Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

சாலைப் பாதுகாப்பு Online Test 7th Social Science Lesson 22 Questions in Tamil

சாலைப் பாதுகாப்பு Online Test 7th Social Science Lesson 22 Questions in Tamil

Congratulations - you have completed சாலைப் பாதுகாப்பு Online Test 7th Social Science Lesson 22 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

முதன்மையாக சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் முதன்மையாக குறிப்பது எது?

A
சாலை குறியீடுகள்
B
போக்குவரத்து குறியீடுகள்
C
போக்குவரத்து சமிக்ஞைகள்
D
சாலை பாதுகாப்பு
Question 1 Explanation: 
விளக்கம்: சாலை பாதுகாப்பு என்பது முதன்மையாக சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் முதன்மையாக குறிக்கிறது.
Question 2

குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துபவை எவை?

A
இறப்புகள்
B
படுகாயங்கள்
C
வாகன சேதம்
D
a) மற்றும் b)
Question 2 Explanation: 
விளக்கம்: இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.
Question 3

விபரீதங்கள் நிகழ காரணம்?

A
சாலைகள்
B
கவனக்குறைவு
C
சாலை விபத்துக்கள்
D
a) மற்றும் b)
Question 3 Explanation: 
விளக்கம்: பிரச்சனை சாலைகளால் அல்ல. அது நம் கவனக்குறைவால் தான். அதனால் தான் இது போன்ற விபரீதம் ஏற்படுகின்றது. உயிரிழப்பால் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது.
Question 4

கீழ்க்கண்டவற்றுள் விபத்துக்களின் நேரடி விளைவுகள் எவை?

A
உயிரிழப்புகள்
B
படுகாயங்கள்
C
உடைமை சேதம்
D
இவை அனைத்தும்
Question 4 Explanation: 
விளக்கம்: உயிரிழப்புகள், படுகாயங்கள், உடைமை சேதம், இவை அனைத்தும் விபத்துக்களின் நேரடி விளைவுகள் ஆகும்.
Question 5

சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் எவை?

A
அதிக வேகம்
B
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்
C
வாகன ஓட்டிகளின் கவன சிதறல்
D
இவை அனைத்தும்
Question 5 Explanation: 
விளக்கம்: அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகன ஓட்டிகளின் கவன சிதறல், சிவப்பு விளக்கில் நில்லாமை, பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல் போன்றவை சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆகும்.
Question 6

கீழ்க்கண்டவற்றுள் எது சட்ட விரோதம் மற்றும் ஆபத்தான பழக்கம் ஆகும்?

A
ஒரு வாகனத்தின் பின்னால் மிக நெருக்கமாக பின் தொடருதல்
B
செல்லிட பேசியில் பேசுதல்
C
இருக்கை பட்டை அணியாதிருத்தல்
D
இவை அனைத்தும்
Question 6 Explanation: 
விளக்கம்: வேகத்தின் அதிகரிப்பானது விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் காயத்தின் தீவிரத்தினை அதிகரிக்கிறது. ஒரு வாகனத்தின் பின்னால் மிக நெருக்கமாக பின் தொடருதல் சட்ட விரோதம் மற்றும் ஆபத்தான பழக்கம் ஆகும்.
Question 7

பின்வருவனவற்றுள் மது அருந்துவதால் ஏற்படுபவை எவை?

A
கவனக்குறைவு
B
பார்வை தடைபடுதல்
C
a) மற்றும் b)
D
பகல் கனவு
Question 7 Explanation: 
விளக்கம்: மது அருந்துவது கவனத்தை குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றது. மது அருந்தியதை கண்டறிய சீரற்ற சுவாச பரிசோதனை செய்யப்படுகின்றது.
Question 8

இந்நாட்களில் பெரிய அளவிலான கவனச்சிதறலாக உள்ளது எது?

A
செல்லிடப்பேசியில் பேசுவது
B
இருக்கைப்பட்டை அணியாமல் இருப்பது
C
தலைக்கவசம் அணியாமல் இருப்பது
D
b) மற்றும் c)
Question 8 Explanation: 
விளக்கம்: கவனச்சிதறல் என்பது வாகனத்தின் உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசுவது பெரிய கவனச்சிதறலாக இந்நாட்களில் உள்ளது. செல்லிடப்பேசியில் பேசும் செயலே மனித மூளையின் செயல்பாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது.
Question 9

பின்வருவனவற்றுள் கவனச்சிதறலுக்கான காரணங்கள் எது/எவை?

