Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil

தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil

Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பல்லவ அரசர்கள் ஆண்ட சமகாலத்தில் வடக்கே ஆட்சிபுரிந்தவர்
A
அசோகர்
B
அக்பர்
C
சமுத்திரகுப்தர்
D
ஹர்ஷர்
Question 1 Explanation: 
(குறிப்பு: பல்லவர்களின் ஆட்சிப்பகுதி சோழ, பாண்டிய அரசுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. சோழர்களும், பாண்டியர்களும் அப்போது தங்கள் பகுதிசார் ஆற்றுச்சமவெளிப் பகுதிகளில் ஆட்சி செய்யும் அரச வம்சங்களாக உருவாகிக் கொண்டிருந்தனர்.)
Question 2
_________ பல்லவ அரசின் மையப் பகுதியாக இருந்தது.
A
மதுரை
B
தஞ்சாவூர்
C
திருவனந்தபுரம்
D
தொண்டை மண்டலம்
Question 2 Explanation: 
(குறிப்பு: இப்பெரிய அரசியல் பிராந்தியம் தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்ககையும் கொண்டிருந்தது.)
Question 3
காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை _________ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர்.
A
5, 6
B
6, 7
C
7, 8
D
6, 8
Question 3 Explanation: 
(குறிப்பு: சீன, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர்.)
Question 4
தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் _________ன் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.
A
சாளுக்கியர்கள்
B
சாதவாகனர்கள்
C
சந்தேலர்கள்
D
குஷாணர்கள்
Question 4 Explanation: 
(குறிப்பு: பல்லவர்களின் வரலாற்றை அறிய கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், அயலவர் குறிப்புகள் ஆகியவை சான்றுகளாக அமைந்துள்ளன.)
Question 5
__________ களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
சிம்ம விஷ்ணு
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 5 Explanation: 
(குறிப்பு: சிம்மவிஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மனின் மகன் ஆவார். கி.பி (பொ.ஆ.மு) 550 வாக்கில் களப்பிரர்களை அழித்தார்.)
Question 6
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. சிம்ம விஷ்ணுவை அடுத்து அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார்.
  2. முதலாம் மகேந்திரவர்மனை அடுத்து அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  3. கடைசி பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
A
அனைத்தும்
B
2, 3
C
1, 3
D
3 மட்டும்
Question 6 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர்.)
Question 7
  • கூற்று 1: முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என பிரபலமாக அறியப்பட்டார்.
  • கூற்று 2: பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 7 Explanation: 
(குறிப்பு: பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தி அதன் வெற்றிக்கு பின்னர் மனமாற்றம் பெற்று சிவபக்தராக மாறினார் என பெரிய புராணம் கூறுகிறது.)
Question 8
சைவத் துறவி அப்பரால் சைவத்தை தழுவிய பல்லவ அரசர்
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
சிம்ம விஷ்ணு
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 8 Explanation: 
(குறிப்பு: மகேந்திரவர்மன் தொடக்கக் காலத்தில் சமண சமயத்தை பின்பற்றினார்.)
Question 9
மகேந்திரவர்மன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார்.
B
மத்தவிலாச பிரகசனம் உட்பட சில நாடகங்களை தெலுங்கில் எழுதியுள்ளார்.
C
மத்தவிலாச பிரகசனம் பெளத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
D
இவரது ஆட்சிக் காலத்தில் வாதாபியைத் தலைநகராக கொண்ட மேலை சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன.
Question 9 Explanation: 
(குறிப்பு: மகேந்திரவர்மன் அறிமுகம் செய்த புதிய கட்டடக்கலை பாணி ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது.)
Question 10
சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி தீக்கிரையாக்கியவர்
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 10 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி) கைப்பற்றியதாக தெரிகிறது. அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் இதற்கு பழிவாங்கும் வகையில் இரண்டாம் புலிகேசியை கொன்று வாதாபியை தீக்கிரையாக்கினார்.)
Question 11
சீன நாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்ற மற்றும் சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பி வைத்த பல்லவ அரசர்
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
இரண்டாம் நந்திவர்மன்
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 11 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.)
Question 12
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் __________.
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 12 Explanation: 
(குறிப்பு: ராஜசிம்மன் காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது.)
