Online TestTnpsc Exam
		
	
	
இந்தியாவின் சர்வதேச உறவுகள் Online Test 10th Social Science Lesson 21 Questions in Tamil
இந்தியாவின் சர்வதேச உறவுகள் Online Test 10th Social Science Lesson 21 Questions in Tamil
Congratulations - you have completed இந்தியாவின் சர்வதேச உறவுகள் Online Test 10th Social Science Lesson 21 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
சர்வதேச உறவுகள் பற்றி 'நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் ' என்னும் கூற்று யாருடையது?
மஹாத்மா காந்தி   | |
ஜவஹர்லால் நேரு   | |
சர்தார் வல்லபாய் பட்டேல்   | |
Dr.ராதாகிருஷ்ணன்  | 
Question 1 Explanation: 
 (குறிப்பு - இந்தியா வெளிப்படையாக இராணுவக் கூட்டணியை கைவிட்டாலும் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதிலும் ஒருங்கிணைப்பதில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.)
Question 2  | 
'ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம்' என்பது யாருடைய கூற்று?
ராபர்ட்   | |
ஹெசாய்ட்   | |
வில்லியம் பிரவுன்   | |
ஜார்ஜ் ஹெக்டே   | 
Question 2 Explanation: 
 (குறிப்பு - ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம். அதுவே ஒரு நல்ல நாளாக அமையுமானால் அதைவிட ஆசிர்வாதம் வேறு இல்லை என்பது ஹெசாய்ட் என்பவரின் கூற்றாகும்.)
Question 3  | 
இந்தியாவின் அண்டை நாடு அல்லாதது எது?
ஆப்கானிஸ்தான்   | |
பாகிஸ்தான்   | |
பலுசிஸ்தான்   | |
வங்காளதேசம்   | 
Question 3 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவுடன் அண்டை நாடுகள் ஆவன ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மாலத்தீவு போன்றவை ஆகும் )
Question 4  | 
பொருத்துக
- வடமேற்கு - a) இலங்கை
 - வடக்கு - b) வங்காளதேசம்
 - Iகிழக்கு - c) பாகிஸ்தான்
 - தென்கிழக்கு - d) சீனா
 
