Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் – Online Test 6th Social Science Lesson 6 Questions in Tamil

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் -Online Test 6th Social Science Lesson 6 Questions in Tamil

Congratulations - you have completed நிலப்பரப்பும் பெருங்கடல்களும் -Online Test 6th Social Science Lesson 6 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.(நிலத்தோற்றத்தின் வகைகள்)
  1. முதல் நிலை - கண்டங்கள், பெருங்கடல்கள்
  2. இரண்டாம் நிலை - மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்
  3. மூன்றாம் நிலை - பள்ளத்தாக்குகள், கடற்கரைகள், மணல் குன்றுகள்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 1 Explanation: 
(குறிப்பு: புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. எஞ்சிய 29 சதவிகிதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது.)
Question 2
  • கூற்று 1: உலகின் மிகப் பெரிய கண்டம் ஆசியா ஆகும்.
  • கூற்று 2: ஆஸ்திரேலியா மிகச் சிறிய கண்டமாகும்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 2 Explanation: 
(குறிப்பு: மிகப் பெரும் நிலப்பரப்பினைக் கண்டங்கள் எனவும் பரந்த நீர்ப்பரப்பினை பெருங்கடல்கள் எனவும் அழைக்கிறோம். உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா.)
Question 3
போர்ட்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி ___________ பெருங்கடலின் ஆழமான பகுதியாகும்.
A
ஆர்டிக் பெருங்கடல்
B
இந்திய பெருங்கடல்
C
அட்லாண்டிக் பெருங்கடல்
D
தென் பெருங்கடல்
Question 3 Explanation: 
(குறிப்பு: மில்வாக்கி அகழியின் ஆழம் 8,600 மீ - . )
Question 4
  • கூற்று 1: உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்.
  • கூற்று 2: மிகச் சிறிய பெருங்கடல் தென் பெருங்கடல்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 4 Explanation: 
(குறிப்பு: புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும். இவற்றுள் ஆர்க்டிக் பெருங்கடல் மிகச்சிறியதாகும்.)
Question 5
நிலச்சந்தி என்பது __________.
  1. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடிய மிகக் குறுகிய நிலப்பகுதி
  2. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை பிரிக்கக் கூடிய மிகக் குறுகிய நீர் பகுதி
  3. இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடிய மிகக் குறுகிய நிலப்பகுதி
A
1, 2
B
1 மட்டும்
C
2 , 3
D
1, 3
Question 6
சுற்றுப்புற நிலப்பகுதியை விட ________ மீட்டருக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்.
A
250
B
400
C
500
D
600
Question 6 Explanation: 
(குறிப்பு: மலைகள் வன் சரிவைக் கொண்டிருக்கும். இவை தனித்தோ அல்லது தொடர்களாகவோ காணப்படுகின்றன.)
Question 7
தவறான இணையைத் தேர்ந்தெடு (மலைத்தொடர் - அமைந்துள்ள நாடு)
  1. இமயமலைத் தொடர் – ஆசியா
  2. ராக்கி - தென்அமெரிக்கா
  3. ஆண்டிஸ் - வட அமெரிக்கா
A
2 மட்டும் தவறு
B
3 மட்டும் தவறு
C
1, 3 தவறு
D
2, 3 தவறு
Question 7 Explanation: 
(குறிப்பு: 2. ராக்கி – வட அமெரிக்கா ஆண்டிஸ் – தென் அமெரிக்கா)
Question 8
உலகின் நீளமான மலைத்தொடரான ஆண்டிஸ் மலைத் தொடரின் நீளம்
A
5000 கி.மீ
B
5500 கி.மீ
C
6800 கி.மீ
D
7000 கி.மீ
Question 8 Explanation: 
(குறிப்பு: ஆண்டிஸ் மலைத்தொடர் தென் அமெரிக்காவில் வடக்குத் தெற்காக பரவியுள்ளது.)
