Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Online Test 10th Social Science Lesson 15 Questions in Tamil

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Online Test 10th Social Science Lesson 15 Questions in Tamil

Congratulations - you have completed தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Online Test 10th Social Science Lesson 15 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ________ ஆண்டு வேலூர் கோட்டையில் இந்திய வீரர்களும் அதிகாரிகளும் ஓர் எழுச்சியைத் திட்டமிட்டு நடத்தினர்.
A
1786
B
1792
C
1806
D
1816
Question 1 Explanation: 
(குறிப்பு: வேலூர் புரட்சி தென்னிந்தியாவின் பல இராணுவ முகாம்களிலும் எதிரொலித்தது.)
Question 2
சென்னைவாசிகள் சங்கம் __________ ஆண்டு கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்களால் நிறுவப்பெற்றது.
A
1832
B
1846
C
1849
D
1852
Question 2 Explanation: 
(குறிப்பு: தென்னிந்தியாவில் தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பான சென்னைவாசிகள் சங்கம் தனிப்பட்ட குழுக்களின் விருப்பங்களைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளை அனைவருக்கும் தெரிவிப்பதை நோக்கமாக கொண்டு உருவானது.)
Question 3
சென்னைவாசிகள் சங்கம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
இவ்வமைப்பில் வணிகர்களே அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர்.
B
தனது உறுப்பினர்களின் நலன்களை முன்னெடுப்பது, வரிகளைக் குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை இவ்வமைப்பு உள்ளடக்கி இருந்தது.
C
கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததை இவ்வமைப்பினர் ஆதரித்தனர்.
D
மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தைத் திருப்பும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டது.
Question 3 Explanation: 
(குறிப்பு: கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததை இவ்வமைப்பினர் எதிர்த்தனர்.)
Question 4
சித்ரவதை ஆணையம் கீழ்க்கண்ட எந்த அமைப்பின் முயற்சிகளால் நிறுவப்பட்டது?
A
சென்னை மகாஜன சபை
B
சென்னைவாசிகள் சங்கம்
C
சுதேசி இயக்கம்
D
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்
Question 4 Explanation: 
(குறிப்பு: சித்ரவதை ஆணையத்தின் விளைவாகச் சித்ரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய சித்திரவதைச் சட்டம் ஒழிக்கப்பட்டது.)
Question 5
சென்னைவாசிகள் சங்கம் ___________ ஆண்டுக்குப் பின்னர் செயலிழந்து இல்லாமலானது.
A
1858
B
1860
C
1861
D
1862
Question 6
T.முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு
A
1862
B
1868
C
1877
D
1884
Question 6 Explanation: 
(குறிப்பு: ஒரு இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்தும் பத்திரிக்கைகளும் விமர்சனம் செய்தன. எதிர்ப்பு தெரிவித்த அனைத்தும் பத்திரிக்கைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்படுவதை கல்விகற்ற இளைஞர்கள் உணர்ந்தனர்.)
Question 7
'தி இந்து' எனும் செய்தி பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு
A
1868
B
1872
C
1876
D
1878
Question 7 Explanation: 
(குறிப்பு: G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 'தி இந்து’ பத்திரிகையை தொடங்கினர். மிக விரைவில் இச்செய்திப் பத்திரிக்கை தேசியப் பிரச்சாரத்திற்கான கருவியானது.)
Question 8
சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழ் தேசியப் பருவ இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1878
B
1882
C
1891
D
1899
Question 8 Explanation: 
(குறிப்பு: G. சுப்பிரமணியம் என்பவர் சுதேசமித்திரன் என்ற தேசிய பருவ இதழை தொடங்கினார்.)
Question 9
சுதேசமித்திரன் என்ற தேசிய பருவ இதழ் ___________ ஆண்டு நாளிதழாக மாறியது.
A
1892
B
1894
C
1897
D
1899
Question 9 Explanation: 
(குறிப்பு: தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டது இந்தியன் பேட்ரியாட், சவுத் இந்தியன் மெயில், மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டு பத்திரிகைகள் தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது.)
Question 10
சென்னை மகாஜன சபை ___________இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு, P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்டது.
A
1882 மே 18
B
1883 அக்டோபர் 5
C
1884 மே 16
D
1884 மார்ச் 15
Question 10 Explanation: 
(குறிப்பு: தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்கக்கால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும். முதலாம் தலைமுறையை சேர்ந்த தேசியவாதிகளுக்கு இவ்வமைப்பு பயிற்சிக் களமானது.)
Question 11
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர்
A
P. அனந்தாச்சார்லு
B
P. ரங்கையா
C
G. சுப்பிரமணியம்
D
T. முத்துசாமி
Question 11 Explanation: 
(குறிப்பு: சென்னை மகாஜன சபையின் செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.)
Question 12
கீழ்க்கண்டவற்றுள் எவை சென்னை மகாஜன சபையின் கோரிக்கைகளாக இருந்தன?
  1. குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  2. லண்டனிலுள்ள இந்தியக் கவுன்சிலை மூடுவது.
  3. வரிகளைக் குறைப்பது.
  4. இராணுவ குடியியல் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பது.
