Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும் Online Test 9th Social Science Lesson 4 Questions in Tamil

அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும் Online Test 9th Social Science Lesson 4 Questions in T

Congratulations - you have completed அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும் Online Test 9th Social Science Lesson 4 Questions in T. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருத்துக
  1. இந்தியா        - a) புத்தம்
  2. சீனா              - b) ஜொராஸ்ட்ரியம்
  3. பாரசீகம்       - c) இஸ்லாம்
  4. அரேபியா     - d) கண்பூசியனிசம்
A
I-a, II-d, III-b, IV-c
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-a, III-b, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 1 Explanation: 
(குறிப்பு - இந்தியா புத்தம், சமணம், ஆசிவகம் போன்ற மதங்களின் பிறப்பிடமாக உள்ளது. பாரசீகம் ஜொராஸ்ட்ரியம், சீனா கன்பூசியனிசம், தாவோயிசம் போன்ற தத்துவங்களின் பிறப்பிடமாக உள்ளது)
Question 2
மனித நாகரீகம் குறித்த வரலாற்றின் இரண்டாவது கட்டம்.............. கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது.
A
இரும்பு
B
செம்பு
C
தங்கம்
D
வெள்ளி
Question 2 Explanation: 
(குறிப்பு - இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, உற்பத்தி மற்றும் போர் முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது)
Question 3
செம்பின் கலப்பு உலோகம் எது?
A
பித்தளை
B
வெண்கலம்
C
எவர்சில்வர்
D
இது எதுவும் அல்ல
Question 3 Explanation: 
(குறிப்பு - இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதிற்கு முன்பாக செம்பும் அதன் கலப்பு உபயோகமான வெண்கலமும் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை விலை உயர்ந்தவை. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் தன்மை உடையது)
Question 4
கிபி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரும் வல்லமை பெற்ற பேரரசு எது?
A
அஸிரிய பேரரசு
B
அசோக பேரரசு
C
குப்த பேரரசு
D
பாமினி பேரரசு
Question 4 Explanation: 
(குறிப்பு - அஸிரிய பேரரசு கிபி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெறும் வல்லமை பெற்றது. கிரேக்கம் இத்தாலி பாலஸ்தீனம் வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் இரும்பு பயன்பாடு அதிகரித்தது)
Question 5
புத்தர் மற்றும் மகாவீரரின் காலம் எது?
A
பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டு
B
பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டு
C
பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டு
D
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டு
Question 5 Explanation: 
(குறிப்பு - பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டில் வணிகமும் நகரமயமாக்கமும் மீட்டுருவாக்கம் பெற்று வட இந்தியாவில் ஒரு புதிய நாகரீகம் வளர்ச்சி பெற காரணமாகின. புத்தரும் மகாவீரரும் இக்காலகட்டத்தில்தான் தோன்றினர்)
Question 6
சரியான இணை எது?
A
சீனா        - கன்பூசியஸ்
B
ஈரான்      - ஜெராஸ்டர் 
C
இந்தியா - மகாவீரர்
D
எல்லாமே சரி
Question 6 Explanation: 
(குறிப்பு - பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டில் சீனாவின் கன்பூசியஸ், ஈரானின் ஜெராஸ்டர், இந்தியாவின் மகாவீரர் மற்றும் புத்தர் ஆகியோர் இக்காலகட்டத்தில் புகழ் பெற்றனர்)
Question 7
தாவோயிசம் என்ற மதத்தின் நிறுவனர் யார்?
A
கன்பூசியஸ்
B
தாவோ
C
லாவோட்சே
D
இவர் யாரும் அல்ல 
Question 7 Explanation: 
(குறிப்பு - சீனாவில் கன்பூசியஸ் மற்றும் லாவோட்சே ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள் தோன்றினர். இவர்கள் போதித்த தத்துவங்கள் மதங்களாக மாற்றப்பட்டன. அவை முறையே கன்பூசியநிசம் மற்றும் தாவோயிசம் ஆகும் )
Question 8
கன்பூசியஸ் பிறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 551
B
பொ.ஆ.மு 555
C
பொ.ஆ.மு 541
D
பொ.ஆ.மு 521
Question 8 Explanation: 
(குறிப்பு - கன்பூசியஸ் பொ.ஆ.மு 551ஆம் ஆண்டு, ஷான்டுங் மாகாணத்தில் பிறந்தார். இவர் போதித்த தத்துவம் கன்பூசியனிசம்  என்று அழைக்கப்பட்டது)
Question 9
பொருத்துக
  1. ஆவண நூல் -                               a) மெய்ப்பொருளியல் பற்றிப் பேசுகிறது
  2. மாற்றம் குறித்த நூல்-                b) ஒழுக்க நெறிமுறைகளை சொல்கிறது
  3. இசைப்பாடல் நூல் -                   c) அரசியல் ஒழுக்க நெறி பற்றி கூறுவது
  4. இளவேனிலும் இலையுதிர் காலமும் - d) அறவியல் கோட்பாடுகள்
A
I-d, II-a, III-b, IV-c
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-b, III-a, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 9 Explanation: 
(குறிப்பு - கன்பூசியஸ் ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார். அவை ஆவண நூல், இசைப்பாடல் நூல், மாற்றம் குறித்த நூல்,  இளவேனிலும் இலையுதிர் காலமும் மற்றும் வரலாற்று நூல் ஆகியன ஆகும்)
Question 10
கன்பூசியஸின் கோட்பாடு படி நேர்மையான மனிதர் என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த குணங்களை கொண்டிருப்பார்?
  1. துணிச்சல்
  2. நல்லெண்ணம்
  3. புத்திசாலித்தனம்
A
I, II மட்டும் 
B
II, III மட்டும் 
C
I, III மட்டும் 
D
இவை அனைத்தும் 
Question 10 Explanation: 
(குறிப்பு - கன்பூசியசின் மென்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளை கொண்டவராவார்)
Question 11
உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும் என்பது யாருடைய கருத்து ஆகும்?
A
கன்பூசியஸ்
B
லாவோட்சே
C
மகாவீரர்
D
புத்தர்
Question 11 Explanation: 
(குறிப்பு - உத்தரவு தவறென்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஒரு அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும் என்று கன்பூசியஸ் முன்மொழிகிறார்)
Question 12
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
  1. மெய்யறிவு குடும்பத்தில் இருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
  2. மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவும் அறிஞராகவும் மட்டுமில்லாமல் முன்மாதிரியான நடத்தை கொண்டவராக இருக்க வேண்டும் என்பது கன்பூசியஸ் அவர்களின் கருத்தாகும்.
