இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Online Test 12th History Lesson 3 Questions in Tamil

Quiz-summary
0 of 89 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 89 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 89
1. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 1908இல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது.
ⅱ) 1908இல் இளம் துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள்.
ⅲ) முதல் உலகப்போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.Correct
விளக்கம்: இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப்போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1905இல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது. 1908இல் இளம் துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள். முதல் உலகப்போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.
Incorrect

                        Question 2 of 89
2. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சண்டைகள் பல பகுதிகளில் நடந்தபோதிலும் முதல் உலகப் போரின் முக்கியக் களமாக ஆப்பிரிக்கா விளங்கியது.
ⅱ) ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் ராணுவ சேவை புரிய பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களை ஆங்கிலேயர்கள் பணிக்கு எடுத்தனர்.
ⅲ) போருக்குப்பின் புதிய சிந்தனைகளுடன் இந்தியா திரும்பிய இந்த வீரர்கள் இந்திய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
Correct
Incorrect
 - 
                        Question 3 of 89
3. Question
- கூற்று: பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
 - காரணம்: 367 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை போர்ச்செலவுகளைச் சமாளிக்க கடனாகவும் 250 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் இந்தியா அனுப்பியது.
 
Correct
விளக்கம்: வற்புறுத்தலின் காரணமாக 367 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை இந்தியா, 229 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளில் நேரடி ரொக்கமாகவும் எஞ்சிய தொகையைப் போர்ச்செலவுகளைச் சமாளிக்க கடனாகவும் வழங்கியது. இதைத்தவிர 250 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் இந்தியா அனுப்பியது. இதனால் பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

                        Question 4 of 89
4. Question
- கூற்று: தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது.
 - காரணம்: இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்தது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டது
 
Correct
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும் போரின்போது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும் தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது.

                        Question 5 of 89
5. Question
பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) 1916இல் திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர்.
 - ⅱ) மேற்கத்திய இந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.
 - ⅲ) தென்னிந்தியாவில் திலகர் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.
 
Correct
விளக்கம்: 1916இல் திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர். மேற்கத்திய இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.

                        Question 6 of 89
6. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) முதல் உலகப் போரின் போது காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டது.
 - ⅱ) 1916இல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது.
 - ⅲ) போரின்போது மிதவாத தேசியவாதிகளின் சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துகள் பெருமளவில் ஆக்கிரமித்தன.
 
Correct
விளக்கம்: முதல் உலகப் போரின் போது காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டது. 1916இல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது. இந்தப் போரின்போது தீவிர தேசியவாதிகளின் சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துகள் பெருமளவில் ஆக்கிரமித்தன. எனவே அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியும் பயன்படுத்தியும் தேசிய இயக்கத்தை அடக்கியாள ஆங்கிலேய அரசு முயன்றது.

                        Question 7 of 89
7. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது.
 - ⅱ) ரௌலட் சட்டத்தை கடுமையாக விமர்சித்த இந்தியத் தலைவர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
 - ⅲ) உள்நாட்டு நிகழ்வுகளும் குறிப்பாக சீனப் புரட்சி போன்ற நிகழ்வுகளும் இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
 
Correct
விளக்கம்: கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது. இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த இந்தியத் தலைவர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சர்வதேச நிகழ்வுகளும் குறிப்பாக ரஷ்யப் புரட்சி போன்ற நிகழ்வுகளும் இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

                        Question 8 of 89
8. Question
- கூற்று: முதல் உலகப்போருக்குப்பின் கிலாபத் இயக்கம் தோன்றியது.
 - காரணம்: : முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும், அதன்பின் கையெழுத்தான செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா) நிலைதாழ்த்திக் காட்டியது.
 
Correct
விளக்கம்: முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும், அதன்பின் கையெழுத்தான செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா) நிலைதாழ்த்திக் காட்டியது. இதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.

                        Question 9 of 89
9. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) இந்தியாவின் விசுவாசத்துக்குப் பிரிட்டன் உரிய மதிப்பளிக்கும் என்று இந்தியர்கள் நம்பவில்லை.
 - ⅱ) இந்தியாவின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பலதரப்பட்ட பாதிப்புகளை போர் உண்டாக்கியது.
 
Correct
விளக்கம்: இந்தியாவின் விசுவாசத்துக்குப் பிரிட்டன் உரிய மதிப்பளிக்கும் என்று நம்பி இந்தியாவும் இந்தியர்களும் இந்தப் போரில் தீவிரமாகச் செயல்பட்டனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவ்வாறாக இந்தியாவின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பலதரப்பட்ட பாதிப்புகளை இந்தப் போர் உண்டாக்கியது.

                        Question 10 of 89
10. Question
பின்வருவனவற்றுள் அயர்லாந்தில் இருந்தபோது அன்னிபெசண்ட் பங்குகொண்ட இயக்கங்கள் எவை?
- ⅰ) அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்
 - ⅱ) ஃபேபியன் சோஷலிசவாதிகள்
 - ⅲ) குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கங்கள்
 
Correct
விளக்கம்: அகில இந்திய தன்னாட்சி இயக்கம்: A.O. ஹுயூம் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் நமது விடுதலைப் போரின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்கினை ஆற்றினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இதே போன்றதொரு முக்கியப் பணியை ஆற்றினார். அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.

                        Question 11 of 89
11. Question
வாரணாசியில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்?
Correct
விளக்கம்: பிரம்மஞானசபையின் (திசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னி பெசண்ட் இந்தியாவுக்கு 1893இல் வந்தார். பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை அவர் நிறுவினார். (பின்னர் இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு பண்டித மதன்மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது).