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 12 Explanation: 
(குறிப்பு: இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885 இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.)
Question 13
  • கூற்று 1: சென்னை மகாஜன சபையின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • கூற்று 2: மாகாணத்தின் பலபகுதிகளில் வாழும் மக்களிடையே பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கி அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதே சென்னை மகாஜன சபையின் நோக்கமாக இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 14
தொடக்ககால மிதவாத தேசியவாதிகள் குறித்தக் கூற்றுகளில் சரியாதை தேர்ந்தெடு.
  1. தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை அற்று காணப்பட்டனர்.
  2. அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.
  3. ஆங்கிலேயர்கள் தங்களை தாராளமானவனர்கள் என உரிமை கொண்டாடியதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியதே மிதவாதிகள் செய்த முக்கிய பங்களிப்பாகும்.
  4. ஆங்கிலேயர் எவ்வாறு இந்தியாவைச் சுரண்டினார்கள் என்பதை அம்பலப்படுத்தினர்.
A
அனைத்தும் சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 14 Explanation: 
(குறிப்பு: தொடக்ககால தேசியவாதிகள், இங்கிலாந்தில் ஜனநாயகக் கொள்கையைப் பின்பற்றும் ஆங்கிலேயர் காலனிகளில் பிரதிநிதித்துவமற்ற அரசை எவ்வாறு திணித்து நாடகமாடுகின்றனர் என்பதையும் வெட்டவெளிச்சம் ஆக்கினர். தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.)
Question 15
கீழ்க்கண்டவர்களுள் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் யார்?
  1. V.S. சீனிவாச சாஸ்திரி
  2. P.S. சிவசாமி
  3. V.கிருஷ்ணசாமி
  4. T.R. வெங்கட்ராமனார்
  5. G.A. நடேசன்
  6. T.M. மாதவராவ்
  7. S. சுப்பிரமணியனார்
A
அனைத்தும்
B
1, 2, 4, 5, 6
C
1, 3, 5, 6, 7
D
1, 3, 4, 5, 6
Question 15 Explanation: 
(குறிப்பு: வங்கப் பிரிவினையின் போது திலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச்செய்வதற்காக வட்டார மொழியைப் பின்பற்றியதாலும் தொடக்க கால தேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கப்படலாயினர்.)
Question 16
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  2. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர். அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் பிரம்மஞான சபையில் கூடியது.
  3. தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G.சுப்ரமணியம், P.ரங்கையா, P.அனந்தாசார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
A
1 மட்டும் தவறு
B
2, 3 தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 17
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886 ஆம் ஆண்டு ____________ல் நடைபெற்றது.
A
கல்கத்தா
B
புனே
C
பம்பாய்
D
மதராஸ்
Question 17 Explanation: 
(குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது.)
Question 18
  • கூற்று 1: G. சுப்ரமணியம் தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்தவர் ஆவார்.
  • கூற்று 2: இந்தியா பொருளாதாரரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்ள G. சுப்ரமணியம் செய்த பங்களிப்புகளில் அவர் நெளரோஜி மற்றும் கோகலே ஆகியோருக்கு இணையானவராவார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 19
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் 1885 ஆம் ஆண்டு _________ல் நடைபெற்றது.
A
கல்கத்தா
B
புனே
C
பம்பாய்
D
மதராஸ்
Question 19 Explanation: 
(குறிப்பு: இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையை சேர்ந்தோராவர்.)
Question 20
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு 1887 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A
தாதாபாய் நெளரோஜி
B
பத்ருதீன் தியாப்ஜி
C
கோபாலகிருஷ்ண கோகலே
D
G. சுப்பிரமணியம்
Question 20 Explanation: 
(குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் நடைபெற்றது.)
Question 21
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் __________ பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
A
232
B
346
C
354
D
362
Question 21 Explanation: 
(குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டில் 607 அகில இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.)
Question 22
  • கூற்று 1: தமிழ்நாடு அன்றைய மைசூர் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • கூற்று 2: சென்னை மாகாணம் என்பது இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களூரு, பெல்லாரி, தெற்கு கனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சில பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 22 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.)
Question 23
வ.உ.சிதம்பரனார் அவர்கள் __________ மற்றும் ________ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கிடையே ஓட்டினார்.
A
சுதேசி, காலியா
B
சுதேசி, லாவோ
C
பாரத், சுதேசி
D
காலியா, லாவோ
Question 23 Explanation: 
(குறிப்பு: சுதேசியை செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.)
Question 24
  • கூற்று 1: வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • கூற்று 2: கல்கத்தா காங்கிரசில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி சுதேசி நிறுவனங்களை ஊக்குவித்தல், அந்நியப் பண்டங்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை முன்னெடுத்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 24 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.)
Question 25
சுப்பிரமணிய சிவா __________ ஆண்டு ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தலைமை ஏற்றார்.
A
1892
B
1899
C
1908
D
1913
Question 25 Explanation: 
(குறிப்பு: திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்ரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.)
Question 26
சுதேசி இயக்கப் போராட்டத்தின் போது சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி ___________க்கு இடம்பெயர்ந்தார்.
