Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions

தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions i

Congratulations - you have completed தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions i. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின்_________ உறுதிமொழிகளைக் கடுமையாகப் பின்பற்றினர்.
A
2
B
3
C
4
D
5
Question 1 Explanation: 
(குறிப்பு: மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.)
Question 2
மகாவீரர் இயற்கை எய்திய பின்னர், சமண அறிஞர்கள் __________ல் ஒரு பேரவையைக் கூட்டித் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
A
கயா
B
வைஷாலி
C
பாடலிபுத்திரம்
D
ஆக்ரா
Question 2 Explanation: 
(குறிப்பு: மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா) இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், சமண அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் பேரவையை கூட்டினர். இது தொடர்பாக கூட்டப்பட்ட முதல் சமணப் பேரவைக்கூட்டம் இதுவேயாகும்.)
Question 3
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சமண சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியாக __________ல் கூட்டப்பட்ட சமணப் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது.
A
வைஷாலி
B
வல்லபி
C
ஆக்ரா
D
பாடலிபுத்திரம்
Question 3 Explanation: 
(குறிப்பு: பாடலிபுத்திரத்தில் கூடிய முதல் கூட்டம் சட்ட விதிகளை வரையறுப்பதில் ஒருமித்தக் கருத்து எட்ட முடியாமல் போனதால் தோல்வியில் முடிந்தது.)
Question 4
பிகநிதயா எனப்படும் பழமையான பௌத்த சமய நூல் கி.மு ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட _______தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது.
A
52
B
62
C
65
D
67
Question 4 Explanation: 
(குறிப்பு: இப்பலவகைப்பட்ட பிரிவுகளில் ஆசீவகம் மட்டுமே இடைக்காலத்தின் பிற்பகுதிவரை செயல்பாட்டில் இருந்தது. சமணமும் பௌத்தமும் நவீன காலம் வரையிலும் தொடர்ந்து செழிப்படைந்தன.)
Question 5
__________ ஆண்டு சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என முடிவு செய்தனர்.
A
கி.பி 250
B
கி.பி 300
C
கி.பி 400
D
கி.பி 500
Question 5 Explanation: 
(குறிப்பு: கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய காலப்பகுதிகளைச் சேர்ந்த பல அறிஞர்களால் தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமண இலக்கியங்களையும் மனனம் செய்வது மிகச்சிரமமானது என்பதை உணர்ந்தனர்.)
Question 6
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது - அகிம்சை
  2. உண்மை – சத்யா
  3. திருடாமை – அசெளர்யா
  4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
  5. பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3, 4
D
2, 3, 5
Question 7
  • கூற்று 1: திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்டனர்.
  • கூற்று 2: ஆகம சூத்திரங்களின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றிலும் இரு பிரிவினரும் ஒத்து காணப்பட்டனர்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 7 Explanation: 
(குறிப்பு: ஆகம சூத்திரங்களின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் இரு பிரிவினரும் வேறுபட்டு காணப்பட்டனர்.)
Question 8
சமண இலக்கியங்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 8 Explanation: 
(குறிப்பு: இருபிரிவுகள் ஆகம சூத்திரங்கள் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்)
Question 9
மகாவீரரின் நேரடி போதனைகளைக் கொண்டுள்ள ஆகம சூத்திரங்கள் எத்தனை நூல்களைக் கொண்டுள்ளன?
A
10
B
11
C
12
D
13
Question 9 Explanation: 
(குறிப்பு: 12 நூல்களும் மகாவீரரின் நேரடிச் சீடர்களால் தொகுக்கப்பட்டவையாகும்.)
Question 10
  • கூற்று 1: ஆகம சூத்திரங்கள் அர்த்த மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.
  • கூற்று 2: 12ஆவது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 11
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் மொத்தம் எத்தனை நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன?
A
64
B
74
C
84
D
94
Question 11 Explanation: 
(குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட நூல்களுள் 41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா) ஆகியன இடம்பெற்றுள்ளன.)
Question 12
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளன?
  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. இந்தி
  4. ஜெர்மன்
  5. ராஜஸ்தானி
A
அனைத்தும்
B
2, 3, 5
C
3, 4, 5
D
1, 3, 4
Question 12 Explanation: 
(குறிப்பு: ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.)