Question 13
கீழ்க்கண்டவற்றுள் சிம்ம விஷ்ணுவுக்கு வழங்கும் சிறப்பு பட்டம் எது?
A
குணபாரன்
B
ராஜசிம்மன்
C
மாமல்லன்
D
அவனிசிம்மர்
Question 14
முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கும் பட்டங்களில் தவறானது எது?
A
சங்கீரணஜதி
B
குணபாரன்
C
வாதாபி கொண்டான்
D
விசித்திரசித்தன்
Question 14 Explanation: 
(குறிப்பு: மத்தவிலாசன், சித்திரகாரப் புலி ஆகியவை மகேந்திரவர்மனுக்கு வழங்கும் இதர பட்டங்கள் ஆகும்.)
Question 15
மாமல்லன், வாதாபி கொண்டான் என அழைக்கப்படும் பல்லவ அரசர்
A
இரண்டாம் சிம்மவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 16
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு
A
1982
B
1983
C
1984
D
1986
Question 16 Explanation: 
(குறிப்பு: மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனையக் கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக் கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.)
Question 17
பல்லவர் கால கட்டடக்கலையின் வகைகளில் சரியான இணை எது?
  1. பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
  2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
  3. கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன்பாணி, நந்திவர்மன் பாணி
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 18
மகேந்திரவர்மன் பாணியில் அமைந்துள்ள குகைக் கோவில்களில் தவறானது எது?
A
மாமண்டூர்
B
தளவானூர்
C
வல்லம்
D
வராகர் மண்டபம்
Question 18 Explanation: 
(குறிப்பு: மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் மகேந்திரவர்மன் பாணியில் அமைந்துள்ளன.)
Question 19
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள் ஐந்தும் ஐந்து வகையான கோவில் கட்டடபாணியை உணர்த்துகின்றன.
B
பஞ்ச பாண்டவர் ரதத்தின் ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டதால் ஒற்றைக் கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.
C
பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகின் பெரிய, செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் இரண்டாவது இடத்திலுள்ளது.
D
மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் பாணியில் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும்.
Question 19 Explanation: 
(குறிப்பு: பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகின் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.)
Question 20
ராஜசிம்மன் பாணி குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  2. இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும்.
  3. கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
A
அனைத்தும்
B
2 மட்டும்
C
1, 3
D
1 மட்டும்
Question 20 Explanation: 
(குறிப்பு: ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார்.)
Question 21
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் கீழ்க்கண்ட எந்த பாணியில் கட்டப்பட்டது?
A
மகேந்திரவர்மன் பாணி
B
மாமல்லன் பாணி
C
ராஜசிம்மன் பாணி
D
நந்திவர்மன் பாணி
Question 21 Explanation: 
(குறிப்பு: பல்லவ கோவில் கட்டடக் கலையின் இறுதிக்கட்டம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.)
Question 22
  • கூற்று 1: பல்லவ அரசர்கள் பெளத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.
  • கூற்று 2: பல்லவர்கள் காலத்தில் பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும் புதிய வடிவிலான சைவம், வைணவம் ஆகியவற்றைப் போதித்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 22 Explanation: 
(குறிப்பு: சைவம், வைணவத்தை சில பல்லவ அரசர்கள் ஆதரித்தனர். அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர்.)
Question 23
  • கூற்று 1: பக்தி மார்க்கத்தை போதிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்லவர் கால சைவ, வைணவ இயக்கங்கள் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது.
  • கூற்று 2: சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 23 Explanation: 
(குறிப்பு: பல்லவர் காலத்தில் சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.)
Question 24
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
நியாயபாஷ்யா - வாத்ஸ்யாயர்
B
தசகுமார சரிதம் – தண்டின்
C
கிரதார்ஜுனியம் – சிம்மவிஷ்ணு
D
பாரத வெண்பா – பெருந்தேவனார்
Question 24 Explanation: 
(குறிப்பு: பாரவி என்பவர் கிரதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.)
Question 25
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
நியாயபாஷ்யா நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
B
தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
C
சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார்.
D
சமஸ்கிருத அறிஞரான பாரவி மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தார்.
