Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

ஊடகமும் ஜனநாயகமும் Online Test 7th Social Science Lesson 15 Questions in Tamil

ஊடகமும் ஜனநாயகமும் Online Test 7th Social Science Lesson 15 Questions in Tamil

Congratulations - you have completed ஊடகமும் ஜனநாயகமும் Online Test 7th Social Science Lesson 15 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

அந்த காலத்தில் சமய ஊடகங்களாகச் செயல்பட்டவை?

A
ஹரிகதைகள்
B
கூத்து
C
a மற்றும் b)
D
சொற்பொழிவு
Question 1 Explanation: 
விளக்கம்: இந்தியா பாரம்பரியமிக்க நாட்டுபுறக் கலைகள் பலவற்றைக் கொண்டது. அக்கலைகள் மூலம் கிராமப்புற மக்களிடையே கருத்துகள் பரிமாறப்பட்டன. ஹரிகதைகள் மற்றும் கூத்து போன்ற கலைகளின் மூலம் சமயக் கதைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இவை அந்த காலத்தில் சமய ஊடகங்களாகச் செயல்பட்டன. இச்சமய ஊடகங்கள் இசை, நடனம், சொற்பொழிவு, கதை சொல்லல், பொம்மலாட்டம் போன்றவற்றின் கூட்டுக்கலைகளாக இருந்தன. இவை மக்களிடையே நேரடியாக கருத்துகளை கொண்டு சேர்த்தன. இதன் மூலம் சமூகத்திற்குப் பயனுள்ள கருத்துகள் கூறப்பட்டன.
Question 2

மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுவது எது?

A
அச்சு ஊடகம்
B
கூட்டங்கள்
C
கருத்தரங்குகள்
D
நாடகங்கள்
Question 2 Explanation: 
விளக்கம்: இன்றைய நவீன ஊடகமுறை என்பது சிறு மற்றும் குறு அளவிலான கூட்டங்கள், கருத்தரங்குகள், நாடகங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்துப்பட்டறைகளாக இருக்கின்றன. அச்சு ஊடகம் என்பது மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது மக்களுக்குத் தகவல்களை வழங்கக்கூடியதாகவும், கல்வியறிவு ஊட்டக்கூடியதாகவும் மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்பட்டு வருகின்றது.
Question 3

ஊடகம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?

A
அச்சு
B
ஒளி
C
ஒலி
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
விளக்கம்: ஒவ்வொரு தனிமனிதனும் ஊடகத்தின் வெளிப்பாடாகும். ஒரு நபர் மற்ற நபர்களுடனும், நிறுவனங்களுடனும் ஊடகத்தின் மூலம் தொடர்பு கொள்கிறார். ஊடகம் என்பது ஓருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும். ஊடகம் என்பது அச்சு, ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும். ஊடகமானது (Media) மீடியம் (Medium) என்ற ஆங்கில வார்த்தையின் பன்மையாகும் (Plural). ஊடகம் தகவல்கள் செய்திகள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளகூடியதாகவும் இருக்கிறது.
Question 4

கீழ்க்கண்டவற்றுள் தனி நபர் தொடர்பு சாதனம் எது?

A
கடிதங்கள்
B
வானொலி
C
தொலைக்காட்சி
D
செய்தித்தாள்கள்
Question 4 Explanation: 
விளக்கம்: தனிமனித தொடர்பு - கடிதங்கள், தொலைப்பேசி, அலைப்பேசி, மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் ஆகியன தனிமனித தொடர்பு சாதனங்களாகும். இவை ஒரு நபர் மற்றொரு நபரோடு தனியாகவோ குழுவாகவோ தொடர்பு கொள்வதற்கு பயன்படுகிறது. வெகுஜன தொடர்பு - செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியன வெகுஜன மக்களோடு தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படுதுகின்றன. எனவே இவை வெகுஜன ஊடகம் என்று அழைக்கப்படுகின்றன.
Question 5

அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A
1492
B
1498
C
1453
D
1354
Question 5 Explanation: 
விளக்கம்: அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் 1453 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
Question 6

ஊடகம் எத்தனை வகைப்படும்?

