Online TestTnpsc Exam
அரசியல் கட்சிகள் Online Test 7th Social Science Lesson 7 Questions in Tamil
அரசியல் கட்சிகள் Online Test 7th Social Science Lesson 7 Questions in Tamil
Congratulations - you have completed அரசியல் கட்சிகள் Online Test 7th Social Science Lesson 7 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- கூற்று 1: அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும்.
- கூற்று 2: அரசியல் கட்சிகள் பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 1 Explanation:
(குறிப்பு: அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன.)
Question 2 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உள்ள கூறுகள் எவை?
- தலைவர்
- செயல் உறுப்பினர்கள்
- தொண்டர்கள்
- ஊழியர்கள்
1, 2, 3 | |
1, 2, 4 | |
1, 3, 4 | |
2, 3, 4 |
Question 2 Explanation:
(குறிப்பு: அரசியல் கட்சிகள், அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.)
Question 3 |
________ மக்களாட்சியின் முதுகெலும்பு ஆகும்.
தேர்தல் | |
அரசியல் கட்சிகள் | |
வாக்காளர்கள் | |
வேட்பாளர்கள் |
Question 3 Explanation:
(குறிப்பு: அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.)
Question 4 |
கீழ்க்கண்ட எவற்றிற்கிடையே கட்சிகள் பாலமாக சேவை செய்கின்றன?
குடிமக்கள், அரசு | |
அரசு, கொள்கை வகுப்பாளர்கள் | |
அரசு, கொள்கை வகுப்பாளர்கள் | |
குடிமக்கள், கொள்கை வகுப்பாளர்கள் |
Question 5 |
ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகளில் சரியானது எது?
- ஐந்து ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
- வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 5% ஓட்டுக்களை இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 5 Explanation:
(குறிப்பு: வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% ஓட்டுக்களை இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.)
Question 6 |
அரசியல் கட்சிகளின் இயல்புகளில் தவறானது எது?
- பொதுவான குறிக்கோள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட மக்கள் குழுக்களாக இருக்கின்றன.
- தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டிருக்கின்றன.
- அரசியல் அமைப்பின் வழியாக ஆட்சியை கைப்பற்ற முயல்கின்றன.
- தேசிய நலன்களை வலியுறுத்த முயற்சி செய்கின்றன.
1 மட்டும் தவறு | |
1, 3 தவறு | |
1, 3 தவறு | |
எதுவுமில்லை |
Question 7 |
இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?
1946 | |
1947 | |
1950 | |
1952 |
Question 7 Explanation:
(குறிப்பு: துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது அவசியமான ஒன்றாகும்.)
Question 8 |
சீனா, வட கொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் __________ ஆட்சி முறை நடைமுறையில் இருக்கின்றன.
மன்னராட்சி முறை | |
ஒரு கட்சி முறை | |
இரு கட்சி முறை | |
பல கட்சி முறை |
Question 8 Explanation:
(குறிப்பு: ஒரு கட்சி முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும்.)
Question 9 |
தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பது ________ எனப்படும்.
தேர்தல் பிரச்சாரம் | |
கட்சியின் கொள்கைகள் | |
கட்சியின் தேர்தல் அறிக்கை | |
தேர்தல் முன்னறிவிப்பு |
Question 10 |
இரு கட்சி முறை கீழ்க்கண்ட எந்த நாடுகளில் காணப்படுகிறது?
- பிரான்ஸ்
- பிரிட்டன்
- ஸ்வீடன்
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
2, 4 |
Question 10 Explanation:
(குறிப்பு: இரு கட்சி முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் செயல்படும்.)
Question 11 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- பிரிட்டன் - தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் - குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் பல கட்சி முறை உள்ள நாடுகளில் தவறானது எது?
பிரான்ஸ் | |
ஸ்வீடன் | |
நார்வேa | |
சீனா |
Question 12 Explanation:
(குறிப்பு: அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது பல கட்சி முறை என அழைக்கப்படுகிறது. (எ.கா) இந்தியா)
Question 13 |
இந்தியாவில் கட்சி முறை_________நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது.
17 | |
18 | |
19 | |
20 |
Question 13 Explanation:
(குறிப்பு: கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.)
Question 14 |
உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் எந்த நாட்டில் காணப்படுகின்றன?
பிரான்ஸ் | |
ஸ்வீடன் | |
இந்தியா | |
நார்வே |
Question 14 Explanation:
(குறிப்பு:இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.)
Question 15 |
இந்தியாவில் கட்சிகள் எத்தனை படிநிலையில் அமைந்துள்ளன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 15 Explanation:
(குறிப்பு: மூன்று படிநிலைகள் – தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள்.)
Question 16 |
- கூற்று 1: இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சாராத அமைப்பு ஆகும்.
- கூற்று 2: தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 16 Explanation:
(குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.)
Question 17 |
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் __________ சதவீத வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
3% | |
4% | |
5% | |
6% |
Question 18 |
ஒரு கட்சி, இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் அக்கட்சி _________கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
மாநிலக் கட்சி | |
தேசியக் கட்சி | |
சுயேட்சை கட்சி | |
எதுவுமில்லை |
Question 18 Explanation:
(குறிப்பு: தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட ஒரு கட்சி ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.)
Question 19 |
ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட, மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் ________ சதவீத தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
2% | |
3% | |
4% | |
5% |
Question 19 Explanation:
(குறிப்பு: மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.)
Question 20 |
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட, ஒரு கட்சி 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் _________தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
1 | |
2 | |
3 | |
4 |
Question 20 Explanation:
(குறிப்பு: சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.)
