Online TestTnpsc Exam
இந்திய அரசமைப்புச் சட்டம் – Online Test 6th Social Science Lesson 14 Questions in Tamil
இந்திய அரசமைப்புச் சட்டம் Online Test 6th Social Science Lesson 14 Questions in Tamil
Congratulations - you have completed இந்திய அரசமைப்புச் சட்டம் Online Test 6th Social Science Lesson 14 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1929 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது?
கொல்கத்தா | |
சென்னை | |
அலகாபாத் | |
லாகூர் |
Question 1 Explanation:
(குறிப்பு: இம்மாநாட்டைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டது.)
Question 2 |
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
1945 | |
1946 | |
1947 | |
1948 |
Question 2 Explanation:
(குறிப்பு: இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் 389 உறுப்பினர்களைக் கொண்டது.)
Question 3 |
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் | |
ராஜேந்திர பிரசாத் | |
சர்தார் வல்லபாய் பட்டேல் |
Question 3 Explanation:
(குறிப்பு: ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மெளலானா ஆஸாத், எஸ்.ராதாகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி பண்டிட், சரோஜினி நாயுடு உட்படப் பலர் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்.)
Question 4 |
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்?
12 | |
15 | |
18 | |
21 |
Question 5 |
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் ஆலோசகராக _________ என்பவர் நியமிக்கப்பட்டார்.
அம்பேத்கர் | |
எம்.என்.ராய் | |
பி.என்.ராவ் | |
ராஜேந்திர பிரசாத் |
Question 5 Explanation:
(குறிப்பு: எட்டு பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.)
Question 6 |
அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
1946 அக்டோபர் 5 | |
1947 டிசம்பர் 7 | |
1946 நவம்பர் 6 | |
1946 டிசம்பர் 9 |
Question 6 Explanation:
(குறிப்பு: 1946 டிசம்பர் 9 அன்றே அரசமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன.)
Question 7 |
இந்திய அரசமைப்புச் சட்டம் எத்தனை நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது?
40 | |
50 | |
60 | |
70 |
Question 7 Explanation:
(குறிப்பு: ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அன்றைய சோவியத் ரஷ்யா, ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட 60 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை வாசித்து, அவற்றில் இருந்த சிறப்பான பகுதிகளை முன்மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.)
Question 8 |
அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் எத்தனை திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டன?
200 | |
800 | |
1000 | |
2000 |
Question 8 Explanation:
(குறிப்பு: அண்ணல் அம்பேத்கர் 'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.)
Question 9 |
முழுமையான அரசமைப்புச் சட்டம் எப்போது தயாரானது?
1949 நவம்பர் 22 | |
1949 நவம்பர் 24 | |
1949 நவம்பர் 26 | |
1949 நவம்பர் 27 |
Question 9 Explanation:
(குறிப்பு: முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாராக 2 ஆண்டுகள், 11 மாதம், 17 நாட்கள் ஆனது.)
Question 10 |
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள்
1950 நவம்பர் 26 | |
1949 டிசம்பர் 7 | |
1949 நவம்பர் 26 | |
1950 ஜனவரி 26 |
Question 10 Explanation:
(குறிப்பு: 1949 நவம்பர் 26 அரசமைப்புச்சட்ட நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.)
Question 11 |
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை இந்தியாவை கீழ்க்கண்ட எவ்வாறு வரையறை செய்கிறது?
- இறையாண்மை
- மதச்சார்பின்மை
- சமத்துவம்
- மக்களாட்சி குடியரசு
அனைத்தும் | |
1, 3, 4 | |
1, 2, 4 | |
2, 3, 4 |
Question 11 Explanation:
(குறிப்பு: அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. முகப்புரை ஒவ்வோர் இந்தியருக்குமான நீதி, தன் செயலுரிமை, சமத்துவத்தை உறுதி செய்வதோடு சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.)
Question 12 |
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?
46 லட்சம் | |
54 லட்சம் | |
64 லட்சம் | |
72 லட்சம் |
Question 13 |
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
1949 நவம்பர் 26 | |
1950 நவம்பர் 26 | |
1949 ஜனவரி 26 | |
1950 ஜனவரி 26 |
Question 13 Explanation:
(குறிப்பு: ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
Question 14 |
இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?
நாட்டின் பாதுகாப்பு | |
நாட்டின் சட்ட ஒழுங்கு | |
நாட்டு மக்களின் கல்வி | |
நாட்டின் உச்சநிலை அதிகாரம் |
Question 14 Explanation:
(குறிப்பு: அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.)
Question 15 |
- கூற்று 1: இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது.
