Online TestTnpsc Exam
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Online Test 10th Social Science Lesson 17 Questions in Tamil
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Online Test 10th Social Science Lesson 17 Questions in Tamil
Congratulations - you have completed உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Online Test 10th Social Science Lesson 17 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதையும் குறிப்பது எது?
உணவு | |
உணவுப்பாதுகாப்பு | |
உணவூட்டம் | |
சரிவிகித உணவு |
Question 1 Explanation:
விளக்கம்: மக்கள், வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்தவொரு பொருளாகவும் உணவு வரையறுக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு என்பது, ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதையும் குறிக்கும்.
Question 2 |
"எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது." என்று உணவுப்பாதுகாப்பினை வரையறை செய்யும் அமைப்பு எது?
இந்திய உணவுக்கழகம் | |
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் | |
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு | |
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் |
Question 2 Explanation:
விளக்கம்: ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது. "எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது." (FAO, 2009). இந்த விரிவான வரையறை உணவு சத்துமிக்கதாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதோடு, அது பாதுகாப்புமிக்க ஊட்டச்சத்தினைப் பெற வேறு சில அம்சங்கள் தேவைப்படுவதையும் உணர்த்துகின்றன.
Question 3 |
“சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பு என்று வரையறை செய்தவர்?
எம்.எஸ்.சுவாமிநாதன் | |
வர்க்கீஸ் குரியன் | |
அமர்த்தியாசென் | |
சௌமியா சுவாமிநாதன் |
Question 3 Explanation:
விளக்கம்: பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.
Question 4 |
உணவு பாதுகாப்பு என்ற கருத்து ஆரம்பத்தில் எதனைக் குறிக்கிறது?
உணவு உற்பத்தி | |
ஒட்டு மொத்த உணவு வழங்கல் | |
சுகாதாரமான உணவு | |
ஊட்டச்சத்து |
Question 4 Explanation:
விளக்கம்: உணவு பாதுகாப்பு என்ற கருத்து கடந்த ஐந்து சகாப்தங்களாக தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இது உலகளாவிய, வட்டார அல்லது தேசிய சூழலுக்கான ஒட்டு மொத்த உணவு வழங்குதலைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த போதுமான தன்மையை குறிக்கும் உணவு வழங்கல் / உணவு உற்பத்தி பற்றி விவாதித்த உணவு பாதுகாப்பு குறித்த இந்த சிந்தனையிலிருந்து, இந்த சொல் சமூகம் / வீட்டு / தனிநபர் மட்டத்தில் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
Question 5 |
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் எத்தனை?
மூன்று | |
இரண்டு | |
நான்கு | |
ஐந்து |
Question 5 Explanation:
விளக்கம்: உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகளை உள்ளடக்குவதற்காக இந்த சொல் விரிவுபடுத்தப்பட்டது. அவை கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
Question 6 |
உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடு எது?
உணவினை உறிஞ்சுதல் | |
உணவுக்கான அணுகல் | |
உணவு கிடைத்தல் | |
இவை அனைத்தும் |
Question 6 Explanation:
விளக்கம்: 1. உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்று எது?
உணவினை உறிஞ்சுதல் | |
உணவுக்கான அணுகல் | |
உணவு கிடைத்தல் | |
இவை அனைத்தும் |
Question 7 Explanation:
விளக்கம்: உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.
Question 8 |
உணவு மற்றும் சுகாதார நிலையை திறம்பட உயிரியல் ரீதியாக முழுஈடுபாட்டுடன் அனுமதிக்கும் காரணிகள் எவை?
- ⅰ) ஊட்டச்சத்து
- ⅱ) அறிவு
- ⅲ) நடைமுறைகள்
- ⅳ) பாதுகாப்பு
- ⅴ) சுகாதாரமான சுற்றுச் சூழல் நிலைகள்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅳ), ⅴ) | |
ⅰ), ⅱ), ⅲ), ⅳ), ⅴ) | |
ⅱ), ⅲ), ⅳ) |
Question 8 Explanation:
விளக்கம்: உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். ஊட்டச்சத்து, அறிவு, நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல் நிலைகள் போன்ற பல காரணிகள் உணவு மற்றும் சுகாதார நிலையை திறம்பட உயிரியல் ரீதியாக முழுஈடுபாட்டுடன் அனுமதிக்கிறது.
Question 9 |
ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கான உணவுப்பாதுகாப்பு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனை சார்ந்துள்ளது?
- ⅰ) உணவின் அளவு
- ⅱ) உணவை வாங்குதல்
- ⅲ) உணவை அணுகல்
- ⅳ) தங்குவதற்கான மக்களின் திறன்
- ⅴ) கல்வி
- ⅵ) வருமானம்
ⅰ), ⅱ), ⅲ),ⅵ) | |
ⅳ), ⅴ),ⅵ) | |
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ), ⅳ),ⅵ) |
Question 9 Explanation:
விளக்கம்: ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கான உணவுப்பாதுகாப்பு என்பது கிடைக்கும் உணவின் அளவைப் பொறுத்தது மட்டுமல்லாமல், உணவை வாங்க / அணுக மற்றும் தாங்குவதற்கான மக்களின் திறனையும் சார்ந்துள்ளது. பொருத்தமான ஆரோக்கியமான சூழலில், பிற வளர்ச்சிச் சிக்கல்களைப் போலவே, மக்களின் உணவு பாதுகாப்பும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி செயல்முறையுடன் தொடர்புடையது. சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சிக்கான மாதிரியைத் தேர்வு செய்தது.
Question 10 |
பிரபலமாக ‘கப்பலுக்கு வாயில்’ இருப்பு (Ship to Mouth )என்று அழைக்கப்பட்ட திட்டம் எதனோடு தொடர்புடையது?
அமெரிக்கா | |
ரஷ்யா | |
ஆஸ்திரேலியா | |
இங்கிலாந்து |
Question 10 Explanation:
விளக்கம்: விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பு, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை. பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (பி.எல் 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது. இந்த நிலைமை பிரபலமாக ‘கப்பலுக்கு வாயில்’ இருப்பு (Ship to Mouth )என்று அழைக்கப்பட்டது.
Question 11 |
உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியவை?
அமெரிக்க நிர்வாகம் | |
ஃபோர்டு அறக்கட்டளை | |
மனிதநேய அமைப்புகள் | |
இவை அனைத்தும் |
Question 11 Explanation:
விளக்கம்: ஒரு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட பசியுடன் வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கான சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. அமெரிக்க நிர்வாகம் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் உறுதி செய்யப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது.
