Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Online Test 9th Social Science Lesson 3 Questions in Tamil

தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Online Test 9th Social Science Lesson 3 Questions in Tamil

Congratulations - you have completed தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Online Test 9th Social Science Lesson 3 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ் மொழி முதன் முதலில் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
A
தமிழ் பிராமி
B
தமிழ் பாமினி
C
தமிழ் போனடிக்
D
இது எதுவும் அல்ல
Question 1 Explanation: 
(குறிப்பு - தமிழ் பிராமி என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன் முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன மற்றும் செம்மொழித் தமிழ் செய்யுள்கள் இயற்றப்பட்டது)
Question 2
தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்வதற்கு உதவுவது கீழ்கண்டவற்றுள் எது?
  1. செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்
  2. கல்வெட்டுகள்
  3. தொல்லியல் அகழாய்வு சான்றுகள் மற்றும் பண்பாட்டுப் பொருள்கள்
  4. தமிழ் அல்லாத மற்றும் அயல் நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள்.
A
I, II, III மட்டும்
B
II, III, IV மட்டும்
C
I, II, IV மட்டும்
D
அனைத்தும்
Question 2 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அனைத்தும் தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக அறிய உதவுகின்றன.)
Question 3
செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. தொல்காப்பியம்
  2. பதினெண்மேல்கணக்கு நூல்கள்
  3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
I, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
(குறிப்பு - செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆவன, தொல்காப்பியம், பதினெண்மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவைகளாகும்)
Question 4
தொல்காப்பியத்தில் எந்த பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன?
A
முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி
B
இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதி
C
மூன்றாம் மற்றும் நான்காம் பகுதி
D
முதல் பகுதி மட்டும்
Question 4 Explanation: 
(குறிப்பு - தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பிய நூலின், முதல் இரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தையும், மூன்றாவது பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தையும் வரையறுக்கிறது)
Question 5
பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் அல்லாதவை எது?
A
நற்றினை
B
புறநானூறு
C
முல்லைப்பாட்டு
D
குண்டலகேசி
Question 5 Explanation: 
(குறிப்பு - குண்டலகேசி என்பது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இது பதினெண்மேற்கணக்கு நூல்கள் அல்லாதவை ஆகும்)
Question 6
எட்டுத்தொகை நூல்களுள் அல்லாதவை எது?
A
ஐங்குறுநூறு
B
பதிற்றுப்பத்து
C
நெடுநல்வாடை
D
கலித்தொகை
Question 6 Explanation: 
(குறிப்பு - எட்டுத்தொகை நூல்களாவன, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகும்)
Question 7
பத்துப்பாட்டு நூல்களுள் அல்லாதவை எவை?
A
பட்டினப்பாலை
B
முல்லைப்பாட்டு
C
பரிபாடல்
D
மதுரைக்காஞ்சி
Question 7 Explanation: 
(குறிப்பு - பரிபாடல் என்பது எட்டுத்தொகை நூல் ஆகும்.)
Question 8
வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
B
பதினெண்மேல்கணக்கு நூல்கள்
C
ஐம்பெரும் காப்பியம்
D
ஐஞ்சிறு காப்பியம்
Question 8 Explanation: 
(குறிப்பு - வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்ப என்ற பதினெட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என தொகுக்கப்பட்டுள்ளன.)
Question 9
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் கீழ்க்காணும் எந்த நூல் வகையை சார்ந்தது?
A
எட்டுத்தொகை நூல்கள்
B
பத்துப்பாட்டு நூல்கள்
C
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
D
இவை எதுவும் அல்ல
Question 9 Explanation: 
(குறிப்பு - திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு நூல் வகையை சார்ந்தது ஆகும். இது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களைக் கொண்டது)
Question 10
தமிழ் பிராமி எழுத்துக்கள் எங்கு காணப்படுகின்றன?
A
குகை வாழிடங்களில்
B
கற்பாறைகளில், முத்திரைகளில்
C
சுடுமண் கலங்களில், நாணயங்களில்
D
இவை எல்லாவற்றிலும்
Question 10 Explanation: 
(குறிப்பு - தமிழகத்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழியின் வரி வடிவத்திற்கு தமிழ் பிராமி என்று பெயர். கற்பாறைகளில் குகைவாழ் இடங்களில் சுடுமண் காலங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன)
Question 11
தமிழ்நாட்டில்____________இடங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும், குகைவாழ் இடங்களிலும் காணப்படுகின்றன.
A
20க்கு மேற்பட்ட
B
30க்கு மேற்பட்ட
C
50க்கு மேற்பட்ட
D
40க்கு மேற்பட்ட
Question 11 Explanation: 
(குறிப்பு - 30க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கற்பாறைகளிலும் குகைவாழ் இடங்களிலும் காணப்படுகிறது)
Question 12
குகைகளை தமது வாழ் இடங்களாக கொண்டிருந்தவர்கள் எந்த மதத்தினர் ஆவர்?
A
சமணத்துறவிகள்
B
புத்த துறவிகள்
C
பார்சி துறவிகள்
D
ஜெயின் துறவிகள்
Question 12 Explanation: 
(குறிப்பு - குகை வாழிடங்களை பெரும்பாலும் தமது வாழிடங்களாக கொண்டிருந்தவர்கள் சமணத் துறவிகள் ஆவர். சமணத்துறவிகள் குகைகளில் படுக்கை போன்ற அமைப்பில் செதுக்கி, அவற்றைப் பயன்படுத்தினர்)
Question 13
தமிழ்-பிராமி கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் கீழ் உள்ளவற்றில் எது?
