Online TestTnpsc Exam
நிலத்தோற்றங்கள் Online Test 7th Social Science Lesson 4 Questions in Tamil
நிலத்தோற்றங்கள் Online Test 7th Social Science Lesson 4 Questions in Tamil
Congratulations - you have completed நிலத்தோற்றங்கள் Online Test 7th Social Science Lesson 4 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- கூற்று: புவி மேற்பரப்பானது மலைகள், பீடமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களுடன் காணப்படுகிறது.
- காரணம்: புவியின் அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகளால் இவ்வாறான நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல |
Question 1 Explanation:
(குறிப்பு: புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பாறைக்கோளத்தின் சில பகுதிகள் கரடுமுரடாகவும் மற்றும் சில பகுதிகள் சமநிலமாகவும் உள்ளன.)
Question 2 |
புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் ஏற்படும் உயர்நிலப் பகுதிகள் மற்றும் தாழ்வு பகுதிகள் __________ செயல்முறைகளால் ஏற்படுகின்றன.
புறச்செயல்முறைகள் | |
அகச்செயல்முறைகள் | |
நிலங்களை சமப்படுத்துதல் | |
அரித்தல் செயல்முறைகள் |
Question 3 |
- கூற்று 1: புவிமேற்பரப்பில் பாறைகள் உடைந்து சிறுசிறு கற்களாகவும், துகள்களாகவும் சிதறுவது பாறைச் சிதைவு எனப்படுகிறது.
- கூற்று 2: நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 3 Explanation:
(குறிப்பு: அரித்தலுக்கு உட்பட்ட பொருட்கள் நீர்,காற்று, பனி மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றால் கடத்தப்பட்டு இறுதியில் படிய வைக்கப்படுகின்றன.)
Question 4 |
புவிப்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அரித்தல் மற்றும் மறுகட்டமைத்தல் ஆகியன _________ செயல்முறைகளால் ஏற்படுகின்றன.
புறச்செயல்முறைகள் | |
அகச்செயல்முறைகள் | |
நிலங்களை சமப்படுத்துதல் | |
அரித்தல் செயல்முறைகள் |
Question 4 Explanation:
(குறிப்பு: உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.)
Question 5 |
கீழ்க்கண்ட எந்த செயல்முறைகள் மூலம் நிலப்பரப்பானது தொடர்ந்து தேய்மானத்திற்கு உட்படுத்தப்படுகின்றன?
- அரித்தல்
- படிதல்
- பாறைச்சிதைவு
- குழிவு
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3 | |
2, 4 |
Question 5 Explanation:
(குறிப்பு: அரித்தல் மற்றும் படிதல் செயல்முறைகளால் புவியின் மேற்பரப்பில் பல தரப்பட்ட நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.)
Question 6 |
ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் _________ என அழைக்கப்படுகிறது.
நீர் வீழ்ச்சி | |
ஓடை | |
ஆறு | |
குதிரை குளம்பு ஏரி |
Question 6 Explanation:
(குறிப்பு: பொதுவாக ஆறுகள், ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ தோன்றுகின்றன.)
Question 7 |
- கூற்று 1: ஆறு தோன்றுமிடம் ஆற்றின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும்.
- கூற்று 2: ஆறு ஒரு ஏரியிலோ, கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்கும் இடம் டெல்டா எனப்படும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 7 Explanation:
(குறிப்பு: ஆறு ஒரு ஏரியிலோ, கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்கும் இடம் ஆற்று முகத்துவாரம் எனப்படும்.)
Question 8 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- V வடிவ பள்ளத்தாக்கு அகன்ற படுகை உடையதாக காணப்படும்.
- துணையாறு என்பது ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு ஆகும்.
- கிளையாறு என்பது ஓர் முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு ஆகும்.
அனைத்தும் | |
1, 2 | |
1 மட்டும் | |
2, 3 |
Question 8 Explanation:
(குறிப்பு: 1. V வடிவ பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக காணப்படும்.
2. கிளையாறு என்பது ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு ஆகும்.
துணையாறு என்பது ஓர் முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு ஆகும்.)
Question 9 |
__________ பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.
வன்பாறைகள் | |
மென்பாறைகள் | |
சுண்ணாம்பு பாறைகள் | |
சமவெளி பாறைகள் |
Question 9 Explanation:
(குறிப்பு: நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம்.
(உதாரணம்) தமிழ்நாட்டில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள குற்றால நீர்வீழ்ச்சி.)