A
காரைக்கால்
B
பாண்டிச்சேரி
C
மதராஸ்
D
திருவனந்தபுரம்
Question 26 Explanation: 
(குறிப்பு: பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்த கோஷ் V.V.சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர்.)
Question 27
  • கூற்று 1: தமிழ்நாட்டைச் சேர்ந்த புரட்சிகர தேசியவாதிகளுக்குப் பாண்டிச்சேரி பாதுகாப்பான புகலிடமாயிற்று.
  • கூற்று 2: தமிழ்நாட்டைச் சேர்ந்த புரட்சிகர தேசியவாதிகள் பலருக்குப் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த இந்தியா ஹவுஸ் என்ற இடத்திலும் பாரிசிலும் வழங்கப்பெற்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 27 Explanation: 
(குறிப்பு: M.P.T.ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார் மற்றும் T.S.S. ராஜன் ஆகியோர் புரட்சிகர நடவடிக்கை பயிற்சி பெற்றவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.)
Question 28
கீழ்க்கண்ட எந்த செய்தித்தாள்கள் சுதேசி இயக்கத்தின் போது பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தன?
  1. இந்தியா
  2. சுதேசமித்ரன்
  3. விஜயா
  4. சூர்யோதயம்
A
அனைத்தும்
B
1, 3, 4
C
2, 3, 4
D
1, 2, 4
Question 28 Explanation: 
(குறிப்பு: புரட்சிகர தேசியவாதிகள் புரட்சிகர நூல்களை பாண்டிச்சேரியின் வழியாக சென்னையில் விநியோகம் செய்தனர்.)
Question 29
_________ ஆண்டு அரவிந்த கோஷ், V.V சுப்ரமணியனார் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் பாண்டிச்சேரியில் புரட்சிகர நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
A
1908
B
1909
C
1910
D
1911
Question 29 Explanation: 
(குறிப்பு: புரட்சிகர நடவடிக்கைகள் முதல் உலகப்போர் வெடிக்கின்றவரை தொடர்ந்தன.)
Question 30
நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கிய ஆண்டு
A
1892
B
1898
C
1902
D
1904
Question 30 Explanation: 
(குறிப்பு: ஆங்கில அதிகாரிகளைக் கொள்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.)
Question 31
வாஞ்சிநாதன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்ற ஆண்டு
A
1911 ஏப்ரல் 20
B
1911 மே 17
C
1911 ஜூன் 17
D
1911 ஜூலை 27
Question 31 Explanation: 
(குறிப்பு: செங்கோட்டையை சேர்ந்த வாஞ்சிநாதன் பாரதமாதா சங்கத்தினால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.)
Question 32
அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சி இயக்கத்தை முன்மொழிந்தவர்
A
அரவிந்த கோஷ்
B
B.P.வாடியா
C
G.S.அருண்டேல்
D
அன்னிபெசன்ட்
Question 32 Explanation: 
(குறிப்பு: அயர்லாந்துப் பெண்மணியான அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைவர் ஆவார்.)
Question 33
அன்னிபெசன்ட் __________ ஆண்டு தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினார்.
A
1912
B
1913
C
1915
D
1916
Question 33 Explanation: 
(குறிப்பு: அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை அன்னிபெசன்ட் முன்னெடுத்துச் சென்றார்.)
Question 34
அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கக் கோரிக்கைக்கு அவருடன் துணை நின்றவர்கள் யார்?
  1. G.S. அருண்டேல்
  2. B.P. வாடியா
  3. C.P. ராமசாமி
  4. V.V. சுப்பிரமணியனார்
A
1, 2
B
1, 2, 3
C
2, 3, 4
D
2, 4
Question 34 Explanation: 
(குறிப்பு: இவர்கள் கோரிய தன்னாட்சி ஆங்கில அரசிடம் ஓரளவிற்கான விசுவாசத்தையே கொண்டிருந்ததாக அமைந்தது.)
Question 35
கீழ்க்கண்டவற்றுள் அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய செய்தித்தாள்கள் எவை?
  1. இந்தியா
  2. நியூ இந்தியா
  3. சுதேசமித்திரன்
  4. காமன்வீல்
A
அனைத்தும்
B
1, 2
C
1, 4
D
2, 4
Question 35 Explanation: 
(குறிப்பு: அன்னிபெசன்ட், தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நியூ இந்தியா, காமன்வீல் செய்தித்தாள்களைத் தொடங்கினார்.)
Question 36
"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" என்று கூறியவர்
A
காந்தியடிகள்
B
அம்பேத்கர்
C
ஜவஹர்லால் நேரு
D
அன்னிபெசன்ட்
Question 37
__________ ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டத்தின்படி அன்னிபெசன்ட் பிணைத்தொகையாக பெருமளவு பணத்தை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார்.
A
1904
B
1907
C
1910
D
1912
Question 37 Explanation: 
(குறிப்பு: அன்னிபெசன்ட்டும் அவருடன் பணியாற்றியோரும் பொதுமேடைகளில் பேசுவதும் எந்த ஒரு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது.)