  1. முத்துப்பட்டி, புகலூர்
  2. அரச்சலூர், ஜம்பை
  3. மதுரை, மாங்குளம்
  4. கொங்கர்புளியங்குளம்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 13 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து இடங்களிலும் உள்ள குகை வாழிடங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் இன்றும் காணமுடியும்)
Question 14
நடுகற்கள் யாருடைய நினைவாக நடப்பட்டன?
  1. போரில் வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக
  2. நாட்டுக்கு சேவை செய்தவர்கள் நினைவாக
  3. ஆநிரை கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 14 Explanation: 
(குறிப்பு - போர்க்களத்திலும், ஆநிரை கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன)
Question 15
சங்க காலத்திற்குப் பிறகும் பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் எந்த நிலப்பகுதியில் பெரிதும் காணப்படுகின்றன?
A
முல்லை நிலப் பகுதியில்
B
குறிஞ்சி நிலப் பகுதியில்
C
மருதம் நிலப் பகுதியில்
D
இது எதுவும் அல்ல
Question 15 Explanation: 
(குறிப்பு - முல்லை நிலப்பகுதியில் நடுகற்கள் பெரிதும் காணப்படுகின்றன.)
Question 16
"கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் அந்தவன் கல் "என்னும் செய்தி கீழ்க்கண்ட இடங்களில் எங்கு காணப்பட்டது?
A
முத்துப்பட்டி
B
புகலூர்
C
புளியமான் கோம்பை
D
அரச்சலூர்
Question 16 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட செய்தி காணப்பட்ட இடம் ஆகும். புளிய மான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஒன்றில் இந்த செய்தி காணப்பட்டது. இதன் பொருள் கூடலூரில் அவரை கவர்ந்த போது நடந்த பூஜையில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல் என்பதாகும்)
Question 17
சங்ககால நடுகற்கள் காணப்படும் இடங்கள் கீழ்கண்டவற்றுள் எது?
  1. புலிமான் கோம்பை
  2. தாதப்பட்டி
  3. பொற்பனைக்கோட்டை
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 17 Explanation: 
(குறிப்பு - தேனி மாவட்டத்தின் புலிமான்கோம்பை, தாதப்பட்டி ஆகிய இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் காணப்படுகின்றன)
Question 18
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள.......... என்னுமிடத்தில் பரவலாக நடுகற்களை காணலாம்.
A
வந்தவாசி
B
போளூர்
C
செங்கம்
D
இது எதுவும் அல்ல
Question 18 Explanation: 
(குறிப்பு - திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடுகற்களை பரவலாக காண முடியும்)
Question 19
சுடுமண் பொறிப்புகள் கீழ்க்கண்ட இடங்களில் எங்கு அதிகமாக காணப்படுகின்றன?
  1. கீழடி
  2. அரிக்கமேடு
  3. அழகன்குளம்
  4. கொடுமணல்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 19 Explanation: 
(குறிப்பு - வரலாற்றின் தொடக்க காலத்தை சேர்ந்த சுடுமண் கலங்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி உள்ளிட்ட இடங்களில் இத்தகைய சுடுமண் பொறிப்புகள் காணப்படுகின்றன)
Question 20
சுடுமண் பொறிப்புகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களுள் தவறானது எது?
A
எகிப்து நாட்டின் குசேர் அல் காதிம்
B
ஓமன் நாட்டின் கோர் ரோரி
C
கிரேக்க நாட்டின் ஏதன்ஸ்
D
எகிப்து நாட்டின் பெரேனிகே
Question 20 Explanation: 
(குறிப்பு - எகிப்து நாட்டின் பெரேனிகே, எகிப்து நாட்டின் குசேர் அல் காதிம், ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுடுமண் பொறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 21
பிராகிருத மொழி என்பது............. காலத்தில் வட இந்தியாவில் பொது மக்களால் பேசப்பட்ட மொழி ஆகும்.
A
மௌரியர்
B
பாமினி
C
குப்தர்
D
விஜயநகர
Question 21 Explanation: 
(குறிப்பு - பிராகிருத மொழி என்பது மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்ட மொழி ஆகும். பாளி, சமஸ்கிரதம் போன்றவை மௌரியர் காலத்து பிற மொழிகள் ஆகும்)
Question 22
தமிழ்நாட்டில் பழங்கால வாழ்விடங்களை எவ்வாறு அழைப்பர்?
A
நத்தம்
B
மேடு
C
கோட்டை
D
இவை அனைத்தும் சரி
Question 22 Explanation: 
( குறிப்பு - மக்கள் வாழ்ந்திருந்த கட்டடங்களின் சான்றுகள் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போன்றவை குவிந்து கிடக்கும் பழங்கால வாழ்விடங்களை தமிழ்நாட்டில் நத்தம், மேடு, கோட்டை என்று அழைப்பர்)
Question 23
தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட இடங்கள் கீழ்கண்டவற்றுள் எது?
