Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

இந்தியாவில் கல்வி வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 11 Questions in Tamil

இந்தியாவில் கல்வி வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 11 Questions in Tamil

Congratulations - you have completed இந்தியாவில் கல்வி வளர்ச்சி Online Test 8th Social Science Lesson 11 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வேதம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு __________ என்று பொருள்.
A
கல்வி
B
ஒழுக்கம்
C
பணிவு
D
அறிவு
Question 1 Explanation: 
(குறிப்பு: வேதம் என்ற சொல் "வித்" என்ற சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் 'அறிதல்’ என்பதாகும்.)
Question 2
தட்சசீலம், யுனெஸ்கோவால் _________ ஆண்டு உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.
A
1970
B
1978
C
1980
D
1982
Question 2 Explanation: 
(குறிப்பு: பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.)
Question 3
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை __________ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.
A
வில்லியம் ஹாக்கின்ஸ்
B
அலெக்சாண்டர் கன்னிங்காம்
C
சீகன்பால்கு
D
பிரான்சிஸ் சேவியர்
Question 3 Explanation: 
(குறிப்பு: சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும்.)
Question 4
  • கூற்று 1: ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக கூறுகின்றன.
  • கூற்று 2: மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 5
தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் __________ தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன.
A
கோயில்கள்
B
விகாரங்கள்
C
அரசர்கள்
D
வெளிநாட்டு அறிஞர்கள்
Question 5 Explanation: 
(குறிப்பு: பண்டைய இந்தியாவில் முழுமையான கற்றல், ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்தல், ஒருவரின் உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல் போன்றவையே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது.)
Question 6
பனாரஸ் மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் ___________ தொடர்புடன் மேம்பாடு அடைந்தன.
A
கோயில்கள்
B
விகாரங்கள்
C
அரசர்கள்
D
வெளிநாட்டு அறிஞர்கள்
Question 6 Explanation: 
(குறிப்பு: பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள இடங்கள் சமூக வாழ்க்கையின் மையங்களாக மாறின.)
Question 7
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது அமைந்துள்ள இடம்
A
ஜார்கண்ட்-ராஜகிருகம்
B
உத்திரபிரதேசம்-ராஜகிருகம்
C
மத்திய பிரதேசம்-ராஜகிருகம்
D
பீகார்-ராஜகிருகம்
Question 7 Explanation: 
(குறிப்பு: நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.)
Question 8
இந்திய துணைக் கண்டத்தில் ___________ கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது.
A
பாரசீக
B
ரோமானிய
C
இஸ்லாமிய
D
சீன
Question 8 Explanation: 
(குறிப்பு: முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில் அறிவின் ஒளியூட்டமும், விரிவாக்கமும் கல்வியின் நோக்கமாக இருந்தன.)
Question 9
____________ நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவினர்.
A
9
B
10
C
11
D
12
Question 9 Explanation: 
(குறிப்பு: இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பு இருந்ததால் இறையியல், சமயம், தத்துவம், நுண்கலை, ஓவியம், கட்டடக்கலை, கணிதம், மருத்துவம் மற்றும் வானியல் ஆகிய துறைகள் ஒரு புதிய கோணத்தில் மேம்பாடு அடைந்தன.)
Question 10
  • கூற்று 1: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற கல்வியை ஊக்குவித்தனர்.
  • கூற்று 2: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிறுவிய மக்தப்புகள் மூலம் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வாழிபாட்டு முறைகளை கற்றனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 10 Explanation: 
(குறிப்பு: மக்தப்புகள் என்பவை தொடக்கப் பள்ளிகள் ஆகும்.)
Question 11
  • கூற்று: முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேம்பட்ட மொழித்திறன்களை கற்பிக்க மதரசாக்களை நிறுவினர்.
  • நோக்கம்: மதரசாக்களின் நோக்கம் தகுதியான அறிஞர்களுக்கு குடிமைப்பணிக்கான பயிற்சி அளிப்பதும், கல்வி அளிப்பதுமே ஆகும்.
A
கூற்று சரி, நோக்கம் தவறு
B
கூற்று தவறு, நோக்கம் சரி
C
கூற்று, நோக்கம் இரண்டும் தவறு
D
கூற்று, நோக்கம் இரண்டும் சரி
Question 11 Explanation: 
(குறிப்பு: மதரசாக்கள் என்பவை இடைநிலைப்பள்ளிகள் ஆகும்.)