Question 13
__________ என்பன ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
A
ஆகம சூத்திரங்கள்
B
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்
C
சமண புராணங்கள்
D
மகாவீரர் போதனைகள்
Question 14
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் உள்ள 41 சூத்திரங்களில் கீழ்க்கண்ட எவை அடங்கும்?
  1. 11 அங்கங்கள்
  2. 12 உப அங்கங்கள்
  3. 5 சேடாக்கள்
  4. 5 மூலங்கள்
  5. கல்பசூத்ரா
A
1, 3, 5
B
1, 2, 4, 5
C
1, 2, 4
D
அனைத்தும்
Question 14 Explanation: 
(குறிப்பு: 41 சூத்திரங்களும் எட்டு பல்வகைப்பட்ட நூல்களைக் கொண்டுள்ளது.)
Question 15
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
அங்கங்கள் - திகம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்
B
உப அங்கங்கள் – நெறிமுறைக் குறிப்பேடுகள்
C
சேடாக்கள் - துறவிகளுக்கான நடத்தை விதிகள்
D
மூலங்கள் - சமணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
Question 15 Explanation: 
(குறிப்பு: அங்கங்கள் - சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்)
Question 16
பஞ்சதந்திரம் நூலில் பெருமளவில் __________ன் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.
A
பெளத்தம்
B
சமணம்
C
சைவம்
D
வைணவம்
Question 16 Explanation: 
(குறிப்பு: இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட சில சமண நூல்களும் உள்ளன.)
Question 17
சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்ட கல்பசூத்ராவின் ஜைன சரிதா என்னும் நூலை இயற்றியவர்
A
சந்திரகுப்த மெளரியர்
B
பார்சவநாதர்
C
மகாவீரர்
D
பத்ரபாகு
Question 17 Explanation: 
(குறிப்பு: சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24வது தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன.)
Question 18
பத்ரபாகு, சந்திரகுப்த மெளரியரோடு __________க்கு புலம்பெயர்ந்து பின் அங்கேயே குடியமர்ந்தார்.
A
அகமது நகர்
B
மாளவம்
C
மைசூர்
D
மதுரை
Question 18 Explanation: 
(குறிப்பு: ஏறத்தாழ கி.மு. 296 ல் பத்ரபாகு மைசூருக்கு குடியமர்ந்தார்.)
Question 19
__________ நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டு திகம்பரர், சுவேதாம்பரர் என இருபெரும் பிரிவுகள் தோன்றின.
A
கி.பி முதலாம்
B
கி.பி இரண்டாம்
C
கி.பி மூன்றாம்
D
கி.பி நான்காம்
Question 20
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
தமிழ் மொழியில் எழுதப்பட்ட காப்பிய நூலான சீவகசிந்தாமணி ஒரு சமண நூலாகும்.
B
சீவக சிந்தாமணி சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத்தேவர் என்பவரால் இயற்றப்பட்டது.
C
தன் சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்த சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிப்பதாகும்.
D
தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சைவத் துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும்.
Question 20 Explanation: 
(குறிப்பு: தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சமணத் துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.)
Question 21
  • கூற்று 1: சமண சமயத்தை சேர்ந்த தமிழர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்.
  • கூற்று 2: களப்பிரர்கள் சமண சமயத்தை ஆதரிக்கவில்லை.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 21 Explanation: 
(குறிப்பு: களப்பிரர்கள் சமண சமயத்தின் ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது.)
Question 22
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து இடம்பெயர்ந்த இடங்களில் சரியானதை தேர்ந்தெடு.
  1. கொங்குப்பகுதி - சேலம், ஈரோடு, கோயம்புத்தூர்
  2. காவேரி கழிமுகப்பகுதி – திருச்சி
  3. புதுக்கோட்டை – சித்தன்னவாசல்
  4. பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி
A
1, 3, 4
B
3, 4
C
2, 3, 4
D
அனைத்தும்
Question 22 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட இடங்களுக்கு சமணர்கள் இடம்பெயர்ந்ததற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.)
Question 23
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து __________ உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
A
60 மீட்டர்
B
70 மீட்டர்
C
75 மீட்டர்
D
80 மீட்டர்
Question 23 Explanation: 
(குறிப்பு: பெரும்பாறையின் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு கோயிலும் உள்ளன.)
Question 24
சித்தன்னவாசல் குகையின் தரையில் _________ சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
A
12
B
14
C
15
D
17
Question 24 Explanation: 
(குறிப்பு: வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல் துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்களாக இருந்துள்ளதாய் நம்பப்படுகிறது.)
