட்டுமே ஆகும்.)
Question 21
ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை அறிமுகம் செய்த ஆண்டு
A
கி.பி.1992
B
கி.பி. 1995
C
கி.பி. 1996
D
கி.பி. 1999
Question 22
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான பணம் என்று அழைக்கப்படுவது எது/எவை?
  1. தங்கம்
  2. வெள்ளி
  3. இரும்பு
  4. வெண்கலம்
A
அனைத்தும்
B
1, 3
C
1, 2
D
2, 4
Question 22 Explanation: 
(குறிப்பு: தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன. இதையொட்டி, இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன.)
Question 23
  • கூற்று: தங்கம், வெள்ளிக்கு மாற்றாக குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டு அவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
  • காரணம்: வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருப்பதில்லை. அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி வரம்புக்குள் இருந்தன.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 23 Explanation: 
(குறிப்பு: குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்கள் ஏழை எளிய மக்களின் பணமாக பயன்படுத்தப்பட்டன.)
Question 24
குறைந்த மதிப்பு நாணயங்களின் அடுத்த கட்டமாக _________ புழக்கத்திற்கு வந்தது.
A
மின்னணுப் பரிமாற்றம்
B
தங்க நாணயம்
C
காகிதப் பணம்
D
NFC
Question 24 Explanation: 
(குறிப்பு: காகிதப் பணப் புழக்கத்தை தொடர்ந்து வங்கிகளில் அதனைச் சேமிக்கும் வழக்கமும் வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன.)
Question 25
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் __________ ___________ பெய்திரீஇ யற்று.
A
திறன் அறிந்து
B
பொருள் ஆக்கம்
C
செறுநர் செருக்கறுக்கும்
D
பசுமட் கலத்துள்நீர்
Question 25 Explanation: 
(குறிப்பு: தீமையான வழியில் சேமித்த செல்வம் பச்சை மண்கலத்தினுள் நீரைச் சேமித்து வைப்பது போன்று வீணாகிவிடும்.)
Question 26
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாகவும் கடன்களைத் திருப்பி செலுத்துவதிலும் குறிப்பிட்ட நாடு முழுவதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்க்கப்பட்ட ஆவணம் காகிதப் பணம் ஆகும்.
  2. இந்தியப் பணத்தில் "இதனைக் கொண்டிருப்பவரிடம்..... தொகை அளிப்பதற்கு உறுதி அளிக்கிறேன். I promise to pay the bearer the Sum of....... rupees” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளிப்பதாக ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு அதில் அவரது கையொப்பம் பொறிக்கப்பட்டிருக்கும்.
  3. அந்தந்த நாட்டுப் பணத்தில் உயர் அலுவலர் கையொப்பமும் உறுதிமொழியும் இடம்பெற்றிருக்கும்.
A
எதுவுமில்லை
B
1 மட்டும் தவறு
C
3 மட்டும் தவறு
D
1, 3 தவறு
Question 27
'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை யாருடையது?
A
ஜவஹர்லால் நேரு
B
அமர்த்தியாசென்
C
அம்பேத்கர்
D
மோதிலால் நேரு
Question 27 Explanation: 
(குறிப்பு: இக்கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது.)
Question 28
இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை ___________ மேற்கொள்கிறது.
A
பிரதமர் அலுவலகம்
B
குடியரசுத் தலைவர் அலுவலகம்
C
நாடாளுமன்றம்
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 28 Explanation: 
(குறிப்பு: ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுப்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை கண்காணித்து வருகிறது.)
Question 29
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது செயல்படத் தொடங்கியது?
A
ஏப்ரல் 1, 1937
B
ஜனவரி 1, 1937
C
ஏப்ரல் 1, 1935
D
ஜனவரி 1, 1935
Question 29 Explanation: 
(குறிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.)
Question 30
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது நாட்டுடைமையாக்கப்பட்டது?
A
1937
B
1945
C
1947
D
1949
Question 31
இந்தியாவில் அச்சடிக்கப்பட்டப் பணத்தில் __________ சதவிகிதம் புழக்கத்தில் விடப்படுகிறது.
A
50%
B
65%
C
85%
D
90%
Question 31 Explanation: 
(குறிப்பு: ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.)
Question 32
__________ என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
A
விஜய லட்சுமி கல்வி கடன் திட்டம்
B
வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்
C
சரஸ்வதி கல்வி கடன் திட்டம்
D
இந்திய அரசு கல்வி கடன் திட்டம்
Question 32 Explanation: 
(குறிப்பு: வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்- https://www.vidyalakshmi.co.in/. பொதுவாக படிப்பு முடித்த பிறகு, வேலைவாய்ப்பு பெற்றவுடன் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும்.)
Question 33
கல்விக்கடன் குறித்தக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
A
மாணவர் முதன்மைப் பயனாளி ஆவார்.
B
பெற்றோர், இணையர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோர் இணை விண்ணப்பதாரர்.
C
இவை முழு நேர மற்றும் பகுதி நேர பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு அல்லது தொழில் படிப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.
D
ரூபாய் ஐந்து லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.
Question 33 Explanation: 
(குறிப்பு: ரூபாய் நான்கு லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.)
