Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Online Test 8th Social Science Lesson 13 Questions in Tamil

இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Online Test 8th Social Science Lesson 13 Questions in Tamil

Congratulations - you have completed இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Online Test 8th Social Science Lesson 13 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்தில் வசிக்கும் இடத்தை மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
A
இடமாற்றம்
B
இடம் நகர்தல்
C
இடம்பெயர்தல்
D
எல்லாமே தவறு
Question 1 Explanation: 
(குறிப்பு - மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை குறிப்பது இடம்பெயர்தல் என்பதாகும்)
Question 2
இடப்பெயர்வுக்கான இழு காரணிகளுள் அல்லாதது எது?
A
கல்வி
B
உணவு
C
போர்
D
பணம்
Question 2 Explanation: 
(குறிப்பு - போர் எனும் காரணத்திற்காக இடப்பெயர்வு ஆதல், உந்து காரணி ஆகும்)
Question 3
இடப்பெயர்வுக்கான உந்து காரணிகளுள் அல்லாதவை எது?
A
காலநிலை பேரிடர்கள்
B
விவசாயிகளின் வாழ்க்கை
C
நகர வாழ்க்கை
D
ஏழ்மை
Question 3 Explanation: 
(குறிப்பு - நகர வாழ்க்கைக்காக இடம்பெயர்தல் என்பது இழு காரணியாகும்)
Question 4
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. இடப்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்கள் இடையே நடைபெறும் ஒருவகையான மக்கள்தொகை நகர்வாகும்.
  2. இடம்பெயர்தல் இருப்பிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 4 Explanation: 
(குறிப்பு - இடப்பெயர்வு பொதுவாக ஒரு இருப்பிடத்தில் ஒருவகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது)
Question 5
மனிதகுலம் இடப்பெயர்வுக்கான பல்வேறு காரணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதில் அல்லாத பிரிவு எது?
A
இயற்கை காரணங்கள்
B
பொருளாதார காரணங்கள்
C
சமூக மற்றும் பண்பாட்டு காரணங்கள்
D
பழக்கவழக்க காரணங்கள்
Question 5 Explanation: 
(குறிப்பு - இடப்பெயர்வுக்கான காரணங்கள் ஐந்து வகை பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. அதில் பழக்கவழக்க காரணங்கள் என்பது தவறானது ஆகும்)
Question 6
இடம்பெயர்தலில் ஒரு இடத்தை நோக்கி மக்களை இழுக்கும் காரணிகள்........  என்று அழைக்கப்படுகின்றன.
  1. சாதக காரணிகள்
  2. இழு காரணிகள்
  3. உந்து காரணிகள்
A
I,II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 6 Explanation: 
(குறிப்பு - இடம்பெயர்தலில் ஒரு இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் அல்லது இழு காரணிகள் என அழைக்கப்படுகின்றன)
Question 7
சூழியல் இடப்பெயர்வு குறித்த சரியான கூற்று எது?
  1. இது இயற்கையான ஒன்றாகும்
  2. எரிமலைவெடிப்பு,  நில அதிர்வு போன்றவை இவ்வகை இடப்பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
  3. நீர்வளம், மாசற்ற நிலைகள் போன்றவை இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளது.
A
I,II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 7 Explanation: 
(குறிப்பு - சூழியல் இடம்பெயர்வு இயற்கையான ஒன்றாகும். எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும். நீர்வளம், பிரச்சனைகள் அற்ற நிலப்பகுதிகள் ஆகியவை இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளது)
Question 8
இடப்பெயர்வுக்கான பொருளாதார காரணிகளுள் தவறானது எது?
A
வளமான வேளாண் நிலம்
B
வேலைவாய்ப்பு
C
தொழில்நுட்ப வளர்ச்சி
D
திருமணத்திற்குப்பின் இடப்பெயர்வு
Question 8 Explanation: 
(குறிப்பு - திருமணத்திற்குப்பின் இடப்பெயர்வு என்பது சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களுள் ஒன்றாகும்)
Question 9
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற செய்யும் காரணிகள் உந்து காரணிகள் என்று அழைக்கப்படும்.
  2. ஒரு இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் என்று அழைக்கப்படும்.
  3. வேலைவாய்ப்புக்கு ஏற்ற சூழல்கள் அமைந்திருக்கும் இடத்தை நோக்கி இடப்பெயர்வு ஆதல், இழு காரணியால் விளையக் கூடியவை.