Question 25 Explanation: 
(குறிப்பு: சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார்.)
Question 26
மகாபாரதத்தை, பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்த பெருந்தேவனாரை ஆதரித்தவர்
A
சிம்ம விஷ்ணு
B
மகேந்திரவர்மன்
C
இரண்டாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 26 Explanation: 
(குறிப்பு: நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும்.)
Question 27
புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?
A
சிம்ம விஷ்ணு
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
இரண்டாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 27 Explanation: 
(குறிப்பு: குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.)
Question 28
சாளுக்கியர்களின் எல்லைகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. வடக்கு - ஹர்ஷரின் பேரரசு
  2. தெற்கு - பல்லவ நாடு
  3. கிழக்கு – கலிங்கம்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 28 Explanation: 
(குறிப்பு: சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபி (பதாமி). சாளுக்கியர்களில் மூன்று வெவ்வேறு வம்சங்கள் இருந்தன. வாதாபிச் சாளுக்கியர்கள் வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்) கல்யாணி சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)
Question 29
முதலாம் புலிகேசி_________ ஆண்டு வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்.
A
கி.பி 435
B
கி.பி 545
C
கி.பி 543
D
கி.பி 554
Question 29 Explanation: 
(குறிப்பு: முதலாம் புலிகேசி, பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார்.)
Question 30
அய்கோல் கல்வெட்டை எழுதிய ரவிகீர்த்தி யாருடைய அவைக்களப் புலவர்?
A
முதலாம் புலிகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 30 Explanation: 
(குறிப்பு: அய்கோல் கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.)
Question 31
அய்கோல் கல்வெட்டு அமைந்துள்ள மாநிலம் _________.
A
மஹாராஷ்டிரா
B
ஆந்திரா
C
தெலுங்கானா
D
கர்நாடகா
Question 31 Explanation: 
(குறிப்பு: அய்கோல் கல்வெட்டு அய்கோலிலுள்ள ( பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது.)
Question 32
கொங்கணக் கடற்கரை பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அரசர்
A
இரண்டாம் கீர்த்திவர்மன்
B
முதலாம் கீர்த்திவர்மன்
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
முதலாம் சோமேஸ்வரர்
Question 32 Explanation: 
(குறிப்பு: முதலாம் கீர்த்திவர்மன், முதலாம் புலிகேசியின் மகனாவார்.)
Question 33
பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார்?
A
முதலாம் புலிகேசி
B
இரண்டாம் புலிகேசி
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 33 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமைபெற்ற அரசராவார். குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார்.)
Question 34
வட இந்திய அரசர் ஹர்ஷருக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே _________ எல்லையாக வரையறை செய்யப்பட்டது.
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
நர்மதை
D
தபதி
Question 34 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார்.)
Question 35
_________ காலப்பகுதியில் இரண்டாம் புலிகேசி வெங்கி அரசைக் கைப்பற்றினார்.
A
கி.பி 524
B
கி.பி 642
C
கி.பி 624
D
கி.பி 674
Question 35 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி தனது சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வெங்கியை வழங்கினார். விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்.)
Question 36
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித் தோன்றல்கள் ஆவர்.
B
இரண்டாம் தைலப்பர் என்பவர் கி.பி 873 இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்.
C
முதலாம் தைலப்பருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
D
முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
Question 36 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் தைலப்பர் என்பவர் கி.பி 973 இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்தார்.)
Question 37
பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் _________ன் காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கே காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் வந்தது.
A
இரண்டாம் புலிகேசி
B
முதலாம் சோமேஸ்வரன்
C
ஆறாம் விக்கிரமாதித்யர்
D
இரண்டாம் தைலப்பர்
Question 37 Explanation: 
(குறிப்பு: ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தென்னிந்தியாவிலிருந்த இரண்டு பேரரசுகளான மேலைச் சாளுக்கியர்களும் தஞ்சாவூர்ச் சோழர்களும் வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாக போரிட்டுக் கொண்டனர்.)
Question 38
வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது?