A
வாகனம் ஓட்டும்போது கண்ணாடியை சரி செய்தல்
B
பகல் கனவு
C
வாகனத்தில் உள்ள ஒலி சாதனம்
D
இவை அனைத்தும்
Question 9 Explanation: 
விளக்கம்: கவனக்குறைவு, வேறொன்றை சிந்திப்பது(பகல் கனவு), வாகனம் ஓட்டும்போது கண்ணாடியை சரி செய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் நடமாடும் விலங்குகள், பதாகைகள், மற்றும் விளம்பர பலகைகள், ஆகியவை கவனச்சிதறல்களுக்கான காரணங்கள் ஆகும்.
Question 10

சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம்?

A
நேரத்தை மிச்சப்படுத்துதல்
B
விரைவாக செல்லுதல்
C
பாதுகாப்பு
D
இவை அனைத்தும்
Question 10 Explanation: 
விளக்கம்: சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பது ஆகும். போக்குவரத்து சமிக்ஞைகளை முறையாக கடைபிடிக்கும்போது நேரம் சேமிக்கப்படுவதாகவும் பயணிகள் தாங்கள் சேர வேண்டிய இடத்தை பாதுகாப்புடனும் உரிய நேரத்தில் சென்றடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Question 11

பின்வருவனவற்றுள் சாலை பாதுகாப்பு நடவடிக்கை அல்லாதது எது?

A
எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்வது
B
விரைவாக செல்லுதல்
C
தலைக்கவசம் அணிவது
D
சரியான இடைவெளி விட்டு பின் தொடருதல்
Question 11 Explanation: 
விளக்கம்: எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்வது, வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல், வேக வரம்பை ஒரு போதும் மீறக்கூடாது. சாலை குறியீடுகளை பின்பற்றுதல், இதர பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றுதல் போன்றவை.
Question 12

கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது போன்றவை யாருடைய தவறுகள்?

A
பாதசாரிகள்
B
வாகன ஓட்டிகள்
C
பயணிகள்
D
இவை அனைத்தும்
Question 12 Explanation: 
விளக்கம்: பாதசாரிகள் - கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்பவர்.
Question 13

வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுவது, ஓட்டுநர்களுடன் பேசுவது, படிக்கட்டுகளில் பயணம் செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை யாருடைய தவறுகள்?

A
பாதசாரிகள்
B
வாகன ஓட்டிகள்
C
பயணிகள்
D
இவை அனைத்தும்
Question 13 Explanation: 
விளக்கம்: பயணிகள் - வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுவது, ஓட்டுநர்களுடன் பேசுவது, படிக்கட்டுகளில பயணம் செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை. வாகனங்கள் – தடுத்து நிறுத்தும் கருவி (brake) மற்றும் வாகனத் திசை திருப்பி (Steering) பழுதடைவது, சக்கரத்தில் உள்ள டயர் (ரப்பர்) வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான மற்றும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்.
Question 14

பழுதடைந்தசாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரகச்சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள் போன்றவை எதைக்குறிக்கிறது?

A
பாதசாரிகள்
B
வாகனங்கள்
C
பயணிகள்
D
சாலைகளின் தரம்
Question 14 Explanation: 
விளக்கம்:சாலைகளின் தரம் -பழுதடைந்தசாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரகச்சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.வானிலை - மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை.
Question 15

எந்த விளக்கு ஒளிரும்போது சாலையை கடக்க கூடாது?

A
சிவப்பு
B
மஞ்சள்
C
பச்சை
D
a) மற்றும் b)
Question 15 Explanation: 
விளக்கம்: பாதசாரிகள் வரிக்கோடுகளில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்து சமிக்ஞைகளில் செலவிடும் இரண்டு நிமிட நேரம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புள்ளதாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு எரியும்போது சாலையை கடக்க கூடாது.
Question 16

மத்தியில் உள்ள இடைவெளி விடப்பட்ட வெள்ளைக்கோடு பின்வருவனவற்றுள் எதை குறிக்கிறது?

A
குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம்
B
வாகனங்களை முந்தி செல்லாம்
C
பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U திருப்பத்தில் திரும்பலாம்
D
இவை அனைத்தும்
Question 16 Explanation: 
விளக்கம்: இது சாலையின் அடிப்படை குறியீடு ஆகும். இக்குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் மாறலாம், வாகனங்களை முந்தி செல்லாம், பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U திருப்பத்தில் திரும்பலாம்.
Question 17

தவறான இணையை தேர்ந்தெடுக்க.