                        Question 12 of 89
12. Question
பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசண்ட் அம்மையார் எந்த ஆண்டு முதல் பதவி வகித்தார்?
Correct
விளக்கம்: 1907இல் எச்.எஸ்.ஆல்காட் அவர்களின் மறைவுக்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசண்ட் அம்மையார் பதவி வகித்தார். பிரம்மஞான சபையின் கொள்கைகளை அதன் தலைமையகமான சென்னையின் அடையாறில் இருந்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

                        Question 13 of 89
13. Question
பின்வருபவர்களுள் பெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள் யாவர்?
- ⅰ) துவாரகாதாஸ்
 - ⅱ) சி.பி. முனுசாமி
 - ⅲ) ஜம்னாதாஸ்
 - ⅳ) ஷங்கர்லால் பன்கர்
 
Correct
விளக்கம்: பெசண்ட் அம்மையாருக்குக் கல்விகற்ற பல தொண்டர்களின் ஆதரவும் கிடைத்தது. ஜம்னாதாஸ், துவாரகாதாஸ், ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர்லால் பன்கர், இந்துலால் யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா ஆகியோர் பெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்.

                        Question 14 of 89
14. Question
பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும் அறிவிப்பை எந்த ஆண்டு வெளியிட்டது?
Correct
விளக்கம்: 1914இல் பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்டது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காகத் தான் பாடுபடுவதாகவும் அது தெரிவித்தது. பிரிட்டனின் போர் முயற்சிகளை இந்தியத் தலைவர்கள் நம்பிக்கையுடன் ஆதரித்தனர். இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாததால் விரைவில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

                        Question 15 of 89
15. Question
- கூற்று: பிரிட்டிஷார் முஸ்லீம் லீக்கை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர்.
 - காரணம்: மையநாடுகளை ஆதரித்து முதல் உலகப்போரில் துருக்கியின் சுல்தான் நுழைந்தார்.
 
Correct
விளக்கம்: எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதத்தன்மை உடையவர்கள் என்ற குழுக்களாகப் பிளவுபட்டதால், தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை. மையநாடுகளை ஆதரித்து முதல் உலகப்போரில் துருக்கியின் சுல்தான் நுழைந்ததை அடுத்து பிரிட்டிஷார் முஸ்லீம் லீக்கை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர்.

                        Question 16 of 89
16. Question
சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து அன்னிபெசண்ட் பின்வரும் எதன் மூலம் எடுத்துரைத்தார்?
Correct
விளக்கம்: அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய அரசியலில் நுழைந்தார். 1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர் தொடங்கினார். சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்த வாராந்திரி கவனம் செலுத்தியது.

                        Question 17 of 89
17. Question
கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை அன்னிபெசண்ட் பின்வரும் எதன் மூலம் எடுத்துரைத்தார்?
Correct
விளக்கம்: 1915இல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார். கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை அவர் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.

                        Question 18 of 89
18. Question
இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று முழக்கமிட்டவர் யார்?
Correct
விளக்கம்: இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று அன்னி பெசண்ட் முழக்கமிட்டார். சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்துமாறு இந்தியத் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட அவர் இந்திய விடுதலை குறித்து பல உரைகளை நிகழ்த்தினார்.

                        Question 19 of 89
19. Question
அன்னிபெசண்ட் அம்மையார் எந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்றார்?
Correct
விளக்கம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டார். எனினும் அவரது பயணம் மூலம் இந்தியா குறித்த அனுதாபம் ஏற்பட்டது. இந்தியா திரும்பிய அவர், 1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கினார்.

                        Question 20 of 89
20. Question
அன்னிபெசண்ட் எங்கு நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை வெளிப்படுத்தினார்?
Correct
விளக்கம்: பம்பாயில் நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அவர் செப்டம்பர் மாதத்தில் வெளிப்படுத்தினார். “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்.” ஆங்கிலேயக் காலனிகளைப் போன்று போருக்குப் பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும் கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட் அம்மையார் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.

                        Question 21 of 89
21. Question
அன்னிபெசண்ட் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக முறைப்படி எப்போது அறிவித்தார்?
Correct
விளக்கம்: அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28இல் முறைப்படி அறிவித்தார். மற்றொரு தனி இயக்கம் தொடங்கப்படுவதை மிதவாத தேசியவாதிகள் விரும்பவில்லை. தனது இயக்கம் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியின் அனுமதி தேவை என்பதை அவரும் அறிந்திருந்தார்.

                        Question 22 of 89
22. Question
பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சிகளால் தீவிர தேசியத் தன்மையுடையவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் காங்கிரஸ் முறையாக திருத்தம் செய்தது.
 - ⅱ) 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை கையிலெடுக்குமாறு 1914இல் பம்பாயில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார்.
 - ⅲ) அவ்வாறு செய்யத்தவறினால், தாமே தன்னாட்சி இயக்கத்தை அமைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
 
Correct
விளக்கம்: திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சிகளால் டிசம்பர் 1915இல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியத் தன்மையுடையவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் அக்கட்சி முறையாக திருத்தம் செய்தது. 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை கையிலெடுக்குமாறு அந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யத்தவறினால், தாமே தன்னாட்சி இயக்கத்தை அமைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

                        Question 23 of 89
23. Question
பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
- ⅰ) ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1917 இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 - ⅱ) இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்படவில்லை என்பது ஒரு குறையாகும்.
 - ⅲ) தன்னாட்சி இயக்கம் இரட்டை குறிக்கோள்களை கொண்டிருந்தது.
 