Question 9
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உயரம்
A
8488 மீட்டர்
B
8838 மீட்டர்
C
8848 மீட்டர்
D
8588 மீட்டர்
Question 9 Explanation: 
(குறிப்பு: ஒரு மலைத் தொடரின் உயரமான பகுதி சிகரம் எனப்படுகிறது. எவரெஸ்ட் சிகரம் இமய மலைத்தொடரில் அமைந்துள்ளது.)
Question 10
  • கூற்று 1: பாஞ்சியா, இது பெருங்கண்டம் எனப்படும்.
  • கூற்று 2: பாஞ்சியாவை சுற்றியுள்ள நீர் பரப்பு பான்தலாசா ஆகும்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 10 Explanation: 
(குறிப்பு: 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்நிலப்பரப்பு மெதுவாக நகரத் தொடங்கியது. நாளடைவில் கண்டங்களும், பெருங்கடல்களும் தற்போதுள்ள நிலையை அடைந்தன.)
Question 11
பான்தலாசா நிலப்பரப்பு நகரத் தொடங்கியதற்கான காரணம்
A
புவியினுள் உள்ள அழுத்தம்
B
காற்றின் ஈரப்பதம்
C
புவியினுள் உள்ள வெப்பம்
D
வாயுக்களின் இடமாற்றம்
Question 12
சர்வதேச மலைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A
அக்டோபர் 5
B
நவம்பர் 11
C
டிசம்பர் 07
D
டிசம்பர் 11
Question 12 Explanation: 
(குறிப்பு: உதகமண்டலம், கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு மற்றும் ஏலகிரி போன்ற கோடை வாழிடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.)
Question 13
சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு _________ எனப்படும்.
A
சமவெளி
B
பீடபூமி
C
பள்ளத்தாக்கு
D
குன்று
Question 13 Explanation: 
(குறிப்பு: பீடபூமி மலைகளைப் போன்று வன் சரிவுகள் கொண்டவை. பீடபூமி சமமான மேற்பரப்பைக் கொண்டுள்ளதால் “ மேசை நிலம்” எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 14
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
A
பீடபூமிகள் நூறு மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
B
உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும்.
C
சோட்டா நாகபுரி பீடபூமி உலகத்தின் கூரை என்று அழைக்கப்படுகிறது.
D
பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
Question 14 Explanation: 
(குறிப்பு: திபெத் பீடபூமி உலகத்தின் கூரை என்று அழைக்கப்படுகிறது.)
Question 15
  • கூற்று: சோட்டா நாகபுரி பீடபூமியின் முக்கியத் தொழில் சுரங்கத் தொழிலாகும்.
  • காரணம்: இப்பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று காரணம் இரண்டும் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
Question 15 Explanation: 
(குறிப்பு: சோட்டா நாகபுரி பீடபூமி இந்தியாவில் அமைந்துள்ளது.)
Question 16
தென்னிந்தியாவில் உள்ள தக்காணப் பீடபூமி __________ பாறைகளால் ஆனது.
A
சிலிகா
B
சுண்ணாம்பு
C
கிரானைட்
D
எரிமலை
Question 16 Explanation: 
(குறிப்பு: தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.)
Question 17
கடல் மட்டத்திலிருந்து ________ மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் சமவெளி எனப்படும்.
A
100
B
200
C
300
D
400
Question 17 Explanation: 
(குறிப்பு: சமவெளி சமமான மற்றும் தாழ் நிலத்தோற்றமாகும். சில சமவெளிகள் சீரற்றதாகவும் காணப்படும்.)
Question 18
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
சமவெளிகள் ஆறுகள், அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
B
சமவெளியில் வளமான மண்ணும் நீர்ப்பாசனமும் இருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது.
C
சமவெளிகள், உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.
D
வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும்.
Question 18 Explanation: 
(குறிப்பு: மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன. எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.)
Question 19
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் எந்த ஆறுகளால் உருவாக்கப்பட்டவை?