Question 25
சித்தன்னவாசலில் உள்ள கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில்__________ நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் - பிராமிக் கல்வெட்டு உள்ளது,
A
கி.பி. 2
B
கி.பி. 3
C
கி.மு. 3
D
கி.மு. 2
Question 25 Explanation: 
(குறிப்பு: கி.பி.எட்டாம் நூற்றாண்டு, அதற்கு பின்னரான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. அவைகளில் துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.)
Question 26
அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக் கோவில் ___________நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
A
கி.மு 2
B
கி.மு 7
C
கி.பி 2
D
கி.பி 7
Question 26 Explanation: 
(குறிப்பு: முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன் பகுதியில் அர்த்தமண்டபமும் பின் பகுதியில் கருவறையும் உள்ளன.)
Question 27
அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக் கோவில் குன்றின் _________ பகுதியில் அமைந்துள்ளது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 27 Explanation: 
(குறிப்பு: இக்கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது.)
Question 28
நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்போரே ___________ ஆவர்.
A
திகம்பரர்கள்
B
சுவேதாம்பரர்கள்
C
தீர்த்தங்கரர்கள்
D
சமணர்கள்
Question 29
சித்தன்னவாசல் குகைக் கோவில் __________ ஆண்டு மத்திய அரசின் தொல்லியல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
A
1952
B
1953
C
1956
D
1958
Question 29 Explanation: 
(குறிப்பு: 1958 ற்கு பின்னர் இக்கோவிலைச் சுற்றி வேலி அமைக்கவும், பார்வையாளர்களின் வருகையை முறைப்படுத்தவும் இருபது ஆண்டுகளாயின.)
Question 30
அறிவர் கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள்_________ சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.
A
எல்லோரா
B
அஜந்தா
C
திருவெறுங்காடு
D
திருச்சி மலைக்கோவில்
Question 30 Explanation: 
(குறிப்பு: இக்கோவிலின் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மண்டபத்தின் இடப்புறச்சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் வலப்புறச்சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச்சிற்பங்களும் உள்ளன.)
Question 31
சீனப் பயணி யுவான் சுவாங் __________ நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
A
கி.பி 6
B
கி.பி 7
C
கி.பி 8
D
கி.பி 9
Question 31 Explanation: 
(குறிப்பு: பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் செழித்தோங்கியது. யுவான் சுவாங், காஞ்சிபுரத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெளத்தர்களும் சமணர்களும் இருந்ததாக தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.)
Question 32
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் ________ சமயத்தை பின்பற்றினார்.
A
பெளத்தம்
B
சைவம்
C
வைணவம்
D
சமணம்
Question 32 Explanation: 
(குறிப்பு: பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர்.)
Question 33
காஞ்சியில் உள்ள சமணக் கோயில்களின் எண்ணிக்கை_________.
A
2
B
3
C
4
D
5
Question 33 Explanation: 
(குறிப்பு: ஒன்று திருப்பத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் மற்றொன்று சந்திரபிரபா எனும் பெயரைக் கொண்டிருந்த தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்திரபிரபா கோவிலாகும்.)
Question 34
யாருடைய ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் சமணக் கோவிலில் சங்கீத மண்டபம் கட்டப்பட்டு கோவில் விரிவுபடுத்தப்பட்டது?
A
பல்லவர் காலம்
B
விஜயநகர காலம்
C
களப்பிரர்கள் காலம்
D
பாண்டியர்கள் காலம்
Question 34 Explanation: 
(குறிப்பு: விஜயநகர ஆட்சியின் போது (1387) புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடரான இருகப்பா என்பவரும் விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் சங்கீத மண்டபம் கட்டினர்.)
Question 35
  • கூற்று 1: விஜயநகர ஆட்சியின்போது காஞ்சியில் உள்ள சமணக் கோயில்களில் அழகுமிக்க சுவரோவியங்கள் வரையப்பட்டன.
  • கூற்று 2: கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 35 Explanation: 
(குறிப்பு: திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின்போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன.)