Correct
விளக்கம்: ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன. தன்னாட்சி இயக்கம் இரட்டை குறிக்கோள்களை கொண்டிருந்தது.

                        Question 24 of 89
24. Question
பின்வருவனவற்றுள் தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்/கள் எது/எவை?
- ⅰ) பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது.
 - ⅱ) தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது.
 - ⅲ) இந்து சமயத்தை மீட்டெடுப்பது.
 
Correct
Incorrect
 - 
                        Question 25 of 89
25. Question
பின்வரும் எப்பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்பட்டது?
- ⅰ) மகாராஷ்டிரா
 - ⅱ) கர்நாடகா
 - ⅲ) தெற்கு மாகாணங்கள்
 - ⅳ) பெரார்
 
Correct
விளக்கம்: திலகரின் தன்னாட்சி இயக்கம்: ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும். திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

                        Question 26 of 89
26. Question
திலகர் தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக தமது எத்தனையாவது பிறந்த நாளில் கைது செய்யப்பட்டார்?
Correct
விளக்கம்: தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல் தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.

                        Question 27 of 89
27. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது.
 - ⅱ) பழங்கால எகிப்து அரசிலும், நவீன சீன அரசிலும் இது பொதுப்படையான அம்சமாக இருந்தது.
 
Correct
விளக்கம்: தன்னாட்சி: மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது. பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் இது பொதுப்படையான அம்சமாக இருந்தது.

                        Question 28 of 89
28. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) 1890 களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றது.
 - ⅱ) அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது.
 - ⅲ) தெற்கில் ஆங்கிலோ- அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது.
 
Correct
விளக்கம்: 1880களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ– அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது.

                        Question 29 of 89
29. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) செப்டம்பர் 1916ஆம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார்.
 - ⅱ) கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மது ரை, கள்ளிக்கோட்டை, வேலூர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன.
 - ⅲ) இந்தியா முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச்செய்தார்.
 
Correct
விளக்கம்: பெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் செப்டம்பர் 1916ஆம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார். கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன. இந்தியா முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச்செய்தார்.

                        Question 30 of 89
30. Question
“இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாத தேசிய காங்கிரசார் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர். ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டதிலிருந்து இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.

                        Question 31 of 89
31. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) மதராஸில் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் மிகவும் பிரபலம் அடைந்ததை அடுத்து மதராஸ் அரசு அதனை அடக்க நினைத்தது.
 - ⅱ) தன்னாட்சி இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆசிரியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
 
Correct
விளக்கம்: மதராஸில் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் மிகவும் பிரபலம் அடைந்ததை அடுத்து மதராஸ் அரசு அதனை அடக்க நினைத்தது. இந்த இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ள மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

                        Question 32 of 89
32. Question
பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக அரசப் பட்டத்தை (knighthood) துறந்தவர் யார்?
Correct
விளக்கம்: ஜூன் 1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர். அரசின் இந்த அடக்குமுறை தன்னாட்சி கோரிய ஆதரவாளர்களை வலுப்படுத்தியது; மேலும் அதிக உறுதியுடன் போராடத் தூண்டியது. பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக சர். எஸ். சுப்ரமணியம் அரசப் பட்டத்தை (knighthood) துறந்தார்.

                        Question 33 of 89
33. Question
தன்னாட்சி இயக்கத்தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் வலியுறுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: முன்னர் இந்த இயக்கத்தில் இருந்து தனித்து இருந்த மதன் மோகன் மாளவியா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்கள் தங்களை தன்னாட்சி இயக்கத்தில் தீவிரமாக இணைத்துக்கொண்டனர். தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28இல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார்.

                        Question 34 of 89
34. Question
யாருடைய உத்தரவின்பேரில் தன்னாட்சி இயக்க தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி பேரணியாகச் சென்றனர்?
Correct
விளக்கம்: காந்தியடிகளின் உத்தரவின்பேரில் ஜம்னாதாஸ், துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் பெசண்ட் மற்றும் இதர தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கி பெசண்ட் அம்மையார் சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சிறைபிடிக்கப்பட்டத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

                        Question 35 of 89
35. Question
- கூற்று: ஒரே இரவில் பெசண்ட் அம்மையார் விசுவாசிக்கு நிகராக மாறினார்.
 - காரணம்: தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார்.
 
Correct
விளக்கம்: தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார். இந்த அறிக்கை ஒரே இரவில் பெசண்ட் அம்மையாரை விசுவாசிக்கு நிகராக மாற்றியது.

                        Question 36 of 89
36. Question
1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
Correct
விளக்கம்: செப்டம்பர் 1917இல்அவர் விடுதலையானபோது அவர் 1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                        Question 37 of 89
37. Question
- கூற்று: காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன்முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
 - காரணம்: தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்றுதிரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன.
 
Correct
Incorrect
 - 
                        Question 38 of 89
38. Question
அனைத்துவிதப் பிரிவுகளைத் தாண்டி பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக விளங்கியது எது?
Correct
விளக்கம்: தன்னாட்சி இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர். அனைத்துவிதப் பிரிவுகளைத் தாண்டி காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்மஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.

                        Question 39 of 89
39. Question
‘Indian unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தவர்?
Correct
விளக்கம்: தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி: ‘Indian unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.

                        Question 40 of 89
40. Question
வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால் தன்னாட்சி இயக்கம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
Correct
விளக்கம்: பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித் (டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1929இல் இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.