Question 12
டெல்லியில் மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் ___________.
A
பால்பன்
B
இல்துத்மிஷ்
C
அக்பர்
D
ஒளரங்கசீப்
Question 12 Explanation: 
(குறிப்பு: இடைக்கால இந்தியாவில் கல்வி முறையானது உலோமாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.)
Question 13
இந்தியாவின் இடைக்காலம் மற்றும் நவீன கால முற்பகுதியில் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வி முறைகளை கொண்டுவந்தவர்கள்
  1. அரபு மக்கள்
  2. ஐரோப்பிய மக்கள்
  3. மத்திய ஆசிய மக்கள்
  4. போர்ச்சுக்கீசிய மக்கள்
A
1, 2
B
1, 3
C
2, 4
D
1, 4
Question 13 Explanation: 
(குறிப்பு: இடைக்காலத்தில் கல்வியானது சமயம் சார்ந்த பயிற்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. இருப்பினும், மருத்துவம், அரபு இலக்கியம், இலக்கணம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு வகையான பாடங்களும் கற்பிக்கப்பட்டன.)
Question 14
ஜெய்பூரைச் சேர்ந்த ___________ என்பவர் அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார்.
A
ராஜா மான்சிங்
B
ராஜா ஜெய்சிங்
C
அர்ஜுன் சிங்
D
இல்துத்மிஷ்
Question 14 Explanation: 
(குறிப்பு: இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி பரவலாகக் காணப்பட்டது.)
Question 15
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. கியாசுதீன் மதரசா - ஷாஜகானாபாத்
  2. மெளலானா சத்ருதீன் மதரசா – டெல்லி
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
இரண்டும் தவறு
D
இரண்டும் சரி
Question 15 Explanation: 
(குறிப்பு: கியாசுதீன் மதரசா – டெல்லி மெளலானா சத்ருதீன் மதரசா - ஷாஜகானாபாத்)
Question 16
ஸ்ரீராமானுஜர் கல்விக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கிய இடம்
A
கியாசுதீன் மதரசா
B
மெளலானா சத்ருதீன் மதரசா
C
அஹோபில மடம்
D
அய்ஹோலே மடம்
Question 16 Explanation: 
(குறிப்பு: அஹோபில மடம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.)
Question 17
  • கூற்று 1: சமணப்பள்ளிகளும், பெளத்த விகாரங்களும் நூலகத்தினை பெற்றிருக்கவில்லை.
  • கூற்று 2: இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 17 Explanation: 
(குறிப்பு: சமணப்பள்ளிகளும், பெளத்த விகாரங்களும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை பெற்றிருந்தன.)
Question 18
இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்
A
போர்ச்சுகீசியர்கள்
B
பிரெஞ்சுக்காரர்கள்
C
டச்சுக்காரர்கள்
D
ஆங்கிலேயர்கள்
Question 18 Explanation: 
(குறிப்பு: உள்ளூர் மக்களுக்கேற்றவாறு கல்வி வழங்கினால் தான் நிரிவாகத்தையும், சமயக் கருத்துக்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதி ஐரோப்பியர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர்.)
Question 19
இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் __________ல் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.
A
கோவா
B
கொச்சி
C
தரங்கம்பாடி
D
பாண்டிச்சேரி
Question 20
____________ ஆம் ஆண்டு கோவாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியில், கிறித்துவம், தர்க்கம், இலக்கணம் மற்றும் இசை ஆகியன கற்பிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன.
A
1565
B
1572
C
1575
D
1578
Question 20 Explanation: 
(குறிப்பு: ஐரோப்பிய குடியேற்றத்தை தொடர்ந்து சமயப்பரப்பு குழுவினரின் வருகையால் இந்தியாவில் நவீன கல்விமுறை தொடங்கியது.)
Question 21
கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பு
A
இராணி எலிசபெத் அமைப்பு
B
இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பு
C
சர் ஜான் அமைப்பு
D
ஏஞ்சலின் அமைப்பு
Question 21 Explanation: 
(குறிப்பு: ஜான் கிர்னாண்டர் என்பவர் ஆர்வமுள்ள முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பானது ஜான் கிர்னாண்டருடையது ஆகும்.)
Question 22
டாக்டர் C.S.ஜான் என்பவர் __________ல் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
A
கல்கத்தா
B
பீகார்
C
தரங்கம்பாடி
D
மயிலாப்பூர்
Question 22 Explanation: 
(குறிப்பு: 1812 ஆம் ஆண்டு டாக்டர் C.S ஜான் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.)
