Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Online Test 6th Social Science Lesson 4 Questions in Tamil

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - Online Test - 6th Social Science Lesson 4 Questions in Tamil

Congratulations - you have completed தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - Online Test - 6th Social Science Lesson 4 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலகின் மிக தொன்மையான நாகரீகம் எது?
A
எகிப்து நாகரிகம்
B
சீன நாகரிகம்
C
சிந்துவெளி நாகரிகம்
D
மெசபடோமியா நாகரிகம்
Question 1 Explanation: 
இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான நாகரீகம் ஆகும். ஹரப்பா மொகஞ்சதாரோ ஆகியவற்றை போல தமிழகத்திலும் தொன்மையான நகரங்கள் இருந்திருக்கின்றன. அந்நகரங்களில் மதுரை, காஞ்சி, பூம்புகார் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.
Question 2
கீழ்க்கண்டவற்றுள்  தமிழகத்தில் தொன்மையான நகரங்கள் இருந்ததை உறுதிசெய்யும் சான்றுகள் யாவை?
  1. பண்டைய தமிழ் இலக்கியங்கள்
  2. அயல்நாட்டு பயணிகளின் குறிப்புகள்
  3. தொல்லியல் கண்டுபிடிப்புகள்
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 3
காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது?
A
மதுரை
B
புகார்
C
காஞ்சி
D
வஞ்சி
Question 3 Explanation: 
பண்டைய தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் பூம்புகாரும் ஒன்று. பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமாகும்.
Question 4
பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது?
A
இந்திய பெருங்கடல்
B
வங்காள விரிகுடா
C
அரபிக்கடல்
D
எதுவும் இல்லை
Question 4 Explanation: 
ஒவ்வொரு நாடும் தனது தேவைக்குப் போக எஞ்சிய பொருள்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தங்கள் நாடுகளில் பற்றாக்குறையாக உள்ள பொருட்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் வேண்டியிருந்தது. இதற்காக கடல்வழி வணிகம் அதிகரித்தபோது துறைமுகங்கள் உருவாகின. அத்தகைய துறைமுகங்களில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றுதான் பூம்புகார் துறைமுகம் ஆகும். இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை அருகே உள்ளது.
Question 5
பூம்புகார் எந்த அரசின் துறைமுகமாகும்?
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 5 Explanation: 
பூம்புகார் நகரத்துக்கு புகார், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களும் உண்டு. புகார் துறைமுகத்தில் சீரும் சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலையில் இருந்தும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். இவற்றில் குறிப்பாக சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பை கூறுகின்றது.
Question 6
மாநாய்கன் என்றால்  _____  என்று பொருள்.
A
பெருங்கடல் வணிகன்
B
பெருவணிகன்
C
A & B
D
எதுவும் இல்லை
Question 6 Explanation: 
சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆவார். நாயகன் கோவலனின் தந்தை மாசாத்துவான் ஆவார். மாசாத்துவான் என்றால் பெருவணிகன் என்று பொருள். இதிலிருந்து பெரு வணிகர்களும் பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது தெளிவாகிறது.
Question 7
கீழ்க்கண்டவற்றுள் புகார் நகரம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. புகார் நகரில் கிரேக்கம், ரோம்  உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் வருகை புரிந்தனர்.
  2. இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகளும் தோன்றின.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 7 Explanation: 
பூம்புகாரில் நடந்த தொடர் வணிகத்தின் காரணமாக வணிகர்கள் பலர் பூம்புகார் நகரில் வசித்திருக்கின்றனர். எனவே இங்கு பல்வேறு மொழிகளும் பேசப்பட்டன. கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கி வைக்கவும், ஏற்றவும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அயல்நாட்டு வணிகர்கள் இங்குள்ள மக்களுடன் உரையாடவும், உறவாடவும் வாய்ப்புகள் உருவாகின.
Question 8
பூம்புகார் நகரத்து வணிகர்கள் கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று கருதியதை கூறும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவக சிந்தாமணி
D
பட்டினப்பாலை
Question 8 Explanation: 
பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள். மிகச்சரியான விலைக்கே பொருள்களை விற்றனர்.