- ⅱ) 1950களின் முற்பகுதியில் உணவு தானியங்களின் உற்பத்தி பரப்பளவு 98 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமாக இருந்தது.
- ⅲ) நாடு 54 மில்லியன் டன் உணவு தானியங்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருந்து.
- ⅳ) சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 347 கிலோ உணவு தானியங்கள் கிடைத்தன. உணவு நிலையை சீர் செய்ய ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆனது.
ⅰ), ⅱ), ⅲ),ⅵ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅲ), ⅳ) |
Question 12 Explanation:
விளக்கம்: பசுமைப்புரட்சி நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. மேலும் முக்கிய தானிய பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது. 1950களின் முற்பகுதியில் உணவு தானியங்களின் உற்பத்தி பரப்பளவு 98 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமாக இருந்தது. நாடு 54 மில்லியன் டன் உணவு தானியங்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருந்து. அப்போது சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 547 கிலோ உணவு தானியங்கள் கிடைத்தன. உணவு நிலையை சீர் செய்ய ஏறத்தாழ 65 ஆண்டுகள் ஆனது.
Question 13 |
சுதந்திர காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் உணவு தானியங்களின் விளைச்சல் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
மூன்று | |
ஐந்து | |
ஆறு | |
நான்கு |
Question 13 Explanation:
விளக்கம்: உணவு தானிய சாகுபடியின் பரப்பளவு 122 மில்லியன் ஹெக்டேராக வளர்ந்து, உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. சுதந்திர காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் உணவு தானியங்களின் விளைச்சல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
Question 14 |
உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு காரணம்/காரணங்கள்?
- ⅰ) ஏற்புத்தன்மையுடைய உரங்கள்
- ⅱ) அதிக விளைச்சல் தரும் அரிசி மற்றும் கோதுமை
- ⅲ) மானிய விலையில் ரசாயன உரங்கள்
- ⅳ) கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மலிவான பண்ணைக் கடன்
ⅰ), ⅱ), ⅲ), ⅵ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅲ), ⅳ) |
Question 14 Explanation:
விளக்கம்: உணவு தானிய உற்பத்தியில் இந்த வளர்ச்சி ஒரு தொகுப்பாக செ ய ல்ப டுத்த ப்பட்ட HYV திட்டத்தால் சாத்தியமானது. ஏற்புத்தன்மையுடைய உரங்கள் அதிக விளைச்சல் தரும் அரிசி மற்றும் கோதுமைகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர, மானிய விலையில் ரசாயன உரங்கள் கிடைப்பதை உறுதி செய்தது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மலிவான பண்ணைக் கடன் வழங்கப்பட்டது.
Question 15 |
அறுவடை செய்யப்பட்ட தானியங்களை அரசு எதன் மூலம் கொள்முதல் செய்கிறது?
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் | |
இந்திய உணவு மற்றும்வேளாண் அமைப்பு | |
இந்திய வேளாண்மைக்கழகம் | |
இந்திய உணவுக் கழகம் |
Question 15 Explanation:
விளக்கம்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) பருவ காலத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட தானியங்களை இந்திய உணவுக் கழகம் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. இந்திய உணவுக் கழகம் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கினை அமைத்து அறுவடை காலத்தில் உணவு தானியங்களைப் பெற்று இருப்பில் வைத்து அதனை ஆண்டு முழுவதும் வழங்குகிறது. ஆண்டு முழுவதும் வழங்குகிறது.
Question 16 |
குறைந்த பட்ச ஆதரவு விலை யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?
வேளாண் அலுவலர்கள் | |
நிபுணர் குழு | |
இந்திய வேளாண் அமைச்சகம் | |
மாநில அரசு |
Question 16 Explanation:
விளக்கம்: குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
Question 17 |
அறுவடைக் காலங்களில் எந்தவொரு விலை வீழ்ச்சிக்கும் எதிராக விவசாயிகள் எதன் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்?
தாங்கி இருப்பு | |
இந்திய உணவுக்கழகம் | |
குறைந்த பட்ச ஆதரவு விலை | |
நிபுணர் குழு |
Question 17 Explanation:
விளக்கம்: குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும், எனினும், அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளை பொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்கஇயலும். மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் (MSP) பெறுவார்கள். எனவே குறைந்த பட்ச ஆதரவு விலையை விவசாயிகள் செயல்படுத்துவதன் மூலம் பயிர் பருவத்தின் முடிவில் அவர்கள் பெறும் விலை குறித்து உறுதியாக உள்ளனர். மேலும் அறுவடைக் காலங்களில் எந்தவொரு விலை வீழ்ச்சிக்கும் எதிராக விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
Question 18 |
சுதந்திர காலத்திற்கும் மற்றும் 2000 களின் நடுப்பகுதியில் நாட்டில் பால் உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
எட்டு | |
ஏழு | |
ஆறு | |
பத்து |
Question 18 Explanation:
விளக்கம்: உணவு தானிய உற்பத்தியின் விரைவான அதிகரிப்பு பால், கோழி மற்றும் மீன்வளத்துறை உற்பத்தியில் பொருத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, சுதந்திர காலத்திற்கும் மற்றும் 2000 களின் நடுப்பகுதியில் நாட்டில் பால் உற்பத்தி 8 மடங்கு அதிகரிப்பு, முட்டை உற்பத்தி 40 மடங்கு மற்றும் மீன் உற்பத்தி 13 மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியா பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதில் வெற்றி பெறவில்லை. எனவே, இந்தியா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியுள்ளது.
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) உணவு தானிய உற்பத்தியின் அதிகரிப்பு அனைவருக்கும் உணவிற்கான அணுகலை தேவையில்லை.
- ⅱ)வருமானத்தின் சமமற்ற வழங்கல் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவைக் கருத்தில் கொண்டு, பொது வழங்கல் முறை மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
- ⅲ)பொது வழங்கல் முறையின் தன்மை, நோக்கம் மற்றும் செயல்பாடு மாநிலத்திற்கு மாநிலம் மா றாது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 19 Explanation:
விளக்கம்: உணவு தானிய உற்பத்தியின் அதிகரிப்பு அனைவருக்கும் உணவிற்கான அணுகலை தேவையில்லை. வருமானத்தின் சமமற்ற வழங்கல் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவைக் கருத்தில் கொண்டு, பொது வழங்கல் முறை மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பொது வழங்கல் முறையின் தன்மை, நோக்கம் மற்றும் செயல்பாடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடியது.
