Online TestTnpsc Exam
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 12 Questions in Tamil
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 12 Questions in Tamil
Congratulations - you have completed இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 12 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது" என்றும் கூறியவர்
பெர்னியர் | |
டவேர்னியர் | |
எட்வர்ட் பெயின்ஸ் | |
மெகஸ்தனிஸ் |
Question 1 Explanation:
(குறிப்பு: விவசயமும் கைவினைப் பொருட்கள் கலந்த கலவையாகவே இந்திய பாரம்பரிய பொருளாதாரம் காணப்பட்டது.)
Question 2 |
- கூற்று 1: முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த பெர்னியர் என்பவர் இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்.
- கூற்று 2: பிரெஞ்சு நாட்டு பயணி டவேர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரை விரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 2 Explanation:
இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் வருவதற்கு முன்னர், இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில்__________ தொழில் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது.
Question 3 |
இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் வருவதற்கு முன்னர், இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில்__________ தொழில் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது.
சுரங்கம் | |
வணிகம் | |
போக்குவரத்து | |
கைவினைத்தொழில் |
Question 3 Explanation:
(குறிப்பு: நெசவு, மரவேலை, தந்த வேலை, மதிப்புமிக்க கற்களை வெட்டுதல், தோல், வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல், உலோக வேலை மற்றும் நகைகள் செய்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் இந்தியா மிகவும் புகழ்பெற்று விளங்கியது.)
Question 4 |
மணி தயாரிக்கப் பயன்படும் உலோகமான வெண்கலத்துக்கு ____________ பெயர்பெற்றது.
மகாராஷ்டிரா | |
செளராஷ்டிரா | |
குஜராத் | |
வங்காளம் |
Question 4 Explanation:
(குறிப்பு: நெசவாளர்கள், தையல்காரர்கள் மற்றும் சாய தொழிலாளர்கள் ஆகியோரைப் பற்றி பல அறிவார்ந்த படைப்புகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.)
Question 5 |
தகர தொழிற்சாலைக்கு ___________ புகழ்பெற்றது.
ஜெய்ப்பூர் | |
ஒடிசா | |
வங்காளம் | |
ஆந்திரா |
Question 5 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் சில சிறப்பு வாய்ந்த பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டன. அவைகள் பருத்தித் துணிகள், மஸ்லின் துணிகள், கம்பளி, பட்டு மற்றும் உலோகப்பொருட்கள் ஆகியனவாகும்.)
Question 6 |
- கூற்று 1: கி.மு 2000 ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கூற்று 2: 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 7 |
_________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
நெசவு | |
எஃகு | |
மின் சக்தி | |
உரங்கள் |
Question 7 Explanation:
(குறிப்பு: இந்திய நெசவாளர்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த திறன்கள் மற்றும் குறைந்த உற்பத்தி செலவு ஆகியவை ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்தன.)
Question 8 |
இந்திய நெசவாளர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக கீழ்க்கண்ட எவை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன?
- காட்டன் ஜின்
- பறக்கும் எறிநாடா
- நூற்கும் ஜென்னி
- நீராவி இயந்திரம்
அனைத்தும் | |
3, 4 | |
1, 2, 4 | |
1, 3, 4 |
Question 8 Explanation:
(குறிப்பு: ஐரோப்பியர்களை மேற்கண்ட கண்டுபிடிப்புகள் நெசவு உற்பத்தியை பெரிய அளவில் உருவாக்க உதவியது.)
Question 9 |
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்
அம்பேத்கர் | |
தாதாபாய் நௌரோஜி | |
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தியடிகள் |
Question 9 Explanation:
(குறிப்பு: இக்கொள்கை தாதாபாய் நெளரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.)
Question 10 |
கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட __________ கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
வாரிசு இழப்புக் கொள்கை | |
துணைப் படைத் திட்டம் | |
தடையில்லாக் கொள்கை | |
தலையிடாக் கொள்கை |
Question 10 Explanation:
(குறிப்பு: கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கமானது மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவிற்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும்.)
Question 11 |
- கூற்று 1: பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய பொருட்களுக்கு கடுமையான வரிவிதிக்கப்பட்டன.
- கூற்று 2: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது..
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 11 Explanation:
(குறிப்பு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்கு பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டன. இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர்.)
Question 12 |
___________ நூற்றாண்டின் முதல்பாதியில் மேற்கத்திய நாடுகள் தொழில்மயமாக்கலை அனுபவித்து வந்த அதே வேளையில் இந்திய தொழில் துறையானது வீழ்ச்சியின் காலத்தை சந்தித்தது.