- கூற்று 2: சட்டமன்ற ஆட்சி முறை அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின் கூட்டுப்பொறுப்பாக இருக்கும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகள் அல்லாதது எது?
சுதந்திரமாகச் செயல்படும் உரிமை | |
சுதந்திர சமய உரிமை | |
சட்டத் தீர்வு பெறும் உரிமை | |
ஓட்டுரிமை |
Question 16 Explanation:
(குறிப்பு: ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. சம உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத் தீர்வு பெறும் உரிமை ஆகியவை இன்றியமையாத உரிமைகளாகும்.)
Question 17 |
- கூற்று 1: அரசுகள் சட்டமியற்றும்போதும், ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்களை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவை வழிகாட்டு நெறிமுறைகள் எனப்படும்.
- கூற்று 2: வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 17 Explanation:
(குறிப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்றாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.)
Question 18 |
__________ வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.
17 | |
18 | |
19 | |
21 |
Question 18 Explanation:
(குறிப்பு: ஓட்டளிக்கும் உரிமையை பெற அவர்கள் ஜாதி, மதம், பாலினம்,பொருளாதார அடுக்கு உட்பட எதுவும் தடையாக இருக்க முடியாது.)
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை கடமைகள் அல்லாதது எது?
சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பது | |
நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது | |
வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது. | |
தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 5-10 வயதுக்குள் தருவது. |
Question 19 Explanation:
(குறிப்பு: தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது, எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேணுவது, சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களைப் பின்பற்றி நடப்பது, நாட்டைப் பாதுகாப்பது, சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பது, காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையையும் வன விலங்குகளையும் பாதுகாப்பது, அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்ப்பது, குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது ஆகியவற்றை அரசியல் சட்டம் நமது கடமைகளாக அறிவித்தது.)
Question 20 |
நமது அரசியல் சட்டம் உருவான போது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?
7 | |
8 | |
10 | |
12 |
Question 20 Explanation:
(குறிப்பு: நமது அரசியல் சட்டம் உருவான போது 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன.)
Question 21 |
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள பகுதிகளின் எண்ணிக்கை __________.
18 | |
22 | |
25 | |
27 |
Question 21 Explanation:
(குறிப்பு: நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன.)
Question 22 |
கீழ்க்கண்டவர்களுள் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெறாதவர் யார்?
என்.கோபாலசாமி | |
கே.எம்.முன்ஷி | |
மோதிலால் நேரு | |
என்.மாதவ ராவ் |
Question 22 Explanation:
(குறிப்பு: அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பி.ஆர்.அம்பேத்கர், என்.கோபாலசாமி, கே.எம்.முன்ஷி, சையத் முஹம்மது சதுல்லா, பி.எல். மிட்டர், என்.மாதவராவ், டி.டி.கே, டி.பி.கேதான் ஆகிய சட்ட வல்லுனர்கள் இடம்பெற்றிருந்தனர்.)
Question 23 |
நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராக கருதப்படுபவர் யார்?
என். மாதவ ராவ் | |
டி.டி.கே | |
ராஜேந்திர பிரசாத் | |
அம்பேத்கர் |
Question 23 Explanation:
(குறிப்பு: அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்தபட்ச சட்டமாக விளங்குகிறது.)
Question 24 |
அரசமைப்புச் சட்டம் 16.9.2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது ?
99 | |
100 | |
101 | |
103 |
Question 25 |
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் நாடாளுமன்ற நூலகத்தில் __________ வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் | |
ஹீலியம் | |
ஆக்சிஜன் | |
கார்பன் மோனாக்சைடு |
Question 25 Explanation:
(குறிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் இந்தி, ஆங்கில மொழிகளில் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.)
Question 26 |
பொருத்துக.
- சுதந்திர தினம் i) நவம்பர் 26
- குடியரசு தினம் ii) ஏப்ரல் 1
- இந்திய அரசமைப்பு தினம் iii) ஆகஸ்டு 15
- அனைவருக்கும் கல்வி உரிமை iv) ஜனவரி 26
ii i iii iv | |
iii i iv ii | |
iii iv i ii | |
ii i iv iii |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 26 questions to complete.
sir question no 11. answer is wrong and explanation also wrong
கேள்வி எண் 11க்கு சரியான பதில் தான்…
புத்தகத்திலும் சரியாகதான் உள்ளது…
11. வரிசை மாறியுள்ளது
வரிசை கேட்கவில்லை….வரையறை தான் கேட்கப்பட்டுள்ளது…ஆகையால் பதில் சரியாகதான் உள்ளது
ok thank you
You scored 20 out of 26. Your performance has been rated as Not bad!