A
I மட்டும் சரி 
B
II மட்டும் சரி 
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு 
Question 12 Explanation: 
(குறிப்பு - மெய்யறிவு குடும்பத்தில் இருந்துதான் வளரும் என்றார் கன்பூசியஸ். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனி நபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார் கன்பூசியஸ்.)
Question 13
கன்பூசியஸ் கோட்பாடு படி, ஒரு அரசிற்கு அவசியமானவை கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. நாட்டில் போதுமான உணவு
  2. நாட்டில் போதுமான ராணுவ தளவாடங்கள்
  3. மக்களுக்கு தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை
  4. அரசருக்கு அதிகாரம்
A
I, II மட்டும் சரி 
B
I, II, III மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 13 Explanation: 
(குறிப்பு - அரசு குறித்து கன்பூசியஸ் அவர்கள், ஒரு அரசிற்கு மூன்று விஷயங்கள் அவசியமானவை, அவை நாட்டில் போதுமான அளவு உணவு, நாட்டில் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும் என்கிறார்)
Question 14
கன்பூசியஸ் பெயரை புதிய பின்இன் மொழிபெயர்ப்பு முறைப்படி............. என்று எழுதவேண்டும்.
A
காங் ஃபூ சு
B
கான் ஃபு சியஸ்
C
கன் ஃபூ சி
D
கன் பூ சியஸ்
Question 14 Explanation: 
(குறிப்பு - கன்பூசியஸ் பெயரை புதிய பின்இன் மொழிபெயர்ப்பு முறைப்படி காங் ஃபூ சு என்று எழுதவேண்டும். சீனாவுக்குச் சென்ற ஐரோப்பிய அறிஞர்களுக்கு அதை உச்சரிக்க சிரமமாக இருந்தது. எனவே அதை இலத்தீனில் ஒலி பெயர்த்து கன்பூசியஸ் என்று அழைக்கத் தொடங்கினர்)
Question 15
லாவோட்சே பிறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 610
B
பொ.ஆ.மு 601
C
பொ.ஆ.மு 604
D
பொ.ஆ.மு 605
Question 15 Explanation: 
(குறிப்பு - லாவோட்சே பிறந்த ஆண்டு பொ.ஆ.மு 604ஆகும். இவர் கன்பூசியஸைவிட 53வயது மூத்தவர் ஆவார்.)
Question 16
லாவோட்சே எழுதிய நூல் எது?
A
தாவோ டே ஞிங்
B
தாவோ நியா
C
தாவோ டே நிமான்
D
தாவோ நி சிங்
Question 16 Explanation: 
(குறிப்பு - லாவோட்சே 5000 சொற்கள் கொண்ட ஒரு நூலை இரண்டு பாகங்களாக எழுதினார். மேலும் அவர் தாவோ டே ஞிங் என்ற நூலையும் எழுதினார். இது வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும்)
Question 17
லாவோட்சேவின் போதனைகளில் அல்லாதவை?
A
உலகில் மனிதர்களின் மகிழ்ச்சி இன்மைக்கு காரணம் மனிதர்களின் சுயநலம்.
B
இயற்கையில் அனைத்துமே இயற்கை வழியிலேயே இயங்குகின்றன
C
மனிதர்கள் யாரோ ஒருவர் ஒழுங்கு படுத்திய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
D
மனித நடத்தைக்கான விதி, இயற்கையோடு பொருந்தி இருக்க வேண்டிய அவசியமில்லை.
Question 17 Explanation: 
(குறிப்பு - மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும் என்பது லாவோட்சே தோற்றுவித்த தாவோயிஸத்தின் போதனைகள் ஆகும்)
Question 18
ஒளிக் கடவுளான அஹூர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர் யார்?
A
மகாவீரர்
B
புத்தர்
C
கன்பூசியஸ்
D
ஜெராஸ்டர்
Question 18 Explanation: 
(குறிப்பு - ஜொராஸ்ட்ரியனிசத்தை தோற்றுவித்தவர் ஜொராஸ்டர் ஆவார். இவர் ஒளி கடவுளான அஹூர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தார்)
Question 19
ஜொராஸ்டரியர்களின் புனித நூல் எது?
A
ஜென்ட் ஜொராஷ்டிர
B
ஜென்ட் மஸ்தா
C
ஜென்ட் அவெஸ்தா
D
இது எதுவும் இல்லை
Question 19 Explanation: 
(குறிப்பு - ஜொராஸ்டரியர்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும். இது பல்வேறு காலகட்டங்களிலன் புனித இலக்கியங்களான பிரார்த்தனை பாடல்கள், வேண்டுதல்கள், சட்டங்கள், புராணங்கள் போன்றவற்றின் தொகுப்பாகும்)
Question 20
ஜென்ட் அவெஸ்தாவின் மொழி__________மொழியினதாகும்.
A
இந்தோ-கிரீக்
B
இந்தோ-ஆரியன்
C
இந்தோ-அரேபிய
D
இந்தோ-பாரசீக
Question 20 Explanation: 
(குறிப்பு - ஜென்ட் அவெஸ்தாவின் மொழி இந்தோ-ஆரியன் மொழியினதாகும். மொழியியலாளர்கள் மேற்கு ஆசியாவில் குறிப்பாக ஈரானின் மொழிகளுக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை நிறுவியிருக்கிறார்கள்)
Question 21
பழைய ஈரானிய மொழி__________சேர்ந்தது
A
பொ.ஆ.மு. மூன்றாவது நூற்றாண்டை
B
பொ.ஆ.மு. இரண்டாவது நூற்றாண்டை
C
பொ.ஆ.மு. நான்காவது நூற்றாண்டை
D
பொ.ஆ.மு. ஐந்தாவது நூற்றாண்டை
Question 21 Explanation: 
(குறிப்பு - பழைய ஈரானிய மொழி பொ.ஆ.மு. இரண்டாவது நூற்றாண்டை சார்ந்தது ஆகும். பின்னர் அது திராவிடர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகள் ஆகியோரின் மொழிகளையும் இணைத்துக்கொண்டது)
Question 22
பழைய ஈரானிய இந்தோ-ஆரிய மொழி பேசியோர் தொடக்கத்தில் ஒரே குழுவை சார்ந்தவர்களாக தான் இருந்திருக்க வேண்டும் என்பது யாருடைய கூற்றாகும்?
A
வரலாற்று ஆய்வாளர் வில்லியம் பாரடே
B
வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்
C
வரலாற்று ஆய்வாளர் ஹான்ஸ்
D
வரலாற்று ஆய்வாளர் ஹென்றி
Question 22 Explanation: 
(குறிப்பு - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பரின் கூற்றுப்படி பழைய ஈரானிய இந்தோ-ஆரிய மொழி பேசியோர் தொடக்கத்தில் ஒரே குழுவை சார்ந்தவர்களாக தான் இருந்திருக்க வேண்டும். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கலாம் என்கிறார்)
Question 23
ஜொராஸ்ட்ரிய மதத்தின் போதனைகளுள் சரியானது எது?
