Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

சமத்துவம் ONLINE TEST 7th Social Science Lesson 6 Questions in Tamil

சமத்துவம் ONLINE TEST 7th Social Science Lesson 6 Questions in Tamil

Congratulations - you have completed சமத்துவம் ONLINE TEST 7th Social Science Lesson 6 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்." என்று கூறியவர்
A
ஜவஹர்லால் நேரு
B
ஆபிரகாம் லிங்கன்
C
பேராசிரியர் லாஸ்கி
D
அம்பேத்கர்
Question 1 Explanation: 
(குறிப்பு: சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.)
Question 2
மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை ___________ இன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடயவையாக இருக்கும்.
A
திறன்
B
வலிமை
C
எண்ணம்
D
நீதி
Question 2 Explanation: 
(குறிப்பு: சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.)
Question 3
அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பதே ____________சமத்துவம் ஆகும்.
A
குடிமை சமத்துவம்
B
சமூக சமத்துவம்
C
அரசியல் சமத்துவம்
D
பாலின சமத்துவம்
Question 3 Explanation: 
(குறிப்பு: சமூகத்தில் சாதி, சமயக் கொள்கை, நிறம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருத்தல் கூடாது. அனைவரும் தங்களது ஆளுமை மற்றும் நோக்கங்களை அடைவதற்கு சமமான வாய்ப்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.)
Question 4
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே ___________ சமத்துவம் ஆகும்.
A
குடிமை சமத்துவம்
B
சமூக சமத்துவம்
C
அரசியல் சமத்துவம்
D
பாலின சமத்துவம்
Question 4 Explanation: 
(குறிப்பு: குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், சாதி மற்றும் சமயக்கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது.)
Question 5
  • கூற்று 1: சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது.
  • கூற்று 2: இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு உள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 5 Explanation: 
(குறிப்பு: இங்கிலாந்து சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதோடு அது அனைவரையும் சமமாக நடத்துகிறது. இந்தியாவிலும் அதைப்போலவே சட்டத்தின் ஆட்சிக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது.)
Question 6
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை ___________ என்பவர் முதன்முதலில்  வாதுரைத்தார்.
A
பேராசிரியர் லாஸ்கி
B
ஏ.வி.டைசி
C
வில்லியம் மில்லர்
D
அம்பேத்கர்
Question 6 Explanation: 
(குறிப்பு: ஏ.வி.டைசி என்பவர் பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் ஆவார்.)
Question 7
கீழ்க்கண்டவற்றுள் அரசியல் உரிமை அல்லாதது எது?
A
வாக்களிக்கும் உரிமை
B
பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை
C
அரசை விமர்சனம் செய்யும் உரிமை
D
அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு
Question 8
குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் என்ற உரிமை ____________ என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது.
A
அரசியல் கட்சி தொடங்குதல்
B
கூட்டம் கூடுதல்
C
அனைவருக்கும் வாக்குரிமை
D
பேச்சுரிமை
Question 8 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.)
Question 9
பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சட்டப்பிரிவு _________.
A
14
B
15
C
16
D
17
Question 10
___________ ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
A
1951
B
1952
C
1953
D
1956
Question 10 Explanation: 
(குறிப்பு: நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.)
Question 11
சுவிட்சர்லாந்து நாட்டில் __________ ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
A
1961
B
1967
C
1971
D
1979
Question 12
இந்தியாவில் _________ வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
A
25
B
27
C
31
D
35
Question 12 Explanation: 
(குறிப்பு: அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம்.)
Question 13
பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் _________ சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
A
25%
B
33%
C
45%
D
50%
Question 13 Explanation: 
(குறிப்பு: பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.)
Question 14
பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும் என __________ கூறுகிறது.
A
WHO
B
UNESCO
C
UNICEF
D
UNDP
Question 15
2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 15 Explanation: 
(குறிப்பு: 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான குறிக்கோள்களில் மொத்தம் 17 குறிக்கோள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.)
Question 16
___________ நூற்றாண்டிலிருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
A
17
B
18
C
19
D
20
Question 16 Explanation: 
(குறிப்பு: ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்தரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ரூகேயா சகாவத் உசேன் ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.)
Question 17
மனித மாண்பு என்பது _________ ஆகும்.
A
சுதந்திரம்
B
சமத்துவம்
C
சுய மரியாதை
D
வாய்ப்பு
Question 17 Explanation: 
(குறிப்பு: மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.)
Question 18
அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு __________ ஐ கொண்டிருத்தல் வேண்டும்.
A
மாண்பு
B
செல்வம்
C
சமத்துவம்
D
வாய்ப்புகள்
Question 18 Explanation: 
(குறிப்பு: சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.)
Question 19
இந்திய அரசியலமைப்பு குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் __________ மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
A
12-14
B
13-18
C
14-18
D
15-18
Question 19 Explanation: 
(குறிப்பு: உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன.)
Question 20
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு _________இல் மேலும் வலிமைபடுத்தப்பட்டுள்ளது.
A
18
B
19
C
20
D
21
Question 21
பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்யும் சட்டப்பிரிவு ________.
A
14
B
15
C
18
D
19
Question 22
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. சட்டப்பிரிவு 14    -   தனிமனித உரிமை
  2. சட்டப்பிரிவு 15    - பாகுபாட்டை தடை செய்கிறது.
  3. சட்டப்பிரிவு 17    - தீண்டாமையை ஒழிக்கிறது.
A
1, 2 தவறு
B
3 மட்டும் தவறு
C
1 மட்டும் தவறு
D
2 மட்டும் தவறு
Question 22 Explanation: 
(குறிப்பு: சட்டப்பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.)
Question 23
சமத்துவத்தை மேம்படுத்தும் வழிகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. அனைவரையும் நியாயமாக நடத்துதல் மற்றும் கல்வி
  2. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  3. வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  4. முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்
  5. சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல்.
A
1, 3, 5
B
2, 4, 5
C
1, 3, 4
D
அனைத்தும்
Question 23 Explanation: 
(குறிப்பு: சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் அது தனி மனித மாண்பினை தக்க வைக்கிறது.)
Question 24
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் தூண்கள் எவை?
  1. தீண்டாமை   2. சமத்துவம்           3. நீதி                         4. பாகுபாடு
A
1, 2
B
2, 3
C
2, 3, 4
D
1, 4
Question 24 Explanation: 
(குறிப்பு: இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும்.)
Question 25
சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு ________ ஒரு முக்கியமான கோட்பாடாகும்.
A
சட்டம்
B
சம வேலைவாய்ப்பு
C
சமத்துவம்
D
சுதந்திரம்
Question 25 Explanation: 
(குறிப்பு: மக்களாட்சியில் மக்கள் சமமாக நடத்தப்படும்போது நீதி எட்டப்படும்.)
Question 26
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
A
பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
B
தேர்தலில் போட்டியிடும் உரிமை
C
அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
D
பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
Question 27
கீழ்க்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
A
அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொது கொள்கைகளை விமர்சிப்பது.
B
இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்.
C
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
D
சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
Question 27 Explanation: 
(குறிப்பு: இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன.)
Question 28
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
A
இயற்கை சமத்துவமின்மை
B
மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
C
பொருளாதார சமத்துவமின்மை
D
பாலின சமத்துவமின்மை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 28 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!