Question 36
  • கூற்று 1: திரிலோக்கியநாத கோவிலின், திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையினுள் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
  • கூற்று 2: இக்கல்வெட்டுகளில் கோவிலின் வளர்ச்சி குறித்த செய்திகளும், நூற்றாண்டுகளின் போக்கில் இக்கோவிலுக்குக் கொடையளித்த பலரைப்பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 36 Explanation: 
(குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பருத்திக்குன்றம் தவிர மாநிலத்தின் வேறு பல கிராமங்களிலும் சமண சமயம் குறித்தத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.)
Question 37
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை __________ ஆகும்.
A
53,359
B
63,529
C
73,569
D
83,359
Question 37 Explanation: 
(குறிப்பு: மொத்த மக்கள் தொகையில் சமணர்களின் எண்ணிக்கை 0.12 விழுக்காடாகும்.)
Question 38
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகுமலையிலுள்ள சமணர் கோவில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
A
கி.பி 7
B
கி.பி 8
C
கி.பி 9
D
கி.பி 10
Question 38 Explanation: 
(குறிப்பு: இக்கோவில் தமிழ்நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது.)
Question 39
கழுகுமலை குகைக் கோவில் எந்த அரசனால் உருவாக்கப்பட்டது?
A
பராந்தகச் சோழன்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
பராந்தக நெடுஞ்சடையன்
D
சேரன் செங்குட்டுவன்
Question 39 Explanation: 
(குறிப்பு: இக்கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்பட்ட பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன.)
Question 40
வேலூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே ________ நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
A
கி.பி 4
B
கி.பி 5
C
கி.பி 6
D
கி.பி 7
Question 40 Explanation: 
(குறிப்பு: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள பைரவ மலையில் இப்படுக்கைகள் காணப்படுகின்றன.)
Question 41
  • கூற்று 1: பைரவ மலையில் உள்ள மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன.
  • கூற்று 2: மூன்று குகைகளில் ஒன்றில் நான்கு படுக்கைகளும் மற்றொன்றில் ஒரு படுக்கையும் உள்ளன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 41 Explanation: 
(குறிப்பு: ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுக்கைகளில் உள்ள தலையணைப் பகுதி இங்குள்ள கற்படுக்கைகளில் காணப்படவில்லை.)
Question 42
திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
A
திருச்சி
B
காஞ்சிபுரம்
C
திருவண்ணாமலை
D
மதுரை
Question 42 Explanation: 
(குறிப்பு: திருமலை சமணக்கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன.)
Question 43
____________ நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை சமணக் கோவில் வளாகத்தில் மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும் நேமிநாதருடைய சிலையும் உள்ளன.
A
கி.பி 8
B
கி.பி 9
C
கி.பி 10
D
கி.பி 12
Question 43 Explanation: 
(குறிப்பு: நேமிநாதர் என்பவர் 22வது தீர்த்தங்கரர் ஆவார்.)
Question 44
திருமலை சமணக் கோவிலில் உள்ள நேமிநாதர் சிலையின் உயரம்
A
12 மீட்டர்
B
14 மீட்டர்
C
15 மீட்டர்
D
16 மீட்டர்
Question 44 Explanation: 
(குறிப்பு: நேமிநாதரின் இச்சிலையே தமிழ்நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது.)
Question 45
மதுரையிலும் அதைச் சுற்றிலும் உள்ள குகைகள், சமண கற்படுக்கைகள், கல்வெட்டுகள் மற்றும் சிலைகளின் எண்ணிக்கை முறையே
A
34, 200, 60, 100
B
26, 200, 50, 100
C
26, 100, 60,100
D
26, 200, 60, 100
Question 46
கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள குன்றுகள் மதுரை நகருக்கு மேற்கே __________ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.
A
8
B
9
C
10
D
12
Question 46 Explanation: 
(குறிப்பு: கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள குன்றுகள் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.)
Question 47
கீழக்குயில்குடி கிராமக் குன்றுகளில் சிற்பங்கள் யாருடைய காலத்தை சேர்ந்தவையாகும்.
A
பராந்தகச் சோழன்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
பராந்தக நெடுஞ்சடையன்
D
பராந்தக வீரநாராயணன்
Question 47 Explanation: 
(குறிப்பு: இங்குள்ள சிற்பங்கள் கி.பி 860 முதல் 900 வரை ஆண்ட பாண்டிய அரசன் பராந்தக வீரநாராயணின் காலத்தவை ஆகும்.)
Question 48
கீழக்குயில்குடி கிராமக் குன்றுகளில் எத்தனை சிற்பங்கள் உள்ளன?