                        Question 41 of 89
41. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) முதல் உலகப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது.
 - ⅱ) மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களை நிறைவேற்றினர்.
 - ⅲ) மிதவாத தேசியவாதிகள் பொறுத்திருந்து பார்ப்பதுஎன்ற கொள்கையைப் பின்பற்றினர்.
 
Correct
விளக்கம்: போரின் தாக்கம்: முதல் உலகப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது. மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909இல் மிண்டோ– மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர். மிதவாத தேசியவாதிகள் பொறுத்திருந்து பார்ப்பதுஎன்ற கொள்கையைப் பின்பற்றினர்.

                        Question 42 of 89
42. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) தங்களுக்கு வழங்கப்பட்ட தனித் தொகுதிகளை முஸ்லிம் லீக் வரவேற்றது.
 - ⅱ) 1913இல், முஸ்லிம் லீக்கில் ஜின்னா உட்பட புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர்.
 - ⅲ) ஜின்னா முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.
 
Correct
விளக்கம்: தங்களுக்கு வழங்கப்பட்ட தனித் தொகுதிகளை முஸ்லிம் லீக் வரவேற்றது. 1913இல், இந்த லீக்கில் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஏற்கனவே இருந்த முகமது அலி ஜின்னா, அவர்களில் முக்கியமானவர். அவர் முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.

                        Question 43 of 89
43. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை இரண்டாம் உலகப்போர் உருவாக்கியது.
 - ⅱ) போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர்.
 - ⅲ) கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
 
Correct
விளக்கம்: இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப்போர் உருவாக்கியது. போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

                        Question 44 of 89
44. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) இரண்டாம் உலகப்போர் விடுதலைப்போரில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
 - ⅱ) முதலில் பிரிட்டிஷ் அரசு இந்திய ஆதரவு பற்றிக் கவலைப்படவில்லை.
 - ⅲ) மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா நோக்கி போர்ச்சூழல் நகர்ந்த பிறகு இந்திய ஆதரவை எதிர்பார்க்க பிரிட்டிஷார் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
 
Correct
விளக்கம்: முதல் உலகப்போர் விடுதலைப்போரில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. முதலில் பிரிட்டிஷ் அரசு இந்திய ஆதரவு பற்றிக் கவலைப்படவில்லை. மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா நோக்கி போர்ச்சூழல் நகர்ந்த பிறகு இந்திய ஆதரவை எதிர்பார்க்க பிரிட்டிஷார் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தச் சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்குதல் தர இந்தியத் தலைவர்கள் முடிவு எடுத்தனர்.

                        Question 45 of 89
45. Question
1915 இல் காங்கிரசின் வருடாந்திர மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct
விளக்கம்: 1915இல் பம்பாயில் வருடாந்திர மாநாட்டை நடத்திக் கொண்டிருந்த காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இதே அடிப்படையில் விவாதித்தன. அக்டோபர் 1916இல் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதத்தில் போருக்குப் பிந்தைய சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினர். இதற்கு பிரிட்டிஷ் அரசு அசைந்துகொடுக்கவில்லை.

                        Question 46 of 89
46. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லக்னோவில் சந்தித்தனர்.
 - ⅱ) இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதம் குறித்து விவாதித்தன.
 - ⅲ) போருக்குப் பிந்தைய சூழலில் இரண்டு சமூகங்களுக்கும் அனுமதிக்கப்படவேண்டிய பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை ஆகியன குறித்து இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.
 
Correct
விளக்கம்: காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் சந்தித்தனர். இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதம் குறித்து விவாதித்தன. சட்டப்பேரவையின் கட்டமைப்பு, போருக்குப் பிந்தைய சூழலில் இரண்டு சமூகங்களுக்கும் அனுமதிக்கப்படவேண்டிய பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை ஆகியன குறித்து இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

                        Question 47 of 89
47. Question
1916ஆம் ஆண்டு தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்திய அமைப்புகள் எவை?
- ⅰ) முஸ்லிம் லீக்
 - ⅱ) தன்னாட்சி இயக்கம்
 - ⅲ) காங்கிரஸ்
 
Correct
விளக்கம்: இணையாகத் திலகரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் தன்னாட்சி குறித்து அறிவுறுத்தினர். அவர்களது முயற்சிகளின் விளைவாகப் பம்பாய் மாநாட்டில் தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களைத் திரும்ப சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டு அதனைத்தொடர்ந்து காங்கிரசின் அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்தியதால் 1916ஆம் ஆண்டு முக்கியத்துவம் பெற்றது.

                        Question 48 of 89
48. Question
1916ஆம் ஆண்டு காங்கிரஸ் வருட மாநாடுக்கு தலைமை வகித்தவர் யார்?
Correct
விளக்கம்: காங்கிரஸ் தலைவர் அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசியத்தன்மைகொண்டவர்களை வரவேற்றார். “பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்…” தீவிர தேசியத்தன்மை கொண்டவர்கள் திரும்பியதை அடுத்து காங்கிரஸ் தனது பழைய சக்தியைப் பெற்றுவிட்டது.

                        Question 49 of 89
49. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) இந்து – லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள்.
 - ⅱ) இந்த ஒப்பந்தத்தின் போது ஜின்னா குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
 - ⅲ) நவம்பர் 1916இல் கல்கத்தாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916இல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.
 
Correct
விளக்கம்: லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ்– லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்–ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள். இந்த ஒப்பந்தத்தின் போது ஜின்னா குறிப்பிடத்தக்க பங்காற்றினார். நவம்பர் 1916இல் கல்கத்தாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916இல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.