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறை”யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது.
- ⅱ) இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் “இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted PDS) செயல்பாட்டில் இருந்தது.
- ⅲ) உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படுகிறது.
- ⅳ) ஆனால், இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவு கோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது, மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ⅰ), ⅱ), ⅲ), ⅵ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅲ), ⅳ) |
Question 20 Explanation:
விளக்கம்: தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறை”யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் “இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted PDS) செயல்பாட்டில் இருந்தது. உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவு கோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது, மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
Question 21 |
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
2013 | |
2014 | |
2012 | |
2016 |
Question 21 Explanation:
விளக்கம்: மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருட்களுக்கு மானியம் அளிக்கின்றன. மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது. அதைத் தொடர்ந்து, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் 2013 இல் நிறைவேற்றப்பட்டது.
Question 22 |
தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் எத்தனை சதவீத நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் எத்தனை சதவீத கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியது?
50%, 75% | |
60%, 45% | |
40%, 60% | |
55%, 85% |
Question 22 Explanation:
விளக்கம்: தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன. இந்த நாட்டின் முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவினைப் பெறும் உரிமை உண்டு.
Question 23 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) மத்திய அரசினால் அரிசியை கிலோவிற்கு `3 என்ற விகிதத்திலும், கோதுமையை கிலோவிற்கு `2 என்ற விகிதத்திலும், தினை கிலோவிற்கு `1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
- ⅱ) தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
ⅰ),ⅱ) | |
ⅰ) மட்டும் | |
ⅱ) மட்டும் | |
இவற்றில் எதுவும் இல்லை |
Question 23 Explanation:
விளக்கம்: மத்திய அரசினால் அரிசியை கிலோவிற்கு `3 என்ற விகிதத்திலும், கோதுமையை கிலோவிற்கு `2 என்ற விகிதத்திலும், தினை கிலோவிற்கு `1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
Question 24 |
தமிழ் நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
2016 | |
2014 | |
2017 | |
2015 |
Question 24 Explanation:
விளக்கம்: தமிழ் நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1, 2016 அன்று இச்சட்டம் இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழ் நாட்டில் துவங்கப்பட்டது. அக்டோபர் 27 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவில், இச்சட்டத்தை அமல்படுத்தும்போது, அது அதன் விதிகளை மாற்றியமைக்கும் என்று அரசு குறிப்பிட்டது.
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) பயோ மெட்ரிக் குடும்ப அட்டை (Bio Metric Smart Family Cards) தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ⅱ) பயோ மெட்ரிக் பதிவு செயல்முறையை முடித்த பின்னர், இந்த தரவு பயோ மெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க முன்மொழியப்பட்டது.
- ⅲ) இதன் நன்மை என்னவென்றால், இது தனிப்பட்ட அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், உறுப்பினர்களின் தரவு நகல் மற்றும் போலி அட்டைகளை அகற்றலாம்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 25 Explanation:
விளக்கம்: பயோ மெட்ரிக் குடும்ப அட்டை (Bio Metric Smart Family Cards) தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயோ மெட்ரிக் பதிவு செயல்முறையை முடித்த பின்னர், இந்த தரவு பயோ மெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க முன்மொழியப்பட்டது. இதன் நன்மை என்னவென்றால், இது தனிப்பட்ட அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், உறுப்பினர்களின் தரவு நகல் மற்றும் போலி அட்டைகளை அகற்றலாம்.
Question 26 |
தனித்துவமான அடையாள எண்னை (UIN) வெளியிடுவதற்கு பதிவேட்டில் பதிவிடப்படுபவை எவை?
- ⅰ) 10 விரல்கள் கைரேகை, இரண்டு கருவிழிகள் மற்றும் முகப்பதிவு செய்தல்
- ⅱ) இரண்டு கருவிழிகள்
- ⅲ) முகப்பதிவு செய்தல்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 26 Explanation:
விளக்கம்: தேசிய மக்கள் தொகையின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரின் தனித்துவமான அடையாள எண்னை (UIN) வெளியிடுவதற்கு 10 விரல்கள் கைரேகை, இரண்டு கருவிழிகள் மற்றும் முகப்பதிவு செய்தல் ஆகியவற்றின் முலம் பதிவேட்டில் பதிவிடப்படுகிறது.
Question 27 |
இந்தியாவில் எத்தனை அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன?
மூன்று | |
நான்கு | |
ஐந்து | |
இரண்டு |
Question 27 Explanation:
விளக்கம்: பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மூன்று அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, முதன்மை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், மத்திய நுகர்வோர் கூட்டுறவு கடைகள் மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் கூட்டமைப்புகள் ஆகும்.
Question 28 |
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில் எத்தனை சதவீதம் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன?
94% | |
50% | |
30% | |
70% |
Question 28 Explanation:
விளக்கம்: கிராமப்புறங்களில் நுகர்வோர் பொருட்களை வழங்குவதில் 50,000 க்கும் மேற்பட்ட கிராம அளவிலான சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. சுகாதாரம், காப்பீடு, வீட்டுவசதி போன்ற பல வகையான நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் உணவு பாதுகாப்பில் இந்த திட்டம் முக்கியப் பங்கினை வகிக்கிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில், சுமார் 94% கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
Question 29 |
உணவு தானியங்கள், சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளியீட்டு விலை | |
உள்ளீட்டு விலை | |
நியாய விலை | |
சமூக விலை |
Question 29 Explanation:
விளக்கம்: பற்றாக்குறைப் பகுதிகளில் வழங்குவதற்காக தாங்கியிருப்பு செய்யப்படுகிறது. உணவு தானியங்கள், சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்விலை வெளியீட்டு விலை என்று அழைக்கப்படுகிறது. பாதகமான வானிலை அல்லது பேரழிவுக் காலங்களில் உணவு பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்க இது உதவுகிறது.
Question 30 |
உணவு தானியங்களான கோ து மை மற்றும் அரிசி அரசாங்கத்தால் வாங்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாங்கி இருப்பு | |
உணவு சேமிப்பு | |
உணவு தானிய இருப்பு | |
அரசு கொள்முதல் |
Question 30 Explanation:
விளக்கம்: தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோ து மை மற்றும் அரிசி, இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India) மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
Question 31 |
உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை வாங்குவது எது?