  1. ஒரு மதம் அல்லது ஒரு அரசு அல்லது ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது தான்.
  2. எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் புனிதமாக இருப்பதுதான் மிக உயரிய மதக் கோட்பாடாகும்.
A
I மட்டும் சரி 
B
II மட்டும் சரி 
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு 
Question 23 Explanation: 
(குறிப்பு - ஜொராஸ்ட்ரியனிஸத்தின் போதனைகளில் மேற்கண்ட இரண்டும் சரியானவை ஆகும். இது அஹூர மஸ்தாவை உலகின் ஒரே கடவுள் எனப் பிரகடனம் செய்தது)
Question 24
கீழ்காணும் கூற்றுக்களுள் சரியானது எது?
  1. அஹூர மஸ்தா அனைத்தும் அறிந்தவர், சகல சக்திகளும் கொண்டவர் என்று ஜொராஸ்டர் வலியுறுத்தினார்.
  2. ஜொராஸ்டரிய மதத்தில் பலி, உருவ வழிபாடு ஆகியவை இல்லை.
  3. கடவுளின் வடிவமாக இயற்கையை வணங்குவது தான் உயர்ந்த வழிபாட்டு முறையாக ஜொராஸ்ட்ரிய மதத்தில் கடைபிடிக்கப்பட்டது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 24 Explanation: 
(குறிப்பு - கடவுளின் வடிவமாக தீயை வணங்குவது தான் உயர்ந்த வழிபாட்டு முறையாக ஜொராஸ்ட்ரிய மதத்தில் கடைபிடிக்கப்பட்டது. தானம் செய்வதற்கும் ஏழைகளுக்கு சேவை செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது)
Question 25
ஜொராஸ்டிரிய மதம் ஈரானில் அழிந்ததற்கான காரணங்களில் எது சரியானது?
  1. பாரசீகத்தை அரபியர் கைப்பற்றியதால், பல ஜொராஸ்ட்ரிய குடும்பங்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததால்.
  2. மதகுருமார்கள் கொல்லப்பட்டதும், நெருப்பு கோவில்கள் அழிக்கப்பட்டதால்.
A
I மட்டும் சரி 
B
II மட்டும் சரி 
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு 
Question 25 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட காரணங்களால் பாரசீகத்தில்(ஈரான்) ஜொராஸ்ட்ரிய மதம் அழிந்தது. இந்தியா வந்த பார்சிகள் தம்மோடு ஜொராஸ்டிரிய மதத்தையும் கொண்டுவந்தனர். அன்றிலிருந்து இதை இந்தியாவில் கடைபிடித்து வருகிறார்கள்)
Question 26
ஈரானிய இந்திய மதங்களை போன்ற கோட்பாடுகளை கொண்டிருந்த...........மதம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
A
மணிச்சீயம்
B
மனிச்சீயி
C
மனிச்சீயானிஸம்
D
இவை எதுவும் இல்லை
Question 26 Explanation: 
(குறிப்பு - ஈரானிய இந்திய மதங்களை போன்ற கோட்பாடுகளை கொண்டிருந்த மனிச்சீய மதம் மணி என்பவரால் பாரசீகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் திருச்சபைகள் ஏற்கப்பட்ட மதக் கருத்துக்களை மறுப்பவர்களுக்கு எதிரானவர்களை ஒடுக்கியதால், மனிச்சீய கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் துன்புறுத்தப்பட்டனர்)
Question 27
கங்கை சமவெளியின் முக்கியமான வர்த்தக மையங்களில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
  1. காசி
  2. ராஜகிரஹம்
  3. கௌசாம்பி
  4. வைசாலி
  5. பாடலிபுத்ரா
A
I, II மட்டும் சரி
B
I, II, III மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
I, II, III, IV மட்டும் சரி
Question 27 Explanation: 
(குறிப்பு - வைசாலி, சிராவஸ்தி, ராஜகிரஹம், கௌசாம்பி, காசி ஆகியவை கங்கை சமவெளியின் சில முக்கியமான வர்த்தக மையங்கள் ஆகும்)
Question 28
ரிக்வேதகால கடவுள் அல்லாதவை எது?
A
வருணன்
B
இந்திரன்
C
சிவன்
D
சூரியன்
Question 28 Explanation: 
(குறிப்பு - ரிக்வேத காலத்தில் வணங்கப்பட்ட கடவுள்கள் ஆவன, வருணன், இந்திரன், அக்கினி, சூரியன் மற்றும் உஷா போன்றவை ஆகும்)
Question 29
தவமியற்றல், பிரம்மச்சரியம் போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கியவர்கள் யார்?
A
பார்சிகள்
B
பிராமணர்கள்
C
சத்திரியர்கள்
D
வைசியர்கள்
Question 29 Explanation: 
(குறிப்பு - தவம் இயற்றல் மற்றும் பிரம்மச்சரியம் போன்ற கருத்தாக்கங்களை பிராமணர்கள் உருவாக்கினார்கள். அந்தணர்கள் வலியுறுத்திய சடங்கு சம்பிரதாயங்கள் மதத்தின் உண்மையான சாரத்தை மறைந்தன)
Question 30
வைசியர்களின் முக்கியத்துவத்தை அதிகரித்த நகரம் கீழ்க்கண்டவற்றில் எது?
A
குஷி நகரம்
B
வைசாலி
C
பனாரஸ்
D
இவை அனைத்தும்
Question 30 Explanation: 
(குறிப்பு - கௌசாம்பி, குஷி நகரம், வைஷாலி, ராஜகிரஹம் போன்ற வடபுறத்து நகரங்கள் வணிக நோக்கில் வளர்ச்சி அடைந்த போக்கு வைசியர்களின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.)
Question 31
வர்த்தமான மகாவீரர் பிறந்த இடம் எது?
A
குந்தகிராமம்
B
பனாரஸ்
C
குஷிநகரம்
D
பாட்னா
Question 31 Explanation: 
(குறிப்பு - வர்த்தமான மகாவீரர் வைஷாலிக்கு அருகே உள்ள குந்த கிராமத்தில் பொ.ஆ.மு 599ஆம் ஆண்டு பிறந்தார்.)
Question 32
மகாவீரர் தனது எந்த வயதில் வீட்டைவிட்டு வெளியேறி துறவியானார்?
A
20
B
32
C
30
D
35
Question 32 Explanation: 
(குறிப்பு - மகாவீரர் தனது முப்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் அவர் கடுமையான தவம் செய்து பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார்)
Question 33
மகாவீரர்_____________மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் கருதப்பட்டார்.