A
காவேரி, கொள்ளிடம்
B
கங்கை, வைகை
C
காவேரி, தாமிரபரணி
D
காவேரி, வைகை
Question 19 Explanation: 
(குறிப்பு: பெருங்கடல்கள் மற்றும் கடல்களை ஒட்டியுள்ள தாழ்நிலங்கள் கடற்கரைச் சமவெளிகள் ஆகும்.)
Question 20
யாங்சி சமவெளி எந்த பீடபூமியில் அமைந்துள்ளது?
A
தக்காண பீடபூமி
B
மாளவ பீடபூமி
C
திபெத் பீடபூமி
D
ஐரோப்பிய பீடபூமி
Question 21
__________ பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின.
A
பீடபூமிகள்
B
ஆற்றுச் சமவெளிகள்
C
கடற்கரைச் சமவெளிகள்
D
பள்ளத்தாக்குகள்
Question 21 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.)
Question 22
  • கூற்று 1: ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படிய வைத்தல் ஆகும்.
  • கூற்று 2: இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 22 Explanation: 
(குறிப்பு: புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை (பாறைகள் ) அரித்து அகற்றுதலே அரித்தல் எனப்படுகிறது. இவ்வாறு அரிக்கப்பட்ட பாறைத்துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படியவைக்கப்படுகின்றன. இச்செயல் படிய வைத்தல் எனப்படுகிறது.)
Question 23
  • கூற்று: விண்வெளியில் இருந்து பார்க்கும் போது புவி நீல நிறமாக காட்சியளிக்கும்.
  • காரணம்: புவியின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பரப்பாக உள்ளதே இதற்கு காரணம்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று காரணம் இரண்டும் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
Question 23 Explanation: 
(குறிப்பு: கடல்களும், பெருங்கடல்களும் இந்நீரினை கொண்டுள்ளன.)
Question 24
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு _________ எனப்படுகிறது.
A
பெருங்கடல்
B
கடல்
C
வளைகுடா
D
தீபகற்பம்
Question 24 Explanation: 
(குறிப்பு: பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.)
Question 25
புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள கடல்
A
அட்லாண்டிக் பெருங்கடல்
B
இந்திய பெருங்கடல்
C
பசிபிக் பெருங்கடல்
D
தென்பெருங்கடல்
Question 25 Explanation: 
(குறிப்பு: புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.)
Question 26
பசிபிக் பெருங்கடலின் பரப்பளவு ____________ மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும்.
A
148.62
B
158.72
C
172.68
D
168.72
Question 26 Explanation: 
(குறிப்பு: பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும், கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. இது வடக்குத் தெற்காக ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது.)
Question 27
பசிபிக் பெருங்கடலின் முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைக்கும்  ________ நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.
A
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B
பெரிங் நீர்ச்சந்தி
C
கரீபியன் நீர்ச்சந்தி
D
தாஸ்மானியா நீர்ச்சந்தி
Question 27 Explanation: 
(குறிப்பு: பசிபிக் பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.)
Question 28
கடலின் ஆழத்தை ________ என்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும்.
A
கி.மீ
B
மீ-
C
டெசி.மீ-
D
டெகா.மீ-
Question 28 Explanation: 
(குறிப்பு உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் ( 8,848 மீ) மரியானா அகழியில் ( 10,994 மீ-) மூழ்கிவிடும்.)
Question 29
கீழ்க்கண்டவற்றுள் பசிபிக் பெருங்கடலின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கடல்கள் எவை?
  1. பேரிங் கடல்
  2. சீனக் கடல்
  3. ஜப்பான் கடல்
  4. தாஸ்மானியா கடல்
  5. பிலிப்பைன்ஸ் கடல்
A
1, 2, 4
B
2, 4, 5
C
1, 3, 4, 5
D
அனைத்தும்
Question 29 Explanation: 
(குறிப்பு: இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியுசிலாந்து உள்ளிட்ட தீவுகள் பசிபிக் பெருங்கடலில் உள்ளன.)