Question 23
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்களும் இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவக்கினர்
  2. அங்கு இந்திய ஆசிரியர்களைக் கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.
  3. மேல்நிலைப் பள்ளிகள் துவங்கப்பட்டு, அங்கு பிரெஞ்சு மொழிகள் கற்பிக்கப்பட்டன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 24
சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் ________இல் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியைத் தொடங்கினர்.
A
கொச்சி
B
கோவா
C
தரங்கம்பாடி
D
திருவிதாங்கூர்
Question 24 Explanation: 
(குறிப்பு: சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் ஜெர்மன் பிஷப்புகளாவர்.)
Question 25
கல்கத்தாவின் முதல் பேராயரான _____________ என்பவர் மிஷினரி கல்லூரியை கல்கத்தாவில் தொடங்கினார்.
A
ஜான் கிர்னாண்டர்
B
C.S.ஜான்
C
டாக்டர் மிடில்டன்
D
மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்
Question 25 Explanation: 
(குறிப்பு: இக்கல்லூரி பின்னாளில் பிஷப் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.)
Question 26
கீழ்க்கண்டவர்களுள் வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் யார்?
A
ஜான் கிர்னாண்டர்
B
C.S.ஜான்
C
டாக்டர் மிடில்டன்
D
மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்
Question 27
ஆங்கிலக் கல்வியை வழங்கும் எல்பின்ஸ்டன் கல்லூரி எங்கு நிறுவப்பட்டது?
A
கோவா
B
டெல்லி
C
பம்பாய்
D
கல்கத்தா
Question 27 Explanation: 
(குறிப்பு: 1827 இல் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் ஓய்வு பெற்ற பின் அவரது ஆர்வலர்கள் நிதி சேகரித்து இக்கல்லூரியை பம்பாயில் நிறுவினர்.)
Question 28
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை _________ கட்டங்களாகப் பிரிக்கலாம்.
A
2
B
3
C
4
D
5
Question 28 Explanation: 
(குறிப்பு: ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரை 1813 முதல் 1853 வரை 1854 முதல் 1920 வரை 1921 முதல் 1947 வரை)
Question 29
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ________ ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக்குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
A
1793
B
1803
C
1813
D
1823
Question 29 Explanation: 
(குறிப்பு: சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.)
Question 30
1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் ___________ தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.
A
50,000 ரூபாய்
B
1,00,000 ரூபாய்
C
1,50,000 ரூபாய்
D
2,00,000 ரூபாய்
Question 30 Explanation: 
(குறிப்பு: 1813 இல் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது.)
Question 31
கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலம்
A
ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரை
B
1813 முதல் 1853 வரை
C
1854 முதல் 1920 வரை
D
1921 முதல் 1947 வரை
Question 32
1813 முதல் 1853 காலக்கட்டத்தில்,
  1. முதலாவது பிரிவினரான கீழ்த்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினர்.
  2. இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாடுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர்.
  3. மூன்றாவது பிரிவினர் பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
2, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 32 Explanation: 
(குறிப்பு: ஆங்கில சார்பு கோட்பாடுவாதிகள் கீழ்திசைவாதிகளின் கொள்கைகளை எதிர்த்தனர். இக்கருத்து வேறுபாடுகள் 1835 ஆம் ஆண்டின் மெக்காலேவின் குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது.)
Question 33
சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை _________ ஆண்டு வெளியிடப்பட்டது.
A
1835
B
1845
C
1852
D
1854
Question 33 Explanation: 
(குறிப்பு: ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம்.)
Question 34
தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த ஹண்டர் கல்விக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1873
B
1878
C
1882
D
1884
Question 35
இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் "மகாசாசனம்" என்று அழைக்கப்படுவது
A
ஹண்டர் கல்விக்குழு அறிக்கை
B
சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை
C
விக்டோரியா மகாராணியின் அறிக்கை
D
சார்ஜண்ட் அறிக்கை
Question 35 Explanation: 
(குறிப்பு: அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும்.)
Question 36
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. ஆங்கில ஆட்சியின் இந்திய கல்வி முறையில் நான்காவது காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும்.
  2. 1935 ஆம் ஆண்டுச் சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
  3. 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 36 Explanation: 
(குறிப்பு: இந்திய கல்வி முறையின் நான்காவது காலக்கட்டம்1921 முதல் 1947 வரையிலான காலமாகும்.)