17 | |
18 | |
19 | |
20 |
Question 12 Explanation:
(குறிப்பு: பழமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்கள் இங்கிலாந்தில் இயந்திரங்களால் முடிக்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.)
Question 13 |
பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன _________ என குறிப்பிடப்படுகிறது.
தொழில்மயமாதல் | |
தொழில்மயமழிதல் | |
இயந்திரமயமாதல் | |
கைவினைத்தொழில் அழிதல் |
Question 13 Explanation:
(குறிப்பு: ஒரு சக்தி வாய்ந்த தொழிற்துறை அமைப்பு, மிகப்பெரிய இயந்திரங்கள், பெரிய அளவிலான உற்பத்தி ஆகியவற்றை பின்புலமாகக் கொண்ட வெளிநாட்டு தொழிலகங்களுடன் இந்திய உள்நாட்டு தொழிலகங்கள் போட்டியிட முடியவில்லை.)
Question 14 |
___________ கட்டுமானத்திற்கு பின்பு இந்தியத் தொழிற்துறை மேலும் சிக்கலைச் சந்தித்தது.
ராயல் கால்வாய் | |
பனாமா கால்வாய் | |
லேஹி கால்வாய் | |
சூயஸ் கால்வாய் |
Question 14 Explanation:
(குறிப்பு: சூயஸ் கால்வாய் போக்குவரத்து செலவினை குறைத்ததுடன் இந்தியாவில் பிரிட்டிஷ் பொருட்களை மலிவானதாக மாற்றியது.)
Question 15 |
மஸ்லின் ஆடைகளுக்கு _________ புகழ்பெற்றது.
வங்காளம் | |
குஜராத் | |
டாக்கா | |
உத்ரகண்ட் |
Question 15 Explanation:
(குறிப்பு: பருத்தி மற்றும் பட்டு ஆடைகளின் சிறந்த தரத்திற்கு இந்தியா பிரபலமானது.)
Question 16 |
__________ நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்களின் செயல்பாடு தொடங்கியது.
17 | |
18 | |
19 | |
20 |
Question 16 Explanation:
(குறிப்பு: நவீனத் தொழிற்துறையின் தொடக்கமானது முக்கியமாக சணல், பருத்தி மற்றும் எஃகு தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.)
Question 17 |
- கூற்று 1: இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு, சர்க்கரை, சிமெண்ட், கண்ணாடி மற்றும் மற்ற நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்களின் வளர்ச்சிக்கு இரண்டு உலகப்போர்களும் ஒரு உத்வேகத்தை அளித்தன.
- கூற்று 2: ரயில்வே மற்றும் சாலைகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டவுடன் தொழில்மயமாக்கல் தொடங்கியது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 17 Explanation:
(குறிப்பு: தொழில்மயமாக்கலின் போது பெரும்பாலான ஆலைகள் பணக்கார இந்திய வணிகர்களால் அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் இந்த வளர்ச்சி பருத்தி மற்றும் சணல் ஆலைகள் அமைப்பதில் மட்டுமே இருந்தது.)
Question 18 |
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் ______________ ஆண்டு நிறுவப்பட்டது.
1832 | |
1835 | |
1837 | |
1839 |
Question 18 Explanation:
(குறிப்பு: தேயிலைத் தோட்டம் கிழக்கிந்திய பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போலவே காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளின் மையமாக மாறியது.)
Question 19 |
__________ ஆண்டு பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை நிறுவப்பட்டது.
1838 | |
1847 | |
1854 | |
1858 |
Question 19 Explanation:
(குறிப்பு: இச்சமயத்தில் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட வடிவிலான நவீன தொழிற்துறைப் பிரிவு தொடங்கப்பட்டது.)
Question 20 |
__________ ஆண்டு முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது.
1858 | |
1865 | |
1870 | |
1875 |
Question 20 Explanation:
(குறிப்பு: பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் பருத்தி ஆலைகள் ஏற்படுத்தப்பட்டன.)
Question 21 |
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் ____________ ல் முக்கியத்துவம் பெற்றன?
அகமதாபாத் | |
கான்பூர் | |
பம்பாய் | |
அலகாபாத் |
Question 22 |
இந்தியாவில் _________ ஆண்டு முதன்முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது.
1855 | |
1867 | |
1874 | |
1888 |
Question 22 Explanation:
(குறிப்பு: 1874 ஆம் ஆண்டு குல்டி என்ற இடத்தில் நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது.)
Question 23 |
கீழ்க்கண்டவற்றுள் கனரக தொழில்களில் அடங்கும் தொழில்கள் எவை?