Question 30
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் ___________ என அழைக்கப்படுகிறது.
A
எரிமலை வளையம்
B
லாவா வளையம்
C
நெருப்பு வளையம்
D
கடல் வளையம்
Question 30 Explanation: 
(குறிப்பு: புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.)
Question 31
  • கூற்று 1: ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார்.
  • கூற்று 2: பசிபிக் என்பதன் பொருள் நெருப்பு என்பதாகும்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 31 Explanation: 
(குறிப்பு: பசிபிக் என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.)
Question 32
அட்லாண்டிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பங்கைக் கொண்டுள்ளது?
A
1/3
B
2/5
C
1/6
D
2/6
Question 32 Explanation: 
(குறிப்பு: அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு சுமார் 85.13 மில்லியன் சதுர கி.மீட்டர் ஆகும்.)
Question 33
அட்லாண்டிக் பெருங்கடல் _______ என்ற ஆங்கில எழுத்து வடிவத்தை போன்று உள்ளது.
A
Z
B
C
C
G
D
S
Question 33 Explanation: 
(குறிப்பு: அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. பசிபிக் பெருங்கடலைப் போன்றே இப்பெருங்கடலும் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தெற்கே தென்பெருங்கடல் வரை பரவியுள்ளது.)
Question 34
__________ நீர்ச் சந்தி அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது.
A
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B
பெரிங் நீர்ச்சந்தி
C
மலாக்கா நீர்ச்சந்தி
D
பாக் நீர்ச்சந்தி
Question 34 Explanation: 
(குறிப்பு: கிழக்கு மற்றும் மேற்கு அரைகோளங்களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகமாக நடைபெறுகிறது.)
Question 35
கீழ்க்கண்டவற்றுள் அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையோரக் கடல்கள் எவை?
  1. கரீபியன் கடல்
  2. மெக்சிகோ வளைகுடா
  3. வடகடல்
  4. கினியா வளைகுடா
  5. மத்திய தரைக் கடல்
A
1, 2, 5
B
1, 3, 5
C
1, 3, 4, 5
D
அனைத்தும்
Question 35 Explanation: 
(குறிப்பு: செயின்ட் ஹெலனா, நியூபவுண்ட்லாந்து, ஐஸ்லாந்து, ஃபாக்லாந்து உள்ளிட்ட பல தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளன.)
Question 36
இந்திய பெருங்கடலின் பரப்பு சுமார் ________ மில்லியன் சதுர கி.மீ. ஆகும்.
A
50.75
B
70.52
C
70.65
D
70.56
Question 36 Explanation: 
(குறிப்பு: இந்தியப் பெருங்கடல் புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். இது முக்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது.)
Question 37
__________ நீர்ச்சந்தி இந்தியப் பெருங்கடலையும் பசுபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
A
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B
பெரிங் நீர்ச்சந்தி
C
மலாக்கா நீர்ச்சந்தி
D
பாக் நீர்ச்சந்தி
Question 37 Explanation: 
(குறிப்பு: பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.)
Question 38
இந்திய பெருங்கடலின் எல்லையோரக் கடல்கள் எவை?
  1. வங்காள விரிகுடா
  2. அரபிக் கடல்
  3. பாரசீக வளைகுடா
  4. டேவிஸ் கடல்
  5. செங்கடல்
A
1, 2, 5
B
1, 2
C
1, 2, 4
D
1, 2, 3, 5
Question 38 Explanation: 
(குறிப்பு: இந்திய பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள், இலங்கை, மொரிஷியஸ், ரீயூனியன் உள்ளிட்ட பல தீவுகள் காணப்படுகின்றன.)
Question 39
இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதியான ஜாவா அகழியின் ஆழம்
A
6,625 மீ-
B
5,565 மீ-
C
7,725 மீ-
D
7,625 மீ-
Question 40
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
6° கால்வாய் - இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது.