Question 38
‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’, 'இந்தியா: ஒரு தேசம்’ எனும் இரண்டு புத்தகங்களையும் எழுதியவர்
A
அரவிந்த கோஷ்
B
அன்னிபெசன்ட்
C
காந்தியடிகள்
D
அம்பேத்கர்
Question 39
___________ ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
A
1914
B
1915
C
1916
D
1917
Question 39 Explanation: 
(குறிப்பு: தன்னாட்சி இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த B.P.வாடியா போன்றோர் தொழிற்சங்கங்களை உருவாக்கி தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.)
Question 40
சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1910
B
1911
C
1912
D
1913
Question 40 Explanation: 
(குறிப்பு: இதன் செயலராக C.நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.)
Question 41
C.நடேசனார் ___________ ஆண்டு பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக 'திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினார்.
A
1912
B
1914
C
1915
D
1916
Question 41 Explanation: 
(குறிப்பு: C. நடேசனார், இரு முக்கிய பிராமணர் அல்லாதோரின் தலைவர்களான T.M.நாயர், P. தியாகராயர் ஆகிய இருவரிடையே நிலவிய கருத்து வேற்றுமையை சரிசெய்து இணக்கத்தை ஏற்படுத்தினார்.)
Question 42
P.தியாகராயர், T.M.நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடிய ஆண்டு
A
1915 நவம்பர் 20
B
1915 அக்டோபர் 12
C
1916 நவம்பர் 20
D
1916 அக்டோபர் 12
Question 43
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
  2. ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனும் மூன்று செய்தித்தாள்களை தென்னிந்திய நலவுரிமை சங்க உறுப்பினர்கள் தொடங்கினர்.
  3. விரைவில் இவ்வமைப்பு நடத்திய ஆங்கில நாளிதழின் பெயரான ஜஸ்டிஸ் என்பதே அவ்வமைப்பின் பெயராகி ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கப்படலாயிற்று.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 43 Explanation: 
(குறிப்பு: அமைப்புக்கான கிளைகளை உருவாக்கும் முகமாக மாகாணம் முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி பல மாநாடுகளை நடத்தியது.)
Question 44
___________ ஆண்டுச் சட்டம் பிராமணரல்லாதவர்களுக்கு தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கியது.
A
1873
B
1882
C
1907
D
1919
Question 44 Explanation: 
(குறிப்பு: பிராமணரல்லாதவர்களுக்கு தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கியதை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது ஆனால் நீதிக்கட்சியால் இது வரவேற்கப்பட்டது.)
Question 45
நீதிக்கட்சியின் நோக்கங்களில் தவறானதை தேர்ந்தெடு.
A
அரசுப்பணியிடங்களில் பிராமணரல்லாதோர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இடஒதுக்கீடு.
B
தன்னாட்சி இயக்கத்தைப் பிராமணர்களின் இயக்கம் என எதிர்த்தது.
C
ஆங்கிலேயரின் ஆட்சி பிராமணர் அல்லாதோரின் முன்னேற்றத்திற்குத் துணைபுரியாது என நீதிக்கட்சி நம்பியது.
D
நீதிக்கட்சி காங்கிரசையும் பிராமணர்களின் கட்சியென விமர்சித்தது.
Question 45 Explanation: 
(குறிப்பு: ஆங்கிலேயரின் ஆட்சி பிராமணர் அல்லாதோரின் முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் என நீதிக்கட்சி நம்பியது.)
Question 46
1920 ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் ___________ இல் நீதிக்கட்சி வெற்றிபெற்றது.
A
52
B
58
C
63
D
68
Question 46 Explanation: 
(குறிப்பு: 1920 இல் நடத்தப்பட்ட தேர்தல்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது.)
Question 47
1920இல் நடத்தப்பட்ட தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்று __________ என்பவர் முதலாவது முதலமைச்சரானார்.
A
பனகல் அரசர்
B
A. சுப்பராயலு
C
S. சத்தியமூர்த்தி
D
P. தியாகராயர்
Question 47 Explanation: 
(குறிப்பு: 1923 ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.)
Question 48
பிராமணரல்லாதோரின் நலனுக்காக நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய நடவடிக்கைகள் எவை?
  1. உள்ளாட்சித் துறைகளிலும் கல்வி நிலையங்களிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது.
  2. பணியாளர் தேர்வுக்குழு நிறுவப்பட்டது.
  3. இந்து சமய அறநிலையத்துறை சட்டமும் சென்னை அரசு தொழில் உதவிச் சட்டமும் இயற்றப்பட்டன.
  4. வசதியற்ற மக்கள் பிரிவினரிடையே கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக கல்வி கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை வழங்குதல், மதிய உணவுத் திட்டம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  5. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக புறம்போக்கு நிலங்கள் பட்டாசெய்து வழங்கப்பட்டன.
A
அனைத்தும்
B
1, 2, 4, 5
C
2, 3, 4
D
1, 3, 4
Question 48 Explanation: 
(குறிப்பு: நீதிக்கட்சி ஆட்சியில் நிறுவப்பட்ட பணியாளர் தேர்வுக்குழு பின்னர் பொதுப் பணியாளர் தேர்வாணையமானது.)