                        Question 50 of 89
50. Question
பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு யாரைத்தலைவராக கொண்டு நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த லாலா ஹர்தயாள் 1913இல் நிறுவினார். இந்த அமைப்பு கதார் கட்சி என்று அழைக்கப்பட்டது. (உருது மொழியில் கதார் என்றால் கிளர்ச்சி என்று பொருள்).

                        Question 51 of 89
51. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் கட்சியில் இடம்பெற்றிருந்தனர்.
 - ⅱ) ‘கதார்’ என்ற பத்திரிகையையும் இக்கட்சி வெளியிட்டது.
 - ⅲ) 1912 நவம்பர் முதல் தேதி இந்தியாவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
 
Correct
விளக்கம்: அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் க் கட்சியில் இடம்பெற்றிருந்தனர். ‘கதார்‘ என்ற பத்திரிகையையும் இக்கட்சி வெளியிட்டது. 1913 நவம்பர் முதல் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது. பின்னர் உருது, பஞ்சாபி, இந்தி மற்றும் இதர மொழிகளிலும் அது வெளியானது.

                        Question 52 of 89
52. Question
பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கள் எது/எவை?
- ⅰ) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
 - ⅱ) கோமகடமரு (Comagatamaru) என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் டிரினிடாட்டில் இருந்து திரும்பியது.
 - ⅲ) இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
 
Correct
விளக்கம்: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும். கோமகடமரு (Comagatamaru) என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.

                        Question 53 of 89
53. Question
பின்வருவனவற்றுள் லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள் எவை?
- ⅰ) நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்படவேண்டும்.
 - ⅱ) மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
 - ⅲ) 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
 
Correct
விளக்கம்: லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்: (i) நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்படவேண்டும். (ii) மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

                        Question 54 of 89
54. Question
பின்வருவனவற்றுள் லக்னோ ஒப்பந்தத்தின் அம்சம் அல்லாதது எது/எவை?
- ⅰ) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின் 2/6 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.
 - ⅱ) மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்கவேண்டும்.
 - ⅲ) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின் 4/6 உறுப்பினர்கள் பரந்துபட்டவாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
 
Correct
விளக்கம்: (iii) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்டவாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். (iv) மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்கவேண்டும்.

                        Question 55 of 89
55. Question
லக்னோ ஒப்பந்தம் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) மத்தியசபை தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது.
 - ⅱ) இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
 - ⅲ) கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின்ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
 
Correct
விளக்கம்: மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. (மக்கள்தொகையில் தெரிவிக்கப்பட்ட விகிதங்களுக்கு அப்பால்) இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின்ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து–முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.

                        Question 56 of 89
56. Question
லக்னோ ஒப்பந்தம் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன.
 - ⅱ) கவர்னர்ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஈராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
 
Correct
விளக்கம்: தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர்ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.

                        Question 57 of 89
57. Question
லக்னோ ஒப்பந்தம் குறித்த கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
- ⅰ) இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும்.
 - ⅱ) ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சம நிலை பெற்றிருக்கவேண்டும்.
 - ⅲ) இந்து-முஸ்லிம் வேற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.
 
Correct
விளக்கம்: இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சம நிலை பெற்றிருக்கவேண்டும். இந்து–முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.

                        Question 58 of 89
58. Question
- கூற்று: காங்கிரஸ் மற்றும் லீக் ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன் உச்சத்தை அடைந்தது.
 - காரணம்: லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது.
 
Correct
விளக்கம்:லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை “இந்து–முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினி அம்மையார் அழைத்தார். லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது. இந்த ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன் உச்சத்தை அடைந்தது.

                        Question 59 of 89
59. Question
புரட்சிகர இயக்கங்கள் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) காங்கிரசை ஒத்த தளத்தில் வன்முறையைக் கையில் எடுத்து ஆங்கிலேய ஆட்சியை அப்புறப்படுத்த முயற்சி செய்த புரட்சிகர குழுக்களும் உருவாகின.
 - ⅱ) ஆட்சியை அப்புறப்படுத்த முயற்சி செய்த புரட்சிகர குழுக்களும் உருவாகின.
 - ⅲ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி ஒத்துழையாமை இயக்கத்தின் காலகட்டம் வரை அது முடுக்கத்தைப் பிடித்தது.
 
Correct
Incorrect
 - 
                        Question 60 of 89
60. Question
பின்வரும் எப்பகுதிகள் புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்தன?
- ⅰ) மகாராஷ்டிரா
 - ⅱ) வங்காளம்
 - ⅲ) பஞ்சாப்
 - ⅳ) பீகார்
 
Correct
விளக்கம்: முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கையை புரட்சிகர அமைப்புகளின் அங்கத்தினர்கள் எழுப்பினர். மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப் ஆகியன புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்தன. வளர்ந்துவந்த தேசிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

                        Question 61 of 89
61. Question
பொருத்துக:
- A) குற்ற உளவுத்துறை – 1) 1908
 - B) பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் – 2) 1910
 - C) தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் – 3) 1911
 - D) இந்திய பத்திரிகைகள் சட்டம் – 4) 1903
 
Correct
விளக்கம்: தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார். பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908), வெடிபொருட்கள் சட்டம் (1908), அதன்பிறகு இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910), தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

                        Question 62 of 89
62. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் தொடர்பில் சில இந்திய தேசியவாதிகள் இருந்ததாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர்.
 - ⅱ) வெளிநாட்டினரின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1919இல் இயற்றப்பட்டது.
 