A
இருபத்தி நான்காவது
B
இருபத்தி ஐந்தாவது
C
இருபத்தி ஆறாவது
D
இருபத்தி ஏழாவது
Question 33 Explanation: 
(குறிப்பு - மகாவீரர் தனது 13 வது துறவு ஆண்டில் உயரிய ஞானத்தை அடைந்தார். அவர் ஜீனர் என்று அழைக்கப்பட்டார். மேலும் மகாவீரர் 24வது தீர்த்தங்கரர் ஆக கருதப்பட்டார்)
Question 34
முதல் தீர்த்தங்கரர் என்று கருதப்பட்டவர் யார்?
A
வால்மீகி
B
ரிஷபர்
C
பார்சுவநாதர்
D
அஜாதசத்ரு
Question 34 Explanation: 
(குறிப்பு - ரிஷபர் என்பவர் முதல் தீர்த்தங்கரர் ஆவார். பார்சுவநாதர் என்பவர் மகாவீரருக்கு முந்தைய 23வது தீர்த்தங்கரர் ஆவார்)
Question 35
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மன்னர்கள் யார்?
  1. பிம்பிசாரர்
  2. அஜாதசத்ரு
  3. அசோகர்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 35 Explanation: 
(குறிப்பு - மகாவீரரின் போதனைகள் மகத மன்னர்களான பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோரை ஈர்த்தன. ஆயிரக்கணக்கான மக்கள் மகாவீரரை பின்பற்றத் தொடங்கினர்)
Question 36
மகாவீரர் எந்த இடத்தில் காலமானார்?
A
குஷி நகரம்
B
வைஷாலி
C
பவபுரி
D
கௌசாம்பி
Question 36 Explanation: 
(குறிப்பு - மகாவீரர் பொ.ஆ.மு 527ஆம் ஆண்டு தமது 72வது வயதில் ராஜகிருகத்திற்கு அருகிலுள்ள பவபுரியில் காலமானார்)
Question 37
மகாவீரரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
திரிரத்னா
B
நவரத்னா
C
பஞ்சரத்னா
D
அஷ்ட ரத்னா
Question 37 Explanation: 
(குறிப்பு - மகாவீரரின் போதனைகள் மும்மணிகள் அல்லது திரிரத்னா என்று அழைக்கப்படுகின்றன. அவை நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை ஆகும்)
Question 38
மகாவீரர் போதித்த நன்னடத்தை என்பது?
  1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தல் ஆகாது
  2. நேர்மையுடன் இருப்பது
  3. கருனை
  4. உண்மையுடன் இருப்பது
  5. பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படாமல் வாழ்வது
A
I, II, III மட்டும்
B
II, III, IV மட்டும்
C
III, IV, V மட்டும்
D
இவை அனைத்தும்
Question 38 Explanation: 
(குறிப்பு - மகாவீரரின் மும்மணிகள் என்று அழைக்கப்படும் திரிரத்னா என்பவை, நன்னம்பிக்கை, நல்லறிவு மற்றும் நன்னடத்தை ஆகும். அவற்றுள் நன்னடத்தை என்பது மேற்கண்ட ஐம்பெரும் சூளுரைகளை கடைப்பிடிப்பது ஆகும்)
Question 39
இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமண சிலை எது?
A
கோமதீஸ்வரர்
B
பிரகதீஸ்வரர்
C
ஏகாம்பரேஸ்வரர்
D
வைத்தீஸ்வரர்
Question 39 Explanation: 
(குறிப்பு - கர்நாடக மாநிலம் சிரவணபெலகொலாவில் உள்ள பாகுபலியின் (கோமதீச்வரர்) சிலைதான் இந்தியாவின் செதுக்கப்பட்ட மிக உயரமான (57அடி) சமண சிலை ஆகும்)
Question 40
சமண மதத்திற்கு ஆதரவு தந்த அரசர் யார்?
  1. தன நந்தர்
  2. சந்திரகுப்த மவுரியர்
  3. காரவேலன்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 40 Explanation: 
(குறிப்பு - சமண மதத்தை பரப்புவதற்காக மகாவீரர் ஆலயங்களை நிறுவினார். பல சமணத் துறவிகளை நியமித்தார். வட இந்தியாவில் இந்த புதிய மதத்திற்கு தன நந்தர் சந்திரகுப்த மவுரியர் காரவேலன் போன்ற அரசர்களின் ஆதரவு கிடைத்தது)
Question 41
உயிருள்ள, உயிரற்ற என அனைத்து பொருள்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு அவற்றால் வலியை உணர முடியும் என்று போதித்தவர் யார்?
A
மகாவீரர்
B
புத்தர்
C
நபிகள்
D
இயேசு
Question 41 Explanation: 
(குறிப்பு - சமணம் அனைவரிடத்திலும் ஒரு பொது உணர்வை உருவாக்கியது. வர்ணாசிரம முறையை எதிர்த்தது. ஆடம்பர சடங்குகளையும், பலிகளையும் எதிர்த்தது. உயிருள்ள மற்றும் உயிரற்ற என அனைத்து பொருட்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு என மகாவீரர் போதித்தார்)
Question 42
கீழ்காணும் கூற்றுகளுள் தவறானது எது?
A
திகம்பரர் என்பவர்கள் திசையையே ஆடையாக உடுத்தியவர்கள் ஆவர்.
B
ஸ்வேதாம்பரர் என்பவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியவர்கள் ஆவர்.
C
திகம்பரர் என்பவர்கள் மகாவீரரின் போதனைகளில் மாற்றங்களை சிறிதும் ஏற்காதவர்கள் ஆவர்.
D
சமூகத்திற்கான தமது கடமைகளை நிறைவேற்றுவது முக்கியமானது என்று திகம்பரர்கள் கருதினர்.
Question 42 Explanation: 
(குறிப்பு - சமண சமயம், திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என இரு பிரிவுகளாக பிரிந்தது. மகாவீரரின் போதனைகளில் மாற்றங்களை சிறிதும் ஏற்காதவர்கள் திகம்பரர் என்று அழைக்கப்பட்டனர். சுவேதாம்பரர்கள் தலை முதல் கால் வரை வெண்ணிற ஆடை உடுத்தினார்கள்)
Question 43
சமண சமயத்தை பின்பற்றி, அப்பரின் தாக்கத்தால் சைவ மதத்திற்கு மாறிய பல்லவ மன்னர் யார்?
A
மகேந்திரவர்மன்
B
சிம்மவர்மன்
C
நரசிம்ம பல்லவன்
D
இரண்டாம் மகேந்திரவர்மன்
Question 43 Explanation: 
(குறிப்பு - ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் சமணமும் ஒன்று. பல்லவ மன்னனான மகேந்திரவர்மன் சமண சமயத்தை சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்திற்கு மாறினார்)
Question 44
கீழ்க்கண்டவற்றுள் சமணக் கோவில் எது?