Question 9
பட்டினப்பாலை ஆசிரியர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
A
பொ.ஆ.பி 2
B
பொ.ஆ.பி 4
C
பொ.ஆ.மு 2
D
பொ.ஆ.மு 4
Question 9 Explanation: 
பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இவர் வாழ்ந்த காலத்தைக் கொண்டு புகார் நகரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
Question 10
கீழ்கண்டவற்றுள் வட மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது எது?
A
தங்கம்
B
குதிரை
C
மிளகு
D
தந்தம்
Question 10 Explanation: 
பூம்புகாரில் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கருமிளகு தரை வழி தடங்கள் வழியே இறக்குமதியானது. வட மலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மெருகூட்டப்பட்டு மீண்டும் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
Question 11
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. மேற்கு தொடர்ச்சி மலை – சந்தனம்
  2. தென் கடல் – முத்து
  3. கிழக்குப் பகுதி – பவளம்
A
1 & 2
B
2 & 3
C
1 & 3
D
அனைத்தும்
Question 11 Explanation: 
மேலும் ஈழத்திலிருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. பூம்புகார் மற்ற நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கட்டமைக்கப்பட்டிருந்தது.
Question 12
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. பூம்புகாரில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.
  2. பொ. ஆ 100 வரை சிறப்புற்று திகழ்ந்த புகார் நகரம் கடல் கோள் அல்லது கடல் சீற்றங்களால் அழிந்திருக்கலாம்.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 12 Explanation: 
பொ.ஆ 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்த அந்த புகார் நகரம் கடல்கோள் அல்லது கடல் சீற்றங்களால் அழிந்திருக்கலாம். அதன் சான்றுகளை பூம்புகார் நகரில் இன்றும் காணலாம்.
Question 13
கீழ்கண்டவர்களுள் யார் யார் மதுரையை ஆட்சி செய்தனர்?
  1. களப்பிரர்கள்
  2. பிற்கால சோழர்கள்
  3. பிற்காலப் பாண்டியர்கள்
  4. நாயக்கர்கள்
A
1, 2 & 3
B
2, 3 & 4
C
1, 3 & 4
D
அனைத்தும்
Question 13 Explanation: 
இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்றுள்ளதில் இருந்தே இதன் தொன்மையை புரிந்து கொள்ளலாம்.
Question 14
கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?
A
40
B
42
C
49
D
63
Question 14 Explanation: 
சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. முதல் சங்கம், இரண்டாம் சங்கம் மற்றும் கடைச்சங்கம் ஆகியவை புகழ்பெற்ற மதுரை நகரில் நடைபெற்றன.
Question 15
கீழ்கண்டவர்களுள் பண்டைய இஸ்ரேல் அரசர் யார்?
A
அமைஷா
B
ஜெரோபூம்
C
சாலமோன்
D
ஷாலும்
Question 15 Explanation: 
இவர் முத்துக்களை உவரி எனும் இடத்திலிருந்து இறக்குமதி செய்தார். பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகில் உவரி உள்ளது. கிழக்கு கடற்கரையில் அமைந்திருந்த தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
Question 16
கீழ்கண்ட எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருந்தது?
A
மதுரை
B
காஞ்சி
C
பூம்புகார்
D
வஞ்சி
Question 16 Explanation: 
நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டுவகை அங்காடிகள் மதுரையில் இருந்தன. நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடி ஆகும். அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடி ஆகும்.
Question 17
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸின் குறிப்புகளில் மதுரையை பற்றிய தகவல்கள் உண்டு.
  2. சாணக்கியர் மதுரையை பற்றிய தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
A
1
B
2
C
1 & 2
D
எதுவும் இல்லை
Question 17 Explanation: 
சாணக்கியர் மௌரிய வம்சம் அரசரான சந்திரகுப்தரின் அமைச்சர் ஆவார். மேலும் மதுரை நகரைச் சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
Question 18
படிப்புக்காக காஞ்சிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?