Correct
விளக்கம்: வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் தொடர்பில் சில இந்திய தேசியவாதிகள் இருந்ததாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர். வெளிநாட்டினரின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது. புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டங்கள் இயற்றப்பட்டன. கூட்டங்கள், தேசத்துரோக பிரசுரங்களைப் பிரச்சாரத்துக்காக அச்சிடுவது மற்றும் சுற்றுக்கு விடுவது ஆகியவற்றைத் தடுப்பது, சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைது செய்வது என காலனி ஆதிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

                        Question 63 of 89
63. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) இரண்டாம் உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் இயற்றப்பட்டது.
 - ⅱ) உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
 
Correct
விளக்கம்: முதல் உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.

                        Question 64 of 89
64. Question
கீழ்க்கண்டவற்றுள் இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் எவை?
- ⅰ) மரண தண்டனை விதிப்பது
 - ⅱ) வாழ்நாள் முழுவதற்குமாய் நாடுகடத்துவது
 - ⅲ) பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
 
Correct
விளக்கம்: மீறுவோருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரும் விதிமுறைகளையும் உத்தரவுகளையும் மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது; வாழ்நாள் முழுவதற்குமாய் நாடுகடத்துவது; பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.

                        Question 65 of 89
65. Question
பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டத்தின் அடிப்படை கூறுகளைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் எது?
Correct
விளக்கம்: வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றதால் முடிவுகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியில்லாதவையாகவும் இருந்தன. இந்தச் சட்டம் முதல் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர் முடிவுற்றபின் இச்சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது.

                        Question 66 of 89
66. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ⅰ) முதல் உலகப்போரில், நேசநாடுகளுக்கு எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி பிரிட்டனைத் தாக்கினார்.
 - ⅱ) கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார்.
 - ⅲ) போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்த பிரிட்டன் செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 
Correct
விளக்கம்: முதல் உலகப்போரில், நேசநாடுகளுக்கு எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவைத் தாக்கினார். கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார். போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்த பிரிட்டன் செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

                        Question 67 of 89
67. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ⅰ) துருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இடம்பெற்றன.
 - ⅱ) பாலஸ்தீனமும் ஜோர்டனும் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இடம்பெற்றன.
 - ⅲ) கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
 
Correct
விளக்கம்: துருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலும் பாலஸ்தீனமும் ஜோர்டனும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் இடம்பெற்றன. கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டணிப்படைகள் அவ்வாறு முடிவு செய்தன. கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.

                        Question 68 of 89
68. Question
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு
- ⅰ) மௌலானா அபுல் கலாம் ஆசாத், மௌலானா சௌஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
 - ⅱ) உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றி அனுதாபம் கொண்டவர்கள்.
 
Correct
விளக்கம்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றி அனுதாபம் கொண்டவர்கள் அதனால் இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர். மௌலானா முகமது அலி, மௌலானா சௌஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். அவர்களின் தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர்.

                        Question 69 of 89
69. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ⅰ) ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு கிலாபத் இயக்கம் தோன்றியது.
 - ⅱ) M.A. அன்சாரி, ஷேக் ஷௌகத் அலி சித்திக், சையது அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம் தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 - ⅲ) மார்ச் 1922இல் இலண்டனில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
 
Correct
விளக்கம்: ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு கிலாபத் இயக்கம் தோன்றியது. மௌலானா அபுல் கலாம் ஆசாத், M.A. அன்சாரி, ஷேக் ஷௌகத் அலி சித்திக், சையது அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம் தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மார்ச் 1920இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.

                        Question 70 of 89
70. Question
கீழ்க்கண்டவற்றுள் கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகள் எவை?
- ⅰ) துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடரவேண்டும்.
 - ⅱ) இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்தவேண்டும்.
 - ⅲ) சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படவேண்டும்.
 
Correct
விளக்கம்: 1. துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடரவேண்டும். 2. இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்தவேண்டும். 3. சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படவேண்டும். 4. ஜாசிரத்–உல்–அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும்.

                        Question 71 of 89
71. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இஹிந்த் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
 - ⅱ) ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது.
 - ⅲ) தூக்குபடுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
 
Correct
விளக்கம்: தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்–இஹிந்த் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1906இல் ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது. 1899-1900களில் போயர் போரின்போது தூக்குபடுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

                        Question 72 of 89
72. Question
“கிலாபத் இயக்க விஷயத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கியபோது, அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்துகொண்டதுடன், தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை.

                        Question 73 of 89
73. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை.
 - ⅱ) கலீபா பற்றிய கேள்வி மூலம் கிலாபத் இயக்கத் தலைவர்கள், பிரதேச, மொழி, வகுப்பு, பிரிவினைவாத வழிகளில் பிளவுபட்ட இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்க ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
 
Correct
விளக்கம்: கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்றாலும் கலீபா பற்றிய கேள்வி மூலம் கிலாபத் இயக்கத் தலைவர்கள், பிரதேச, மொழி, வகுப்பு, பிரிவினைவாத வழிகளில் பிளவுபட்ட இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்க ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.

                        Question 74 of 89
74. Question
முழுமையான இந்திய இசுலாமிய அரசியல் மேம்பாட்டுக்கான வழியைத் திறக்க “முழுமையான இசுலாமிய அடையாளம் பயன்பட்டது”. என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: கெயில் மினால்டின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், முழுமையான இந்திய இசுலாமிய அரசியல் மேம்பாட்டுக்கான வழியைத் திறக்க “முழுமையான இசுலாமிய அடையாளம் பயன்பட்டது“. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் களம் காணவும், இந்திய தேசியம் என்ற தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைக்கும் காரணியாகவும் விளங்குவதால் இதற்கு ஆதரவு தெரிவிக்க காந்தியடிகளுக்கு ஊக்கம் கிடைத்தது.