Question 49
ரௌலட் சட்டத்தை எதிர்த்து மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றிய நாள்
A
1919 ஜனவரி 28
B
1919 பிப்ரவரி 18
C
1919 பிப்ரவரி 22
D
1919 மார்ச் 18
Question 50
கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்ட நாள்
A
1919 மார்ச் 19
B
1919 மார்ச் 26
C
1919 ஏப்ரல் 6
D
1919 ஏப்ரல் 16
Question 50 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது. அந்நாள் முழுவதும் உண்ணாவிரதமும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.)
Question 51
ரெளலட் சத்தியாகிரகம் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. சென்னை சத்தியாகிரக சபை என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
  2. ராஜாஜி, கஸ்தூரிரங்கர், S. சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் சத்தியாகிரக கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
  3. தொழிலாளர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் V.கல்யாணசுந்தரம் (திரு.வி.க), B.P.வாடியா, வ.உ.சி ஆகியோர் உரையாற்றினர்.
  4. ரௌலட் சத்தியாகிரகத்தில் மாணவர்களும் பெண்களும் பங்கேற்கவில்லை.
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3, 4 சரி
Question 51 Explanation: 
(குறிப்பு: ரௌலட் சத்தியாகிரகத்தில் தொழிலாளர்களும் மாணவர்களும் பெண்களும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றனர். இதுவே இவ்வியக்கத்தின் முக்யை அம்சமாகும்.)
Question 52
மதுரை மக்களால் ரோசாப்பு துரை என அழைக்கப்பட்டவர்
A
யாகுப் ஹசன்
B
ஜார்ஜ் ஜோசப்
C
கஸ்தூரி ரங்கர்
D
B.P. வாடியா
Question 52 Explanation: 
(குறிப்பு: வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்குவகித்தார்.)
Question 53
ரோசாப்பு துரை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்து மதுரையில் வசித்தவர்.
B
கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்.
C
தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கினார்.
D
மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை 1914ஆம் ஆண்டு ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார்.
Question 53 Explanation: 
(குறிப்பு: மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை 1918ஆம் ஆண்டு ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார். இச்சங்கத்தின் தொடக்கக்காலப் போராட்டங்கள் நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும் வேலை நேரக் குறைப்பையும் பெற்றுத்தந்தன.)
Question 54
தமிழ்நாட்டில் ___________இல் மெளலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
A
1919 ஏப்ரல் 17
B
1920 ஏப்ரல் 17
C
1921 ஏப்ரல் 17
D
1922 ஏப்ரல் 17
Question 54 Explanation: 
(குறிப்பு: இதைப்போன்ற ஒரு மாநாடு ஈரோட்டிலும் நடத்தப்பட்டது.)
Question 55
தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்த இடம்
A
மதுரை
B
ஈரோடு
C
வாணியம்பாடி
D
தஞ்சாவூர்
Question 55 Explanation: 
(குறிப்பு: முதல் உலகப்போருக்கு பின்னர் துருக்கியின் கலீபா அவமரியாதை செய்யப்பட்டதுடன் அவரது அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. கலீபா பதவியை மீட்பதற்காக கிலாபத் இயக்கம் தொடங்கப் பெற்றது.)
Question 56
தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்கள்
A
யாகுப் ஹசன், பெரியார்
B
சத்தியமூர்த்தி, ராஜாஜி
C
ராஜாஜி, யாகுப்ஹசன்
D
ராஜாஜி, பெரியார்
Question 56 Explanation: 
(குறிப்பு: ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு செயல்துடிப்புடன் விளங்கியது.)
Question 57
முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவியவர்
A
முகமது அலி ஜின்னா
B
யாகுப் ஹசன்
C
முசாஃபர் அஹமது
D
மெளலானா சௌகத் அலி
Question 57 Explanation: 
(குறிப்பு: யாகுப்ஹசனுடன் ராஜாஜி நெருக்கமாக செயல்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டனர்.)
Question 58
__________ நாள் அன்று வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.
A
1922 ஜனவரி 3
B
1922 ஜனவரி 13
C
1922 ஜனவரி 22
D
1922 ஜனவரி 28
Question 59
1921__________மாதம் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது.
A
மார்ச்
B
ஜூன்
C
ஆகஸ்ட்
D
நவம்பர்
Question 59 Explanation: 
(குறிப்பு: இதன் காரணமாக தமிழ்நாட்டில் ராஜாஜி, சுப்பிரமணிய சாஸ்திரி, ஈ.வெ.ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.)
Question 60
1922இல் சௌரி சௌரா நிகழ்வில் ___________ காவலர்கள் கொல்லப்பட்டனர்.
A
12
B
18
C
22
D
24
Question 60 Explanation: 
(குறிப்பு: சௌரி சௌரா நிகழ்வைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.)
Question 61
கோவில் நுழைவுக்கான சத்தியாக்கிரகம் நடைபெற்ற வைக்கம் எனும் ஊர் _________அரசின் ஆட்சியிலிருந்தது.
A
மைசூர்
B
ஆங்கிலேய
C
பிரஞ்சு
D
திருவாங்கூர்
Question 61 Explanation: 
(குறிப்பு: வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட கேரளாவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வெ.ரா அங்கு சென்று அவ்வியக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டினார்.)