  1. அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி
  2. கொடுமணல், உறையூர், கரூர்
  3. காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை
  4. வசவசமுத்திரம், கேரளத்தின் பட்டணம்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 23 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து இடங்களிலும் அகழ்வாய்வுகளில் இருந்து சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிட்டியுள்ளன)
Question 24
அரிக்கமேடு என்ற இடம் எங்கு அமைந்துள்ளது?
A
கடலூருக்கு அருகில்
B
புதுச்சேரிக்கு அருகில்
C
விழுப்புரத்திற்கு அருகில்
D
சிவகங்கைக்கு அருகில்
Question 24 Explanation: 
(குறிப்பு - புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு என்ற இடம் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் ஆகும் )
Question 25
அரிக்கமேடு என்னும் இடத்தில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டவர்கள் கீழ் உள்ளவர்களில் யார்?
  1. சர் ராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர்
  2. ஜே எம் கசால்
  3. ஏ கோஷ்
  4. கிருஷ்ண தேவா
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 25 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட தொல்லியல் அறிஞர்கள் அரிக்கமேடு என்னும் இடத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். சரக்கு கிடங்கு, தொட்டிகள், உறைகிணறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அங்கே இருந்ததை அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தினர்)
Question 26
பொருத்துக
  1. புளியமான் கோம்பை -                                                                                   a) 1878
  2. இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் -                                             b) 2006
  3. பழங்கால பொருட்கள் மற்றும் கலை கருவூலங்கள் சட்டம் -                c) 1958
  4. தொல்லியல் ஆய்வுக் களங்கள் மட்டும் எஞ்சிய பொருட்கள் சட்டம் - d) 1972
A
I-b, II-a, III-d, IV-c
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 26 Explanation: 
(குறிப்பு - பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களையும் கட்டுமானங்களையும் நினைவு சின்னங்களையும் நிர்வாகம் செய்யும் அமைப்பு இந்திய தொல்லியல் துறை ஆகும். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. தமிழக அரசின் கீழ் தமிழ்நாடு தொல்லியல்துறை இயங்குகிறது)
Question 27
.............. என்பவை விலை உயர்ந்த நவமணிகளின் மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்டவை ஆகும்.
A
அணி புடைப்புமணிகள்
B
செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள்
C
மணிகள்
D
சங்கு வளையல்கள்
Question 27 Explanation: 
(குறிப்பு - செங்கல் கட்டுமானங்கள், மணிகள், சங்கு வளையல்கள், அணிபுடைப்பு மணிகள், செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் போன்றவற்றை தொல்லியல் ஆய்வு மேற்கொண்ட இடங்களில் தொல்லியலாளர்கள் கண்டறிந்தனர்)
Question 28
முத்திரை பொறித்த நாணயங்கள் எங்கு கிடைத்தன?
A
கொடுமனல்
B
போடிநாயக்கனூர்
C
இவை இரண்டிலும்
D
இவை இரண்டிலும் அல்ல
Question 28 Explanation: 
(குறிப்பு - கொடுமணல் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன. ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறித்துக் காணப்படுகின்றன)
Question 29
தொடக்க கால தமிழ் சமூகம் குறித்த அரிய தகவல்களை தரும் தமிழ் அல்லாத பிற மொழி சான்றுகள் எது?
  1. அர்த்தசாஸ்திரம்
  2. மகாவம்சம்
  3. எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ்
  4. பிளினியின் இயற்கை வரலாறு
  5. தாலமியின் புவியியல்
A
I, II, III, IV மட்டும்
B
I, III, IV, V மட்டும்
C
II, III, IV, V மட்டும்
D
இவை அனைத்தும்
Question 29 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து நூல்களும் தொடக்க கால தமிழ் சமூகம் குறித்த அரிய தகவல்களைத் தரும் தமிழ் அல்லாத பிறமொழி சான்றுகள் ஆகும்)
Question 30
பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் மற்றும் கடல்பொருட்களை குறிப்பதாக கருதப்படுவது அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் உள்ள........ என்னும் குறிப்பு ஆகும்.
A
பாண்டிய காவாடகா
B
பாண்டிய முத்தின்
C
பாண்டிய வளாஸ்
D
இது எதுவும் அல்ல
Question 30 Explanation: 
(குறிப்பு - மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் என்னும் சாணக்கியர் இயற்றிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் உள்ள பாண்டிய காவாடகா என்னும் குறிப்பு, பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் மற்றும் கடல் பொருள்களின் குறிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது)
Question 31
மகாவம்சம் என்னும் நூல்............. புத்தமத வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்.
A
இலங்கையின்
B
நேபாளத்தின்
C
இந்தியாவின்
D
சீனாவின்
Question 31 Explanation: 
(குறிப்பு - இலங்கையின் புத்த மத வரலாற்றைக் கூறும் நூல் மகாவம்சம் என்ற நூல் ஆகும். இது பாலி மொழியில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் இருந்த வணிகர்கள் குறித்து இந்நூல் குறிப்பிடுகிறது.)
Question 32
இயற்கை வரலாறு என்னும் நூலை எழுதிய ரோமானியர் யார்?