I-c, II-d, III-b, IV-a  | |
I-d, II-b, III-a, IV-c  | |
I-a, II-c, III-d, IV-b  | |
I-d, II-c, III-b, IV-a  | 
Question 4 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவின் வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வடக்கில் சீனா, நேபாளம், பூடான், கிழக்கில் வங்காளதேசம், தூரகிழக்கில் மியான்மர் மற்றும் தென்கிழக்கில் இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன )
Question 5  | 
கீழ்கண்ட நாடுகளில் அதிக அண்டைநாடுகளை கொண்ட நாடு எது?
இந்தியா   | |
சீனா   | |
ரஷ்யா   | |
கனடா   | 
Question 5 Explanation: 
 (குறிப்பு - சீனா தனது அண்டை நாடுகளாக 16 நாடுகளை கொண்டுள்ளது. ரஷ்யா 14 நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது.)
Question 6  | 
இந்தியா எந்த நாட்டுடன் போர்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தத்தை ( Strategic Partnership Agreement ) மேற்கொண்டுள்ளது?
சீனா   | |
அமெரிக்கா   | |
ஆப்கானிஸ்தான்   | |
இலங்கை  | 
Question 6 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கும் நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.)
Question 7  | 
சல்மா என்ற அணையைக்கட்ட இந்தியா எந்த நாட்டிற்கு உதவி செய்தது?
ஆப்கானிஸ்தான்   | |
நேபாளம்   | |
பூடான்   | |
வங்காளதேசம்   | 
Question 7 Explanation: 
 (குறிப்பு - ஹீரட் மகாணத்தில் உள்ள சல்மா அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் 500 பேருக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அதற்கான உதவித்தொகையை இந்தியா அறிவித்தது)
Question 8  | 
கான் அப்துல் கபார்கான் எந்த பகுதியை சார்ந்தவர் ஆவார்?
பலுசிஸ்தான்  | |
ஆப்கானிஸ்தான்  | |
துர்க்மெனிஸ்தான்  | |
இவை எதுவுமல்ல  | 
Question 8 Explanation: 
 (குறிப்பு - பலுசிஸ்தான் என்பதை தற்காலத்திய பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம் ஆகும். இப்பகுதியை சார்ந்த கான் அப்துல் கபார்கான் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.)
Question 9  | 
வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு எது?
இந்தியா  | |
சீனா  | |
பாகிஸ்தான்  | |
இலங்கை  | 
Question 9 Explanation: 
 ( குறிப்பு - வங்காள தேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும். இந்தியாவும் வங்கதேசமும் 4096 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நீண்ட நிலப்பரப்பை எல்லையாக பகிர்ந்து கொள்கின்றன)
Question 10  | 
இந்தியா வங்காளதேசம் இடையே எந்த இரு நகரங்களை இணைக்கும் ரயில் போக்குவரத்து இணைப்பிற்கான முன்மொழிவை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது?
டாக்கா, கல்கத்தா  | |
டாக்கா, அகர்தலா  | |
அகர்தலா, அகவுரா   | |
அகவுரா, கல்கத்தா  | 
Question 10 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவின் அகர்தலாவிற்கும் வங்கதேசத்தின் அகவுராவிற்கும் இடையேயான ரயில் போக்குவரத்து இணைப்பிற்கான முன்மொழிவை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது)
Question 11  | 
கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவிற்கு டாக்கா வழியாக செல்வதற்கான சாலை வழி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
BBIN-MVA  | |
BBIN-INDBAN  | |
IND-BAN IIB  | |
BIB-IND  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு - கொல்கத்தாவில் இருந்து அகற்றுவதற்கு டாக்கா வழியாக செல்வதற்கான சாலை வழியினை BBIN-MVA ( வங்காளதேசம்,  பூட்டான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகனம் ஒப்பந்தம்) ஒப்பந்தத்தின் கீழ் அமைக்க இந்தியாவிற்கு வங்காளதேசம் அனுமதி வழங்கியுள்ளது)
Question 12  | 
இந்தியாவிற்கும் வங்கதேசத் துக்கும் இடையே கங்கை நீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?
1975 ஆம் ஆண்டு  | |
1977 ஆம் ஆண்டு  | |
1979 ஆம் ஆண்டு  | |
1981ஆம் ஆண்டு  | 
Question 12 Explanation: 
 (குறிப்பு - கங்கை நீரை பகிர்ந்து கொள்ள 1977 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் பராக்கா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது)
Question 13  | 
இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் பொதுவானதாக எத்தனை நதிகள் உள்ளன?
50 நதிகள்   | |
52 நதிகள்   | |
54 நதிகள்   | |
56 நதிகள்   | 
Question 13 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவிற்கும் வங்கதேசதிற்கும் பொதுவானதாக 54 நதிகள் உள்ளது.)
Question 14  | 
எந்த பல்கலைக்கழகத்தில் தாகூர் இருக்கை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது?
டாக்கா பல்கலைக்கழகம்  | |
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  | |
டெக்சாஸ் பல்கலைகழகம்  | |
லண்டன் பல்கலைக்கழகம்  | 
Question 14 Explanation: 
 (குறிப்பு - டாக்கா பல்கலைக்கழகத்தில் தாகூர் இருக்கை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழுவின்(ICCR) மூலம் வங்காளதேச மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.)
Question 15  | 
(மேற்குவங்காளம்) சிலிகுரி - பர்பதிபூர் (வங்கதேசம்) இடையேயான 130 கிலோ மீட்டர் நீளத்திற்கு_______________________ அமைக்கும் பணிக்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்துள்ளன.
ரயில்வே சாலை போக்குவரத்து  | |
தரை வழி சாலை போக்குவரத்து  | |
நட்புறவு குழாய் போக்குவரத்து  | |
நீர் வழி போக்குவரத்து  | 
Question 15 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்குமிடையே 130 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நட்புறவு குழாய் போக்குவரத்தை அமைக்கும் பணியை இரு நாடுகளும் இணைந்து தொடங்கி வைத்தன)
Question 16  | 
இந்தியாவிற்கு சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது. இது___________ முதல் வங்காளதேசத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
2010ஆம் ஆண்டு முதல்   | |
2011ஆம் ஆண்டு முதல்   | |
2012ஆம் ஆண்டு முதல்   | |
2013ஆம் ஆண்டு முதல்   | 
Question 16 Explanation: 
 (குறிப்பு - குறுகலான இப்பாதை 2011ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது)
Question 17  | 
இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் இடம் எது?
பூடான்   | |
மியான்மர்   | |
நேபாளம்   | |
திபெத்   | 
Question 17 Explanation: 
 (குறிப்பு - பூட்டான் இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும் இது இடி மின்னல் நிலம் என்று அழைக்கப்படுகிறது)
Question 18  | 
இந்தியாவிற்கும் பூட்டான் இற்கும் இடையிலான இராஜதந்திர உறவு எந்த ஆண்டு முதல் தொடங்கியது?
1965 முதல்   | |
1968 முதல்   | |
1972 முதல்   | |
1975 முதல்   | 
Question 18 Explanation: 
 (குறிப்பு - இந்தியா மற்றும் பூடான் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1968ஆம் ஆண்டில் இந்திய பிரதிநிதி ஒருவரை திம்புவில் நியமித்ததில் இருந்து தொடங்கியது)
Question 19  | 
கீழ்க்கண்ட நாடுகளில் எது நிலத்தால் சூழப்பட்ட நாடு ஆகும்?
பாகிஸ்தான்   | |
இலங்கை   | |
வங்கதேசம்   | |
பூடான்   | 
Question 19 Explanation: 
 (குறிப்பு - முட்டாள் நிலங்களால் சூழப்பட்ட நாடு ஆகும் அதனால் கடல்சார்ந்த தொடர்புகளுக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது)
Question 20  | 
நேரு-வாங்சுக் கல்வி உதவித்தொகை எந்த நாட்டிற்கு இந்தியாவால் வழங்கப்படுகிறது?
பூட்டான்  | |
இலங்கை  | |
நேபாளம்  | |
மியான்மர்  | 
Question 20 Explanation: 
 (குறிப்பு - இந்தியா பாரத் முதல் நூற்றாண்டு வரை என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அறிவித்துள்ளது. பூட்டான் மாணவர்கள் புகழ் பெற்ற நிறுவனங்களில் உயர் கல்வி பெறுவதற்கு இந்திய உதவித் தொகை அளிக்கிறது)
Question 21  | 
இந்திய அரசாங்கத்தால் பூட்டானில் கட்டப்பட்டுள்ள நீர் மின்சக்தி நிலையங்கள் எது?
- சுக்கா
 - குரிச்சி
 - தலா
 