A
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு - பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக உள்ளது
B
தொடர்ச்சியான மஞ்சள் கோடு - வெளிச்சம் குறைவான பகுதி
C
இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் - ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து
D
இவை அனைத்தும்
Question 17 Explanation: 
விளக்கம் : தொடர்ச்சியான வெள்ளைக்கோடு - இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும். வாகனங்களை முந்தவோ தடம் மாறவோ அனுமதியில்லை என்பதை குறிக்கிறது.
Question 18

நிறுத்தக்கோடு பின்வருவனவற்றுள் எதைக்குறிக்கிறது?

A
பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக உள்ளது
B
வெளிச்சம் குறைவான பகுதி
C
ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
விளக்கம் : பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். அவை போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியை குறிக்கின்றது.
Question 19

தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள் எதை குறிக்கிறது?

A
பிற வாகனங்களை முந்தி செல்லலாம்
B
வெளிச்சம் குறைவான பகுதி
C
ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து
D
இவை அனைத்தும்
Question 19 Explanation: 
விளக்கம் : இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும்போது பிற வாகனங்களை முந்தி செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக ஓட்டும்போது பிற வாகனங்களை முந்தி செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும்போது பிற வாகனங்களை முந்தி செல்ல கூடாது.
Question 20

சாலை விபத்துகளுக்கு அழைக்க வேண்டிய எண் எது?

A
108
B
107
C
102
D
103
Question 20 Explanation: 
விளக்கம்: 108 அவசர கால தேவை: இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசர கால சேவையாகும். சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டதை கண்டால் பதற்றப்பட வேண்டாம் உதவிக்கு 108 என்ற எண்ணினையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணினையும் அழைக்கவும்.
Question 21

போக்குவரத்து  குறியீடுகளின் முதல் வகை எது?

A
கட்டாயக்குறியீடுகள்
B
எச்சரிக்கை குறியீடுகள்
C
தகவல் குறியீடுகள்
D
இவை அனைத்தும்
Question 22

சாலை வழி மற்றும் போக்குவரத்து துறையால் மொத்தம் எத்தனை எச்சரிக்கை குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன?

A
40
B
20
C
30
D
10
Question 23

தவறான இணையை தேர்ந்தெடுக்க.

A
கட்டாயக்குறியீடுகள் - உத்தரவிடும் குறியீடுகள்
B
எச்சரிக்கை குறியீடுகள் - முக்கோண வடிவில் இருப்பவை
C
தகவல் குறியீடுகள் - செவ்வக வடிவில் இருக்கும்
D
போக்குவரத்து குறியீடுகள் - 5 வகை
Question 23 Explanation: 
விளக்கம்: மூன்று வகையான போக்குவரத்து குறியீடுகள் உள்ளன. கட்டாயக்குறியீடுகள்: கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் குறியீடுகள் எச்சரிக்கை குறியீடுகள்: சாலையை பயன்படுத்துவோருக்கு எதிர்வரும் சாலையின் நிலை குறித்து எச்சரிக்கின்றன. அவை பொதுவான முக்கோண வடிவில் இருக்கும். தகவல் குறியீடுகள்: திசைகள், இலக்குகள் குறித்த தகவல்களை அளிக்கின்றன. அவை பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்.
Question 24
  • கூற்று (A): போக்குவரத்து விளக்குகள் என்பது ஒரு சமிக்ஞை கருவி.
  • காரணம்(R): இது சாலைகள் சந்திக்கும் இடங்களிலும், பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்
A
A சரி மற்றும் R தவறு
B
A தவறு மற்றும் R சரி
C
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம்
D
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம் அல்ல
Question 24 Explanation: 
விளக்கம்: போக்குவரத்து விளக்குகள் என்பது ஒரு சமிக்ஞை கருவி. இது சாலைகள் சந்திக்கும் இடங்களிலும், பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவை உலகளாவிய நிரக்குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக எப்போது நடக்கலாம், வாகனங்களை செலுத்தலாம் என்பதை குறிப்பிடுகின்றன.
Question 25

நிறுத்தக்கோட்டிற்கு பின்னால் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பதை குறிக்கும் விளக்கு?

A
பச்சை நிற விளக்கு
B
ஆரஞ்சு நிற விளக்கு
C
சிவப்பு நிற விளக்கு
D
மஞ்சள் நிற விளக்கு
Question 25 Explanation: 
விளக்கம்: ஆம்பர் (மஞ்சள்): இந்த சமிக்ஞை நிறுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. பச்சை வண்ணம் தெரியும் வரை சாலையை கடக்கவோ புறப்படவோ கூடாது. பச்சை: பாதை தெளிவாக இருக்கும்பட்சத்தில் செல்லலாம் என்பதை குறிக்கிறது.
Question 26

இந்தியா முழுவதும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச்சட்டம் எந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?