  4. வேலையின்மை காரணமாக இடப்பெயர்வு ஆதல் உந்து காரணியால் விளையக் கூடியவை.
A
I, II மட்டும் சரி
B
I, II, III மட்டும் சரி
C
I, II, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 9 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட கூற்றுகளில் அனைத்தும் சரியானது ஆகும். வேலையின்மை காரணமாக இடப்பெயர்வு ஆதல், உந்து காரணி ஆகும். வேலைவாய்ப்புக்கு ஏற்ற சூழல்கள் அமைந்திருக்கும் இடத்தை நோக்கி இடப்பெயர்வு ஆதல், இழு காரணி ஆகும்.)
Question 10
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடப்பெயர்வு அறிக்கை 2017இன் படி சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் முதலிடம் உள்ள கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
ஐரோப்பா
D
வட அமேரிக்கா
Question 10 Explanation: 
(குறிப்பு - சர்வதேச புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் ஆசிய கண்டம் 41% கொண்டு முதலிடத்தில் உள்ளது)
Question 11
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடப்பெயர்வு அறிக்கை2018 படி புலம்பெயர்ந்தோர் சதவீதத்தை பொருத்துக
  1. ஆசியா                    - a) 1.7%
  2. ஆப்பிரிக்கா            - b) 23.7%
  3. ஐரோப்பா                - c) 41%
  4. வட அமேரிக்கா       - d) 14.1%
A
I-c, II-d, III-b, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-a, II-d, III-c, IV-d
D
I-b, II-a, III-c, IV-d
Question 11 Explanation: 
(குறிப்பு - சர்வதேச புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் ஆசியா, ஐரோப்பா முறையே 41% மற்றும் 23.7% முதல் இரண்டு இடங்களில் உள்ளது)
Question 12
இடப்பெயர்வுகளில் அதிக பங்களிப்பு யாருடையது?
A
இளைஞர்கள்
B
பெண்கள்
C
குழந்தைகள்
D
பெரியவர்கள்
Question 12 Explanation: 
(குறிப்பு - இளைஞர்களின் இடப்பெயர்வு மற்ற பிரிவினரை விட அதிகம் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்)
Question 13
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. அதிக மக்கள்தொகை இடப்பெயர்வுக்கு ஒரு உந்து காரணியாக உள்ளது.
  2. அதிக மக்கள் தொகை இடப்பெயர்வுக்கு ஒரு இழு காரணியாக உள்ளது.
  3. பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு புலம் பெயர்கிறார்கள்.
A
I, III மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 13 Explanation: 
(குறிப்பு - அதிக மக்கள்தொகை இடப்பெயர்வுக்கு ஒரு உந்து காரணியாக உள்ளது. இளைஞர்கள் இடப்பெயர்வு பிற பிரிவினரை விட அதிகமாக உள்ளது. பெண்களின் இடப்பெயர்வு பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்பு நிகழ்கிறது)
Question 14
கீழ்காணும் இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் புலம் பெயர்ந்தது எங்கு?
  1. ஐரோப்பா
  2. வட அமெரிக்கா
  3. ஆஸ்திரேலியா
  4. ஆசியா
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
II, III மட்டும் சரி
Question 14 Explanation: 
(குறிப்பு - ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலத்தீன் அமெரிக்கா கரீபியன் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆசியாவில் பெண்களை விட ஆண்களே அதிகம் புலம் பெயர்ந்துள்ளனர்).
Question 15
காலனி ஆதிக்கம்,  போர்கள் போன்றவை எந்த வகை இடப் பெயர்வுகளின் காரணமாகும்?
A
மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்.
B
அரசியல் காரணங்கள்
C
சமூக பண்பாட்டுக் காரணங்கள்
D
இவை எதுவும் அல்ல
Question 15 Explanation: 
(குறிப்பு - காலனி ஆதிக்கம், போர்கள் போன்றவை இடம் பெயரவுகளில் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இவைகள் இடம் பெயர்தலுக்கான அரசியல் காரணங்கள் ஆகும்)
Question 16
2017-ம் ஆண்டில் சர்வதேச அளவில்  இந்தியாவில்........... புலம் பெயர்ந்துள்ளனர்.