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் | |
இந்திய உணவு மற்றும்வேளாண் அமைப்பு | |
இந்திய வேளாண்மைக்கழகம் | |
இந்திய உணவுக் கழகம் |
Question 31 Explanation:
விளக்கம்: உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
Question 32 |
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு
- ⅰ) விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது.
- ⅱ) இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்று அழைக்கப்படுகிறது.
- ⅲ) இந்த பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக விதைப்பு பருவத்திற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் MSP அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 32 Explanation:
விளக்கம்: விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்று அழைக்கப்படுகிறது. இந்த பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக விதைப்பு பருவத்திற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் MSP அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. வாங்கிய உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.
Question 33 |
எந்தவொரு அட்டைதாரரும் எத்தனை கி.மீக்கு மேல் நடந்து செல்லாத வகையில் புதிய நியாய விலை கடைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது?
1.5 கி.மீ | |
1 கி.மீ | |
2.5 கி.மீ | |
3 கி.மீ |
Question 33 Explanation:
விளக்கம்: நியாய விலை கடைகள் (Fair Price Shops) தற்போது 33,222 நியாய விலைக் கடைகள் 1.98 கோடி குடும்பங்களுக்கு சேவை புரிகிறது. 33,222 நியாய விலைக் கடைகளில் 31,232 கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன. 1,394 கடைகள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படுகின்றன. 596 கடைகள் பெண்கள் சுய உதவி குழுக்களால் நடத்தப்படுகின்றன. பொது வழங்கல் முறைக்கு அணுகலை மேம்படுத்த, நியாய விலைக் கடைகள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அமைந்திருப்பது அவசியம். அதன்படி, எந்தவொரு அட்டைதாரரும் 1.5 கி.மீக்கு மேல் நடந்து செல்லாத வகையில் புதிய நியாய விலை கடைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் திறனை பாதிக்கும் காரணி அல்லாதது எது?
அதிக மக்கள் தொகை | |
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தல் | |
பொருட்களுக்கான தேவை | |
கல்வி |
Question 34 Explanation:
விளக்கம்: திறனைப் பாதிக்கும் காரணிகள்
அதிக மக்கள் தொகை
2. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தல்
3. பொருட்களுக்கான தேவை
4. பொருட்களின் விலைநாணய மதிப்பைபாதிக்கிறது
5. பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு
6. வறுமை மற்றும் சமத்துவமின்மை
Question 35 |
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்?
1000க்கு 1.7 | |
100க்கு 1.7 | |
100க்கு 17.5 | |
1000க்கு 17.5 |
Question 35 Explanation:
விளக்கம்: அதிக மக்கள் தொகை: இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கும் 1.7 ஆக உள்ளது. அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழி வகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை. எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே, இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தல்: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- ⅱ) விலைகளின் தொடர்ச்சியான உயர்வு வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
- ⅲ) 2015-16 ஆம் ஆண்டில் சராசரியாக 2% பணவீக்கத்தினால், பருப்பு வகைகளின் விலை சுமார் 60% உயர்ந்தது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 36 Explanation:
விளக்கம்: அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தல்: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விலைகளின் தொடர்ச்சியான உயர்வு வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது. 2015-16 ஆம் ஆண்டில் சராசரியாக 2% பணவீக்கத்தினால், பருப்பு வகைகளின் விலை சுமார் 40% உயர்ந்தது.
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது, அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
- ⅱ) பொ ருட்களின் விலைநாணய மதிப்பை பாதி ப்பதில்லை
- ⅲ) விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது. மாறாக, இது நேர்மாறானது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 37 Explanation:
விளக்கம்: பொருட்களுக்கான தேவை: பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது, அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது. பொ ருட்களின் விலைநாணய மதிப்பை பாதிக்கிறது. விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது. மாறாக, இது நேர்மாறானது.
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
- ⅱ) இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றதாழ்வு உள்ளது. 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத் து க்க ளி ன் விகிதம் அதிகரித்து வருகிறது.
- ⅲ) பொதுவாக வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 38 Explanation:
விளக்கம்:பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு: பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
வறுமை மற்றும் சமத்துவமின்மை: இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றதாழ்வு உள்ளது. 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத் து க்க ளி ன் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழி வகுக்கிறது. பொதுவாக வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
Question 39 |
வாங்கும் சக்தியைக் கண்காணிப்பதற்கான ஒரு முறை எது?
நுகர்வோர் குறியீட்டு எண் | |
நுகர்வோர் வாங்கு சக்தி எண் | |
குறைந்த பட்ச விலை | |
நுகர்வோர் விலை குறியீட்டு எண் |
Question 39 Explanation:
விளக்கம்: வாங்கும் சக்தி பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. நுகர்வோர் பொருட்கள் வாங்குவது முதல் முதலீட்டாளர்கள் வரை மற்றும் பங்கு விலைகள் ஒரு நாட்டின் பொருளாதார செழிப்பு வரை பாதிக்கிறது. எனவே, ஒரு நாட்டின் அரசாங்கம் நாணயத்தின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்க மற்றும் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொள்கைகளையும், ஒழுங்கு முறைகளையும் ஏற்படுத்த உதவுகிறது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் என்பது வாங்கும் சக்தியைக் கண்காணிப்பதற்கான ஒரு முறையாகும்.
Question 40 |
2018ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விவசாயக் கொள்கை எதனை அடிப்படையாகக்கொண்டது?
விவசாயப்பொருட்களின் ஏற்றுமதி | |
விவசாயப்பொருட்களின் இறக்குமதி | |
மூலப்பொருட்களின் ஏற்றுமதி | |
உணவுப்பொருட்களின் இறக்குமதி |
Question 40 Explanation:
விளக்கம்: விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை 2018ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை பெரும்பாலான கரிம மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
Question 41 |
2018ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விவசாயக் கொள்கை கீழ்க்கண்டவற்றுள் எதனை நீக்க உறுதி செய்தது?
ஏற்றுமதி வரி | |
ஏற்றுமதி தடை | |
ஒதுக்கீடு கட்டுப்பாடு | |
இவை அனைத்தும் |
Question 41 Explanation:
விளக்கம்: கரிம அல்லது பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்களுக்கு ஏற்றுமதி வரி, ஏற்றுமதி தடை மற்றும் ஒதுக்கீடு கட்டுப்பாடு போன்ற எந்தவொரு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் கீழும் இருக்காது என்ற உறுதி மொழியே முக்கிய காரணமாகும்.ஒரு நாட்டின் விவசாயக் கொள்கை பெரும்பாலும் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகளின் வருமான நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை விவசாயத்துறையின் அனைத்து வட்டங்களிலும், விரிவான வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது .
Question 42 |
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் எது/எவை?
- ⅰ) உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்
- ⅱ) ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை
- ⅲ) ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்
- ⅳ) விவசாயத் துறையை நவீன மயமாக்குதல்
- ⅴ) சுற்றுச்சூழல் சீரழிவு
- ⅵ) அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ), ⅴ), ⅵ) | |
ⅱ), ⅲ), ⅳ), ⅵ) | |
ⅰ), ⅳ), ⅴ), ⅵ) | |
ⅱ), ⅲ), ⅳ), |
Question 42 Explanation:
விளக்கம்: இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு.
உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்
ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை
ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்
விவசாயத் துறையை நவீன மயமாக்குதல்
சுற்றுச்சூழல் சீரழிவு
அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) வீரியவித்து விதைகள்
- ⅱ) உரங்கள்
- ⅲ) பூச்சிக்கொல்லிகள்
- ⅳ) நீர்ப்பாசன திட்டங்கள்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ),ⅲ), ⅳ) |
Question 43 Explanation:
விளக்கம்: 1. உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற வாங்கிய உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.
Question 44 |
ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயக்கொள்கை கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல்
- ⅱ) இடைத்தரகர்களை ஒழித்தல்
- ⅲ) நில சீர்திருத்தங்கள் செய்தல்,
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 44 Explanation:
விளக்கம்: ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை
வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் உடல் ரீதியிலான உற்பத்தியை உயர்த்துவதை விட ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.
ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்
ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.
Question 45 |
விவசாயத் துறையை நவீன மயமாக்குதல் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) HYV விதைகள்
- ⅱ) உரங்கள்
- ⅲ) நவீன தொ ழில்நுட்பத்தை அறிமுக ப்ப டு த் து த ல்
Question 45 Explanation:
விளக்கம்: விவசாயத் துறையை நவீன மயமாக்குதல் விவசாயக் கொள்கை ஆதரவில் விவசாய நடவடிக்கைகளில் நவீன தொ ழில்நுட்பத்தை அறிமுக ப்ப டு த் து த ல் மற்றும் HYV விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) இந்திய விவசாயத்தின் இயற்கை அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரிபார்க்க இந்தியாவின் விவசாயக் கொள்கை ஒரு நோக்கத்தை அமைத்துள்ளது.
- ⅱ) அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
ⅰ), ⅱ) | |
ⅱ) மட்டும் | |
ⅰ) மட்டும் | |
இரண்டுமில்லை |
Question 46 Explanation:
விளக்கம்: சுற்றுச்சூழல் சீரழிவு: இந்திய விவசாயத்தின் இயற்கை அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரிபார்க்க இந்தியாவின் விவசாயக் கொள்கை மற்றொரு நோக்கத்தை அமைத்துள்ளது.
அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வறுமையின் பல பரிமாணத்தின் இயல்பு ஒரு விரிவான வடிவத்தினை உருவாக்க பல பரிமாண வறுமை நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகிறது.
- ⅱ) யார் ஏழை, அவர்கள் எப்படி ஏழை, அவர்கள் அனுபவிக்கும் தீமைகளின் வீச்சு ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
- ⅲ) அத்துடன் வறுமையின் தலைப்பின் கீழ், ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு துணைக்குழு மக்களிடையேயும் காணப்படும் வறுமையின் அளவினை பல பரிமாண நடவடிக்கைகளினால் வெளிப்படுத்த முடியாது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 47 Explanation:
விளக்கம்: வறுமையின் பல பரிமாணத்தின் இயல்பு (Multi-dimensional Nature of Poverty) ஒரு விரிவான வடிவத்தினை உருவாக்க பல பரிமாண வறுமை நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. யார் ஏழை, அவர்கள் எப்படி ஏழை, அவர்கள் அனுபவிக்கும் தீமைகளின் வீச்சு ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அத்துடன் வறுமையின் தலைப்பின் கீழ், ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு துணைக்குழு மக்களிடையேயும் காணப்படும் வறுமையின் அளவினை பல பரிமாண நடவடிக்கைகளினால் வெளிப்படுத்தி உடைக்க முடியும்.
Question 48 |
பல பரிமாண வறுமை குறியீடு யாரால் தொடங்கப்பட்டது?
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் | |
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு | |
a) மற்றும் b) | |
உலக வங்கி |
Question 48 Explanation:
விளக்கம்: பல பரிமாண வறுமை குறியீடு (MPI) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (Uunited Nations Development Programme) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (Oxford Poverty and Human Development Initiative) ஆகியவற்றால் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல பரிமாண வறுமை குறியீட்டின் அடிப்படை தத்துவமும், முக்கியத்துவமும் என்னவென்றால், வறுமை என்பது ஒற்றை பரிமாணமல்ல, அது பல பரிமாணத்தினைக் கொண்டது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
Question 49 |
பல பரிமாண வறுமைக் குறியீடு 2018 அறிக்கையின்படி இந்தியா 10 ஆண்டுகளில் வறுமை விகிதத்தை எத்தனை சதவீதம் குறைத்துள்ளது?
28% | |
55% | |
65% | |
35% |
Question 49 Explanation:
விளக்கம்: உடல் நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம் அதிகாரமளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு 2018 அறிக்கை, இந்தியாவைப் பற்றி பின்வருமாறு கூர்ந்து உருவாக்கியுள்ளது. 1. இந்தியா தனது வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் 55%லிருந்து 28% ஆக வெகுவாக குறைந்துள்ளது. 2005-2006 மற்றும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கு இடையில் 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தனர்.
Question 50 |
2015-2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த ஏழை மக்களின் எண்ணிக்கை?
364 மில்லியன் | |
460 மில்லியன் | |
500 மில்லியன் | |
494 மில்லியன் |
Question 50 Explanation:
விளக்கம்: இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்கள் இருந்தனர். இது எந்த ஒரு நாட்டிற்கும் மிகப்பெரியதாகும். இருப்பினும் 2005-2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்ததை குறைத்துள்ளது.
Question 51 |
2005-2006 ஆம் ஆண்டுக்குப்பின் அடுத்த பத்து ஆண்டுகளில் ஏழைக்குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை சதவீதம் குறைந்தது?