I, II மட்டும்   | |
II, III மட்டும்   | |
I, III மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 21 Explanation: 
 (குறிப்பு - பூட்டான் நாட்டில் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தவும் மருத்துவமனைகள் சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை அமைக்கவும் இந்தியா உதவியுள்ளது)
Question 22  | 
இந்தியாவிலிருந்து பூடானுக்கு சென்ற புத்த துறவி யார்?
குரு பத்மசம்பவா   | |
குரு பத்மராஜு   | |
குரு பத்மசிவோ   | |
இவர்கள் யாரும் அல்ல   | 
Question 22 Explanation: 
 (குறிப்பு - குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்கு சென்றார். அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பி அதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்)
Question 23  | 
சீனாவினால் துவங்கி வைக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா வகிக்கும் பொறுப்பு?
பார்வையாளர்  | |
தற்காலிக உறுப்பினர்  | |
நிரந்தர உறுப்பினர்  | |
கூட்டமைப்பின் தலைவர்  | 
Question 23 Explanation: 
 (குறிப்பு - ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியாவிற்கு பார்வையாளர் தகுதியை சீனா வழங்கியுள்ளது)
Question 24  | 
சார்க் அமைப்பில் பார்வையாளர் தகுதி கீழ்காணும் எந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது?
சீனா  | |
ரஷ்யா  | |
அமெரிக்கா  | |
பிரான்ஸ்  | 
Question 24 Explanation: 
 (குறிப்பு - சார்க் அமைப்பில் பார்வையாளர் தகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் உலக வர்த்தக நிறுவனம் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் ஒத்த கருத்தை கொண்டுள்ளன)
Question 25  | 
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது?
இந்தியா, சீனா   | |
இந்தியா, பாகிஸ்தான்   | |
இந்தியா, நேபாளம்   | |
இந்தியா, ஆப்கானிஸ்தான்   | 
Question 25 Explanation: 
 (குறிப்பு - மக்மகான் எல்லைக்கோடு இந்தியா சீனா மற்றும் பூட்டானின் கிழக்கு பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லை கோடு ஆகும்.)
Question 26  | 
1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் யார்?
ஆர்தர் ஹென்றி மக்மகான்   | |
ஜவஹர்லால் நேரு  | |
டாக்டர் ராதாகிருஷ்ணன்  | |
டாக்டர் அம்பேத்கர்  | 
Question 26 Explanation: 
 (குறிப்பு - 1914 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் மக்மகான் எல்லைக்கோடு தீர்மானிக்கப்பட்டது)
Question 27  | 
மாலத்தீவு இந்திய பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்கு____________ அமைந்துள்ளது.
கிழக்கில்  | |
மேற்கில்  | |
வடக்கில்  | |
தெற்கில்  | 
Question 27 Explanation: 
 (குறிப்பு - மாலத்தீவு இந்திய பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்தியாவும் மாலத்தீவு இனம் மொழி பண்பாடு சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாண தொடர்புகளை பழங்காலத்திலிருந்தே சுமுகமாக பேணி வருகின்றன)
Question 28  | 
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு எது?
சீனா  | |
பாகிஸ்தான்  | |
வங்கதேசம்  | |
மியான்மர்  | 
Question 28 Explanation: 
 (குறிப்பு - இந்தியா தன் இரண்டாவது மிக நீளமான எண்ணையை மியான்மார் நாட்டவர் பகிர்ந்து கொண்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு வரை மியான்மர்,  பர்மா என்று அழைக்கப்பட்டது)
Question 29  | 
மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்திய மாநிலங்களுள் தவறானது எது?
நாகாலாந்து  | |
மணிப்பூர்  | |
மிசோரம்  | |
அசாம்  | 
Question 29 Explanation: 
 (குறிப்பு - அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்கள் மியன்மர் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன)
Question 30  | 
இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்கு செல்வதற்கான நுழைவு வாயிலாக விளங்கும் நாடு எது?
சிங்கப்பூர்  | |
இந்தோனேஷியா  | |
தாய்லாந்து  | |
மியான்மர்  | 
Question 30 Explanation: 
 (குறிப்பு - இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்குள் செல்வதற்கான நுழைவு வாயிலாக மியான்மர் விளங்குகிறது. மியான்மர் பர்மா என்றும் அழைக்கப்பட்டது.)
Question 31  | 
இந்தியாவில் உள்ள கொல்கத்தாவையும் மியான்மரில் உள்ள சிட்வே நகரையும் இணைக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டம்.  | |
கற்பகா பன்முக மாதிரி போக்குவரத்து திட்டம்  | |
சிட்வே பன்முக மாதிரி போக்குவரத்து திட்டம்  | |
இது எதுவும் இல்லை.  | 
Question 31 Explanation: 
 (குறிப்பு - சாலை - நதி - துறைமுகம் சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது. இது இந்தியாவையும் மியான்மர் நாட்டினையும் இணைக்க உருவாகும் ஒரு திட்டமாகும்.)
Question 32  | 
தென் கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக எந்த இடத்துடன் கொல்கத்தா நகரை இணைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது?
சிட்வே   | |
ஹோசிமின்   | |
சுமத்திரா   | |
ஜாவா   | 
Question 32 Explanation: 
 (குறிப்பு - தென் கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரின் ஹோசிமின் நகரத்துடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மியான்மர்,  கம்போடியா, வியட்நாம் வழியே சாலை போக்குவரத்தையும் கொண்ட இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கௌஹாத்தியுடன் மாண்டலேவை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.)
Question 33  | 
மியான்மர் நாட்டில் எரிசக்தி துறையில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் எது?
- ESSAR
 - GAIL
 - ONGC
 - Videsh Ltd.
 