A
15 மில்லியன்
B
16 மில்லியன்
C
17 மில்லியன்
D
18 மில்லியன்
Question 16 Explanation: 
(குறிப்பு - சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கை 2017இன்படி, இந்தியாவில் 17 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக மெக்சிகோவில் 13 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்)
Question 17
உள்நாட்டு இடப்பெயர்வு வகைகளுள் சரியானது எது?
  1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்.
  2. ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்
  3. நகரத்திலிருந்து நகர் புறத்திற்கு இடம் பெயர்தல்.
  4. நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம்பெயர்தல்
A
I, IV மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
எல்லாமே சரியானது
D
எல்லாமே தவறு
Question 17 Explanation: 
(குறிப்பு - ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடப்பெயர்வு உள்நாட்டு இடப்பெயர்வு என அழைக்கப்படுகிறது. இது மேற்கண்ட நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது)
Question 18
அதிக ஊதியம் காரணமாக இடம்பெயர்தல் கீழ்க்கண்டவற்றுள் எந்த வகையைச் சார்ந்தது?
A
ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்.
B
ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்
C
நகரத்திலிருந்து நகர் புறத்திற்கு இடம் பெயர்தல்.
D
நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம்பெயர்தல்
Question 18 Explanation: 
(குறிப்பு - ஒரு நகர்ப்புறத்தில் இருந்து மற்றொரு நகர் பகுதிக்கு அதிக ஊதியம் பெறும் பொருட்டு இடம்பெயர்வது, நகரத்தில் இருந்து நகர் புறத்திற்கு இடம்பெயர்தல் வகையை சார்ந்தது ஆகும்)
Question 19
பொருத்துக
  1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்   - a) பணி ஓய்வுக்குப் பின்னர்
  2. ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்                 - b) வேலைவாய்ப்புக்காக
  3. III. நகரத்திலிருந்து நகர் புறத்திற்கு இடம் பெயர்தல்        - c) திருமணத்திற்குப் பின்
  4. நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம்பெயர்தல் - d) அதிக ஊதியம் காரணமாக
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-c, II-a, III-b, IV-d
D
I-b, II-a, III-d, IV-c
Question 19 Explanation: 
(குறிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வு என்பது இடப்பெயர்வு தொடங்கும் இடம், இடம்பெயர்வு சேரும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது)
Question 20
போர் போன்ற உந்து காரணிகளால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல்........... வகையை சார்ந்தது ஆகும்.
A
உள்நாட்டு இடப்பெயர்வு
B
தன்னார்வ இடப்பெயர்வு
C
தன்னார்வமில்லா இடப்பெயர்வு
D
இவை எதுவும் இல்லை
Question 20 Explanation: 
(குறிப்பு - மக்களின் விருப்பத்திற்கு மாறாக இடப்பெயர்வு நடைபெறுமாயின் அது அன்னிச்சையான இடப்பெயர்வு அல்லது தன்னார்வம் இல்லா இடப்பெயர்வு அல்லது கட்டாய இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது)
Question 21
பொருத்துக
  1. தன்னார்வ இடப்பெயர்வு                - a) இடப்பெயர்வு சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை
  2. கட்டாய இடப்பெயர்வு                      - b) போர்க்கால இடப்பெயர்வு
  3. . குறுகிய காலஇடப்பெயர்வு          - c) பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இடப்பெயர்வு
  4. பருவகால இடப்பெயர்வு                - d) ஒரு பருவ காலம் முடியும்வரை இடப்பெயர்வு
A
I-c, II-b, III-a, IV-d
B
I-d, II-a, III-c, IV-b
C
I-a, II-c, III-d, IV-b
D
I-d, II-b, III-a, IV-c
Question 21 Explanation: 
(குறிப்பு - இடம்பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெயர்தல் தன்னார்வ இடம்பெயர்வு மற்றும் கட்டாய இடப்பெயர்வு என இரு வகைப்படுத்தப்படுகிறது. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் ஆனது குறுகிய கால இடப்பெயர்வு, நீண்டகால இடப்பெயர்வு மற்றும் பருவகால இடப்பெயர்வு என மூன்று வகைப் படுத்தப்படுகிறது)
Question 22
மந்தை இடமாற்றம் என்பது மக்கள் கால்நடை யுடன் இடம் பெயர்தளாகும். இது........ வகையை சார்ந்தது.