Question 37
__________ சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.
A
1773 பட்டயச் சட்டம்
B
1813 பட்டயச் சட்டம்
C
1919ஆம் ஆண்டுச் சட்டம்
D
1935 இந்திய அரசுச் சட்டம்
Question 37 Explanation: 
(குறிப்பு: இச்சட்டம் மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.)
Question 38
இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை ________ ஆண்டு தயாரிக்கப்பட்டது.
A
1935
B
1937
C
1944
D
1946
Question 38 Explanation: 
(குறிப்பு: இக்கல்வி கொள்கை சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.)
Question 39
அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கிய ஆண்டு
A
1935
B
1936
C
1937
D
1938
Question 39 Explanation: 
(குறிப்பு: காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணியாக அகிம்சை கொள்கை இருந்தது.)
Question 40
பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க _________ ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது.
A
1945
B
1946
C
1947
D
1948
Question 40 Explanation: 
(குறிப்பு: இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர் கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது.)
Question 41
  • கூற்று 1: 1950-51 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக்குழு, இடைநிலை கல்வி துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.
  • கூற்று 2: இக்கல்விக்குழு கல்வியில் புதிய அமைப்பு முறைகளையும், பாடப்புத்தகங்களின் தரம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களையும் பரிந்துரைத்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 41 Explanation: 
(குறிப்பு: இடைநிலைக் கல்விக்குழு 1952-53 ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.)
Question 42
இந்திய அரசு ________ ஆண்டு  டாக்டர் D.S. கோத்தாரி தலைமையில் கல்விக்குழுவை அமைத்தது.
A
1952
B
1958
C
1964
D
1969
Question 42 Explanation: 
(குறிப்பு: இக்கல்விக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.)
Question 43
சுதந்திரத்திற்கு பிறகு __________ ஆண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.
A
1948
B
1952
C
1962
D
1968
Question 43 Explanation: 
(குறிப்பு: இது தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.)
Question 44
1986ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.
  2. இக் கல்விக் கொள்கை நாட்டில் விளிம்புநிலை மக்களுக்கான சமவாய்ப்புகள், உதவித்தொகைகள், வயதுவந்தோர் கல்வி, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள்  மூலம் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது.
  3. புதியக் கல்விக் கொள்கை தொடக்கக்கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்ததுடன், தொடக்கப் பள்ளிகளை தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 45
1986 ஆம் ஆண்டு புதியக் கல்விக் கொள்கை __________ ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
A
1988
B
1989
C
1991
D
1992
Question 45 Explanation: 
(குறிப்பு: இது தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வியை வலியுறுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.)
Question 46
கல்வித் துறை __________ ஆண்டு வரை மாநிலப் பட்டியலில் இருந்து.
A
1976 அக்டோபர்
B
1976 டிசம்பர்
C
1978 அக்டோபர்
D
1978 டிசம்பர்
Question 46 Explanation: 
(குறிப்பு: தற்போது கல்வித் துறை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.)
Question 47
அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியை பெறுவதற்கு வகை செய்யும் “அனைவருக்கும் கல்வி இயக்கம்" திட்டம்_________ ஆண்டு தொடங்கப்பட்டது.
A
1992-1993
B
1996-1997
C
2000-2001
D
2006-2007
Question 47 Explanation: 
(குறிப்பு: குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE-2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது.)
Question 48
கல்வி உரிமைச் சட்டமானது _________ வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழிசெய்கிறது.
A
5 முதல் 12
B
6 முதல் 14
C
6 முதல் 15
D
8 முதல் 16
Question 48 Explanation: 
(குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது.)
Question 49
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) _________ ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
A
8
B
9
C
10
D
11
Question 49 Explanation: 
(குறிப்பு: இது இடைநிலைக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும், பொதுவான அணுகுமுறைக்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டமாகும்.)
Question 50
  • கூற்று 1: 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு தரமான, எளிதில் கிடைக்கக்கூடிய, எளிய அணுகுமுறையுடன், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக் கல்வியை அளிப்பதே RMSA வின் நோக்கமாகும்.
  • கூற்று 2: RMSA திட்டத்தின் மூலம் அறிவியல் ஆய்வகம், நூலகங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி, கணினி வழிக் கல்வி, பள்ளி இணைச் செயல்பாடுகள் மற்றும் கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இந்திய அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 50 Explanation: 
(குறிப்பு: இடைநிலைக் கல்விக்குழு 1952-53 ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.)