A
5
B
6
C
8
D
9
Question 48 Explanation: 
(குறிப்பு: ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.)
Question 49
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. சமண மடாலயங்களும் கோவில்களும் கல்வி கற்றுக்கொடுக்கும் மையங்களாகவும் சேவை செய்துள்ளன.
  2. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத்தரப்பட்டது.
  3. பள்ளி என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும்.
A
1, 2 சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 49 Explanation: 
(குறிப்பு: சமணர்கள் தங்கள் கோட்பாடுகளைப் பரப்புரை செய்ததோடு, வெகு மக்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதில் தாங்கள் ஆற்றல்மிக்கத் தொடர்பு சாதனங்கள் என்பதையும் நிரூபணம் செய்தனர்.)
Question 50
  • கூற்று 1: பைரவ மலை என்பது குக்கரப் பள்ளி என்னும் சிறு கிராமத்தின் அருகே அமைந்துள்ளது.
  • கூற்று 2: சமண சமயத்தில் பெண்கள் துறவறம் பூண அனுமதிக்கப்படவில்லை.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 50 Explanation: 
(குறிப்பு: சமண சமயத்தில் பெண்களும் துறவறம் பூன அனுமதிக்கப்பட்டனர். இது பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு உக்கமளித்தது.)
Question 51
சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர் என்பது யாருடைய உண்மையான பெயர்
A
மகாவீரர்
B
நேமிநாதர்
C
பார்சவநாதர்
D
புத்தர்
Question 51 Explanation: 
(குறிப்பு: சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர் என்பதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் "கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்" என பொருள்படும்.)
Question 52
  • கூற்று 1: கெளதம புத்தர் மகாவீரரின் சமகாலத்தவர் ஆவார்.
  • கூற்று 2: சமணக் கல்வி நிலையங்களில் நூலகங்கள் காணப்படவில்லை.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 52 Explanation: 
(குறிப்பு: சமணக் கல்வி நிலையங்கள் அவற்றோடு இணைக்கப்பட்ட நூலகங்களைக் கொண்டிருந்தன.)
Question 53
புத்தரின் தந்தையார் இன்றைய _________க்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் சாக்கிய இனக்குழுவின் தலைவராக ஆட்சிசெய்து வந்தார்.
A
வங்காளம்
B
பூடான்
C
நேபாளம்
D
டெல்லி
Question 54
  • கூற்று: புத்தர் பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என தெரிந்து கொண்டார்.
  • காரணம்: துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே வீடுபேறு எனப்படும் முக்தியை அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 54 Explanation: 
(குறிப்பு: துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னரும் கெளதமரால் எங்கிருந்தும் உண்மைக்கான பொருளை உணரமுடியவில்லை.)
Question 55
புத்தருடைய அரச வாழ்வுக்கும் துறவு வாழ்வுக்கும் இடைப்பட்ட வழி எத்தனை வகை வழிகளை அடித்தளமாகக் கொண்டது?
A
6
B
7
C
8
D
9
Question 55 Explanation: 
(குறிப்பு: புத்தர் அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்) துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துதல்) ஆகிய இரண்டுமே தவறு என உறுதிபடக் கூறினார்.)
Question 56
புத்தருடைய எண்வகை வழிகளில் தவறான தேர்ந்தெடு.
  1. நல்ல எண்ணங்கள்
  2. நல்ல குறிக்கோள்கள்
  3. அன்பான பேச்சு
  4. நன்னடத்தை
  5. தீது செய்யா வாழ்க்கை
  6. நல்ல முயற்சி
  7. நல்ல அறிவு
  8. நல்ல தியானம்
A
3, 6 தவறு
B
2, 3, 5 தவறு
C
3 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 56 Explanation: 
(குறிப்பு: புத்தர் கடவுளின் புகழைக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அன்பின் வலிமையைக் கற்றுக் கொடுத்தார்.)
Question 57
புத்தர் தனது போதனைகளை __________மொழியில் பரப்புரை செய்தார்.
A
பாலி
B
சமஸ்கிருதம்
C
பிராகிருதம்
D
தெலுங்கு
Question 57 Explanation: 
(குறிப்பு: புத்தர் அனைத்து மனிதர்களும் ‘சமமான உரிமைகளுடன்’ பிறக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.)
Question 58
கீழ்க்கண்டவற்றுள் புத்தர் கூறிய பேருண்மைகள் எவை?