I, II, III மட்டும்   | |
II, III, IV மட்டும்  | |
I, III, IV மட்டும்  | |
இவை அனைத்தும்   | 
Question 33 Explanation: 
 (குறிப்பு - மேற்கண்ட அனைத்து இந்திய நிறுவனங்களும் மியான்மர் நாட்டின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்துள்ளன)
Question 34  | 
நேபாள் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களில் தவறானது கீழ்க்கண்டவற்றுள் எது?
மேற்கு வங்காளம்  | |
பீகார்  | |
உத்தர பிரதேசம்  | |
இமாச்சலப் பிரதேசம்  | 
Question 34 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவில் 5 மாநிலங்களான சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவை நேபாள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.)
Question 35  | 
மகேந்திர ராஜ் மார்க் என்னும் 204 கிலோமீட்டர் இணைப்பு இந்தியாவுடன் எந்த நாட்டை இணைக்கிறது?
நேபாளம்   | |
சீனா   | |
பூடான்  | |
வங்கதேசம்   | 
Question 35 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவையும் காத்மாண்டுவில் இணைக்கும் 204 கிலோ மீட்டர் நீளமுள்ள மகேந்திர ராஜ்மார்க் என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.நேபாளம் மிக வேகமாக ஓடும் ஆறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
Question 36  | 
பசுபதி, ஜனக்பூர் ஆகிய ஆகிய பாரம்பரியமிக்க மையங்கள் எங்கு அமைந்துள்ளன?
இந்தியா  | |
நேபாளம்  | |
வங்கதேசம்  | |
கம்போடியா   | 
Question 36 Explanation: 
 (குறிப்பு - இந்தியா மற்றும் நேபாள மக்கள் ஆன்மீக பயணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையே சென்று வருகின்றனர். நேபாளத்தில் பசுபதி ஜனக்பூர் ஆகிய பாரம்பரியமிக்க மையங்கள் உள்ளன. இந்தியாவில் வாரணாசி பத்ரிநாத் ராமேஸ்வரம் ஆகிய முக்கிய புனிதத் தலங்களும் உள்ளன)
Question 37  | 
நான்கு தாம்ஸ் அழைக்கப்படும் புனித இடங்களுள் தவறானது எது?
ராமேஸ்வரம்  | |
பூரி ஜெகன்நாத்  | |
பத்ரிநாத்  | |
பிரகதீஸ்வரர்  | 
Question 37 Explanation: 
 (குறிப்பு - பத்ரிநாத், பூரி, துவாரகை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய நான்கு முக்கியமான புனிதத் தலங்கள் நான்கு தாம்ஸ் என்று அழைக்கப்படுகின்றன)
Question 38  | 
நேபாள மொழியை இந்தியாவின் அரசியல் அமைப்பில் எந்த அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது?
ஆறாவது   | |
ஏழாவது   | |
எட்டாவது   | |
ஒன்பதாவது   | 
Question 38 Explanation: 
 (குறிப்பு - நேபாள மொழியை  இந்தியா தனது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்த்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது)
Question 39  | 
இந்தியாவின் உதவியோடு நேபாளத்தில் எந்த ஆற்றின் குறுக்கே ஒரு கூட்டு மின்சக்தி திட்டம் கட்டப்பட்டு வருகிறது?
பிரம்மபுத்ரா  | |
கங்கா  | |
சிந்து  | |
சாரதா  | 
Question 39 Explanation: 
 (குறிப்பு - சாரதா ஆற்றின் குறுக்கே ஒரு கூட்டு மின்சக்தி திட்டம் கட்டப்பட்டு வருகிறது இத்திட்டம் முறையே மின்சார உற்பத்தி நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை இந்தியா மற்றும் நேபாளத்தில் உதவும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது)
Question 40  | 
இந்தியா நேபாளம் இடையே சகோதரி நகர் ஒப்பந்தங்கள் எந்த நகரங்களுக்கு இடையே கையெழுத்திடபட்டுள்ளன?
- காத்மாண்டு - வாரணாசி
 - லும்பினி - புத்தகயா
 - ஜனக்பூர் - அயோத்தி
 