A
பல்லவர்கள்
B
ராஷ்டிரக் கூடர்கள்
C
சாளுக்கியர்கள்
D
சந்தேலர்கள்
Question 38 Explanation: 
(குறிப்பு: வெசாரா பாணி தென் இந்திய (திராவிட) மற்றும் வடஇந்திய (நாகாரா) கட்டடப்பாணிகளின் கலப்பு ஆகும்.)
Question 39
சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்கள் காணப்படும் இடங்களில் தவறானது எது?
A
அய்கோல்
B
வாதாபி
C
பட்டடக்கல்
D
பகலி
Question 39 Explanation: 
(குறிப்பு: சாளுக்கியர்கள் சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினர். அவர்கள் கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.)
Question 40
வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த _______ என்பவரால் கட்டப்பட்டது.
A
இரண்டாம் புலிகேசி
B
மங்களேசன்
C
ஆறாம் விக்கிரமாதித்யர்
D
இரண்டாம் தைலப்பர்
Question 40 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு வாதாபியில் உள்ளது.)
Question 41
  • கூற்று 1: வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணுகோவில்கள், பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருபாக்ஷா கோவில் ஆகியன சாளுக்கியர் காலத்திய கற்களால் கட்டப்பட்ட கோவில்களாகும்.
  • கூற்று 2: சாளுக்கியரின் குகைக் கோவில்கள் அஜந்தா, எல்லோரா நாசிக் ஆகிய இடங்களில் உள்ளன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 42
கீழ்க்கண்டவற்றுள் மேலைசாளுக்கியரின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்கும் கோயில்கள் எவை?
  1. லக்கண்டி – காசி விஸ்வேஸ்வரர் கோவில்
  2. குருவெட்டி - மல்லிகார்ஜூனா கோவில்
  3. பகலி - கள்ளேஸ்வரர் கோவில்
  4. இட்டகி - மகாதேவா கோவில்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3
D
1, 3, 4
Question 43
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர்.
  2. அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தை சேர்ந்தவை.
  3. பாரசீக தூதுக்குழுவை முதலாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
A
1 மட்டும் தவறு
B
2, 3 தவறு
C
3 மட்டும் தவறு
D
2 மட்டும் தவறு
Question 43 Explanation: 
(குறிப்பு: பாரசீக தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.)
Question 44
பட்டடக் கல்லிலுள்ள விருப்பாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் _________ பாணியிலும், பாப்பநாதர் கோவில்__________ பாணியிலும் அமைந்துள்ளன.
A
நாகரா பாணி, திராவிட பாணி
B
திராவிட பாணி, நாகரா பாணி
C
ராஜசிம்மண் பாணி, திராவிட பாணி
D
திராவிட பாணி, ராஜசிம்மன் பாணி
Question 44 Explanation: 
(குறிப்பு: விருபாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.)
Question 45
பட்டடக்கல் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
பட்டடக்கல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னம் ஆகும்.
B
பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
C
இங்கு 10 கோவில்கள் உள்ளன.
D
இங்குள்ள கோவில்களில் நான்கு திராவிட பாணியிலும் ஆறு வடஇந்திய பாணியான நாகாரா பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
Question 45 Explanation: 
(குறிப்பு: இங்குள்ள கோவில்களில் ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் நான்கு வடஇந்திய பாணியான நாகாரா பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.)
Question 46
ராஷ்டிரக் கூடர்கள் தக்காணத்தையும், தூரத் தெற்குப் பகுதிகளையும், கங்கை சமவெளிப்பகுதிகளையும் எந்தக் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தனர்?
A
6 - 8 நூற்றாண்டு
B
8 - 10 நூற்றாண்டு
C
7 – 9 நூற்றாண்டு
D
6 - 9 நூற்றாண்டு
Question 46 Explanation: 
(குறிப்பு: ராஷ்டிரக் கூடர்கள் பிறப்பால் கன்னடர்களாவர். அவர்களின் தாய்மொழி கன்னடம் ஆகும்.)
Question 47
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
A
தந்திதுர்க்கர்
B
முதலாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
இரண்டாம் கிருஷ்ணர்
Question 47 Explanation: 
(குறிப்பு: முதலாம் கிருஷ்ணர் தந்தி துர்க்கரை அடுத்துப் பதவி ஏற்றார். அவர் ராஷ்டிரகூடர் ஆட்சியை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தினார்.)
