Online TestTnpsc Exam
		
	
	
தேசிய சின்னங்கள் – Online Test 6th Social Science Lesson 13 Questions in Tamil
தேசிய சின்னங்கள்- Online Test 6th Social Science Lesson 13 Questions in Tamil
Congratulations - you have completed தேசிய சின்னங்கள்- Online Test 6th Social Science Lesson 13 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
- கூற்று 1: நீர்வாழ் பாலூட்டியான ஓங்கிலின் (டால்பின்) நீண்ட வாயும் கரியால் முதலையின் வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.
 - கூற்று 2: வெளவால்களை போலவே ஓங்கில் களும் மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.
 
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 1 Explanation: 
 (குறிப்பு: கங்கை நதியில் ஆற்று ஓங்கில்கள் காணப்படுகின்றன.)
Question 2  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
"கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்” என்று பாடியவர் பாரதியார்.  | |
2,525 கி.மீ தொலைவுக்குப் பாயும் இந்தியாவின் நீளமான நதி கங்கை.  | |
பிரம்மபுத்திரா 4,838 கி.மீ நீளமுடையது.  | |
இமாம்பசந்த், முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ஆகும்.  | 
Question 2 Explanation: 
 (குறிப்பு: பிரம்மபுத்திரா 3,848 கி.மீ நீளமுடையது.)
Question 3  | 
உலகின் நீளமான நஞ்சு கொண்ட பாம்பு எத்தனை அடி நீளம் வளரும் ?
10 அடி  | |
12 அடி  | |
16 அடி  | |
18 அடி  | 
Question 3 Explanation: 
 (குறிப்பு: நஞ்சு கொண்ட பாம்புகளில் உலகிலேயே நீளமானது கருநாகம். உலகிலேயே கூடு கட்டி, அதில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை இது.)
Question 4  | 
பொருத்துக.(இயற்கை தேசியச் சின்னங்கள்)
- ஆலமரம் i) 1950
 - மயில் ii) 1973
 - புலி iii) 1963
 - கங்கை ஆறு iv) 2008
 - யானை v) 2010
 
i   	ii   	iii 	iv  	v  | |
ii  	v 	i 	iii 	iv  | |
i 	iv 	iii  	v 	ii  | |
i  	iii 	ii 	iv  	v  | 
Question 5  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு.
ஆற்று ஓங்கில் - 2010  | |
லாக்டோ பேசில்லஸ் – 2014  | |
மாம்பழம் – 1950  | |
தாமரை – 1950  | 
Question 5 Explanation: 
 (குறிப்பு: லாக்டோ பேசில்லஸ் - 2012)
Question 6  | 
உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா எத்தனை சதவீதம் கொண்டுள்ளது?
50%   	  | |
60%     | |
70%     | |
80%  | 
Question 6 Explanation: 
 (குறிப்பு: பூனை இனத்தில் மிகப்பெரியது புலி.)
Question 7  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
பெருமையின் சின்னமான ஆலமரம் மருத்துவ குணம் கொண்டது.  | |
தோகையைக் கொண்ட பறவை மயில் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.  | |
ஆற்று ஓங்கில் தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவினை பாதுகாக்கிறது.  | |
லாக்டோ பேசில்லஸ் ஒரு தோழமை பாக்டீரியா.  | 
Question 7 Explanation: 
 (குறிப்பு: ஆற்று ஓங்கில் தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவின் நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. இது அருகி வரும் உயிரினமாக உள்ளது.)
Question 8  | 
தமிழ்நாட்டில் ___________ மாவட்டத்தில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
திருச்சி  | |
சிவகங்கை  | |
தஞ்சாவூர்  | |
புதுக்கோட்டை  | 
Question 8 Explanation: 
 (குறிப்பு: புதுக்கோட்டை - விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. அழகும் கம்பீரமும் நிறைந்த மயில்கள் நாடு முழுவதும் காணப்படுவதே, அது தேசிய பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.)
Question 9  | 
சமவெளிகளில் விளைவிக்கப்படும் மாம்பழம் எந்த வைட்டமின்களை அதிக அளவில் கொண்டுள்ளது ?
- வைட்டமின் ஏ
 - வைட்டமின் பி
 - வைட்டமின் சி
 - வைட்டமின் டி
 
1, 2, 4     | |
2 , 3   	  | |
2, 3, 4  	  | |
1, 3, 4  | 
Question 10  | 
- கூற்று 1: ஹோஃபிபாகஸ் ஹானா உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு.
 - கூற்று 2: இவை இந்தியாவின் மழைக்காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றன.
 