B
8° கால்வாய் மாலத்தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.
C
9° கால்வாய் லட்சதீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.
D
11 ° கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபர் தீவையும் பிரிக்கிறது.
Question 40 Explanation: 
(குறிப்பு: 10° கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபர் தீவையும் பிரிக்கிறது)
Question 41
தென் பெருங்கடல் _________ தெற்கு அட்சத்தால் சூழப்பட்டுள்ளது.
A
40°
B
50°
C
60°
D
65°
Question 41 Explanation: 
(குறிப்பு: தென் பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ளது.)
Question 42
தென் பெருங்கடலின் பரப்பளவு _________ மில்லியன் சதுர கி.மீ ஆகும்.
A
28.16
B
29. 16
C
21.96
D
22.96
Question 42 Explanation: 
(குறிப்பு: தென் பெருங்கடல் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் தென்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.)
Question 43
கீழ்க்கண்டவற்றுள் தென் பெருங்கடலின் எல்லையோரக் கடல்கள் எவை?
  1. ராஸ் கடல்
  2. வெடல் கடல்
  3. நார்வே கடல்
  4. டேவிஸ் கடல்
A
1, 2, 3
B
2, 3, 4
C
2, 3
D
1, 2, 4
Question 43 Explanation: 
(குறிப்பு: ஃபேர்வெல் தீவு, பெளமன் தீவு, ஹார்ட்ஸ் தீவு போன்ற தீவுகள் தென்பெருங்கடலில் காணப்படுகின்றன.)
Question 44
தென்பெருங்கடலின் ஆழமான பகுதியான தென்சான்ட்விச் அகழியின் ஆழம்
A
5,235 மீ-
B
4,325 மீ-
C
6,523 மீ-
D
7,235 மீ-
Question 44 Explanation: 
(குறிப்பு: தென் பெருங்கடல் அருகிலுள்ள பெருங்கடல்களைக் காட்டிலும் குளிர்ச்சியாக உள்ளது.)
Question 45
ஆர்டிக் பெருங்கடலின் பரப்பளவு சுமார் _________மில்லியன் சதுர கி.மீ.
A
14.56
B
15.16
C
14.62
D
15.56
Question 45 Explanation: 
(குறிப்பு: ஆர்டிக் பெருங்கடல், ஆர்டிக் வட்டத்தினுள் அமைந்துள்ளது. வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் இப்பெருங்கடல் உறைந்தே காணப்படும்.)
Question 46
கீழ்க்கண்டவற்றுள் ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லையோரக் கடல்கள் எவை?
  1. நார்வே கடல்
  2. கிரீன்லாந்து கடல்
  3. கிழக்கு சைபீரியக் கடல்
  4. பேரண்ட் கடல்
A
1, 3, 4
B
1, 2, 4
C
2, 4
D
அனைத்தும்
Question 46 Explanation: 
(குறிப்பு: கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத் தீவு, நவோயா செமல்யா போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன.)
Question 47
ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியான 'யுரேசின் தாழ்நிலம்' __________ மீட்டர் ஆழமுடையது.
A
4,549
B
6,549
C
5,449
D
6,594
Question 48
பொருத்துக.(பெருங்கடல்களின் பரப்பளவு)
  1. பசிபிக் பெருங்கடல்                           i) 23%
  2. 2. அட்லாண்டிக் பெருங்கடல்           ii) 47%
  3. இந்திய பெருங்கடல்                          iii) 20%
  4. ஆர்க்டிக் பெருங்கடல்                       iv) 4%
  5. தென் பெருங்கடல்                              v) 6%
A
i iii ii iv v
B
iii ii i iv v
C
ii i iii iv v
D
iv iii i ii v
Question 49
பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகவும், உலக மக்கள் தொகையில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ள கண்டம்
A
ஐரோப்பா
B
வட அமெரிக்கா
C
தென் அமெரிக்கா
D
ஆப்ரிக்கா
Question 50
உலக மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ள கண்டம்
A
ஐரோப்பா
B
வட அமெரிக்கா
C
தென் அமெரிக்கா
D
ஆப்ரிக்கா
Question 50 Explanation: 
(குறிப்பு: தென் அமெரிக்கா பரப்பளவில் நான்காவது பெரிய கண்டம் ஆகும்.)