I, II மட்டும் சரி   | |
II, III மட்டும் சரி   | |
I, III மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 40 Explanation: 
 (குறிப்பு - இந்திய மற்றும் நேபாள அரசு இரட்டை நகரங்களான காத்மாண்டு-வாரணாசி, லும்பினி - புத்தகயா,  ஜனக்பூர் - அயோத்தி ஆகிய மூன்று சகோதரி நகர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன)
Question 41  | 
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தக் கோடு எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது?
1948ஆம் ஆண்டு   | |
1949ஆம் ஆண்டு   | |
1950ஆம் ஆண்டு   | |
1951ஆம் ஆண்டு   | 
Question 41 Explanation: 
 (குறிப்பு - இந்தியா பாகிஸ்தான் இடையே 1949 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு வரையறுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இது எல்லை கட்டுப்பாட்டு கோடு என அழைக்கப்பட்டது.)
Question 42  | 
சிம்லா ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
1970ஆம் ஆண்டு  | |
1972 ஆம் ஆண்டு  | |
1974 ஆம் ஆண்டு  | |
1976ஆம் ஆண்டு  | 
Question 42 Explanation: 
 (குறிப்பு - 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக்கோடு தீர்மானிக்கப்பட்டது.)
Question 43  | 
ராட்க்ளிஃப் கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?
இந்தியா - பாகிஸ்தான்  | |
இந்தியா - ஆப்கானிஸ்தான்  | |
இந்தியா - நேபாளம்  | |
இந்தியா - சீனா  | 
Question 43 Explanation: 
 (குறிப்பு - 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லை கோடு ராட்க்ளிஃப் கோடு என்று அழைக்கப்பட்டது. ராட்க்கிஃப் என்பவர் எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தவர். இக் கோடு தற்போது கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது)
Question 44  | 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுள் எது சரியானது?
- சிம்லா ஒப்பந்தம்
 - லாகூர் பிரகடனம்
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் சரி   | |
இரண்டும் தவறானது   | 
Question 44 Explanation: 
 (குறிப்பு - எல்லை தாண்டிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் இந்தியா முயன்றுள்ளது)
Question 45  | 
தமிழ் இனப் பிரச்சனை தொடர்பான கருத்து வேறுபாடு எந்த நாட்டுடன் இந்தியாவிற்கு ஏற்பட்டது?
இலங்கை  | |
ஆப்கானிஸ்தான்  | |
பாகிஸ்தான்  | |
மாலத்தீவு  | 
Question 45 Explanation: 
 (குறிப்பு - இந்திய நாடு பண்பாடு, கலாச்சார, வரலாறு மற்றும் சமய உறவுகளை இலங்கையுடன் கொண்டுள்ளது. தமிழ் இனப் பிரச்சனை தொடர்பான காலகட்டத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உறவில் சிறு பின்னடைவு ஏற்பட்டது)
Question 46  | 
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் அமைப்பு எது?
பாக் ஜலசந்தி  | |
ரான் ஆப் கட்ச்  | |
வங்காள விரிகுடா  | |
அரேபிய கடல்  | 
Question 46 Explanation: 
 (குறிப்பு - பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவும் இலங்கையும் சிறந்த வணிக உறவுகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதோடு இருதரப்பு ஒப்பந்தங்கள் மட்டுமல்லாமல் சார்க் அமைப்பின் மூலமும் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.)
Question 47  | 
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பங்குதாரராக உள்ள நாடு எது?
இலங்கை  | |
வங்கதேசம்  | |
ஆப்கானிஸ்தான்  | |
மியான்மர்  | 
Question 47 Explanation: 
 (குறிப்பு - இந்தியா தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழக திட்டத்தில் இலங்கை ஒரு பங்குதாரர் ஆகும்)
Question 48  | 
இலங்கையின் வட பகுதியை கைப்பற்றிய சோழ மன்னர்கள் யார்?
- முதலாம் இராஜராஜ சோழன்
 - முதலாம் ராஜேந்திர சோழன்
 - கரிகால சோழன்
 