A
திருப்பரங்குன்றம்
B
திருப்பருத்திக்குன்றம்
C
திருக்குன்றம்
D
இவை எதுவுமல்ல
Question 44 Explanation: 
(குறிப்பு - தற்போதைய காஞ்சி நகரத்திற்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்திருக்கிறது. திருப்பருத்திக்குன்றம் என்பது சமணர் கோவில் ஆகும். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கை கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது)
Question 45
கௌதம புத்தர் பிறந்த இடம் எது?
A
கபிலவஸ்து
B
குஷிநகரம்
C
ராஜகிரஹம்
D
காசி
Question 45 Explanation: 
(குறிப்பு - கௌதம புத்தர் நேபாளத்தில் உள்ள கபில வஸ்துவில் பிறந்தார். கௌதம புத்தரின் தந்தை ஒரு சத்திரிய இனக் குழுவின் தலைவராக இருந்த சுத்தோதனர் என்பவர் ஆவார்)
Question 46
கௌதம புத்தர் எந்த ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறி துறவு மேற்கொண்டார்?
A
பொ.ஆ.மு. 527ஆம் ஆண்டு
B
பொ.ஆ.மு. 537ஆம் ஆண்டு
C
பொ.ஆ.மு. 547ஆம் ஆண்டு
D
பொ.ஆ.மு. 557ஆம் ஆண்டு
Question 46 Explanation: 
(குறிப்பு - கௌதம புத்தர் பொ.ஆ.மு. 537ஆம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறி உண்மையைத் தேடி காட்டிற்கு சென்றார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து மெய்யறிவை நாடினார்)
Question 47
கௌதம புத்தர் மெய்யறிவு பெற்ற புத்தகயாவில் இருந்து சென்று............ எனினும் இடத்தில் தனது முதல் போதனையை செய்தார்.
A
சாரநாத்
B
காசி
C
வைஷாலி
D
பாடலிபுத்திரம்
Question 47 Explanation: 
(குறிப்பு - கௌதம புத்தர் சாரநாத்தில் தனது முதல் போதனையை செய்தார்)
Question 48
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
A
கௌதம புத்தர் 45 ஆண்டுகள் போதனை செய்தார்.
B
கௌதம புத்தர் பொ.ஆ.மு 487ஆம் ஆண்டு தமது 80வது வயதில் பரிநிர்வாணம் அடைந்தார்.
C
கௌதம புத்தர் குஷிநகரத்தில் இறந்தார்.
D
குஷிநகரம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் அமைந்துள்ளது.
Question 48 Explanation: 
(குறிப்பு - குஷி நகரம் என்பது, உத்திரபிரதேச மாநிலம் கரக்பூர் அருகே அமைந்துள்ளது.)
Question 49
பௌத்த மதத்தின் நான்கு பெரும் உண்மைகளுள் தவறானது எது?
A
உலகம் துன்பமும் துயரமும் நிறைந்தது
B
ஆசையும் ஏக்கமும் தான் இந்த துன்பத்திற்கு காரணம்
C
ஆசையை ஏக்கத்தை அடக்குவதன் மூலம் இந்த துன்பம் அல்லது வலியை போக்கலாம்.
D
துறவு மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனளிக்கும்.
Question 49 Explanation: 
(குறிப்பு - ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் அல்லது புத்தர் கூறிய உத்தமமான எண்வழி பாதை மூலம் அடைய முடியும் என்பது நான்கு பெரும் உண்மைகளும் ஒன்றாகும்.)
Question 50
புத்தரின் உன்னதமான எண்வழி பாதை என்பதுள் தவறானது எது?
A
நன்னம்பிக்கை
B
நல்ல ஆர்வம்
C
நற்சேமிப்பு
D
நல்ல தியானம்
Question 50 Explanation: 
(குறிப்பு - புத்தர் போதித்த உன்னதமான எண்வழி பாதை என்பது, நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன்முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்லதியானம் ஆகியன ஆகும்)
Question 51
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கிய கொள்கைகளில் அல்லாதவை எது?
  1. மனிதத்தன்மை
  2. நேர்மை
  3. நன்னடத்தை
  4. மெய்யறிவு
  5. சேமிப்பு
A
I மட்டும் தவறு 
B
II மட்டும் தவறு 
C
V மட்டும் தவறு
D
IV மட்டும் தவறு
Question 51 Explanation: 
(குறிப்பு - கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கிய கொள்கைகள் ஆவன, மனிதத்தன்மை, நேர்மை, நன்னடத்தை, மெய்யறிவு மற்றும் நம்பகத்தன்மை ஆகும்)
Question 52
கீழ்க்கண்டவகைகளில் எது கன்பூசியஸ் அவர்களின் கருத்தாகும்?
  1. ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்த வேண்டும்.
  2. நன்னடத்தை கொண்டவரைதான் அரசு பதவிகளில் அமர்த்த வேண்டும்.
  3. அரசியல் இறையாண்மைக்கான உண்மையான, முறையான ஆதாரம் நாட்டில் வாழும் மக்கள் தான்.
A
I, II மட்டும் 
B
II, III மட்டும் 
C
I, III மட்டும் 
D
இவை அனைத்தும் 
Question 52 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து கருத்துக்களும், கன்பூசியஸ் அவர்கள் அறிவுறுத்தியவையாகும். கன்பூசியனிசம், மதம் என்பதாக கருதப்படாமல் ஒரு சமூக அமைப்பாக அறம்சார் தத்துவ முறையாகவே கருதப்படுகிறது)
Question 53
பௌத்தம் ஹீனயானம், மகாயானம் என இரு பிரிவுகளாக பிரிந்த காலம் எது?
A
பொ.ஆ.மு இரண்டாம் நூற்றாண்டு
B
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டு
C
பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டு
D
பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டு
Question 53 Explanation: 
(குறிப்பு - பொ.ஆ.மு இரண்டாம் நூற்றாண்டில், கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் பௌத்த துறவி நாகார்ஜுனா என்பவர் பௌத்தத்தில் ஒரு சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி பௌத்தம் ஹீனயானம், மகாயானம் என இரு பிரிவுகளாக பிரிந்தது)
Question 54
ஹீனயானம் குறித்த தவறான கூற்று எது?
A
இது புத்தர் போதித்த அசல் வடிவம்
B
இது புத்தர் போதித்த அசல் வடிவம்
C
இவர்கள் உருவ வழிபாடு மறுத்தார்கள்
D
ஹீனயானம் என்பது பெரிய பாதை என்று அழைக்கப்படுகிறது.