A
தாலமி
B
யுவான்சுவாங்
C
மெகஸ்தனிஸ்
D
டேரூஸியஸ்
Question 18 Explanation: 
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த நடிகைக்கு வந்திருந்தார்.
Question 19
பொருத்துக.
  1. புகார்    - வணிக நகரம்
  2. மதுரை – கல்வி நகரம்
  3. காஞ்சி  - துறைமுக நகரம்
A
1 2 3
B
2 1 3
C
3 2 1
D
3 1 2
Question 20
நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
சுந்தரர்
C
காளிதாசர்
D
யுவான் சுவாங்
Question 20 Explanation: 
மேலும் கல்வியிற் கரையிலாத காஞ்சி என்று நாயன்மார்களில் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
Question 21
இந்தியாவின் 7 புனித தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று  எந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்?
A
மாணிக்கவாசகர்
B
யுவான்சுவாங்
C
மெகஸ்தனிஸ்
D
திருநாவுக்கரசர்
Question 21 Explanation: 
அவை அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜயினி மற்றும் துவாரகா ஆகும்.
Question 22
தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் எது?
A
காஞ்சி
B
வஞ்சி
C
மதுரை
D
புகார்
Question 22 Explanation: 
தர்மபாலர், ஜோதி பாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தார்கள். இச்செய்திகள் மூலம் காஞ்சியின் கல்வி சிறப்பை அறியலாம்.
Question 23
கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
A
காஞ்சி
B
ராமேஸ்வரம்
C
மதுரை
D
தஞ்சாவூர்
Question 23 Explanation: 
இங்கு உள்ள கைலாசநாதர் கோவில் புகழ்பெற்றது. பிற்கால பல்லவ மன்னன் ராஜசிம்மன் இந்த கற்கோயிலை கட்டினார். பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை காஞ்சியில் கழித்தார் என்பது இதன் இன்னொரு சிறப்புக்கு சான்றாகும்.
Question 24
கீழ்க்கண்டவற்றுள் சோழநாடு அல்லாதது எது?
A
தஞ்சை
B
தூத்துக்குடி
C
திருச்சி
D
திருவாரூர்
Question 24 Explanation: 
மேலும் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவை ஆகும்.
Question 25
கீழ்க்கண்டவற்றுள் தொண்டைநாடு அல்லாதது எது?
A
தர்மபுரி
B
திருவள்ளூர்
C
கரூர்
D
திருவண்ணாமலை
Question 25 Explanation: 
மேலும் காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி ஆகியவை தொண்டை நாட்டைச் சார்ந்த பகுதிகள் ஆகும்.
Question 26
ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது?
A
பூம்புகார்
B
மாமல்லபுரம்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சை
Question 26 Explanation: 
காஞ்சி நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை காஞ்சிபுரத்தை சுற்றிலும் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் மூலம் தமிழர்களின் நீர் மேலாண்மை திறனை அறிந்து கொள்ள உதவுகிறது.
Question 27
பெருத்துக.
  1. சோழநாடு                – 1. வேழமுடைத்து
  2. சேர நாடு                  – 2. சோறுடைத்து
  3. பாண்டிய நாடு       – 3. சான்றோருடைத்து
  4. தொண்டை நாடு    – 4. முத்துடைத்து
A
1 2 4 3
B
2 1 4 3
C
4 3 2 1
D
3 2 1 4
Question 27 Explanation: 
பூம்புகார், மதுரை, காஞ்சி ஆகிய இம்மூன்று நகரங்கள் மட்டுமல்லாமல் கொற்கை, வஞ்சி, தொண்டி, உறையூர், தகடூர், முசிறி, கருவூர், மாமல்லபுரம், தஞ்சை மற்றும் காயல் போன்ற நகரங்களும் தமிழ்நாட்டில் இருந்துள்ளன.
Question 28
கீழ்க்கண்டவற்றுள் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது எது?
A
மதுரை
B
காஞ்சி
C
உறையூர்
D
தஞ்சை
Question 28 Explanation: 
இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 28 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!