A
1947
B
1988
C
1994
D
1974
Question 26 Explanation: 
விளக்கம்: விளக்கம்:இந்தியா முழுவதும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச்சட்டம் 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது 1989 இல் நடைமுறைக்கு வந்தது.
Question 27

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

A
ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
B
இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்
C
அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்
D
இவை அனைத்தும்
Question 27 Explanation: 
விளக்கம்: தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், ன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது. மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள், இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும். உயர் கற்றை ஒளியினை தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போதும், அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
Question 28

இந்தியாவின் சாலை விதிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.

A
ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும் பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.
B
ஓட்டுநர் வாகனத்தினைவலப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது வலக்கையினை கிடைமட்டமாக முன்னால் உள்ளங்கை தெரிவது போல் நீட்ட வேண்டும்.
C
ஓட்டுநர் வாகனத்தினை இடப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது கையினை இடஞ்சுழியாக (anti-clockwise) சுழற்ற வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 29

கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை எந்த  பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யநேரிடும்?

A
இந்திய தண்டனைச் சட்டம் 304A பிரிவு
B
இந்திய தண்டனைச் சட்டம் 404A பிரிவு
C
இந்திய தண்டனைச் சட்டம் 204A பிரிவு
D
இந்திய தண்டனைச் சட்டம் 104A பிரிவு
Question 29 Explanation: 
விளக்கம்: இந்திய தண்டனைச் சட்டம் 304A பிரிவு கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை மேற்கூறிய பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யநேரிடும்.
Question 30
பொருத்துக.
  1. A) சிவப்பு வண்ணத்தகடு     -1) குடியரசுத் தலைவர் மற்றும் மாநில                                                    ஆளுநர்களின்  வாகனங்களில் பயன்படுத்தப்படும்.
  2. B) நீல வண்ணத்தகடு                     - 2) அயல்நாட்டு பிரதிநிதிகள்/தூதர்கள்                                         பயன்படுத்தும் வாகனங்களுக்கு அளிக்கப்படும்.
  3. C) வெள்ளை  வண்ணத்தகடு           -  3)  இது சாதாரண குடிமகனுக்கு                                                            சொந்தமான வாகனம என்பதாகும்.
  4. D) மஞ்சள் வண்ணத்தகடு           - 4) வணிக ரீதியான                                                                                                       வாகனங்களுக்கானதாகும்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
2 1 3 4
Question 30 Explanation: 
விளக்கம்: பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள் (Number Plates) : சிவப்பு வண்ணத்தகடு - குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்படும். நீல வண்ணத்தகடு - அயல்நாட்டு பிரதிநிதிகள்/ தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அளிக்கப்படும். வெள்ளை வண்ணத்தகடு - இது சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனம் என்பதாகும். மஞ்சள் வண்ணத்தகடு – வணிக ரீதியான வாகனங்களுக்கானதாகும்.
Question 31

ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது பின்வரும் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்?

A
காப்பீட்டுச் சான்றிதழ்
B
வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்
C
வரிச் சான்றிதழ்
D
இவை அனைத்தும்
Question 31 Explanation: 
விளக்கம்: கட்டாய ஆவணங்கள் - ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது பின்வரும் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வரிச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்.
Question 32

சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க அரசு  மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை?

A
ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்
B
வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது
C
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்
D
இவை அனைத்தும்
Question 32 Explanation: 
விளக்கம்: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை (The Ministry of Road Transport and Highways) அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவையாவன:- ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பல்வேறு செய்திக் குறியீடுகள்
Question 33

ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை எது?

A
ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்
B
வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது
C
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்
D
இவை அனைத்தும்
Question 33 Explanation: 
விளக்கம்: ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்: ஆங்கில எழுத்து நான்கு ‘E’ – பொறியியல் (Engineering), செயலாக்கம் (Enforcement), கல்வி (Education), அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும். அவை மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சாலை பொறியியலையும் மேம்பட்ட வாகன பாதுகாப்பு தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்புமற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.
Question 34

வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்தும் பொருட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்?

A
கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
B
இரு சக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக்கருவி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
C
இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் (Automatic Headlight On) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
D
இவை அனைத்தும்
Question 34 Explanation: 
விளக்கம்: வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது: சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் (Anti-locking Brake System). இரு சக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக்கருவியும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் (Automatic Headlight On) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Question 35

சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது?

A
தேசிய நெடுஞ்சாலை எண் 8
B
தேசிய நெடுஞ்சாலை எண் 33
C
தேசிய நெடுஞ்சாலை எண் 44
D
a) மற்றும் b)
Question 35 Explanation: 
விளக்கம்: சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 இல் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Question 36

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு -------------- கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது?