Question 51
உலக மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் இரண்டாவது இடத்திலுள்ள கண்டம்
A
ஐரோப்பா
B
வட அமெரிக்கா
C
ஆசியா
D
ஆப்ரிக்கா
Question 52
பரப்பளவில் ஆறாவது பெரிய கண்டம் எது?
A
ஐரோப்பா
B
வட அமெரிக்கா
C
தென் அமெரிக்கா
D
அண்டார்டிக்கா
Question 52 Explanation: 
(குறிப்பு: ஐரோப்பா உலக மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலுள்ளது)
Question 53
அண்டார்டிக்கா குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. பரப்பளவில ஆறாவது பெரிய கண்டம்.
  2. நிரந்தர குடியிருப்புகள் கிடையாது
  3. சுமார் 4000 ஆராய்ச்சியாளர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
2 மட்டும் சரி
Question 53 Explanation: 
(குறிப்பு: ஆப்பிரிக்கா பரப்பளவில ஐந்தாவது பெரிய கண்டம்.)
Question 54
உலக மக்கள் தொகையில் ஆறாவது இடத்திலுள்ள கண்டம்
A
ஆஸ்திரேலியா
B
வட அமெரிக்கா
C
ஆர்க்டிக்
D
அண்டார்டிக்கா
Question 54 Explanation: 
(குறிப்பு: ஆஸ்திரேலியா – பரப்பளவில் மிகச் சிறியக் கண்டம் ஆகும்.)
Question 55
பொருத்துக.
  1. தென்சான்ட்விச் அகழி    i) அட்லாண்டிக் பெருங்கடல்
  2. 2. மில்வாக்கி அகழி         ii) தென் பெருங்கடல்
  3. 3. மரியானா அகழி          iii) இந்திய பெருங்கடல்
  4. யுரேஷியன் படுகை          iv) பசிபிக் பெருங்கடல்
  5. ஜாவா அகழி                      v) ஆர்க்டிக் பெருங்கடல்
A
i iii ii v iv
B
ii iv v iii i
C
iv ii i v ii
D
ii i iv v iii
Question 56
குறிஞ்சி நிலத்திற்குரிய நிலப்பகுதி_____________ஆகும்.
A
மலையும் மலைசார்ந்த நிலமும்
B
காடும் காடுசார்ந்த நிலமும்
C
வயலும் வயல் சார்ந்த நிலமும்
D
கடலும் கடல் சார்ந்த நிலமும்
Question 57
சரியற்ற இணையைக் கண்டறி:
A
முல்லை - காடும் காடுசார்ந்த நிலமும்
B
மருதம் - வயலும் வயல்சார்ந்த நிலமும்
C
நெய்தல் - மலையும் மலைசார்ந்த நிலமும்
D
பாலை - மணலும் மணல்சார்ந்த நிலமும்
Question 57 Explanation: 
விளக்கம்: நெய்தல் - கடலும் கடல்சார்ந்த நிலமும்.
Question 58
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை நிலத்தோற்றத்துடன் பொருந்தாதது_______________
A
மலைகள்
B
பீடபூமிகள்
C
சமவெளிகள்
D
கண்டங்கள்
Question 58 Explanation: 
விளக்கம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் முதல்நிலை நிலத் தோற்றத்துடன் தொடர்புடையதாகும்.
Question 59
கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் நிலை நிலத்தோற்றத்துடன் பொருந்தாதது____________
A
பள்ளத்தாக்குகள்
B
பெருங்கடல்கள்
C
கடற்கரைகள்
D
மணல்குன்றுகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 59 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!