                        Question 75 of 89
75. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பலப்படுத்த கிலாபத் இயக்கத்தை ஒரு வாய்ப்பாகக் காந்தியடிகள் கருதினார்.
 - ⅱ) ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
 - ⅲ) மலபாரைச்சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.
 
Correct
விளக்கம்: இந்து–முஸ்லிம் ஒற்றுமையைப் பலப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாகக் காந்தியடிகள் கருதினார். கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். மலபாரைச்சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.

                        Question 76 of 89
76. Question
ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானதற்கான காரணங்களைத் தேர்ந்தெடு
- ⅰ) இயந்திரங்களின் அறிமுகம்
 - ⅱ) உற்பத்திக்கான புதிய முறைகள்
 - ⅲ) சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம்
 
Correct
விளக்கம்: தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.

                        Question 77 of 89
77. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முதலில் மிகப்பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
 - ⅱ) பம்பாயின் சசிபாத பானர்ஜி, மற்றும் என்.எம். லோக்காண்டே, வங்காளத்தின் சோரப்ஜி ஷபூர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்
 
Correct
விளக்கம்: விளக்கம்: இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முதலில் மிகப்பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர். பம்பாயின் சோரப்ஜி ஷபூர்ஜி, மற்றும் என்.எம். லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.

                        Question 78 of 89
78. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) சுதேசி இயக்கத்தின் (1905) பின்னணியில் இந்தியத் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தன.
 - ⅱ) போர்க் காலப் பொருட்களைத் தயாரித்த இந்திய தொழிற்சாலைகளுக்குப் பிரிட்டிஷார் போரின்போது ஊக்கம் தந்தனர்.
 - ⅲ) போர் தொடர்ந்து நடந்ததை அடுத்து அவர்களுக்கு அதிகப் பொருட்கள் தேவைப்பட்டன.
 
Correct
விளக்கம்: சுதேசி இயக்கத்தின் (1905) பின்னணியில் இந்தியத் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தன. போர்க் காலப் பொருட்களைத் தயாரித்த இந்திய தொழிற்சாலைகளுக்குப் பிரிட்டிஷார் போரின்போது ஊக்கம் தந்தனர். போர் தொடர்ந்து நடந்ததை அடுத்து அவர்களுக்கு அதிகப் பொருட்கள் தேவைப்பட்டன. அதனால் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.

                        Question 79 of 89
79. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) போர் முடிவுக்கு வந்தவுடன் பணியாளர்களுக்கு வேலை கிடைத்ததோடு உற்பத்தியும் பெருகியது.
 - ⅱ) போருக்குப் பிந்தையச் சூழலில் விலைகளும் தாறுமாறாய் அதிகரித்தன.
 - ⅲ) உலகம் முழுவதும் பரவிய இன்ஃபுளுயன்சா (Influenza) தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தது.
 
Correct
விளக்கம்: போர் முடிவுக்கு வந்தவுடன் பணியாளர்கள் வேலையின்றித் தவித்ததோடு உற்பத்தியும் குறைந்தது. போருக்குப் பிந்தையச் சூழலில் விலைகளும் தாறுமாறாய் அதிகரித்தன. உலகம் முழுவதும் பரவிய இன்ஃபுளுயன்சா (Influenza) தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தது. இவ்வேளையில் தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்ததால் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

                        Question 80 of 89
80. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) 1919 ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
 - ⅱ) வகுப்புபேதம் பற்றிய விழிப்புணர்வும், அறிவார்ந்த சிந்தனையும் இந்தியத் தொழிலாளர்களின் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
 - ⅲ) ஐரோப்பாவில் போரில் பங்கேற்ற இந்தியப் படைவீரர்கள் அங்கிருந்த தொழிலாளர்களின் மேம்பட்ட நிலைமை பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தனர்.
 
Correct
விளக்கம்: 1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. வகுப்புபேதம் பற்றிய விழிப்புணர்வும், அறிவார்ந்த சிந்தனையும் இந்தியத் தொழிலாளர்களின் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. ஐரோப்பாவில் போரில் பங்கேற்ற இந்தியப் படைவீரர்கள் அங்கிருந்த தொழிலாளர்களின் மேம்பட்ட நிலைமை பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தனர்.

                        Question 81 of 89
81. Question
கீழ்க்கண்டவற்றுள் தொழிலாளர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவற்றைத் தேர்ந்தெடு.
- ⅰ) போரால் ஏற்பட்டப் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி
 - ⅱ) வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையேயான பெரிய இடைவெளி
 - ⅲ) பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது
 
Correct
விளக்கம்: போரால் ஏற்பட்டப் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையேயான பெரிய இடைவெளி, பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, ஆகியன தொழிலாளர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

                        Question 82 of 89
82. Question
1918இல் முதல் மதராஸ் தொழில் சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: இந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் மதராஸ் முக்கியப் பங்காற்றியது. 1918இல் முதன்முறையாக அமைக்கப்பட்டத்தொழிற்சங்கமாக பி.பி.வாடியா அவர்களால் மதராஸ் தொழில் சங்கம் நிறுவப்பட்டது. பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக் மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தத் தொழிற்சங்கம் முக்கியமாக ஏற்பட்டது.