  1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
  4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்.
A
1, 2, 4
B
2, 3
C
3, 4
D
அனைத்தும்
Question 58 Explanation: 
(குறிப்பு: புத்தர் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது செய்திகளைத் தொலைதூரப் பகுதிகளில் பரப்பினார்.)
Question 59
புத்தருடைய போதனைகள் எப்போது எழுதப்பட்டன?
A
கி.மு 60
B
கி.மு.70
C
கி.பி 70
D
கி.மு 80
Question 59 Explanation: 
(குறிப்பு: புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.)
Question 60
புத்தருடைய போதனைகள் ________ மொழியில் எழுதப்பட்டன.
A
பாலி
B
சமஸ்கிருதம்
C
பிராகிருதம்
D
தெலுங்கு
Question 60 Explanation: 
(குறிப்பு: பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபிடகா எனும் பெளத்தப் பொதுவிதிகள் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன.)
Question 61
கீழ்க்கண்டவற்றுள் திரிபீடகங்கள் எவை?
  1. வினய பீடகா
  2. சுத்த பீடகா
  3. புத்தபீடகா
  4. அபிதம்ம பீடகா
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 61 Explanation: 
(குறிப்பு: திரிபீடகங்கள், மூன்று கூடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.)
Question 62
_________ல் பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
A
சுத்த பீடகா
B
வினய பீடகா
C
அபிதம்ம பீடகா
D
புத்தபீடகா
Question 62 Explanation: 
(குறிப்பு: தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.)
Question 63
விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பெளத்தத்தின் மூலக்கோட்பாடுகளைக் கூறுபவை
A
சுத்த பீடகா
B
வினய பீடகா
C
அபிதம்ம பீடகா
D
ஜாதங்கள்
Question 64
பெளத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறும் நூல்
A
திரிபீடகா
B
புத்தவம்சா
C
ஜாதகங்கள்
D
மிலிந்தபன்கா
Question 65
கெளதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கும் நூல்
A
மிலிந்த பன்கா
B
விசுத்திமக்கா
C
புத்தவம்சா
D
திரிபீடகா
Question 65 Explanation: 
(குறிப்பு: புத்தவம்சா கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள மரபுவழிக் கதையாகும். பொதுவிதிகள், கோட்பாடுகள் குறித்து விளக்கும் நூல்களைத் தவிர பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது.)
Question 66
மிலிந்தபன்கா என்பது கிரேக்க-பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான _________ என்பவருக்குமிடையே பெளத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலைக் கொண்டுள்ளது.
A
மிகிரகுலர்
B
அர்ஜூன்தேவ்
C
நாகசேனர்
D
பார்சவநாதர்
Question 66 Explanation: 
(குறிப்பு: மிலிந்த பன்கா என்பது மிலிந்தாவின் கேள்விகள் எனப் பொருள். இதன் மூலம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.)
Question 67
நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குபவை
A
சுத்த பீடகா
B
வினய பீடகா
C
அபிதம்ம பீடகா
D
புத்தபீடகா
Question 68
  • கூற்று 1: மகாவம்சம் இலங்கை உட்பட இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது.
  • கூற்று 2: தீபவம்சம் புத்தருடைய போதனைகளையும் அவற்றைப் பரப்பியோர் இலங்கைக்கு வருகை புரிந்ததைப் பற்றியும் பேசுகிறது.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 68 Explanation: 
(குறிப்பு: மகாவம்சம், தீபவம்சம் என்பவை இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்புகள் ஆகும்.)
Question 69
கீழ்க்கண்டவர்களுள் முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
A
புத்தகோசா
B
அர்ஜூன்தேவ்
C
நாகசேனர்
D
பார்சவநாதர்
Question 69 Explanation: 
(குறிப்பு: புத்தகோசாவால் எழுதப்பட்ட விசுத்திமக்கா பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு நூலாகும்.)
Question 70
மகாயான பௌத்தத்தின் எழுச்சியைத் தொடர்ந்து பௌத்த சமயத்துள் _________மொழி முக்கிய இடத்தை வகிக்கக் தொடங்கியது.
A
பாலி
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
தமிழ்
Question 70 Explanation: 
(குறிப்பு: இருந்தபோதிலும் ஒரு சில சமஸ்கிருத நூல்கள் ஹீனயானப் பிரிவினராலும் படைக்கப்பட்டன.)
