Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை – நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Online Test 7th Social Science

இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை – நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Congratulations - you have completed இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை – நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இயற்கை இடர்கள் எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 1 Explanation: 
(குறிப்பு: இயற்கை இடர்களை புவியியல் மற்றும் உயிரியல் இடர்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.)
Question 2
மனித வாழ்வில் பெரிய அளவில் சொத்துக்கள் மற்றும் மனித உயிர்கள் பரவலாக பாதிக்கப்படும்போது அவை__________ என்று அழைக்கப்படுகின்றன.
A
இடர்கள்
B
பேரிடர்கள்
C
பொருளாதார சீர்குலைவு
D
சேவைகள் இழப்பு
Question 2 Explanation: 
(குறிப்பு: ஒரு பேரிடர் என்பது பொதுவாக "சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது, இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது".)
Question 3
கீழ்க்கண்டவற்றுள் எவை பேரழிவு தாக்கங்களில் அடங்கும்?
  1. சொத்துக்களை அழித்தல்
  2. சேவைகள் இழப்பு
  3. சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவு
  4. சேவைகள் இழப்பு
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 3 Explanation: 
(குறிப்பு: உயிர் இழப்பு, காயம், நோய் மற்றும் மனித உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வில் பிற எதிர்மறையான விளைவுகள் ஆகியவையும் பேரழிவு தாக்கங்களில் அடங்கும்.)
Question 4
  • கூற்று 1: இடர் என்பது மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.
  • கூற்று 2: பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 4 Explanation: 
(குறிப்பு: இடர்களையும் பேரிடர்களையும் நிகழாமல் தடுக்க முடியாது. ஆனால் அதனுடைய அழிவைக் குறைக்க முடியும்.)
Question 5
  • கூற்று 1: சூறாவளி (ஹரிக்கேன்) என்பது கடலில் உருவாகும் ஒரு இயற்கை இடர் ஆகும்.
  • கூற்று 2: சூறாவளி நிலத்தை வந்து அடையும்பொழுது கட்டடங்களையும் உயிர்களையும் சேதப்படுத்துவதால் இதை பேரிடர் என அழைக்கின்றனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 6
தவறான இணையைத் தேர்ந்தெடு (இயற்கை பேரிடர் ஆதாரம் - நிகழ்வுகள்)
A
புவி உட்பகுதி - எரிமலை வெடிப்புகள்
B
புவி மேற்பரப்பு – சுனாமி
C
வானிலை ஆய்வு/நீர் வளம் – பனிமழை
D
சுகாதாரம் – தொற்றுநோய்கள்
Question 6 Explanation: 
(குறிப்பு: புவி உட்பகுதி - நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் புவி மேற்பரப்பு - நிலச்சரிவு, பனிச்சரிவு வானிலை ஆய்வு/நீர்வளம் - புயல்காற்று, சூறாவளி, பனிமழை, வெள்ளம் சுகாதாரம் – தொற்றுநோய்கள்)
Question 7
தொழில்நுட்ப, போக்குவரத்து பேரழிவுகள், கட்டமைப்பு சரிவு மற்றும் உற்பத்தி வீழ்ச்சிகள் போன்ற பேரிடர்கள் கீழ்க்கண்ட எந்த ஆதார வகையை சார்ந்தவை?
A
சுகாதாரம்
B
நீர்வளம்
C
சமூக தொழில்நுட்பம்
D
போர்
Question 7 Explanation: 
(குறிப்பு: சமூக தொழில்நுட்பம், போர் போன்ற ஆதார வகையை சேர்ந்த பேரிடர்கள் மனிதனால் உருவாகும் பேரிடர் வகையை சார்ந்தவை ஆகும்.)
Question 8
கீழ்க்கண்ட எந்த நிகழ்வுகள் நிலநடுக்கத்திற்கு காரணமாகின்றன?
  1. புவித்தட்டுகளின் நகர்வு
  2. நிலச்சரிவு
  3. மேற்பரப்பு பிளவு
  4. எரிமலை வெடிப்பு
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 8 Explanation: 
(குறிப்பு: ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நிலநடுக்கத்தை நிலநடுக்கம் என அழைக்கின்றோம்.)
Question 9
நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. வெள்ளம்
  2. சுனாமி
  3. நிலச்சரிவு
  4. மின்சாரம் துண்டிக்கப்படுதல்
  5. நீர் குழாய்கள் உடைதல்
A
அனைத்தும்
B
1, 3, 5
C
1, 2, 5
D
1, 2, 4
Question 9 Explanation: 
(குறிப்பு: அதிகப்படியான நிலநடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. மேலும் இது ஆற்றின் பாதையை கூட மாற்றியமைக்கிறது.)