A
நான்கு
B
மூன்று
C
ஐந்து
D
இரண்டு
Question 6 Explanation: 
விளக்கம்: ஊடகத்தின் வகைப்பாடு : குறுகிய தொடர்பு ஊடகம் - கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு தொலைத்தொடர்பு ஊடகம் - திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி அச்சு ஊடகம் செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள் இணைய ஊடகம் - கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் சமூக ஊடகம் - கீச்சகம், முகநூல், புலனம்/கட்செவி அஞ்சல் மற்றும் படவரி.
Question 7

கீழ்க்கண்டவற்றுள் ஜன நாயகத்தின்  தூண்/கள் எது/எவை?

A
நிருவாகத்துறை
B
சட்டமன்றம்
C
நீதித்துறை
D
இவை அனைத்தும்
Question 7 Explanation: 
விளக்கம்: சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகிறது. ஊடகம் மற்ற மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது. இந்த நான்காவது தூண் நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. உண்மையில் ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகம் என்பது தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.
Question 8

நம்மை சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்வது?

A
ஊடகம்
B
புத்தகங்கள்
C
நீதித்துறை
D
கண்காட்சிகள்
Question 8 Explanation: 
விளக்கம்: இவ்வுலகில் ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த கட்டமைப்பு ஆகும். இது நம்மை சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது. இதனை மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சார்ந்திருக்கின்றனர். குறிப்பாக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சார்ந்துள்ளனர்.
Question 9

கீழ்க்கண்டவற்றுள் ஊடகத்தின் செயல்பாடுகள்  எவை?

A
சமூக மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனம்
B
ஒரு அரசின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது
C
தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
D
இவை அனைத்தும்
Question 9 Explanation: 
விளக்கம்: ஊடகம் மக்களை விழிப்போடு இருக்கச்செய்கிறது. மேலும் சமூக மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனமாகவும் இருக்கிறது . ஊடகம் உலகின் அன்றாட நிகழ்வுகளை மட்டுமல்லாமல் ஒரு அரசின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் தேசிய மற்றும் பன்னாட்டு செய்திகளை ஒளிபரப்பரப்புகின்றன. பல திரைப்படங்களில் சமூகப் பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விடயங்களிலும் ஊடகம் நடுநிலையான அறிக்கையை வழங்குகின்றது. இது சமூக, அரசியல் பிரச்சனைகளுக்கெதிராகவும், சமூக அநீதிக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் இது மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
Question 10

அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது

A
1956
B
1948
C
1936
D
1951
Question 10 Explanation: 
விளக்கம்: அகில இந்திய வானொலி 1956 ஆம் ஆண்டிலிருந்து ஆகாச வானி (வானிலிருந்து வரும் ஒலி) என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பை செய்து வருகிறது. இது 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
Question 11

அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சாதனமாக திகழ்வது எது?

A
தொலைகாட்சி
B
வானொலி
C
கணினி
D
செய்தித்தாள்
Question 11 Explanation: 
விளக்கம்: ஊடகம் மக்களிடையே ஒரு பொதுவான கருத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் மக்களின் பொதுக்கருத்து) இது சமகாலத்தின் சக்தி வாய்ந்த கருவியாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த பார்வை மற்றும் புரிதலில் பொதுமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெகுஜன ஊடகம் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி நேர்மையாகவும், நுட்பமாகவும், நடுநிலையாகவும் தருகின்றது. செய்தித்தாள்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சாதனமாக திகழ்கிறது. இவ்வாறு மக்களுக்கு சமூகத்தில் நடைபெறுகின்ற முக்கியபிரச்சனைகளை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க அச்சு ஊடகங்களும், மின்னனு ஊடகங்களும் உதவுகின்றன.
Question 12

நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு எது?

