Online TestTnpsc Exam
		
	
	
தமிழ்நாடு இயற்கைப் பிரிவுகள் Online Test 10th Social Science Lesson 22 Questions in Tamil
தமிழ்நாடு இயற்கைப் பிரிவுகள் Online Test 10th Social Science Lesson 22 Questions in Tamil
Congratulations - you have completed தமிழ்நாடு இயற்கைப் பிரிவுகள் Online Test 10th Social Science Lesson 22 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆண்டு
1945       | |
1949      | |
1952        | |
1956  | 
Question 1 Explanation: 
 (குறிப்பு: 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன.)
Question 2  | 
ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியா, அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காக ___________ மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
 2       | |
 3      | |
4   	  | |
5  | 
Question 2 Explanation: 
 (குறிப்பு: மூன்று மாகாணங்கள்
மதராஸ்
பம்பாய்
கல்கத்தா)
Question 3  | 
- கூற்று 1: சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
 - கூற்று 2: இப்பிரிவினைக்கு பிறகு மதராஸ் மாகாணத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 3 Explanation: 
 (குறிப்பு: ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழ்நாடு, ஆந்திராவின் ஒரு பகுதி, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவின் சில பகுதிகள் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்தன.)
Question 4  | 
மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்
ஜனவரி 15, 1968  | |
ஜனவரி 14, 1968  | |
ஜனவரி 15, 1969  | |
ஜனவரி 14, 1969  | 
Question 4 Explanation: 
 (குறிப்பு: சி.என்.அண்ணாதுரை அவர்களால் மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)
Question 5  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் அட்சத்தீர்க்க பரவல்)
- வட அட்சம் – 8°4' முதல் 13°35' வரை
 - கிழக்கு தீர்க்கம் – 76°18' முதல் 80°20’ வரை
 
இரண்டும் சரி  | |
1 மட்டும் சரி  | |
2 மட்டும் சரி  | |
இரண்டும் தவறு  | 
Question 5 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாடு இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது.)
Question 6  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் எல்லைபுற பகுதிகள்)
கிழக்கு கோடி - கோடியக்கரை  | |
மேற்கு கோடி – பழனிமலை  | |
வட கோடி - பழவேற்காடு ஏரி  | |
தென் கோடி – குமரிமுனை  | 
Question 6 Explanation: 
 (குறிப்பு: மேற்கு கோடி - ஆனைமலை)
Question 7  | 
தமிழகத்தின் பரப்பளவு ___________ சதுர கிலோமீட்டர்களாகும்.
1,03,058      | |
1,30,580       | |
1,58,030      | |
1,30,058  | 
Question 7 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாடு இந்தியாவின் பதினோராவது பெரிய மாநிலமாகும்.)
Question 8  | 
இந்தியப் பரப்பில் தமிழ்நாடு _________ சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
2%  | |
3%       | |
4%      | |
5%  | 
Question 9  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் எல்லைகள்)
- கிழக்கு - வங்காள விரிகுடா
 - மேற்கு – கேரளா
 - வடக்கு - கர்நாடகா
 - வடமேற்கு – ஆந்திரப் பிரதேசம்
 - தெற்கு - இந்தியப் பெருங்கடல்
 
3 மட்டும் தவறு  | |
2, 3 தவறு  | |
2, 4 தவறு  | |
3, 4 தவறு  | 
Question 9 Explanation: 
 (குறிப்பு: வடக்கு - ஆந்திரப் பிரதேசம், வடமேற்கு – கர்நாடகா.)
Question 10  | 
மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும் இந்தியாவின் _________ திசையில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.
கிழக்கு  | |
தெற்கு  | |
தென்கிழக்கு  | |
தென்மேற்கு  | 
Question 11  | 
தமிழ்நாடு___________ கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
1053      | |
1064          | |
1076      | |
1085  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு: குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.)
Question 12  | 
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்தமைக்கப்பட்டன?
- சென்னை
 - நீலகிரி
 - திருநெல்வேலி
 - கன்னியாகுமரி
 
1, 2, 3       | |
2, 3, 4       | |
1, 2, 4      | |
1, 3, 4  | 
Question 13  | 
- கூற்று 1: தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.
 - கூற்று 2: இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 13 Explanation: 
 (குறிப்பு: தீபகற்ப பீடபூமி கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும்.)
Question 14  | 
தமிழ்நாட்டின் நிலத்தோற்ற அமைப்பு _________ நோக்கிய சரிவைக் கொண்டுள்ளது.
கிழக்கு  | |
மேற்கு  | |
வடக்கு  | |
தெற்கு  | 
Question 14 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாடு உயரமான அரிக்கப்பட்ட குன்றுகள், ஆழமற்ற பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகள் போன்ற தனித்துவமிக்க பல நிலத்தோற்றங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.)
Question 15  | 
தமிழ்நாடு நிலத்தோற்றத்தின் அடிப்படையில் எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
3  | |
4  | |
5     | |
6  | 
Question 15 Explanation: 
 (குறிப்பு: ஐந்து பெரும் பிரிவுகள்
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்குத் தொடர்ச்சி மலை
பீடபூமிகள்
கடற்கரைக் சமவெளிகள்
உள்நாட்டு சமவெளிகள்)
Question 16  | 
- கூற்று 1: மேற்கு தொடர்ச்சி மலை வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்ட சுவாமிதோப்பில் உள்ள மருதமலை வரை நீண்டுள்ளது.
 - கூற்று: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் உயரம் 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரை வேறுபட்டுள்ளது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 16 Explanation: 
 (குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் உயரம் 2000 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை வேறுபட்டுள்ளது.)
Question 17  | 
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்  __________ சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது.
2000       | |
2500      | |
3000         | |
4000  | 
Question 18  | 
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படும் கணவாய்களில் தவறானது எது?
பாலக்காட்டு கணவாய்  | |
செங்கோட்டை கணவாய்  | |
முகனூர் கணவாய்  | |
ஆரல்வாய்மொழி கணவாய்  | 
Question 18 Explanation: 
 (குறிப்பு: பாலக்காட்டு கணவாய், செங்கோட்டை கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய், அச்சன்கோவில் கணவாய் ஆகியன மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் முக்கிய கணவாய்கள் ஆகும்.)
Question 19  | 
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படும் மலைகளில் தவறானது எது?
ஏலக்காய் மலை  | |
வருசநாடு  | |
ஆண்டிப்பட்டி  | |
சேர்வராயன் மலை  | 
Question 19 Explanation: 
 (குறிப்பு: நீலகிரி, ஆனைமலை, பழனிமலை, ஏலக்காய் மலை, வருசநாடு, ஆண்டிப்பட்டி மற்றும் அகத்தியர் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய மலைகளாகும்.)
Question 20  | 
நீலகிரி மலையில் 2000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரங்கள் எத்தனை?
12     | |
18      | |
24      | |
28  | 
Question 20 Explanation: 
 (குறிப்பு: நீலகிரி மலை தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.)
Question 21  | 
நீலகிரி மலையின் உயரமான சிகரமான தொட்டபெட்டாவின் உயரம்
2536 மீ  | |
2031 மீ  | |
2538 மீ  | |
2637 மீ  | 
Question 21 Explanation: 
 (குறிப்பு: நீலகிரி மலையில் உள்ள மற்றொரு சிகரமான முக்குருத்தி 2554 மீட்டர் உயரம் கொண்டது.)
Question 22  | 
நீலகிரி மலையில் __________க்கும் அதிகமான பூக்கும் தாவர வகைகள் காணப்படுகின்றன.
2700      | |
3200      | |
3500      | |
3800  | 
Question 22 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இங்கு காணப்படுகின்றன.)
Question 23  | 
- கூற்று 1: ஊட்டி, குன்னூர் ஆகியவை நீலகிரி மலையில் அமைந்துள்ள முக்கிய மலை வாழிடங்களாகும்.
 - கூற்று 2: நீலகிரி மலையில் காணப்படும் மேட்டுநில புல்வெளிகளும் புதர் நிலங்களும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சலுக்காக அழிக்கப்பட்டுவிட்டன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 24  | 
ஆனைமலை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியில் __________ கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ளது.
பாலக்காட்டு கணவாய்  | |
செங்கோட்டை கணவாய்  | |
அச்சன்கோவில் கணவாய்  | |
ஆரல்வாய்மொழி கணவாய்  | 
Question 24 Explanation: 
 (குறிப்பு: ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் ஆனைமலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.)
Question 25  | 
கீழ்க்கண்டவற்றுள் ஆனைமலையில் அமைந்துள்ள பகுதிகள் எவை?
- ஆனைமலை புலிகள் காப்பகம்
 - ஆழியாறு பாதுகாக்கப்பட்ட காடுகள்
 - வால்பாறை மலை வாழிடம்
 - காடம்பாறை நீர்மின் நிலையம்
 