A
நீண்டகால இடப்பெயர்வு
B
குறுகிய கால இடப்பெயர்வு
C
பருவகால இடப்பெயர்வு
D
இவை எதுவும் இல்லை
Question 22 Explanation: 
(குறிப்பு - கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறும் மக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் பயிர் விதைக்கும் பருவங்களில் இடம்பெயர்வது பருவகால இடப்பெயர்வு எனப்படும். மக்கள் கால் நடையுடன் இடம் பெயர்தல் மந்தை இடமாற்றம் என்று அழைக்கப்படும். இது பருவகால இடம்பெயர்வுடன் தொடர்புடையது ஆகும்.)
Question 23
சர்வதேச அளவில் புலம் பெயர்வோர் எண்ணிக்கையை பொருத்துக
  1. இந்தியா                       - a) 258 மில்லியன்
  2. 2000ஆம் ஆண்டு        - b) 220 மில்லியன்
  3. 2010ஆம் ஆண்டு        - c) 173 மில்லியன்
  4. 2017ஆம் ஆண்டு         - d) 17 மில்லியன்
A
I-d, II-c, III-b, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-a, II-c, III-d, IV-b
D
I-d, II-b, III-a, IV-c
Question 23 Explanation: 
(குறிப்பு - சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கை 2017 இன் படி, சமீப காலங்களில் சர்வதேச அளவில் புலம் பெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது)
Question 24
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. மக்கள்தொகை கூறுகளான வயது மற்றும் பாலினத்தின் இடப்பெயர்வு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  2. திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடப்பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறைய வழி வகுக்கிறது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 24 Explanation: 
(குறிப்பு - இடம்பெயர்தல் இன் முக்கிய விளைவுகளுள், மக்கள் தொகை கூறுகளும், பெண்களின் இடப்பெயர்வும் ஏற்படுத்தும் பாதிப்புகளை இது கூறுகிறது)
Question 25
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. இடம்பெயர்தலால் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர்வதால் பன்முக சமுதாயம் உருவாக இவை வழிவகுக்கிறது.
  2. பன்முக சமுதாயம்,  மக்கள் குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏதுவான சூழலை உருவாக்குகிறது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு - இடம் பெயர்களால் ஏற்படும் விளைவுகளுள், பன்முக சமுதாயம் உருவாதலும் ஒன்று. இது மக்கள் குறுகிய மனப்பான்மையில் இருந்து, தாராள மனப்பான்மைக்கு மாற வழிவகை செய்கிறது)
Question 26
அதிக மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் இருந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அதிக மக்கள் இடம் பெயர்வதால்........... சமநிலையற்றதாக ஆகிவிடுகிறது.
A
இயற்கை வள விகிதம்
B
மக்கள் வள விகிதம்
C
பொருளாதார வளர்ச்சி விகிதம்
D
கனிம வள விகிதம்
Question 26 Explanation: 
( குறிப்பு - அதிக மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் இருந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு, இடம்பெயர்தல் ஆதலால் மக்கள் வள விகிதம் சமநிலை அற்றதாகிவிடுகிறது.)
Question 27
தொழில் திறன் கொண்ட மக்கள் பின்தங்கிய நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளை நோக்கி இடம்பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல்
B
அறிவார்ந்த மக்களின் இடமாற்றம்
C
அறிவுசார் இடப்பெயர்வு
D
இவை எதுவும் இல்லை
Question 27 Explanation: 
( குறிப்பு - அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain ) என்பது பின்தங்கிய நாடுகளை சார்ந்த தொழில் திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி வளர்ந்த நாடுகளுக்கு செல்வது ஆகும். இது இடப்பெயர்வின் ஒரு முக்கிய விளைவாகும்)
Question 28
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் என்பதன் விளைவாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன. இது............... என்று அழைக்கப்படுகிறது.
A
அறிவுசார் வெளியேற்ற விளைவு
B
அறிவுசார் மக்கள் வறட்சி
C
அறிவுசார் மக்கள் வளம் இல்லாமை
D
அறிவுசார் மக்கள் கழிவு
Question 28 Explanation: 
(குறிப்பு - அறிவார்ந்த மக்கள் பின்தங்கிய நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளை நோக்கி இடம்பெயர்தளால், அவர்களின் பூர்வீக இடம் பின்தங்கிய நிலையை அடைகிறது. அவ்வாறு பின்தங்கிய நிலைக்கு அறிவுசார் வெளியேற்ற விளைவு என்று பெயராகும்)
Question 29
ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு பெருமளவிலான மக்கள் இடம் பெயர்வதால் கீழ்க்கண்டவற்றுள் எது நிகழ்வதில்லை ?