A
நெறி
B
ஊடகம்
C
நூலகம்
D
செய்தித்தாள்
Question 12 Explanation: 
விளக்கம்: நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும் எனவே இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். ஊடக நெறிமுறை என்பது நல்ல நடத்தைக்குரிய கொள்கைகள் அடங்கிய தொகுப்பாகும். ஊடகம் என்பது அவற்றின் செயல்பாடுகள் மற்றும் எழுத்தின் மூலமும் பிரதிபலிக்க வேண்டும். எளிதில் உணர்வுகளை தூண்டக்கூடிய தேவையற்ற செய்திகளை தவிர்க்கவேண்டும்.
Question 13

ஒரு அரசு சிறப்பாக செயல்படுவதற்கு  மிகவும் அவசியமானது எது?

A
விழிப்பான ஊடகம்
B
சுதந்திரமான ஊடகம்
C
அரசு கோட்பாடுகள்
D
a மற்றும் b)
Question 13 Explanation: 
விளக்கம்: ஊடகங்களின் அடிப்படை நோக்கமானது நேர்மையான, துல்லியமான, நடுநிலையான, நாகரிகமான மற்றும் நல்ல மொழிநடையில் மக்கள் நலன் சார்ந்த தகவல்கள், செய்திகள், கருத்துகள், ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதாகும். ஒரு அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும். இது மக்களுக்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கான உரிமையை பெற்றிருக்கிறது. அதேசமயம் எந்த விதத்திலும் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இருத்தல் கூடாது. நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
Question 14

ஜனநாயகத்தின் முதுகெலும்பு எது?

A
விவசாயம்
B
ஊடகம்
C
நூலகம்
D
பொருளாதாரம்
Question 14 Explanation: 
விளக்கம்: ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். நமது ஜனநாயக சமுதாயத்தில் ஊடகம் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் உந்து சக்தியாகும். இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது. இது மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது. மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஏற்படுத்துகிறது. அரசின் வெளிப்படைத்தன்மையும், அவற்றின் பொறுப்பினையும் உறுதி செய்கிறது. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச்செல்கிறது. இதன் மூலம் அரசின் செயல்பாடுகளையும் மக்களின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்கிறார்கள்.
Question 15

மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பது ------------------.

A
மக்களாட்சி
B
ஊடகம்
C
கூட்டாட்சி
D
தனி உரிமை
Question 15 Explanation: 
விளக்கம்: மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பதாகும். இது இரண்டு கிரேக்க சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos) அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்.
Question 16

அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவது எது?

A
ஊடகம்
B
தொகுதி
C
திட்டங்கள்
D
அரசு முறை பயணங்கள்
Question 16 Explanation: 
விளக்கம்: இது நடப்பு செய்திகளை பற்றிய விவாதத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெறமுடிகிறது. ஊடகமானது மக்களுக்கு அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது. இது கிராமப்புற மக்களுக்கு கல்வி அளிக்கிறது. பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டும் ஊடகத்தின் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே வலிமை அடையும். ஊடகம் அறிக்கைகள் அளிப்பது மட்டுமல்லாது அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. மேலும் ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியையும் செய்கிறது. ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.
Question 17

குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவது எது?

A
பிராந்திய ஊடகம்
B
உள்ளூர் ஊடகம்
C
மாவட்ட ஊடகம்
D
அஞ்சல் ஊடகம்
Question 17 Explanation: 
விளக்கம்: பொதுவாக ஊடகம் என்பது தேசிய மற்றும் உலக செய்திகளை அளிப்பதாகும். உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.
Question 18

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

A
ஊடகம் மக்களின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வண்ணம் எதையும் வெளியிடா வண்ணம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
B
ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஊடகம் நல்ல தகவல்களையும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும்.
C
ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
விளக்கம்: தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஊடகம் மக்களின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வண்ணம் எதையும் வெளியிடா வண்ணம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஊடகம் நல்ல தகவல்களையும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும். ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 18 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!