அனைத்தும்       | |
1, 2, 4      | |
1, 3, 4       | |
1, 2, 3  | 
Question 26  | 
- கூற்று 1: பழனிமலை, மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியாகும்.
 - கூற்று 2: பழனிமலையின் மேற்கு பகுதியைத் தவிர மற்றவை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 26 Explanation: 
 (குறிப்பு: பழனிமலையின் மேற்கு பகுதியைத் தவிர மற்றவை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளன.)
Question 27  | 
பழனிமலையின் இரண்டாவது உயரமான சிகரமான வேம்படிசோலையின் உயரம்
2528 மீ  | |
2507 மீ  | |
2505 மீ  | |
2498 மீ  | 
Question 27 Explanation: 
 (குறிப்பு: மலைவாழிடமான கொடைக்கானல் (2150 மீ) பழனிமலையின் தென் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.)
Question 28  | 
பழனி மலையின் உயரமான சிகரம்_________.
வேம்படி சோலை  | |
வந்தராவ்  | |
பெருமாள் மலை  | |
பகாசுரா  | 
Question 28 Explanation: 
 (குறிப்பு: வந்தராவ் சிகரம் 2533 மீ உயரமுடையது.)
Question 29  | 
- கூற்று: தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் மலைகள் ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 - காரணம்: இங்கு அதிகமான ஏலக்காய் பயிரிடப்படுவதால் இப்பெயர்பெற்றது.
 
கூற்று சரி மற்றும் காரணம் தவறு  | |
கூற்று தவறு மற்றும் காரணம் சரி  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை  | 
Question 29 Explanation: 
 (குறிப்பு: மிளகு மற்றும் காபி ஆகியன ஏலக்காய் மலைப்பகுதியில் பயிரிப்படும் முக்கிய பயிர்களாகும்.)
Question 30  | 
ஏலக்காய் மலை வடமேற்கில் __________ மலையோடு இணைகிறது.
பழனிமலை  | |
ஆனைமலை  | |
ஆண்டிப்பட்டி  | |
வருசநாடு  | 
Question 30 Explanation: 
 (குறிப்பு:  ஏலக்காய் மலை வடமேற்கில் ஆனைமலையோடும் வடகிழக்கில் பழனி மலையோடும், தென்கிழக்கில் ஆண்டிப்பட்டி மற்றும் வருசநாடு குன்றுகளோடும் இணைகின்றன.)
Question 31  | 
பொருத்துக. (மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் - உயரம் (மீட்டரில்))
- தொட்டபெட்டா i) 1, 918
 - முக்குருத்தி ii) 2019
 - வேம்படி சோலை iii) 2234
 - பெருமாள் மலை iv) 2505
 - கோட்டைமலை v) 2554
 - பகாசுரா vi) 2637
 
i    	iii   	v    	iv    	ii    	vi  | |
ii    	v    	iv    	vi   	i   	iii  | |
vi    	v    	iv    	iii    	ii    	i  | |
i    	ii    	iii    	iv    	v    	vi  | 
Question 32  | 
- கூற்று 1: மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு நோக்கிய நீட்சி வருசநாடு மற்று ஆண்டிப்பட்டி குன்றுகள் ஆகும்.
 - கூற்று 2: மேகமலை, கழுகுமலை, குரங்கனி மலை, சுருளி மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைக்குன்றுகளில் காணப்படுகின்றன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 32 Explanation: 
 (குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி வருசநாடு மற்று ஆண்டிப்பட்டி குன்றுகள் ஆகும்.)
Question 33  | 
வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைக்குன்றுகளின் தெற்கு சரிவுகளில் காணப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ‘மலை அணில் சரணாலயம்’ __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி  | |
திருநெல்வேலி  | |
விருதுநகர்  | |
கன்னியாகுமரி  | 
Question 33 Explanation: 
 (குறிப்பு: வைகை மற்றும் அதன் துணை ஆறுகள் இம்மலைக்குன்றுகளில் உருவாகின்றன.)
Question 34  | 
சிவஜோதி பர்வத், அகத்தியர் மலைகள் மற்றும் தெற்கு கைலாயம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மலை
வருசநாடு  | |
ஜவ்வாது மலை  | |
மகேந்திரகிரி மலைக்குன்றுகள்  | |
பொதிகை மலை  | 
Question 34 Explanation: 
 (குறிப்பு: பொதிகை மலையின் பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதன் தென் சரிவு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அமைந்துள்ளது.)
Question 35  | 
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் __________ பகுதியில் அமைந்துள்ளது.
ஆனைமலை  | |
பழனி மலை  | |
மகேந்திரகிரி மலை  | |
பொதிகை மலை  | 
Question 35 Explanation: 
 (குறிப்பு: பொதிகை மலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை செறிந்த ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதி வளமான பசுமை மாறா காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பழமையான கோயில்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றதாகும்.)
Question 36  | 
மகேந்திரகிரி மலைக்குன்றுகள் _________ மாவட்டங்களின் எல்லை பகுதிகளாகவும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியாகவும் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி  | |
தூத்துக்குடி, திருநெல்வேலி  | |
கன்னியாகுமரி, திருநெல்வேலி  | |
விருதுநகர், திருநெல்வேலி  | 
Question 36 Explanation: 
 (குறிப்பு: மகேந்திரகிரி மலைக்குன்றுகளின் சராசரி உயரம் 1645 மீ ஆகும்.)
Question 37  | 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை உந்துவிசை செயற்கைக்கோள் ஏவுதளம் __________ மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆனைமலை  | |
பழனி மலை  | |
மகேந்திரகிரி மலை  | |
பொதிகை மலை  | 
Question 38  | 
கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயரம் ___________ மீட்டர் முதல் _________ மீட்டர் வரை மாறுபடுகிறது.
600, 1000  | |
1100, 1600  | |
1100, 2000  | |
2100, 2600  | 
Question 38 Explanation: 
 (குறிப்பு: கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் பீடபூமியை சமவெளியிலிருந்து பிரிக்கின்றன.)
Question 39  | 
கிழக்குத் தொடர்ச்சி மலைக் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
- மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலன்றி கிழக்கு தொடர்ச்சி மலையானது ஒரு தொடர்ச்சியற்ற குன்றுகளாகும்.
 - இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
 - கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அமைந்துள்ளன.
 
1 மட்டும் தவறு  | |
1, 2 தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 40  | 
கீழ்க்கண்டவற்றுள் கிழக்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகள் அல்லாதது எது?
பச்சை மலை  | |
சேர்வராயன் மலை  | |
கொல்லி மலை  | |
கோட்டை மலை  | 
Question 40 Explanation: 
 (குறிப்பு: ஜவ்வாது, சேர்வராயன், கல்வராயன், கொல்லிமலை மற்றும் பச்சைமலை தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகளாகும்.)
Question 41  | 
கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சியான ஜவ்வாது மலை__________ மாவட்டங்களில் பரவியுள்ளன.
திருவண்ணாமலை, சேலம்  | |
சேலம், வேலூர்  | |
வேலூர், கிருஷ்ணகிரி  | |
திருவண்ணாமலை, வேலூர்  | 
Question 41 Explanation: 
 (குறிப்பு: ஜவ்வாது மலை வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை பிரிக்கிறது.)
Question 42  | 
ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம் ________ ஆகும்.
பழமலை  | |
வலசமலை  | |
மேல்பட்டு  | |
உருகமலை  | 
Question 42 Explanation: 
 (குறிப்பு: சுமார் 1100 முதல் 1150 மீட்டர் உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள் ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ளன.)
Question 43  | 
ஜவ்வாது மலையில் காவலூர் வானவியல் தொலைநோக்கி மையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1962      | |
1964     | |
1966    | |
1967  | 
Question 43 Explanation: 
 (குறிப்பு: ஜவ்வாது மலையின் பல பகுதிகள் நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் உருவானது.)
Question 44  | 
கல்வராயன் மலை ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகளுடன் இணைந்து ________ ஆறுகளின் ஆற்று வடிநிலப் பகுதியைப் பிரிக்கிறது.
பாலாறு, செய்யாறு  | |
செய்யாறு, பெண்ணையாறு  | |
பாலாறு, பெண்ணையாறு  | |
பாலாறு, காவிரி  | 
Question 44 Explanation: 
 (குறிப்பு: கல்வராயன் என்ற சொல் தற்போதுள்ள பழங்குடியினரின் பண்டைய கால பெயரான கரலர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)
Question 45  | 
கல்வராயன் மலைத்தொடரின் உயரம் __________ மீ முதல் __________ மீ வரை காணப்படுகிறது.
500, 1200  | |
600, 1220  | |
600, 1120  | |
700, 1220  | 
Question 45 Explanation: 
 (குறிப்பு: கல்வராயன் மலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட பகுதி சின்ன கல்வராயன் எனவும் தென்பகுதி பெரிய கல்வராயன் எனவும் குறிப்பிடப்படுகிறது.)
Question 46  | 
சின்ன கல்வராயன் மலைப் பகுதியின் சராசரி உயரம் ___________ மீட்டராகும்.
720       | |
780       | |
825      | |
855  | 
Question 46 Explanation: 
 (குறிப்பு: பெரிய கல்வராயன் மலையின் சராசரி உயரம் 1220 மீட்டராகும்.)
Question 47  | 
1200 முதல் 1620 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சேர்வராயன் மலைத்தொடர் _________ நகருக்கு அருகே அமைந்துள்ளது.
நாமக்கல்  | |
சேலம்  | |
கிருஷ்ணகிரி  | |
வேலூர்  | 
Question 47 Explanation: 
 (குறிப்பு: சேர்வராயன் மலைத்தொடரின் பெயரானது உள்ளூர் தெய்வமான 'சேர்வராயன்’ என்ற பெயரில் இருந்து வந்ததாகும்.)
Question 48  | 
சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ____________ என்பது கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள உயரமான சிகரம் ஆகும்.
உருகமலை  | |
குட்டிராயன்  | |
சோலைக்கரடு  | |
பழமலை  | 
Question 48 Explanation: 
 (குறிப்பு: சோலைக்கரடு 1620 மீட்டர் உயரம் கொண்ட சிகரம் ஆகும்.)
Question 49  | 
‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழிடம் ___________ மலைத்தொடரில் அமைந்துள்ளது.
கொல்லிமலை  | |
சேர்வராயன் மலை  | |
பச்சை மலை  | |
கல்வராயன் மலை  | 
Question 49 Explanation: 
 (குறிப்பு: சேர்வராயன் மலையில் அமைந்துள்ள சேர்வராயன் கோவில் இப்பகுதியின் உயரமான பகுதி ஆகும் (1623 மீட்டர்). )
Question 50  | 
பொருத்துக.
- சேர்வராயன் மலை i) 1623
 - பழமலை ii) 1500
 - உருகமலை iii) 1486
 - குட்டிராயன் iv) 1395
 - முகனூர் v) 1279
 - வலசமலை vi) 1034
 