A
20 கிமீ
B
50 கிமீ
C
60 கிமீ
D
100 கிமீ
Question 36 Explanation: 
விளக்கம்: உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள்: தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது. அவசர ஊர்திகளுக்காக பெறப்படும் அழைப்புகளை ஏற்க 24x7 செயல்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் சாலை பாதுகாப்பு தன்னார்வத் தொண்டர்களுக்கு முதலுதவி அளிப்பதில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
Question 37

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A
2018
B
2016
C
2015
D
2017
Question 37 Explanation: 
விளக்கம்: சேது பாரதம்: தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது. அது 2019ஆம் ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Question 38

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.

A
இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்கருவிகள் உள்ளன
B
இவ்வுணர்கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் உந்துபொறிக்கு (engine)செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது.
C
இது தானாகவே வாகனத்தின் வேகத்தினை குறைப்பதோடு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கின்றது.
D
இவை அனைத்தும்
Question 38 Explanation: 
விளக்கம்: வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்: இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்கருவிகள் உள்ளன. இவ்வுணர்கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் உந்துபொறிக்கு (engine) செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது. இது தானாகவே வாகனத்தின் வேகத்தினை குறைப்பதோடு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கின்றது.
Question 39
  • கூற்று (A): பல்வேறு செய்திக் குறியீடுகள்: இவை பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டியமுக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளிஉமிழும் முனைய பலகைகள் (LED Boards) ஆகும்
  • காரணம் (R): பெரிய போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடிகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்நிலைகளை உடனடியாக அச்சாலையை உபயோகிப்பவர்களுக்கு தெரிவிக்க இவை பயன்படுகின்றன.
A
A சரி மற்றும் R தவறு
B
A தவறு மற்றும் R சரி
C
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம்
D
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம் அல்ல
Question 39 Explanation: 
விளக்கம்: பல்வேறு செய்திக் குறியீடுகள்: இவை பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளிஉமிழும் முனைய பலகைகள் (LED Boards) ஆகும். பெரிய போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடிகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்நிலைகளை உடனடியாக அச்சாலையை உபயோகிப்பவர்களுக்கு தெரிவிக்க இவை பயன்படுகின்றன.
Question 40

இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் எந்த ஆண்டு கையெழுத்திட்டது?

A
2015
B
2016
C
2017
D
2018
Question 40 Explanation: 
விளக்கம்: சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனம்: இது ஐ. நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும். சாலை பாதுகாப்பினை மிக முக்கியமானதாக கருதி இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இதன் மூலம் இதில் பங்கு பெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கான வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளன.
Question 41

குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகங்கள்?

A
சுவச்ச சேஃபர்
B
சுவரஷித் யாத்ரா
C
a) மற்றும் b)
D
இவற்றில் எதுவுமில்லை
Question 41 Explanation: 
விளக்கம்: குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சுவச்ச சேஃபர் (Swachha Safer) மற்றும் சுவரஷித் யாத்ரா (Suvarshit Yatra) என்ற இரு சித்திர புத்தகங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Question 42
  • கூற்று(A): வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save LIFE Foundation) இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.
  • காரணம்(R): இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.
  • சரியான விடையை தேர்ந்தெடு
A
A சரி மற்றும் R தவறு
B
A தவறு மற்றும் R சரி
C
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம்
D
A சரி மற்றும் R ஆனது A வின் சரியான விளக்கம் அல்ல
Question 43
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
A
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
B
இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்
C
a) மற்றும் b)
D
இவற்றில் எதுவுமில்லை
Question 43 Explanation: 
விளக்கம்: சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும். மேலும் இது சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் துவங்கப்பட்டதாகும்.
Question 44

இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் எதனால் ஒருங்கிணைக்கப்படுகிறது?

A
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
B
இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்
C
a) மற்றும் b)
D
இவற்றில் எதுவுமில்லை
Question 44 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பாதுகாப்பு உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
Question 45

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் எந்த  பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது?

A
2011-2020
B
1990-2000
C
2000-2010
D
1980-1990
Question 45 Explanation: 
விளக்கம்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2011-2020 வரையிலான பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் அவசரகால சேவையினை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இப்பதிற்றாண்டில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரினை காக்க முற்படுகின்றது.
Question 46

செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேசகூட்டமைப்பு எத்தனை உறுதி மொழிகளை கொண்டுள்ளது?

A
10
B
20
C
30
D
15
Question 46 Explanation: 
விளக்கம்: செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேசகூட்டமைப்புகீழ்க்காணும் 10 உறுதிமொழிகளைப் பரிந்துரைத்துள்ளது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 46 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!