47% | |
67% | |
37% | |
17% |
Question 51 Explanation:
விளக்கம்: 2015-2016 ஆம் ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு ஏழைகளாக இருந்த 364 மில்லியன் மக்களில், 156 மில்லியன் குழந்தைகளாகும். 2005-2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் 292 மில்லியன் ஏழைக் குழந்தைகள் இருந்தனர். இது 47% குறைவு அல்லது பல பரிமாண வறுமையில் வளர்ந்து வரும் 136 மில்லியன் குறைவான குழந்தைகளை குறிக்கிறது.
Question 52 |
196 மில்லியன் பல பரிமாண வறுமை குறியீடுள்ள ஏழை மக்களைக் கொண்டுள்ள இந்தியாவின் மாநிலங்கள்?
- ⅰ) பீகார்
- ⅱ) ஜார்கண்ட்
- ⅲ) உத்திரப் பிரதேசம்
- ⅳ) மத்தியப் பிரதேசம்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ),ⅲ), ⅳ) |
Question 52 Explanation:
விளக்கம்: பீகார், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு ஏழ்மையான மாநிலங்கள் இன்னும் 196 மில்லியன் பல பரிமாண வறுமை குறியீடுள்ள ஏழை மக்களைக் கொண்டுள்ளன. இது இந்தியாவில் உள்ள அனைத்து பல பரிமாண வறுமை குறியீடுள்ள ஏழை மக்களில் பாதிக்கும் மேலானாதாகும்.
Question 53 |
2015-2016 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம் | |
ஒடிசா | |
பீகார் | |
ஜார்க்கண்ட் |
Question 53 Explanation:
விளக்கம்: பழங்குடியினரைச் சேர்ந்த 80% மக்கள் 2005-2006 ஆம் ஆண்டில் ஏழைகளாக இருந்தனர், அவர்களில் 2015-2016 ஆம் ஆண்டில் 50% பேர் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
Question 54 |
கீழ்க்கண்டவற்றுள் வறுமையின் பரிமாணங்கள் எவை?
- ⅰ) சுகாதாரம்
- ⅱ) கல்வி
- ⅲ) வாழ்க்கைத்தரம்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 55 |
2006 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்த மாநிலம் எது?
கேரளா | |
தமிழ்நாடு | |
பாண்டிச்சேரி | |
ஆந்திரா |
Question 55 Explanation:
விளக்கம்: 2006 ஆம் ஆண்டில் கேரளா மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்தது. அது, பல பரிமாண வறுமை குறியீட்டை சுமார் 92% குறைத்துள்ளது.
Question 56 |
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டின்படி எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
மூன்று | |
நான்கு | |
இரண்டு | |
ஐந்து |
Question 56 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை குறியீடு அறிக்கை-2018 கடந்த பத்து ஆண்டுகளாக, வறுமைக் குறைப்பில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Question 57 |
தவறான இணையை கண்டறிக.
- ⅰ) உயர் வறுமை மாவட்டங்கள் – 60% முதல் 70% வரை
- ⅱ) மிதமான ஏழை மாவட்டங்கள் -30% முதல் 40% வரை
- ⅲ) குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள் - 50%க்கும் குறைவு
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 57 Explanation:
விளக்கம்: உயர் வறுமை மாவட்டங்கள் (வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையில் 40% க்கும் அதிகமானோர்), மிதமான ஏழை மாவட்டங்கள் (30% முதல் 40% வரை) மற்றும் குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள் (30%க்கும் குறைவு) ஆகும்.
Question 58 |
எந்த ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது?
1994 | |
1995 | |
2005 | |
1980 |
Question 58 Explanation:
விளக்கம்: 1994க்குப் பிறகு, தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது, மற்றும் இந்தியாவில் அதன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது சிறிய ஏழ்மைப் பங்கினைக் கொண்டுள்ளது. 2005க்குப் பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களை விட வறுமைக் குறைப்பு தமிழ்நாட்டில் வேகமாக உள்ளது.
Question 59 |
2014-2017 வரையிலான காலங்களில் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் முன்னிலை வகிக்கும் மாநிலம்?
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 59 Explanation:
விளக்கம்: 2014-2017 வரையிலான காலங்களில் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஒழிக்க பல கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துகிறது. இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து இருந்தால் மாநிலத்தின் வறுமையை முற்றிலுமாக ஒழிக்கலாம். எதிர்காலத்தில் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாதிரி மாநிலமாக மாற வாய்ப்புள்ளது.
Question 60 |
எந்த ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது?
1994 | |
1995 | |
2005 | |
1980 |
Question 60 Explanation:
விளக்கம்: 1994க்குப் பிறகு, தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது, மற்றும் இந்தியாவில் அதன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது சிறிய ஏழ்மைப் பங்கினைக் கொண்டுள்ளது. 2005க்குப் பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களை விட வறுமைக் குறைப்பு தமிழ்நாட்டில் வேகமாக உள்ளது.
Question 61 |
தமிழகத்தில் அதிக MPI உடைய மாவட்டங்களில் முதல் தரவரிசை கொண்ட மாவட்டம் எது?
கோயம்புத்தூர் | |
கடலூர் | |
சென்னை | |
காஞ்சிபுரம் |
Question 61 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டின் அதிக MPI மாவட்டங்கள்:
Question 62 |
தமிழகத்தில் குறைந்த MPI உடைய மாவட்டங்களில் தரவரிசை 32 கொண்ட மாவட்டம் எது?
தருமபுரி | |
பெரம்பலூர் | |
ராமநாதபுரம் | |
விருதுநகர் |
Question 62 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டின் குறைவான MPI மாவட்டங்கள்:
Question 63 |
2015-2016 ஆம் ஆண்டில், 27% கிராமப்புறப் பெண்களும் மற்றும் 16% நகர்ப்புற பெண்களும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என எந்த கணக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டது?
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு | |
மக்கள் தொகைக்கணக்கெடுப்பு | |
உலகவங்கி கணக்கெடுப்பு | |
இந்திய உணவுக்கழக கணக்கெடுப்பு |
Question 63 Explanation:
விளக்கம்: உணவு பாதுகாப்பில் ஊட்டச்சத்தும் பாதுகாப்பும் அடங்கும் என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டோம். நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும், மக்களின் ஊட்டச்சத்து நிலையில் அந்த அளவிலான முன்னேற்றங்களை அடையவில்லை . 2015-2016 ஆம் ஆண்டில், 27% கிராமப்புறப் பெண்களும் மற்றும் 16% நகர்ப்புற பெண்களும் (15-49 வயதுக்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் அல்லது நீண்டகால ஆற்றல் குறைபாடு என தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பினால் கண்டறியப்பட்டது.