i    	iii   	v    	iv    	ii    	vi  | |
ii    	v    	iv    	vi   	i   	iii  | |
vi    	v    	iv    	iii    	ii    	i  | |
i    	ii    	iii    	iv    	v    	vi  | 
Question 51  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள் - மாவட்டங்கள்)
கோயம்புத்தூர் - மருதமலை, வெள்ளியங்கிரி மற்றும் ஆனைமலை  | |
கிருஷ்ணகிரி – தீர்த்த மலை, சித்தேரி மற்றும் வத்தல் மலை  | |
திண்டுக்கல் - பழனிமலை மற்றும் கொடைக்கானல்  | |
ஈரோடு - சென்னிமலை மற்றும் சிவன் மலை  | 
Question 51 Explanation: 
 (குறிப்பு: தர்மபுரி – தீர்த்த மலை, சித்தேரி மற்றும் வத்தல் மலை.)
Question 52  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள் - மாவட்டங்கள்)
ஜவ்வாது, ஏலகிரி மற்றும் இரத்தின மலை - வேலூர்  | |
சேர்வராயன், கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள் – சேலம்  | |
கல்வராயன் மற்றும் செஞ்சி மலை – பெரம்பலூர்  | |
மகேந்திரகிரி மற்றும் அகத்திய மலை – திருநெல்வேலி  | 
Question 52 Explanation: 
 (குறிப்பு: கல்வராயன் மற்றும் செஞ்சி மலை – விழுப்புரம்.)
Question 53  | 
பொருத்துக.
- நாமக்கல் i) பச்சை மலை
 - பெரம்பலூர் ii) கொல்லிமலை
 - கன்னியாகுமரி iii) மருதுவாழ் மலை
 - நீலகிரி iv) நீலகிரி மலை
 
i     	iii    	ii    	iv  | |
ii   	iii    	i   	iv  | |
ii     	i     	iii   	iv  | |
iii    	i   	ii    	iv  | 
Question 54  | 
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை _________ சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
1300       | |
1800     | |
2300      | |
2800  | 
Question 54 Explanation: 
 (குறிப்பு: 1300 மீட்டர் வரை உயரம் கொண்ட கொல்லிமலை, தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது.)
Question 55  | 
அரப்பளீஸ்வரர் கோவில் _________ மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தவமாகும்.
இரத்தின மலை  | |
செஞ்சி மலை  | |
கொல்லி மலை  | |
பச்சைமலை  | 
Question 55 Explanation: 
 (குறிப்பு: கிழக்கித் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் கொல்லி மலையில் பசுமைமாறாக் காடுகள் அல்லது சோலை காடுகள் அதிகம் காணப்படுகின்றன.)
Question 56  | 
கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் பச்சைமலை உயரம் குறைந்த குன்றுத் தொடராக காணப்படுகிறது?
- திருச்சிராப்பள்ளி
 - பெரம்பலூர்
 - சேலம்
 - வேலூர்
 
1, 2, 3       | |
2, 3, 4        | |
1, 2, 4      | |
1, 3, 4  | 
Question 56 Explanation: 
 (குறிப்பு: இம்மலையில் காணப்படும் தாவரங்கள் மற்ற பகுதியை விட பசுமையாக காணப்படுவதால் இது பச்சைமலை என அழைக்கப்படுகிறது. இம்மலையில் பலாப்பழம் ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.)
Question 57  | 
- கூற்று 1: தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
 - கூற்று 2: தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 57 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டு பீடபூமியின் உயரம் கிழக்கிலிருந்து மேற்காக உயர்ந்து செல்கிறது.)
Question 58  | 
தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி கடல் மட்டத்திலிருந்து _________ மீட்டர் முதல் _________ மீட்டர் உயரம் வரை வேறுபட்டுக் காணப்படுகிறது.
50, 150  | |
150, 300  | |
150, 500  | |
150, 600  | 
Question 58 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டு பீடபூமி வடக்கே அகன்றும் தெற்கே குறுகியும் பல உட்பிரிவுகளைக் கொண்டும் உள்ளது.)
Question 59  | 
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரமஹால் பீடபூமியில் எந்தெந்த மாவட்டங்கள் அமைந்துள்ளன?
- கிருஷ்ணகிரி
 - தர்மபுரி
 - சேலம்
 - நாமக்கல்
 
1, 2     	  | |
1, 3      | |
1, 4      | |
2, 4  | 
Question 59 Explanation: 
 (குறிப்பு: மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியான பாரமஹால் பீடபூமியின் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.)
Question 60  | 
கோயம்புத்தூர் பீடபூமியின் பரப்பளவு சுமார் _________ சதுர கிலோமீட்டர்களாகும்.
1580       | |
1860       | |
2340       | |
2560  | 
Question 60 Explanation: 
 (குறிப்பு: கோயம்புத்தூர் பீடபூமியானது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.)
Question 61  | 
__________ ஆறு கோயம்புத்தூர் பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது.
காவிரி   | |
செய்யாறு  | |
மோயர் ஆறு  | |
பாலாறு  | 
Question 61 Explanation: 
 (குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் கோயம்புத்தூர் பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.)
Question 62  | 
கோயம்புத்தூர் பீடபூமி கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது?
- சேலம்
 - ஈரோடு
 - கோயம்புத்தூர்
 - நாமக்கல்
 
2, 3, 4     		  | |
1, 3, 4    	  | |
1, 2, 4     | |
1, 2, 3   | 
Question 62 Explanation: 
 (குறிப்பு: கோயம்புத்தூர் பீடபூமியின் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.)
Question 63  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது.
 - இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.
 - வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | 
Question 63 Explanation: 
 (குறிப்பு: நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.)
Question 64  | 
தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகளை ___________ பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
2  | |
3   | |
4  | |
 5  | 
Question 64 Explanation: 
 (குறிப்பு: சமவெளிகளின் இரு பிரிவுகள்
உள்நாட்டு சமவெளிகள்
கடற்கரை சமவெளிகள்)
Question 65  | 
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- பாலாறு, பெண்ணையாறு, காவிரி மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கியுள்ளது.
 - காவிரியாற்றுச் சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும்.
 - காவிரி சமவெளியானது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
 
1 மட்டும் தவறு  | |
1, 3 தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 66  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (கடற்கரைச் சமவெளி)
தமிழ்நாட்டின் கடற்கரைச் சமவெளியானது கோரமண்டல் அல்லது சோழ மண்டல சமவெளி (சோழர்கள் நிலம்) எனவும் அழைக்கப்படுகிறது.  | |
இச்சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.  | |
இச்சமவெளி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.  | |
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் 80 கிலோமீட்டர் அகலத்துடன் காணப்படுகிறது.  | 
Question 66 Explanation: 
 (குறிப்பு: கடற்கரைச் சமவெளி சில இடங்களில் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது. இது உயரமான கடற்கரை என்றாலும் சில பகுதிகள் கடலில் மூழ்கி உள்ளன.)
Question 67  | 
இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ___________ என்று அழைக்கப்படுகிறது.
வளைகுடா  | |
தேரி  | |
சேரி  | |
உரி  | 
Question 67 Explanation: 
 (குறிப்பு: கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன.)
Question 68  | 
- கூற்று 1: தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனைமரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
 - கூற்று 2: சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கன்னியாகுமரியின் கோவளம் மற்றும் வெள்ளி கடற்கரைகளும் புகழ்பெற்ற தமிழிக கடற்கரைகளாகும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 68 Explanation: 
 (குறிப்பு: வங்காள விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்பு வாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது.)
Question 69  | 
- கூற்று: தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றும் ஆறுகளாகும்.
 - காரணம்: தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலங்களிலும் மழை பெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது.
 