Question 54 Explanation: 
(குறிப்பு - ஹீனயானம் என்பது சிறிய பாதை என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் பாலி மொழியை தொடர்ந்து பயன்படுத்தினார்கள்
Question 55
மஹாயானம் குறித்த தவறான கூற்று எது?
  1. இது பெரிய பாதை என்று அழைக்கப்பட்டது
  2. புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்
  3. இவர்கள் தங்களுடைய நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 55 Explanation: 
(குறிப்பு - மகாயானம் என்பது புத்தரை கடவுளாக வழிபடுவது ஆகும். போதிசத்துவர் அவருடைய முந்தைய அவதாரமாக கருதப்பட்டார். இந்த வகை பவுத்தத்தை கனிஷ்கர் ஆதரித்தார்)
Question 56
பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் சரியானது எது?
  1. மகாயானத்தில் உருவவழிபாடு இருந்ததால், இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போனது.
  2. குப்தர்களின் காலத்தில் பௌத்தம் அரசு ஆதரவை இழந்தது
  3. ஹூணர்கள், துருக்கியர்களின் படையெடுப்புகள் புத்தத்தை கிட்டத்தட்ட அழித்துவிட்டன.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 56 Explanation: 
(குறிப்பு - பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மேற்கண்ட அனைத்தும் ஆகும்)
Question 57
ஆசீவகம் என்னும் மதத்தை தோற்றுவித்தவர் யார்?
A
மகாவீரர்
B
புத்தர்
C
மக்கலி கோசலர்
D
ஜொராஷ்டிரர்
Question 57 Explanation: 
(குறிப்பு - பௌத்தமும் சமணமும் தோன்றிய காலத்தில் ஆசிவகம் என்று ஒரு பிரிவும் தோன்றியது. இதனை தோற்றுவித்தவர் மஸ்கரி புத்திர கோசலர் என்பவராவர். இவர் மகாவீரரின் நண்பர் ஆவார்)
Question 58
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர் யார்?
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 58 Explanation: 
(குறிப்பு - ஆசீவகர்கள் தென்னிந்தியாவில் சிறு எண்ணிக்கையில் இருந்தார்கள். சோழர்கள் காலத்தில் அவர்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்பட்டது)
Question 59
ஆசீவகர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. நீலகேசி
  2. மணிமேகலை
  3. சிவஞான சித்தியார்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 59 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட நூல்களில் ஆசீவக தத்துவத்தைப் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு உள்ளன)
Question 60
கன சங்கம் என்று அழைக்கப்பட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A
ஜனபதங்கள்
B
மக்கள் குழு
C
பரிகாரா
D
கிராம விஸ்வான்
Question 60 Explanation: 
(குறிப்பு - கன சங்கம் என்ற அமைப்பு இனக்குழு சார்ந்த தலைவர் ஆட்சி முறை கொண்டது. குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் ஜனபதங்கள் என்று அழைக்கப்பட்டன)
Question 61
ஒரே குலத்தால் ஆன கனசங்கங்களுள் அல்லாதவை எது?
A
சாக்கியர்கள்
B
கோலியர்கள்
C
மல்லர்கள்
D
விரிஜ்ஜிகள்
Question 61 Explanation: 
(குறிப்பு - விரிஜ்ஜிகள், விருஸ்ணிகள் என்பது வைசாலியில் இருந்த ஒரு கூட்டமைப்பு ஆகும். இது பல குலங்களின் கூட்டமைப்பாக இருந்தது)
Question 62
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது ?
  1. கனசங்கத்தில் உற்பத்தியில் அடிமைகளை ஈடுபடுத்தினர்.
  2. கனசங்கத்தில் வீட்டு வேலைகளில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
  3. கன சங்கங்களில் குலத்தின் தலைவர் மற்ற குடும்பங்களின் தலைவர்களைக் கொண்ட சபைக்குத் தலைமை தாங்குவார்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 62 Explanation: 
(குறிப்பு - கணசங்கங்களில் சத்திரியராஜகுலம் என்றாலும் குடும்பங்களும் ராஜகுலம் என்றாலும் குடும்பங்கள் இருந்தது. அடிமைகளும் தொழிலாளர்களும் அடங்கிய தாஸ கர்மகாரகன் என்ற குழுவும் இருந்தது.)
Question 63
ரிக்வேத பட்டமான ராஜன் என்பதற்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட பட்டங்கள் எது?
A
சாம்ராட்
B
விராட்
C
போஜன்
D
மகாஜன்
Question 63 Explanation: 
(குறிப்பு - மகா ஜனபதங்களில் ரிக்வேதபட்டமான ராஜன் என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், விராட் மற்றும் போஜன் ஆகிய பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்)
Question 64
16 மகாஜனபதங்களுள் அல்லாதவை எது?
A
குரு
B
பாஞ்சாலம்
C
அவந்தி
D
பாடலிபுத்ர
Question 64 Explanation: 
(குறிப்பு - 16 மகாஜனபதங்கள் ஆவண, காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் ஆகும் )
Question 65
பொருத்துக
  1. பகதுக்கர்            - a) வேட்டை துணைவர்
  2. சூதா                      - b) அரண்மனை காரியஸ்தர்
  3. க்ஷத்திரி               - c) தேரோட்டி
  4. கோரிகர்த்தனா  - d) வரிவசூல் அதிகாரி
A
I-d, II-c, III-b, IV-a
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-a, III-b, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 65 Explanation: 
(குறிப்பு - அரசு அதிகாரத்தின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பில் பிரதிபலித்தது, அரசருக்கு ஆட்சியில் துணைபுரிய வரிவசூல் அதிகாரி, சூதாட்ட கண்காணிப்பாளர், அரண்மனை காரியஸ்தர், வேட்டை துணைவர் போன்றவர்கள் இருந்தனர்)
Question 66
பொருத்துக
  1. அரசவையினர்                           - a) சேப்லைன்
  2. தேர் செய்பவர்                            - b) பலகோலா
  3. சூதாட்ட கண்காணிப்பாளர்  - c) ரதகாரா
  4. புரோகிதர்                                   - d) அக்ஷரபா
A
I-b, II-c, III-d, IV-a
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-a, III-b, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 66 Explanation: 
(குறிப்பு - அரசு அதிகாரத்தின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பில் பிரதிபலித்தது, அரசருக்கு ஆட்சியில் துணைபுரிய வரிவசூல் அதிகாரி, சூதாட்ட கண்காணிப்பாளர், அரண்மனை காரியஸ்தர், வேட்டை துணைவர் போன்றவர்கள் இருந்தனர்)
Question 67
வேத காலத்தின் பிற்பகுதியில் கிராம தலைவராகவும்,  ராணுவ அதிகாரியாகவும் இருந்த.............. என்பவர் கிராமத்தில் அரசு அதிகாரம் செலுத்த படுவதற்கான இணைப்பாக இருந்தார்.