I, II மட்டும்   | |
I, III மட்டும்   | |
II, III மட்டும்   | |
இவர்கள் அனைவரும்   | 
Question 48 Explanation: 
 (குறிப்பு - அசோகர் புத்த மதத்தை பரப்புவதற்காக அவரது மகன் மஹிந்தாவையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பினார். சோழ அரசர்கள் ஆண்ட முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின் வட பகுதியை கைப்பற்றினர்)
Question 49  | 
தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ( Communication Compatibility and Security Agreement - COMCASA) இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது?
அமெரிக்கா  | |
ரஷ்யா  | |
சீனா  | |
ஜெர்மனி  | 
Question 49 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவும் அமெரிக்காவும் புதியதலைமுறை ராணுவ கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது 10 ஆண்டுகள் கால வரையறை கொண்டதாகும்)
Question 50  | 
பிரான்ஸ் நாடு இந்தியாவில் உள்ள எந்த நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த இந்தியாவோடு ஒன்றிணைந்துள்ளது?
- சண்டிகர்
 - பாண்டிச்சேரி
 - நாக்பூர்
 - அகமதாபாத்
 
I, II, III மட்டும் சரி  | |
I, III, IV மட்டும் சரி   | |
II, III, IV மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 50 Explanation: 
 (குறிப்பு - பிரான்ஸ் நாடு இந்தியாவில் உள்ள சண்டிகர், நாக்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த இந்தியாவோடு கூட்டாக ஒத்துழைக்கிறது.)
Question 51  | 
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை இந்தியா எந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ளது?
ஜெர்மனி  | |
பிரான்ஸ்  | |
அமெரிக்கா  | |
இத்தாலி  | 
Question 51 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவும் பிரான்சும் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை அறிமுகப்படுத்தி கடகரேகை மற்றும் மகர ரேகை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள நாடுகளை சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பு ஒன்று சேர்கின்றன)
Question 52  | 
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் கடற்படை பயிற்சி ஒத்திகையின் பெயர் என்ன?
AUSINDEX  | |
GARUDA   | |
INDAUS  | |
PIRAANAA  | 
Question 52 Explanation: 
 (குறிப்பு - இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களை பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன. இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.)
Question 53  | 
ஷிங்கன்சென் எனும் உயர்தர அதிவேக ரயில் அமைப்பு எந்த நாட்டுடையது ஆகும்?
ஜப்பான்  | |
சீனா  | |
தென் கொரியா  | |
சிங்கப்பூர்  | 
Question 53 Explanation: 
 (குறிப்பு - ஜப்பான் நாட்டின் ஷிங்கன்சென் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இது பாதுகாப்பு மற்றும் துல்லியத் தன்மை கொண்ட உயர்தர அதிவேக ரயில் அமைப்பு ஆகும்.)
Question 54  | 
ஜப்பான் நாட்டு உதவியுடன் இந்தியாவின் எந்த இரு நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் போக்குவரத்து திட்டம் அமைக்கப்பட்டது?
மும்பை, அகமதாபாத்  | |
மும்பை, அலகாபாத்  | |
மும்பை, புதுடெல்லி  | |
மும்பை, வாரணாசி  | 
Question 54 Explanation: 
 (குறிப்பு - டெல்லி மெட்ரோ ரயில் ஜப்பானிய ஒத்துழைப்பின் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.)
Question 55  | 
எந்த நாட்டு அரசாங்கம் தனது பல்கலைக்கழகத்தில் ரயில்வே துறை தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க இந்தியர்களுக்கு 20 இடங்களை வழங்குகிறது?
ஜப்பான்   | |
அமெரிக்கா   | |
ரஷ்யா   | |
ஜெர்மனி   | 
Question 55 Explanation: 
 (குறிப்பு - ஜப்பானிய அரசாங்கம் இந்திய குடிமக்களுக்கு இந்திய ரயில்வே துறையில் பணி புரியும் வகையில் ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க ஆண்டுதோறும் 20 இடங்களை வழங்கி வருகிறது.)
Question 56  | 
2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் உற்பத்தி நிறுவனம் (JIM) கீழ்க்காணும் எந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டது?
- குஜராத்
 - தமிழ்நாடு
 - கர்நாடகம்
 - உத்தர பிரதேசம்
 
I, II, III மட்டும் சரி   | |
I, III, IV மட்டும் சரி   | |
II, III, IV மட்டும் சரி   | |
I, II, IV மட்டும் சரி   | 
Question 56 Explanation: 
 (குறிப்பு - 2017 ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம்(JIM) ஏற்படுத்தப்பட்டுள்ளது.)
Question 57  | 
ஜப்பானிய மானியம் மூலமான படிப்புகள் (Japanese Endowed Courses ) எந்த மாநில பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு  | |
ஆந்திரப் பிரதேசம்  | |
கர்நாடகம்  | |
கேரளா  | 
Question 57 Explanation: 
 (குறிப்பு - தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான( இணையதள பொருள்கள், செயற்கை நுண்ணறிவு, பெருமளவு தரவு பகுப்பாய்வு) மூன்று இந்திய ஜப்பான் கூட்டு ஆய்வகங்களில் நிறுவுவது சமீபத்திய முயற்சிகளில் அடங்கும்)
Question 58  | 
மேற்கு ஆசியா என்பது எந்த நாடுகளைக் கொண்டது ?
- எகிப்து
 - அரேபிய தீபகற்பம்
 - துருக்கி
 - ஈரான்
 