A
பிளினி
B
தாலமி
C
பிளேட்டோ
D
இவர் யாரும் அல்ல
Question 32 Explanation: 
(குறிப்பு - ரோமானியர் ஆன முட்டை பிளினி என்பவர் இயற்கை வரலாறு என்ற நூலை எழுதினார். லத்தீன் மொழியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது)
Question 33
தாலமியின் புவியியல் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய துறைமுகங்களில் அல்லாதவை எது?
  1. காவிரிப்பூம்பட்டினம்
  2. கொற்கை
  3. முசிரி
  4. கன்னியாகுமரி
  5. கொல்லம்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
I, II, III, IV மட்டும் சரி
D
I, III, IV, V மட்டும் சரி
Question 33 Explanation: 
(குறிப்பு - இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானிய பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள் நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணம் தாலமியின் புவியியல் என்ற நூலாகும். இதில் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, கன்னியாகுமரி, முசிறி ஆகிய துறைமுகப்பட்டினங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது)
Question 34
பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானிய பேரரசின்.......... குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.
A
சாலைகள்
B
கடல்வழிகள்
C
ஆக்கிரமிப்புகள்
D
துறைமுகங்கள்
Question 34 Explanation: 
(குறிப்பு - பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானிய பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும். இதில் பண்டைய தமிழகமும், முசிறி துறைமுகம் மற்றும் பல இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன)
Question 35
பியூட்டிங்கேரியன் அட்டவணை என்னும் நூலில் டேப்ரோபேன் (Taprobane) என்று குறிப்பிடப்பட்டுள்ள தீவு எது?
A
இலங்கை
B
சுமத்ரா
C
அந்தமான்
D
மாலத்தீவு
Question 35 Explanation: 
(குறிப்பு - பியூட்டிங்கேரியன் அட்டவணை என்னும் நூலில் இலங்கை தீவு டேப்ரோபேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முசிறி துறைமுகம் முசிறிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
Question 36
பிளினியின் இயற்கை வரலாறு என்னும் நூலின் படி, கேரளக் கடற்கரையில் இருந்த பக்காரே துறைமுகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 36 Explanation: 
(குறிப்பு - பிளினியின் இயற்கை வரலாறு என்னும் நூலின் படி, பக்காரே என்னும் கேரள துறைமுகம் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களிடம் இருந்தது. ரோமானியர்களுடன் இந்தியர்கள் மிளகு வணிகம் செய்தது குறித்து இந்நூலில் பிளினி குறிப்பிடுகிறார்)
Question 37
ஹெர்மாபோலோன் என்ற பெயருடைய கப்பல் ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதிக்கான மிளகு தந்தம் போன்ற சடங்குகள் குறித்த பட்டியல் கீழ்க்காணும் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A
பியூட்டிங்கேரியன் அட்டவணை
B
வியன்னா பாப்பிரஸ்
C
தாலமியின் புவியியல்
D
இவை எதுவும் இல்லை
Question 37 Explanation: 
(குறிப்பு - வியன்னா பாப்பிரஸ் என்பது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணமாகும். இதில் ஹெர்மாபோலான் என்ற கப்பல் ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியான மிளகு தந்தம் போன்ற சரக்குகள் குறித்த பட்டியல் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன)
Question 38
பாப்பிரஸ் என்பது, பண்டைய எகிப்தில் உள்ள__________ஆகும்
A
நாணல்
B
காகிதம்
C
தூரிகை
D
திரைசீலை
Question 38 Explanation: 
(குறிப்பு - பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணலில் இருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும். அக்காலத்தில் எழுதுவதற்கு இதைத்தான் பயன்படுத்தினர்)
Question 39
பெருவாரியான அறிஞர்களின் கருத்துக்களின் படி சங்ககால இலக்கியத்தின் காலம் என்பது_______ இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவையாக இருக்கும் என்பதாகும்.
A
பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுக்கும்
B
பொ.ஆ.மு 4ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுக்கும்
C
பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டுக்கும்
D
பொ.ஆ.மு 4ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டுக்கும்
Question 39 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்தை கால வரையறை செய்வதில் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பெருவாரியான அறிஞர்களின் கருத்தின் படி பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் ஆக இருந்திருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது)
Question 40
அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரி வடிவத்திற்கு__________என்று பெயராகும்.
A
அசோகன் பிராமி
B
அசோகன் பாமினி
C
அசோகச் சித்திரம்
D
அசோக வடிவம்
Question 40 Explanation: 
(குறிப்பு - அசோகருடைய கல்வெட்டுக்களில் காணப்படும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்த தகவல்களும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க காலத்தின் ஆள வரம்புகளை உறுதிப்படுத்துகின்றன. அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரி வடிவத்திற்கு அசோகன் பிராமி என்று பெயராகும்.)
Question 41
குறிப்பிட்ட இயற்கை நில அமைப்பையும் அதன் வாழ்வியல் முறைகளையும் குறிப்பதற்கு சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது?