Question 21 |
__________ ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, இரண்டு வகையான தேர்தல் குழு சின்னங்கள் உள்ளன.
1958 | |
1962 | |
1965 | |
1968 |
Question 21 Explanation:
(குறிப்பு: ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை தேர்தல் குழு சின்னங்கள் உள்ளன.)
Question 22 |
- கூற்று 1: ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.
- கூற்று 2: ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகிய இரண்டிற்கும் ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 22 Explanation:
(குறிப்பு: ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.)
Question 23 |
இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகள் __________கட்சிகள் எனப்படும்.
பதிவு செய்யப்பட்ட | |
அங்கீகரிக்கப்பட்ட | |
பதிவு செய்யப்படாத | |
அங்கீகரிக்கப்படாத |
Question 23 Explanation:
(குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்படும்.)
Question 24 |
- கூற்று 1: பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது.
- கூற்று 2: அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்குப்படும் தேர்தல் குழுவில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்தல் வேண்டும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 25 |
தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் அக்கட்சியானது ___________கட்சி என அழைக்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சி | |
எதிர்க்கட்சி | |
பெரும்பான்மைக் கட்சி | |
தனிப்பெரும் கட்சி |
Question 25 Explanation:
(குறிப்பு: பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது. அக்கட்சி அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. அது நாட்டிற்கு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.)
Question 26 |
ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிக்க கீழ்க்கண்ட எவற்றை பின்பற்ற வேண்டும்?
- இந்திய தேர்தல் அணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
- குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
- கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.
அனைத்தும் | |
1, 3 | |
1, 2 | |
2, 3 |
Question 27 |
_________ ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.
மத்திய அரசு | |
தேர்தல் ஆணையம் | |
அரசியல் அமைப்பு சட்டம் | |
எதிர்க்கட்சி |
Question 27 Explanation:
(குறிப்பு: தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.)
Question 28 |
எதிர்க்கட்சி தலைவர் _________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
துணை முதல்வர் | |
நிதி அமைச்சர் | |
கேபினட் அமைச்சர் | |
சட்டமன்றத் தலைவர் |
Question 28 Explanation:
(குறிப்பு: எதிர்க்கட்சி ஆளும்கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.)
Question 29 |
எதிர்க்கட்சி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாயந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம் ஆகும். | |
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும். | |
அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். | |
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் நிதி மசோதாக்களை விமர்சிக்காது. |
Question 29 Explanation:
(குறிப்பு: அரசால் செயல்படுத்தப்படாத விவகாரங்கள் குறித்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்.)
Question 30 |
சிறியக் கட்சி என்பது _________ எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட கட்சி ஆகும்.
உறுப்பினர்கள | |
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் | |
போட்டியிடும் தொகுதிகள் | |
தொண்டர்கள் |
Question 30 Explanation:
(குறிப்பு: பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும். இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.)
Question 31 |
- கூற்று 1: தேர்தல் சின்னங்களாக விலங்குகளின் சின்னங்களையும் தேர்தல் ஆணையம் வழங்குகிறது.
- கூற்று 2: யானை மற்றும் சிங்கம் ஆகிய விலங்குகளின் சின்னங்கள் தேர்தல் சின்னங்களாக வழங்கப்படுகின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 31 Explanation:
(குறிப்பு: தேர்தல் சின்னங்களாக விலங்குகளின் சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.)
Question 32 |
- கூற்று 1: தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும்.
- கூற்று 2: இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 33 |
- கூற்று: பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
- காரணம்: தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும் | |
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல | |
காரணம் தவறு, கூற்று சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 34 |
- கூற்று 1: மாநில கட்சிகளுக்கு அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- கூற்று 2: இதனை வேறு எந்த கட்சியும் அந்த நாட்டிற்குள் பயன்படுத்த இயலாது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு |
Question 34 Explanation:
(குறிப்பு: மாநில கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் தங்களது மாநிலங்களில் இதேபோன்ற சின்னத்தை பயன்படுத்தலாம்.)
Question 35 |
மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகள் ________சின்னத்தை பயன்படுத்துகின்றன.
மீன் | |
கப்பல் | |
வில் மற்றும் அம்பு | |
புலி |
Question 36 |
தேசிய கட்சி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். | |
தேசியக்கட்சி குறைந்தபட்சம் இரண்டு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும். | |
இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை நாடு முழுவதற்கும் கொண்டிருக்கும். | |
இது மாநில, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறது. |
Question 36 Explanation:
(குறிப்பு: தேசியக்கட்சி குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும்.)
Question 37 |
மாநிலக் கட்சி / பிராந்திய கட்சி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
- மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும்.
- இது ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சின்னம் வேறு மாநிலத்தில் உள்ள கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படலாம்.
- இது பிராந்திய மற்றும் மாநில நலன்களை வலியுறுத்துகிறது.
2, 4 தவறு | |
2 மட்டும் தவறு | |
4 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 38 |
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
சமயக் கொள்கைகள் | |
பொதுநலன் | |
பொருளாதாரக் கோட்பாடுகள் | |
சாதி |
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் எவை?
- வழங்குதல்
- பரிந்துரைத்தல்
- ஏற்பாடு செய்தல்
- ஊக்குவித்தல்
- ஒருங்கிணைத்தல்
- ஆட்சி அமைத்தல்
அனைத்தும் | |
1, 2, 5, 6 | |
1, 2, 4, 6 | |
3, 5, 6 |
Question 40 |
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். | |
தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது. | |
தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது. | |
இவை அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.
Please check questions no 34 and 40