A
கிராமணி
B
சேனானி
C
கோரிகர்த்தனா
D
சத்திரி
Question 67 Explanation: 
(குறிப்பு - கிராமணி என்பவர் கிராமத்தில் அரசு அதிகாரம் செலுத்தபடுவதற்கான இணைப்பாக இருந்தார். அரசர் நீதி வழங்கினார்.)
Question 68
கிராமங்களில்____________________என்ற கிராம நீதிபதி இருந்தார்.
A
கிராம்யவாதின்
B
கிராமணி
C
கிராம சபா
D
எல்லாமே தவறு
Question 68 Explanation: 
(குறிப்பு - கிராமங்களில் கிராமியவாதின் என்ற கிராம நீதிபதியும் சபா என்ற கிராம நீதிமன்றமும் நீதி வழங்கினர். குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக இருந்தது)
Question 69
அரசாட்சிகளுள் அல்லாத குடியரசு ஆட்சியை கொண்டது எது?
A
காசி
B
கோசலம்
C
விருஜ்ஜி
D
மகதம்
Question 69 Explanation: 
(குறிப்பு - அரசாட்சி களோடு போட்டியிட்ட ஒரே குடியரசு வைசாலி தலைநகரமாகக் கொண்ட விருஜ்ஜி ஆகும்)
Question 70
லிச்சாவி குலத்துடனும்,  கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து அங்கத்தை (மேற்கு வங்கம் ) கைப்பற்றியவர் யார்?
A
பிம்பிசாரர்
B
சமுத்திரகுப்தர்
C
அஜாத சத்ரு
D
இவர் யாருமல்ல
Question 70 Explanation: 
(குறிப்பு - ஒரு விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றி பெற்றார். அவர் வைஷாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும், கோசல அரச குடும்பத்துடன் திருமண உறவுகள் வைத்து அங்கத்தை கைப்பற்றினார்)
Question 71
ஷட்பாகின் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
A
ஆறில் ஒரு பங்கு உரிமையானவர்
B
மூன்றில் ஒரு பங்கு உரிமையானவர்
C
ஐந்தில் ஒரு பங்கு உரிமையானவர்
D
இவை எதுவுமல்ல
Question 71 Explanation: 
(குறிப்பு - ஆறில் ஒரு பங்கு உரிமையானவர் என்று பொருள்படும் ஷட்பாகின் என்ற சொல் அரசரை குறிக்கிறது. நிலவரி அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது)
Question 72
பாடலி கிராமத்தில் கோட்டையை கட்டியவர் யார்?
A
பிம்பிசாரர்
B
அஜாத சத்ரு
C
சந்திரகுப்தர்
D
இவர் யாருமல்ல.
Question 72 Explanation: 
(குறிப்பு - பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு, ராஜகிரக கோட்டையை வலுப்படுத்தினார். அதேவேளையில் கங்கை கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்)
Question 73
அஜாதசத்ரு இறந்த ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 465
B
பொ.ஆ.மு 464
C
பொ.ஆ.மு 461
D
பொ.ஆ.மு 460
Question 73 Explanation: 
(குறிப்பு - அஜாதசத்ரு பொ.ஆ.மு 461 ஆண்டு இறந்தார். இவருக்குப் பிறகு ஐந்து அரசர்கள் ஆட்சி செய்தார்கள்.)
Question 74
வட இந்தியாவின் முதல் சத்திரியர் அல்லாத வம்சம் எது?
A
நந்தவம்சம்
B
குப்த வம்சம்
C
சிசு நாக வம்சம்
D
இவை எதுவுமல்ல
Question 74 Explanation: 
(குறிப்பு - அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பிறகு சிசுநாக வம்சம் மகாபத்ம நந்தரிடம் ஆட்சியை இழந்தது. நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் மகாபத்ம நந்தர்.)
Question 75
மௌரிய அரசு நிறுவப்பட்ட ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 323
B
பொ.ஆ.மு 321
C
பொ.ஆ.மு 319
D
பொ.ஆ.மு 322
Question 75 Explanation: 
(குறிப்பு - மௌரிய வம்சம் நிறுவப்பட்ட ஆண்டு பொ.ஆ.மு 321 ஆகும். இது சந்திரகுப்த மவுரியர் என்பவரால் நிறுவப்பட்டது)
Question 76
அலெக்சாண்டர் இந்திய பகுதிகளுக்குள் நுழைந்து ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 346
B
பொ.ஆ.மு 336
C
பொ.ஆ.மு 326
D
பொ.ஆ.மு 316
Question 76 Explanation: 
(குறிப்பு - அகாமெனீட் பேரரசர் மூன்றாம் டேரியஸின் வரிகளில் அணிவகுத்து வந்த கிரேக்க பேரரசர் அலெக்சாந்தர் பொ.ஆ.மு 326 ஆண்டு இந்திய பகுதிகளுக்குள் நுழைந்தார்)
Question 77
சந்திரகுப்தரிடம் தோற்றுப்போன அலெக்சாண்டரின் தளபதி யார்?
A
செல்யூகஸ் நிகேதர்
B
செல்புனியஸ்
C
செல்லாஸ் விக்டர்
D
கார்பஸ் நிகேதர்
Question 77 Explanation: 
(குறிப்பு - ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரைக்கும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அலெக்சாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேதர் சிந்து நதியை தாண்டி இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது சந்திரகுப்தரிடம் தோற்றுப்போனார்)
Question 78
செல்யுகஸின் தூதர் யார்?
A
மெகஸ்தனிஸ்
B
யாங்சிங்
C
நிகேதர்
D
பீம்சிங்
Question 78 Explanation: 
(குறிப்பு - செல்யுகஸின் தூதர் மெகஸ்தனிஸ் என்பவராவார். மெகஸ்தனிஸ் என்பவர் எழுதிய இண்டிகா என்ற நூல் மௌரியர் காலத்து அரசியலையும் சமூகத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது)
Question 79
அசோகர் அரசரான ஆண்டு எது?
A
பொ.ஆ.மு 261
B
பொ.ஆ.மு 263
C
பொ.ஆ.மு 268
D
பொ.ஆ.மு 265
Question 79 Explanation: 
(குறிப்பு - பிந்துசாரர் தனது ஆட்சியில் மத்திய அரசை கர்நாடகம் வரை விரிவுபடுத்தினார். பிந்துசாரர் உறுப்பினர் அசோகர் அரசரானார். அசோகர் அரசரான ஆண்டு பொ.ஆ.மு 268 ஆகும் )
Question 80
யாரை சந்தித்த பின்பு அசோகர் தீவிர புத்த பற்றாளராக மாறினார்?