Question 10 |
உலகின் உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா | |
தென் அமெரிக்கா | |
தென் ஆப்பிரிக்கா | |
ஐரோப்பா |
Question 10 Explanation:
(குறிப்பு: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.)
Question 11 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் நயாகரா நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.
- ஐரோப்பாவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் விக்டோரியா நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.
1 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
இரண்டும் தவறு | |
இரண்டும் சரி |
Question 11 Explanation:
(குறிப்பு: ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் விக்டோரியா நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.)
Question 12 |
நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை ________ என்கிறோம்.
செங்குத்தான சிறிய பள்ளத்தாக்குகள் | |
குதிரைக் குளம்பு ஏரி | |
வீழ்ச்சி உட்பாய்த் தேக்கம் | |
வண்டல் விசிறிகள் உட்பாய்த்தேக்கம் |
Question 12 Explanation:
(குறிப்பு: ஆறு ஒரு சமவெளிப் பகுதியையோ அல்லது மலை அடிவாரப் பகுதியையோ அடையும் போது ஏற்படுத்தும் படிவுகள் வண்டல் விசிறிகள் உட்பாய்த் தேக்கம் என்கிறோம்.)
Question 13 |
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படுவது
குதிரைக் குளம்பு ஏரி | |
ஆற்று வளைவுகள் | |
வீழ்ச்சி குளம் | |
உட்பாய்வு தேக்கம். |
Question 13 Explanation:
(குறிப்பு: ஆறானது சமவெளிப் பகுதியை அடையும் போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் வளைவுகள் ஆற்று வளைவுகள் எனப்படுகின்றன.)
Question 14 |
ஆற்று வளைவு, ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுப்பது _________.
குதிரைக் குளம்பு ஏரி | |
ஆற்று வளைவுகள் | |
ஆற்று வளைவுகள் | |
உட்பாய்வு தேக்கம் |
Question 14 Explanation:
(குறிப்பு: ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்தும் முடிவில் துண்டிக்கப்பட்டும் குதிரைக்குளம்பு ஏரி ஏற்படுகிறது.)
Question 15 |
_________ என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது.
கனடா | |
ஆசியா மைனர் (துருக்கி) | |
ஜிம்பாப்வே | |
ஜாம்பியா |
Question 15 Explanation:
(குறிப்பு:காரணம் - மியாண்டர் ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடனும் ஓடுகின்றது.)
Question 16 |
வண்டல் படிவுகளின் மூலம் உயர்ந்த ஆற்றுங்கரைகள் _________ எனப்படும்.
மியாண்டர் | |
உட்பாய்வு தேக்கம் | |
லெவீஸ் | |
சமவெளி |
Question 16 Explanation:
(குறிப்பு: லெவிஸ் உயர் அணை எனவும் அழைக்கப்படுகிறது. ஆற்று வெள்ளப்பெருக்கானது மென்மையான மண் மற்றும் இதர பொருட்களையும் அடுக்குகளாக படிய வைக்கின்றன. இவை வண்டல் படிவுகள் எனப்படுகிறது. இதனால் வளமான சமதள வெள்ளச்சமவெளி உருவாகின்றது.)
Question 17 |
கிளையாறுகளின் அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து __________ எனப்படும் கழிமுகப் பகுதியை உருவாக்குகின்றன.
லெவிஸ் | |
ஆற்று வளைவுகள் | |
டெல்டா | |
வெள்ளச் சமவெளி |
Question 17 Explanation:
(குறிப்பு: கழிமுகப்பகுதியில் சாகுபடிக்கு ஏற்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. (எ.கா) காவேரி டெல்டா, கங்கை டெல்டா மற்றும் மிசிசிபி டெல்டா)
Question 18 |
___________ என்பது மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ஆகும்.
பனிச்சரிவு | |
பனியாறு | |
பனியாற்று மொரைன்கள் | |
சர்க் |
Question 19 |
பனியாறுகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 19 Explanation:
(குறிப்பு:
மலைப் பனியாறுகள் அல்லது பள்ளத்தாக்குப் பனியாறுகள்
கண்டப் பனியாறுகள்)
Question 20 |
கண்டப்பகுதியில் பெரும்பரப்பில் பரவிக் காணப்படும் அடர்ந்த பனிப்படலம் _________ எனப்படும்.