கூற்று சரி மற்றும் காரணம் தவறு  | |
கூற்று தவறு மற்றும் காரணம் சரி  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை  | 
Question 69 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டின் பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.)
Question 70  | 
காவிரி ஆறு தமிழ்நாட்டில் ___________ கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
325      | |
354      | |
412      | |
416  | 
Question 70 Explanation: 
 (குறிப்பு: காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது.)
Question 71  | 
காவிரி ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே __________கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.
46       | |
52      | |
64      | |
72  | 
Question 71 Explanation: 
 (குறிப்பு: காவிரி ஆறு தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.)
Question 72  | 
ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை __________ மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
நாமக்கல்  | |
சேலம்  | |
ஈரோடு  | |
திருச்சி  | 
Question 72 Explanation: 
 (குறிப்பு: மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலது கரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது.)
Question 73  | 
- கூற்று 1: கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
 - கூற்று 2: அமராவதி, நொய்யல் ஆறுகள் இணைகின்ற பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால் இது 'அகன்ற காவிரி’ என அழைக்கப்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 73 Explanation: 
 (குறிப்பு: கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.)
Question 74  | 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு கிளைகளாக பிரியும் காவிரியாற்றின் வடகிளை _________ என்று அழைக்கப்படுகிறது.
கொலேருன்  | |
காவிரி  | |
அமராவது  | |
நொய்யல்  | 
Question 74 Explanation: 
 (குறிப்பு: கொள்ளிடம் என்பதே கொலேருன் என அழைக்கப்படுகிறது. தென்கிளை காவிரியாக தொடர்கிறது.)
Question 75  | 
காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள வலைப்பின்னல் அமைப்பு __________ என்று அழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்  | |
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்  | |
தென்னிந்தியாவின் தோட்டம்  | |
தமிழ்நாட்டின் தோட்டம்  | 
Question 75 Explanation: 
 (குறிப்பு: காவிரி ஆறு கல்லணையை கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது. பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.)
Question 76  | 
தமிழ்நாட்டில் உள்ள தீவுகளில் தவறானது எது?
புள்ளி வாசல்  | |
பாம்பன்  | |
குருசடை  | |
சாத்தனூர்  | 
Question 76 Explanation: 
 (குறிப்பு: பாம்பன், முயல் தீவு, குருசடை, நல்லதண்ணி தீவு, புள்ளிவாசல், ஸ்ரீரங்கம், உப்பு தண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப்பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.)
Question 77  | 
பாலாறு __________ சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாய்கிறது.
78,711     	  | |
77,181    	  | |
71,871     | |
17,871     | 
Question 77 Explanation: 
 (குறிப்பு: பாலாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.)
Question 78  | 
பாலாறு பாயும் மொத்த பரப்பளவில் ____________ சதவிகிதம் தமிழகத்தில் உள்ளது.
48%    	  | |
50%      | |
52%       | |
57%  | 
Question 78 Explanation: 
 (குறிப்பு: 57% தவிர்த்து மீதமுள்ள பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளன.)
Question 79  | 
பாலாற்றின் மொத்த நீளம் ___________ கிலோமீட்டர் ஆகும்.
252        | |
268      | |
284       | |
348  | 
Question 79 Explanation: 
 (குறிப்பு: இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது.)
Question 80  | 
கீழ்க்கண்டவற்றுள் பாலாற்றின் துணை ஆறுகள் எவை?
- பொன்னி
 - கவுண்டினியா நதி
 - மலட்டாறு
 - செய்யாறு
 - கிளியாறு
 
அனைத்தும்     | |
1, 2, 4, 5    	  | |
2, 4, 5    	  | |
1, 3, 4, 5  | 
Question 80 Explanation: 
 (குறிப்பு: பாலாறு வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து, கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.)
Question 81  | 
தென்பெண்ணையாற்றின் வடிநிலப்பரப்பு ___________ சதுர கிலோமீட்டர் ஆகும்.
15619      | |
15824       | |
16202     | |
16019  | 
Question 81 Explanation: 
 (குறிப்பு: இதில் 77% தமிழ்நாட்டில் உள்ளது. தென்பெண்ணையாறு கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது.)
Question 82  | 
தென்பெண்ணையாறு, கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாகக் ___________க்கு அருகில் பிரிகிறது.
வெலிங்டன் ஏறி  | |
ஸ்டான்லி நீர்த்தேக்கம்  | |
திருக்கோவிலூர் அணைக்கட்டு  | |
கோதையார் ஏரி  | 
Question 82 Explanation: 
 (குறிப்பு: கெடிலம் ஆறு கடலூருக்கு அருகிலும் பெண்ணையாறு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அருகிலும் வங்கக் கடலில் கலக்கின்றன.)
Question 83  | 
தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் ____________ கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
157       | |
182        | |
234        | |
247  | 
Question 83 Explanation: 
 (குறிப்பு: சின்னாறு, மார்க்கண்ட நதி, வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு ஆகியன தென்பெண்ணையாற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.)
Question 84  | 
கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள் ____________ ஆற்றின் குறுக்கே உருவாக்கப்பட்டுள்ளன.
பாலாறு  | |
செய்யாறு  | |
தென்பொருணையாறு  | |
வெள்ளாறு  | 
Question 84 Explanation: 
 (குறிப்பு: பெண்ணையாறு இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது. மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி) பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.)
Question 85  | 
வைகை ஆறு கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களின் வழியாக பாய்கிறது?
- மதுரை
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - திண்டுக்கல்
 - இராமநாதபுரம்
 
1, 2, 3       | |
1, 3, 5      | |
1, 2, 5      | |
1, 4, 5  | 
Question 85 Explanation: 
 (குறிப்பு: வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகிறது.)
Question 86  | 
வைகை ஆற்றின் வடிநிலம் _____________ ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது.
7232      | |
7347        | |
7641       | |
7741  | 
Question 86 Explanation: 
 (குறிப்பு: இப்பரப்பளவு முழுவதும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.)
Question 87  | 
வைகை ஆற்றின் மொத்த நீளம் __________ கிலோ மீட்டராகும்.
159         | |
184       | |
238      | |
258  | 
Question 87 Explanation: 
 (குறிப்பு: வைகை ஆற்றின் நீரானது இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது.)
Question 88  | 
- கூற்று 1: தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்பதிலிருந்து பெறப்பட்டது.
 - கூற்று 2: தாமிரபரணி ஆற்றில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 88 Explanation: 
 (குறிப்பு: தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.)
Question 89  | 
கீழ்க்கண்டவற்றுள் தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள் எவை?
- கரையாறு
 - சேர்வலாறு
 - மணிமுத்தாறு
 - கடனா நதி
 - பச்சையாறு
 - சிற்றாறு
 - இராமநதி
 
அனைத்தும்      | |
1, 3, 5, 6, 7      | |
2, 4, 6, 7      | |
1, 3, 4, 6  | 
Question 89 Explanation: 
 (குறிப்பு: தாமிரபரணி ஆற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.)
Question 90  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்-அமைந்துள்ள மாவட்டம்)
ஒகேனக்கல் – தர்மபுரி  | |
கல்யாண தீர்த்தம் – தேனி  | |
ஆகாய கங்கை – நாமக்கல்  | |
பைக்காரா – நீலகிரி  | 
Question 90 Explanation: 
 (குறிப்பு: கல்யாண தீர்த்தம், குற்றாலம் ஆகிய நீர்வீழ்ச்சிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.)
Question 91  | 
கீழ்க்கண்டவற்றுள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள் எவை?
- வைதேகி
 - செங்குபதி
 - சிறுவாணி
 - கோவை குற்றாலம்
 - திருமூர்த்தி
 