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 11  | 
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்களில் தவறானதை தேர்ந்தெடு.
மாநில விலங்கு – வரையாடு  | |
மாநிலப் பறவை - மரகதப் புறா  | |
மாநில மலர் – செங்காந்தள் மலர்  | |
மாநில மரம் – ஆலமரம்  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு: மாநில மரம் - பனை மரம்)
Question 12  | 
தேசியக் கொடி குறித்த செய்திகளில் தவறானதை தேர்ந்தெடு
மேல் பகுதியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.  | |
கீழ்ப்பகுதியில் உள்ள பச்சை நிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.  | |
இடையில் உள்ள வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.  | |
நடுவில் வெளிர்நீலநிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.  | 
Question 12 Explanation: 
 (குறிப்பு: நடுவில் கருநீலநிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.)
Question 13  | 
தேசியக் கொடியின் நீள, அகலம் ________ என்ற விகிதத்தில் அமைந்துள்ளது.
2:3    | |
3:2     | |
2:4     | |
4:2  | 
Question 13 Explanation: 
 (குறிப்பு: நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டுள்ளது.)
Question 14  | 
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு  | |
வெங்கையா நாயுடு  | |
பிங்காலி வெங்கையா  | |
M.N. ராய்  | 
Question 14 Explanation: 
 (குறிப்பு: பிங்காலி வெங்கையா ஆந்திராவைச் சேர்ந்தவர்.)
Question 15  | 
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி எங்கு நெய்யப்பட்டது?
குஜராத்  | |
புனே  | |
கொல்கத்தா  | |
தமிழ்நாடு  | 
Question 15 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) முதல் தேசிய கொடி நெய்யப்பட்டது. இக்கொடியை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.)
Question 16  | 
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி __________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
சென்னை கோட்டை  | |
டெல்லி  | |
சாரநாத்  | |
கொல்கத்தா  | 
Question 16 Explanation: 
 (குறிப்பு: முதல் தேசியக் கொடி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.)
Question 17  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
திருப்பூர்க் குமரன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.  | |
1932 இல் காந்தியடிகளைக் கைது செய்ததைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன.  | |
திருப்பூர்க் குமரன் ‘கொடி காத்த குமரன்’ என அழைக்கப்படுகிறார்.  | |
திருப்பூர்க் குமரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதளித்து சிறப்பித்தது.  | 
Question 17 Explanation: 
 (குறிப்பு : திருப்பூர்க் குமரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.)
Question 18  | 
சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நவம்பர் 26, 1950  | |
ஜனவரி 26, 1950  | |
ஆகஸ்ட் 15, 1947  | |
நவம்பர் 26, 1947  | 
Question 18 Explanation: 
 (குறிப்பு: தேசிய இலச்சினையின் அடிப்பகுதியில் 'சத்யமேவ ஜெயதே' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் 'வாய்மையே வெல்லும்' என்பதாகும்.)
Question 19  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
 - மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்டவடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 - அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.
 - அடிப்பகுதியில் விலங்கு உருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
1 , 3, 4 சரி  | |
1, 2, 3 சரி  | 
Question 19 Explanation: 
 (குறிப்பு: தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவு சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.)
Question 20  | 
அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது எங்கு பாதுகாக்கப்படுகிறது?
புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்  | |
லண்டன் அருங்காட்சியகம்  | |
சாரநாத் அருங்காட்சியகம்  | |
டெல்லி அருங்காட்சியகம்  | 
Question 21  | 
இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘ஜன கண மன…’ பாடலின் இந்தி மொழியாக்கம் எப்போது இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நவம்பர் 26 1949  | |
டிசம்பர் 24 1949  | |
ஜனவரி 24 1950  | |
ஜனவரி 26 1950  | 
Question 21 Explanation: 
 (குறிப்பு: தேசிய கீதம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.)
Question 22  | 
எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூரின் ‘ஜன கண மன…’ பாடல் முதன்முதலாக பாடப்பட்டது?
லாகூர்  | |
சென்னை  | |
அகமதாபாத்  | |