Question 71
__________ என்பவரால் எழுதப்பட்ட புத்தசரிதா சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில் எழுதப்பட்ட நூலாகும்.
A
புத்தகோசா
B
அஸ்வகோஷர்
C
நாகசேனர்
D
பார்சவநாதர்
Question 71 Explanation: 
(குறிப்பு: இந்நூல் கெளதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இயம்புகிறது.)
Question 72
தமிழகத்தில் பௌத்தமானது ___________யைச் சேர்ந்த சமயப்  பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
A
நேபாளம்
B
பூடான்
C
கர்நாடகா
D
இலங்கை
Question 72 Explanation: 
(குறிப்பு: இதற்குச் சான்றாக மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் பாண்டிய நாட்டில் உள்ளன. இவை பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.)
Question 73
___________ நூற்றாண்டில் சீனப் பயணியான யுவான்சுவாங் தென்னிந்தியா வந்த போது பெளத்தம் ஏறத்தாழ சரிவுற்ற நிலையிலிருந்தது.
A
கி.பி 4
B
கி.பி 5
C
கி.பி 6
D
கி.பி 7
Question 73 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் பெளத்தம் சந்தித்த சவால்கள் குறித்த சான்றுகளைச் சைவ நாயன்மார்களின் தேவாரம் பாடல்களும் வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் முன்வைக்கின்றன.)
Question 74
வீரசோழியம் என்பது __________நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலாகும்.
A
கி.பி 7
B
கி.பி 8
C
கி.பி 10
D
கி.பி 11
Question 74 Explanation: 
(குறிப்பு: பெளத்தம் முற்றிலுமாக மறைந்து போனது என்ற கருத்தை வீரசோழியம் நூல் பொய்யாக்குகிறது.)
Question 75
____________ல் கிடைத்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் செப்புச் சிலைகள் பின் வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
A
திருநெல்வேலி
B
ராமநாதபுரம்
C
நாகப்பட்டினம்
D
கன்னியாகுமரி
Question 75 Explanation: 
(குறிப்பு: சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் இக்கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.)
Question 76
பல்லவர் காலம் முதலாகவே சைவ, வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்ட பெளத்தம் __________ல் மட்டும் விதிவிலக்காகத் திகழ்ந்தது.
A
மதுரை
B
ராமநாதபுரம்
C
நாகப்பட்டினம்
D
கன்னியாகுமரி
Question 76 Explanation: 
(குறிப்பு: நாகப்பட்டினத்தில் பெளத்தத்தை சோழ அரசர்கள் ஆதரித்தனர். அரசியல் காரணங்களுக்காக இவ்வாதரவு அளிக்கப்பட்டது.)
Question 77
நாகப்பட்டினத்தில் ____________அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ராஜராஜ சோழன் ஆதரவளித்தார்.
A
பாண்டியர்
B
சேரர்
C
ஸ்ரீவிஜயா
D
சாளுக்கியர்
Question 77 Explanation: 
(குறிப்பு: பிற்காலத்தில் இந்த விகாரை அழிவுக்குள்ளாயிற்று.)
Question 78
கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனரால் எழுதப்பட்ட மணிமேகலை முற்றிலுமாக __________ ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பியமாகும்.
A
சமணம்
B
பெளத்தம்
C
சைவம்
D
வைணவம்
Question 78 Explanation: 
(குறிப்பு: சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பெளத்த சமயம் தொடர்பான சொற்களை சீத்தலைச்சாத்தனார் தமிழில் மொழியாக்கம் செய்து பௌத்தத்தை இம்மண் சார்ந்ததாக ஆக்கினார்.)
Question 79
வஜ்ரபோதி எனும் பௌத்தத் துறவி தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார் என்றும், பல்லவ அரச சபையை அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்றுவிட்டதாகவும் _________ காலத்து சான்று கூறுகிறது.
A
மகேந்திரவர்மன்
B
முதலாம் நரசிம்ம பல்லவன்
C
இரண்டாம் நரசிம்ம பல்லவன்
D
இராஜராஜ சோழன்
Question 79 Explanation: 
(குறிப்பு: பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம் எனும் நூல் எடுத்துரைக்கிறது.)
Question 80
  • கூற்று 1: கல்விப்புலத்தில் பெளத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன.