- இரும்பு தொழில்
- சுரங்கத் தொழில்
- எஃகு தொழில்
- கைவினைத் தொழில்
அனைத்தும் | |
1, 2 | |
1, 3 | |
2, 4 |
Question 23 Explanation:
(குறிப்பு: 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரும்பு மற்றும் எஃகு தொழில்கள் இந்திய மண்ணில் வேரூன்ற தொடங்கின.)
Question 24 |
__________ ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது.
1887 | |
1892 | |
1907 | |
1909 |
Question 24 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை ஜாம்ஷெட்ஜி டாடா என்பவரையே சாரும்.)
Question 25 |
TISCO நிறுவனம் தேனிரும்பு, உலோக வார்ப்பு கட்டிகளை முறையே _________ ஆண்டு உற்பத்தி செய்தது.
1908, 1909 | |
1909, 1910 | |
1911, 1912 | |
1912, 1913 |
Question 26 |
1914 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த இரயில்வேயின் நீளம்
2,573 கி.மீ | |
25,573 கி.மீ | |
37,773 கி.மீ | |
55,773 கி.மீ |
Question 26 Explanation:
(குறிப்பு: 1861 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த இரயில்வேயின் நீளம் 2,573 கிலோமீட்டர். )
Question 27 |
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம்__________.
ஜெர்மனி | |
இங்கிலாந்து | |
சீனா | |
ரஷ்யா |
Question 28 |
சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை ________ கிலோ மீட்டர் தூரமாக குறைத்தது.
3,574 | |
4,830 | |
5,640 | |
6,740 |
Question 28 Explanation:
(குறிப்பு: இந்த குறைக்கப்பட்ட தூரம் இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு மேலும் உதவியது.)
Question 29 |
சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து ___________ ஆகவும் சணல் ஆலைகள் 36 லிருந்து _______ ஆகவும் அதிகரித்தன.
206, 40 | |
278, 52 | |
273, 64 | |
283,64 |
Question 29 Explanation:
(குறிப்பு: ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அதிகாரத்தை பலப்படுத்தி அதன் மூலம் ஏராளமான வெளிநாட்டு தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து ஈர்த்தனர்.)
Question 30 |
- கூற்று 1: இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம் ஆகும்.
- கூற்று 2: இது அரசாங்கத்தின் தொழிற்துறை வழிநடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 30 Explanation:
(குறிப்பு: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஒரு அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழிநடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும்.)
Question 31 |
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு _________ ஆண்டு நிறுவப்பட்டது.
1972 | |
1978 | |
1985 | |
1989 |
Question 31 Explanation:
(குறிப்பு: தனியார் மற்றும் பொதுத்துறைகளை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்தும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்தும் 9000 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.)
Question 32 |
__________ ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழில் துறையில் நேரடியாக பங்களிப்பினை வெளிப்படுத்துகிறது.
1947 | |
1948 | |
1949 | |
1950 |
Question 32 Explanation:
(குறிப்பு: இந்த தீர்மானம் தொழிற்துறை வளர்ச்சியில் ஒரு தொழில் முனைவோராகவும் அதிகார, மையமாகவும் அரசின் பங்கினை வரையறுத்தது.)
Question 33 |
இந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
அரச ஆதரவின் இழப்பு | |
இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி | |
இந்தியாவின் தொழிற்துறை கொள்கை | |
பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை |
Question 34 |
_________ ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1948 | |
1952 | |
1956 | |
1958 |
Question 35 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (தொழிற்துறை கொள்கை-1956 ன் படி தொழிற்துறையின் மூன்று வகைகள்)
- அட்டவணை 1: இவ்வகையான தொழிற்துறைகளை அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும். அவற்றுள் சில அணுசக்தி, மின்னணு, இரும்பு மற்றும் எஃகு ஆகியவை அடங்கும்.
- அட்டவணை 2: இவைகள் சாலைகள் மற்றும் கடல் போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகிழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்டவகையான சுரங்கங்கள் ஆகியவை அடங்கும்.