மலைப் பனியாறு | |
சமவெளிப் பனியாறு | |
கண்டப் பனியாறு | |
பள்ளத்தாக்கு பனியாறு |
Question 20 Explanation:
(குறிப்பு: (எ.கா.) அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து)
Question 21 |
முன்னர் அமைந்துள்ள ஆற்றுப் போக்குகளை பின்பற்றி _________ பனியாறுகள் செல்கின்றன.
மலைப் பனியாறுகள் | |
சமவெளிப் பனியாறுகள் | |
கண்டப் பனியாறுகள் | |
தீபகற்ப பனியாறுகள் |
Question 21 Explanation:
(குறிப்பு: மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி நகரும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகிறது. இது செங்குத்தான பக்கங்களால் சூழப்பட்டுள்ளது. (எ.கா) இமயமலைப்பகுதி, ஆல்ப்ஸ் மலைப்பகுதி)
Question 22 |
_________ என்பது பனியாறுகளால் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு ஆகும்.
அரெட்டுகள் | |
சர்க் | |
மொரைன்கள் | |
யார்டாங் |
Question 22 Explanation:
(குறிப்பு: பனியாறுகள் நிலத்தோற்றத்தை அரித்து எடுத்தல் மூலம் மண் மற்றும் கற்களை சமப்படுத்தி அடியில் அமைந்துள்ள பாறையினை வெளிப்படுத்துகிறது. மலைச்சரிவில் பனி அரிப்பால் சர்க்குகள் ஏற்படுகின்றன.)
Question 23 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- கார்ரி சர்க் - ஸ்காட்லாந்து
- கார் சர்க் – ஜெர்மனி
1 மட்டும் தவறு | |
1 மட்டும் தவறு | |
இரண்டும் தவறு | |
இரண்டும் சரி |
Question 23 Explanation:
(குறிப்பு: சர்க்கின் எல்லாப்பக்கமும் செங்குத்தாகவும், தலைப்பகுதி செங்குத்து சுவர் போன்றும் உள்ளது.)
Question 24 |
பனி உருகும்போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் _________ என அழைக்கப்படுகிறது.
சர்க் ஏரி | |
மொரைன் ஏரி | |
டார்ன் ஏரி | |
அரெட் ஏரி |
Question 25 |
இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது உருவாகும் கத்திமுனைக் குன்றுகள் ________ என அழைக்கப்படுகின்றன.
அரெட்டுகள் | |
மொரைன்கள் | |
காளான் பாறைகள் | |
யார்டாங் |
Question 25 Explanation:
(குறிப்பு: இரண்டு சர்க்குகள் அரிக்கப்படுவதனால் இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச்சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன.)
Question 26 |
_________ பள்ளத்தாக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகின்றன.
V வடிவ பள்ளத்தாக்கு | |
U வடிவ பள்ளத்தாக்கு | |
டார்ன் பள்ளத்தாக்கு | |
L வடிவ பள்ளத்தாக்கு |
Question 27 |
பாலைவனத்தில் அரிப்பு மற்றும் படிதல் செயல்முறைகளை வேகமாக செயல்படுத்தும் காரணி ________ ஆகும்.
வெப்பம் | |
காற்று | |
பறவைகள் | |
விலங்குகள் |
Question 28 |
பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படும் பாறைகள் _________ எனப்படும்.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் | |
காளான் பாறைகள் | |
மணல் குன்றுகள் | |
சுண்ணாம்பு பாறைகள் |
Question 28 Explanation:
(குறிப்பு: பாறையின் மேற்பகுதியை விட கீழ்ப்பகுதியை வேகமாக காற்று அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகள் காளான் வடிவில் காணப்படும். இவை பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன.)
Question 29 |
ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது __________ என்று அழைக்கப்படுகிறது.
இன்சல்பர்க் | |
மணல் குன்றுகள் | |
காற்றடி வண்டல் படிவுகள் | |
பிறைவடிவ மணல் குன்றுகள் |
Question 29 Explanation:
(குறிப்பு: காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் இன்சன்பர்க்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) தென் அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படும் காற்றரிப்புத் தனிக் குன்றுகள்)
Question 30 |
பனியாற்றினால் கடத்தப்பட்டு படியவைக்கப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் ஆகியன__________ எனப்படுகின்றன.
சர்க் மொரைன்கள் | |
அரெட் மொரைன்கள் | |
பனியாற்று மொரைன்கள் | |
பள்ளத்தாக்கு மொரைன்கள் |
Question 31 |
- கூற்று 1: காற்று வீசுவது நிற்கும் போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல் குன்றுகள் என அழைக்கப்படுகிறது.