1, 2, 3, 4    	  | |
2, 3, 5    	  | |
1, 2, 3, 5    	  | |
1, 4, 5  | 
Question 92  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்-அமைந்துள்ள மாவட்டம்)
கிள்ளியூர் - சேலம்  | |
ஐயனார் – விருதுநகர்  | |
திருமூர்த்தி – திருப்பூர்  | |
குட்லாடம்பட்டி – தர்மபுரி  | 
Question 92 Explanation: 
 (குறிப்பு: குட்லாடம்பட்டி - மதுரை)
Question 93  | 
கீழ்க்கண்டவற்றுள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள் எவை?
- திருப்பரப்பு
 - காளிகேசம்
 - உலக்கை
 - கும்பக்கரை
 - வட்டப்பாறை
 
அனைத்தும்       | |
1, 2, 3, 4     	  | |
2, 3, 4, 5     	  | |
1, 2, 3, 5  | 
Question 93 Explanation: 
 (குறிப்பு: கும்பக்கரை மற்றும் சுருளி ஆகியவை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள் ஆகும்.)
Question 94  | 
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு ___________ மி.மீட்டராக உள்ளது.
858.5     	  | |
895.8     | |
958.5    	  | |
985.6  | 
Question 94 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டின் வெப்பநிலை 18 °C முதல் 43 °C வரையிலும் உள்ளது.)
Question 95  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் பருவக்காலங்கள்)
- குளிர்காலம்: ஜனவரி – பிப்ரவரி
 - கோடைக் காலம்: மார்ச் – மே
 - தென்மேற்கு பருவக்காற்று காலம்: ஜூன் – அக்டோபர்
 - வடகிழக்கு பருவக்காற்று காலம்: நவம்பர் – டிசம்பர்
 
1, 2 தவறு  | |
2, 3 தவறு  | |
3, 4 தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 96  | 
- கூற்று 1: ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் கடகரேகைக்கும் இடையே விழுகிறது.
 - கூற்று 2: தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15 °C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 96 Explanation: 
 (குறிப்பு: ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.)
Question 97  | 
- கூற்று 1: தமிழ்நாட்டில் மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5 °C க்கும் குறைவாக உள்ளது.
 - கூற்று 2: நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0 °C ஆகவும் பதிவாகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 98  | 
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
 - தமிழ்நாட்டில் கோடை கால வெப்பநிலையானது 30°Cலிருந்து 40 °C வரை வேறுபடுகிறது.
 - தமிழ்நாட்டின் கோடைக்கால பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவமழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | 
Question 99  | 
- கூற்று: மார்ச் முதல் மே மாதம் வரை வட இந்திய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிறது.
 - காரணம்: இக்காலக் கட்டத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தைப் பெறுகிறது.
 
கூற்று சரி மற்றும் காரணம் தவறு  | |
கூற்று தவறு மற்றும் காரணம் சரி  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது  | |
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை  | 
Question 99 Explanation: 
 (குறிப்பு: இச்சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்திய பெருங்கடலிலிருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது தென்மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.)
Question 100  | 
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக _________ அளவு மழையைப் பெறுகிறது.
25 செ.மீ  | |
50 செ.மீ  | |
80 செ.மீ  | |
100 செ.மீ  | 
Question 100 Explanation: 
 (குறிப்பு: தென்மேற்கு பருவக்காற்று காலத்தில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன.)
Question 101  | 
பூமியின் சுழற்சியின் காரணமாக நகரும் அல்லது இயங்கும் பொருட்களை வட அரைக்கோளத்தில் வலதுபுறமாகவும், தென் அரைக்கோளத்தில் இடதுபுறமாகவும் திசைகளை மாற்றியமைக்கும் விசை
நியூட்டன் விசை  | |
மையநோக்கு விசை  | |
மையவிலக்கு விசை  | |
கொரியாலிஸ் விசை  | 
Question 102  | 
வடகிழக்கு பருவக்காற்று குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது.  | |
மத்திய ஆசியா மற்றும் வடஇந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம், வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.  | |
வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் சூரியன் மகர ரேகையிலிருந்து கடக ரேகைக்கு செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  | |
வடகிழக்கு பருவக் காற்றானது திரும்பிவரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்றைப் 'பின்னடையும் பருவக்காற்று' என்றும் அழைப்பர்.  | 
Question 102 Explanation: 
 (குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் சூரியன் கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்கு செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.)
Question 103  | 
தமிழ்நாட்டின் வருடாந்திர மழையளவில் ___________ சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றில் இருந்து கிடைக்கிறது.
35%  | |
42%      | |
48%      | |
54%  | 
Question 103 Explanation: 
 (குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் தமிழக கடற்கரை மாவட்டங்கள் 60 சதவீதமும் உள்மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர மழையையும் பெறுகின்றன.)
Question 104  | 
- கூற்று 1: வடகிழக்கு பருவக்காற்றுக் காலத்தில் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகின்றன.
 - கூற்று 2: தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை வெப்ப மண்டல சூறாவளி மூலம் கிடைக்கிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 104 Explanation: 
 (குறிப்பு: வங்கக் கடலில் உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மிக கனத்த மழையைத் தோற்றுவிக்கின்றன.)
Question 105  | 
வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் _________ அளவு மழையைப் பெறுகின்றன.
50 முதல் 100 செ.மீ வரை  | |
100 முதல் 200 செ.மீ வரை  | |
100 முதல் 150 செ.மீ வரை  | |
150 முதல் 300 செ.மீ வரை  | 
Question 105 Explanation: 
 (குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன.)
Question 106  | 
தமிழ்நாட்டின் அதிக மழை பெறும் பகுதி ____________.
கன்னியாகுமரி  | |
நீலகிரி  | |
சின்னக்கல்லார்  | |
நாகப்பட்டினம்  | 
Question 106 Explanation: 
 (குறிப்பு: வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகும்.)
Question 107  | 
மண்ணின் தன்மையானது கீழ்க்கண்ட எந்த காரணிகளை சார்ந்தது?
- காலநிலை
 - தாய்ப் பாறைகள்
 - தாவரமூட்டம்
 - கடற்கரை
 
1, 2, 3      | |
2, 3, 4     | |
1, 3, 4      | |
, 2, 4  | 
Question 107 Explanation: 
 (குறிப்பு: இரண்டு அங்குல வளமான மண் உருவாக 300 முதல் 1000 ஆண்டுகளாகின்றன.)
Question 108  | 
தமிழ்நாட்டில் காணப்படும் மண்களை அதன் தன்மைகளைக் கொண்டு ___________ பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
3  | |
4    | |
5  | |
6  | 
Question 108 Explanation: 
 (குறிப்பு:
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
உவர் மண்)
Question 109  | 
வண்டல் மண் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண்படிவுகளால் உருவாகின்றன.  | |
சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளதால் இது ஒரு வளம்மிகுந்த மண்ணாகும்.  | |
இம்மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் அதிகமாக உள்ளன.  | |
இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண் ஆகும்.  | 
Question 109 Explanation: 
 (குறிப்பு: நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் வண்டல் மண்ணில் பயிரிடப்படுகின்றன. இம்மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளன.)
Question 110  | 
- கூற்று 1: தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் வண்டல் மண் காணப்படுகிறது.
 - கூற்று 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வண்டல் மண் அதிகம் காணப்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 111  | 
தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் __________ மண் உருவாகிறது.
சரளை மண்  | |
ரீகர் மண்  | |
செம்மண்  | |
உவர் மண்  | 
Question 111 Explanation: 
 (குறிப்பு: கரிசல் மண், ரீகர் மண் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 112  | 
கரிசல் மண்ணில் கீழ்க்கண்ட எந்த சத்துகள் குறைவாக உள்ளன?
- பாஸ்பாரிக் அமிலம்
 - ஹைட்ரஜன்
 - மக்னீசியம்
 - உயிரின பொருட்களின் சத்து
 
1, 2      | |
1, 2, 3      | |
1, 2, 4      | |
2, 3, 4  | 
Question 112 Explanation: 
 (குறிப்பு: கால்சியம், மக்னீசியம், கார்பனேட், பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.)
Question 113  | 
கரிசல் மண் கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் பெருமளவில் காணப்படுகிறது?
- கோயம்புத்தூர்
 - மதுரை
 - விருதுநகர்
 - திருநெல்வேலி
 - தூத்துக்குடி
 