Question 48
மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கிய ராஷ்டிரக்கூட அரசர்
A
தந்திதுர்க்கர்
B
முதலாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
இரண்டாம் கிருஷ்ணர்
Question 48 Explanation: 
(குறிப்பு: அமோகவர்க்ஷர், ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் ஆவார். புரோச் அவர்களின் துறைமுகமானது.)
Question 49
அமோகவர்ஷர் ___________ எனும் சமணத்துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்.
A
பார்சவநாதர்
B
அப்பர்
C
ஜினசேனா
D
ரிஷபதேவர்
Question 49 Explanation: 
(குறிப்பு: அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணர் அரசரானார்.)
Question 50
இரண்டாம் கிருஷ்ணர் __________ ஆண்டு பராந்தகச் சோழனால் வல்லம் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
A
கி.பி 816
B
கி.பி. 864
C
கி.பி 912
D
கி.பி 916
Question 50 Explanation: 
(குறிப்பு: வல்லம் என்பது தற்போதைய வேலூர் மாவட்டத்திலுள்ள திருவல்லம் ஆகும்.)
Question 51
ராஷ்டிரக்கூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசர்
A
மூன்றாம் கிருஷ்ணர்
B
முதலாம் கிருஷ்ணர்
C
அமோகவர்ஷர்
D
இரண்டாம் கிருஷ்ணர்
Question 51 Explanation: 
(குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் சோழர்களைத் தக்கோலம்(தற்போதைய வேலூர் மாவட்டத்திலுள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.)
Question 52
  • கூற்று 1: இரண்டாம் கிருஷ்ணர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலைக் கட்டினார்.
  • கூற்று 2: நாட்டை சரியான முறையில் வைத்திருந்த கடைசி அரசர் மூன்றாம் கோவிந்தனார்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 52 Explanation: 
(குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலைக் கட்டினார்.)
Question 53
________ என்பவரால் இயற்றப்பட்ட கவிராஜ மார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
A
ஆதிகவி பம்பா
B
ஸ்ரீபொன்னா
C
ரன்னா
D
அமோகவர்ஷர்
Question 53 Explanation: 
(குறிப்பு: ராஷ்டிரக் கூடர்களின் அரசவைப் புலவர்கள் கன்னட மொழியில் சிறந்த நூல்களை எழுதினர்.)
Question 54
  • கூற்று 1: ராஷ்டிரக் கூடர்களின் காலத்தில் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீபொன்னா, ரன்னா ஆகியோராவர்.
  • கூற்று 2: ஆதிகவி பம்பா அவரது நூற்களான ஆதிபுராணம், விக்கிரமார்ஜூன விஜயம் ஆகியவற்றிற்காகப் பெரும் புகழ்பெற்றவர்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 54 Explanation: 
(குறிப்பு: விக்கிரமார்ஜூன விஜயம் மஹாபாரதத்தின் மீள் தருகையாகும். இதில் தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி பம்பா எழுதியுள்ளார்.)
Question 55
முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை சித்திரிக்கும் நூல்
A
கவிராஜமார்க்கம்
B
ஆதிபுராணம்
C
தசகுமார சரிதம்
D
நியாய பாஷ்யா
Question 56
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று.
B
கைலாசநாதர் கோவில் 90000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
C
கைலாசநாதர் கோவிலின் விமானத்தின் உயரம் 90 அடிகளாகும்.
D
கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
Question 56 Explanation: 
(குறிப்பு: கைலாசநாதர் கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.)
Question 57
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
எலிபெண்டா தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி.
B
எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும்.
C
இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற டச்சுக்காரர்கள், இதற்கு எலிபெண்டா தீவு என பெயரிட்டனர்.
D
பட்டடக் கல்லிலுள்ள சமண நாராயணர் கோவிலும் காசி விஸ்வேஸ்வரர் கோவிலும் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டவை.
Question 57 Explanation: 
(குறிப்பு: இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், இதற்கு எலிபெண்டா தீவு என பெயரிட்டனர்.)