Question 64 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) இ ந் தி யாவி ல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இனப்பெருக்க வயதுக் குழுவில் (15- 49 வயது) பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 2015-2016 ஆம் ஆண்டில் இரத்த சோகைக்கு ஆளானார்கள்.
- ⅱ)குழந்தைகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 60% மற்றும் 56% நகர்ப்புற குழந்தைகள் (6-59 மாதங்கள்) 2015-2016 ஆம் ஆண்டில் இரத்த சோகை உடையவர்கள் எனக் கருதப்பட்டனர்.
ⅰ), ⅱ) | |
ⅱ) மட்டும் | |
ⅰ) மட்டும் | |
இரண்டுமில்லை |
Question 64 Explanation:
விளக்கம்: இ ந் தி யாவி ல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இனப்பெருக்க வயதுக் குழுவில் (15- 49 வயது) பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 2015-2016 ஆம் ஆண்டில் இரத்த சோகைக்கு ஆளானார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 60% மற்றும் 56% நகர்ப்புற குழந்தைகள் (6-59 மாதங்கள்) 2015-2016 ஆம் ஆண்டில் இரத்த சோகை உடையவர்கள் எனக் கருதப்பட்டனர்.
Question 65 |
குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட “எடை குறைவாக” இருப்பதற்கு காரணம்?
Question 65 Explanation:
விளக்கம்: கிராமப்புறங்களில் சுமார் 41% மற்றும் நகர்ப்புற 31% குழந்தைகள் குன்றியிருக்கின்றனர். அதாவது அவர்களின் வயதுக்கு ஏற்ப தேவையான உயரத்தை கொண்டிருக்கவில்லை. ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் மற்றொருக் குறியீடாக குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட “எடை குறைவாக” உள்ளனர். இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் சுமார் 20% குழந்தைகள் (6-59 மாத வயதுக்குட்பட்டவர்கள்) எடைக் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பிட்டுள்ளது.
Question 66 |
ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவை?
- ⅰ) மதிய உணவுத் திட்டம்
- ⅱ) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்
- ⅲ) இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்கள்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 66 Explanation:
விளக்கம்: இந்தப் பிரச்சனைகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services), மதிய உணவுத் திட்டம், இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்கள் (Reproductive and Child Health Programmes), மற்றும் தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission) போன்ற திட்டங்களில் கணிசமான வளங்களை கொண்டு வருகின்றன. எவ்வாறாயினும், நாட்டின் ஊட்டச்சத்து குறைவான நிகழ்வுகளைத் தணிக்க இந்த முயற்சிகளைத் திறம்பட அளவிடுவது அவசியமாகும்.
Question 67 |
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்காக வரவுசெலவுத்திட்ட செலவினங்கள் நாட்டிலேயே அதிகம் கொண்ட மாநிலம் எது?
கேரளா | |
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
மகாராஷ்டிரா |
Question 67 Explanation:
விளக்கம்: ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப் பெண்கள் ஆகியோரின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் தமிழகம் ஒரு முன்னோடி பங்கைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான தமிழக அரசின் அடுத்தடுத்த வரவுசெலவுத்திட்ட செலவினங்கள் நாட்டிலேயே மிக அதிகமாகும். ICDS திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஆகியவற்றின் செயல்திறன் நாட்டின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
Question 68 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் கொள்கை எது?
ஊட்டச்சத்துக்கே முதலிடம் | |
ஊட்டச்சத்து உயிர் வளம் | |
ஒரு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு | |
ஊட்டச்சத்து குறைபாடு தமிழகத்தில் ஒரு நாளும் இல்லை |
Question 68 Explanation:
விளக்கம்: 'ஒரு ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தமிழ்நாடு' என்ற தமிழ்நாட்டின் கொள்கை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதற்காக மாநிலத்தின் நீண்டகால பல துறைக் கொள்கைகளை செயல்படுத்துகிறது. 'அனைத்து வகையான மனித ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சிறந்த செயல்திறன் கொண்டநாடுகளின் நிலைக்குக் குறைப்பது' என்பது இதன் குறிக்கோளாகும்.
Question 69 |
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) மேம்பட்ட ஒதுக்கீடுகள்
- ⅱ) அணுகப்படாத பகுதிகளுக்கு நிலையான விரிவாக்கம்
- ⅲ) ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு
- ⅳ) சேவைகளின் விரிவாக்கம்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) |
Question 69 Explanation:
விளக்கம்: தமிழ்நாட்டில், 434 குழந்தைகள் மேம்பாட்டுத் தொகுதிகளில் (385 கிராமப்புற, 47 நகர்ப்புற மற்றும் 2 பழங்குடியினர்) 54,439 குழந்தை மையங்கள் (49,499 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 4,940 சிறு அங்கன்வாடி மையங்கள்) மூலம் ICDS செயல்படுத்தப்படுகிறது. அணுகப்படாத பகுதிகளுக்கு நிலையான விரிவாக்கம், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு, மேம்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ICDS இப்போது உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு மாதிரியாகும்.
Question 70 |
பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தின் தூண்டுதலான வினையூக்கிகளாக மாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி எது?
பதுமையர் குழு | |
கிராமப்புற பெண்கள் முன்னேற்ற சங்கம் | |
வேலைவாய்ப்பு திட்டங்கள் | |
கைத்தொழில் கற்பித்தல் |
Question 70 Explanation:
விளக்கம்: சக குழு ஈடுபாடு அதிகரித்தல்
பெண் குழந்தைகளைமேம்படுத்துவதற்கும் மாற்றத்தின் தூண்டுதலான வினையூக்கிகளாக மாற்றுவதற்கும் ‘பதுமையர் குழு’ வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இளம் பருவப் பெண்களை இத்திட்டத்திற்கு ஈர்ப்பது, பல்வேறு பணிகளில் அவர்களை இணைப்பது மற்றும் செயற்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பது போன்ற புதுமையான அணுகுமுறைகள் பரிசீலிக்கப்படும். ஒன்பது மாவட்டங்களில் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக நடமாடும் மையங்கள் உருவாக்கப்பட்டது.