A
நகர மக்கள் நெரிசல்
B
நகர வளங்கள் பற்றாக்குறை
C
நகர பன்முக சமுதாயம்
D
நகர பொருளாதார வளர்ச்சி
Question 29 Explanation: 
(குறிப்பு - ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு மக்கள் அதிக அளவில் இடம்பெயர்தலால், நகரப்பகுதிகளில் கூட்டநெரிசல் மற்றும் பல குறைபாடு ஏற்படுகிறது. அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது இல்லை)
Question 30
முதன் முதலில் உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமான ஆண்டு எது?
A
2003 ஆம் ஆண்டு
B
2005 ஆம் ஆண்டு
C
2007 ஆம் ஆண்டு
D
2009 ஆம் ஆண்டு
Question 30 Explanation: 
(குறிப்பு - 2007ஆம் ஆண்டு, வரலாற்றில் முதன்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது. இது உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு 2014 ஆம் ஆண்டின் அறிக்கை படி தெரியவந்துள்ளது)
Question 31
பண்டைய காலங்களில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது எது?
A
போக்குவரத்து பயன்பாடு
B
வேளாண்மை
C
மிகையான தானிய உற்பத்தி
D
தங்கும் வசதிகள்
Question 31 Explanation: 
(குறிப்பு - பண்டைய காலங்களில் உணவு தானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது)
Question 32
பண்டைய காலத்தில் அமைந்த நகரங்களை பொருத்துக
  1. மெசபடோமியா - a) ஏதன்ஸ்
  2. எகிப்து                    - b) ஹரப்பா
  3. கிரேக்கம்               - c) தீப்ஸ்
  4. இந்தியா                - d) பாபிலோன்
A
I-d, II-c, III-a, IV-b
B
I-c, II-b, III-a, IV-d
C
I-d, II-a, III-c, IV-b
D
I-a, II-c, III-b, IV-d
Question 32 Explanation: 
(குறிப்பு - மெசபடோமியாவின் உர் மற்றும் பாபிலோன், எகிப்திலுள்ள தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா, இந்தியாவின் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ, கிரேக்கத்தின் ஏதன்ஸ் ஆகியவை பண்டைய கால நகரங்களாகும்)
Question 33
பண்டைய காலத்தில் நகர்ப்புற மையங்களில் அளவு மற்றும் எண்ணிக்கை யாருடைய காலனி ஆதிக்க காலங்களில் அதிகரிக்க தொடங்கியது?
  1. சீனர்கள்
  2. கிரேக்கர்கள்
  3. ரோமானியர்கள்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாம் சரி
Question 33 Explanation: 
(குறிப்பு - பண்டைய காலத்தில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகிய இரு பெரும் காலனியாதிக்க காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியது)
Question 34
ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டது எந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்?
A
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
B
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
C
எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
D
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
Question 34 Explanation: 
( ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏஜியன் கடலுக்கு அடியில் பல நகரங்கள் காணப்பட்டன. கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது)
Question 35
இந்தியா சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018 முதல் 2050 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில்......... பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A
35%
B
40%
C
45%
D
50%
Question 35 Explanation: 
( குறிப்பு - 2018 முதல் 2050 ஆண்டுகளுக்கு இடையில் உலகம் நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியா,சீனா மற்றும் நைஜீரியா நாடுகள் மட்டும் 35 சதவீதத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு 2018 ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது)
Question 36
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
  1. பதினோராம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடல் சார்ந்த வணிகம் அதிகரித்தது.
  2. இந்த வணிக வளர்ச்சி பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட காலத்திற்குப் பின் ஐரோப்பிய நகரங்கள் மற்றும் மாநகரங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 36 Explanation: 
(குறிப்பு - பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாரீஸ், லண்டன், ஜெனிவா ஆகிய முக்கிய நகரங்கள் காணப்பட்டன)
Question 37
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. சமீபத்திய நகரமயமாக்கலின் வளர்ச்சி ஆப்பிரிக்க கண்டத்தில் நன்கு தென்படுகிறது.
  2. 1950 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் கடற்கரையை ஒட்டியே இருந்தன
  3. தற்போது 100 நகரங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளன.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 37 Explanation: 
(குறிப்பு - நகரமயமாக்கலின் வளர்ச்சி ஆப்பிரிக்க கண்டத்தில் நன்கு தென்படுகிறது. 1930ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்க நகரங்கள் கடற்கரை ஒட்டியிருந்தன. தற்போது 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது)
Question 38
ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களுள் அல்லாதவை எது?