I, II, III மட்டும்   | |
I, II, III மட்டும்   | |
I, III, IV மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 58 Explanation: 
 (குறிப்பு - மேற்கு ஆசியா என்பது எகிப்து, அரேபிய தீபகற்பம், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தியாவும் மேற்கு ஆசிய நாடுகளும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே உறவுகளை கொண்டிருக்கின்றன)
Question 59  | 
சபஹார் ஒப்பந்தம் கீழ்க்காணும் எந்த நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டது?
- இந்தியா
 - ஆப்கானிஸ்தான்
 - ஈரான்
 - ஈராக்
 
I, II, III மட்டும்   | |
I, III, IV மட்டும்   | |
II, III, IV மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 59 Explanation: 
 (குறிப்பு - சபஹார் ஒப்பந்தம் எனப்படும் முக்கூட்டு ஒப்பந்தம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது)
Question 60  | 
சபஹார் ஒப்பந்தத்தின்படி சபஹார் துறைமுகம் இந்தியாவை எந்த சந்தையுடன் இணைப்பது இல்லை?
பாகிஸ்தான் சந்தை  | |
ஆப்கானிஸ்தான் சந்தை  | |
ஆசிய சந்தை  | |
இவை எதுவும் இல்லை   | 
Question 60 Explanation: 
 (குறிப்பு - சபஹர் ஒப்பந்தம் எனப்படும் கூட்டு ஒப்பந்தம் இந்தியா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுகம் பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது)
Question 61  | 
இந்தியா கீழ்காணும் அமைப்புகளில் எதில் உறுப்பினராக உள்ளது?
- ஐ நா சபை.
 - அணிசேரா இயக்கம்
 - சார்க்
 - ஜி-20
 - காமன்வெல்த்
 
I, II, III இல் மட்டும்  | |
I, II, III, IV இல் மட்டும்   | |
II, III, IV, V இல் மட்டும்   | |
இவை அனைத்திலும்   | 
Question 61 Explanation: 
 (குறிப்பு - ஐ நா சபை, அணிசேரா இயக்கம், சார்க், ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது)
Question 62  | 
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
ஷாங்காய்   | |
புதுடில்லி   | |
பிரேசில்  | |
தென்னாபிரிக்கா   | 
Question 62 Explanation: 
 (குறிப்பு - பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது)
Question 63  | 
பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) உறுப்பினர் நாடு அல்லாதது எது?
பிரேசில்  | |
ரஷ்யா  | |
இந்தியா  | |
பிரான்ஸ்   | 
Question 63 Explanation: 
 (குறிப்பு - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிராந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார அரசியல் சக்திகள் ஆகும். இந்த நாடுகள் அனைத்தும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகும்)
Question 64  | 
IBSA அமைப்பின் உறுப்பினர் நாடு அல்லாதது எது?
இந்தியா  | |
பிரேசில்  | |
தென் ஆப்பிரிக்கா  | |
சீனா  | 
Question 64 Explanation: 
 (குறிப்பு - வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது IBSA அமைப்பின் குறிக்கோள் ஆகும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர் நாடுகள் ஆகும்)
Question 65  | 
BCIM அமைப்பின் உறுப்பினர் நாடு எது?
- வங்காளதேசம்
 - சீனா
 - இந்தியா
 - மாலத்தீவு
 
I, II, III மட்டும்   | |
I, III, IV மட்டும்   | |
II, III, IV மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 65 Explanation: 
 (குறிப்பு - இயற்கை பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் வணிக நலன் பாதுகாப்பிற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.)
Question 66  | 
உறுப்பினர் நாடுகளை பொருத்துக.
- IBSA - a) ஆஸ்திரேலியா
 - BCIM - b) தென்னாப்பிரிக்கா
 - MGC - c) வங்கதேசம்
 - RCEP - d) தாய்லாந்து
 
I-b, II-c, III-d, IV-a  | |
I-c, II-a, III-b, IV-b  | |
I-d, III-b, III-a, IV-c  | |
I-a, II-d, III-b, IV-c  | 
Question 66 Explanation: 
 (குறிப்பு - IBSA, BCIM, MGC, BIMSTEC, RCEP போன்ற உலகளாவிய குழுக்கள் நாடுகளிடையே கல்வி ஆற்றல், இயற்கைப் பேரழிவுகள், தரவு மீறல்கள், தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு, சேவை வர்த்தகம் போன்றவற்றிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது)
Question 67  | 
கங்கா - மீகாங் தாய் நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அமைக்கப்பட்ட உலகளாவிய குழு எது?
IBSA   | |
BCIM  | |
MGC  | |
RCEP  | 
Question 67 Explanation: 
 (குறிப்பு - இந்தியா, கம்போடியா, லாவோஸ், மக்கள் ஜனநாயக குடியரசு, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைக் கொண்ட மீகாங் - கங்கா ஒத்துழைப்பு குழு, கங்கா-மீகாங் தாய் நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்டது ஆகும்)
Question 68  | 
ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் எனும் அமைப்பில் உறுப்பினராக அல்லாதது எது?
கஜகிஸ்தான்  | |
பாகிஸ்தான்  | |
உஸ்பெகிஸ்தான்  | |
ஆப்கானிஸ்தான்  | 
Question 68 Explanation: 
 (குறிப்பு - இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் ஆகும்)
Question 69  | 
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) எனும் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாவன எது?
- பக்ரைன்
 - குவைத், ஓமன்
 - கத்தார், அரேபிய நாடுகள்
 - சவுதி அரேபியா, இந்தியா
 