‘பதுமையர் அட்டை’ வழங்கப்பட்டு, மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.
Question 71 |
யாருடைய பெயரில் ஏழை கர்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது?
தருமாம்பாள் | |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
நாகம்மையார் | |
மூவலூர் ராமாமிர்தம் |
Question 71 Explanation:
விளக்கம்: 1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்களுக்கு ` 12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது. சக்திமிக்க உணவிற்கான செலவுகளை மேற்கொள்ளுதல் பிரசவக் காலத்தில் வருமான இழப்பினை ஈடுசெய்வது, மற்றும் புதியதாக பிறக்கும் குழந்தைகளின் குறைந்த எடை பிறப்பினை தவிர்க்க மூன்று தவணைகளில் பிறப்பிற்கு முந்தைய கவனிப்பைப் பெறுதல், அரசு நிறுவனங்களின் குழந்தைகளை பிரசவித்தல் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல் போன்றவை இதன் குறிக்கோளாகும்.
Question 72 |
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளியின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்?
50,000 | |
70,000 | |
72,000 | |
87,000 |
Question 72 Explanation:
விளக்கம்: முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme) மூலம் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்கி அனைவருக்கும் உலகளாவிய உடல் நலம் வழங்கும் நோக்கில் 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகளின் ஆண்டு வருமானம் `72,000க்கு குறைவாக இருந்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
Question 73 |
தமிழ் நாடு அரசு எந்த திட்டத்தின் மூலம் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது?
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் | |
தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் | |
பள்ளி சுகாதார திட்டம் | |
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் |
Question 73 Explanation:
விளக்கம்:தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).
Question 74 |
அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படும் தீட்டம்
தொழுநோய் இல்லா திட்டம் | |
தொழுநோய் விழிப்புணர்வு திட்டம் | |
தொழுநோய் சிகிச்சை திட்டம் | |
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் |
Question 74 Explanation:
விளக்கம்: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.
Question 75 |
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாருடைய உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது?
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் | |
உலக வங்கி | |
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் கழகம் | |
அமெரிக்கா |
Question 75 Explanation:
விளக்கம்: பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services) 24 மாவட்டங்களை உள்ளடக்கிய 318 வட்டாரங்களில் 1991ல் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 318 கிராமப்புற வட்டாரங்கள் மற்றும் 19500 மையங்களுக்கும் 1991ல் இது விரிவாக்கப்பட்டது.
Question 76 |
6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கு உணவில் ஊட்டச்சத்து வழங்கப்படாத குக்கிராமங்களில் வழங்கப்படும் திட்டம் எது?
பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் | |
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் | |
மதிய உணவுத் திட்டம் | |
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம் |
Question 76 Explanation:
விளக்கம்: பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (Pradhan Manthri Gramodaya Yojana Scheme) : 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கு உணவில் ஊட்டச்சத்து வழங்கப்படாத குக்கிராமங்களில் வழங்கப்படுகிறது.
Question 77 |
2-14 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி அல்லது பள்ளி குழந்தைகளுக்கான திட்டம் எது?
பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் | |
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் | |
மதிய உணவுத் திட்டம் | |
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம் |
Question 77 Explanation:
விளக்கம்: மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Programme) : இந்த திட்டம் 2-14 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி அல்லது பள்ளி குழந்தைகளுக்கு ஒரு பயனாளிக்கு தலா `0.90 வீதம் செலவழிக்கப்படுகிறது. இந்த திட்டம் 4426 வட்டாரங்களில் 5.57 கோடி குழந்தைகளை உள்ளடக்கியது.
Question 78 |
மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்தும் திட்டம் எது?
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் | |
மாணவர்கள் சுகாதார அமைப்பு திட்டங்கள் | |
பள்ளி சுகாதார திட்டம் | |
தொழுநோய் விழிப்புணர்வு திட்டம் |
Question 78 Explanation:
விளக்கம்: ‘பள்ளி சுகாதார திட்டம்’ (School Health Programme) முக்கியமாக விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
Question 79 |
மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்தும் திட்டம் எது?
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் | |
மாணவர்கள் சுகாதார அமைப்பு திட்டங்கள் | |
பள்ளி சுகாதார திட்டம் | |
தொழுநோய் விழிப்புணர்வு திட்டம் |
Question 79 Explanation:
விளக்கம்: ‘பள்ளி சுகாதார திட்டம்’ (School Health Programme) முக்கியமாக விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
Question 80 |
ICDS திட்டம் பின்வருவனவற்றுள் எவற்றோடு தொடர்புடைய துறைகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது?
- ⅰ) சுகாதாரம்
- ⅱ) கல்வி
- ⅲ) குடிநீர்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ) மட்டும் |
Question 80 Explanation:
விளக்கம்: சேவைகள் நோக்கம் கொண்ட பயனாளிகளை அடைவதை உறுதி செய்வதற்காக, இந்த திட்டம் உலகமயமாக்கப்பட்டு, சுகாதாரம், கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்றவற்றைக் கையாளும் தொடர்புடைய துறைகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், தொடக்கப்பள்ளி சேர்க்கையை அதிகரிப்பதற்கும், இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதற்கும் நாட்டின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பிற மாநிலங்கள், தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளின் படி மதிய உணவுத் திட்டங்களை வடிவமைத்துள்ளன.
Question 81 |
மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்தும் திட்டம் எது?
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் | |
மாணவர்கள் சுகாதார அமைப்பு திட்டங்கள் | |
பள்ளி சுகாதார திட்டம் | |
தொழுநோய் விழிப்புணர்வு திட்டம் |
Question 81 Explanation:
விளக்கம்: ‘பள்ளி சுகாதார திட்டம்’ (School Health Programme) முக்கியமாக விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
Question 82 |
கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் எதனால் பாதிக்கப்படுகின்றனர்?
- ⅰ) எடை குறைவு
- ⅱ) இரத்த சோகை
- ⅲ) நுண்ணூட்டச் சத்து குறைபாடு
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅰ), ⅲ) |
Question 82 Explanation:
விளக்கம்: மனித ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. தேசிய அளவில் அதிக பொருளதார வளர்ச்சி இருந்த போதிலும், மக்கள்தொகையின் ஊட்டச்சத்து அளவுகள் போன்ற மனித வளர்ச்சி குறிகாட்டிகளில் மேம்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மெதுவாகவே உள்ளன. ஏராளமான இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் எடை குறைவாகவும், இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 82 questions to complete.