அனைத்தும்      | |
1, 2, 4       | |
2, 3, 4      | |
1, 3, 4, 5  | 
Question 113 Explanation: 
 (குறிப்பு: பருத்தி, கம்பு, சோளம் மற்றும் கால்நடைத் தீவனங்கள் போன்ற முக்கிய பயிர்கள் கரிசல் மண்ணில் பயிரிடப்படுகின்றன.)
Question 114  | 
- கூற்று 1: தக்காண லாவா பீடபூமி பகுதிகளில் அரை வறண்ட காலநிலையில் கரிசல் மண் உருவாகிறது.
 - கூற்று 2: கரிசல் மண் மிக நுண்ணிய துகள்களைக் கொண்ட களிமண்ணால் ஆனது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 115  | 
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ___________ மண் பரவியுள்ளது.
சரளை மண்  | |
கரிசல் மண்  | |
செம்மண்  | |
உவர் மண்  | 
Question 115 Explanation: 
 (குறிப்பு: செம்மண், தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.)
Question 116  | 
செம்மண் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
செம்மண் மணல் மற்றும் களிமண் கலந்த தன்மை உடையது.  | |
செம்மண் அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது.  | |
நெல், கேழ்வரகு, புகையிலை மற்றும் காய்கறிகள் ஆகியன இம்மண்ணில் பயிரிடப்படும் முக்கிய பயிர் வகைகளாகும்.  | |
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இம்மண் அதிகம் காணப்படுகிறது.  | 
Question 116 Explanation: 
 (குறிப்பு: செம்மண் நுண் துகள்களை உடையதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை பெறவில்லை.)
Question 117  | 
___________ அதிக அளவில் காணப்படுவதால் செம்மண் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
நைட்ரஸ் ஆக்சைடு  | |
சல்ஃபர் டை ஆக்சைடு  | |
இரும்பு ஆக்சைடு  | |
அம்மோனியம் ஹைட்ராக்சைடு  | 
Question 117 Explanation: 
 (குறிப்பு: நைட்ரஜன், பாஸ்பரஸ், அமிலம் மற்றும் இலைமக்கு சத்துகள் செம்மண்ணில் குறைவாக காணப்படுகின்றன.)
Question 118  | 
சரளை மண் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் சரளை மண் காணப்படுகிறது.
 - நெல், இஞ்சி, மிளகு மற்றும் வாழை ஆகியன இம்மண்ணில் விளைகின்றன.
 - தேயிலை மற்றும் காபி பயிரிடுவதற்கும் செம்மண் ஏற்றதாக உள்ளது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | 
Question 118 Explanation: 
 (குறிப்பு: சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இவை ஒரு வளமற்ற மண்ணாகும்.)
Question 119  | 
உவர் மண் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
- தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
 - வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது.
 - டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்ததால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.
 
1 மட்டும் தவறு  | |
1, 2 தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 120  | 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலவரைபடத்தின்படி மொத்த நிலப்பரப்பில் ___________ சதவீத நிலப்பகுதி பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இரு நிலைகள் கண்டறியப்பட்டுள்ளது.
14%  | |
8%      | |
10%      | |
12%      | 
Question 120 Explanation: 
 (குறிப்பு: தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகின்ற பகுதிகளாகும்.)
Question 121  | 
தேனி மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் சுமார் ___________ஹெக்டேர் நிலம் காற்றடி மணல் படிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
6000      | |
1000      | |
12000     | |
14000  | 
Question 121 Explanation: 
 (குறிப்பு: 12000 ஹெக்டேர் என்பது 120 சதுர கிலோமீட்டர் ஆகும்.)
Question 122  | 
கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்கை தாவரங்களின் பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகள்?
- நிலத்தோற்றம்
 - மண்ணின் தன்மை
 - வெப்பநிலை
 - மழைப்பொழிவு
 
அனைத்தும்    | |
1, 2, 3     | |
2, 3, 4         | |
1, 3, 4  | 
Question 122 Explanation: 
 (குறிப்பு: இயற்கை தாவரம் என்பது புவியில் இயற்கையாக வளரும் தாவரங்களின் தொகுப்பாகும்.)
Question 123  | 
1988 தேசிய வனக் கொள்கையின்படி, புவிப்பரப்பு ___________ பகுதி காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும்.
மூன்றில் இரண்டு பகுதி  | |
மூன்றில் ஒரு பகுதி  | |
நான்கில் ஒரு பகுதி  | |
நான்கில் மூன்று பகுதி  | 
Question 123 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டில் மொத்த காடுகளின் பரப்பளவு இவற்றைவிட மிக குறைவாகும்.)
Question 124  | 
2017ஆம் ஆண்டு மாநில வன அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவு ________ ச.கி.மீட்டர்களாகும்.
16.821      	  | |
18.681    	  | |
22.861     	  | |
26.281  | 
Question 124 Explanation: 
 (குறிப்பு: இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் 20.21 சதவீதமாகும்.)
Question 125  | 
இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு __________ சதவீதமாகும்.
1.84        | |
2.48       | |
2.99     | |
3.45  | 
Question 125 Explanation: 
 (குறிப்பு: ஈரப்பத பசுமைமாறா காடுகளிலிருந்து புதர் காடுகள் வரை தமிழ்நாட்டின் காடுகள் வேறுபடுகின்றன.)
Question 126  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (காடுகளின் வகைகள் - பரப்பளவு (ச.கி.மீ))
- ஒதுக்கப்பட்ட காடுகள் - 19,459
 - பாதுகாக்கப்பட்ட காடுகள் - 1,782
 - வரையறுக்கப்படாத காடுகள் - 5,266
 
1 மட்டும் தவறு  | |
2 மட்டும் தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 127  | 
தமிழகத்தில் உள்ள காடுகள் __________ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
3    	  | |
4   | |
5    | |
 6  | 
Question 127 Explanation: 
 (குறிப்பு: ஐந்து வகை காடுகள்
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
மிதவெப்ப மண்டல மலைக்காடுகள்
வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள்
மாங்குரோவ் காடுகள்
வெம்பு மண்டல முட்புதர்க் காடுகள்)
Question 128  | 
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.(வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்)
- இவ்வகைக் காடுகள் அதிக மழைப்பெறும் பகுதிகளில் காணப்படுகின்றன.
 - திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது.
 - இலவங்கமரம், மலபார், கருங்காலி மரம், பனாசமரம், ஜாவாபிளம், ஜமுன், பலா மருது, அயனி, கிராப் மிர்ட்டல் போன்ற மரவகைகள் இக்காடுகளில் காணப்படுகின்றன.
 - அரை பசுமைமாறா வகைக் காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படுகிறது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3, 4 சரி  | 
Question 129  | 
அரை பசுமைமாறா வகைக் காடுகள் கீழ்க்கண்ட எப்பகுதிகளில் காணப்படுகின்றன?
- சேர்வராயன் மலை
 - கொல்லி மலை
 - பச்சை மலை
 - பொதிகை மலை
 
1, 2, 4     | |
1, 2, 3       | |
2, 3, 4      | |
1, 3, 4  | 
Question 129 Explanation: 
 (குறிப்பு: இந்திய மகோகனி, குரங்கு தேக்கு, உல்லி காசியா, பலா மற்றும் மாமரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும்.)
Question 130  | 
__________ வகைக் காடுகள் சோலாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்  | |
மிதவெப்ப மண்டல மலைக்காடுகள்  | |
வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள்  | |
மாங்குரோவ் காடுகள்  | 
Question 130 Explanation: 
 (குறிப்பு: மிதவெப்ப மண்டல மலைக்காடுகள் ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன.)
Question 131  | 
மிதவெப்ப மண்டல மலைக்காடுகளில் காணப்படும் மரங்கள் எவை?
- நீலகிரி
 - சாம்பா
 - வெள்ளை லிட்சா
 - ரோஸ் ஆப்பிள்
 - வாகை
 
1, 2, 3, 4      | |
2, 3, 4      | |
1, 2, 3, 4     | |
1, 2, 4, 5  | 
Question 131 Explanation: 
 (குறிப்பு: மிதவெப்ப மண்டல மலைக்காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன.)
Question 132  | 
வெப்பமண்டல இலையுதிர்க்காடுகளில் உள்ள மரங்கள் _________ மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன.
15     | |
20      | |
25      | |
30  | 
Question 132 Explanation: 
 (குறிப்பு: வெப்பமண்டல இலையுதிர்க்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.)
Question 133  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள்)
- இவ்வகைக் காடுகள் பசுமைமாறாக்காடுகள் மற்றும் அரை பசுமை மாறா காடுகளின் விளிம்பு பகுதிகளில் காணப்படுகின்றன.
 - இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன.
 - பருத்திப்பட்டு மரம், இலவம், கடம்பா, டாகத் தேக்கு, வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மர வகைகளாகும்.
 - மூங்கில்களும் இக்காடுகளில் காணப்படுகிறது.
 