Question 62
__________ ஆண்டு வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
A
1924 ஜுன்
B
1924 நவம்பர்
C
1925 ஜுன்
D
1925 அக்டோபர்
Question 62 Explanation: 
(குறிப்பு: பெரியார் சாதிப் பாகுப்பாட்டுக்கு எதிராகவும் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் செய்த பங்களிப்பிற்காக வைக்கம் வீரர் என பாராட்டப்பட்டார்.)
Question 63
கீழ்க்கண்டவற்றுள் ஈ.வெ.ரா காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் எவை?
  1. சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை
  2. வைக்கம் போராட்டம்
  3. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
  4. உப்பு சத்தியாகிரகம்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 3
D
1, 4
Question 64
தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு V.V. சுப்பிரமணியனாரால் குருகுலம் நிறுவப்பட்ட இடம்
A
மதராஸ்
B
சேலம்
C
மதுரை
D
சேரன்மாதேவி
Question 64 Explanation: 
(குறிப்பு: சேரன்மாதேவி குருகுலம் காங்கிரசிடமிருந்து நிதியினைப் பெற்றது. இருப்பினும் இப்பள்ளியில் சாதியின் அடிப்படையில் மாணவர்கள் பாகுபடுத்தப்பட்டனர்.)
Question 65
சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற சாதி பாகுபாடு பிரச்சனையை பெரியார் __________ உடன் இணைந்து விமர்சித்தார்.
A
சத்தியமூர்த்தி
B
காமராஜர்
C
P. வரதராஜுலு
D
ராஜாஜி
Question 66
1925 நவம்பர் 21 அன்று __________இல் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பெரியார் சட்டசபையில் பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார்.
A
மதுரை
B
ஈரோடு
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 66 Explanation: 
(குறிப்பு: இதன் பொருட்டு 1920 முதல் பெரியார் மேற்கொண்ட முயற்சிகளில் அவர் தோல்வியுற்றார். இவர் முன்மொழிந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் வேறு சில பிராமணரல்லாத தலைவர்களுடன் மாநாட்டை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.)
Question 67
தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக் கட்சியினருக்கு தலைமை ஏற்றவர்கள்
  1. M.A. அன்சாரி
  2. கஸ்தூரிரங்கர்
  3. S. சீனிவாசனார்
  4. S. சத்தியமூர்த்தி
A
1, 2
B
2, 3
C
1, 4
D
3, 4
Question 67 Explanation: 
(குறிப்பு: காங்கிரசில் கஸ்தூரி ரங்கர், M.A.அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து கொண்ட ராஜாஜி சட்டமன்றத்தைப் புறக்கணிப்பது எனும் கருத்தை முன்வைத்தார். இக்கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காங்கிரசுக்குள்ளேயே சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோரால் சுயராஜ்ஜியக் கட்சி உருவாக்கப்படுவதற்கு இட்டுச்சென்றது.)
Question 68
  • கூற்று 1: 1926ல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுயராஜ்ஜியக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றனர்.
  • கூற்று 2: இருந்தபோதிலும் சுயராஜ்ய கட்சி காங்கிரசின் கொள்கைக்கு இணங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்கமறுத்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 68 Explanation: 
(குறிப்பு: சுயராஜ்ய கட்சியினர் ஆட்சியை ஏற்க மறுத்து சுயேட்சை வேட்பாளரான P. சுப்பராயனுக்கு அமைச்சரவை அமைக்க உதவினர்.)
Question 69
  • கூற்று 1: 1930 இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் போட்டியிடாததால் நீதிக்கட்சி எளிதாக வெற்றிபெற்றது.
  • கூற்று 2: நீதிக்கட்சி தொடர்ந்து 1945 வரை ஆட்சி செய்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 69 Explanation: 
(குறிப்பு: நீதிக்கட்சி தொடர்ந்து 1937 வரை ஆட்சி செய்தது.)
Question 70
நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த போராட்டக்காரர்களுக்கு ___________ என்பவர் தலைமையேற்றார்.
A
T.பிரகாசம்
B
K. நாகேஸ்வர ராவ்
C
S.N. சோமையாஜுலு
D
ருக்மணி லட்சுமிபதி
Question 70 Explanation: 
(குறிப்பு: அச்சமயம் சென்னைக்கு வந்த காந்தியடிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.)
Question 71
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  2. 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
  3. இதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் நீல் கொடூரமாக நடந்துகொண்டதால் இந்திய வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார்.
  4. சென்னை மெளண்ட் ரோட்டில் ஆங்கிலேயர் அவருக்கு சிலை வைத்தனர்.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3 சரி
Question 71 Explanation: 
(குறிப்பு: நீல் சிலை வைத்தது, இந்தியர்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனக் கருதிய தேசியவாதிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.)
Question 72
நீல் சிலை ___________ ஆண்டு அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
A
1932
B
1935
C
1937
D
1939
Question 72 Explanation: 
(குறிப்பு: 1937 ல் இராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தபோது நீல் சிலை அகற்றப்பட்டது.)