Question 51
_________ ஆண்டு நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வியினை முன்பருவக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை எவ்வித பாகுபாடுமின்றி முழுமையாக வழங்குவதற்கு முன்மொழிந்தது.
A
2008-2009
B
2011-2012
C
2014-2015
D
2018-2019
Question 51 Explanation: 
(குறிப்பு: சமக்ர சிக் ஷாவானது சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை அளவிடுதல் ஆகிய பள்ளியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்தக் குறிக்கோளை அடைய ஏற்படுத்தப்பட்டுள்ளது.)
Question 52
2017ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரைவதற்கான ஒரு குழு ____________அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது.
A
உள்துறை அமைச்சகம்
B
நிதி அமைச்சகம்
C
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
D
வெளியுறவுத்துறை அமைச்சகம்
Question 52 Explanation: 
(குறிப்பு: இக்குழு தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.)
Question 53
பண்டைய இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் பள்ளி என்றும், ஆசிரியர்கள் ____________ என்றும் அழைக்கப்பட்டனர்.
A
ஆசான்
B
குரு
C
கணக்காயர்
D
புலவர்
Question 53 Explanation: 
(குறிப்பு: திருக்குறள் கல்வியின் தேவையை எடுத்துக் கூறியதுடன், எழுத்தறிவின்மையின் அபாயத்தையும் எச்சரித்தது.)
Question 54
பல்லவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் __________ என்று அழைக்கப்பட்டன.
A
மடாலயங்கள்
B
விகாரங்கள்
C
கடிகை
D
பல்கலைக்கழகம்
Question 54 Explanation: 
(குறிப்பு: பல்லவர் காலத்தில் கல்வித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. கல்வி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி பல்லவ மன்னர்கள் ஆதரித்தனர்.)
Question 55
_________ன் குறிப்புகள், காஞ்சி நகரமானது கற்றலின் மையமாக விளங்கியதையும், காஞ்சியில் இருந்த புத்த மையம் பற்றியும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
A
காளிதாசர்
B
வாஸ்கோடாகாமா
C
யுவான் – சுவாங்
D
மெகஸ்தனிஸ்
Question 55 Explanation: 
(குறிப்பு: சைவ வைணவ மடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு உறைவிட வசதியை வழங்கின.)
Question 56
__________ன் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும் புதுமைகளைப் புகுத்திய காலம் ஆகும்.
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 56 Explanation: 
(குறிப்பு: தமிழ்வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.)
Question 57
புகழ்பெற்ற வேதக் கல்லூரிகள் கீழ்க்கண்ட எந்த இடங்களில் காணப்பட்டன?
  1. சதுர்வேதி மங்கலம்
  2. திருவிடைக்காளை
  3. திருபுவனை
  4. திருவாடுதுறை
A
அனைத்தும்
B
1, 2
C
1, 3
D
1, 4
Question 57 Explanation: 
(குறிப்பு: சதுர்வேதி மங்கலம்-எண்ணாயிரம் ( முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தது), திருபுவனை (பாண்டிச்சேரியில் உள்ளது).)
Question 58
வீரராஜேந்திர சோழனின் __________ கல்வெட்டு மருத்துவப் பள்ளி பற்றி குறிப்பிடுகிறது.
A
சதுர்வேதி மங்கலம்
B
திருவிடைக்காளை
C
திருவாடுதுறை
D
திருபுவனை
Question 58 Explanation: 
(குறிப்பு: திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.)
Question 59
  • கூற்று 1: பாண்டிய மன்னர்கள் சமஸ்கிருதத்தை ஆதரித்ததை அவர்களின் செப்புத் தகடுகளின் மூலம் அறியலாம்.
  • கூற்று 2: பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் கடிகை சாலை மற்றும் வித்யா சாதனம் என அழைக்கப்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 59 Explanation: 
(குறிப்பு: பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது.)
Question 60
பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ___________ என்று அழைக்கப்பட்டன.
A
தரிசு
B
சாலபோகம்
C
உபயம்
D
காணிநிலம்
Question 60 Explanation: 
(குறிப்பு: கன்னியாகுமரியிலுள்ள வல்லப பெருஞ்சாலை சாலபோகத்திற்கு உதாரணமாகும்.)