Question 34
தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் ____________ விழுக்காடு விற்பனை அல்லது சேவைத் தொழிலை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
A
50%
B
60%
C
70%
D
90%
Question 34 Explanation: 
(குறிப்பு: வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.)
Question 35
பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு __________ உடன் தொடர்புடையது.
A
பொருளாதார கொள்கை
B
வர்த்தக கொள்கை
C
பணவியல் கொள்கை
D
விநியோக கொள்கை
Question 36
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
  2. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
  3. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி ரூபாய் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 36 Explanation: 
(குறிப்பு: உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.)
Question 37
இந்தியாவில் _________ ஆண்டு முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.1916
A
1916
B
1917
C
1918 (குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.)
D
1919
Question 37 Explanation: 
(குறிப்பு: 1935ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.)
Question 38
500 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பின் இந்திய ரிசர்வ் வங்கி ________ ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
A
1938
B
1940
C
1942
D
1945
Question 38 Explanation: 
(குறிப்பு: 1947ஆம் ஆண்டு வரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.)
Question 39
ஆங்கிலேய அரசு ________ ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் அச்சகத்தை அமைத்தது.
A
1915
B
1920
C
1922
D
1925
Question 39 Explanation: 
(குறிப்பு: நாசிக்கில் அச்சகம் அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.)
Question 40
மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் ____________ ஆண்டு அச்சகம் தொடங்கப்பட்டது.
A
1945
B
1957
C
1974
D
1982
Question 41
இந்திய ரிசர்வ் வங்கி, கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க அச்சகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1980
B
1982
C
1986
D
1990
Question 41 Explanation: 
(குறிப்பு: எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.)
Question 42
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
  1. இலங்கை
  2. பூடான்
  3. ஈராக்
  4. ஆப்பிரிக்கா
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 4
Question 43
  • கூற்று 1: இந்திய ரிசர்வ் வங்கியில் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
  • கூற்று 2: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 43 Explanation: 
(குறிப்பு: பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.)
Question 44
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணம் இந்திய அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன?
  1. இலங்கை
  2. பூடான்
  3. ஈராக்
  4. ஆப்பிரிக்கா
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 4
Question 45
தவறான இணையைத் தேர்ந்தெடு. (நாடு - செலாவணியின் பெயர்)
A
இந்தியா - ரூபாய்
B
இங்கிலாந்து – பவுண்டு
C
ஐராப்பிய ஒன்றியம் – யூரோ
D
ஆஸ்திரேலியா – ரியால்
Question 45 Explanation: 
(குறிப்பு: ஆஸ்திரேலியா - டாலர்)
Question 46
பொருத்துக.
  1. ஜப்பான்                        i) யென்
  2. சீனா                              ii) யுவான்
  3. சவுதி அரேபியா         iii) ரியால்
  4. கனடா                          iv) டாலர்
A
ii i iii iv
B
iv iii ii i
C
iii ii i iv
D
i ii iii iv
Question 47
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. மலேசியா - ரிங்கிட்
  2. பாகிஸ்தான் – ரூபாய்
  3. இலங்கை – டாலர்
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
3 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 47 Explanation: 
(குறிப்பு: இலங்கை - ரூபாய்)
Question 48
  • கூற்று 1: ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைகூற்று 1 சரி, கூற்று 2 தவறு க் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
  • கூற்று 2: ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 49
கீழ்க்கண்ட எவற்றில் கடனுக்கான வட்டி குறைவாகவும், ஈடு வைக்கப்படும் பொருளுக்கான பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும்?
  1. நாட்டுடைமையாக்ககப்பட்ட வங்கிகள்
  2. கூட்டுறவு வங்கிகள்
  3. முறைசாரா நிதி நிறுவனங்கள்
  4. சுய உதவிக்குழுக்கள்
A
1,2
B
2,3
C
1,3
D
2,4
Question 49 Explanation: 
(குறிப்பு: கடன் கிடைக்கப்பெறும் நிறுவனங்கள் முறைப்படி நிதி நிறுவனங்களான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள். முறைசாரா நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்படும் நுண்கடன்கள் என மூன்று வழிகளில் கடன் பெறப்படுகின்றன.)
Question 50
பண விநியோகம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 50 Explanation: 
(குறிப்பு: ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை ப2 = ப1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ப3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை ப4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை)
Question 51
தமிழ்நாட்டில் __________ வங்கிக் கிளைகள் உள்ளன.
A
9012
B
10612
C
10718
D
11628
Question 51 Explanation: 
(குறிப்பு: 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.)
Question 52
ஏப்ரல் 2017 - மார்ச் 2018 வரையிலான காலக்கட்டத்தில் கடன் வைப்புத் தொகை விகிதம்
A
106.7%
B
109.34%
C
110.74%
D
115.56%
Question 53
பொருத்துக.
  1. அமெரிக்க டாலர்     i) தானியங்கி இயந்திரம்
  2. நாணய சுழற்சி       ii) பணத்தின் மாற்று
  3. ஏ.டி.எம்                    iii) சர்வதேச அங்கீகாரம்
  4. உப்பு                        iv) சவுதி அரேபியா
  5. ரியால்                      v) 85%
A
i iii v iv ii
B
v iv iii ii i
C
iii v i ii iv
D
iii i iv v ii
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 53 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!