A
சந்திரகுப்தர்
B
சுபகுப்தர்
C
உபகுப்தர்
D
தக்ஷின குப்தர்
Question 80 Explanation: 
(குறிப்பு - கலிங்கப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட படுகொலைகள் அசோகரை பெரிதும் பாதித்தன. அவர் போரிடுவதை விட்டுவிட முடிவு செய்தார். புத்த துறவி உப குப்தரை சந்தித்த பின்னர் அசோகர் தீவிர புத்த பற்றாளராக மாறினார்)
Question 81
பொருத்துக
  1. மொத்த கல்வெட்டுகள்    - a) 2
  2. பாறை கல்வெட்டுகள்      - b) 33
  3. தூண் பிரகடனங்கள்         - c) 14
  4. கலிங்க கல்வெட்டுகள்      - d) 7
A
I-b, II-c, III-d, IV-a
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-a, III-b, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 81 Explanation: 
(குறிப்பு - மௌரிய பேரரசு பற்றி குறிப்பாக அசோகரின் தம்ம ஆட்சியைப் பற்றி அறிய மேற்கண்ட கல்வெட்டுகள் நம்பத்தகுந்த ஆதாரங்களாக திகழ்கின்றன)
Question 82
அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மம் குறித்த தனது செய்திகளை பரப்புவதற்காக எங்கு அனுப்பினார்?
A
இலங்கை
B
இந்தோனேஷியா
C
கம்போடியா
D
நேபாளம்
Question 82 Explanation: 
(குறிப்பு - அசோகர் தனது மகனையும் மகளையும் இலங்கைக்கு அனுப்பினார். 38 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் அசோகர் உயிர்துறந்தார்)
Question 83
மூன்றாவது புத்த மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
A
பொ.ஆ.மு. 250
B
பொ.ஆ.மு. 255
C
பொ.ஆ.மு. 260
D
பொ.ஆ.மு. 265
Question 83 Explanation: 
(குறிப்பு - பொ.ஆ.மு. 250ஆம் ஆண்டு மூன்றாவது புத்த மாநாடு மௌரிய தலைநகரான பாடலிபுத்திரத்தின் நடைபெற்றது. பௌத்த மதத்தை மற்ற பகுதிகளில் பரப்பவேண்டும் மக்களை பௌத்தத்திற்கு மாற்ற சமயப் பரப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பது இந்த மாநாட்டில் முக்கியமான முடிவாகும்)
Question 84
அசோகர் கல்தூண் எங்கு அமைந்துள்ளது?
A
அலகாபாத்
B
செகந்திராபாத்
C
அகமதாபாத்
D
பாட்னா
Question 84 Explanation: 
(குறிப்பு - அசோகர் கல்தூண் அலகாபாத்தில் அமைந்துள்ளது.)
Question 85
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
A
மௌரியர் காலத்தில் நிர்வாகத் தலைவராக அரசர் இருந்தார்
B
மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களுக்கு செயலாளர்களாக பணியாற்றினார்கள்.
C
பேரரசு ஐந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
D
மாநிலங்களை ஆளுநர்கள் ஆட்சி செய்தார்கள்.
Question 85 Explanation: 
(குறிப்பு - மௌரியர் காலத்தில் பேரரசு நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களை ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். பெரும்பாலும் இளவரசர்களே ஆளுநராக செயல்பட்டனர்)
Question 86
சாணக்கியர் என்பவர் சந்திரகுப்தரின்...........ஆவார்.
A
அமைச்சர்
B
சேனாதிபதி
C
மெய்க்காப்பாளன்
D
ஆளுநர்
Question 86 Explanation: 
(குறிப்பு - சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதினார். இது மௌரிய ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது)
Question 87
பொருத்துக
  1. ஸ்தானிகா          - a) 30 பேர்
  2. கோபர்                  - b) நகர நிர்வாகம்
  3. நகரகா                  - c) மாவட்ட நிர்வாகம்
  4. ராணுவத்துறை    - d) 5 முதல் 10 கிராம நிர்வாகம்
A
I-c, II-d, III-b, IV-a
B
I-b, II-d, III-c, IV-a
C
I-d, II-a, III-b, IV-c
D
I-c, II-a, III-b, IV-d
Question 87 Explanation: 
(குறிப்பு - மௌரிய ஆட்சி நிர்வாகம் குறித்து மேற்கண்டவை விரிவாக கூறுகிறது. நகரகா என்பவரது தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆறு குழுக்கள் தமது கடமைகளை செய்தன. நகர நிர்வாகத்தை போலவே ராணுவத் துறையும் 30 பேர் கொண்ட குழுவால் நிரூபிக்கப்பட்டது)
Question 88
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது ?
A
மௌரியர் காலத்தில் வேளாண்மை சுரங்கம் தொழில் வணிகம் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.
B
மௌரிய அரசு நகர மேம்பாட்டிற்கு ஊக்கமளித்தது
C
மௌரிய அரசு நிலம் விற்பதை தடை செய்தது.
D
நிலத்தில் தனியார் சொத்துரிமை உருவாகுவதை அரசு ஆதரித்தது.
Question 88 Explanation: 
(குறிப்பு - மௌரிய அரசு புதிய குடியிருப்புகளை உண்டாக்குதல், மக்களுக்கு நிலம் அளித்து விவசாயிகளாக வாழ ஊக்குவித்தல், பாசன வசதிகளை ஏற்படுத்துதல், என்று கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு உபரி வருவாயை பயன்படுத்தியது. தனியார் சொத்துடைமை உருவாக்குவதை அரசு விரும்பவில்லை)
Question 89
மௌரியர் காலத்தில் துணி உற்பத்தி மையங்கள் அல்லாதவை எது?
A
காசி
B
வங்கம்
C
காமரூபம்
D
பாடலிபுத்திரம்
Question 89 Explanation: 
(குறிப்பு - மௌரிய அரசு ஈரான், மெசபடோமியா அரசுகளுக்கு நில வழியாக வணிக பெருவழிகளை உருவாக்கியது. அர்த்தசாஸ்திரம், காசி, வங்கம், காமரூபம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் துணி உற்பத்தி மையங்கள் என்று குறிப்பிடுகிறது)
Question 90
மௌரிய அரசால் நாளந்தா பல்கலைக்கழக நிர்வாக செலவுகளுக்காக........ கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
A
200
B
100
C
300
D
150
Question 90 Explanation: 
(குறிப்பு - மடங்களும் கோவில்களும் கல்வி கற்பிக்கும் பணியை செய்தன. கல்வி மையங்களில் புத்தம், வேத இலக்கியங்கள், தர்க்கம், இலக்கணம், மருத்துவம், தத்துவம், வானவியல் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. நாளந்தா பல்கலை கழகத்தின் நிர்வாக செலவுகளுக்காக 100 கிராமங்களில் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 90 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!