அனைத்தும் சரி  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3, 4 சரி  | 
Question 134  | 
மாங்குரோவ் காடுகள் கீழ்க்கண்ட எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன?
- பிச்சாவரம்
 - வேதாரண்யம்
 - முத்துப்பேட்டை
 - சத்திரம்
 - தூத்துக்குடி
 - இராமநாதபுரம்
 
1, 2, 5, 6      | |
1, 3, 4, 5       | |
1, 2, 3, 4, 5      | |
3, 4, 5  | 
Question 134 Explanation: 
 (குறிப்பு: ஆசிய மாங்குரோவ், வெள்ளை மாங்குரோவ், காட்டுமல்லி இந்தியன் ப்ரிவெட் மரங்கள் போன்றவை மாங்குரோவ் காடுகளில் காணப்படும் மரங்களாகும்.)
Question 135  | 
- கூற்று 1: சதுப்பு நிலத் தாவரங்கள், கடல் அலைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கடற்க்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றது.
 - கூற்று 2: பவளப் பாறைகளையும், கடலோர புல்வெளிகளையும் மணல் படிவுகளால் மூழ்கடிக்கப்படாமல் சதுப்புநிலத் தாவரங்கள் பாதுகாக்கின்றன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 136  | 
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு __________ ஹெக்டேர் பரப்பளவுடையது.
980       | |
1100       | |
1300       | |
1500  | 
Question 136 Explanation: 
 (குறிப்பு: 1100 ஹெக்டேர் (11 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடன் பிச்சாவரம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடாக உள்ளது.)
Question 137  | 
அவிசீனியா, ரைசோபோரா போன்ற தாவர இனங்கள் ___________ வகைக் காடுகளில் காணப்படுகின்றன.
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்  | |
மிதவெப்ப மண்டல மலைக்காடுகள்  | |
வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள்  | |
மாங்குரோவ் காடுகள்  | 
Question 137 Explanation: 
 (குறிப்பு: பிச்சாவரம் சதுப்புநிலக்காடு வங்க கடலிலிருந்து மணல்திட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளன.)
Question 138  | 
வெப்பமண்டல முட்புதர்க் காடுகள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை பெரும்பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.  | |
இக்காடுகள் சமவெளியில் இருந்து 400 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.  | |
பனை, வேம்பு,கருவேலம், வெள்ளைக்கருவேலம், சீமைகருவேலம் ஆகியவை இவற்றில் காணப்படும் மரங்களாகும்.  | |
தர்மபுரி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களின் சில பகுதிகளில் இவ்வகை காடுகள் காணப்படுகின்றன.  | 
Question 138 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டில் மிக குறைவான மழை பெரும்பகுதிகளில் வெப்ப மண்டல முட்புதர்க் காடுகள் காணப்படுகின்றன)
Question 139  | 
பொருத்துக.
- மாவட்டம் காடுகளின் பரப்பு (ச.கி.மீ)
 
- தர்மபுரி i) 3280
 - கோயம்புத்தூர் ii) 2627
 - ஈரோடு iii) 2427
 - வேலூர் iv) 1857
 - நீலகிரி v) 1583
 - திண்டுக்கல் vi) 1662
 
v   	iv    	vi    	ii    	i   	iii  | |
v    	iv    	ii    	i    	iii    	vi  | |
i   	ii   	iii   	iv   	v    	iv  | |
ii    	iii   	v    	iv    	vi    	i  | 
Question 140  | 
தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பெட்டகங்களில் தவறானது எது?
நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம்  | |
மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பெட்டகம்  | |
அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்  | |
களக்காடு உயிர்க்கோளப் பெட்டகம்  | 
Question 141  | 
- கூற்று 1: ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின் (UNDRR), கூற்றுப்படி அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின்போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.
 - கூற்று 2: பேரிடர் அபாயக் குறைப்பு என்பது இடர் உண்டாகும் இடங்களைத் தவிர்த்தல், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதிப்பினைக் குறைப்பது, நில மேலாண்மை, சூழ்நிலை மேலாண்மை, எதிர்விளைவுகள் குறித்தத் தயார்நிலை மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 142  | 
___________ நிலச்சரிவுக்கு முக்கிய காரணியாகும்.
நிலநடுக்கம்  | |
காற்று  | |
போக்குவரத்து  | |
நீர்  | 
Question 142 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகும். கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.)
Question 143  | 
2015 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக ஏற்பட்ட தென்னிந்திய வெள்ளப் பெருக்கு ____________ மக்களின் இடப்பெயர்விற்கு காரணமாக அமைந்தது.
1 மில்லியன்  | |
1.5 மில்லியன்  | |
1.8 மில்லியன்  | |
2.5 மில்லியன்  | 
Question 143 Explanation: 
 (குறிப்பு: இந்த வெள்ளப்பெருக்கு தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் சோழ மண்டல கடற்கரை ஆகியவற்றை பாதித்தது.)
Question 144  | 
- கூற்று 1: புயலால் பாதிக்கப்படும் இடங்களில் சென்னையின் வடபகுதி, காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் மண்டலத்தில் அமைந்துள்ளன.
 - கூற்று 2: நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர் (வடமேற்கு பகுதி நீங்கலாக), தஞ்சாவூரின் தென் பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தின் மத்தியப் பகுதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள், வேலூர் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதிகள், சென்னையின் வட பகுதிகள் ஆகியவை புயலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 145  | 
தமிழ்நாட்டின் மொத்த நீர்வளம் __________ மில்லியன் கனஅடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1247      | |
1587     | |
2588      | |
2852  | 
Question 145 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டின் மொத்த நீரின் தேவை 1894 மில்லியன் கனஅடியாகவும், நீர் பற்றாக்குறை 19.3 சதவீதமாக உள்ளது.)
Question 146  | 
தமிழகம், நிலத்தடி நீர்வளத்தின் அடிப்படையில் __________ பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
245       | |
287      | |
385      | |
392  | 
Question 146 Explanation: 
 (குறிப்பு: 385 பகுதிகளில் 145 பகுதிகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளது. மற்ற பகுதிகள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவதால் மிகவும் நெருக்கடியான நிலை மற்றும் நெருக்கடியான நிலை எனப் பல்வேறு நிலைகளில் உள்ளன.)
Question 147  | 
தமிழகத்தில் ___________ சதவீத நிலப்பகுதி வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன.
52      | |
64      | |
69      | |
73  | 
Question 147 Explanation: 
 (குறிப்பு: கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்கள் அதிக வறட்சியான மண்டலத்தில் உள்ளன.)
Question 148  | 
2018ஆம் ஆண்டு நடந்த குரங்கனி காட்டுத்தீ விபத்துக்கு பின் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் __________ மாதங்களில் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதித்தது.
பிப்பரவரி 01 முதல் மார்ச் 30 வரை  | |
பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை  | |
பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை  | |
பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 30 வரை  | 
Question 148 Explanation: 
 (குறிப்பு: 2018 மார்ச் 11 ஆம் நாள் சென்னை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 37 பேர் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கனி மலையில் மலையேற்ற பயிற்சி முடிந்து திரும்பும் விழியில் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 23 பேர் இறந்தனர்.)
Question 149  | 
2004 ஆம் ஆண்டு சுனாமி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
2004 டிசம்பர் 26ஆம் நாள் (இந்திய நேரப்படி காலை 7.29 மணி) உருவாகிய சுனாமி அலைகளால் வங்கக் கடலைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன.  | |
இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவுள்ள புவி அதிர்வினால் இச்சுனாமி ஏற்பட்டது.  | |
6 முதல் 10 மீட்டர் உயரம் வரை எழும்பிய இவ்வலைகளின் தாக்கம் கிழக்கு ஆப்பிரிக்கா வரை உணரப்பட்டது.  | |
இது கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதியில் உள்ள சோமாலியா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.  | 
Question 149 Explanation: 
 (குறிப்பு: இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட  8.9 ரிக்டர் அளவுள்ள புவி அதிர்வினால் இச்சுனாமி ஏற்பட்டது.)
Question 150  | 
2004 ஆண்டு சுனாமியினால் தமிழ்நாட்டில் __________க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
500      | |
1000      | |
1500      | |
2000  | 
Question 150 Explanation: 
 (குறிப்பு: தமிழக தலைநகரான சென்னையில் உயிரிழப்பு 125 ஆக பதிவானது. மேலும் நாகப்பட்டினம் (700), கன்னியாகுமரி (250) மற்றும் கடலூர்(200) மாவட்டங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.)
Question 151  | 
2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு முன்  இந்தியாவில் ____________ ஆண்டுகளில் சுனாமி அலைகள் தோன்றின.
1981,1942  | |
1981, 1941  | |
1881, 1941  | |
1891, 1951  | 
Question 152  | 
செப்டம்பர் 26 2001ஆம் ஆண்டு வங்கக் கடற்கரைக்கு அப்பால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட நில அதிர்வின் அளவு
4-5 ரிக்டர்  | |
5-6 ரிக்டர்  | |
6-7 ரிக்டர்  | |
7-8 ரிக்டர்  | 
Question 152 Explanation: 
 (குறிப்பு: இந்த நில அதிர்வினால் 3 பேர் உயிரிழந்ததோடு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் உடைமைகளுக்கு சிறு பாதிப்பினையும் உண்டாக்கியது.)
Question 153  | 
ஜூன் 7, 2008ஆம் ஆண்டு பாலாறு பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வின் அளவு
2.8 ரிக்டர்  | |
3.8 ரிக்டர்  | |
4.2 ரிக்டர்  | |
4.8 ரிக்டர்  | 
Question 153 Explanation: 
 (குறிப்பு: இந்த நிலஅதிர்வு வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.)
Question 154  | 
ஆகஸ்ட் 12, 2011ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் காவிரிப் படுகைப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வின் அளவு
3.5 ரிக்டர்  | |
3.8 ரிக்டர்  | |
4.2 ரிக்டர்  | |
4.8 ரிக்டர்  | 
Question 154 Explanation: 
 (குறிப்பு: இந்த நில அதிர்வினால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதோடு கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் சிறுபாதிப்பினை உண்டாக்கியது.)
Question 155  | 
பொருத்துக. (வனவிலங்கு சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
- முதுமலை வனவிலங்கு சரணாலயம் i) 1940
 - முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் ii) 1962
 - கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் iii) 1967
 - இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் iv) 1976
 