A
நைரோபி
B
ஆக்ரா
C
அடிஸ் அபாபா
D
கேப்டவுன்
Question 38 Explanation: 
(குறிப்பு - ஆக்ரா நகரம் இந்தியாவில் அமைந்துள்ளது. நைரோபி, அடிஸ் அபாபா, கேப்டவுன், லாகோஸ் போன்றவை முக்கிய ஆபிரிக்க நகரங்கள் ஆகும் )
Question 39
1950ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில்........... சதவீதம் நகர மக்கள் தொகை ஆகும்.
A
முப்பது
B
நாற்பது
C
ஐம்பது
D
அறுபது
Question 39 Explanation: 
(குறிப்பு - 2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு அறிக்கையின்படி 1950இல் உலக மக்கள் தொகையில் 30% நகர மக்கள் தொகையாகும்.)
Question 40
2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் நகர மக்கள் தொகையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது?
A
60%
B
68%
C
76%
D
83%
Question 40 Explanation: 
(குறிப்பு - 2018ஆம் ஆண்டு உலக நகரமயமாக்கல் விளக்கக் குறிப்பு அறிக்கைப்படி, 2050ஆம் ஆண்டு, உலக மக்கள் தொகையில் 68 சதவீதம் நகர மக்கள் தொகையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது)
Question 41
கண்டங்களையும் அதன் நகர மக்கள்தொகை சதவீதத்தையும் பொருத்துக
  1. வட அமெரிக்கா   - a) 74%
  2. ஐரோப்பா              - b) 43%
  3. ஆசியா                    - c) 82%
  4. ஆப்பிரிக்கா           - d) 50%
A
I-c, II-a, III-d, IV-b
B
I-c, II-b, III-a, IV-d
C
I-d, II-a, III-c, IV-b
D
I-a, II-c, III-b, IV-d
Question 41 Explanation: 
(குறிப்பு - உலக நகர மக்கள் தொகையில் வட அமெரிக்கா கண்டம் 82 சதவீத நகர மக்கள் தொகை கொண்டு முதலிடத்தில் உள்ளது. ஆப்பிரிக்க கண்டம் 43 சதவீத நகர மக்கள் தொகையுடன் ஆறாம் இடத்தில் உள்ளது)
Question 42
உலக மக்கள்தொகையில் நகர மக்கள் தொகையின் சராசரி அளவு என்ன?
A
45%
B
55%
C
65%
D
75%
Question 42 Explanation: 
(குறிப்பு - உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு 2018, அறிக்கையின் படி உலக நகர மக்கள் தொகையின் சராசரி 55% ஆகும் )
Question 43
அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் முதல் நான்கு மாநகரங்களில் அல்லாதது எது?
A
டோக்கியோ
B
புது டில்லி
C
ஷாங்காய்
D
வாஷிங்டன்
Question 43 Explanation: 
(குறிப்பு - அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்கள் டோக்கியோ, புதுடில்லி, ஷாங்காய், மெக்சிகோ மற்றும் சா பாலோ )
Question 44
பொருத்துக
  1. டோக்கியோ    - a) 22 மில்லியன்
  2. புது டில்லி         - b) 37 மில்லியன்
  3. ஷாங்காய்        - c) 29 மில்லியன்
  4. மெக்சிகோ       - d) 26 மில்லியன்
A
I-b, II-c, III-d, IV-a
B
I-c, II-b, III-a, IV-d
C
I-d, II-a, III-c, IV-b
D
I-a, II-c, III-b, IV-d
Question 44 Explanation: 
( குறிப்பு - உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 37 மில்லியன் மக்கள் தொகையுடன் டோக்கியோ மாநகரம் முதலிடத்தில் உள்ளது)
Question 45
சரியான இணை எது?
A
பண்டைய கால நகரம் - தீப்ஸ்
B
இடைக்கால நகரம் - மிலன்
C
நவீன கால நகரம் - நைரோபி
D
எல்லாமே சரி
Question 45 Explanation: 
(குறிப்பு - பண்டைய கால நகரமாக எகிப்தின் தீப்ஸ், இடைக்கால நகரமாக லண்டன், நவீன கால நகரமாக ஆப்பிரிக்காவின் கேப்டவுன் ஆகியவையாகும்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!