Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil

சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil

Congratulations - you have completed சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எத்தனை வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 1 Explanation: 
(குறிப்பு: கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள் ஆகியவை மூன்று வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் ஆகும்.)
Question 2
___________ குறியீடுகள் செவ்வக வடிவில் காணப்படுகின்றன.
A
கட்டாயக் குறியீடுகள்
B
எச்சரிக்கைக் குறியீடுகள்
C
அறிவுறுத்தும் குறியீடுகள்
D
போக்குவரத்து குறியீடுகள்
Question 2 Explanation: 
(குறிப்பு: அறிவுறுத்தும் குறியீடுகள் திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன.)
Question 3
நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய விதிகளை விளக்கும் சமிக்ஞைகள் ____________ வடிவில் காணப்படும்.
A
சதுரம்
B
முக்கோணம்
C
செவ்வகம்
D
வட்டம்
Question 3 Explanation: 
(குறிப்பு: வட்ட வடிவக் குறியீடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இவை கட்டாயக் குறியீடுகள் எனப்படும்.)
Question 4
சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிக்கும் குறியீடுகள் __________ வடிவில் காணப்படும்.
A
சதுரம்
B
முக்கோணம்
C
செவ்வகம்
D
வட்டம்
Question 4 Explanation: 
(குறிப்பு: முக்கோண வடிவ குறியீடுகள் எச்சரிக்கை குறியீடுகள் எனப்படும்.)
Question 5
சாலைகளில் நேர்மறை அறிவுறுத்தல்களை வழங்கும் வட்டங்கள் எந்த நிறத்தில் காணப்படும்?
A
பச்சை
B
மஞ்சள்
C
நீலம்
D
சிவப்பு
Question 5 Explanation: 
(குறிப்பு: நீல நிற வட்டங்கள் நேர்மறை அறிவுறுத்தல்களாக சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.)
Question 6
நாம் சாலைகளில் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கும் வட்டங்கள் எந்த நிறத்தில் காணப்படும்?
A
இளஞ்சிவப்பு
B
சிவப்பு
C
கருப்பு
D
வெள்ளை
Question 6 Explanation: 
(குறிப்பு: சிவப்பு வளையங்கள் அல்லது வட்டங்கள் எதிர்மறை அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.)
Question 7
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிற விளக்கு குறிப்பவை)
A
நிறுத்தக் கோட்டிற்கு முன் காத்திருக்கவும்.
B
நிறுத்தக்கோடு இல்லாத இடங்களில் சாலை போக்குவரத்து விளக்கு தெளிவாக தெரியும்படி சாலையில் நிற்கவும்.
C
பச்சைநிற விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.
D
சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கம் திரும்பிச் செல்லலாம்.
Question 7 Explanation: 
(குறிப்பு: சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது இடப்பக்கம் திரும்பிச் செல்லலாம். ஆனால் பாதசாரிகளுக்கும், பிற போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.)
Question 8
நிறுத்தக் கோட்டைத் தாண்டிய பிறகு வண்டியை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் என்று எண்ணினால் __________ விளக்கு ஒளிரும் போது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்லாம்.
A
சிவப்பு
B
மஞ்சள்
C
பச்சை
D
வெள்ளை
Question 9
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு. (பச்சை விளக்கு ஒளிரும் போது பின்பற்ற வேண்டியவை.)
  1. பாதை தடையற்று இருப்பதை உறுதி செய்து கொண்டு பயணத்தை தொடரலாம்.
  2. தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கமாக மட்டுமே திரும்பி செல்ல வேண்டும்.
  3. பச்சை நிற அம்புக்குறி அது காட்டும் திசை நோக்கிப் பயணிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
A
அனைத்தும் சரி
B
3 மட்டும் தவறு
C
2 மட்டும் தவறு
D
2, 3 தவறு
Question 9 Explanation: 
(குறிப்பு: பச்சை நிற விளக்கு ஒளிரும் போது, தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கமாகவோ அல்லது இடப்பக்கமாகவோ திரும்பி செல்லலாம். ஆனாலும் மிகுந்த கவனத்துடன் இருந்து, பாதையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.)
Question 10
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி   __________ ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது.
A
1924
B
1927
C
1934
D
1935
Question 10 Explanation: 
(குறிப்பு: சாலைகள் புள்ளிகளால் ஆன கோடுகளால் குறிக்கப்பட்டன.)
Question 11
நடைபாதைகளில் அமைக்கப்படும் பெலிஷா பேக்கன் எனப்படும் ஒளிக்கம்பங்கள்___________ நாட்டுப் போக்குவரத்துறை அமைச்சரின் பெயரால் அமைக்கப்பட்டது.
A
ஜெர்மனி
B
அமெரிக்கா
C
பிரிட்டன்
D
இந்தியா
Question 11 Explanation: 
(குறிப்பு: எல்.ஹோரி பெலிஷா என்பவரின் பெயரில் நடைபாதை ஒளிக்கம்பங்கள் அமைக்கப்பட்டன.)