I, II, III மட்டும்   | |
I, III, IV மட்டும்   | |
II, III, IV மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 69 Explanation: 
 (குறிப்பு - வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) எனும் அமைப்பில் பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இந்தியா உறுப்பினர் நாடு ஆகும்)
Question 70  | 
பிரிக்ஸ் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?
ஜிம் ஓ நெய்ல்   | |
ஜிம் பெர்ரி   | |
ஜிம் ஓ ஹென்றி   | |
இவர்கள் யாரும் அல்ல   | 
Question 70 Explanation: 
 (குறிப்பு - பிரிக்ஸ் என்ற சொல் ஜிம் ஓ நெய்ல் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஆனால் உருவாக்கப்பட்டது. 2050ஆம் ஆண்டு வாக்கில் இதில் உள்ள உறுப்பினர் நாடுகள் தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளை விட பெரிய நாடுகளாக உருவாகும் என அவர் யூகித்தார்)
Question 71  | 
பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளை எந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது ஆலோசித்தனர்?
2013ஆம் ஆண்டு   | |
2015ஆம் ஆண்டு   | |
2017ஆம் ஆண்டு   | |
2011ஆம் ஆண்டு   | 
Question 71 Explanation: 
 (குறிப்பு - 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளை தொடங்கினர். இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையே ஆன நிதி, செய்திப் பரிமாற்றம் அமைப்பிற்கு மாற்றாக இருக்கும்)
Question 72  | 
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு எந்த நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பு ஆகும்?
பாக்தாத்  | |
காபூல்   | |
இஸ்லாமாபாத்  | |
இது எதுவும் அல்ல  | 
Question 72 Explanation: 
 (குறிப்பு - பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு( எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கின் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும்)
Question 73  | 
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
வியன்னா   | |
காபூல்   | |
வியட்நாம்   | |
ஓமன்   | 
Question 73 Explanation: 
 (குறிப்பு - பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமைந்துள்ளது)
Question 74  | 
ஓபெக் (OPEC) அமைப்பின் உறுப்பினர் நாடுகள் எது?
- வெனிசூலா
 - சவுதி அரேபியா
 - ஈரான்
 - ஈராக்
 
I, II, III மட்டும்   | |
I, III, IV மட்டும்   | |
II, III, IV மட்டும்   | |
இவை அனைத்தும்   | 
Question 74 Explanation: 
 (குறிப்பு - ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஓபெக் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆகும்.)
Question 75  | 
ஓபெக் அமைப்பின் இலச்சினை எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது?
1963ஆம் ஆண்டு   | |
1965ஆம் ஆண்டு   | |
1967ஆம் ஆண்டு  | |
1969ஆம் ஆண்டு   | 
Question 75 Explanation: 
 (குறிப்பு - ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடோ என்பவரால் 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியின் மூலம் ஓபெக் அமைப்பின் இலச்சினை சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டது)
Question 76  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?
- ஒபெக் அமைப்பில் தென் அமெரிக்காவில் - 2
 - ஒபெக் அமைப்பில் மத்திய கிழக்கில் - 6
 - ஒபெக் அமைப்பில் ஆப்பிரிக்காவில் - 7
 
I, II மட்டும் சரி   | |
I, III மட்டும் சரி   | |
II, III மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 76 Explanation: 
 (குறிப்பு - ஒபெக் அமைப்பில் மூன்று வகையான உறுப்பினர்கள் உள்ளனர். நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் இணை உறுப்பினர்கள் ஆவர். தற்போது இவ்வமைப்பில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்)
Question 77  | 
ஒபெக் நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வதில் சரியான இணை எது?
- கச்சா எண்ணெய் 86%
 - இயற்கை எரிவாயு 70%
 - சமையல் எரிவாயு 95%
 
I, II மட்டும் சரி   | |
I, III மட்டும் சரி   | |
II, III மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 77 Explanation: 
 (குறிப்பு - கச்சா எண்ணெய் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 86 சதவீத கச்சா எண்ணெய், 70 சதவீத இயற்கை எரிவாயு, 75 சதவீத சமையல் எரிவாயு ஆகியவற்றை இந்தியா ஓபெக் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது)
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 77 questions to complete.