A
பால்
B
திணை
C
பொருனை
D
இயல்
Question 41 Explanation: 
(குறிப்பு - திணை என்பது குறிப்பிட்ட இயற்கை நில அமைப்பையும் அதன் வாழ்வியல் முறைகளையும் குறிப்பது ஆகும். திணை என்பது, அகத்திணை மற்றும் புறத்திணை என இரு வகைப்படும்)
Question 42
பொருத்துக
  1. குறிஞ்சி            - a) கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்
  2. முல்லை            - b) மலையும் மலை சார்ந்த பகுதிகளும்
  3. மருதம்               - c) வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்
  4. நெய்தல்            - d) காடும் காடு சார்ந்த பகுதிகளும்
A
I-b, II-d, III-c, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 42 Explanation: 
(குறிப்பு - ஐந்திணைகள் என்பன ஐவகை நிலங்களையும், அவர்களின் தொழில் மக்கள் பண்பாடு ஆகியவைகளையும் குறிப்பது ஆகும். ஐவகை திணைகள் ஆவன குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகும்)
Question 43
சேர அரசர்கள் குறித்தும் சேர அரசர்களின் நாட்டின் எல்லை குறித்தும் பேசும் நூல் எது?
A
பதிற்றுப்பத்து
B
பரிபாடல்
C
புறநானூறு
D
முதுமலை காஞ்சி
Question 43 Explanation: 
(குறிப்பு - அசோகரின் கல்வெட்டுகளில் கேரள புத்திரர்கள் என்று சேரர்களை குறிப்பிட்டுள்ளார். பதிற்றுப் பத்து என்னும் நூல் சேரர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளை குறித்தும் கூறுகிறது)
Question 44
சேரமன்னர்கள் வெளியிட்டுள்ள நாணயங்கள் எங்கு கிடைத்துள்ளன?
A
கரூர்
B
கடலூர்
C
மதுரை
D
திருநெல்வேலி
Question 44 Explanation: 
(குறிப்பு - தமிழ்நாட்டிலுள்ள கரூர்தான் சேரர்களின் தலைநகரமான வஞ்சி என வரலாற்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கரூரில் கிடைத்துள்ளன)
Question 45
சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பியவர் யார்?
A
சேரன் செங்குட்டுவன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
செங்கோட்கன்னி
D
இவர் யாருமல்ல
Question 45 Explanation: 
(குறிப்பு - சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பியவர் சேரன் செங்குட்டுவன் ஆவார் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது மரபு ஆகும்)
Question 46
சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டவர்வர்கள் யார்?
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 46 Explanation: 
(குறிப்பு - சோழர்களின் இலச்சினை புலி ஆகும். சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும், மறுபுறத்தில் யானை மற்றும் புனித சின்னங்களும் காணப்படுகின்றன)
Question 47
தமிழ் சங்கங்களை நிறுவி ஆதரவு அளிப்பவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் யாரை போற்றுகின்றன?
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 47 Explanation: 
(குறிப்பு - பாண்டியர்கள் குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன. தமிழ் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் பாண்டியர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன)
Question 48
பொருத்துக
  1. சேரர்             - a) காஞ்சிபுரம்
  2. சோழர்          - b) வஞ்சி
  3. பாண்டியர்    - c) உறையூர்
  4. பல்லவர்         - d) மதுரை
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 48 Explanation: 
(குறிப்பு - சங்ககால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்)
Question 49
மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் எந்த பாண்டிய மன்னனைப் பற்றி குறிப்பிடுகின்றது?
A
சேரன் செங்குட்டுவன்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
நெடியோன்
D
முடத்திருமாறன்
Question 49 Explanation: 
(குறிப்பு - மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகிய புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆவர்.)
Question 50
பொருத்துக
  1. சேரர் -                a) நந்தி
  2. சோழர் -             b) வில் அம்பு
  3. பாண்டியர்-       c) புலி
  4. பல்லவர் -           d) மீன்
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 50 Explanation: 
(குறிப்பு - சேரர்கள் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியிலும், சோழர்கள் தமிழ்நாட்டின் வட பகுதிகளையும், பாண்டியர்கள் தென் தமிழகத்தையும் ஆண்டனர்)
Question 51
பொருத்துக
  1. சேரர் -              a) காவிரிப்பூம்பட்டினம்
  2. சோழர் -           b) மாமல்லபுரம்
  3. பாண்டியர் -     c) முசிறி
  4. பல்லவர் -          d) தமிழ் சங்கம்
A
I-c, II-a, III-d, IV-b
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 51 Explanation: 
(குறிப்பு - கண்ணகிக்கு கோயில் எழுப்பியவர் சேரன் செங்குட்டுவன். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர் கரிகாலச்சோழன். தமிழ்ச் சங்கங்களை நிறுவியவர்கள் பாண்டியர்கள் ஆவர்)
Question 52
கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்பட்டவர்களுள் தவறானது யார்?
A
பாரி
B
பேகன்
C
அதியமான்
D
பெருவழுதி
Question 52 Explanation: 
(குறிப்பு - கடையேழு வள்ளல்கள் என்பவர்கள் பாரி, ஓரி, காரி, நள்ளி, பேகன், ஆய் மற்றும் அதியமான் ஆகியோர் ஆவர். இவர்கள் வேளிர்கள் என்று அழைக்கப்பட்டனர்)
Question 53
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
  1. தமிழகத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் வேளிர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  2. பாரி, பேகன், அதியமான் ஆகியோர் வேளிர் ஆவர்.
  3. வேளிரில் சிலர் மூவேந்தர்களுக்கு துணை நின்று அவர்களுக்காக போர் புரிந்தனர்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 53 Explanation: 
(குறிப்பு - வேளிர்கள் புலவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களின் கொடைத்திறம் இலக்கியங்களில் பெரிதும் பாராட்டப்படுகின்றது)
Question 54
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. சங்ககால தமிழ் சமூகத்தில் சமூகப் பிரிவுகள் வேரூன்ற தொடங்கின.