கொல்கத்தா  | 
Question 22 Explanation: 
 (குறிப்பு: 1911, டிசம்பர் 27 ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது.)
Question 23  | 
இந்திய தேசிய கீதத்தை முழுமையாக பாட / இசைக்க எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு
62 நிமிடங்கள்  | |
62 வினாடிகள்  | |
52 வினாடிகள்  | |
52 நிமிடங்கள்  | 
Question 23 Explanation: 
 (குறிப்பு: தேசிய கீதம் பாடும் போது பின்பற்ற வேண்டியன:
பாடும்போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
பொருள் புரிந்து சரியாக பாட வேண்டும்.)
Question 24  | 
“வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்களித்தது. இதன் காரணமாக, தேசிய கீதத்துக்கு இணையான தேசிய பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது." என்று அறிவித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு  | |
அம்பேத்கர்  | |
காந்தி  | |
இராஜேந்திர பிரசாத்  | 
Question 24 Explanation: 
 (குறிப்பு: இராஜேந்திர பிரசாத் என்பவர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத் தலைவரும் ஆவார். தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.)
Question 25  | 
"இந்தியா எனது தாய் நாடு ...” எனத் தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியை __________ என்பவர் தெலுங்கில் எழுதினார்.
பிங்காலி வெங்கையா  | |
பக்கிம் சந்திர சட்டர்ஜி  | |
பிதிமாரி வெங்கட சுப்பாராவ்  | |
மேக்னாத் சாகா  | 
Question 26  | 
பாலிலிருந்து தயிர் உருவாக __________ எனும் நுண்ணுயிரி பயன்படுகிறது.
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்  | |
சால்மோனெல்லா  | |
ஸ்டெபைலோகாக்கஸ்  | |
லாக்டோபேசில்லஸ் டெல்புருக்கி  | 
Question 26 Explanation: 
 (குறிப்பு: இந்த பாக்டீரியா வேதிவினைபுரிந்து பாலில் இருக்கும் புரதத்தை மாற்றுவதால் தயிர் கிடைக்கிறது. தயிர் செரிமானத்துக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும், குளிர்ச்சி தருவதற்கும் அறியப்பட்டது.)
Question 27  | 
இந்திய ரூபாய்க்கான சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?
டி.ராஜசேகரன்  | |
ரா. உதயவேல்  | |
டி. உதயகுமார்  | |
க.ராஜவேல்  | 
Question 27 Explanation: 
 (குறிப்பு: இந்திய ரூபாய்க்கான சின்னம் ₹. இந்தச் சின்னம் 2010 ல் வடிவமைக்கப்பட்டது.)
Question 28  | 
____________நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு ‘ருபியா’ என்று பெயர்.
12 ம் நூற்றாண்டு  | |
14 ம் நூற்றாண்டு  | |
15 ம் நூற்றாண்டு  | |
16 ம் நூற்றாண்டு  | 
Question 28 Explanation: 
 (குறிப்பு: ருபியா என்ற பெயரே ரூபாய் என்று மருவியுள்ளது.)
Question 29  | 
யாருடைய ஆட்சிக்காலத்தில் சக ஆண்டு முறை தொடங்கியது.?
அசோகர்  | |
அக்பர்  | |
ஷெர்ஷா சூரி  | |
கனிஷ்கர்  | 
Question 29 Explanation: 
 (குறிப்பு: கி.பி. (பொ.ஆ.) 78ல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகல்-இரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது.லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும்.)
Question 30  | 
பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் _________ முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1950 மார்ச் 22  | |
1950 மே 22  | |
1957 மார்ச் 22  | |
1957 மே 22  | 
Question 30 Explanation: 
 (குறிப்பு: சக ஆண்டு முறையையே தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது.)
Question 31  | 
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலை பாடியவர்
பக்கிம் சந்திர சட்டர்ஜி  | |
ரவீந்திரநாத் தாகூர்  | |
மகாத்மா காந்தி  | |
சரோஜினி நாயுடு  | 
Question 32  | 
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு உதித்த நாள்
ஜனவரி 26  | |
நவம்பர் 26  | |
ஜனவரி 27  | |
ஆகஸ்ட் 15  | 
Question 32 Explanation: 
 (குறிப்பு: ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் இந்திய நாடு விடுதலை பெற்ற நாள் ஆகஸ்ட் 15.)
Question 33  | 
நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே’ என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையை பெற்றவர்
எம்.ஸ்.சுப்புலட்சுமி  | |
ஜானகி அம்மாள்  | |
டி.கே.பட்டம்மாள்  | |
சுசீலா  | 
Question 33 Explanation: 
 (குறிப்பு: சுதந்திர நாள் அன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது முக்கிய நிகழ்வு ஆகும்.)
Question 34  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளே, குடியரசு நாள்.  | |
1947 லேயே நாடு விடுதலை பெற்றுவிட்டாலும், அதற்குப் பிறகும் பிரிட்டன் அரசியே இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.  | |
குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்.  | |