Question 10
2018 மே 2 மற்றும் 3 தேதியில் அதிக திசைவேகத்துடன் வீசிய புழுதி புயலால் வடஇந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் எவை?
  1. உத்திரப்பிரதேசத்தில் 43 பேர் இறந்தனர்
  2. இராஜஸ்தானில் 35 பேர் இறந்தனர்
  3. 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்
  4. 8000 மின்கம்பங்கள் கீழே சாய்ந்தது
A
2, 3, 4
B
1, 3, 4
C
1, 2, 4
D
அனைத்தும்
Question 10 Explanation: 
(குறிப்பு: இப்புழுதிப் புயல் நூற்றாண்டுகளாக வாழ்ந்த மரங்களையே வேரோடு சாய்த்தது.)
Question 11
2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தை தாக்கிய மிக மோசமான புயல்
A
நிஷா
B
தானே
C
வர்தா
D
கஜா
Question 11 Explanation: 
(குறிப்பு: கஜா புயல் கடலோர மாவட்டங்களில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக வேளாண்மையை சீர்குலைத்தது.)
Question 12
சுனாமி என்ற சொல் _________ சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும்.
A
ஈரானிய
B
போர்ச்சுக்கீசிய
C
ஜப்பானிய
D
ஆங்கிலேய
Question 12 Explanation: 
(குறிப்பு: சு என்பது துறைமுகம் என்றும் னாமி என்பது அலைகள் எனவும் பொருள்படும்.)
Question 13
வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுதல்
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 3
Question 13 Explanation: 
(குறிப்பு: கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.)
Question 14
புயல் என்பது கீழ்க்கண்ட எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
  1. உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று
  2. குறை அழுத்தத்தால் சூழப்பட்ட உயர் அழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இரண்டும்
D
எதுவுமில்லை
Question 14 Explanation: 
(குறிப்பு: வெப்பமண்டல சூறாவளியால் உருவாகும் முக்கிய பாதிப்புகளில் கனமழை, பலத்த காற்று, கரையின் அருகில் பெரிய புயல் மற்றும் சுழல்காற்று உள்ளடங்கும்.)
Question 15
தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளான வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தை சுற்றிலும் கஜா புயல் எப்போது ஏற்பட்டது?
A
2016 நவம்பர் 8
B
2017 நவம்பர் 10
C
2018 நவம்பர் 10
D
2019 நவம்பர் 10
Question 15 Explanation: 
(குறிப்பு: கஜா புயல் 120 கி.மீ வேகத்தில் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.)
Question 16
  • கூற்று 1: நெரிசல் என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும்.
  • கூற்று 2: காயங்கள், மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் ஏற்படும் காயம், போன்றவை இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 16 Explanation: 
(குறிப்பு: பெரிய அளவிலான மக்கள் நெரிசலினால் ஏற்படும் பேரிடர் எளிமையான கூட்ட மேலாண்மை உத்திகளால் தடுக்க முடியுமென நம்பப்படுகிறது.)
Question 17
மக்கள் கூட்ட நெரிசலானது கீழ்க்கண்ட எவற்றின் தடுக்கப்படுகிறது?
  1. நிர்வாகம் போக்குவரத்து கட்டுப்பாடுகளான தடைகள்
  2. வரிசைமுறை பின்பற்றுதல்
  3. கூட்டம் கூடுதலை தவிர்த்தல்
A
1, 2
B
2, 3
C
1, 3
D
அனைத்தும்
Question 18
  • கூற்று 1: தீ விபத்து என்பது ஒரு பேரிடர் ஆகும்.
  • கூற்று 2: தீ விபத்து என்பது குறுகிய மின் சுற்று, வேதியியல் தொழிற்சாலை, தீப்பெட்டி, மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினை குறிக்கும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 18 Explanation: 
(குறிப்பு: தீ விபத்திற்கு முன், தீ விபத்தின்போது, தீ விபத்திற்கு பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.)
Question 19
கீழ்க்கண்டவற்றுள் தீவிபத்தின் மூன்று அம்சங்கள் எவை?
  1. கண்டறிதல்
  2. தடுத்தல்
  3. மீட்டல்
  4. அணைத்தல்
A
1, 2, 3
B
1, 2, 4
C
2, 3, 4
D
1, 3, 4
Question 20
தொழிற்சாலை பேரிடர் கீழ்க்கண்ட எக்காரணங்களால் ஏற்படுகிறது?