  • கூற்று 2: நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த பௌத்த விகாரைகளாகும்.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 80 Explanation: 
(குறிப்பு: உலகின் பலபகுதிகளிலிருந்து மாணவர்கள் பௌத்தவிகாரைகளுக்கு வந்தனர்.)
Question 81
__________ நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பெளத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,
A
இலங்கை, சீனா
B
சீனா, மியான்மர்
C
திபெத், மியான்மர்
D
சீனா, திபெத்
Question 81 Explanation: 
(குறிப்பு: பெளத்தத்தின் போதனைகளைப் பரப்புவதற்கு இந்த மாணவர்கள் செயல்திறன் மிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.)
Question 82
விகாரா என்பது __________மொழிச் சொல்.
A
ஆங்கிலம்
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
பாலி
Question 82 Explanation: 
(குறிப்பு: விகாரா என்பதற்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்று பொருள்.)
Question 83
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. பணம்படைத்த, சாமானிய பௌத்தர்களால் வழங்கப்பட்ட கொடைகளின் மூலம் விகாரங்கள் கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன.
  2. அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
  3. விகாரைகள் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கியதோடு, புனித நூல்களின் கருவூலச் சேகரங்களாகவும் திகழ்ந்தன.
A
1 மட்டும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
அனைத்தும்
Question 83 Explanation: 
(குறிப்பு: நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.)
Question 84
தமிழகத்தில் இந்தியத் தொல்லியல் துறை செய்த அகழாய்வுகளில் _______க்கும் மேற்பட்ட ஆய்விடங்களில் நூற்றுக்கணக்கான கல்சிற்பங்களும் செப்புச்சிலைகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
A
95
B
115
C
125
D
134
Question 84 Explanation: 
(குறிப்பு: இந்தியத் தொல்லியல் துறையால் காவிரிப்பூம்பட்டினத்தில் அகழாய்வு செய்து ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும் கண்டறியப்பட்டது.)
Question 85
திருநாட்டியட்டாங்குடி கிராமத்தின் ஒரு வயலில் கிணறு வெட்டும் போது __________ மீட்டர் உயரமுடைய, பத்மாசன கோலத்திலுள்ள புத்தரின் சிலை கிடைத்தது.
A
1.02 மீட்டர்
B
1.03 மீட்டர்
C
1.04 மீட்டர்
D
1.05 மீட்டர்
Question 85 Explanation: 
(குறிப்பு: திருநாட்டியட்டாங்குடி என்னும் கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
Question 86
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
B
ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலிபுத்தா ஆவார்.
C
ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தை கடைபிடிக்கவில்லை.
D
ஆசீவகத்திற்கு இலக்கியங்கள் இல்லாது போனாலும் கோசலரின் தத்துவங்கள் ஏனைய மதங்களில் ஜீவித்திருக்கின்றன.
Question 86 Explanation: 
(குறிப்பு: ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தை கடைபிடிக்கவில்லை.)
Question 87
எத்தனை ஆண்டு காலங்கள் கோசலா மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்?
A
3
B
4
C
5
D
6
Question 87 Explanation: 
(குறிப்பு: ஆறு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் பிரிந்தனர்.)
Question 88
__________ பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது.
A
முகலாயர்
B
மெளரியர்
C
மராத்தியர்
D
சாளுக்கியர்
Question 88 Explanation: 
(குறிப்பு: மெளரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர்.)
Question 89
  • கூற்று 1: வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது.
  • கூற்று 2: பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று, காரணம் இரண்டும் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 90
கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பாலாற்றின் பகுதிகளில் ஆசீவகம் எந்த நூற்றாண்டு வரை செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது?
A
12
B
13
C
14
D
15
Question 90 Explanation: 
(குறிப்பு: பாலாற்றின் பகுதிகள் - வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை. இறுதியில் ஆசீவகர்கள் வைணவத்தால் ஈர்த்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.)
Question 91
பொருத்துக.
  1. கல்ப சூத்ரா                       i) திருத்தக்கதேவர்
  2. சீவகசிந்தாமணி              ii) மதுரை
  3. நேமிநாதர்                          iii) நாகசேனர்
  4. மிலிந்தபன்கா                   iv) பத்ரபாகு
  5. கீழக்குயில்குடி                  v) 22வது தீர்த்தங்கரர்
A
ii i v iii iv
B
iii i v iv ii
C
v iv iii ii i
D
iv i v iii ii
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 91 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!