  2. பாணவர், பரதவர், எயினர், குறவர்,  கானவர், வேட்டுவர், மறவர் போன்ற குழுக்கள் குலம்  அடிப்படையிலான சமூகங்களாக இருந்தன.
  3. வட இந்தியாவில் காணப்பட்ட சாதியமைப்பு தமிழகத்தில் வேரூன்றி இருந்தது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 54 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்தில் வட இந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்புகள் தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக ஐவகை நில சூழல் மற்றும் செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாக மக்கள் காணப்பட்டனர்)
Question 55
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. சங்ககால சமூகத்தினர் ஒரு வரம்புக்கு உட்பட்டே பொருள் நுகர்ச்சியில் ஈடுபட்டனர்.
  2. அரசர்களும்,  குலத்தலைவர்களும், வணிகர்களும் செழிப்பான வாழ்வில் திளைத்தனர்.
  3. சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியில் வறுமை நிலவியது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 55 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்தின் சமூக நிலையில் உயர்நிலையில் இருந்தவர்கள் மட்டுமே, செழிப்பாக இருந்தனர். சாதாரண மக்கள் மத்தியில் வறுமை நிலவியது)
Question 56
சங்ககால செய்யுள்களில் எந்தக் குலத்தைச் சார்ந்த மகளிர் உப்பு விற்றதாக கூறப்படுகிறது?
A
உமணர் குல பெண்கள்
B
வெண்ணிகுல பெண்கள்
C
முல்லை நில பெண்கள்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 56 Explanation: 
(குறிப்பு - சங்ககால பாடல்களில் உமணர் குல பெண்கள் உப்பு விற்றது குறித்து செய்யுள்கள் குறிப்பிடுகின்றன.)
Question 57
சங்ககால பொருளாதாரம் குறித்து கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
  1. சங்க காலப் பொருளாதாரம் பலவகைப்பட்டதாக இருந்தது.
  2. வேளாண்மை கால்நடை வளர்ப்பு மீன் பிடித்தல் என்று மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்றவாறு தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன.
  3. வணிகம் கடல் கடந்து பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 57 Explanation: 
(குறிப்பு - சங்ககாலத்தில் ஐவகை திணைகளுக்கு ஏற்ப தொழில்கள் நடைபெற்று வந்தது. மக்கள் கடல் கடந்து பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்)
Question 58
சங்ககால வேளாண்மை உற்பத்தி குறித்து கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
A
சங்க காலத்தில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
B
தானியங்கள் புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டது.
C
வனப்பகுதிகளில் இடம் விட்டு இடம் வாரி சாகுபடி செய்யும் முறை மாற்றுவேளாண்மை எனப்பட்டது.
D
ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது.
Question 58 Explanation: 
(குறிப்பு - சங்ககால மக்களின் உயிர்வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மையே முதலிடத்தில் இருந்தது. வனப்பகுதிகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது)
Question 59
சங்ககாலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A
பசு, எருமை, காளை உள்ளிட்ட விலங்குகளை வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கினர்.
B
கைவினைப் தயாரிப்புகளும் மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொழில் பொருள்களும் நகர வாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.
C
பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற்கூடங்கள் என்று அழைக்கப்பட்டன.
D
கருப்பு பச்சை நிற மட்கலன்கள் தயாரிக்கப்பட்டன.
Question 59 Explanation: 
(குறிப்பு - சங்ககால மட்கலன்கள் கரிய நிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளை கோடுகள் வரையப்பட்டவை மற்றும் கருப்பு சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன)
Question 60
அகழாய்வில் சங்ககால இரும்பு உருக்கு ஆலைகள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன?
  1. கொடுமணல்
  2. குட்டூர்
  3. அரியலூர்
A
I, II மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 60 Explanation: 
(குறிப்பு - கொடுமணல் மற்றும் குட்டூரில் இரும்பு உருக்கு ஆலைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இரும்பில் கருவிகள் செய்தது குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன)
Question 61
சங்ககால மக்கள் அணிகலன் செய்ய பயன்படுத்தியவைகளுள் எது சரியானது?
  1. செவ்வந்திக்கல்
  2. செம்மணிக்கல்
  3. சுட்ட களிமண்
  4. செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகம்
A
I, II மட்டும் சரி
B
III, IV மட்டும் சரி
C
I, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 61 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகு படுத்திக் கொண்டனர். சுட்ட களிமண் உலோகம் போன்றவற்றை எளியவர்களும், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் நவமணிகளையும் பதித்து செல்வந்தர்களும் பயன்படுத்தினர்)
Question 62
சங்ககாலத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளது?
A
கேரளத்தின் பட்டணம்
B
கொடுமணல்
C
ஆதிச்சநல்லூர்
D
குட்டூர்
Question 62 Explanation: 
(குறிப்பு - தங்கத்தாலான அணிகலன்களை சங்ககால மகளிர் பரவலாக அணிந்தனர். கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன)
Question 63
சங்ககால தங்க அணிகலன்கள் எங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ளது?