  1. தொழிற்சாலை உற்பத்தி
  2. எஞ்சிய கழிவுகளை அகற்றுதல்
  3. அணுமின் தொழிற்சாலை கழிவுகள்
  4. வேதியியல் தொழிற்சாலை கழிவுகள்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 4
D
1, 2, 3
Question 20 Explanation: 
(குறிப்பு: தொழிற்சாலை பேரிடருக்கு உதாரணம் போபால் விஷவாயு கசிவு.)
Question 21
பேரழிவின் விளைவுகளைத் தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் __________ என்று அழைக்கப்படுகின்றன.
A
பேரழிவு தயார் நிலை
B
பேரழிவு மட்டுப்படுத்துதல்
C
பேரழிவு மீட்டர்
D
பேரழிவு மேலாண்மை
Question 22
கீழ்க்கண்ட பேரிடர் மேலாண்மை படிநிலைகளில், எவை பேரிடருக்கு பின் மீட்டெடுத்தல் நிலைகளை குறிக்கின்றன?
  1. துலங்கல்
  2. மீட்டல்
  3. கண்டறிதல்
  4. முன்னேற்றம்
A
1, 2, 3
B
, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 22 Explanation: 
(குறிப்பு: பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.)
Question 23
கீழ்க்கண்ட பேரிடர் மேலாண்மை படிநிலைகளில், எவை பேரிடருக்கு முன் ஆபத்தை குறைத்தல் நிலைகளை குறிக்கின்றன?
  1. துலங்கல்
  2. தயார்நிலை
  3. மட்டுப்படுத்துதல்
  4. கட்டுப்படுத்துதல்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
அனைத்தும்
Question 24
பேரிடர் மேலாண்மையின் நிலைகள் _________ படிநிலைகளை கொண்டுள்ளது.
A
4
B
5
C
6
D
7
Question 24 Explanation: 
(குறிப்பு: மூன்று படிநிலைகள் பேரிடருக்கு முன் அபத்தைக் குறைத்தலையும், மூன்று படிநிலைகள் பேரிடருக்குப் பின் மீட்டெடுத்தல் நிலைகளையும் குறிக்கின்றன.)
Question 25
__________ என்பது பேரிடர் ஆபத்தை குறைப்பது மற்றும் பாதிக்கக்கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.
A
எச்சரிக்கை
B
பயிற்சி
C
முன்னேற்பாடு
D
மட்டுப்படுத்துதல்
Question 25 Explanation: 
(குறிப்பு: பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவை குறைப்பதாகும்.)
Question 26
கீழ்க்கண்டவற்றுள் எது/எவை தயார்நிலை படிநிலையில் அடங்கும்?
  1. அரசின் அவசரநிலை திட்டங்கள்
  2. எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல்
  3. சரக்குகளின் பராமரிப்பு
  4. பொதுமக்கள் விழிப்புணர்வு
  5. கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி
A
2, 3, 4
B
1, 3, 4, 5
C
1, 3, 4
D
அனைத்தும்
Question 26 Explanation: 
(குறிப்பு: தயார்நிலை படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.)
Question 27
பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை கீழ்க்கண்ட எந்த படிநிலையில் அடங்கும்?
A
கட்டுப்படுத்துதல்
B
ஆரம்பகால எச்சரிக்கை
C
பேரிடரின் தாக்கம்
D
துலங்கல்
Question 28
பேரிடரின் தாக்கம் என்பது கீழ்க்கண்ட எவற்றைக் குறிக்கும்?
  1. பேரிடர் நிகழும் கால அளவு
  2. பேரிடரினால் ஏற்படும் பாதிப்பு
  3. பேரிடர் மேலாண்மை
  4. பேரிடர் முன்னெச்சரிக்கை
A
1, 2
B
1, 3
C
1, 4
D
2, 4
Question 28 Explanation: 
(குறிப்பு: பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும்.)
Question 29
கீழ்க்கண்டவற்றுள் துலங்கல் நடவடிக்கைகளில் அடங்குபவை எவை?