குடியரசு நாளில் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்.  | 
Question 34 Explanation: 
 (குறிப்பு: குடியரசு நாளில், குடியரசுத் தலைவர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்.)
Question 35  | 
'பாசறைக்கு திரும்புதல்’ என்ற விழா நடைபெறும் நாள்
ஜனவரி 27  | |
ஜனவரி 28  | |
ஜனவரி 29  | |
ஜனவரி 30  | 
Question 35 Explanation: 
 (குறிப்பு: ஜனவரி 29 அன்று தரைப்படை, கடற்படை, விமானப் படையைச் சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசுத் தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.)
Question 36  | 
காந்தியின் பிறந்த நாளைச் ‘சர்வதேச அகிம்சை நாள்’ ஆக எந்த ஆண்டு முதல் ஐ.நா. சபை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது?
2005     | |
2006     | |
2007     | |
2008  | 
Question 36 Explanation: 
 (குறிப்பு: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, தேசிய நாட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.)
Question 37  | 
இந்திய அரசியலமைப்புச் சபை எப்போது மூவண்ணக் கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது?
ஜுன் 22, 1947  | |
ஜுன் 27, 1947  | |
ஜுலை 27, 1947  | |
ஜுலை 22, 1947  | 
Question 38  | 
ஒரு காட்டின் மைய அச்சாக விளங்கும் உயிரினம்______________
யானை
  | |
சிங்கம்
  | |
புலி     
  | |
கரடி  | 
Question 39  | 
கூற்று 1: தாமரையில் பல வகைகள் இருந்தாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தாமரையை மட்டுமே செந்தாமரை என்கிறோம். 
கூற்று 2: இது தனித்தன்மை மிகுந்த வடிவமைப்பைக் கொண்டதாகும். 
கூற்று 1 சரி, 2 தவறு       
  | |
கூற்று 2 சரி, 1 தவறு         
  | |
இரண்டும் சரி           
  | |
இரண்டும் தவறு  | 
Question 40  | 
குளிருக்கு நடுங்கிய மயிலுக்கு தன் போர்வையைக் கொடையாக அளித்த மன்னன்…………..
பாரி
  | |
பேகன்     
  | |
ஓரி
  | |
காரி
  | 
Question 40 Explanation: 
 விளக்கம்: மயில் தோகை விரித்து ஆடுவதைக் கண்ட குறுநில மன்னன் ஒருவர் மயில் குளிருக்கு நடுங்குகிறதோ எனக் கருதி தன் போரிவையைக் கொடையாக அளித்தார். அவர் பெருமை வாய்ந்த சங்ககால தமிழகத்தைச் சேர்ந்தவரும், கடையெழு வள்ளல்களுல் மதிப்பிற்குரிய ஒருவருமான பேகன் என்னும் குறுநில மன்னன் ஆவார். 
Question 41  | 
உலக சாதனை படைத்த ஆலமரம்___________இல் அமைந்துள்ளது. 
கொல்கத்தா      
  | |
சென்னை
  | |
மும்பை
  | |
புதுடெல்லி
  | 
Question 41 Explanation: 
 விளக்கம்: கொல்கத்தாவின் அவுரா பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தாவரவியல் பூங்காவில் உலக சாதனை படைத்த ஆலமரம் அமைந்துள்ளது. 
Question 42  | 
காட்டில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட உயிரினம்_____________
யானை
  | |
புலி    
  | |
சிங்கம்
  | |
கங்காரு  | 
Question 43  | 
தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்_____________
யானை    
  | |
புலி
  | |
சிங்கம்
  | |
காண்டாமிருகம்
  | 
Question 43 Explanation: 
 விளக்கம்: யானை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2010. இது ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
Question 44  | 
மாம்பழம் பெரும்பாலும்___________இல் விளைவிக்கப்படுகிறது. 
மலைப்பிரதேசங்கள்
  | |
மழைப்பிரதேசங்கள்
  | |
சமவெளிகள்
  | |
வெப்பமண்டலக் காடுகள்
  | 
Question 44 Explanation: 
 விளக்கம்: மாம்பழம் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1950. இதில் வைட்டமின் ஏ,சி,டி யை அதிக அளவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளியில் விளைவிக்கப்படுகிறது. 
Question 45  | 
இந்திய அரசு கொடிகாத்த குமரனுக்கு 2004 இல்_____________ரூபாயில் அஞ்சல் தலை வெளியிட்டது. 
1 ரூபாய்
  | |
10 ரூபாய்
  | |
5 ரூபாய்     
  | |
100 பைசா
  | 
Question 45 Explanation: 
 விளக்கம்: கொடிகாத்த குமரன் என்றழைக்கப்படும் திருப்பூர் குமரனின் நூற்றாண்டு விழாவின்போது(2004 இல்) இந்திய அரசு அவருக்கு 500 பைசாவில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.  
Question 46  | 
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குவது____________
தேசிய பாடல்
  | |
தேசிய கீதம்   
  | |
தமிழ்த்தாய் வாழ்த்து
  | |
வந்தே மாதரம் பாடல்
  | 
Question 46 Explanation: 
 விளக்கம்: ஜன கண மன……,நமது தேசிய கீதமாகும். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 46 questions to complete.  
      
Sir.. check the question no 31.. Is this correct answer?
You scored 31 out of 46. Your performance has been rated as Not bad!
46/46
Thank you sir.