  1. ஆதிச்சநல்லூர், கொடுமணல்
  2. அரிக்கமேடு, கீழடி
  3. புலிமான்கோம்பை, புதுக்கோட்டை
A
I மட்டும்
B
II மட்டும்
C
III மட்டும்
D
I, II மட்டும்
Question 63 Explanation: 
(குறிப்பு - ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்களிலும், அரிக்கமேடு, கீழடி, பட்டணம் ஆகிய பழங்கால நகரங்களிலும் சங்ககாலத்து தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன)
Question 64
சங்ககாலத்தில் கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்ததற்கான சான்று எங்கு கிடைத்துள்ளது?
  1. அரிக்கமேடு
  2. குடிக்காடு
  3. கீழடி
A
I மட்டும்
B
II மட்டும்
C
III மட்டும்
D
I, II மட்டும்
Question 64 Explanation: 
(குறிப்பு - சங்ககால மக்கள் கண்ணாடி மணிகளை செய்யும் முறையை கற்றிருந்தனர். அரிக்கமேடு மற்றும் கடலூருக்கு அருகில் உள்ள குடிகாடு என்னும் ஊரிலும் கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.)
Question 65
பொருத்துக
  1. சங்ககால இரும்பு உலை                                    - a) குடிக்காடு
  2. சங்ககால பொன் உருக்கும் உலை                   - b) குட்டூர்
  3. சங்ககால கண்ணாடிமணி தொழிலகம்         - c) கீழடி
  4. சங்ககாலத்து முத்து                                              -  d) கேரள பட்டணம்
A
I-b, II-d, III-a, IV-c
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 65 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்து மக்கள் இரும்பு, தங்கம், கண்ணாடி போன்றவற்றின் பயன்களை நன்கு அறிந்திருந்தனர்.)
Question 66
......... என்ற நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல் உள்ளது.
A
வியன்னா பாபிரஸ்
B
பெரிபிளஸ்
C
மகாவம்சம்
D
அர்த்தசாஸ்திரம்
Question 66 Explanation: 
(குறிப்பு - நெசவுத்தொழில் சங்ககாலத்தின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. பெரிப்ளஸ் என்னும் நூல், சங்க காலத்தில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்து கூறுகிறது)
Question 67
சங்ககால தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகர்களை குறிக்கும் சொல் எது?
A
வியாபாரி
B
நிகமா
C
அப்சல்
D
பண்டன்
Question 67 Explanation: 
(குறிப்பு - சங்ககாலத் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க காலத்தில் பண்டமாற்று முறை மூலம் வணிகம் நடைபெற்று உள்ளது)
Question 68
பொருத்துக
  1. கொடுமணல் -        a) கண்ணாடி மணிகள்
  2. ஆரோவில் -               b) நூற்புக்கதிர்
  3. பொருந்தல்-              c) வெண்கலத்தால் ஆன புலி
  4. பட்டணம் -                 d) வெண்கலக் கிண்ணம்
A
I-c, II-d, III-a, IV-b
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 68 Explanation: 
(குறிப்பு - சங்க கால பொருட்கள் மேற்கண்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ளன)
Question 69
நன்கு வடிவமைக்கப்பட்ட யவனர்களின் கப்பல்__________துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாக அகநானூற்றின் 149வது செய்யுள்  கூறுகிறது.
A
முசிறி
B
கொற்கை
C
கன்னியாகுமாரி
D
காவிரிப்பூம்பட்டினம்
Question 69 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்தில் கடற் பயணம் மேற்கொள்ள, கலம், பரி, ஓடம், தோணி, தெப்பம் நாவாய் போன்றவை பயன்படுத்தப்பட்டது. முசிறி துறைமுகத்தில் இருந்து மிளகை ஏற்றிச் சென்றதாக அகநானூறு செய்யுள்கள் குறிப்பிடுகிறது)
Question 70
யவனர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுள் அல்லாதவர் யார்?
  1. கிரேக்கர்கள்
  2. ரோமானியர்கள்
  3. மேற்கு ஆசிய மக்கள்
  4. சீனர்கள்
A
I, II மட்டும்
B
III, IV மட்டும்
C
I, II, III மட்டும்
D
எல்லாமே சரி
Question 70 Explanation: 
(குறிப்பு - கிரேக்கர்கள் ரோமானியர்கள் மற்றும் மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்டோர் யவனர் என்று அழைக்கப்பட்டனர். யவனர் என்னும் சொல் கிரேக்க பகுதியான அயோனியாவில் இருந்து வந்தது ஆகும்)
Question 71
பொருத்துக
  1. பெர்னிக்கே துறைமுகம் -            a) கிரேக்கத்தின் அயோனியா
  2. குசேர் அல் காதிம் துறைமுகம் - b) தமிழ் பிராமி எழுத்து கொண்ட சுடுமண்
  3. Iகுவான் லுக் பாட்                            - c) ஏழரைக் கிலோ மிளகு பானை
  4. யவனர்                                               - d) பெரும் பத்தன் கல்
A
I-c, II-b, III-d, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 71 Explanation: 
(குறிப்பு - சங்ககாலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்ததற்கான சான்றுகள் மேற்கண்ட இடங்களில் கிடைத்துள்ளன)
Question 72
மேலை நாடுகளோடும்,  கீழை நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்கால துறைமுகமான பட்டணம் எங்கு அமைந்துள்ளது?