  1. நிவாரணம் வழங்குதல்
  2. மீட்பு
  3. சேதார மதிப்பீடு
  4. தேவையற்ற குப்பைகளை நீக்குதல்
  5. ஆரம்பகால எச்சரிக்கை
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 3, 4, 5
D
1, 2, 3, 4
Question 29 Explanation: 
(குறிப்பு: வீடு இழந்தோருக்கு உணவு, உடை, குடிநீர் மற்றும் நிவாரணம் வழங்குதல், தகவல்தொடர்பு மறு சீரமைத்தல், பணமாகவோ அல்லது கருணையாகவோ உதவி வழங்குதல் ஆகியவை துலங்கலில் அடங்கும்.)
Question 30
பேரிடருக்கு பின் மீட்பு நிலை என்பது எத்தனை நிலைகளை உள்ளடக்கியது?
A
2
B
3
C
4
D
5
Question 30 Explanation: 
(குறிப்பு: மூன்று நிலைகள் அவசரகால நிவாரணம் வழங்குதல் மறுவாழ்வு மறுகட்டமைப்பு )
Question 31
  • கூற்று 1: மறுவாழ்வு என்பது இடைக்கால நிவாரணமாக தற்காலிக பொது பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் வீடுகள் வழங்குதல் ஆகியவை ஆகும்.
  • கூற்று 2: மறுவாழ்வு என்பது குறுகிய காலத்திற்கு உதவக்கூடிய வகையில் அமையும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 31 Explanation: 
(குறிப்பு: மறுவாழ்வு என்பது நெடுங்காலத்திற்கு உதவக்கூடிய வகையில் அமையும்.)
Question 32
பேரிடர் மேலாண்மையின் மறுசீரமைப்பு பணியில் கீழ்க்கண்ட எவை அடங்கும்?
  1. கட்டட மறுசீரமைப்பு
  2. முன்னறிவிப்பு எச்சரிக்கை
  3. எச்சரிக்கை மையங்களை அமைத்தல்
  4. அடிப்படை வசதிகள் வழங்குதல்
A
1, 2, 3
B
1, 3
C
2, 4
D
1, 4
Question 32 Explanation: 
(குறிப்பு: எல்லா அமைப்புகளும் இயல்பான அல்லது சிறப்பான நிலைக்கு வரும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
Question 33
பேரிடர் மேலாண்மை பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்களின்_________ தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
A
பொருளாதாரம்
B
உரிமைகள்
C
கல்வி, பயிற்சி
D
வளங்கள், பொருளாதாரம்
Question 34
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது  ___________ செயல்பாடு ஆகும்.
A
கடந்தகால
B
தற்போதைய
C
எதிர்கால
D
மேலாண்மை
Question 34 Explanation: 
(குறிப்பு: நீண்டகாலத் தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல் போன்றவை ஆகும்.)
Question 35
பேரிடருக்குப் பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது எத்தகையது?
A
அதிக செலவுடையது
B
குறைந்த செலவுடையது
C
அதிக காலம் எடுக்கக்கூடியது
D
குறைந்த காலம் எடுக்கக்கூடியது
Question 35 Explanation: 
(குறிப்பு: இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.)
Question 36
கீழ்க்கண்டவற்றுள் பேரிடர் மேலாண்மையில் அடங்குபவை எவை?
  1. நிர்வாக கொள்கைகளை முறையான வழிமுறையில் பயன்படுத்துதல்
  2. நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்களை வளர்த்தல்
  3. சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல்
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 3
Question 36 Explanation: 
(குறிப்பு: பேரிடர் மேலாண்மை, இடர்களின் பாதகமான பாதிப்பு மற்றும் பேரழிவிற்கான வாய்ப்பைக் குறைக்கும்.)
Question 37
இந்தியப் பெருங்கடலில் சுனாமி புயல் எழுச்சி எச்சரிக்கை மையங்களை கீழ்க்கண்ட எந்த நிறுவனங்களின் ஆய்வகங்கள் அமைத்துள்ளன?
  1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
  2. விண்வெளித் துறை
  3. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3
D
1, 3
Question 37 Explanation: 
(குறிப்பு: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST) விண்வெளித் துறை (DOS) அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR))
Question 38
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் _________ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
A
DMNA
B
NDMA
C
DNMA
D
AMNDA
Question 38 Explanation: 
(குறிப்பு: NDMA, உள்துறை அமைச்சகத்தின் நிறுவனமாகும்.)
Question 39
கீழ்க்கண்டவற்றுள் NDMA ன் முதன்மை நோக்கங்கள் எவை?
  1. பேரிடர்களுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்
  2. பேரழிவு நெகிழித் திறனில் மேம்பாடு
  3. நெருக்கடிக்கால செயல்பாடு
  4. பேரிடர் மேலாண்மையை குறைத்தல்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 2, 4
D
2, 3, 4
Question 40
பேரிடர் மேலாண்மை சட்டம் இந்திய அரசால் எப்போது கொண்டுவரப்பட்டது?