Question 73
1919ஆம் ஆண்டு சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய ________ ஆண்டு இந்திய சட்டப்பூர்வ ஆணையம் சர் ஜான் சைமனின் தலைமையில் அமைக்கப்பெற்றது.
A
1920
B
1923
C
1925
D
1927
Question 73 Explanation: 
(குறிப்பு: சைமன் குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. ஆகையால் காங்கிரஸ் சைமன் குழுவைப் புறக்கணித்தது.)
Question 74
சென்னையில் __________ தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழு உருவாக்கப்பட்டது.
A
T. பிரகாசம்
B
K. நாகேஸ்வர ராவ்
C
S.N. சோமையாஜுலு
D
S. சத்தியமூர்த்தி
Question 74 Explanation: 
(குறிப்பு: 1929 பிப்ரவரி 18 இல் சைமன் குழு சென்னைக்கு வந்தபோது பொதுக்கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள், கடையடைப்பு போன்றவற்றால் வாழ்த்தப்பெற்றது.)
Question 75
__________ ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது.
A
1922
B
1924
C
1927
D
1929
Question 75 Explanation: 
(குறிப்பு: 1920களில் தமிழ்நாட்டில் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் விரிந்துபட்ட அடித்தளத்தைக் கொண்ட அமைப்பாக மாறிக் கொண்டிருந்தது.)
Question 76
சைமன் குழுவினை எதிர்த்து, அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதற்காக காங்கிரஸ் ___________ தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
A
காந்தியடிகள்
B
ஜவஹர்லால் நேரு
C
மோதிலால் நேரு
D
அம்பேத்கர்
Question 77
காந்தியடிகள் தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரையை துவக்கிய நாள்
A
1930 ஜனவரி 29
B
1930 பிப்ரவரி 28
C
1930 மார்ச் 02
D
1930 மார்ச் 12
Question 77 Explanation: 
(குறிப்பு: ராஜாஜி உப்பு சத்தியாகிரகமொன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.)
Question 78
1929ல் __________ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் என்பதே இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
A
புனே
B
ஆக்ரா
C
கல்கத்தா
D
லாகூர்
Question 78 Explanation: 
(குறிப்பு: 1930 ஜனவரி 26 ல் ராவி நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றினார்.)
Question 79
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் 1930 ஏப்ரல் 13 இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி _______அன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தை சென்றடைந்தது.
A
ஏப்ரல் 18
B
ஏப்ரல் 22
C
ஏப்ரல் 26
D
ஏப்ரல் 28
Question 79 Explanation: 
(குறிப்பு: உப்பு சத்தியாகிரக அணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" எனும் சிறப்புப் பாடலை நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் புனைந்திருந்தார்.)
Question 80
உப்புசத்தியாகிரக அணிவகுப்பு வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் ராஜாஜியின் தலைமையில் __________ தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.
A
8
B
10
C
12
D
14
Question 80 Explanation: 
(குறிப்பு: ராஜாஜி, T.S.S.ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C.சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களாவர்.)
Question 81
T.பிரகாசம், K.நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள ___________ என்ற இட்டத்தில் முகாமை அமைத்திருந்தனர்.
A
திருவல்லிக்கேணி
B
மெளண்ட் ரோடு
C
மயிலாப்பூர்
D
உதயவனம்
Question 81 Explanation: 
(குறிப்பு: இந்த முகாமை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது கடையடைப்பிற்கு வழிகோலியது.)
Question 82
  • கூற்று 1: ராமேஸ்வரத்தில் உச்சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • கூற்று 2: உவரி, அஞ்செங்கோ, வேப்பலோடை, தூத்துக்குடி மற்றும் தருவைக்குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உப்புசத்தியாகிரக முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 83
1930 ஏப்ரல் 27 இல் திருவல்லிக்கேணியில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் __________ நபர்கள் உயிரிழந்தனர்.
A
2
B
3
C
4
D
5
Question 83 Explanation: 
(குறிப்பு: திருவல்லிக்கேணியில் மூன்று மணி நேரம் நடைபெற்ற மோதலில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.)
Question 84
உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ___________.
A
அன்னிபெசன்ட்
B
அஞ்சலையம்மாள்
C
அம்புஜத்தம்மையார்
D
ருக்மணி லட்சுமிபதி
Question 84 Explanation: 
(குறிப்பு: N.M.R சுப்பராமன் மற்றும் கு.காமராஜ் ஆகியோரும் உப்பு சத்தியாகிரகத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.)
Question 85
ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றிய நாள்
A
1930 ஜனவரி 26
B
1931 ஜனவரி 26
C
1932 ஜனவரி 26
D
1933 ஜனவரி 26
Question 86
திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R.குமாரசாமி தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறே இறந்த தினம்
A
1931 ஜனவரி 11
B
1931 பிப்ரவரி 10
C
1932 ஜனவரி 11
D
1932 பிப்ரவரி 11
Question 86 Explanation: 
(குறிப்பு: திருப்பூர் குமரன் கொடிகாத்த குமரன் எனவும் அழைக்கப்படுகிறார்.)