Question 12
___________ போருக்குப்பின் ஜீப்ரா கிராசிங் உருவாக்கப்பட்டன.
A
முதல் உலகப்போர்
B
இரண்டாம் உலகப்போர்
C
ஜெர்மானியப் போர்
D
வளைகுடாப் போர்
Question 13
சாலை குறியீடுகள் அடையாளங்கள் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை சாலை பயன்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குவதால் இவை ____________ என கருதப்படுகின்றன.
A
சாலைகளின் அடையாளங்கள்
B
சாலைகளின் மொழிகள்
C
போக்குவரத்து மொழிகள்
D
போக்குவரத்து அடையாளங்கள்
Question 13 Explanation: 
(குறிப்பு: சாலைக் குறியீடுகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவும் சாலை பயன்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குகின்றன.)
Question 14
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (பாதசாரிகள் செய்யவேண்டியன)
A
நடைபாதை இல்லாத சாலைகளில் எதிர்வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.
B
ஜீப்ரா கிராஸிங்குகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழிபாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
C
8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.
D
இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
Question 14 Explanation: 
(குறிப்பு: நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர்வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.)
Question 15
பாதசாரிகள் செய்யக்கூடாதவைகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. சாலைகளை ஓடி கடக்கக்கூடாது.
  2. நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக்கூடாது.
  3. வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக்கூடாது.
  4. சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையைக் கடக்கக் கூடாது.
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1, 4 சரி
D
2, 3 சரி
Question 16
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (பாதுகாப்பான மிதிவண்டி பயணத்திற்கு செய்ய வேண்டியவை)
A
மிதிவண்டிகளில் தரமான உதிரிபாகங்களைப் பொருத்துதல் வேண்டும்.
B
சாலையின் வலப்பக்க ஓரத்தில் செல்லவும் அல்லது சேவை சாலையைப் பயன்படுத்தவும்.
C
போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளைத் தவிர்த்தல் வேண்டும்.
D
மிதிவண்டியை நிறுத்துவதற்கு முன்பாகவும் திரும்புவதற்கு முன்பாக சரியான சமிக்ஞைகள் வழங்குதல் வேண்டும்.
Question 16 Explanation: 
(குறிப்பு: சாலையின் இடப்பக்க ஓரத்தில் செல்லவும் அல்லது சேவை சாலையைப் பயன்படுத்தவும்.)
Question 17
மிதிவண்டி பயணத்தில் செய்யக்கூடாதவைகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. மிதிவண்டிகளைக் கொண்டு எவ்விதமான சாகசச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
  2. மிக அதிகமான சுமைகளை ஏற்ற வேண்டாம்.
  3. மிதிவண்டியில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
  4. வேகமாக செல்லும் மற்றொரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு மிதிவண்டியில் பயணிக்க வேண்டாம்
A
1, 2
B
2 மட்டும்
C
3, 4
D
எதுவுமில்லை
Question 18
__________ வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்தல் வேண்டும்.
A
8
B
9
C
10
D
12
Question 19
பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்ய வேண்டியவைகளில் தவறானக் கூற்றைக் தேர்ந்தெடு.
A
பயணிக்க வேண்டிய பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து வரிசையில் நின்று ஏற வேண்டும்.
B
பேருந்தில் ஏறிய பிறகு சரியான முறையில் நடந்துகொள்ளுதல் வேண்டும்.
C
பேருந்தில் இருக்கும் பிடிமானங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
D
பேருந்து நிற்பதற்கு முன்னரே இறங்க வேண்டும்.
Question 19 Explanation: 
(குறிப்பு: பேருந்து முழுவதும் நின்றபிறகு மட்டுமே இறங்க வேண்டும். சாலைப் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனை பள்ளி நிர்வாகத்தினர்/பெற்றோர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.)
Question 20
பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்யக்கூடாதவை எவை?
  1. பேருந்தில் ஓடி ஏறக்கூடாது.
  2. பேருந்து படிகளில் நின்று பயணம் செய்யக்கூடாது.
  3. ஓட்டுநரை திசை திருப்பும் விதமான ஒலிகளை எழுப்புதல் கூடாது.
  4. வாகனத்திற்கு வெளியே தலை கை கால்களை நீட்டக்கூடாது.
  5. ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது.
A
அனைத்தும்
B
2, 3, 4
C
2, 4, 5
D
1, 3, 4
Question 21
A
ii i v iv iii
B
iii ii v iv i
C
v iv iii i ii
D
v iv iii ii i
Question 22
A
i ii iii iv v
B
ii i iii v iv
C
ii i iii iv v
D
ii iii iv i v
Question 23
  • கூற்று 1: வாகனங்கள் எப்படி, எப்போது, ஏன் இயக்க அனுமதிக்கப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தும் சட்டங்களே சாலை விதிகள் ஆகும்.
  • கூற்று 2: சாலை பாதுகாப்புக் கல்வி குழந்தைகள் மற்றும் இளையோரின் அணுகுமுறைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 23 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!