A
எர்ணாகுளம் மாவட்டம்
B
திருநெல்வேலி மாவட்டம்
C
சிவகங்கை மாவட்டம்
D
கடப்பா மாவட்டம்
Question 72 Explanation: 
(குறிப்பு - கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் என்ற ஊரை ஒட்டிய வடக்கேகரா என்ற சிற்றூரின் அருகே பட்டணம் அமைந்துள்ளது. மேலை நாடுகளுடன் மற்றும் கீழை நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த பழங்கால துறைமுகம் பட்டணம் ஆகும். இங்கு நடத்திய அகழாய்வில், பல சங்ககால தமிழ் பொருட்கள் கிடைத்துள்ளன)
Question 73
கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
சிவகங்கை மாவட்டம்
B
ராமநாதபுரம் மாவட்டம்
C
புதுக்கோட்டை மாவட்டம்
D
விழுப்புரம் மாவட்டம்
Question 73 Explanation: 
(குறிப்பு - மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சிலைமான் என்ற ஊருக்கு அருகில் கீழடி அமைந்துள்ளது. கீழடி சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இடமாகும். இங்கே பள்ளிசந்தை திடல் என்றழைக்கப்படும் பரந்த தென்னந்தோப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் அகழாய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்)
Question 74
சங்ககாலத்தில் உள்நாட்டு வணிக மையங்களாக திகழ்ந்தவைகளுள் தவறானது எது?
A
காஞ்சிபுரம்
B
உறையூர்
C
கொடுமணல்
D
அழகன்குளம்
Question 74 Explanation: 
(குறிப்பு - சங்ககால உள்நாட்டு வணிக மையங்களாக திகழ்ந்த இடங்கள் காஞ்சிபுரம், உறையூர், கரூர், மதுரை, கொடுமணல் ஆகிய நகரங்கள் ஆகும்.)
Question 75
சங்ககால துறைமுகங்கள் அல்லாதவை எது?
A
அரிக்கமேடு
B
காவிரிப்பூம்பட்டினம்
C
அழகன்குளம்
D
கொடுமணல்
Question 75 Explanation: 
(குறிப்பு - கிழக்கு கடற்கரையில் அமைந்த அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை ஆகிய நகரங்களும், கேரளத்தின் பட்டணம் என்ற நகரும் சங்ககாலத்தில் துறைமுகங்களாக விளங்கியவை ஆகும்)
Question 76
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவைகளுள் சரியானது எது?
  1. படிகத்தால் ஆன காதணிகள்
  2. செங்கல் கட்டுமானங்கள்
  3. உருக்கு ஆலை
  4. செங்கல் தொட்டி
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
I, II, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 76 Explanation: 
(குறிப்பு - கீழடி அகழ்வாராய்ச்சியில் மேற்கண்ட அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மண்கலம் ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி போன்றவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 77
சங்க கால வழிபாட்டு முறை குறித்து கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. ஆவி வழிபாடு, மூதாதையர் வழிபாடு, வீரர்கள் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு போன்றவை சங்க காலத்தில் இருந்தன.
  2. ஐந்திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுள்களை தொல்காப்பியம் சுட்டுகிறது.
  3. இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட அணங்கு குறித்து சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 77 Explanation: 
(குறிப்பு - சங்ககால மக்கள் வழிபாட்டு முறைகளிலும் பன்மைத்துவம் காணப்படுகிறது. ஐவகை திணைகளுக்கும் உரிய வழிபாட்டு முறைகளை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. எனினும் மக்கள் இறந்தவர்களையும், வீரர்களையும், இயற்கையையும் வழிபட்டு வந்துள்ளனர்)
Question 78
பொருத்துக
  1. குறிஞ்சி                 - a) வருணன்
  2. முல்லை                 - b) முருகன்
  3. மருதம்                   - c) திருமால்
  4. நெய்தல்                 - d) இந்திரன்
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-d, III-a, IV-c
D
I-a, II-c, III-b, IV-d
Question 78 Explanation: 
(குறிப்பு - ஐந்து திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுள்களை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு கொற்றவை என தொல்காப்பியர் கூறுகிறார்)
Question 79
ஐம்பெரும் காப்பியங்கள் அல்லாதவை எவை?
  1. சிலப்பதிகாரம், குண்டலகேசி
  2. மணிமேகலை, சீவக சிந்தாமணி
  3. வளையாபதி, பட்டினப்பாலை
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 79 Explanation: 
(குறிப்பு - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும். காப்பியங்கள் என்பவை கவிதை நயம் உடைய செய்யுள் வடிவிலான நீண்ட இலக்கிய படைப்புகள் ஆகும்)
Question 80
பட்டினப்பாலை என்ற நெடிய பாடலில் குறிக்கப்படும் துறைமுகம் எது?
A
காவிரிபூம்பட்டினம்
B
கொற்கை
C
முசிறி
D
கன்னியாகுமரி
Question 80 Explanation: 
(குறிப்பு - பட்டினப்பாலை என்னும் நூலை எழுதியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்ககாலப் புலவர் ஆவார். இதில் காவிரிப்பூம்பட்டினம் என்னும் துறைமுகம் குறித்த நெடிய பாடலை எழுதியுள்ளார்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 80 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!