Question 87
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
A
S. சத்தியமூர்த்தி
B
கஸ்தூரி ரங்கர்
C
P. சுப்பராயன்
D
பெரியார் ஈ.வெ.ரா
Question 88
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
1935 இந்திய அரசாங்கச் சட்டம் மாநில சுயாட்சிக்கு வழிவகுத்தது.
B
1935 சட்டப்படி சட்டமன்றத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் குழு மாகாண அதிகாரங்களை நிர்வகித்தது.
C
1935 சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளை புறக்கணிக்கும் அதிகாரத்தை ஆளுநர் பெற்றிருந்தார்.
D
1937ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்றது.
Question 88 Explanation: 
(குறிப்பு: 1937 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.)
Question 89
தமிழ்நாட்டில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர்
A
காமராஜர்
B
சத்தியமூர்த்தி
C
ராஜாஜி
D
பிரகாசம்
Question 89 Explanation: 
(குறிப்பு: ராஜாஜி சமூகத்தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கோவில்களைத் திறந்து வைத்தார்.)
Question 90
ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை மது விலக்கைப் பரிசோதனை முயற்சியாக _____________ல் அறிமுகம் செய்தார்.
A
காஞ்சிபுரம்
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
சேலம்
Question 90 Explanation: 
(குறிப்பு: மதுவிலக்கின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.)
Question 91
__________ மேற்கொண்ட முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
A
காமராஜர்
B
சத்தியமூர்த்தி
C
ராஜாஜி
D
T. பிரகாசம்
Question 91 Explanation: 
(குறிப்பு: இருந்தபோதிலும் கிராமப்புற கடன் பிரச்சனைகளை தீர்பதற்காக கடன் சமரச வாரியங்கள் அமைக்கப்பட்டதைத் தவிர வேறு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.)
Question 92
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ள குடிமை, சமூகக் குறைபாடுகளை அகற்றுவதற்காக _________ ஆண்டு கோவில் நுழைவு அங்கீகார, இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.
A
1937
B
1938
C
1939
D
1940
Question 92 Explanation: 
(குறிப்பு: மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர், செயலர் L.N.கோபால்சாமி ஆகியோரால் 1939 ஜூலை 9ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஹரிஜன மக்களுடன் நுழையத் திட்டமிடப்பட்டது.)
Question 93
ஈ.வெ.ரா அவர்களால் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்ட இடம்
A
காஞ்சிபுரம்
B
ஈரோடு
C
மதுரை
D
சேலம்
Question 93 Explanation: 
(குறிப்பு: பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது ராஜாஜியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும்.)
Question 94
இந்தி எதிர்ப்பு போராட்ட நிகழ்வுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பும், முஸ்லிம் லீக்கும் ஆதரவளித்தன.
B
தாளமுத்து மற்றும் நடராஜன் எனும் இரண்டு போராட்டக்காரர்கள் சிறையில் மரணமடைந்தனர்.
C
திருச்சியிலிருந்து சென்னைக்கு ஊர்வலமொன்று திட்டமிடப்பட்டது.
D
பெரியார் உட்பட 120 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
Question 94 Explanation: 
(குறிப்பு: பெரியார் உட்பட 1200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கைக்கொண்ட சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.)
Question 95
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்
A
1942 ஜனவரி 22
B
1942 மார்ச் 18
C
1942 ஆகஸ்டு 8
D
1942 அக்டோபர் 5
Question 95 Explanation: 
(குறிப்பு: இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் காந்தியடிகள் "செய் அல்லது செத்து மடி" எனும் முழக்கத்தை வழங்கினார்.)
Question 96
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?
A
ஈரோடு
B
சென்னை
C
சேலம்
D
மதுரை
Question 96 Explanation: 
(குறிப்பு: ராஜபாளையம், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய இடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.)
Question 97
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பெருமளவிலான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்ற இடம்
A
பக்கிங்காம்
Question 97 Explanation: 
(குறிப்பு: பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில், சென்னை துறைமுகம், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார டிராம் போக்குவரத்து போன்ற இடங்களில் பெருமளவிலான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன.)
Question 98
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தந்தி, தொலைபேசிக் கம்பிகள் வெட்டப்பட்டதுடன் பொதுக்கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்ட இடங்கள்
  1. சேலம்
  2. வேலூர்
  3. பணப்பாக்கம்
  4. சூலூர்
A
அனைத்தும்
Question 99
  • கூற்று 1: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சூலூர் விமான நிலையம் தாக்குதலுக்குள்ளானது, கோயம்புத்தூரில் ரயில்கள் தடம்புரளச் செய்யப்பட்டன.
  • கூற்று 2: ராயல் இந்தியக் கப்பற்படைப் புரட்சியும், இங்கிலாந்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசு தொடங்கிய பேச்சு வார்த்தைகளும் இந்திய விடுதலைக்கு வழிகோலின.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 100
பொருத்துக.
  1. சென்னைவாசிகள் சங்கம்    i) இந்தி எதிர்ப்புப் போராட்டம்
  2. ஈ.வெ.ரா                                     ii) நீல் சிலையை அகற்றுதல்
  3. S.N. சோமையாஜுலு             iii) உப்பு சத்தியாகிரகம்
  4. வேதாரண்யம்                          iv) சித்திரவதை ஆணையம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!