Question 61
___________ன் ஆட்சியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.
A
சோழர்கள்
B
பல்லவர்கள்
C
பாண்டியர்கள்
D
நாயக்கர்கள்
Question 61 Explanation: 
(குறிப்பு: பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது.)
Question 62
வீரப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்த ___________ என்பவர் அங்கு ஒரு பள்ளியை நிறுவினார்.
A
சர் தாமஸ் மன்றோ
B
சார்ஜண்ட்
C
பெர்னாண்டஸ்
D
சர் சார்லஸ் ஜான்
Question 63
தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தவர்
A
பெர்னாண்டஸ்
B
சர் தாமஸ் மன்றோ
C
இரண்டாம் சரபோஜி
D
வீரப்ப நாயக்கர்
Question 63 Explanation: 
(குறிப்பு: மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து அவற்றை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார்.)
Question 64
___________ நாட்டின் உயர் கல்வியின் முக்கிய மையமாக விளங்கியது.
A
மடங்கள்
B
கோயில்கள்
C
விகாரங்கள்
D
பிரதான்
Question 65
மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்குவகித்த ஆளுநர்
A
வில்லியம் பெண்டிங்
B
காரன்வாலிஸ்
C
சர் தாமஸ் மன்றோ
D
இராபர்ட் கிளைவ்
Question 65 Explanation: 
(குறிப்பு: அவர் கல்வியின் நிலை குறித்து அறிய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்த ஒரு குழுவை நியமித்தார்.)
Question 66
மன்றோவின் கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும்_____________முதன்மைப் பள்ளிகளை உருவாக்க பரிந்துரைத்தது.
A
ஒன்று
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 66 Explanation: 
(குறிப்பு: மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பள்ளிகள் ஆகியவை இரண்டு முதன்மை பள்ளிகள் ஆகும்.)
Question 67
__________ ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
A
1823
B
1828
C
1835
D
1840
Question 68
_________ ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
A
1854
B
1855
C
1856
D
1857
Question 68 Explanation: 
(குறிப்பு: இதுவே ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.)
Question 69
________ ஆண்டு உள்ளூர் வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
A
1872
B
1878
C
1881
D
1882
Question 69 Explanation: 
(குறிப்பு: இச்சட்டத்தின் மூலம் புதிய பள்ளிகளைத் திறக்கவும், அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.)
Question 70
________ ஆண்டு வாக்கில் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன.
A
1935
B
1936
C
1937
D
1938
Question 70 Explanation: 
(குறிப்பு:1986இல் உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 1992 இல் திருத்தி அமைக்கப்பட்டது.)
Question 71
சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு
A
1925
B
1929
C
1932
D
1938
Question 72
__________ ஆண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
A
1947
B
1948
C
1952
D
1956
Question 72 Explanation: 
(குறிப்பு: இத்திட்டம் பின்னர் பள்ளிகளில் இடை நிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு 1982ல் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.)
Question 73
தமிழகத்தில் _________ ஆண்டு இடைநிலைக் கல்வி அளவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
A
1962 - 64
B
1964 – 65
C
1965 – 67
D
1967 - 69
Question 74
காந்தி கிராம கிராமிய கல்லூரி __________ ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
A
1965
B
1968
C
1975
D
1978
Question 74 Explanation: 
(குறிப்பு: கல்லூரி சென்று படிக்க முடியாதவர்களுக்காக தொலைதூரக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.)
Question 75
பொருத்துக.
  1. இட்சிங்                                i) சரஸ்வதி மகால்
  2. பிரான்சிஸ் சேவியர்        ii) இந்திய கல்வியின் மகாசாசனம்
  3. உட்ஸ் கல்வி அறிக்கை   iii) மதராசில் மேற்கத்திய கல்வி
  4. இரண்டாம் சரபோஜி       iv) கொச்சி பல்கலைக்கழகம்
  5. சர் தாமஸ் மன்றோ          v) சீன அறிஞர்
A
ii i iii iv v
B
iv ii i iii v
C
v i iii iv ii
D
v iv ii i iii
Question 76
பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
  1. நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
  2. பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.
  3. பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
  4. சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.
A
1, 2 சரி
B
2, 4 சரி
C
3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 77
சரியான இணையை கண்டுபிடி.
A
மக்தப்கள் – இடைநிலைப் பள்ளி
B
1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி
C
கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு
D
சாலபோகம் - கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
Question 77 Explanation: 
(குறிப்பு: சாலபோகம் - ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 77 questions to complete.

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!