- கூற்று 2: பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படுகின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 31 Explanation:
(குறிப்பு: காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகிறது.)
Question 32 |
காற்றடி வண்டல் படிவுகள் _________ல் அதிகமாக காணப்படுகின்றன.
தென் அமெரிக்கா | |
ஆப்பிரிக்கா | |
ஐரோப்பா | |
சீனா |
Question 32 Explanation:
(குறிப்பு: மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும்போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.)
Question 33 |
வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை ஆகும்.
சஹாரா பாலைவனம் | |
தார் பாலைவனம் | |
கோபி பாலைவனம் | |
காராகும் பாலைவனம் |
Question 34 |
நிலப்பகுதியை அடுத்தோ அல்லது ஒட்டியோ காணப்படும் பெரும் நீர்பரப்பு __________ எனப்படுகிறது.
கடற்கரை | |
ஆறு | |
கடற்பகுதி | |
ஏரி |
Question 34 Explanation:
(குறிப்பு: கடலோர எல்லை என்பது கடல்நீரும், நிலமும் சந்திக்கின்ற இடம் ஆகும். இது கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.)
Question 35 |
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை _________ எனப்படும்.
கடல் தூண்கள் | |
கடல் ஓங்கல் | |
கடற்குகைகள் | |
கடல் வளைவுகள் |
Question 35 Explanation:
(குறிப்பு: கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் எனப்படுகின்றன.)
Question 36 |
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று ________ ஐ தோற்றுவிக்கின்றது.
கடல் தூண் | |
கடல் ஓங்கல் | |
கடற்குகைகள் | |
கடல் வளைவுகள் |
Question 36 Explanation:
(குறிப்பு: கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப் பகுதி கடற்கரை எனப்படும்.)
Question 37 |
கடல் வளைவுகளின் மேற்கூரையை கடல் அலைகள் அரிப்பதால் உருவாகும் பக்கச்சுவர்கள் _________ எனப்படும்.
கடல் தூண்கள் | |
கடல் ஓங்கல் | |
கடற்குகைகள் | |
கடல் வளைவுகள் |
Question 37 Explanation:
(குறிப்பு: ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுக்கள் எனப்படுகின்றன.)
Question 38 |
உலகின் மிக நீளமான கடற்கரை எங்கு அமைந்துள்ளது?
கனடா | |
அமெரிக்கா | |
சீனா | |
இந்தியா |
Question 38 Explanation:
(குறிப்பு: மிக நீளமான கடற்கரையான மியாமி கடற்கரை அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படுகிறது.)
Question 39 |
உலகின் நீண்ட கடற்கரைகளில் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 40 |
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் _________ எனப்படும்.
காயல்கள் | |
ஏரி | |
நீர்த்தேக்கம் | |
கடற்கரை |
Question 40 Explanation:
(குறிப்பு: காயல்கள், உப்பங்கழிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி.)
Question 41 |
குற்றால நீர்வீழ்ச்சி _________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.
காவேரி | |
பெண்ணாறு | |
சிற்றாறு | |
வைகை |
Question 42 |
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _________.
கடல் ஓங்கல் | |
கடல் வளைவுகள் | |
கடல் தூண் | |
கடற்கரை |
Question 42 Explanation:
(குறிப்பு: கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல்வளைவுகள், கடல் தூண்கள் ஆகியவை கடல் அலை அரிப்பினாலும், கடற்கரை மணற்திட்டுக்கள் ஆகியவை படியவைத்தலினாலும் உருவாகின்றன.)
Question 43 |
- கூற்று: முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன.
- காரணம்: கடல்பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 44 |
பொருத்துக.
- பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் i) பனியாறுகள்
- கைவிடப்பட்ட மியான்டர் வளைவுகள் ii) பிறை வடிவ மணற்குன்றுகள்
- நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் iii) காயல்
- பிறைவடிவ மணல் மேடுகள் iv) பாறைச் சிதைவுகள்
- 5. வேம்பநாடு ஏரி v) குதிரைக் குளம்பு ஏரி
ii iii iv v i | |
iv v i ii iii | |
iii iv i ii v | |
iv i v iii ii |
Question 45 |
- கூற்று: கடல்வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
- காரணம்: கடல்தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 45 Explanation:
(குறிப்பு: கடல்தூண்கள் அலைகளின் அரித்தலால் ஏற்படுகின்றன.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 45 questions to complete.
Sir please check question no 8 … please update correct answer sir