i    	ii    	iii   	iv  | |
ii    	iv    	i   	iii  | |
iii   	iv   	ii   	i  | |
iv    	iii    	ii   	i  | 
Question 155 Explanation: 
 (குறிப்பு:
முதுமலை வனவிலங்கு சரணாலயம் – நீலகிரி
முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் – திருநெல்வேலி
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் – நாகப்பட்டினம்
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் – கோயம்புத்தூர்)
Question 156  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வனவிலங்கு சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
களக்காடு வன விலங்கு சரணாலயம் - 1976  | |
வளநாடு கருப்பு மான்கள் சரணாலயம் – 1987  | |
மலை அணில் வன விலங்கு சரணாலயம் – 1988  | |
கன்னியாகுமரி வன விலங்கு சரணாயம் – 2001  | 
Question 156 Explanation: 
 (குறிப்பு:
களக்காடு வன விலங்கு சரணாலயம் – திருநெல்வேலி
வளநாடு கருப்பு மான்கள் சரணாலயம் – தூத்துக்குடி
மலை அணில் வன விலங்கு சரணாலயம் – விருதுநகர்
கன்னியாகுமரி வன விலங்கு சரணாயம் (2007) - கன்னியாகுமரி)
Question 157  | 
பொருத்துக. (வனவிலங்கு சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
- முதுமலை வனவிலங்கு சரணாலயம் i) 1940
 - முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் ii) 1962
 - கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் iii) 1967
 - இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் iv) 1976
 
i    	ii    	iii   	iv  | |
ii    	iv    	i   	iii  | |
iii   	iv   	ii   	i  | |
iv    	iii    	ii   	i  | 
Question 157 Explanation: 
 (குறிப்பு:
முதுமலை வனவிலங்கு சரணாலயம் – நீலகிரி
முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் – திருநெல்வேலி
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் – நாகப்பட்டினம்
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் – கோயம்புத்தூர்)
Question 158  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வனவிலங்கு சரணாலயங்கள் - மாவட்டம்)
சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் – ஈரோடு  | |
மேகமலை வனவிலங்கு சரணாலயம் – தேனி, மதுரை  | |
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் – தூத்துக்குடி  | |
வடகாவிரி வனவிலங்கு சரணாலயம் – தர்மபுரி, கிருஷ்ணகிரி  | 
Question 158 Explanation: 
 (குறிப்பு: கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் – திருநெல்வலி)
Question 159  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - 1977  | |
பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் – 1980  | |
கரிக்கிளி பறவைகள் சரணாலயம் – 1988  | |
கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் – 1989  | 
Question 159 Explanation: 
 (குறிப்பு: கரிக்கிளி பறவைகள் சரணாலயம் – 1989)
Question 160  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் – 1989  | |
கூத்தன்குளம், கூடங்குளம் பறவைகள் சரணாலயம் – 1994  | |
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் – 1997  | |
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – 1996  | 
Question 160 Explanation: 
 (குறிப்பு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – 1998)
Question 161  | 
பொருத்துக. (பறவை சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
- உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் i) 1998
 - மேல செல்வனூர் – கீழ செல்வனூர் பறவைகள் சரணாலயம்
 - ii) 1998
 - வடுவூர் பறவைகள் சரணாலயம் iii) 1999
 - காரைவெட்டி பறவைகள் சரணாலயம் iv) 2000
 
i    	ii    	iii   	iv  | |
ii    	iv    	i   	iii  | |
iii   	iv   	ii   	i  | |
iv    	iii    	ii   	i  | 
Question 162  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
- தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் - 2010
 - சக்கர கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம் – 2012
 - ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் – 2012
 
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | |
அனைத்தும் சரி  | 
Question 162 Explanation: 
 (குறிப்பு: ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் – 2015)
Question 163  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - மாவட்டம்)
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் – இராமநாதபுரம்  | |
கூத்தன்குளம், கூடங்குளம் பறவைகள் சரணாலயம் – திருநெல்வேலி  | |
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் – ஈரோடு  | |
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – திருவள்ளூர்  | 
Question 163 Explanation: 
 (குறிப்பு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம்)
Question 164  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - மாவட்டம்)
- தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
 - சக்கர கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம் – இராமநாதபுரம்
 - ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் – விழுப்புரம்
 
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | |
அனைத்தும் சரி  | 
Question 165  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு (தமிழக நிர்வாகப் பிரிவுகள் - எண்ணிக்கை)
மாவட்டங்கள் - 37  | |
வருவாய்க் கோட்டங்கள் – 87  | |
வட்டங்கள் – 226  | |
பிர்காக்கள் – 1349  | 
Question 165 Explanation: 
 (குறிப்பு: வட்டங்கள் - 310)
Question 166  | 
2004 ஆம் ஆண்டு சுனாமி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
2004 டிசம்பர் 26ஆம் நாள் (இந்திய நேரப்படி காலை 7.29 மணி) உருவாகிய சுனாமி அலைகளால் வங்கக் கடலைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன.  | |
இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவுள்ள புவி அதிர்வினால் இச்சுனாமி ஏற்பட்டது.  | |
6 முதல் 10 மீட்டர் உயரம் வரை எழும்பிய இவ்வலைகளின் தாக்கம் கிழக்கு ஆப்பிரிக்கா வரை உணரப்பட்டது.  | |
இது கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதியில் உள்ள சோமாலியா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
  | 
Question 166 Explanation: 
 (குறிப்பு: இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட  8.9 ரிக்டர் அளவுள்ள புவி அதிர்வினால் இச்சுனாமி ஏற்பட்டது.)
Question 167  | 
2004 ஆண்டு சுனாமியினால் தமிழ்நாட்டில் __________க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்
500      | |
1000      | |
1500      | |
2000  | 
Question 167 Explanation: 
 (குறிப்பு: தமிழக தலைநகரான சென்னையில் உயிரிழப்பு 125 ஆக பதிவானது. மேலும் நாகப்பட்டினம் (700), கன்னியாகுமரி (250) மற்றும் கடலூர்(200) மாவட்டங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.)
Question 168  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வனவிலங்கு சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் – 2008  | |
மேகமலை வனவிலங்கு சரணாலயம் – 2009  | |
கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் – 2013  | |
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் – 2014  | 
Question 168 Explanation: 
 (குறிப்பு: கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் – 2013)
Question 169  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வனவிலங்கு சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
- கோடியக்கரை வனவிலங்கு பாதுகாப்பகம் – 2013
 - நெல்லை வனவிலங்கு சரணாலயம் – 2015
 - வடகாவிரி வனவிலங்கு சரணாலயம் – 2014
 
1, 2 தவறு  | |
3 மட்டும் தவறு  | |
2, 3 தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 169 Explanation: 
 (குறிப்பு: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ளது.)
Question 170  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பறவை சரணாலயங்கள் - நிறுவப்பட்ட ஆண்டு)
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - 1977  | |
பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் – 1980  | |
கரிக்கிளி பறவைகள் சரணாலயம் – 1988  | |
கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் – 1989  | 
Question 170 Explanation: 
 (குறிப்பு: கரிக்கிளி பறவைகள் சரணாலயம் – 1989)
Question 171  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு (தமிழக நிர்வாகப் பிரிவுகள் - எண்ணிக்கை)
வருவாய் கிராமங்கள் – 16564  | |
மாநகராட்சிகள் – 15  | |
நகராட்சிகள் – 121  | |
ஊராட்சி ஒன்றியங்கள் – 385  | 
Question 171 Explanation: 
 (குறிப்பு: வருவாய் கிராமங்கள் – 17680)
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 171 questions to complete.