                        Question 83 of 89
83. Question
பின்வருவனவற்றுள் மதராஸ் தொழிற்சங்கம் அமையக் காரணமாக இருந்தவை எவை?
- ⅰ) மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி
 - ⅱ) தொழிலாளர்களுக்கு ஐரோப்பிய உதவியாளர்களின் உதவி
 - ⅲ) போதுமான ஊதியம் வழங்காதது
 - ⅳ) பணியாளர்களுக்கான பணி நிலைமைகள்
 
Correct
விளக்கம்: விளக்கம்: அங்கு பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது. மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி, தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகியன இந்தத் தொழிற்சங்கம் அமையக் காரணமாக அமைந்தன. ஒட்டுமொத்தமாக பேரம் பேசுவதைப் பின்பற்றி வகுப்புப் போராட்டத்துக்குத் தொழிற்சங்கம் சார்ந்த கொள்கைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொழிற்சங்கம் முனைந்தது. இந்த அலை இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கும் பரவியது. இந்த காலகட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
Incorrect
 - 
                        Question 84 of 89
84. Question
பின்வருவானவற்றுள் தவறான இணையைத்தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: கல்கத்தா மற்றும் பம்பாயில் இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம், பஞ்சாப் பத்திரிகை ஊழியர்கள் சங்கம், G.I.P. ரயில்வே பணியாளர்கள் சங்கம் பம்பாய், M.S.M. ரயில்வே ஊழியர் சங்கம், அஞ்சல் பணியாளர்கள் சங்கம், பம்பாயிலும் கல்கத்தாவிலும் துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம் ஜாம் ஷெட்பூர் தொழிலாளர் சங்கம், ஜாரியாவில் இந்திய நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு ரயில்வேக்களின் ஊழியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

                        Question 85 of 89
85. Question
பின்வருவானவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ⅰ) தொழிலாளர் இயக்கத்தை அடக்கும் நோக்கில், பணமுதலாளிகளின் உதவியோடு அரசு தொழிலாளர்களைக் கீழ் நிலையில் வைத்திருக்க அனைத்து வழிகளிலும் முயன்றது.
 - ⅱ) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்வது, அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய தோடு தொழிற்சங்கங்களுக்கு அபராதங்களையும் விதித்தனர்.
 - ⅲ) தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருந்தனர்.
 
Correct
விளக்கம்: தொழிலாளர் இயக்கத்தை அடக்கும் நோக்கில், பணமுதலாளிகளின் உதவியோடு அரசு தொழிலாளர்களைக் கீழ் நிலையில் வைத்திருக்க அனைத்து வழிகளிலும் முயன்றது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்வது, அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய தோடு தொழிற்சங்கங்களுக்கு அபராதங்களையும் விதித்தனர். ஆனால் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருந்தனர்.

                        Question 86 of 89
86. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) பணியாளர்களின் நிலைமை கண்டு இரக்கம்கொண்ட தேசியவாதத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் அவர்களைத் தொழிற்சங்கங்கள் மூலமாகச் செயல்பட வைக்க தீவிரம் காட்டினர்.
 - ⅱ) பணியாளர் வகுப்பின் அரசியல் வாழ்க்கைக்கு இவர்களது ஈடுபாடும் ஒரு காரணமாக அமைந்தது.
 - ⅲ) பெரும்பான்மையான ஆலைகளின் உரிமையாளர்களாக இந்தியர்கள் இருந்ததால் அரசு அவர்களை எதிர்த்தது.
 
Correct
விளக்கம்: பணியாளர்களின் நிலைமை கண்டு இரக்கம்கொண்ட தேசியவாதத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் அவர்களைத் தொழிற்சங்கங்கள் மூலமாகச் செயல்பட வைக்க தீவிரம் காட்டினர். பணியாளர் வகுப்பின் அரசியல் வாழ்க்கைக்கு இவர்களது ஈடுபாடும் ஒரு காரணமாக அமைந்தது. பெரும்பான்மையான ஆலைகளின் உரிமையாளர்களாக ஐரோப்பியர்கள் இருந்ததால் அரசு அவர்களை ஆதரித்தது. அதன் காரணமாகவும் சுதந்திரப் போராட்டத்துக்கு வலு சேர்ந்தது.

                        Question 87 of 89
87. Question
அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) யாருடைய தலைமையில் நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: 1920 அக்டோபர் 30இல் 1, 40, 854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சி ஆர் தாஸ், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் பலர் இந்த அமைப்பை ஆதரித்தனர்.

                        Question 88 of 89
88. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) தொழிற்சங்கங்கள் மெதுவாக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டன.
 - ⅱ) ஏப்ரல் 1918 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் காந்தியடிகளின் கைதுக்குப் பிறகு உழைக்கும் வகுப்பினர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்
 
Correct
விளக்கம்: தொழிற்சங்கங்கள் மெதுவாக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டன. ஏப்ரல் 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் காந்தியடிகளின் கைதுக்குப் பிறகு அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் வகுப்பினர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

                        Question 89 of 89
89. Question
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
- ⅰ) அரசு அல்லது முதலாளிகளால் முதலில் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
 - ⅱ) தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் இயக்கத்தின் வலிமை காரணமாக அரசும் முதலாளிகளும் அவர்களை அங்கீகரிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன.
 - ⅲ) 1919-20இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1946-47இல் 1833 ஆக அதிகரித்தது.
 
Correct
விளக்கம்: அரசு அல்லது முதலாளிகளால் முதலில் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் இயக்கத்தின் வலிமை காரணமாக அரசும் முதலாளிகளும் அவர்களை அங்கீகரிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன. 1919-20இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1946-47இல் 1833 ஆக அதிகரித்தது.

Leaderboard: இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Online Test 12th History Lesson 3 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
You have reached 61 of 89 points, (68.54%)