- அட்டவணை 3: இந்த வகையின் கீழ் மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியவை அடங்கும்.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1, 2 சரி |
Question 36 |
மூலப்பொருள்களின் அடிப்படையில் தொழில்கள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 36 Explanation:
(குறிப்பு: 1. வேளாண் அடிப்படையிலானவை, 2. கனிம அடிப்படையிலானவை)
Question 37 |
தொழிலகங்கள் அவைகளின் பங்களிப்பின்படி எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
- வேளாண் அடிப்படை தொழில்கள்
- கனிம அடிப்படை தொழில்கள்
- அடிப்படை தொழில்கள்
- முக்கியத் தொழில்கள்
- கூட்டுறவுத் துறை தொழில்கள்
1, 2 | |
3, 4 | |
1, 2, 3 | |
1, 2, 5 |
Question 38 |
தொழில் உரிமத்தின் அடிப்படையில் தொழிலகங்கள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 38 Explanation:
(குறிப்பு: பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத்துறை என தொழிலகங்கள் தொழில் உரிமத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.)
Question 39 |
தொழில்துறை வளர்ச்சி (1950 - 1965) குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இக்காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன.
- தொழில்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது.
- தொழில்நுட்ப திறன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 39 Explanation:
(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் செயல்படுத்தப்பட்ட முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குவதே ஆகும்.)
Question 40 |
___________ துறை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.
மூலதனப் பொருட்கள் துறை | |
நுகர்வோர் பொருட்கள் துறை | |
தொழில்துறை | |
போக்குவரத்து துறை |
Question 40 Explanation:
(குறிப்பு: முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்கள் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதால், நுகர்வோர் பொருட்களின் துறை புறக்கணிக்கப்பட்டது. இந்த காலகட்டம் பின்னடைவு காலமாக கருதப்படுகிறது.)
Question 41 |
_________ காலகட்டம் தொழிற்துறையின் மீட்பு காலமாக கருதப்படுகிறது.
1940 | |
1950 | |
1960 | |
1980 |
Question 41 Explanation:
(குறிப்பு: இந்த காலகட்டத்தில் தொழிற்துறை மிகவும் வளமான வளர்ச்சியைக் கண்டது.)
Question 42 |
- கூற்று 1: 1990ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
- கூற்று 2: பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 42 Explanation:
(குறிப்பு: 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.)
Question 43 |
கீழ்க்கண்ட எந்த நடவடிக்கைகள் இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது?
- தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல்
- விலைக் கட்டுப்பாடுகளை நீக்குதல்
- சிறுதொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல்
- ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல்
அனைத்தும் | |
1, 3 | |
2, 4 | |
1, 3, 4 |
Question 43 Explanation:
(குறிப்பு: 1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.)
Question 44 |
மின்சார உற்பத்தியில், ஆசிய நாடுகள் அளவில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாக உருவாகியுள்ளது?
2 | |
3 | |
4 | |
5 |
Question 44 Explanation:
(குறிப்பு: இந்தியாவிற்கு அதன் வளர்ச்சி இயந்திரத்தை இயக்க சக்தி தேவைப்படுவதால் ஆற்றல் கிடைப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை தூண்டிவிட்டுள்ளது.)
Question 45 |
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
கல்லிலிருருந்து சிலையை உருவாக்குதல் | |
கண்ணாடி வளையல் உருவாக்குதல் | |
பட்டுசேலை நெய்தல் | |
இரும்பை உருக்குதல் |
Question 46 |
இந்தியாவில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் | |
எழுத்தறிவின்மையைக் குறைத்தல் | |
வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல் | |
பெண்களுக்கு அதிகாரமளித்தல் |
Question 47 |
பொருத்துக.
- டவேர்னியர் i) செல்வச் சுரண்டல் கோட்பாடு
- டாக்கா ii) காகித ஆலை
- தாதாபாய் நௌரோஜி iii) கைவினைஞர்
- பாலிகன்ஜ் iv) மஸ்லின் துணி
- ஸ்மித் v) பிரெஞ்சு பயணி
iii iv ii i ii | |
v iv i ii iii | |
v iii ii i iv | |
ii iii i iv v |
Question 48 |
- கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
- காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம் | |
கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை | |
கூற்றும் காரணமும் சரி | |
கூற்றும் காரணமும் தவறானவை |
Question 49 |
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாத ஒன்று எது?
பெர்னியர் - ஷாஜகான் | |
பருத்தி ஆலை – அகமதாபாத் | |
TISCO – ஜாம்ஷெட்பூர் | |
பொருளாதார தாராளமயமாக்கல் – 1980 |
Question 49 Explanation:
(குறிப்பு: பொருளாதார தாராளமயமாக்கல் – 1991)
Question 50 |
_________ ஆண்டு கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹூக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது
1854 | |
1855 | |
1857 | |
1858 |
Question 50 Explanation:
(குறிப்பு: பருத்தி ஆலைகள் இந்திய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன, மற்றும் சணல் ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
You scored 43 out of 50.