A
2004 டிசம்பர் 25
B
2005 ஏப்ரல் 24
C
2005 ஜூன் 25
D
2005 டிசம்பர் 25
Question 40 Explanation: 
(குறிப்பு: பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) உருவாக்கப்பட்டது.)
Question 41
____________ என்பது பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 ன் கீழ் அச்சுறுத்தும் பேரழிவு நிலைமை அல்லது பேரழிவுக்கு நிபுணர் பதிலளிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சக்தியாகும்.
A
செஞ்சிலுவை சங்கம்
B
இராணுவ மீட்புக் குழு
C
தேசிய பேரிடர் மறுமொழி படை
D
தேசிய சாரணர் படை
Question 42
இந்தியாவில் இயற்கை பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதன்மை நிறுவனம் எது?
A
NDMA
B
NDMI
C
CDMA
D
CSIR
Question 42 Explanation: 
(குறிப்பு: NDMI - தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்)
Question 43
தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF) என்பது __________ போலீஸ் தனிப்படையுடன் அமைக்கப்பட்டது.
A
50
B
60
C
70
D
80
Question 43 Explanation: 
(குறிப்பு: இவர்கள் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மறுமொழி (NDRF) படையின் ஆலோசணையின்படி மீட்புச் செயல்களில் ஈடுபடுவர்.)
Question 44
  • கூற்று 1: தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையானது பேரழிவை மட்டுப்படுத்துதல், தயார் நிலை, துலங்கல் மற்றும் மீட்டெடுத்தல் போன்றவற்றிற்கு பொறுப்பானது ஆகும்.
  • கூற்று 2: மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 44 Explanation: 
(குறிப்பு: மாநில அளவில் பேரழிவை மட்டுப்படுத்துதல், தயார் நிலை, துலங்கல் மற்றும் மீட்டெடுத்தல் போன்றவை அனைத்தும் தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.)
Question 45
மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2018-2030 முன்னோக்கத்திட்டமானது __________ துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
A
மனித வள மேம்பாட்டுத் துறை
B
பாதுகாப்புத்துறை
C
வெளியுறவுத்துறை
D
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
Question 45 Explanation: 
(குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கும் இடையே ஒரு சிறு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.)
Question 46
தீவிபத்து எனில் அவசர சேவைக்கு ___________ என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும்.
A
101
B
103
C
108
D
111
Question 46 Explanation: 
(குறிப்பு: ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.)
Question 47
அவசரகால மருத்துவ உதவிக்கு ________ என்ற எண்ணை அழைக்கு வேண்டும்.
A
101
B
103
C
108
D
111
Question 47 Explanation: 
(குறிப்பு: தீ விபத்து மற்றும் தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களும் மனிதனின் கவனக்குறைவால் ஏற்படும் இந்நிகழ்வுகளும் பேரிடர்களாகும்.)
Question 48
_________ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
A
ரேஷன் அட்டை
B
ஓட்டுநர் உரிமம்
C
அனுமதி
D
ஆவணங்கள்
Question 48 Explanation: 
(குறிப்பு: சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனத்தை இயக்கும்போதும் பின்பற்றபட வேண்டிய சாலை விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.)
Question 49
பொருத்துக.
  1. புவி அதிர்ச்சி                        i) இராட்சத அலைகள்
  2. சூறாவளி                                  ii) பிளவு
  3. சுனாமி                                   iii) சமமற்ற மழை
  4. தொழிற்சாலை விபத்து     iv) புயலின் கண்
  5. 5. வறட்சி                                  v) கவனமின்மை
A
ii i iii iv v
B
iii iv v ii i
C
ii iv i v iii
D
ii v i iv iii
Question 50
  • கூற்று: நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
  • காரணம்: மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
A
கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
B
கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை.
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Question 51
கீழ்க்கண்டவற்றுள் ஆழிப்பேரலை ஏற்பட காரணமாக இருப்பவை எவை?
  1. நிலநடுக்கம்
  2. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு
  3. எரிமலை வெடிப்பு
  4. குறுங்கோள்கள்
A
அனைத்தும்
B
1, 3
C
2, 4
D
1, 3
Question 51 Explanation: 
(குறிப்பு: கடல் அலைகள் பல மீட்டர்கள் உயரம் எழுந்து சில நிமிடங்களில் கடற்கரையை அடைகிறது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!