Question 58
சீனாவின் தாங் அரச வம்சத்தினரால் கட்டப்பட்டலேஷன் புத்தர் சிலையின் உயரம்
A
52 மீட்டர்
B
62 மீட்டர்
C
67 மீட்டர்
D
71 மீட்டர்
Question 59
  • கூற்று 1: கி.பி 641 - 647 காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியை கைப்பற்றினர்.
  • கூற்று 2: கி.பி 655 இல் சாளுக்கியர் அதனை மீட்டனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 59 Explanation: 
(குறிப்பு: முதலாம் விக்கிரமாதித்தனும் அவருக்குப் பின் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர்.)
Question 60
ராஷ்டிரகூட அரச வம்சத்தை நிறுவியவர் __________.
A
முதலாம் புலிகேசி
B
தந்தி துர்க்கா
C
முதலாம் விக்கிரமாதித்தன்
D
இரண்டாம் கீர்த்திவர்மன்
Question 60 Explanation: 
(குறிப்பு:தந்திதுர்க்கா இரண்டாம் கீர்த்திவர்மனை போரில் தோற்கடித்தார்.)
Question 61
கீழ்க்கண்டவற்றுள் பல்லவ ஆட்சி குறித்து அரிய உதவும் சான்று____________
A
மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு
B
இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
C
காசக்குடிச் செப்பேடு
D
மேற்கண்ட அனைத்தும்
Question 62
பல்லவர் காலத்தைப் பற்றி அறிய உதவும் இலக்கியச் சான்று___________
A
மத்தவிலாசப் பிரகசனம்
B
அவந்தி சுந்தரி கதை
C
கலிங்கத்துப்பரணி
D
மேற்கண்ட அனைத்தும்
Question 62 Explanation: 
விளக்கம்: மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம் ஆகியவை பல்லவர் காலத்தைப் பற்றி அறிய உதவும் இலக்கிய சான்றுகளாகும்.
Question 63
பொருத்துக: A) சிம்மவிஷ்ணு - 1. கி.பி. 695 - 722 B) மகேந்திரவர்மன் - 2. கி.பி. 630 - 668 C) முதலாம் நரசிம்மவர்மன் - 3. கி.பி. 600 - 630 D) இரண்டாம் நரசிம்மவர்மன் - 4. கி.பி. 550
A
A-1, B-2, C-3, D-4
B
A-2, B-1, C-4, D-3
C
A-3, B-2, C-4, D-1
D
A-4, B-3, C-2, D-1
Question 63 Explanation: 
விளக்கம்: A) சிம்மவிஷ்ணு - 1. கி.பி. 550 B) மகேந்திரவர்மன் - 2. கி.பி. 600 - 630 C) முதலாம் நரசிம்மவர்மன் - 3. கி.பி. 630 - 668 D) இரண்டாம் நரசிம்மவர்மன் - 4. கி.பி. 695 - 722
Question 64
மத்தவிலாசப்பிரகசனம் என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள்____________
A
குடிகாரர்களின் வீழ்ச்சி
B
குடிகாரர்களின் எழுச்சி
C
குடிகாரர்களின் கூட்டம்
D
குடிகாரர்களின் மகிழ்ச்சி
Question 64 Explanation: 
விளக்கம்: மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் முதலாம் மகேந்திரவர்மன் எழுதியுள்ளார்.
Question 65
பொருத்துக: A) வாதாபி குகைக் கல்வெட்டு - 1. மங்களேசன் B) கைலாசநாதர் கோவில் கல்வெட்டு - 2. பட்டடக்கல் C) விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு - 3. காஞ்சி D) அய்கோல் கல்வெட்டு - 4. இரண்டாம் புலிகேசி
A
1 3 2 4
B
2 1 4 3
C
3 2 4 1
D
4 3 2 1
Question 65 Explanation: 
விளக்கம்: A) வாதாபி குகைக் கல்வெட்டு - 1. மங்களேசன் B) கைலாசநாதர் கோவில் கல்வெட்டு - 2. காஞ்சி C) விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு - 3. பட்டடக்கல் D) அய்கோல் கல்வெட்டு - 4. இரண்டாம் புலிகேசி
Question 66
பாக்தாத் என்பது___________பேரரசின் மகத்தான நகரமாகும்.
A
கிருத்துவம்
B
சீன
C
எகிப்து
D
இஸ்லாமிய
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 66 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!